Saturday, August 22, 2015

Oruvarum sera oliyinil

ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்திடும்
எங்கள் தேவனே
மனிதருள் யாரும் கண்டிரா
மகிமை உடையவர்
எங்கள் தேவனே

நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன்

ஏல்- ஒலான் நீரே
உமக்கு ஆரம்பம் இல்லையே
ஏல்- ஒலான் நீரே
உமக்கு முடிவொன்றும் இல்லையே

உம்மை அறிந்தவர் இல்லையே
உம்மை புரிந்தவர் இல்லையே
உம்மை கண்டவர் இல்லையே
உமக்கு உருவொன்றுமில்லையே...

நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன்

PENDHAEKOSTHE ANUBAVAM LYRICS

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
பின்மாரி ஆவியை ஊற்றுமே

மேலான வல்லமை
மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே

என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே

அனலான ஊழியம் தாருமே
அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே

நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே

அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
அதிகார நாவுகள் தாருமே

BAVANI SELGIRAR RASA NAAM

பவனி செல்கின்றார் ராசா - நாம்
பாடிப் புகழ்வோம் நேசா!

அனுபல்லவி

அவனிதனிலே மறிமேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம். --- பவனி

சரணங்கள்

1. எருசலேமின் பதியே! - சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே! --- பவனி

2. பன்னிரண்டு சீடர் சென்று - நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க
நன்னயம் சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத. --- பவனி

3. குருத்தோலைகள் பிடிக்க, - பாலர்
கும்புகும்பாகவே நடிக்க
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற.

PAADINAL PAADUVEN YESU BAALANAI

பாடினால் பாடுவேன் இயேசு பாலனை
உன்னைப் பாடினால் துன்பம் நீங்கிடும்
தேடினால் தேடுவேன் இயேசு தேவனை
உன்னருள் நான் தேடுவேன் தேடுவேன்

1. பன்னிரு வயதினில் பாலகன் நீரே
என்னரும் போதனை இயம்பி நின்றிரே
கோடையில் கிடைத்த குளிர் இளநீரே
கடையர் களித்திட கதி தருவீரே

2. பாவை உம்மை தொட்டதினாலே
பறந்து போனதே அவள் தன் நோயும்
பாவி எந்தன் பாவ வினைகள்
பறந்து போகுமே உன்னை நினைத்தால்

DEVA BAALAN PIRATHEERE LYRICS

தேவ பாலன் பிறந்தீரே
மனுக்கோலம் எடுத்தீரே
வானலோகம் துறந்தீர் இயேசுவே
நீர் வாழ்க வாழ்கவே

1. மண் மீதினில் மாண்புடனே
மகிமையாய் உதித்த மன்னவனே
வாழ்த்திடுவோம், வணங்கிடுவோம்
தூயா உம் நாமத்தையே

2. பாவிகளை ஏற்றிடவே
பாரினில் உதித்த பரிசுத்தனே
பாடிடுவோம், புகழ்ந்திடுவோம்
தூயா உம் நாமத்தையே

VAARUM VAARUM MAGATHUVA DEVANE

வாரும் வாரும் மகத்துவ தேவனே
வல்லமையாக இப்போ வந்திடும்

1. மகிமைச் சொருபனே! மாவல்ல தேவனே!
மன்னா! வந்தாசீர்வாதம் தாருமே --- வாரும்

2. தாய் தந்தை நீர் தாமே! தற்பரா! எங்கட்கு
தரணியில் வேறோர் துணை இல்லையே --- வாரும்

3. பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும்
பரிசுத்த ராஜனே! நீர் வாருமே --- வாரும்

4. பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்ற
பரலோக ராஜனே! நீர் வாருமே --- வாரும்

5. காருண்ய தேவனே! கதியும்மை யண்டினோம்
கடைசிவரையும் காத்து இரட்சியும் --- வாரும்

6. மன்னா! உம் வரவை எண்ணி யாம் ஜீவிக்க
ஏவுதல் தினம் தாரும் ஏகனே --- வாரும்

7. விழிப்புள்ள ஜீவியம் விமலா! நீர் ஈந்துமே
வெற்றியடையக் கிருபை தாருமே --- வாருமே

8. இவ்வித பாக்கியம் ஏழைகளெங்கட்கு
ஈந்ததாலுமக்கென்றும் ஸ்தோத்திரம் --- வாரும்

PAADUM PAADAL YESUVUKKAGA LYRICS



பாடும் பாடல் இயேசுவுக்காக
பாடுவேன் நான் எந்த நாளுமே
என் ராஜா வண்ண ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி அவரே

1. அழகென்றால் அவர் போல
யார் தான் உண்டு இந்த லோகத்தில்
வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே
என் உள்ளம் மகிழ்வாகுதே --- பாடும்

2. அன்பினிலே என் நேசர்க்கே
என்றென்றுமே இணையில்லையே
என்னை மீட்டிடவே தன் ஜீவன் தந்தார்
என் நேசர் அன்பில் மகிழ்வேன் --- பாடும்

3. தெய்வம் என்றால் இயேசுதானே
சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே
என் பொன் நேசரின் மார்பினில் சாய்ந்தோனாக
நான் பாடுவேன் பாமாலைகள் --- பாடும்


PAATHAGAN YEN VINAITHEER IYYA KIRUBAGARA

பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின்
பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.

அனுபல்லவி

தீதகற்றவே சிறந்த
சேண் உலகினிமை விட்டு,
பூதலத் துகந்து வந்த
புண்ணியனே, யேசு தேவா. --- பாதகன்

சரணங்கள்

1. வந்துறும் எப்பாவிகளையும் - அங்கீகரிக்கும்
மாசில்லாத யேசு நாதனே,
உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது
முந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ? --- பாதகன்

2. சிந்தின உன் உதிரம் அதே - தீயோன் மறத்தைச்
சின்னபின்னம் செய்ய வல்லதே;
பந்தம் உற உன்றன் வலப் பாகாமுற்ற கள்வனையே
விந்தையுற வேரட்சித்த வேதனே, அவ்விதமாயே --- பாதகன்

3. அற்பவிசுவாசமுளன் ஆம் - அடியேனை இனி
ஆதரிப்பதார்? உன் தஞ்சமே;
தற்பரா, உனைத் தரிசித் தன்றி நம்பிடேன், எனவே
செப்பின தோமாவுக்குப்போல், திரு உருக்காட்சி தந்து. --- பாதகன்

PAATHAM ONDRE VENDUM

பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன்

சரணங்கள்

1. நாதனே, துங்கமெய் - வேதனே, பொங்குநற்
காதலுடன் துய்ய - தூதர் தொழுஞ்செய்ய --- பாதம்

2. சீறும் புயலினால் - வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல் - நீர்மேல் நடந்தஉன் --- பாதம்

3. வீசும் கமழ் கொண்ட - வாசனைத் தைலத்தை
ஆசையுடன் - மரி - பூசிப் பணிந்த பொற் --- பாதம்

4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்,
நீக்கிடவே மரந் - தூக்கி நடந்த நற் --- பாதம்

5. நானிலத்தோர் உயர் - வான் நிலத் தேற வல்
ஆணி துளைத்திடத் - தானே கொடுத்த உன் ---பாதம்

6. பாதம் அடைந்தவர்க் - காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு - நாதனே, என்றும் உன் --- பாதம்

PAATHAM POTRIYE PANINTHIDUVEN YESUVIN

பாதம் போற்றியே பணிந்திடுவேன் - இயேசுவின்
பாதம் போற்றியே பணிந்திடுவேன்


1. முன்னணைப் புல்லினை மிதித்திட்ட பாதம்
மன்னவர் முவர் பணிந்திட்ட பாதம்
வண்ணமாய் மேய்ப்பர்கள் வணங்கிய பாதம்
எண்ணிலாத் தூதர்கள் சுமந்திட்ட பாதம்

2. நோய்களைத் தீர்த்திட விரைந்திட்ட
பேய்களைத் துரத்திட சென்றிட்ட பாதம்
மாய்ந்திடும் பாவியை ஈட்டிடும் பாதம்
தூய்மையின் ஊற்றாம் இயேசுவின் பாதம்

3. பொங்கிடும் ஆழியின் அலைகளின் வேகம்
மங்கிய இருளும் சூழ்ந்திடும் நேரம்
ஏங்கிடும் சீஷரை மீட்டிடும் வண்ணம்
பாங்குடன் கடல் மேல் நடந்திட்ட பாதம்

4. பரிசேயன் வீட்டிற்கு சென்ற நற்பாதம்
உரிமையாய் பாவி வந்தவன் இல்லம்
பரிமள தைலத்தைப் பூசிய பாதம்
பரிவுடன் மன்னித்த இயேசுவின் பாதம்

5. கொல்கதா மலைபேல் நடந்திட்ட பாதம்
நல்லவர் இயேசுவின் மென்மையாம் பாதம்
வெள்ளமாய்க் குருதி ஒடிடும் வண்ணம்
அறைந்திடத்தானே கொடுத்த நற்பாதம்

PAATHAI KAATUM MAAYEGOVA LYRICS

1. பாதை காட்டும், மாயெகோவா
பரதேசியான நான்
பலவீனன், அறிவீனன்,
இவ்வுலகம் காடுதான்;
வானாகாரம்
தந்து என்னைப் போஷியும்.

2. ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை,
நீர் திறந்து தாருமேன்;
தீப மேக ஸ்தம்பம் காட்டும்,
வழியில் நடத்துமேன்;
வல்ல மீட்பர்!
என்னைத் தாங்கும், இயேசுவே.

3. சாவின் அந்தகாரம் வந்து,
என்னை மூடும் நேரத்தில்
சாவின் மேலும் வெற்றி தந்து,
என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில்
கீத வாழ்த்தல்
உமக்கென்றும் பாடுவேன்

SILUVAI NAADAR YESUVIN LYRICS

சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கிப் பார்க்கின்றன - தம்
காயங்களையும் பார்க்கின்றன

1. என் கைகள் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீயவழியில் என் கால்கள் சென்றதால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே

2. தீட்டுள்ள எண்ணம் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண் பெருமை என்னில் இடம் பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்

3. திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய்க் கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும், இரத்தமும் சிந்துகின்றார்

4. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்