Thursday, October 31, 2019

UM ANBAL ENNAI NIRAPPUM

உம் அன்பால் என்னை நிரப்பும்
என் இயேசுவே (2)
உம் பாசம் மட்டும் எனைத் தேற்றுமே
உம் அன்பால் என்னை நிரப்பும்

1. நிழலாகத் தொடரும் பல துன்பங்கள் இங்கு
நீரன்றி யாரென்னை காக்கும் இவ்வேளை
உம்மண்டை சேர நான் வேண்டினேன்
உம்முகம் காண நான் ஏங்கினேன் — உம் அன்பால்

2. ஆசைகள் என்னில் ஓராயிரம் உண்டு
நேசமாய் உம் சித்தம் நிறைவேற்றும் இன்று
என் வாழ்வில் எந்நாளும் நீர் தங்க வேண்டும்
உம் வார்த்தையால் என்னில் நீர் பேச வேண்டும் — உம் அன்பால்

UDAINTHU PONA ENNAI

உடைந்து போன என்னை

உருவாக்கிட கூடும்

தள்ளப்பட்ட என்னை

தலைவனா ஆக்கிட கூடும்
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல

சிறியவனை ஆயிரமாய்

மாற்றிட கூடும்

எளியவனை சேற்றிலிருந்து

தூக்கிட கூடும்
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல
கண்கள் காண அற்புதங்கள்

செய்திட கூடும்

என் வேண்டுதல்கள் எல்லாம்

நிறைவேற்றிட கூடும்

ISRAVELAE KARTHARAI NAMBU

இஸ்ரவேலே
கர்த்தரை நம்பு - 2
இஸ்ரவேலே
அவர் உன் துணையும் கேடகமானவர் - 2

புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
குப்பையிலிருந்து உயர்த்திடுவார் - 2
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உட்கார செய்பவர் உனக்கு உண்டு - 2

அவர் உன்னை விட்டு விலகுவதில்லை
அவர் உன்னை என்றும் கைவிடுவதில்லை - 2
உள்ளங்கையில் வரைந்தவர் அவர்
உன்னை என்றும் மறப்பதுமில்லை - 2

அக்கினி மீது நீ நடக்கும் போதும்
ஆறுகளை நீ கடக்கும் போதும் - 2
அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே -2

UNTHAN SAMUGAM ENAKKANANTHAME

உந்தன் சமூகம் எனக்கானந்தமே
உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன்

நீரே போதும்
நீரே போதும் என் வாழ்விலே
உம்மையன்றி யாருமில்லை

கண்ணீரின் வாழ்க்கையே
என் வாழ்க்கை ஆனது
எந்தன் கண்ணீரை துடைப்பது
நீரன்றி யாருண்டு

என் தனிமை நேரங்களில்
துணையாய் வந்தீரே
எந்தன் வேதனை நேரத்தில்
உம் வார்த்தையால் தேற்றினீர்

என் வாழ்க்கையில் யாருமில்லா
அனாதை ஆனேனே
நான் உண்டு உன் துணையே
என்றீரே என் இயேசுவே

UM SITHAM POL ENNAI

உம் சித்தம் போல் என்னை என்றும்
தற்பரனே நீர் நடத்தும்
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே

1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
மறு பிரயாண காலம் வரை
பரனே உந்தன் திருசித்தத்தை
அறிவதல்லோ தூயவழி – உம் 

2. வழிப் பிரயாணி மூடனைப்போல்
வழி தவரு நடந்திடவே
வழி இதுவே என்று சொல்லும்
இனிய சத்தம் தொனித்திடட்டும் – உம் 

3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்
அடியார் மீது ஜொலித்திடட்டும்
இரவு பகல்கூட நின்று
என்றென்றுமாய் நடத்திடுமே – உம் 

4. இடுக்கமே என் அப்பமுமாய்
கண்ணீரோ என் தண்ணீருமாய்
பருகிடினும் பயப்படேன் நான்
என்றென்றும் உம் சித்தம் போதும் – உம்

THIRIMUDHAL KIRUBASANANE SARANAM

திரிமுதல் கிருபாசனனே சரணம்!
ஜெக தல ரட்சக தேவா சரணம்!
தினம் அனுதினம் சரணம் கடாட்சி!
தினம் அனுதினம் சரணம் சருவேசா!

நலம் வளர் ஏக திரித்துவா சரணம்!
நமஸ்கரி உம்பர்கள் நாதா சரணம்!
நம்பினேன் இது தருணம் தருணம்
நம்பினேன் தினம் சரணம் சருவேசா!

அருவுருவே அருளரசே சரணம்!
அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்
அதிகுணனே தருணம் கிரணமொளிர்
அருள் வடிவே சரணம் சருவேசா!

உலகிட மேவிய உனதா சரணம்!
ஓர் கிருபாசன ஒளியே சரணம்!
ஒளி அருள்வாய் தருணம் மனுவோர்க்கு
உத்தமனே சரணம் சருவேசா.

நித்திய தோத்திர நிமலா சரணம்!
நிதி இசரேலரின் அதிபதி சரணம்!
நீதா இது தருணம் கிருபைக்கொரு
ஆதாரா சரணம் சருவேசா!

THUDHITHU PADIDA PATHIRAMAE

துதித்துப்பாடிட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதே
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே

ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்த்தமே
நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே
நாம் அல்லேலூயா துதி சாற்றிடிவோம்

கடந்த நாட்களில் கண்மணிபோல்
கருத்துடன் நம்மை காத்தாரே
கர்த்தரையே நம்பி ஜீவித்திட
கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே -(ஆ!

இந்த வனாந்திர யாத்திரையில்
இன்பராம் இயேசு நம்மோடிப்பார்
போகையிலும் நம் வருகையிலும்
புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே -(ஆ!

DEVANE EN JEEVANE UMMAIYANDRI

தேவனே என் ஜீவனே உம்மையன்றி
இவ்வுலகில் யார் எனக்குண்டு
நீரே என் வழி நீரே என் சத்யம் - உம்மை
விட்டால் இவ்வுலகில் யார் எனக்குண்டு

என் கோட்டையே என் துருகமே
உம்மையன்றி இவ்வுலகில்
யார் எனக்குண்டு
எந்தன் அரணே எந்தன் கரமே
உம்மை விட்டால் இவ்வுலகில்
யார் எனக்குண்டு

என் நேசரே என் மீட்பரே உம்மையன்றி
இவ்வுலகில் யார் எனக்குண்டு
எந்தன் பெலனே எந்தன் சுகமே
உம்மை விட்டால் இவ்வுலகில்
யார் எனக்குண்டு

KARAM PIDITHENNAI VAZHI NADATHUM

கரம் பிடித்தென்னை வழி நடத்தும்

1. கரம் பிடித்தென்னை வழி நடத்தும்

இயேசுவே என்னை நான் ஒப்புவிக்கிறேன் (2)

பாதை தெரியாத பாவி நானைய்யா

என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2)


இயேசுவே இரங்குமே

வழி நடத்துமே (2)


2. பாவ இருள் நீக்கி வழி நடத்தும்

பாவக்கறை போக்கி சுத்திகரியும் (2)

செம்பாவம் அகற்றி வெண்மையாக்குமே

என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) --- இயேசுவே


3. நேசரே என்னை நீர் வழி நடத்தும்

காருண்யத்தைக் காட்டி அழைத்துச் செல்லும் (2)

உறைந்த மழையைப் போல் வெண்மையாக்குமே

என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) --- இயேசுவே


4. தீபம் காட்டி என்னை வழி நடத்தும்

ஆவியை கொடுத்துத் தேற்றியருளும் (2)

வெளிச்சத்தின் பாதையில் அழைத்துச் சென்று

என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) --- இயேசுவே

ENNODIRUM MAANESA KARTHTHARE

1.என்னோடிரும் மாநேச கர்த்தரே
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே
மற்றோர் சகாயம் அற்ற போதிலும்
நீங்கா ஒத்தாசை நீர் என்னோடிரும்

2. நீர் மேல் குமிழி போல் என் ஆயுசும்
இம்மையின் இன்பவாழ்வு நீங்கிடும்
கண் கண்ட யாவும் மாறிவாடிடும்
மாறாத கர்த்தர் நீர் என்னோடிரும்

3. நியாயம் தீர்ப்போராக
என்னண்டைவராமல் சாந்தம்
தயை கிருபை
நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்
நீர் பாவி நேசரே
என்னோடிரும்

4. நீர் கூடநின்று அருள்புரியும்
பிசாசின் கண்ணிக்கு நான்
தப்பவும் என் துணை நீர் என்
தஞ்சமாயிரும் இக்கட்டில்
எல்லாம் நீர்
என்னோடிரும்

5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர்
விடேன் நீரே
என்னோடிருந்தால் அஞ்சிடேன்
சாவே எங்கே உன் கூரும்
ஜெயமும்? நான் உம்மால்
வெல்ல நீர்
என்னோடிரும்

6. நான் சாகும் அந்தகார நேரத்தில்
உம் சிலுவையைக் காட்டும்
சாகையில் விண் ஜோதி வீசி,
மருள்நீக்கிடும் வாழ்நாள்
சாங்காலிலும் என்னோடிரும்!

UMMAI PATTRI PAADA PAADA

உம்மை பற்றி பாட பாட
உள்ளுக்குள்ள சந்தோஷம் தான்
இயேசுவே,இயேசுவே,இயேசுவே
உம்மை பற்றி துதிக்க துதிக்க

உள்ளுக்குள்ள சந்தோஷம் தான்
இயேசுவே,இயேசுவே,இயேசுவே
என் கண்ணு இரண்டும் கலங்குதயா இயேசுவே
நீர் நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போது

என் நெஞ்சமெல்லாம் நெகிழுதையா இயேசுவே
நீர் நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போது
தாகம் இல்லாம தவிப்பும் இல்லாம
என்ன நடத்தியத நான் தான் மறப்பேனோ

உண்ண உணவும் உடையும்
தினமும் எனக்கு தந்ததினாலே
நான் உம்மை பாடுவேன்
நான் உம்மை வாழ்த்துவேன்

தாயும் நீயாக தந்தையும் நீயாக
என்னை நடத்தியத நான் தான் மறப்பேனோ
சேற்றில் இருந்து தூக்கி
நீரே ஆற்றி தேற்றி அரவணைத்தீரே

KARTHER EN MEIPPERAI IRUKINDRARE

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
தாழ்ச்சி அடையேன் என்றுமே
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார்

ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை
ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
மகிமையின் நாமத்தினிமித்தம் அவர்
தம் நீதியின் பாதையில் நடத்துகிறார்

மரணப் பள்ளத்தாக்கில் நடந்திடினும்
மாபெரும் தீங்குக்கும் அஞ்சேன்
கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே
அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே

சத்துருக்கள் முன்பின் எனக்காகவே
அவர் பந்தியன்றாயத்தஞ் செய்தார்
என்னைத் தம் எண்ணெயால் அபிஷேகித்து
என் பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்

ஜீவன் என்னில் உள்ள காலம் வரையும்
நன்மை கிருபை தொடரும்
கர்த்தரின் வீட்டில் நான் களிப்புடன் துதித்து
நித்திய நாட்களாய் நிலைத்திருப்பேன்

KANMANI NEE KANVALARAI

கண்மணி நீ கண்வளராய்
கண்மணி நீ கண்வளராய்
விண்மணி நீ உறங்கிடுவாய்
கண்மணி நீ கண்வளராய் 

1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
நீங்கும் துன்பம் நித்திரை வர
ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட
தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்
கந்தை துணி பொதிந்தாயோ

2. சின்ன இயேசு செல்லப்பாலனே
உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே
என்னைப் பாரும் இன்ப மைந்தனே
உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற
ஏழை மகவாய் வந்தனையோ

3. வீடும் இன்றி முன்னனைதானோ
காடும் குன்றும் சேர்ந்ததேனோ
பாடும் கீதம் கேளாயோ நீயும்
தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய
ஏழ்மைக் கோலம் கொண்டனையோ 

KASANTHA MAARAA MATHURAMAAGUM

கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2)
கண்ணீரோடு நீ விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2)

இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை (2)
இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை

2. தண்ணீரை நீ கடக்கும்போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார் (2)
வெள்ளம் போல சத்துரு வந்தால்
ஆவியில் கொடியேற்றிடுவார் (2)

3. வாதை உந்தன் கூடாரத்தை
அணுகிடாமல் காத்திடுவார் (2)
பாதையிலே காக்கும்படிக்கு
தூதர்களை அனுப்பிடுவார் (2) 

4. சோர்ந்து போன உனக்கு அவர்
சத்துவத்தை அளித்திடுவார் (2)
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார் (2)