Wednesday, December 18, 2019

AADHIPITHA KUMARAN AAVI THIRIYEGARKU

ஆதிப்பிதாக் குமாரன் – ஆவி திரியேகர்க்கு
அனவரதமும் தோத்திரம் – திரியேகர்க்கு
அனவரதமும் தோத்திரம்
அனு
நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன்,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,
நிறைந்த சத்திய ஞான மனோகர,
உறைந்த நித்திய வேத குணாசர
நீடு வாரி திரை சூழு மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள்செய் — ஆதி

சரணங்கள்

1. எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர்,
துங்கமாமறைப்பிர போதர் கடைசி நடு
சோதனை செய் அதி நீதர்
பங்கில்லான், தாபன் இல்லான், பகர் அடி முடிவில்லான்,
பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும்
பண்பதாய்க யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு, மீட்பு, பரி
பாலனத்தையும்பண் பாய் நடத்தி, அருள் — ஆதி

2. நீதியின் செங்கோல் கைக்கொண்டு – நடத்தினால் நாம்
நீணிலத்தில்லாமல் அழிந்து,
தீதறு நரகில் தள்ளுண்டு – மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் யேசுவைக்கொண்டு
பரன் எங்கள் மிசை தயை வைத்தனர் இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சங்சலம்
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும் — ஆதி

ANANTHA NAAL VARUME

ஆனந்த நாள் வருமே – எந்தன்
ஆண்டவன் ஏசுவைப்பாடி மகிழ நல்ல – ஆனந்த

அனுபல்லவி

கானச் சுருதியுடன் கனிந்த குரலிசையால்
பாடிப் பாடித் தினம் மகிழ நல்ல – ஆனந்த
தேவ சித்தம் நிறைவேறும் – திரு
மந்தை யாவும் ஒன்று சேரும் – ஆனந்த
மேவி நடுத்தீர்க்க மேன்மை அன்பு காட்ட
பூவின் மக்கள் ஒன்று கூடிக் கீதம் பாடும் – ஆனந்த

ANANDHA VAZHVU VENDUMENTRU

ஆனந்த வாழ்வு வேண்டுமென்று
அறிஞர் ஒருவர் நினைத்தாராம்
ஆண்டவர் யேசுவின் அருகில் சென்று
அறிவுரை சொல்லும் என்றாராம்

குழந்தையை அழைத்து முன்னிருத்தி
குழந்தை போல் வாழுங்கள் என்றாராம்
வந்தவர் திகைத்து சென்றாராம்
வாழும் வழிதனை மறந்தாராம்

அம்மா அப்பா பெரியோரே
ஆண்டவர் பிள்ளையாய் மாறுங்கள்
அன்பால் உள்ளம் மாறிவிட்டால்
ஆனந்தம் நம்மைத்தேடி வரும்

INDHA KALLIN MEL EN SABAIYAI

இந்த கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்
பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்வதில்லை
கூடார மீதில் இறங்கிய மேகம்
தேவாலயத்தை நிரப்பிய மகிமை
மேல் வீட்டில் வந்ததோர் பலத்த அக்கினி
கூடி வந்தோரை நிறைத்த ஆவி
தேவன் தமது சபையைக் கட்டுகிறார் - இந்த

ஆவியின் வல்லமை அனைவரில்
ஜீவன் பெற்ற கற்களாய் எழும்ப
கட்டுவார் சபையை மாளிகையாக
மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேலே - இந்த

அக்கினி ஆவியில் எழும்பும் வரங்கள்
சத்திய சபைக்குத் தருவார் தேவன்
அற்புதம் வெளிப்படும் அப்போஸ்தலரால்
கர்த்தர் இயேசுவின் கிருபையில் நிறைந்தே - இந்த

கிறிஸ்துவின் நிறைவில் வளர்ச்சி பெறவே
சபையில் சீர் பெறும் பரிசுத்தவான்கள்
பக்தி விருத்தி அடைவதே பாக்கியம்
பரம தேவனின் தாசர்களாரே - இந்த

தேவனின் தானங்கள் ஒன்று சேர்ந்திடவே
தேவாதி தேவனின் மகிமையைக் காண
உத்தம ஈவால் உயருமே ஊழியம்
சித்தமே செய்வார் சிறந்தவராக்கி - இந்த

கிறிஸ்துவுக்காக பாடுகள் சகித்தால்
கிறிஸ்துவினாலே ஆறுதல் அடைவோம்
உபத்திரவப் பாதையில் உத்தம இராஜ்யம்
உவந்தே செல்வோம் மகிமையில் சேர - இந்த

பலவித சோதனை பாங்குடன் வந்தும்
பரவசம் கொள்வோம் பாடி ஜெபிப்போம்
ஆவியின் பெலத்தால் சாத்தானை அழிப்போம்
ஜெயித்தே செல்வோம் ஜெயவீரராய் நாம் - இந்த

IMMATTUM KIRUBAI THANTHA DEVA

இம்மட்டும் கிருபை தந்த தேவா
இனி மேலும் கிருபை தாரும் மூவா
இன்றும் என்றும் உம்மில் நான் நிற்கவே
இயேசு நீர் என்னில் உருவாகவே – உம்மை காணவே

சரணங்கள்

1. சோதிக்கப்பட்ட தூய தேவா
சோதனையில் பெலன் தாரும் மூவா
துன்பங்கள் தொல்லைகள் சூழ்கையிலே
இன்ப ஒளி என்னில் வீசியே
இருள் நீக்குமே – இம்

2. பக்தியில்லை நான் ஆராதிக்க
யுக்தியில்லை உம்மை துதிக்க
சத்திய ஆவியின் வல்லமையால்
சக்தியைத் தாரும் உத்தமராய்
உம்மை துதிக்க – இம்

3. நன்றியால் உள்ளம் பூரிக்குதே
என்றும் நின் கிருபை பொழிவதினால்
அன்றுன் உதிரம் சிந்தினதால்
இன்றும் உம் அன்பு பெருவெள்ளமாய்
புரண்டோடுதே – இம்

4. சத்துருவான சாத்தான் என்னை
நித்தம் நெருங்கி ஏய்க்கையிலே
சாத்தானை ஜெயம் பெற்றிடவே
சத்திய ஆவி வல்லமையை
என்னில் ஊற்றும் – இம்

5. ஜெபத்தின் ஆவி என் அகத்தில் ஊற்றும்
ஜெபத்தினால் உலகை நான் ஜெயிக்க
உன்னதா உலகை நீர் ஜெயித்தீர்
உம் நாமத்தினாலே நான் ஜெயிப்பேன்
அல்லேலூயா – இம்

YESU SONNATHAI KEL

இயேசு சொன்னதைக் கேள்
இயேசு வாழ்ந்ததைப் பார்
இன்பமாகவே என்றும் வாழவே
உண்டு மார்க்கமே வா! – இயேசு

சரணங்கள்

1. அன்பினால் பகையும் வெல்லலாம்
நன்று செய் நலம் காணலாம்
பண்போடுப் பழகுப் பணிவொடுப் பேசு
பொன்மொழி இது போல் ஆயிரம் – இயேசு

2. அன்பினால் வாழ்ந்துக் காட்டினார்
தொண்டுகள் யாவும் ஆற்றினார்
இன்னுயிரும் தந்தார் உயிர்த்தே எழுந்தார்
உலகினைக் காக்கும் தேவனாம் – இயேசு

YESUVE JEEVA MALARE

இயேசுவே ஜீவ மலரே
கல்வாரியில் கசங்கிய மலரே
அனுபல்லவி
பள்ளத்தாக்கின் லீலியாய்
சாரோனின் ரோஜாவாய்
இருந்தும் எனக்காய்
இருந்தும் எனக்காய்
கனிதரும் வாழ்வின் ஆதாரம்
கல்வாரி மலையின் மாதியாகம்
பொறுக்க இயலா உம் தியாகம்
குறுக்கையில் ((சிலுவையில்)) சிதையும் உம் யாவும்

RATHA SATCHI KOOTAM SATHYA

இரத்த சாட்சி கூட்டம் சத்திய பாதையில்
நித்தம் தம்மைத் தத்தம் செய்து வீர சேவையில்
ஜீவன் சுகம் பெலன் யாவையும் - ஈந்ததால்
சுத்த சுவிஷேசம் ஓங்குதே
போர் வீரரே! பூமி மாளுதே
பாய்ந்து செல்லுவீர் நம் இயேசுவின் பின்னே
தேவ ராஜ்யம் ஓங்கவே பாவ மக்கள் மீளவே
தியாகப் பரிசுத்தராய் சேவை செய்குவோம்
ஜாதி மதபேதம் முற்றும் நீங்கிட
ஜோதியாய்ப் பிறந்து லோகப் பாவம் போக்கிட
கல்வாhயில் மரித்தே உயிர்த்தெழுந்த
கர்த்தரின் நற்செய்தி சாற்றுவோம் -போர் வீரரே

நாடு, நகரமோ, காடு மலையோ
நாடி தேடி ஓடியே நல் ஊழியம் செய்வோம்
மாண்டழியும் மக்கள் மேல் மனதுருகி
கண்டறிந்த சாட்சி கூறுவோம் -போர் வீரரே

தாகமோ, பசியோ நோக்கிடாமலே
லோக இன்ப துன்பமோ நெருங்கிடாமலே
முன் வைத்த காலையும் பின் வைத்திடாமலே
இன்னமும் முன்னேறி சேவிப்போம் -போர் வீரரே

உன்னத அழைப்பை என்றும் காத்திட
ஊக்கமாய் உறுதியாய் தகுதி பெற்றிட
ஆவியிலே அனலாய் நிலை நின்றிட
ஆண்டவர் அருள் பொழீகுவார் -போர் வீரரே

சுத்த ஜீவியம் நற்சாட்சி பெறுவோம்
சத்திய வழி நடக்கும் பக்தி நாடுவோம்
வாக்கு வரம் வல்லமை அடைந்திடுவோம்
வல்ல விசுவாச சேவையில் -போர் வீரரே

இயேசுவின் பின்னே ஓடிடுவோமே
இயேசுவுக்காய் ஜீவன் வைத்திடுவோமே - நாம்
ஆதிப்பிதாக்களுடன் ரத்த சாட்சிகள்
ஆர்ப்பரித்து கூடி வாழுவோம் -போர் வீரரே

ISRAVELIN SENAIGALIN MUN NADANDHA DEIVAME


இஸ்ரவேலின் சேனைகளின் முன் நடந்த தெய்வமே
எங்கள் சேனாதிபதியாக - எங்கள் முன்னே செல்லுமே - இஸ்

உம்மை நம்பி உம்மை சார்ந்து - உம்மை மகிமைப்படுத்தவே
அடியார் தொடுக்கும் வேலையை நீர் ஆசீர்வதிக்க வேணுமே - இஸ்

ஸ்நானகன் யோவானோடேசு ஸ்நானம் வாங்கும் வேளையில்
வந்தமர்ந்த வான் புறாவே! வாரும் இந்த நேரத்தில் - இஸ்

அன்று நூற்றிருபது பேர் சென்றதோர் மேல் வீட்டினில்
வந்தமர்ந்த அக்கினியே! வாரும் இந்த நேரத்தில் - இஸ்

சமுத்திரத்தை இரண்டாக பிளந்த எங்கள் தெய்வமே
உலர்ந்த தரையை எங்களுக்காய் ஒழுங்கு செய்ய வேணுமே - இஸ்

ஆறு லட்சம் இஸ்ரவேலர் - அப்பம் தண்ணீர் குறைவில்லாமல்
நாற்பதாண்டு வனாந்திரம் நடத்தின எம் தெய்வமே - இஸ்

யோசுவாவின் போர்க்களத்தில் - வீரனாய் முன்னின்றவர்
சந்திர சூர்ய மண்டலங்கள் தரித்து நிற்கச் செய்தவர் - இஸ்

ஏழை எலியாவின் மேலே - வல்லமையாய் நின்றவர்
பாரில் பாகால் கோபுரங்கள் அழித்துப் போடும் தெய்வமே - இஸ்

ஆதிக்கிறிஸ்து சீஷர் முதல் - இன்று வரை பக்தரை
ஆசிர் வதித்து வல்லமையால் ஆளும் எங்கள் தெய்வமே - இஸ்

புதிய வானம் புதிய பூமி ஆக்கி ஆள வருவாரே
புதிய எருசலே மீதில் ஏழைகளைச் சேருமே - இஸ்

UYIRTHEZHUNTHAR ULAGAMELLAM

உயித்தெழுந்தார் உலகமெல்லாம் புகழ்பாடவே
உயித்தெழுந்தார் உள்ளம் எல்லாம் மகிழ்ந்திடவே ஆ ஆ

பாராளும் வேந்தன் புதிய வாழ்வையே
ஈவாக ஈந்தார் இறைவன் இயேசுவே
மாறாக நெஞ்சின் இருள்தனைப்போக்க
ஒளியாக உயித்தாரே வழிகாட்டினார் – ஆ ஆ

மண்மீது வாழும் உயிர்கள் எல்லாம்
படைத்தாண்ட தேவன் உயிர்த்தெழுந்தார்
எந்நாளும் நாமும் அவரோடு வாழ
உள்ளத்தில் உயிராக இருந்தாளுவார் – ஆ ஆ

NIGILONA MERISE NAKSHATHRAM - TELUGU

నింగిలోన మెరిసే - నక్షత్రం
లోకమంతటికి - వెలుగును చూప - (2)
యేసయ్య - పుట్టాడని
ఆయనే - రక్షకుడని - (2)

పూజించి - కొనియాడి పూజించి - కొనియాడి
ఆరాధన చేద్దాం

లోకానికి - వెలుగాయెనే పరలోకానికి - దారాయెనే -(2)
- "నింగిలోన"

1. నశియించి పోతున్న లోకాన్ని చూసి
చీకటిలో ఉన్న నరులను చేర వాక్యమైయున్న దేవుడు
దీనుడై భువికొచ్చినాడు

పూజించి - కొనియాడి
పూజించి - కొనియాడి
ఆరాధన చేద్దాం

లోకానికి - వెలుగాయెనే
పరలోకానికి - దారాయెనే - (2)

సర్వోత్తన్నతమైన స్థలములలో దేవునికి మహిమ
ఆయన కిష్టులైన ప్రజలందరికీ సమాధానమూ....

2. పాపంలో ఉన్న ప్రతివాని కొరకు ప్రాణాన్ని అర్పింప పాకలో పవళించే - (2)
కరములు చాచియున్నాడు దరి చేరితే నిన్ను చేర్చుకుంటాడు-2

పూజించి - కొనియాడి
పూజించి - కొనియాడి
ఆరాధన చేద్దాం-(2)

లోకానికి - వెలుగాయెనే
పరలోకానికి - దారాయెనే - (2)
- "నింగిలోన"