Friday, December 27, 2019

THUTHIKANAM MAKIMAI ELLAAM

துதிகனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவிற்கே

தூதர்களே துதியுங்கள்
தூத சேனையே துதியுங்கள்
சூரிய சந்திரரே துதியுங்கள்
பிரகாச நட்சத்திரமே துதியுங்கள்

வானாதி வானங்களே துதியுங்கள்
ஆகாய மண்டலமே துதியுங்கள்
தண்ணீர் ஆழங்களே துதியுங்கள்
பூமியிலுள்ளவையே துதியுங்கள்

அக்கினி கன்மலையே துதியுங்கள்
மூடு பனி பெருங்காற்றே துதியுங்கள்
மலைகள் மேடுகளே துதியுங்கள்
பறவை பிராணிகளே துதியுங்கள்

வாலிபர் கன்னியரே துதியுங்கள்
பெரியோர் முதியோரே துதியுங்கள்
பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள்
இயேசுவை என்றுமே துதித்திடுவோம்

DEIVEEGA KOODARAME EN DEVANIN

தெய்வீகக் கூடாரமே – என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே

மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே

1. கல்வாரி திருப்பீடமே
கறைபோக்கும் திரு இரத்தமே
உயிருள்ள ஜீவ பலியாக
ஒப்புக் கொடுத்தோம் ஐயா

2. ஈசோப்புலால் கழுவும்
இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனிபோல
வெண்மையாவோம் ஐயா
உம் திரு வார்த்தையால்

3. அப்பா உம் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா
எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட
ஏங்கித் தவிக்கின்றோம்

4. உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரியவிடும்

5. துபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்
எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்

6. ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா
மகா பரிசுத்த கூடாரத்திற்குள்
மகிமையில் நுழைந்துவிட்டோம்

THEDUVEN ATHIKALAI NERAME

தேடுவேன் அதிகாலை நேரமே
நாடுவேன் என்றும் உந்தன் பாதமே
நாளெல்லாம் உம்மையே தேடுவேன்
கன்மலை உம்மையே நாடுவேன்

அல்லேலூயா
ஆராதிப்பேன் ஆரதிப்பேன்

கிருபை உள்ளவரே
தயவு நிறைந்தவரே
காலை தோறும் கிருபை
புதிதாக தானே நீர் பொழிகின்றீரே
மாலை புலம்பல்கள் எல்லாம்
களிப்பாக மாற்றி நீர் நடத்துகின்றீர்
அல்லேலூயா

இரக்கம் உள்ளவரே
உருக்கம் நிறைந்தவரே
உலகின் எல்லைகள் எங்கும்
உமக்காக சாட்சியாய் சென்றிடுவேனே
சுவாசம் உள்ள வரைக்கும்
உம்மையே நான் பாடி ஆராதிப்பேன்
அல்லேலூயா

DEVANAE ENNAI THARUGIREN

தேவனே என்னைத் தருகிறேன்
உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்
யாவையும் நீர் தந்ததால்
உம்மிடம் திரும்ப தருகின்றேன்


எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்
உந்தனுக்கே தருகின்றேன்
எங்கள் ஆராதனை உமக்கே
எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே


ஊழியம் நீர் தந்தது
உயர்வுகள் நீர் தந்தது
மேன்மைகள் நீர் தந்தது
செல்வமும் நீர் தந்தது


தரிசனம் நீர் தந்தது
தாகமும் நீர் தந்தது
கிருபைகள் நீர் தந்தது
அபிஷேகம் நீர் தந்தது

VAANOER RAAJAN PIRANTHAAR PIRANTHAAR

வானோர் ராஜன் பிறந்தார் பிறந்தார் (2)

1. பூவினை மீட்கப் பரலோகப் பூமான் பூதலந்தனில் பிறந்தார்
பூட்டிய வீட்டுயர் வாசலைத் திறக்கப் பூலோகத்தில் பிறந்தார் (2)
வாசல்களே உயருங்கள் கதவுகளே திறவுங்கள் (2)
வானாதி ராஜன் வல்லமை தேவனை வாழ வழிவிடுங்கள் (2)

2. ஆக்கினைத் தீர்ப்பை அடையாதவாறு அடைக்கலந்தரப் பிறந்தார்
ஆருயிரீந்து அன்பினைக் காட்ட ஆண்டவரே பிறந்தார் (2)
ஆத்துமமே ஸ்தோத்தரி அல்லேலுயா ஆர்ப்பரி (2)
ஆண்டவரான அருளுள்ள வள்ளல் ஆள ஆசைப்படுங்கள் (2)