Monday, August 24, 2015

NEEYUNAKKU SONTHAMALLAVE MEETKAPPATA PAAVI

நீயுனக்குச் சொந்தமல்லவே; மீட்கப்பட்ட பாவி,
நீயுனக்குச் சொந்தமல்லவே.

அனுபல்லவி

நீயுனக்குச் சொந்தமல்லவே,
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம். --- நீ

சரணங்கள்

1. சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே; திருரத்தம், ரத்தம்
திரு விலாவில் வடியுது பாரே;
வலிய பரிசத்தால் கொண்டாரே;
வான மகிமை யுனக்கீவாரே. --- நீ

2. இந்த நன்றியை மறந்து போனாயோ? யேசுவைவிட்டு
எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ?
சந்த தமுனதிதயங் காயமும்,
சாமி கிறிஸ்தினுடைய தல்லவோ? --- நீ

3. பழைய பாவத்தாசை வருகுதோ? பசாசின்மேலே
பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ?
அழியும் நிமிஷத் தாசை காட்டியே,
அக்கினிக்கடல் தள்ளுவானேன்? --- நீ

4. பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே; உலகைவிட்டுப்
பிரியினும் அவர்க்கே மரிப்பாயே,
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்,
உயர்பதவியில் என்றும் நிலைப்பாய். --- நீ

NEER THANTHA NAALUM OOINTHATHE

1. நீர் தந்த நாளும் ஓய்ந்ததே
கர்த்தாவே ராவும் வந்ததே;
பகலில் உம்மைப் போற்றினோம்
துதித்து இளைப்பாறுவோம்.

2. பகலோன் ஜோதி தோன்றவே
உம் சபை ஒய்வில்லாமலே
பூவெங்கும் பகல் ராவிலும்
தூங்காமல் உம்மைப் போற்றிடும்.

3. நாற்றிசையும் பூகோளத்தில்
ஓர் நாளின் அதிகாலையில்
துடங்கும் ஜெபம் ஸ்தோத்ரமே
ஓர் நேரம் ஓய்வில்லாததே.

4. கீழ்கோளத்தோர் இளைப்பாற,
மேல்கோளத்தோர் எழும்பிட,
உம் துதி சதா நேரமும்
பல் கோடி நாவால் எழும்பும்.

5. ஆம், என்றும் ஆண்டவரே நீர்,
மாறாமல் ஆட்சி செய்குவீர்;
உம் ராஜ்யம் என்றும் ஓங்கிடும்,
சமஸ்த சிருஷ்டி சேர்ந்திடும்.

NEER VALLAVAR MAA VALLAVAR

1. என் ஆண்டவா ! உம் கர வல்ல கிரியை
உலகெங்கும் நான் கண்டு வியந்தேன்;
விண்மீன்களும் பேரிடி முழக்கமும்
உம் வல்லமை எடுத்துரைக்குதே.

என் ஆத்துமா மகிழ்ந்து பாடுதே!
நீர் வல்லவர் ! மா வல்லவர் !
போற்றிடுவேன் என் அன்பின் ரட்சகா !
நீர் வல்லவர் ! மா வல்லவர் !

2. காடுகளின் பசும் மரங்கள் மீது
கானம் பாடும் பறவைக் கூட்டங்கள்;
உயர் மலை உன்னத காட்சி கண்டேன்,
தென்றல் காற்றும் தெளிநீரோடையும் --- என்

3. தேவ பிதா தம் ஏக மைந்தனையும்
மரிக்கவே அனுப்பி வைத்தாரே;
சிலுவையில் என் பாவ பாரமேற்று
ரத்தம் சிந்தி பாவ பலியானார் --- என்

4. மகிமையாய் தூதர் ஆர்ப்பரிப்போடு
என்னைச் சேர்க்க இயேசு வருவாரே
உள்ளம் பொங்கி மகிழ்ச்சியோடு நானும்
வல்லவரை வணங்கித் தொழுவேன் --- என்

NENJATHILE THUIMAIYUNDO

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
இயேசு வருகிறார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்
1. வருந்தி சுமக்கும் பாவம்
உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் ( 2 ) --- நெஞ்சத்திலே

2. குருதி சிந்தும் நெஞ்சம்
உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் ( 2 ) --- நெஞ்சத்திலே

NENJAME THALLADI NONTHU LYRICS

நெஞ்சமே, தள்ளாடி நொந்து,
நீ கலங்காதே; - கிறிஸ்
தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே.

சரணங்கள்
1. தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக - உன்னை
தாககியே பகைஞராக நின்ற போதிலும், --- நெஞ்சமே

2. அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் - உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும் --- நெஞ்சமே

3. ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும், - மா
சிறுமையாய்ச் சகிக்கொணா வறுமை கொண்டாலும். --- நெஞ்சமே

4. பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும், - மிகு
பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும். --- நெஞ்சமே

5. கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும், --- எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும். --- நெஞ்சமெ

6. ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும், - கிறிஸ்
தண்ணலே, உனக் கெல்லாம் என்றெண்ணி நிறைவாய் --- நெஞ்சமே

NENJAME GETSEMANEKKU NEE NADANTHU VANTHIDAYO

1. நெஞ்சமே, கெத்சேமனேக்கு நீ நடந்து வந்திடாயோ?
சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார்.

2. ஆத்துமத்தில் வாதை மிஞ்சி, அங்கலாய்த்து வாடுகின்றார்,
தேற்றுவார் இங்காருமின்றித், தியங்குகின்றார் ஆண்டவனார்.

3. தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகி
ஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே.

4. அப்பா பிதாவே, இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்,
எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே.

5. இரத்த வேர்வையால் தேகம் மெத்த நனைந்திருக்குதே.
குற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை ஏனோ?

6. வானத்திலிருந்தோர் துதன் வந்தவரைப் பலப்படுத்தத்
தான் சஞ்சலத்தோடு முழந்தாள் நின்று வேண்டுகின்றார்.

7. தாங்கொணா நித்திரைகொண்டு தன்சீஷர்கள் உறங்கிவிழ
ஆங்கவர் தனித்திருந்து அங்கலாய்த்து வாடுகின்றார்.

NENJAME NEE KALANGATHE SEYON MALAIYIN

நெஞ்சே நீ கலங்காதே; - சீயோன் மலையின்
இரட்சகனை மறவாதே; - நான் என் செய்வேனென்று.

அனுபல்லவி

வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் --- நெஞ்சே

சரணங்கள்

1. பட்டயம், பஞ்சம் வந்தாலும், - அதிகமான
பாடு நோவு மிகுந்தாலும்,
மட்டிலா வறுமைப் பட்டாலும்,
மனுஷர் எல்லாம் கைவிட்டாலும் --- நெஞ்சே

2. சின்னத்தனம் எண்ணினாலும் - நீ நன்மை செய்யத்
தீமை பிறர் பண்ணினாலும்
பின்னபேதகம் சொன்னாலும்,
வந்தணாப்பினாலும் --- நெஞ்சே

3. கள்ளன் என்று பிடித்தாலும், - விலங்கு போட்டுக்
காவலில் வைத் தடித்தாலும்,
வெள்ளம் புரண்டு தலை மீதில்
அலைமொதினாலும் --- நெஞ்சே

BAKTHARUDAN PAADUVEM PARAMASABAI

பக்தருடன் பாடுவேன் - பரமசபை
முக்தர்குழாம் கூடுவேன்

அனுபல்லவி

அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்
இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் --- பக்த

சரணங்கள்

1. அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
அன்பர் என் இன்பர்களும்,
பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்
என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் --- பக்த

2. இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க் - கு
அகமும் ஆண்டவன் அடியே,
சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,
இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே --- பக்த

3. தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்
சேயன் கண் மூடுகையில்,
பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி,
தூயா, திருப்பாதத் தரிசனம் தந்தருள் --- பக்த

BAKTHARE VAARUM AASAI AAVALODUM

1. பக்தரே வாரும்
ஆசை ஆவலோடும்
நீர் பாரும், நீர் பாரும்
இப்பாலனை;
வானோரின் ராஜன்
கிறிஸ்து பிறந்தாரே!

சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை.

2. தேவாதி தேவா,
ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்.
தெய்வ குமாரன்,
ஒப்பில்லாத மைந்தன்;

3. மேலோகத்தாரே,
மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப்
போற்றுமேன்;
விண்ணில் கர்த்தா நீர்
மா மகிமை ஏற்பீர்!

4. இயேசுவே, வாழ்க!
இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;
தந்தையின் வார்த்தை
மாம்சம் ஆனார் பாரும்.

PARANE THIRUKKADAIKKAN PARAYO LYRICS

பரனே திருக்கடைக்கண் பாராயோ? – என்றன்
பாவத்துயர் அனைத்தும் தீராயோ?

சரணங்கள்

1. திறம் இலாத எனை முனியாமல்யான்
செய்த குற்றம் ஒன்றும் நினையாமல் --- பரனே

2. மாய வலையில் பட்டுச் சிக்காமல்லோக
வாழ்வில் மயங்கி மனம் புக்காமல் --- பரனே

3. அடியேனுக் கருள் செய் இப்போதுஉன
தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது? --- பரனே

4. வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ? – என்றன்
மனது களிக்க வர மாட்டாயோ? --- பரனே

5. ஏசுவின் முகத்துக் காய் மாத்ரம்எனக்
கிரக்கம் செய்யும்; உமக்கே தோத்ரம்! --- பரனே

PARAMA YERUSALEME PARALOGAM VITTIRANGUTHE

பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே
ஆமென் அல்லேலூயா - (4)

சரணங்கள்

1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் - கனிவான எருசலேமே

2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் - மேலான எருசலேமே

3. சர்வ சங்க சபையின் அங்கமானேன்
சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் - ஆஹா என் எருசலேமே

4. விடுதலையே விடுதலை விடுதலையே
லோகமதின் மோகத்தில் விடுதலையே
நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே
நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே - சுயாதீன எருசலேமே

5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
மரணமில்லை மனநோயின் துயரமில்லை
அலறலில்லை அழுகையின் சோகமில்லை - தலைநகராம் எருசலேமே

PARISUTHAM PERA VANTHITTIRGALA

1. பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
ஒப்பில்லா திருஸ்நானத்தினால்?
பாவதோஷம் நீங்க நம்பினீர்களா?
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

மாசில்லா - சுத்தமா?
திருப்புண்ணிய தீர்த்தத்தினால்
குற்றம் நீங்கிவிட குணமாறிற்றா
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

2. பரலோக சிந்தை அணிந்தீர்களா?
வல்ல மீட்பர் தயாளத்தினால்?
மறு ஜன்ம குணமடைந்தீர்களா?
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்?

3. மணவாளன் வரக் களிப்பீர்களா
தூய நதியின் ஸ்நானத்தினால்?
மோட்ச கரை ஏறிச் சுகிப்பீர்களா
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

4. மாசு கறை நீங்கும் நீசப்பாவியே
சுத்த இரத்தத்தின் சக்தியினால்!
முக்திப் பேறுண்டாம் குற்றவாளியே
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்!

PARISUTHAR AVAR NAAMAM

பரிசுத்தர் அவர் நாமம் (2)
பரிசுத்தர் அவர் நாமம் உன்னதரே

தேவனின் நாமம் பலத்த கோட்டை
நீதிமான் வாழ்வின் சுகம் அங்கே (2)

தேவனின் நாமத்திற்கே மகிமை உண்டாகட்டுமே
தேவனின் நாமத்திற்கே உன்னதரே

தேவனின் நாமத்திற்கே துதி உண்டாகட்டுமே
தேவனின் நாமத்திற்கே உன்னதரே

PARISUTHAR KOOTAM NADUVIL

பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ

சரணங்கள்

1. மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?
கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ?
பொல்லாதோர் கூட செய்திடார்
நற்பிதா நலம் அருளிடுவார்

2. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே
பாவி நீச பாவி நானையா
தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ

3. பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உள் அலங்கோலத்தை
மனம் நொந்து மருளுகின்றேன்
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்

4. துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
என் ஜீவன் எல்லை எங்கிலும்
பரிசுத்தம் என எழுதும்

EN DEVAN EN VELICHAM

என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்

1. தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
அன்பர் இயேசென்னை ஏற்றுக் கொள்வார்
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
தலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார் --- என்

2. தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார்
என்னைப் பகைத்தவர்கள் உடனே அழித்தார்கள் --- என்