Thursday, December 5, 2019

EN YESU MIGAVUM PERIYAVAR

என் இயேசு மிகவும் பெரியவர்
என் இயேசு மகத்துவமானவர்
என் இயேசு சர்வவல்லவர்
என் இயேசு சர்வம் ஆள்பவர்

கைகளை உயர்த்தி
இருதயம் உயர்த்தி
உதடுகள் உயர்த்தி
உம் நாமம் போற்றுவேன்

கைகளை உயர்த்தி
இருதயம் உயர்த்தி
உதடுகள் உயர்த்தி
உம் நாமம் சொல்லுவேன்

மாறாத தேவன் என்னை மறவாத தெய்வம் நீரே
மேலான தேவன் என் மேன்மையாக இருப்பவரே
மாராவின் நீரை அன்று மதுரமாக மாற்றிய தெய்வம்
என் வாழ்வின் மாராவை மதுரமாக மாற்றியவர்

ஆ..அல்லேலுயா – (3)
ஓஒ…
ஆ..அல்லேலுயா – (3)
ஓசன்னா...

தேவாதி தேவன் என்னை தேற்றி ஆற்றும் தேற்றரவாளன்
தூயாதி தூயர் என தூதர் போற்றும் தூயவர்
வானாதி வானவர் இனி-வரப்போகும் மன்னவர் நீரே
ராஜாதி ராஜனே என் கர்த்தாதி கர்த்தரே
ஆ..அல்லேலுயா – (3)
ஓஒ…
ஆ..அல்லேலுயா – (3)
ஓசன்னா...

DEVADHI DEVAN MANUVELANAE

தேவாதி தேவன் மனுவேலனே
தாவீதின் குல இராஜனே
தூதர்கள் போற்றும் மெய் தேவனே
திரியேக பரிபாலனே – 2

பாரினில் வந்த பரமனே உம்மை
பாடியே போற்றிடுவோம் – 2

1. பாலன் பிறந்ததையே
இன்று பாரினில் சாற்றிடுவோம் – 2
பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்
பரமன் நம் இயேசுவையே – 2

2. மாட்டுத்தொழுவமொன்றில்
ஏழை மானிட ரூபம் கொண்டு – 2
மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்து
மாஜோதியாய் பிறந்தார் – 2

PARALOGIL VAASAM SEIYUM

ஆஹா ஹ ஹா….
ஹ்ம் ம் ம் ம்…… – 2

பரலோகில் வாசம் செய்யும் – 2
பரிசுத்த தெய்வம் நீரே
பணிகின்றோம் தொழுகின்றோம்
பாதம் அமர்கின்றோம் – 2

1. மானானது நீரோடையை
வாஞ்சித்து கதறுமா போல் – 2
என் உள்ளமும் என் ஆத்மாவும்
உம்மைத் தான் வாஞ்சிக்குதே – 2

2. கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் பரிசுத்தரே – 2
பாரெங்கிலும் உமையன்றியே
பரிசுத்தர் வேறில்லையே – 2

3. என் நேசரே என் அழகே
என் நினைவெல்லாம் நிறைந்தவரே – 2
தேடி வந்தேன் உம் சமூகமதை
உம்மை தரிசிக்கவே – 2

துதிகளில் வாசம் செய்யும் – 2
தூயாதி தூயர் நீரே
துதிக்கின்றோம் தொழுகின்றோம்
துதித்து மகிழ்கின்றோம் – 2

RAJA PORANTHAACHI VIDIVU KAALAM

ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு
ஜாய்புல் லைப் தான் வந்தாச்சிங்க – உலகில்

உண்மை அன்பின் உருவம் பொறந்தாச்சு
புதிய வாழ்வும் மலர்ந்தாச்சு

வார்த்தையின் வடிவாக வந்தாரு நம் இயேசு
வார்த்தையில் வல்லமையை தந்தாரைய்யா -நமக்கு
அன்பின் பிரமாணத்தை கொடுத்தாரைய்யா
இதை உணராத மாந்தர்களே உணர்ந்திடும் நாள் இதுவே
அன்பு பெருகிட சமாதானம் தலைத்திட
ராஜா உலகிற்கு வந்தாரைய்யா -நமக்கு

நித்திய வாழ்வதனை நமக்கு தந்திடவே
நித்தியர் நமக்காக வந்தாரைய்யா – சிலுவை
மரணத்தை பரிசாகா தந்தாரைய்யா
இதை அறியாத மாந்தர்களே அறிந்திடும் நாள் இதுவே
பாவிகள் நம்மையும் பரலோகம் சேர்த்திட
பாசமாய் உலகிற்க்கு வந்தாரைய்யா -நமக்கு

AARADHANAI VELAIYILE DEVAN

ஆராதனை வேளையிலே தேவன்
வல்லமையாய் இறங்குவார்
நம் ஆராதனை வேளையிலே தேவன்
மகிமையால் நிரப்புவார் – 2
இயேசு அற்புதங்கள் செய்வார்
அதிசயம் செய்வார்
அற்புதங்கள் செய்வார்
அதிசயம் செய்வார்
பெரிய காரியம் செய்திடுவார் – ஆராதனை

1. கண்ணீரை துடைப்பார்
நீ ஆராதிக்கும் போது
கட்டுகளை அவிழ்ப்பார்
நீ ஆராதிக்கும் போது – உன் – 2

ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஜீவன் தந்தவரை
நாம் ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆயுள் உள்ள வரை – ஆராதனை

2. விடுதலை கொடுப்பார்
நீ ஆராதிக்கும் போது
தடைகளை உடைப்பார்
நீ ஆராதிக்கும் போது – 2

3. பெலத்தையும் தருவார்
நீ ஆராதிக்கும் போது
சுகத்தையும் தருவார்
நீ ஆராதிக்கும் போது – 2

UN KANNEERAI THUDAIPPAR

ஆராதனை வேளையிலே தேவன்
வல்லமையாய் இறங்குவார்
நம் ஆராதனை வேளையிலே தேவன்
மகிமையால் நிரப்புவார் – 2
இயேசு அற்புதங்கள் செய்வார்
அதிசயம் செய்வார்
அற்புதங்கள் செய்வார்
அதிசயம் செய்வார்
பெரிய காரியம் செய்திடுவார் – ஆராதனை

1. கண்ணீரை துடைப்பார்
நீ ஆராதிக்கும் போது
கட்டுகளை அவிழ்ப்பார்
நீ ஆராதிக்கும் போது – உன் – 2

ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஜீவன் தந்தவரை
நாம் ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆயுள் உள்ள வரை – ஆராதனை

2. விடுதலை கொடுப்பார்
நீ ஆராதிக்கும் போது
தடைகளை உடைப்பார்
நீ ஆராதிக்கும் போது – 2

3. பெலத்தையும் தருவார்
நீ ஆராதிக்கும் போது
சுகத்தையும் தருவார்
நீ ஆராதிக்கும் போது – 2

MAARATHA YESU MAARATHA NESAR

மாறாத இயேசு மறவாத நேசர்
இம்மானுவேல் அவரே (2)
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
கனமகிமை உமக்கே (2)

1. என்னை தூக்கி எடுத்தீரே
என்னில் மாற்றம் தந்தீரே (2)
கறைகளை நீக்கி துதியுடை கொடுத்து
மகனாய் எற்றுக்கொண்டீர் பாவ) - (2) - ஸ்தோத்திரம்

2. பராக்கிரமசாலியே என்று சொல்லி அழைத்தீரே (2)
உண்மையுள்ளவன் என்று எண்ணி
உம் ஊழியம் கொடுத்தீரே (2) - ஸ்தோத்திரம்

3. சகல அதிகாரமும் சகல ஜனங்களையும்
கொடுத்து சகல நாட்களில் என்னோடிருப்பேன்
என்று சொன்னீரே (2) - ஸ்தோத்திரம்

ENTHAN CHINNA IDHAYAM

எந்தன் சின்ன இதயம் அதில்
எத்தனை காயங்கள்
இருள் சூழ்ந்த உலகில் தானே
எத்தனை பாரங்கள்

தொட்டதெல்லாம் தோல்வி ஆனால்
தொல்லைகளே தொடர்கதை ஆனால்
ஏங்கி நிற்கும் என் இதயமே
உன்னால் தாங்கிட தான் முடியுமோ

என் காயம் ஆற்ற காயப்பட்டீரே
என் துன்பம் நீக்க நொறுக்கப்பட்டீரே
கழுவும் என்னை உம் இரத்தத்தால்-எந்தன்
பாவ கறை நீங்க

அலையென துன்பம் என்னை சூழ்ந்த போதும்
வழுவாமல் காத்தார் என் நேசரே
குயவன் கையில் மண்பாண்டமாய்
இயேசென்னை வனைந்திடுவார்

எந்தன் சின்ன இதயம் அதில்
என்றும் இயேசுவே
இருள் சூழ்ந்த உலகில் தானே
என் துணை இயேசுவே

KAALATHTHIN ARUMAIYAI ARINTHU VAALAAVITIL

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே
ஞாலத்தில் பரனுனை நாட்டின நோக்கத்தைச்
சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்

1. மதியை யிழந்து தீய வழியிலே நீ நடந்தால்
வருங்கோபம் அறிந்திடாயோ?
கதியாம் இரட்சண்ய வாழ்வைக் கண்டு நீ மகிழ்ந்திட
காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ?

2. இகத்தினில் ஊழியம் அகத்தியம் நிறைவேற
இயேசுனை அழைத்தாரல்லோ
மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்
பகற்காலமுடியும் இராக்காலத்திலென்ன செய்வாய்?

3. முந்தி எரேமியா அனனியாவுக் குரைத்த
முடிவை நீ யறியாயோ!
எந்தக்காலமும் சிரஞ்சீவியென் றெண்ணிடாமல்
ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ

KALVARIYIN KARUNAI ITHAE KAYANGALIL

கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே

விலையேறப் பெற்ற திருரத்தமே -அவர்
விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே

பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே

சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே

எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன்

மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே

KALANGI NINDRA VELAIYIL

கலங்கி நின்ற வேளையில்
கைவிடாமல் காத்தீரே தகப்பனே
தகப்பனே தகப்பனே

நீர் போதும் என் வாழ்வில்

உடைந்த நொந்த உள்ளத்தோடு
அருகில் நீர் இருக்கின்றீர்
தாங்கிடும் பெலன் தந்து
தப்பிச் செல்ல வழி செய்யும்
தகப்பனே தகப்பனே

துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
திருவசனம் தேற்றுதைய்யா
தீமைகளை நன்மையாக்கி
தினம் தினம் நடத்திச் செல்லும்
தகப்பனே தகப்பனே

நித்திய அன்பினால் அன்புகூர்ந்து
உம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர்
காருண்யம் தயவால்
காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்
தகப்பனே தகப்பனே