Tuesday, October 20, 2015

EGAMANU DEVA NAMASKARIPPEN

இகமனுதேவா நமஸ்கரிப்பேன்
இயேசு தயாளா சரணடைந்தேன்

1. மாசணுகாத திரு உருவே
மகிமையைத் துறந்த எம்பரம் பொருளே
தீமைக் கண்டேன் என் இதயத்திலே
தாழ் பணிந்தேன் உம் பாதத்திலே
குருபர நாதா தேடி வந்தீர்
குறை நீக்க மனுவாய் அவதரித்தீர்

2. ஞானியர் போற்றிய தூயவனே
மேய்ப்பர்கள் வணங்கின மறையவனே
ஆர்ப்பரித்து உம் புகழ் உரைப்பேன்
ஆனந்தமாய் நின் பணிபுரிவேன்
அகிலமே உமது அடிதொடர
ஆணை பெற்றேன் நான் முன் நடக்க

3. காலத்தால் அழிந்திடா காவலனே
கன்னியின் மைந்தனாய் வந்தவனே
மாமன்னனாய் வருவீரே
முகமுகமாய் காண்பேனோ
திரிமுதல் தேவா காப்பீரே
தினம் எமை கழுவி மீட்பீரே

IDUKKAMAANA VAASAL VALIYE

இடுக்கமான வாசல் வழியே
வருந்தி நுழைய முயன்றிடுவோம்
சிலுவை சுமந்து இயேசுவின் பின்
சிரித்த முகமாய் சென்றிடுவோம்

1. வாழ்வுக்கு செல்லும்
வாசல் இடுக்கமானது
பரலோகம் செல்லும்
பாதை குறுகலானது - சிலுவை

2. நாம் காணும் இந்த உலகம்
ஒருநாள் மறைந்திடும்
புது வானம் பூமி நோக்கி
பயணம் செய்கின்றோம்

3. இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்
சிலகாலம் தான் நீடிக்கும்
இணையில்லாத மகிமை
இனிமேல் நமக்குண்டு

4. அழிவுக்கு செல்லும் வாயில்
மிகவும் அகன்றது
பாதாளம் செல்லும் பாதை
மிகவும் விரிந்தது

INTHA KULANTHAIYAI NEER YETRUKKOLLUM

இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே,

அனுபல்லவி

உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த,

சரணம்

1. பிள்ளைகள் எனக்கதிகப் பிரியம், வரலாம், என்று
உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே.

2. பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்த
சீலமாயின்றும் வந்தாசீர்வதம் செய்யும், ஐயா.

3. உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்,
உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து.

4. உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல்,
நலமாய் இதைக் காத்தாளும், நன்மைப் பராபரனே!

5. விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடங்கிப்,
புசிய மரம்போல் தெய்வ பத்தியிலே வளர.

INNALVARAIKKUM KARTHARE

1. இந்நாள்வரைக்கும் கர்த்தரே
என்னைத் தற்காத்து வந்தீரே
உமக்குத் துதி ஸ்தோத்திரம்
செய்கின்றதே என் ஆத்துமம்

2. ராஜாக்களுக்கு ராஜாவே
உமது செட்டைகளிலே
என்னை அணைத்துச் சேர்த்திடும்
இரக்கமாகக் காத்திடும்.

3. கர்த்தாவே, இயேசு மூலமாய்
உம்மோடு சமாதானமாய்
அமர்ந்து தூங்கும்படிக்கும்,
நான் செய்த பாவம் மன்னியும்.

4. நான் புதுப் பலத்துடனே
எழுந்து உம்மைப் போற்றவே,
அயர்ந்த துயில் அருளும்;
என் ஆவியை நீர் தேற்றிடும்.

5. நான் தூக்கமற்றிருக்கையில்,
அசுத்த எண்ணம் மனதில்
அகற்றி, திவ்விய சிந்தையே
எழுப்பிவிடும், கர்த்தரே.

6. பிதாவே, என்றும் எனது
அடைக்கலம் நீர் உமது
முகத்தைக் காணும் காட்சியே
நித்தியானந்த முத்தியே

7. அருளின் ஊற்றாம் ஸ்வாமியை
பிதா குமாரன் ஆவியை
துதியும், வான சேனையே,
துதியும், மாந்தர் கூட்டமே.

INNALIL YESUNAADHAR UYIRTHAR

1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார், கம்பீரமாய்
இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்,

மகிழ் கொண்டாடுவோம்,
மகிழ் கொண்டாடுவோம்.

2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க,
புகழார்ந்தெழுந்தனர், தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க

3. அதி காலையில் சீமோனொடு யோவானும் ஓடிட,
அக்கல்லறையின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட

4. பரி சுத்தனை அழிவுகாண வொட்டீர், என்று முன்
பகர் வேதச்சொற்படி பேதமற்றெழுந்தார் திருச்சுதன்

5. இவ்வண்ணமாய்ப் பரன் செயலை எண்ணி நாடுவோம்ளூ
எல்லாருமே களி கூர்ந்தினிதுடன் சேர்ந்துபாடுவோம்

INDRU KANDA EGIPTHIYANAI

1. இன்று கண்ட எகிப்தியனை
என்றுமேஇனி காண்பதில்லை (2)

இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை (2) இன்று...

2. கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2)
கண்ணீரோடு நீ விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2) இஸ்ரவே...

3. தண்ணீரை நீ கடக்கும்போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார் (2)
வௌ;ம்போல சத்துரு வந்தால்
ஆவியில் கொடியேற்றிடுவார் (2) இஸ்ரவே...

4. வாதை உந்தன் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார் (2)
பாதையிலே காக்கும்படிக்கு
தூதர்களை அனுப்பிடுவார் (2) இஸ்ரவே...

5. சோர்ந்து போன உனக்கு அவர்
சத்துவத்தை அளித்திடுவார் (2)
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார் (2) இஸ்ரவே...

INDRU MUTHAL NAAN UNNAI

இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன்

1. பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்
உனது பெயரை நான் உயர்த்திடுவேன்
ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய்

2. செல்லும் இடமெல்லாம் காவலாய் நான் இருப்பேன்
சொன்னதை செய்திடுவேன் கைவிடவேமாட்டேன்
நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன்

3. பரவி பாயகின்ற ஆறுகள் நீதானே
நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே
வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே

4. பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்
வானத்தின் பலகனிகள் திறந்திடுவேன்
இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன்

5. எனது சாயலாய் உருவாக்கி நடத்துகிறேன்
பலுகி பெருகிடுங்கள் பூமியெல்லாம் நிரம்பிடுங்கள்
உயிர் வாழும் அனைத்தின் மேல் ஆளுகை செய்திடுங்கள்

6. வானத்து விண்மீன் போல ஒளிக் கொடுப்பாய்
கடற்கரை மணலை போல பெருகிடுவாய்
எதிரியின் வாசல்களை உரிமை ஆக்கிடுவாய்

7. நீரண்டை வளருகின்ற செடியும் நீதானே
மதில் மேல் ஏறுகின்ற கொடியும் நீதானே
பகை நிறைந்த உலகத்தில் அன்பு கரம் நீட்டிடுவாய்

8. மாராவின் கசந்த கண்ணீர் மதுரமாகிடும்
பன்னிரெண்டு நீரற்றும் ஏலீமும் உனக்கு உண்டு
கல்வாரி நிழலதனிலே காலமெல்லாம் வாழ்ந்திடுவாய்

9. கர்த்தரின் குரலுக்கு கவனமாய் செவிகொடுத்து
பார்வைக்கு நல்லதையே செய்து நீ வாழ்ந்துவந்தால்
வியாதி வருவதில்லை குணமாக்கும் ஆண்டவர் நான்

10. உணவையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பேன்
மலடு இருப்பதில்லை யுடிழசவழைn ஆவதில்லை
ஆவியிலும் உண்மையிலும் ஆராதனை செய்திடுங்கள்

IPPOVINIL NAM YESUVE THEDIYE


இப்பூவினில் நம் இயேசுவே - தேடியே
மீட்க வந்தார் (2)
விண்ணோர்களும் பண்பாடவே (2)
விந்தையாய் இயேசுவே வந்துதித்தார் (2)

1. அருணோதயம் பூவில் தோன்றினதே
பாதை காட்டிடவே (2)
தாவீதின் வேரில் தோன்றினவர்
தேவ பாலன் இவர் (2)
- இப்பூவினில்

2. ஆலோசனை கர்த்தர் நாமமிதே
வல்ல தேவன் இவர் (2)
கர்த்தத்துவம் அவர் தோளில் உண்டே
பாதம் போற்றிடுவோம் (2)
- இப்பூவினில்

3. அல்லேலூயா நாம் பாடுவோம்
மீட்பர் பாரில் வந்தார் (2)
இம்மானுவேலரை நம் தேவனை
வாழ்த்தி போற்றிடுவோம் (2)
- இப்பூவினில்

IPPOTHU NESA NAATHA THALAI SAITHU

1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து
தெளிந்த அறிவோடு ஆவியை
ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது:
பொங்க நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே

2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கபாரம்
நீர் தாங்கி மனதார மரித்தீர்:
உம் சாவில் பெலன் ஊற்றே, ஆவியையும்
அமைதலாய்த் தந்தைக்குக்கொப்புவித்தீர்

3. நல் மீட்பரே, சாவிருள் என்னை சூழ்ந்து
மரண அவஸ்தை உண்டாகையில்,
தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து
ஒளி உண்டாக்கும் அச்சராவினில்.

YESU THIRU NAAMAM YEEYA UYAR MAGIMAIYIL


இயேசு திருநாமம் ஈய உயர் மகிமையில் ஜெய மகிழ்
இயேசு திருநாமம் எனக்குயிரே
ஆசீர்வாதம் தாரும் ஆசீர்வாதம் தான்
ஆசீர்வாதம் பேசுருபாதம் மேசியா நீர் தான்
- இயேசு … எனக்குயிரே

1. இந்த சபையோரும் உன் செயலாம்
இதை நன்றுணர்ந்தே – புகழ்
நெஞ்சமே கொண்டாடி என்றும் போற்றவே (2)
மிஞ்சும் வாக்கும் செய்கை
ஒன்றிதே உம் மீட்பை
சென்றுலகெங்கும் தந்தையுகந்தை
நன்று காட்டவே - இயேசு … எனக்குயிரே

2. விண்ணுலகோர் பாட
மண்ணுலகோர் அடிபணிந்திட
பாதளத்துள்ளோரும் பயந்தோடிட (2)
எந்தன் நடு வா வா
உந்தன் அருன் தா தா
வந்தனம் சந்ததம் என்றுமே தந்தனம்
உந்தன் அடிமை நான் - இயேசு … எனக்குயிரே

YESU BAALAGA EN JEEVIYA KAALA

இயேசு பாலகா என்
ஜீவகால மெல்லாம்
உம் பிறந்க நாளை
வாழ்த்தி பாடுவேன் (2)

1. விண்ணை விட்டு மண்ணுலகம் வந்ததால்
என்னை மீட்க ஏழைக்கோலம் கொண்டதால்
ஜீவ நாயகா என் அருமை ரட்சகா
பூவுலகை மீட்க வந்த இயேசு பாலகா - இயேசு

2. எந்தன் உள்ளம் இன்பத்தால் நிறைந்தாலும்
துன்பம் என்னை சூழ்ந்தலைக்கழித்தாலும்
ஜீவ நாயகா என் அருமை ரட்சகா
பூவுலகை மீட்க வந்த இயேசு பாலகா - இயேசு

ISRAVEL ENNUM NAATINILE

1. இஸ்ரவேல் என்னும் நாட்டினிலே
பெத்லகேம் என்னும் ஊரினிலே
பிறந்தார் (4) தேவ குமாரன் பிறந்தார்
பிறந்தார் (4) இயேசு கிறிஸ்து பிறந்தார்

உன்னதத்தில் மகிமை
பூமியிலே சமாதானம்
மனுஷர் மேல் பிரியம்
மனுஷர் மேல் பிரியம்

2. கன்னிமரியின் தாய்மையிலே
தாவீது இராஜா வம்சத்திலே
பிறந்தார் (4) அதிசயமானவர் பிறந்தார்
பிறந்தார் (4) முன்னோரின் மேசியா பிறந்தார்
- உன்னதத்தில்

3. சத்திரத்தில் இடம் இல்லையே
மெத்தையோ தொழுமுன்னணையே
பிறந்தார் (4) சிருஷ்டிப்பின் தேவன் பிறந்தார்
பிறந்தார் (4) கர்த்தாதி கர்த்தர் பிறந்தார்
- உன்னதத்தில்

UNGA OOLIYAM NAAN YEN KALAGANUM

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்
அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க

1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா
எஜமானனே என் ராஜனே
எஜமானன் நீர் இருக்க
வேலைக்காரனுக்கு ஏன் கவலை

2. எலியாவை காகம் கொண்டு போஷத்தீரே
சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே
தெய்வமே பேசும் தெய்வமே
எலியாவின் தேவன் இருக்க
எதுவும் என்னை அசைப்பதில்லை

3. பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரே
சிறையிலே நள்ளிரவீல் ஜெபிக்க வைத்தீரே
கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன
காக்கும் தெய்வம் நீர்இருக்க
கவலை பயம் எனக்கெதற்கு

4. ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கின்றேன்
ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர்
நல் ஆயனே என் மேய்ப்பரே
என் ஆயன் நீர் இருக்க
ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை

5. தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பதுபோல
இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர்
தகப்பனே தாங்கும் தெய்வமே
தகப்பன் நீர் இருக்கையிலே
பிள்ளை எனக்கு ஏன் கவலை

UNGAL DHUKKAM SANTHOSAMAI MAARUM

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்

கலங்காதே மகனே, கலங்காதே மகளே
என் இயேசு கைவிட மாட்டார்

1. கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்துவிடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய்... கலங்கிடவே வேண்டாம்

2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைகின்றார் - (உன்)

3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
ஒருநாளும் விட மாட்டார்
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பி செல்ல வழி செய்வார் - (நீ)

4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக் கொள்வோம்
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார் - நம்

5. மாலையில் மகனே அழுகின்றாயா
காலையில் அக மகிழ்வாய்
நித்திய பேரானந்தம்
நேசரின் சமூகத்திலே

6. அக்கினியின் மேல் நடந்தாலும்
எரிந்து போக மாட்டாய்
ஆறுகளை நீ கடந்தாலும்
மூழ்கி போக மாட்டாய்

7. முழுமையாய் மனம் திரும்பிவிடு
முற்றிலும் வாழ்வை ஒப்புக்கொடு
வேண்டாத அனைத்தையும் விட்டுவிடு
ஆண்டவர் விருப்பம் நிறைவேற்று
எங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

எங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்துவிடும்
கலங்கிடவே மாட்டோம்
நாங்கள் கலங்கிடவே மாட்டோம்

Saturday, October 17, 2015

silar rathangalai kurithu menmai

சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்
சிலர் குதிரையைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்
நாங்களோ நாங்களோ 

ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
இயேசு கிறிஸ்துவைக் குறித்தே
மேன்மை பாராட்டுவோம்


1. அவர்கள் முறிந்து விழுந்தார்கள்
நாங்களோ எழுந்து நிற்கின்றோம்
ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
ஜீவ ஆவியினாலே என்றும் நிறைந்திடுவோம்


2. நாங்கள் உமக்குள் மகிழ்ந்திருந்து
உமது நாமத்தில் கொடியேற்றுவோம்
ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
ஜீவன் தந்தவரையே நாம் உயர்த்திடுவோம்


3. கர்த்தர் அபிஷேகம் செய்தவரை
வாழ்நாள் எல்லாம் நடத்துகின்றார்
ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
அவர் வலதுகரம் நம்மை நடத்திடுமே

athikaalaiyil sooriyanai paarkaiyile

1. அதிகாலையில் சூரியனைப் பார்க்கையிலே
என் தேவன் உறங்காதவர்
என்று நான் அறிவேன்
நான் குருவிகள் குரலைக் கேட்கையில்
என் தேவனும் கேட்கிறார்
என் பயம் அறிவார்
கண்ணீர் காண்பார்
அழுகையைத் துடைத்திடுவார்

எனக்கொரு தேவன் உண்டு
அவர் என்னைக் காண்கின்றார்
அவர் என்றென்றும் என்னைக் காண்கின்றார்
எல் ரோயீ என்னைக் காணும் தேவனே

2. மேகம் கடப்பதைக் காண்கையில்
நான் மனதில் ஜெபிக்கின்றேன்
இந்த உலகத்தின் மாயைகள்
என்னை மேற்கொள்ள கூடாது
நதிகள் புரள்வதைக் காண்கையில்
நான் எதற்கும் அஞ்சிடேன்
அவர் அன்பு என்றும் மாறாது
என்றும் நமக்குண்டு

devane umm samugame

1. தேவனே உம் சமூகம்
ஏழை நான் தேடி வந்தேன் – 2
யாரிடம் நான் செல்லுவேன் – 2
எந்தனின் தஞ்சம் நீரே – 2
பரிசுத்தமானவரே
உம் பாதமே சரணடைந்தேன் – 2


2. யார் என்னை வெறுத்தாலும்
அழைத்தவர் நீரல்லவா
யார் என்னை பகைத்தாலும்
அணைப்பவர் நீரல்லவா
உன்னதமானவரே
உயர் நல் அடைக்கலமே

3. தேசத்தின் சமாதானம்
உம் கையில் தானுண்டு
என் ஜனம் மாளுதையா
இரங்கும் என் இயேசு நாதா
உன்னதமானவரே
உம்மைத்தான் நம்பியுள்ளேன்

Tuesday, October 13, 2015

unn nenjile undana visararangalai

1. உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ
கர்த்தாவின் உண்மையான கரத்துக் கொப்புவி
விண்மண்ணை ஆண்டிருக்கும் மகா தயாபரர்
உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார்.

2. ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளைபோல்
நீ நம்பி மனதார பணிந்து பற்றிக்கொள்
உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குது
வேண்டாம் ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு.

3. இக்கட்டுகளினாலே கலங்கினோனே நீ
திடன்கொள் கர்த்தராலே இக்கட்டின் ராத்திரி
சந்தோஷமாக மாறும் சற்றே பொறுத்திரு
நீ பூரிப்பாய்க் கொண்டாடும் நாள் வரப்போகுது.

4. கர்த்தாவே எங்களுக்கு எல்லா இக்கட்டிலும்
ரட்சிப்பளிப்பதற்கு நேரிட்டுக்கொண்டிரும்
ஆ எங்களைத் தேற்றிடும் பரகதிக்குப் போம்
வழியிலும் நடத்தும் அப்போ பிழைக்கிறோம்.

Monday, October 12, 2015

UNNAIYE VERUTHUVITTAL ULIYAM

1. உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம்.
சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்த்திடலாம்

2. சிலுவையை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும்.
நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதி வரும்.

3. பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே சுயமது மறையட்டுமே

4. நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே
இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார்

5. சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான்.
கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார்

6. தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம்.
இயேசுவில் இருந்த சிந்தை நம்மில் இருக்கட்டுமே

UM ARUL PERA YESUVE NAAN

1. உம் அருள் பெற, இயேசுவே, நான் பாத்திரன் அல்லேன்,
என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன்.

2. நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே,
நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே.

3. ஆனாலும் வாரும் தயவாய், மா நேச ரட்சகா,
என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய், என் பாவ நாசகா.

4. நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன்,
நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன்.

5. தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர்,
மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர்.

6. என் பக்தி, ஜீவன் இதினால் நீர் விர்த்தியாக்குமேன்,
உந்தன் சரீரம் இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன்

7. என் ஆவி, தேகம், செல்வமும் நான் தத்தம் செய்கிறேன்,
ஆ இயேசுவே, சமஸ்தமும் பிரதிஷ்டை செய்கிறேன்

UM RAJJIYAM VARUNKAALAI KARTHARE

1. உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே
அடியேனை நினையும் என்பதாய்
சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே
விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய்.

2. அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்
எவ்வடையாளமும் கண்டிலாரே.
நம் பெலனற்ற கையை நீட்டினார்.
முட் கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே.

3. ஆனாலும் மாளும் மீட்பர் மா அன்பாய்
அருளும் வாக்கு, “இன்று என்னுடன்
மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்”
என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன்.

UMMALE THAN EN YESUVE

1.உம்மாலே தான், என் இயேசுவே,
ரட்சிக்கப்படுவேன்;
உம்மாலேதான் பேரின்பத்தை
அடைந்து பூரிப்பேன்.

2.இப்பந்தியில் நீர் ஈவது
பரம அமிர்தம்;
இனி நான் பெற்றுக்கொள்வது
அநந்த பாக்கியம்.

3.இவ்வேழை அடியேனுக்கு
சந்தோஷத்தைத் தந்தீர்;
இக்கட்டு வரும்பொழுது,
நீர் என்னைத் தேற்றுவீர்.

4.பூமியில் தங்கும் அளவும்
உம்மையே பற்றுவேன்;
எவ்வேளையும் எவ்விடமும்
நான் உம்மைப் போற்றுவேன்.

UMMAL AAGATHA KAARIYAM ONDRUM

உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல (3)
எல்லாமே உம்மால் ஆகும் … அல்லேலூயா (2)
ஆகும் எல்லாம் ஆகும் உம்மாலேதான் எல்லாம் ஆகும் (2)

1. சொல்லிமுடியாத அற்புதம் செய்பவர் நீரே ஐயா நீரே
எண்ணிமுடியாத அதிசயம் செய்பவர் நீரே ஐயா நீரே (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)

2. எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே ஐயா நீரே
எனக்காக யாவையும் செய்துமுடிப்பவர் நீரே ஐயா நீரே (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)

3. வரண்ட நிலத்தை நீரூற்றாய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே
அவாந்திர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே(2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2

ULARTHA ELUMBUGAL UYIR PETRU ELA

உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்
அசைவாடும் . இன்று
அசைவாடும்
ஆவியான தேவா

1. நரம்புகள் உருவாகட்டும்
உம் சிந்தை உண்டாகட்டும் - அசை

2. சதைகள் உண்டாகட்டும்
உம் வசனம் உணவாகட்டும்

3. தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகணுமே

4. காலூன்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே

5. சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே

6. மறுபடி பிறக்கணுமே
மறுரூபம் ஆகணுமே

7. சாத்தானை ஜெயிக்கணுமே
சாட்சியாய் நிற்கணுமே

8. பயங்கள் நீங்கணுமே
பரிசுத்தமாகணுமே

9. நோய்கள் நீங்கணுமே
பேய்கள் ஓடணுமே

OOTRU THANNIRE ENTHAN DEVA AAVIYE

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவநதியே என்னில் பொங்கி பொங்கிவா
ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்

1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே

2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுமே
கனிதந்திட நான் செழித்தோங்கிட
கர்த்தரின் கரத்தில் நித்தம் கனம் பெற்றிட

3. இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே
எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே
ஆத்ம பலமும் பரிசுத்தமும்
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே

4. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
இரட்சகரின் காயங்களில் வெளிப்படுதே
பாவக் கறைகள் முற்றும் நீங்கிட
பரிசுத்த சமூகத்தில் ஜெயம் பெற்றிட

ETHANAI NANMAIGAL ENAKKU SEITHIR

எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன் - நான்
நன்றி ராஜா....நன்றி ராஜா

1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
தேவனே உம்மை துதிப்பேன்

2. பெலவீனன் என்று தள்ளி விடாமல்
பெலத்தால் இடை கட்டினீர்

3. பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன்
கிருபையால் இரட்சித்தீரே

4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
எனக்காய் மீண்டும் வருவீர்

5. கரங்களைப் பிடித்து கண்மணி போல
காலமெல்லாம் காத்தீர்

6. பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி
பூரண சுகமாக்கினீர்

7. முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி
சாத்தானை ஜெயித்து விட்டீர்

8. நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
விவரிக்க முடியாதையா

ETHANAI NAATKAL SELLUM YESUVIN

1. எத்தனை நாட்கள் செல்லும் இயேசுவின் சுவிசேஷம்
அத்தனை நாட்டவரும் அறிய எத்தனை நாட்கள் செல்லும்?

ஆடுகள் ஏராளம் அலைந்து திரிந்திடுதே
தேடுவோர் யாவருக்கும் என் பெலன் தாராளம்

2. சாத்தானின் சக்திகளும் பெருகிடும் நாட்களிலே
தேவனின் பிள்ளைகட்குள் ஒருமனம் என்று வரும்?

3. தேவைகள் நிறைந்து நிற்க வாய்ப்புகள் நழுவிச் செல்ல
தாழ்மையாய் ஊழியர்கள் இணைவது என்று வரும்?

4. கோபங்கள், சீற்றங்களும், பொறாமையும், பிரிவுகளும்
ஊழியர் என்று சொல்வார் நடுவினில் என்றகலும்?

5. உண்மையாம் கோதுமைகள் மணியாக மண் அடியில்
மறைந்திடும் நாள் வருமா? நாம் உடைபடும் நாள் வருமா?

ENTHANAI NAAVALPAADUVEN


1. எத்தனை நாவால் பாடுவேன்
என் மீட்பர் துதியை!
என் ஆண்டவர் என் ராஜனின்
மேன்மை மகிமையை!

2. பாவிக்கு உந்தன் நாமமோ
ஆரோக்கியம் ஜீவனாம்!
பயமோ துக்க துன்பமோ
ஓட்டும் இன்கீதமாம்.

3. உமது சத்தம் கேட்குங்கால்
மரித்தோர் ஜீவிப்பார்;
புலம்பல் நீங்கும் பூரிப்பால்,
நிர்ப்பாக்கியர் நம்புவார்.

4. ஊமையோர், செவிடோர்களும்
அந்தகர், ஊனரும்,
உம் மீட்பர்! போற்றும்! கேட்டிடும்!
நோக்கும்! குதித்திடும்!

5. என் ஆண்டவா, என் தெய்வமே,
பூலோகம் எங்கணும்
பிரஸ்தாபிக்க உம் நாமமே
பேர் அருள் ஈந்திடும்.

ENTHAN PUGALIDAME UMAKKU

எந்தன் மறைவிடமே உமக்கு ஸ்தோத்திரமையா
எந்தன் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரமையா
இயேசையா (2) உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரமையா

1.என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீரே
இக்கட்டுக்கெல்லாம் விலக்கினிரே
இரட்சணிய பாடல்கள் சூழ்ந்துகொள்ள செய்தீரே
உமக்கு கோடி ஸ்தோத்திரமே
ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் இயேசு ராஜா

2.என் மேல் உம் கண்களை வைத்தீரையா
ஆலோசனை தினம் தருகின்றீரே
நடக்கும் வழிதனை காட்டுகிறீர்
உமக்கு கோடி ஸ்தோத்திரமே
ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் இயேசு ராஜா

EN AATHMA NESA MEIPPARE

1. என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மை கிட்டி சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்

பேசும் (3) ஜெபம் செய்யும்போது
ஆண்டவர் பிரியமானதை இப்போ
காட்டும் செய்ய ஆயத்தம் - 2

2. மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர்;
தன் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்;
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும்

3. பாவிகட்கு உமது அன்பை
என் நடையால் காட்டச் செய்யும்
கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப்
போரில் வெல்ல அபிஷேகியும்

4. என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையில் செல்வேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும்

en aathmavum sariramum en

என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கின்றார்

1. இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்
ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்


2. அப்பா உம் திருசித்தம் - என்
அன்றாட உணவையா
நான் தப்பாமல் உம் பாதம்
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்


3. கர்த்தாவே உம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்
என்னை எந்நாளும் நடத்திடும்

EN YESU RAJAVUKKE ENNALUM STHOTHIRAM TAMIL LYRICS

என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்

1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
நித்தமும் நினைக்கிறேன்
முழு உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப் புகழுவேன் - நான்

2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர் தேற்றினீர்...ஆ...ஆ

3. இனி நான் வாழ்வது உமக்காக
உமது மகிமைக்காக
உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்
ஓயாமல் பாடுவேன் - நான்

4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
நோய்களை சுகமாக்கினீர்
எனது ஜீவனை அழிவில் நின்று
காத்து இரட்சித்தீரே...ஆ...ஆ

yen yesuve ummai naan nesikkiren

1. என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்
வேறெந்த வீண்வாழ்வையும் நாடாதிருப்பேன்
உம்மாலே மாநன்மையை நான் கண்டடைந்தேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்

2. இப்பாவியின் பேரில் முந்தி நேசம் வைத்தீர்
நீர் ப்ராணத் தியாகம் செய்து மீட்டுக்கொண்டீர்
முட்க்ரீடமும் ஐங்காயமும் த்யானிக்கிறேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்

3. பேரன்பின் சொரூபி! உம்மைப் போற்றுகிறேன்
எப்போதும் உம்மண்டை தங்க வாஞ்சிக்கிறேன்
என் ஜீவன் போனாலுங்கூட நீங்கமாட்டேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்

4. பேரின்ப மேலோகத்தில் ஆனந்தங்கொள்வேன்
நீடூழி உம்முகம் கண்டு ஸ்தோத்திரிப்பேன்
எப்பாவமில்லாமலும் நான் வாழ்த்தல் செய்வேன்
என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்