Thursday, December 17, 2015

JEBA AAVI ENNIL OOTRUM

ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா

அக்கினியாய் நான் எரிய வேண்டும்
அனல் மூட்டிடும் அழுது புலம்பி ஜெபித்திட
ஜெப ஆவியால் நிரப்புமே

உலகம் மாமிசம் பிசாசினால்
அழியும் மாந்தர்க்காய்
திறப்பின் வாசலில் நின்றிட
ஜெப ஆவியால் நிரப்புமே

இரத்தமும் வேர்வையும் சிந்தியே
ஜெபித்த நேசரே
வாழ்நாளெல்லாம் உம்மைப் போலவே
ஜெப ஆவியால் நிரப்புமே

Ulagathil iruppavanilum

உலகத்தில் இருப்பவனிலும்
உங்களில் இருப்பவர் பெரியவர்
கர்த்தர் பெரியவர் நல்லவர்
வல்லவர் என்றுமே

தண்ணீரைக் கடந்திடும் போதும்
உன்மேல் அவைகள் புரளுவதில்லை
அக்கினியின் சோதனை ஒன்றும் செய்யாதே
அவைகளை மிதித்து ஜெயமே அடைவாய்

உன் பக்கம் ஆயிரம் பேரும்
உன் மேல் விழுந்தும் தீங்கொன்றுமில்லை
கண்களினால் காணுவாய் தேவன் துணை உனக்கே
ஜெயதொனியோடே முன்னே செல்வாய்

என்றென்றும் கர்த்தரின் நாமம்
துணையே என்று அறிந்துணர்வாயே
உனக்கெதிராய் எழும்பிடும் ஒன்றும் வாய்க்காதே
சேனைகளின் தேவன் ஜெயமே அளிப்பார்

எந்நாளும் இயேசுவை நம்பு
குறைவேயில்லை ஜீவியமதிலே
பசுமையின் ஜீவியிம் உந்தன் பங்காகும்
கர்த்தரின் ஆசீர் உனக்கே சொந்தம்

Nitchayamagave oru mudivu


நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீன்போகாது

நிச்சயமாகவே நிச்சயமாகவே

முந்தினவைகளை நினைக்க
வேண்டாம் வேண்டாம்
பூர்வமானவைகளை சிந்திக்க
வேண்டாம் வேண்டாம்
புதிய காரியத்தை செய்வேன் என்றாரே
இப்பொழுதே தோன்றும் என்றாரே

கர்த்தர்மேல் பாரத்தை நீ வைத்து வீடு
காலமெல்லாம் அவரை துதித்து பாடு பாடு
அவரோ உன்னை என்றும் ஆதரிப்பாரே
அனுதினம் நடத்திச் செல்வாரே

நீதியின் பலிகளை நீ செலுத்தி செலுத்தி
கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தால்
அவரோ உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னை என்றும் கைவிடுவதில்லை

Senaigalin devan nammodu

சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்
நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர்

எரிகோ போன்ற சோதனைகள்
எதிரிட்டு வந்தாலும்
தகர்த்திடுவார் நொறுக்கிடுவார்
ஜெயத்தைத் தந்திடுவார்

சேனையின் கர்த்தரை நம்பிடுவாய்
பாக்கியம் அடைந்திடுவாய்
உயர்த்திடுவார் தாங்கிடுவார்
நன்மையால் நிரப்பிடுவார்
ஆவியின் வரத்தை தந்திடுவார்
ஆவியை பொழிந்திடுவார்
விரைந்திடுவாய் எழும்பிடுவாய்
சீயோனில் சேர்ந்திடுவாய்

சபையோரே நாம் எழும்பிடுவோம்
வசனத்தைப் பிடித்திடுவோம்
வென்றிடுவோம் சென்றிடுவோம்
ஊழியம் செய்திடுவோம்

INDIAVIL YESU NAMAM LYRICS

இந்தியாவில் இயேசு நாமம்
இன்றே கூற வேண்டும்
இந்தியரை பரலோகத்தில்
பாக்கியவான்களாய் மாற்றும் -2

எலியாக்கள் எழும்ப வேண்டும்
எலிசாக்கள் எழும்ப வேண்டும் -2
கர்த்தரின் வல்ல நாமம்
உயர்த்தியாக வேண்டும் -2

அக்கினி இறங்க வேண்டும்
அற்புதம் விளங்க வேண்டும்
கர்த்தரே தெய்வம் என்று
ஜாதிகள் முழங்க வேண்டும் -2

தேசத்தின் ஜனங்கள் காக்க
திறப்பின் வாயில் நிற்க
தேவன் தேடும் மனிதன்
நாம் தான் இன்றே படைப்போம் -2

DESAME DESAME PAYAPADATHE LYRICS

தேசமே தேசமே பயப்படாதே -இயேசு
ராஜா உனக்காக யாவையும் செய்வார்
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசியே நீ பதறாதே
மகிழ்ந்து பாடு ராஜா வருகிறார்

நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய பெரிய காரியங்கள் செய்திடுவார்

நீ போக வேண்டிய தூரமோ வெகுதூரம்
புறப்படு புறப்படு கர்த்தரின் வேலையை செய்

எழுப்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது
கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது

சின்னவன் ஆயிரம் ஆயிரமாவான்
சிறியவன் பலத்த ஜாதியுமாவான்

கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாவார்
உன்துக்க நாட்கள் இன்றே முடிந்து போனது

கர்த்தர் உன்னை அதிசயமாய் நடத்திடுவார் நீ
ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதேயில்லை.

VAAN PURAVE ENGAL LYRICS

வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்
வன் செட்டைகள் விரித்தே
எம் அச்சமெல்லாம் அகல
வன் செயலாய் வந்திறங்கிடும் எம்மில்

ஆவியின் அக்கினியால் தரிசித்திட
அனலுள்ள இருதயம் அளித்திடவே
அன்பினால் அனைத்தோடும் கனலடைய
அனுதினம் அருள்மாரி சொரிந்திடுமே

ஊற்றிடுமே உமதாவியை
மாற்றிடுமே உம்மைப் போலவே

சோர்ந்திடும் உள்ளங்கள் உணர்வடைய
மாய்ந்திடும் சரீரங்கள் உயிரடைய
ஆண்டிடும் சக்திகள் அகன்றோடவே
அண்டி வரும் எமக்கு நின் ஜெயம்தாருமே

பற்பல பாஷைகள் மகிழ்ந்துரைக்க
அற்புத திருவன்பை புகழ்ந்துரைக்க
நற்செய்கையாம் நவ சிருஷ்டியதில்
பொற்பரனே வளர்ந்திட பொழிந்திடுவீர்

நேசரே நினைத்திடா வேளை வருவீர்
சேர்த்திட தூயவரை உமதுடனே
வேளையும் காலமும் சாயுமுன்னே
வேளையிது தீர கனிந்திறங்கிடுமே

Aadhavan Uthikkum Mun

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்,
நம் ஆண்டவர் தோன்றி விட்டார்,
இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்!

காற்றாய் அலையாய் கடலாய் நதியாய்
வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய்
உத்தமர் தோன்றி விட்டார்!
நம் உத்தமர் தோன்றி விட்டார்!!

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம்
ஆண்டவர் தோன்றி விட்டார் – இயேசு
ஆண்டவர் தோன்றி விட்டார்
காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில்
கர்த்தர் தோன்றி விட்டார் – நம்
கர்த்தர் தோன்றி விட்டார்!!!

Aarathanai Devane Aarathanai Yesuve


ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆவியே ஆராதனை ஆராதனை (2)

1. நித்தியரே ஆராதனை சத்தியரே ஆராதனை (2)
நித்தமும் காக்கும் தேவனே
சத்தியம் பேசும் ராஜனே ஆராதனை ஆராதனை – ஆராதனை

2. உன்னதரே ஆராதனை உத்தமரே ஆராதனை (2)
உண்மையான தேவனே உயிருள்ள ராஜனே
ஆராதனை ஆராதனை (2) – ஆராதனை

3. மதுரமே ஆராதனை மகத்துவமே ஆராதனை (2)
மகிமையான தேவனே மாசில்லாத ராஜனே
ஆராதனை ஆராதனை (2) – ஆராதனை

4. புதுமையே ஆராதனை
புண்ணியமே ஆராதனை (2)
பூரணமான தேவனே பூலோக ராஜனே
ஆராதனை ஆராதனை (2) – ஆராதனை

Appaa Veettil Eppothum

அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
ஆடலும் பாடலும் இங்கு தானே – நம்ம

ஆடுவோம், கொண்டாடுவோம்
பாடுவோம், நடனமாடுவோம்
அல்லேலூயா ஆனந்தமே
எல்லையில்லா பேரின்பமே

காத்திருந்தார் கண்டு கொண்டார்
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார்

பரிசுத்த முத்தம் தந்து
பாவமெல்லாம் போக்கிவிட்டார்

பாவத்திலே மரித்திருந்தேன்
புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன்

ஆவியென்னும் ஆடை தந்தார்
அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய

வசனமென்னும் சத்துணவை
வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார்

அணிந்து கொண்டோம் மிதியடியை
அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட

Aarivar Aaraaro

ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ?

1. பாருருவாகுமுன்னே – இருந்த
பரப்பொருள் தானிவரோ?
சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்
சிருஷ்டித்த மாவலரோ? – ஆர்

2. மேசியா இவர்தானோ? – நம்மை
மேய்த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி
அன்புள்ள மனசானோ? – ஆர்

3. தித்திக்குந் தீங்கனியோ? – நமது
தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய
மேவிய விண் ஒளியோ? – ஆர்

4. பட்டத்துத் துரைமகனோ? – நம்மை
பண்புடன் ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக்
காட்டிடுந் தாயகனோ? – ஆர்

5. ஜீவனின் அப்பமோதான்? – தாகம்
தீர்த்திடும் பானமோதான்?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல
மானவர் இவர்தானோ? – ஆர்

Aarparipom Aarparipom

ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்
அலங்கம் இடியும் வரை ஆர்ப்பரிப்போம்
எழுப்புதலின் நேரமல்லோ இது
யோசுவாவின் காலமல்லோ

எக்காளம் ஊதி எரிகோவைப் பிடிப்போம்
ஆரவாரத் துதியோடு கானானுக்குள் நுழைவோம்

1. கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல
தடைகள் விலகிடுமே
மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே
யோர்தானின் தடையெல்லாம் விலகி போகுமே

2. துதிக்கும் நமக்கோ தோல்வி இல்ல
வெற்றி நிச்சயமே
பலங்கொண்டு திடமனதாயிருப்போமே
இந்த தேசத்தை சுற்றி சுற்றி சுதந்தரிப்போம்

3. மாம்சத்தோடும் இரத்தத்தோடும்
நமக்கு யுத்தமில்லை -சர்வ
வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே
சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே

Aathuma Kartharai Thuthikkirathe


ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!

நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே
எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே – இதோ!

1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
அனைவரும் பாக்கிய மென்பாரே
முடிவில்லா மகிமை செய்தாரே – பல
முடையவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! – ஆத்துமா

2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் – நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார்
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை
உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார் – இதோ! – ஆத்துமா

3.முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால்
நட்புடன் நினை வொடு நல்லிஸரேல் – அவன்
நலம்பெற ஆதரித் தார்மறவேல் – இதோ! – ஆத்துமா

AAVIYANAVARE ANBU NESARE LYRICS

ஆவியானவரே அன்பு நேசரே
ஆட்கொண்டு நடத்துமையா

1. உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்
உம் வழிகள் கற்றுத் தாரும்
உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே
தினந்தினம் நடத்துமையா

2. கண்ணின்மனி போல காத்தருளும்
கழுகு போல சமந்தருளும்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
எந்நாளும் மூடிக் கொள்ளும்

3. வெயில் நேரத்தில் குளிர் நிழலே
புயல்காற்றில் புகலிடமே
கடுமழையில் காப்பகமே
நான் தங்கும் கூடாரமே

4. நியாயத் தீர்;ப்பின் ஆவியானவரே
சுட்டெரிக்கும் ஆவியானவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும்
பரிசுத்த ஆவியானவரே

5. வியத்தகு உம் பேரன்பை
எனக்கு விளங்கப்பண்ணும்
என் இதயம் ஆய்ந்தறியும்
புடமிட்டு பரிசோதியும்

Aayathamaa Aayathamaa

ஆயத்தமா ஆயத்தமா
இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா
அவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா

1. மணவாட்டி போல நீ காத்திருந்தால்
அவர் நாமத்தை தினமும் போற்றிருந்தால்
மேகங்கள் மீதினில் வந்திடுவார் – உன்னை
மோட்சத்துக்கழைத்து சென்றிடுவார்
புவியை வெறுத்திட ஆயத்தமா
அந்தப் பரனை பற்றிக்கொள்ள ஆயத்தமா

2. நேற்று வரைக்கும் நீ நன்மை செய்தும் – உன்
பாவங்கள் இன்று தலை தூக்கினால்
பரலோக கனவுகள் பாழாகுமே – உந்தன்
பாடுகள் அனைத்துமே வீணாகுமே
நேற்றைப் போல் இன்றும் நீ ஆயத்தமா – அட
இன்று போல் நாளையும் ஆயத்தமா

Aayiram Sthothirame

ஆயிரம் ஸ்தோத்திரமே
இயேசுவே பாத்திரரே
பள்ளத் தாக்கிலே அவர் லீலி
சாரோனிலே ஓர் ரோஜா

1. வாலிப நாட்களிலே
என்னைப் படைத்தவரை நினைத்தேன்
ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது
இயேசுவின் அன்பினாலே

2. உலக மேன்மை யாவும்
நஷ்டமாய் எண்ணிடுவேன்
சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே
சாத்தானை முறியடிப்பேன்

3. சிற்றின்ப கவர்ச்சிகளை
வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர்
துன்பத்தின் மிகுதியால் தோய்வுகள் வந்தாலும்
ஆவியில் மகிழ்ந்திடுவேன்

4. பலவித சோதனையை
சந்தோஷமாய் நினைப்பேன்
எண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்குக் கீழ்படுத்தி
விசுவாசத்தில் வளர்வேன்

5. இயேசுவின் நாமத்திலே
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும்
என்றென்றும் உம்மில் வாழ

Akkini Nerupai Irangi Varum

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து வழிநடத்தும்

1. முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்துப் பேசினீரே
எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே
எங்களை நிரப்பி பயன்படுத்தும்

2. எலியாவின் ஜெபத்திற்கு பதில்தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய்
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே
எங்களின் குற்றங்களை எரித்துவிடும்

3. ஏசாயா நாவைத் தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும்
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே
எங்களை அனுப்பும் தேசத்திற்கு

4. அக்கினி மயமான நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே
அந்நிய மொழியை பேச வைத்தீரே
ஆவியின் வரங்களால் நிரப்பினீரே

5. இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட
எங்களை நிரப்பும் ஆவியினால்

Alinthu Pokindra

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
தினமும் தினமும் நினைப்பேன்
அலைந்து திரிகின்ற ஆட்டைத்தேடியே
ஓடி ஓடி உழைப்பேன்

தெய்வமே தாருமே
ஆத்தும பாரமே

1. இருளின் ஜாதிகள் பேரொளி காணட்டும்
மரித்த மனிதர்மேல் வெளிச்சம் உதிக்கட்டும்

2. திறப்பின் வாசலில் தினமும் நிற்கின்றேன்
சுவரை அடைக்க நான் தினமும் ஜெபிக்கின்றேன்

3. எக்காள சப்தம் நான் மொளனம் எனக்கில்லை
சாமக்காவலன் சத்தியம் பேசுவேன்

4. கண்ணீர் சிந்தியே விதைகள் தூவினேன்
கெம்பீர சத்தமாய் அறுவடை செய்கிறேன்

5. ஊதாரி மைந்தர்கள் உம்மிடம் திரும்பட்டும்
விண்ணகம் மகிழட்டும் விருந்து நடக்கட்டும்

Anaithaiyum Seithu

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலுல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா

1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்
உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்

2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய்
எண்ணுவதற்கு
காலைதோறும் கண்ணோக்கி பார்க்கிறீர்
நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர்

3. என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிடுவேன்
நான் போகும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக்
கொண்டேன்

4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே
அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே

5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள்தானே அந்நாளில் காணுமே

எப்போது வருவீரையா
என் உள்ளம் ஏங்குதையா

Anaithu Samayathu Meipporul

அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே
வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே
மெய்ப்பொருள் இயேசுவே…

உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும்
அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும் புலனாகும்
மெய்ப்பொருள் இயேசுவே…

1. நோன்பு, நேர்ச்சை பல பிரயாணம் செய்துமே
பாவத்தின் கூர்மையை வெல்ல முடியவில்லை
சோதனை நேரத்தில் உடல் உள்ளம் கறைப்பட
துக்கம் நிறைந்திட வாழ்வெல்லாம் சோக மயம்
நிம்மதி எங்கே? விடுதலை எங்கே?
என்றிடும் வேளையில் கல்வாரி கண்ணில் பட
மெய்ப்பொருள் இயேசுவே…

2. பாவமும் சாபமும் துரத்திடும் வேளையில்
கல்வாரி சிலுவையின் காட்சியில் மூழ்கிட
பலியாடாம் இயேசுவின் இரத்தத்தில் என் பாவம்
மன்னிக்கப்பட்டது, நம்பிக்கைப் பிறந்தது
சோதனை வேளையில் இயேசுவின் துணை கண்டேன்
பரலோக பாதையில் இணையற்ற இன்பம் பெற்றேன்
மெய்ப்பொருள் இயேசுவே…

3. காலமும் கடந்திடும் சீலமும் குறைந்திடும்
மனிதனின் வாழ்வு ஓர் மாபெரும் மாய்கையே
கல்வி, செல்வம், புகழ், பதவி ஆசைகள் பல
மரணம் வரும்போது மறைந்து ஓடிப் போகும்
உன் பாவமோ தூய்மையோ உன்னைத் துரத்திடும்
புதிய மனம் பெற சிலுவை வரை வந்து
மெய்ப்பொருள் இயேசுவே…

ANANDAME JEYA JEYA LYRICS



ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஞானரட்சகர் நாதர் நமை – இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் – ஆனந்தமே
1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்
எங்கள் ரட்சகரேசு நமை – வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் – ஆனந்தமே
2. முந்து வருட மதினில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல
தந்து நமக்குயிருடையுணவும் – வெகு
தயவுடன் இயேசு தற்காத்ததினால் – புகழ் – ஆனந்தமே

3. பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை – இத்
தரை தனில் குறை தணித்தாற்றியதால் – புகழ் – ஆனந்தமே

Anbaram Yesuvai Parthu Konde


அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே
இன்பமாக அவர் பாதையோடே
தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே(2)

துன்ப பெருக்கிலே சோர்ந்திடாதே
அன்பர் அறியாமல் வந்திடாதே
கண் விழிபோல் நான் காத்திடுவேன் என்றனரே

1. முட்செடி போலே பற்றிடுவேன்
மோசம் அடையாய் நீ முற்றீலுமே
ஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே

2. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் உன்னை நெருக்கிடினும்
ஆ.. நேசரே தம் இன்ப சத்தம் ஈந்தீடுவார்

3. மாயையான இந்த லோகமதில்
மாய்ந்தழியும் இம்மாந்தர் அன்று
நேற்றும் இன்றென்றும் மாறிடாரே உன் நேசரே

ANBARAM YESUVIN ANBINAI LYRICS

அன்பராம் இயேசுவின்
அன்பினை எண்ணியே
அளவில்லா துதிகளுடன்
சந்தோஷ கீதங்களால்
எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
பரமனை ஸ்தோத்தரிப்பேன்

1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர்
கவலை எனக்கு இல்லையே
புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும்
என்னை நடத்திச் செல்லுவார்

காலம் மாறினாலும்
பூமி அழிந்தாலும்
இயேசு என்றும் மாறிடார்

எந்தன் நேசரே எந்தன் அடைக்கலமானவர்
போக்கிலும் வரத்திலும் என்னைக் கரம்பற்றி நடத்துவார்

                                                                              ---- அன்பராம் இயேசுவின்
 

2. உலர்ந்த எலும்புகளை உயிர்க்கச் செய்தவரே
உமக்கே நிகரே இல்லையே
சிவந்த சமுத்திரத்தை இரண்டாய் பிளக்கச் செய்து
என்னை நடத்திச் செல்லுவீர்

நல்ல தேவனின்
வல்ல வார்த்தைகளால்
எந்தன் வாழ்வு மலரும்

எந்தன் தேவனே எந்தன் பரிகாரி ஆனவர்
புதிய கிருபைகள் அனுதினமும் தருபவர்

                                                                              ---- அன்பராம் இயேசுவின்

3. வான சேனைகள் சூழ எக்காளச் சத்தம் முழங்க
மேகமீதில் ஒரு நாள்
மாசற்ற ஜோதியாக மகிமை இராஜனாக
மணவாளன் வந்திடுவார்
ஆயத்தமாகிடுவேன் அன்பரை சந்தித்திட
பரிசுத்தர் கூட்டத்தோடு
அந்த நாள் சமீபமே எந்தன் இதயம் பூரிக்குதே
செல்வேன் அன்பரோடு வாழ்வேன் நித்தியமாய்
                                                                               ----
அன்பராம் இயேசுவின்

Anbe En Yesuve

அன்பே என் இயேசுவே ஆருயிரே
ஆட்கொண்ட என் தெய்வமே

1. உம்மை நான் மறவேன்
உமக்காய் வாழ்வேன்
 

2. வாழ்வோ சாவோ
எதுதான் பிரிக்க முடியும்
 

3. தாயைப் போல் தேற்றினீர்
தந்தை போல் அணைத்தீர்
 

4. உம் சித்தம் நான் செய்வேன்
அதுதான் என் உணவு
 

5. இரத்தத்தால் கழுவினீர்
இரட்சிப்பால் உடுத்தினீர்
 

6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா

Anbe Kalvari Anbe

அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதய்யா

1. தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் – எங்கள்
பரிகார பலியானீர்

2. காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே

3. அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி
நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதையா

4. நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே

Anbin uruvam andavar

1. அன்பின் உருவம் ஆண்டவர்
அழைக்கிறார் நீ அருகில் வா
தொய்ந்துபோன உன் வாழ்வினை
கேட்கிறார் நீ அருகில் வா

ஓடிவா நீ ஓடிவா
கண்கலங்கியே நீயே வா
தூரமாய் நிற்கும் உன்னைத்தான்
அழைக்கிறார் நீ அருகில் வா – 2

2. மனிதர் பலரை நம்பினாய்
பலமுறை தடுமாறினாய்
உற்றார் பெற்றார் அன்பெல்லாம்
கனவு போன்று அகலுமே – ஓடிவா

3. நண்பர் பலரும் இருப்பினும்
நாடும் அன்பைப் பெற்றாயோ
செல்வம் எல்லாம் மாய்கையே
உலகம் கானல் நீராமே – ஓடிவா

4. ஒருமுறை அன்பை ருசித்துமே
விழுந்துபோன நீ எழும்பிவா
பலமுறை துரோகம் செய்ததால்
இயேசுவின் கண்ணீர் துடைக்கவா – ஓடிவா

5. இன்னும் நொந்து போவானேன்
இன்றே அருகில் ஓடிவா
உள்ளம் குமுறும் உன்னையே
தள்ளேன் என்றார் ஓடிவா – ஓடிவா

ENNA KODUPPAEN NAAN UMAKKU LYRICS

என்ன கொடுப்பேன் நான் உமக்கு
என்ன கொடுப்பேனோ ?x(2)
என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ?(2)
என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? (2)

என்ன கொடுப்பேன் நான் உமக்கு
என்ன கொடுப்பேனோ ?(2)


1. ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ
நோவாவைப் போல் தகனபலியினையோ x(2)
ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ (2)
என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? (2)

என்ன கொடுப்பேன் நான் உமக்கு
என்ன கொடுப்பேனோ ? (2)

2. ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன்
ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன் x(2)
தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன் (2)
என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?(2)

என்ன கொடுப்பேன் நான் உமக்கு
என்ன கொடுப்பேனோ ?(2)


3. சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிட
பரிசுத்தமாய் மாற்றிட நீர் வாருமே
என்னையே நான் தருகின்றேன் உம் மகிமைக்கே
என்னைக் கொடுப்பேன், நான் என்னை கொடுப்பேன் ?

என்ன கொடுப்பேன் நான் உமக்கு
என்ன கொடுப்பேனோ ?(2)

என்னையே நான் தருகின்றேன் (2)
என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ?
என்னைக் கொடுப்பேன், நான் என்னைக் கொடுப்பேன் ?