Tuesday, November 12, 2019

KEL JENMITHTHA RAAYARKKAE

1. கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே;
அவர் பாவ நாசகர்,
சமாதான காரணர்,
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர்போல் கெம்பீரித்து
பெத்லெகேமில் கூடுங்கள்,
ஜென்ம செய்தி கூறுங்கள்.
கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே.

2. வானோர் போற்றும் கிறிஸ்துவே,
லோகம் ஆளும் நாதரே,
ஏற்ற காலம் தோன்றினீர்,
கன்னியிடம் பிறந்தீர்.
வாழ்க நர தெய்வமே,
அருள் அவதாரமே!
நீர், இம்மானுவேல், அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்.

3. வாழ்க, சாந்த பிரபுவே!
வாழ்க, நீதி சூரியனே!
மீட்பராக வந்தவர்,
ஒளி, ஜீவன் தந்தவர்;
மகிமையை வெறுத்து,
ஏழைக் கோலம் எடுத்து,
சாவை வெல்லப் பிறந்தீர்,
மறு ஜென்மம் அளித்தீர்.

KOLKATHAA KOLAIMARAM PAARKAVE

கொல்கதா கொலைமரம்
பார்க்கவே பரிதாபம்
துங்கன் இயேசு நாதனார்
தொங்கும் காட்சி பார் இதோ!

1. கை காலை ஆணி பீறிட்டே
குருதி புரண்டு ஓடிற்றே
முள்ளினால் ஓர் கிரீடமே
சூட்டினார் மா பாதகர்

2. கல்வாரி நாதர் இயேசுவை
பற்றி நீயும் வந்திட்டால்
தூசியான உன்னையும்
மேசியா கைத் தூக்குவார்

KOLKOTHAVE KOLAI MARAME

கொல்கொதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே
கோர மனிதர் கொலை செய்தார்
கோர காட்சி பார் மனமே

கந்தை அணிந்தார் நிந்தை சுமந்தார்
கள்ளார் நடுவில் கொலை மரத்தில்
எந்தனை மீட்க இத்தனைப் பாடேன்
எந்தன் ஜீவ நாயகா

என்னை மீட்ட கொலை மரமே
அன்னையே நான் என்ன செய்வேன்
என்னை உமக்கே ஒப்புவித்தேன்
என்றென்றுமாய் நான் வாழ

வானம் பூமி ஒன்றாய் இணைந்த
வல்ல தேவன் உமக்கே சரணம்
வாடி வாடி கொலை மரத்தில்
நிற்கும் காட்சி பார் மனமே

KOLKATHAA MEATTINILEA KODUURA

கொல்கொதா மேட்டினிலே
கொடூர பாவி எந்தனுக்காய்
குற்றமில்லாத தேவ குமாரன்
குருதி வடிந்தே தொங்கினார்

பாவ சாபங்கள் சுமந்தாரே
பாவியை மீட்க பாடுபட்டார்
பாவமில்லாத தேவகுமாரன்
பாதகன் எனக்காய் தொங்கினார்

மடிந்திடும் மன்னுயிர்க்காய்
மகிமை யாவும் இழந்தோராய்
மாசில்லாத தேவகுமாரன்
மூன்றாணி மீதினில் தொங்கினார்

இரத்தத்தின் பெருவெள்ளம் ஓட
இரட்சிப்பின் நதி என்னில் பாய
ஆதரவில்லா தேவகுமாரன்
அகோரக் காட்சியாய் தொங்கினார்

கல்வாரி காட்சி இதோ
கண்டிடுவாயே கண்கலங்க
கடின மனமும் உருகிடுமே
கர்த்தரின் மாறாத அன்பி னிலே

உள்ளமே நீ திறவாயோ
உருகும் சத்தம் நீ கேளாயோ
உன் கரம் பற்றி உன்னை நடத்த
உன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்

SUNDARA PARAMA DEVAMAINTHAN

சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்
தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும்

அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்து
ஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடி
சூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி

பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த
பாவிகளான நமை உசாவி மீட்டாரே
வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்த
மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே
கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்
கூடுங்கள் பவத்துயர்
போடுங்கள் ஜெயத்தைக் கொண்
டாடுங்கள் துதிசொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும்

விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்
விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே
மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே
அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக் கொண்
டாடிட அவர் பதம்
தேடிட வெகு திரள்
கூடிடத் துதி புகழ் பாடிடப் பாடிட என்றும்

சத்தியத் தரசர்களும் வித்தகப் பெரியார்களும்
சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே
எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே
உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும்
உயர்ந்து வாழ தீயோன்
பயந்து தாழ மிக
நயந்து கிறிஸ்வுக்கு ஜெயந்தான் நயந்தான் என்றும்

JAATHIKALAE ELLORUM KARTHTHARAI YEGAMAAI

ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
ஏகமாய் துதித்தே போற்றிப்பாடுங்கள்
தேவன் அளித்த நன்மை பெரியதே
கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாதே

1. இன்றித் தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட
ஈந்தளித்தீர் உந்தன் கிருபை
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
என்றும் அவர் துதி பாடி மகிழ்வோம்

2. ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு தந்தார்
சேதமின்றி என்னைக் காத்தாரே
ஜீவியப் பாதையில் தேவை தந்து
ஜெயக்கீதம் பாட ஜெயமளிப்பார்

3. பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி
சாவு பயம் யாவும் போக்கினார்
சோதனை வேதனை சூழ்கையில்
சோர்ந்திடாமல் தாங்கி பெலனளிப்பார்

4. எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார்
சொந்த பிள்ளைகளாக மாற்றினார்
நாடியே வந்தென்னை ஆதரித்து
வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட

5. வானம் பூமியாவும் மாறிப்போகும் ஓர் நாள்
வானவரின் வாக்கு மாறாதே
நீதியின் சூரியன் தோன்றிடும் நாள்
சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை

JATHIKALE ELLORUM KARTHARAI THUTHIYUNGAL

ஜாதிகளே எல்லோரும்
கர்த்தரை துதியுங்கள்
ஜனங்களே எல்லோரும்
அவரைப் போற்றுங்கள்

அவர் நம் மேல் வைத்த கிருபை
என்றும் பெரியது

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

கர்த்தரின் உண்மை நேற்றும்
இன்றும் என்றுமுள்ளது

கர்த்தரின் வல்லமை குன்றுகளை
அதிரச் செய்தது

கர்த்தரின் வார்த்தை முடவனை
எழும்பச் செய்தது

THASARE ITHTHARANIYAI ANBAI

தாசரே இத்தாரணியை அன்பாய்
யேசுவுக்குச் சொந்தமாக்குவோம்

நேசமாய் யேசுவைக் கூறுவோம் அவரைக்
காண்பிப்போம் மாவிருள் நீக்கு வோம்
வெளிச்சம் வீசுவோம்

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமந்தோரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் யேசு பாவப் பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே

பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
யேசு கனிந்து திரிந்தனரே

நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்கவொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே

இந்தியதேச மாது சிரோமணிகள்
விந்தை யளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்ப்பந்தங்கள் தீர்த்து சிறந்திலங்கிட

மார்க்கம் தப்பிநடப் போரைச் சத்ய
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்
ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம்

THUTHIYUNGAL NAM DEVANAI

துதியுங்கள் நம் தேவனை
போற்றுங்கள் நம் இராஜனை
வாழ்த்துங்கள் நம் கர்த்தரை
போற்றுவோம் வாழ்த்துவோம்
இன்றும் என்றென்றுமாய்

ஆ ஹா ஹா அல்லேலூயா
ஓஹோ ஹோ ஓசன்னா

அதிசயம் செய்யும் தேவன் பெரியவர்
நாம் ஆராதிக்கும் இயேசு வல்லவர்
நமக்காய் யாவும் செய்து முடித்தார்
நன்றியோடு ஆராதிப்போம்

நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்
நாம் பாரம் நீக்கும் வல்ல தேவன் சிறந்தவர்
கண்ணீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார்
கரங்களைத் தட்டி ஆர்ப்பரிப்போம்

நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்
நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை
கரங்களை உயர்த்தி துதித்திடுவோம்

THOORAM SENDRU PONIRAE

தூரம் சென்று போனீரோ உம்மை
தேடி தேடி கண்கள் வாடுதே
தளராத விசுவாசத்தினால் உம்மை
நாடி நாடி நானும் வாழ்கிறேன்

நான் என்ன சொல்லுவேன்
நான் எங்கு செல்லுவேன்
நீர் தந்த கிருபையால்
உள்ளம் நிறைந்து பாடுவேன்

பாடுவேன் துதிப்பேன் இருள் சூழும்
வேளையிலும் கண்ணீரின் பாதையிலும்
பாடுவேன் துதிப்பேன் கரம் உயர்த்தி
சொல்லுவேன் உம் வார்த்தை உண்மையே

பல நன்மைகள் நீர் வைத்துமே
என் கண்களால் காண முடியல
ஆனாலும் நீர் என் நம்பிக்கை
நீர் எனக்காய் மரித்து உயிர்த்தெழுந்தீர்

DESAMEY PAYAPPADAATHEY MAGILDHU

தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு
சேனையின் கர்த்தர் உன் நடுவில் 
பெரிய காரியம் செய்திடுவார்

1.பலத்தினாலும் அல்லவே 
பராக்கிரமம் அல்லவே 
ஆவியினாலே ஆகும் 
என்று ஆண்டவர் வாக்கு அருளினாரே

2.கசந்த மாரா மதுரமாகும் 
கொடிய யோர்தான் அகன்றிடும் 
நித்தமும் உன்னை நல்வழிநடத்தி 
ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார்

3.கிறிஸ்து இயேசு சிந்தையில் 
நிலைத்தே என்றும் ஜீவிப்பாய் 
ஆவியின் பெலத்தால் அனுதினம் நிறைந்தே
உத்தம சாட்சியாய் விளங்கிடுவாய்

DESAME DESAME PAYAPADATHE

தேசமே தேசமே பயப்படாதே -இயேசு
ராஜா உனக்காக யாவையும் செய்வார்
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசியே நீ பதறாதே
மகிழ்ந்து பாடு ராஜா வருகிறார்

நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய பெரிய காரியங்கள் செய்திடுவார்

நீ போக வேண்டிய தூரமோ வெகுதூரம்
புறப்படு புறப்படு கர்த்தரின் வேலையை செய்

எழுப்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது
கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது

சின்னவன் ஆயிரம் ஆயிரமாவான்
சிறியவன் பலத்த ஜாதியுமாவான்

கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாவார்
உன்துக்க நாட்கள் இன்றே முடிந்து போனது

கர்த்தர் உன்னை அதிசயமாய் நடத்திடுவார் நீ
ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதேயில்லை.

DEVANE UMMAI YAN THUTHIYANG

தேவனே உம்மை யாந் துத்தியஞ் செய்கிறோம்
தேவரீர் கர்த்த னென் றெங்கும்பிரஸ் தாபிப்போம்.

நித்திய தந்தையாம் நிர்மல னும்மையே
நித்தம்பூ மண்டலம் நின்றுவ ணங்கிடும்.

சம்மன சோருட சர்வசேனைகளும்
சாவிலா மண்டல சக்திகள் யாவரும்

சேராபீன் கேருபீன் சேர்ந்தங்கோய் வில்லாமல்
சிந்தையாய் உந்தனின் சீர் புகழ் பாடுவார்.

சேனையின் தேவனே, கர்த்தரே, நீர்மிக்க்
சுத்தரே, சுத்தரே, சுத்தரே என்கிறார்.

வானமும் பூமியும் உந்தனின் மாட்சியை
வாகுடன் காட்டுமே வள்ளலே யென்கிறார்.

மாட்சிமை பெற்றிடு மாவப் போஸ் தலரும்
மாய்விலா உம்மையே தீர்க்கமாய்ப் போற்றுவார்.

தீர்க்கரென் கின்றவச் சீர்பெற்ற சங்கமும்
தெய்வமே உம்மையே தீர்க்கமாய்ப் போற்றுவார்

வீரமாய் நின்றிட்ட உம்ரத்த சாட்சிகள்
வீவிலா உம்மையே விண்ணதில் போற்றுவார்

மட்டிலா மாட்சிமை பெற்றுள தந்தையை
மாவணக் கம்பெறும் மைந்தனைப் போற்றுவார்

தேற்றுதல் செய்திடுந் தூயமா ஆவியைத்
தெய்வலோ கத்திலும் பூவிலும் போற்றுவார்.

பூவெலாம் போயுள சுத்தமா சங்கமும்
புண்ணியன் உம்மையே போற்றிப்பிரஸ் தாபிக்கும்

மாகிறிஸ்து நீரல்லோ மகிமையின் ராஜன்
மாய்வில்லாத் தந்தைக்கு நித்திய மைந்தன்

நரரைநீர் மீட்டிட முன்வந்த பொழுது
நற்கன்னி கர்ப்பதை வெறுத் தோட விலையே

மரணத்தை வென்றிட்டு மாபக்தர் வசிக்க
மைந்த னே திறந்திட்டீர் மோட்சத்தைச் சிறக்க

திருந்ததை யென்போரின் திகழ்மாட்சி யதிலே
தினமும்நீ ரிருக்கின்றீர் வலபக்கந்தனிலே.

தரணியோர் எங்கட்குத் தகுந்தீர்ப்பு அளிக்கத்
தாண்டிநீர் வருவீரென்றென்றுநம் புவோம்

மாவிலை கொண்ட உம் ரத்தத்தால் மீட்டிட்ட
மாந்தருக் கேதயை செய்திட வேண்டுவோம்

எங்களை நித்திய உம்மகி மையிலே
ஏகமாய்ச் சுத்தரோ டென்றும்நீர் சேர்ந்தீடும்

அத்தனே ரட்சியும் ஐயன் உம்மாட்களை
ஆசீர்வ தியுஞ்சு தந்தரந் தன்னைநீர்.

என்றைக்கும் மாண்டிடும் இச்சனந் தன்னைநீர்
எங்கும் உயர்ந்திடு மென்றுமை வேண்டுவோம்.

இத்தினம் முற்றிலும் எப்பவஞ் செய்திடாது
எங்களைக் காத்திட ஏகனே வேண்டுவோம்

எங்களுக் கேதயை செய்திடும் ஐயாநீர்
என்றைக்கும் உம்மையே நம்பியி ருக்கிறோம்.

உம்மையே நம்பினான் உய்கின்றே னாதலால்
ஒன்றிலுந் துன்பமே நேரவிடாதிரும்.