Tuesday, November 5, 2019

NEEGATHIRUM EN NESA KARTHARE

1. நீங்காதிரும் என் நேச கர்த்தரே
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே
மற்றோர் ஒத்தாசை அற்றுப்போயினும்
நீர் மெயச்சகாயரே நீங்காதிரும்

2. நீர் மேலே குமிழ் போல் என் ஆயுசும்
இம்மையில் இன்ப வாழ்வும் நீங்கிடும்
கண் கண்ட யாவும் மாறிப் போயினும்
மாறாத கர்த்தரே நீங்காதிரும்

3. நீர் கூட நின்று தாங்கி வாருமேன்
அப்போது தீமைக்கு நான் தப்புவேன்
நீர் என் துணை என் பாதை காட்டியும்
என் இன்ப துன்பத்தில் நீங்காதிரும்

4. நான் அஞ்சிடேன் நீர் கூடத் தங்கினால்
என் கிலேசம் மாறும் உம் பிரசன்னத்தால்
சாவே எங்கே உன் கூரும் ஜெயமும் ?
என்றாரவாரிப்பேன் நீங்காதிரும்

5. நான் சாகும் அந்தகார நேரமே
நீர் ஒளியாய் விண் காட்சி காட்டுமே
பேரின்ப ஜோதி வீசச் செய்திடும்
வாணாள் சாங்காலிலும் நீங்காதிரும்

NANRIYODU NALLA DEVA NANMAIGALELLAM

நன்றியோடு நல்ல தேவா
நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்
நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்

குறைவில்லாமல் நடத்தினீரே
தடை எல்லாம் நீர் அகற்றினீரே
என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்
என் வாழ்வின் நாயகன் நீரே

உயர்விலும் தாழ்விலும்-என்
துணையாக வந்தீரே நிறைவிலும்
என் குறைவிலும் என் நம்பிக்கையானவரே
எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே
என் முகத்தை உம் கையில் வரைந்தவரே
என்னை மறவாமல் நினைப்பவரே

சோதனையில் வேதனையில்
என் பக்கமாய் நின்றவரே
முன்னும் பின்னும் பாதுகாக்கும்
நல் கோட்டையாய் இருப்பவரே
எல்லா வியாதி பெலவீன நேரங்களில்
உன் பரிகாரி நானென்று சொன்னவரே
எனக்கும் ஜீவன் தந்தவரே

NEERE ENTHAN KANMALAI

நீரே எந்தன் கன்மலை
நான் உம்மை நம்புவேன்
நீரே எந்தன் மறைவிடம்
என்றும் உம்மில் தங்குவேன்

துன்பமான நேரமோ
இன்பமான காலமோ
தோல்வியின் மத்தியில்
புகழ்ச்சியின் உச்சத்தில்
எல்லா சூழ்நிலையிலும்
மாறாத தேவனே
உம்மையே நம்புவேன்
உம்மை விசுவாசிப்பேன்
அசைக்கபடுவதில்லை

மனுஷரை நம்பிடேன்
பிரபுகளையும் நம்பிடேன்
பணம் பதவி நம்பிடேன்
என் பெலனையும் நான்
நம்பிடேன்
நான் உம்மை மறந்தாலும்
என்னை மறவா தேவனே
உம்மையே நம்புவேன்
உம்மை விசுவாசிப்பேன்
அசைக்கப்படுவதில்லை

எந்தன் வாழ்வின் ஒளியும் நீரே
வழியும் நீரே வழுவாமல்
காப்பவரே
எந்தன் தாயும் தகப்பன் நீரே
எந்தன் நண்பன் நீரே
எல்லாமும் நீரே
நான் உம்மை மறந்தாலும்
என்னை மறவா தேவனே
உம்மையே நம்புவேன்
உம்மையே விசுவாசிப்பேன்
அசைக்கப்படுவதில்லை

NALLIRAA NAERAM VENPANI MAAYAM

நல்லிரா நேரம் வெண்பனி மாயம்
வல்லவ தேவன் புல்லணை மீதில்
கல்லும் கரைய கண்கள் நீர் மல்க |
புல்ல்ரை மீட்க பாலகன் ஆனார் | 2

1. மாந்தரை மீட்க மக்களைத் தேற்ற
மாட்டுத் தொழுவம் தேடிப் பிடித்த
வாட்டும் குளிரில் நாட்டுப் புறத்தில் |
பாட்டாளியாக தோன்றிய பாலன் | 2

2. ஆணவம் நீங்க ஆங்காரம் வீழ
ஈனர் செருக்கும் வீழ்ச்சியடைய
வானுயர் தேவன் வைக்கோலின் மீதில்|
வந்து பிறந்தார் ஏழைக் குடிலில் | 2

NEELAVAANIL KIRISTHU RAAJAAVAI KAANPAEN

நீலவானில் கிறிஸ்து ராஜாவை காண்பேன்
என் இயேசு வருவார் அங்கு
மேக மீதில் பறந்தே செல்வேன்
மெசியாவோடு என்றும் வாழ்வேன்
எக்காளங்கள் முழங்க 
நானும் கேட்டே மகிழ்வேன்
பக்தர்கள் முன்னே செல்ல
பின்னே நானும் செல்வேன் (2)
சுத்தரோடு செர்ந்து சங்கீதம் பாடி மகிழ்வேன்
சமாதான பிரபுவோடு வாழ்வேன்
பசிதாகம் அங்கில்லை
பயங்கள் ஒன்றும் இல்லை
பரிதவிக்க பிரச்சனைகளோ
பரலோகத்தில் இல்லை (2)
மேசியாவின் முன்பு மரணமும் பாதாளமும் இல்லை
மகிமையில் தேவன் முன் நான் வாழ்வேன்

NAN PAAVI YESUVE EN VAALVAI

நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே
விழுந்துவிட்டேன் மனம் உடைத்துவிட்டேன் 
என்னைத் தேற்றும் இயேசுவே -2

கலங்குகிறேன் மனம் குழம்புகிறேன்
மன அமைதி தாருமே -2

புரியவில்லை பாதை தெரியவில்லை
பாதை கட்டும் இயேசுவே -2

சோர்ந்து விட்டேன் மனம் உடைந்து விட்டேன்
என்னைத் தேற்றும் இயேசுவே -2

நாடுகிறேன் உம்மைத் தேடுகிறேன்
எந்தன் தாகம் தீருமே -2

NOAH KAALATHIL NADANDHADHUPOL


நோவா காலத்தில் நடந்ததுபோல் நடந்தது
கேரளா பட்டணம் தண்ணீரிலே மிதந்தது - (2)
ரேடெல்லாம் தண்ணீ வீடெல்லாம் தண்ணீ
ஊரெல்லாம் தண்ணீ தண்ணீயோ தண்ணீ
ஊரெல்லாம் தண்ணீயோ தண்ணீ - (2)

1) அரசனாக வாழ்ந்தவனோ ஆண்டியாய் போனான்
அடுத்த வேளை உணவுக்குத் தான் வானத்தையே பாத்தான்
இது பாவமா? இல்லன்னா சாபமா? -(2) - நோவா

2) படிச்ச படிப்பும் சேத்த சொத்தும் உன்னைப் காக்கவில்ல
பட்டிணியில துடிக்குதம்மா ஐயோ பச்சப்பிள்ளை
இது பாவமா? இல்லன்னா சாபமா? -(2) - நோவா

3) உங்களையே தஞ்சம்ன்னு நம்பி வந்தோம் தேவா
தேசத்துக்கு சேமத்தை நீர் தரவேண்டும் ராஜா
பாருமய்யா, கண்ணோக்கி பாருமய்யா
தாருமய்யா, கிருபை தாருமய்யா - நோவா

AA AMPARA UMPARA MUM PUKALUNTHIRU

ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்

அனுபல்லவி

ஆதிபன் பிறந்தார், – அமலாதிபன் பிறந்தார். – ஆ!

சரணங்கள்

1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! (2) – நவ
அச்சய சச்சிதா – ரட்சகனாகிய
உச்சிதவரனே! – ஆ!

2. ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, (2) – அன்று
அல்லிராவினில் – தொல்லையிடையினில்
புல்லணையிற் பிறந்தார். – ஆ!

3. ஞானியர் தேட, – வானவர் பாட, (2) – மிக
நன்னய, உன்னத – பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார். – ஆ!

4. கோனவர் நாட, – தானவர் கொண்டாட, – என்று
கோத்திரர் தோத்திசஞ் சாற்றிட வே, யூத
கோத்திரன் பிறந்தார். – ஆ!

5. விண்ணுடு தோண, மன்னவர் பேண, (2) ஏரோது,
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார். – ஆ!

PALAMUM ALLA PARAKIRAMAM ALLA AAVI

பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும்
தேவ ஆவியினால் ஆகும்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

சுத்திகரியும் சுத்திகரியும் பாவங்களை சுத்திகரியும்
குணமாக்கும் குணமாக்கும் வியாதிகளை குணமாக்கும்

பெலன் தாரும் பெலன் தாரும் பெலவீன பகுதிகளில்
ஜெயம் தாரும் ஜெயம் தாரும் தோல்வி வேளைகளில்

ஜெபம் கேளும் ஜெபம் கேளும் எங்களின் ஜெபம் கேளும்
பதில் தாரும் பதில் தாரும் கண்ணீருக்குப் பதில் தாரும்

விடுதலையை விடுதலையை விரும்புகிறோம் ஐயா
தாருமையா தாருமையா இப்போழுதே தாருமையா

அபிஷேகியும் அபிஷேகியும் ஆவியால் அபிஷேகியும்
அனல் மூட்டும் அனல் மூட்டும் ஆவியால் அனல் மூட்டும்

எழுப்புதலை எழுப்புதலை சபைகளில் தாருமையா
சபைகளெல்லாம் சபைகளெல்லாம் வளர்ந்திட செய்யுமையா

BALAMUM ALLAVE BARAKKIRAM ALLAVE

பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே
பரிசுத்தரால் எல்லாம் ஆகுமே
பயப்படாதே சிறு மந்தையே
கர்த்தர் உன்னை நடத்திச் செல்வார்

1. தாழ்வில் என்னைத் தூக்கினார்
சோர்வில் என்னைத் தாங்கினார்
கஷ்டத்தில் என் தேவன்
என்னை நடத்திச் சென்றார்
இதுவரை தாங்கினார்
இனியும் தாங்குவார்
முடிவு வரை இயேசு
என்னை கைவிடமாட்டார்

2. கண்ணீரெல்லாம் துடைத்தார்
கவலை எல்லாம் போக்கினார்
கண்மணிபோல் தேவன்
என்னைக் காத்துக்கொண்டார்
சாபங்களை உடைத்தார்
சமாதானம் தந்தார்
அடைக்கலத்தில் தேவன்
என்னை வைத்துவிட்டார்

NEER ENGE NAAN ANGE

{நீர் எங்கே 
நான் அங்கே 
வேறெங்கே 
நான் போவேன் 
நீர் சொன்னால், போதும் செய்வென் 
வேறென்ன வேண்டும் நீரே} x 2 
{நீரே போதும் நீரே வேண்டும்} x 4
ஏசுவே... 
{நீரே போதும் நீரே வேண்டும்} x 4
ஏசுவே... 

{நான் எங்கே 
போனாலும் 
நீர் அங்கே
முன் போவீர் 
உம்சித்தம் 
செய்யும் வரையில் 
வேறென்ன வேண்டும் நீரே} x 2
{நீரே போதும் நீரே வேண்டும்} x 3
ஏசுவே... 
{நீரே போதும் நீரே வேண்டும்} x 3
ஏசுவே... 

PAYAPADAMATEN NAAN YESU ENNODU

பயப்படமாட்டேன் நான் பயப்படமாடேன்
இயேசு என்னோடு இருப்பதனால்

ஏலேலோ ஐலசா

உதவி செய்கிறார், பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்

காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்

வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்

பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம்

உலகில் இருக்கிற அலகையைவிட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

PAAVA SANJALATHAI NEEKA

பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே
பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்

கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும் ஜெபதூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச்சோர்பை தீயகுணம் மாற்றுவார்

பலவீனமான போதும் கிருபாசனம் உண்டே
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே
ஒப்பில்லாத பிராண நேசா உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்

POOVIN NARGANTHAM VEESUM SOLAIYAYINUM

1. பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்
நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்
இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்
விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன்

பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்

2. கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்
காற்று கோரமாக மோதும் ஸ்தானத்திலும்
இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்
இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன் 

3. நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்
மேடானாலும் காடானாலும் பின் செல்லுவேன்
மீட்பர் என்னை மோசமின்றிச் சுகமே காப்பார்
விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார்

MAGIMAI UMAKKANDRO MATCHIMAI

மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கன்றோ

ஆராதனை ஆராதனை என்
அன்பர் இயேசுவுக்கே

விலையேற்ப் பெற்ற உம் இரத்ததால்
விடுதலை கொடுத்தீர்
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்

வழிகாட்டும் தீபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே

எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக

உம் வல்ல செயல்கள்
மிகவும் பெரிய அதிசயமன்றோ
உம் தூய வழிகள் நேர்மையான
சத்திய தீபமன்றோ