Monday, November 25, 2019

KUDHUKALAM NIRAINDHA NANNAL

குதூகலம் நிறைந்த நன்னாள்

பல்லவி 

குதூகலம் நிறைந்த நன்னாள்
நடுவானில் மின்னிடுமே
இதுவரை இருந்த துன்பமில்லை
இனி என்றுமே ஆனந்தம் 

1. தள கர்த்தனாம் இயேசு நின்று
யுத்தம் செய்திடுவார் நன்று
அவர் ஆவியினால் புது பெலனடைந்து
ஜெயகீதங்கள் பாடிடுவோம் --- குதூகலம்

2. புவி மீதினில் சரீர மீட்பு
என்று காண்போம் என ஏங்கும்
மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்
மணவாட்டியாய்ச் சேர்த்திடவே --- குதூகலம்

3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக
அவர் வருகையை எதிர் நோக்கி
நவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய்
நாம் ஆயத்தமாகிடுவோம் --- குதூகலம்

4. ஜீவ ஒளி வீசும் கற்களாக
சீயோன் நகர்தனிலே சேர்க்க
அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார்
அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் --- குதூகலம்

5. தேவ தூதர்கள் கானமுடன்
ஆரவார தொனி கேட்கும்
அவர் கிருபையினால் மறுரூபமாக
நம்மை இனிதுடன் சேர்த்திடுவார் --- குதூகலம்

GUNAPADU PAAVI DEVA

குணப்படு பாவி, தேவ
கோபம் வரும் மேவி – இப்போ 
அனுபல்லவி
கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
காலமிருக்கையில் சீலமதாக நீ 

சரணங்கள்

1. கர்த்தனை நீ மறந்தாய் – அவர்
கற்பனையைத் துறந்தாய்,
பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப்
பாவ வழி திரிந்தாய்,
புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,
உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்

2. துக்கமடையாயோ? பாவி 
துயரமாகாயோ?
மிக்கப் புலம்பாயோ? – மனம்
மெலிந்துருகாயோ?
இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ?
தக்க அருமறைப் பக்கந் தொடராயோ?

3. தாவீ தரசனைப்போல் – தன்னைத் 
தாழ்த்தும் மனாசேயைப்போல்
பாவி மனுஷியைப்போல் – மனம் 
பதைத்த பேதுருபோல்,
தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று
கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி 

4. உன்னை நீ நம்பாதே! – இவ் 
வுலகையும் நம்பாதே;
பொன்னை நீ நம்பாதே – எப்
பொருளையும் நம்பாதே;
தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
நின்னையும் ரட்சிப்பார் , அனைவரைப் பற்று

KRISHTHAVA ILLARAME SIRANDHIDA

கிறிஸ்தவ இல்லறமே

பல்லவி

கிறிஸ்தவ இல்லறமே - சிறந்திடக்
கிருபை செய்வீர், பரனே! 

அனுபல்லவி

பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்
பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல --- கிறிஸ்தவ 

சரணங்கள்

1. ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,
திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,
சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்,
சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் --- கிறிஸ்தவ

2. ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,
உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல,
நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி,
நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் --- கிறிஸ்தவ

3. அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்,
அருமையாக நிறைந்த அயலார்க் கொளிவிளக்காய்த்,
துன்பஞ் செய்கிற பலதொத்து வியாதிகளைத்,
தூரந்துரத்தும் வகை சொல்லிச் சேவையைச் செய்து --- கிறிஸ்தவ

4. மலையதின் மேலுள்ள மாளிகையைப் போலவே,
மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நின்று,
கலைஉடை உணவிலும், கல்வி முயற்சியிலும்,
கர்த்தருக் கேற்ற பரிசுத்தக் குடும்பமாகக் --- கிறிஸ்தவ

KAALAMELLAM UMMAI PAATIDUVEN

காலமெல்லாம் உம்மை பாடிடுவேன்
ஆத்தும நேசரே உம்மை தேடிடுவேன்
உள்ளம் எல்லாம்
உம்மையே தியானிப்பேன்
எண்ணமும் ஏக்கமும் நீர் தானே

ஆராதிப்பேன்-2
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன்

என் தஞ்சமும் என் கேடகமும்
என்றும் நீர் தானே
என் அடைக்கலம் என் கோட்டையும்
என் துருகமும் நீர் தானே

என் வழியும் என் சத்தியமும்
ஜீவனும் நீர் தானே
என் பெலனும் என் கன்மலையும்
என் துணையும் நீர் தானே

KANIKKAI THARUM NERAM

காணிக்கை தரும் நேரம்– நான் 
என் ம‌ன‌ம் த‌ருகின்றேன்-2

ஏற்ற‌ருளும் தெய்வ‌மே
எளிய‌வ‌ன் த‌ருகின்ற‌ காணிக்கையை-2

ப‌டைப்புக்க‌ள் ப‌ல‌வாகினும்
ப‌ர‌ம‌ன் உம‌க்கே சொந்த‌ம் -2-அதில்
ம‌ல‌ராகும் என் ம‌ன‌ம் உன்னிட‌த்திலே-2
ம‌ண‌ம் காண‌ ஏற்றிடுமே-2
பிற‌ர‌ன்பு ப‌ணிக‌ளெல்லாம்

த‌லைவ‌ன் உம‌த‌ன்றோ-2- என்றும்
உம‌த‌ன்புப் ப‌லியினில் என் வாழ்வினை-2
ப‌லியாக‌ ஏற்றிடுமே-2

KALVARI RETHAM SINTHENEER

கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்
என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே
சிலுவை பாடுகளை சகித்தீர்
என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே - (2)

ஓசன்னா (3) உன்னத தேவனுக்கே (2)
பணிந்து உம்மை ஆராதிப்பேன்
உம் பாதம் சரணடைவேன் - (2)

பாவியான என்னைக் கண்டு
பரலோகம் விட்டு வந்து பலியானீரே
என்னை மீட்கவே - (2)
உம் அன்பை நினைக்கையிலே
உள்ளம் எல்லாம் உருகுதைய்யா - (2)
இயேசுவே, இயேசுவே
உள்ளம் எல்லாம் உருகுதைய்யா - (2)

MARIDUM ELLAM MARIDUM

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்

அவர் ஆடையைத் தொட்டமாத்திரத்தில்
பெரும்பாடு நீங்கிற்றே ஆதியும்
அந்தமுமானவராலே அந்தகாரம் நீங்கிற்றே
கட்டுகள் உடைந்ததே கவலைகள் நீங்கிற்றே

இரையாதே என்று சொன்னீரே
திரைகடல் அடங்கிற்றே - அமைதலாயிரு
என்றாரே அலைகளும் ஓய்ந்ததே
பயங்கள் பறந்ததே நம்பிக்கை பிறந்ததே

லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரே
மரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானே
அழுகுரல் நின்றதே ஆனந்தம் வந்ததே

மாறுதே எல்லாம் மாறுதே என்
இயேசுவாலே எல்லாம் மாறுதே

மாறுதே துக்கம் மாறுதே
மாறுதே கஷ்டம் மாறுதே
மாறுதே கடன் மாறுதே
மாறுதே வறுமை மாறுதே
மாறுதே வியாதி மாறுதே
மாறிற்றே எல்லாம் மாறிற்றே- என்
இயேசுவாலே எல்லாம் மாறிற்றே

MAARIDAATHOER NAESA MEETPAR

மாறிடாதோர் நேச மீட்பர் 
மாற்றுவார் உன் வேதனை
பாவத்தாலும் ரோகத்தாலும் 
வருத்துவானேன் நம்பி வா
நம்பி வா நம்பி வா… 
இயேசு உன்னை அழைக்கிறார்
லோக மாந்தார் கைவிடுவார் 
துரோகம் கூறி தூற்றுவார்
தூயர் இயேசு மெய் நேசராய் 
துன்பம் தீர்ப்பார் நம்பி வா
வல்ல மீட்பர் கண்ணீர் யாவும் 
வற்றிப் போகச் செய்வாரே
வற்றா ஜீவ ஊற்றாய் 
உன்னை வருந்தி அன்பாய் அழைக்கிறார்

MUGAMALARNTHU KODUPAVARAI KARTHAR

முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்
உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம்

வருத்தத்தோடல்ல, கட்டாயத்தாலல்ல
இருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம்

விதை விதைத்திடுவோம்
அறுவடை செய்வோம்

அதிகமாய் விதைத்தால், அதிக அறுவடை
ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை
அளவின்றி கொடுத்து, செல்வர்களாவோம்
அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார்

ஏழைக்கு இரங்கி கொடுக்கும் போதெல்லாம்
கர்த்தருக்குக் கடன் கொடுத்துத் திரும்பப் பெற்றிடுவோம்
எந்த நிலையிலும் தேவையான தெல்லாம்
எப்போதும் நமக்குத் தந்திடுவாரே

நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்
மிகுதியாகவே தந்திடுவாரே
எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்
குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்

UMMAI APPAANU KOOPPIDATHTHAAN AASAI

உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை

அப்பானு கூப்பிடவா 

உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை

அம்மானும் கூப்பிடவா (2) 
உம்மை அப்பானு கூப்பிடவா

உம்மை அம்மானும் கூப்பிடவா 
கருவில் என்னை காத்ததை பார்த்தா

அம்மானு சொல்லனும் 

உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா

அப்பானு சொல்லனும் 

என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா

அம்மானு சொல்லனும் 

என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா

அப்பானு சொல்லனும் 
என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா

அம்மானு சொல்லனும்

என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா

அப்பானு சொல்லனும்

என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும் 
உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா

அப்பானு சொல்லனும்

MANAME NEE VARUTHAM KOLLATHE

மனமே நீ வருத்தம் கொள்ளாதே
வீணாக நீ கலக்கம் கொள்ளாதே
நம் இயேசுவின் அன்பு உண்டு அது
உனக்கு என்றும் உண்டு

நினைத்த காரியம் வாய்த்திடாமல்
வாடிப்போனாயோ
பாரங்கள் மலைபோல் குவிந்ததாலே
பயந்து போனாயோ
நம் இயேசுவின் கரங்களே அதனை
இனி செய்து முடித்திடுமே -2

நோய்களினாலே பெலனிழந்து மனம்
நொடிந்து போனாயோ
மரணந்தான் இனி முடிவென்று சொல்லி
மௌனம் ஆனாயோ
நம் இயேசுவின் தழும்புகளால்
சுகமடையே நோய்களில்லை 2

சோதனை மேலே சோதனை வந்து
சோர்ந்து போனாயோ
விடுதலை பெறவே வழி தெரியாமல்
துவண்டு போனாயோ
நம் இரட்சகர் இயேசுவினாலே
விடுதலை உனக்கென்றுமுண்டு -2

THOTHIRA PANDIGAI AASARIPOOMA

தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமா
தூயகம் ஊதிய பக்தியால் நாமே-தோத்திர

பாத்திரம் இதுவெனப் பகர் உடல் பொருளாவி
பரமனுக் கர்ப்பணஞ்செய் பரிவு நிறைய மேவித்

பணித்துளி நிலத்தினைப் படுத்தினதன்றே
பகருமுகில் கொழுமைப் படுத்திய தெண்ணிநன்றே

கடவுளே பயிருக்குக் கனமழை பெய்வித்தாரே
காங்கையால் கதிர்வளம் கதிக்கவும் உய்வித்தாரே

நெஞ்சத்தில் தெய்வஅன்பாம் நிதிநிகர் விதைபெய்து
நித்திய சமாதானம் நிறுவ விண் ணப்பம் செய்து

இறைவன் இரத்தக் கையால் இரட்சண்யம் அருள்வித்தை
இதயத்தில் விதைத்ததற் கிங்குணப் பலன்வைத்துத்

THOTHIRAM SEIVENE RATCHAGANAI

தோத்திரம் செய்வேனே

பல்லவி

தோத்திரம் செய்வேனே - ரட்சகனைத்
தோத்திரம் செய்வேனே 

அனுபல்லவி

பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
பார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் --- தோத்திரம் 

சரணங்கள்

1. அன்னை மரி சுதனை - புல்மீது
அமிழ்துக் கழுதவனை,
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை --- தோத்திரம்

2. கந்தை பொதிந்தவனை - வானோர்களும்
வந்தடி பணிபவனை,
மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,
வான பரன் என்னும் ஞான குணவானை --- தோத்திரம்

3. செம்பொன் னுருவானைத் - தேசிகர்கள் 
தேடும் குருவானை,
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு 
அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி --- தோத்திரம்