Wednesday, September 2, 2015

SILUVAIYIL ARAIYUNDA MESSIAH

சிலுவையில் அறையுண்ட மேசியா
இறை வல்லமையும் இறை ஞானமுமாய் உள்ளார்
இதை உள்ளங்கள் உணர்ந்திடட்டும்
இந்த உலகமும் உணர்ந்திடட்டும் (2)

அல்லேலூ அல்லேலூ அல்லேலுயா (4)

1. குற்றம் இல்லாதோர் மாய்கின்றார்
எம் குழந்தைகள் பசியில் வாடுகின்றார்
நீதியை அழிப்போர் வாழ்கின்றார்
பல நேரிய மனிதர்கள் வீழ்கின்றார்
இந்த சிலுவை உமது வல்லமையோ
இந்த சிலுவை உமது ஞானமோ (2) --- அல்லேலூ

2. சிலுவையில் இறந்த செம்மறிதான்
பின் சாவினை அழித்து உயிர்த்ததன்றோ
சிலுவை வடிவே முடிவல்ல
முழு ஜெயமே எங்கள் பரிசன்றோ
இந்த சிலுவை உமது வல்லமையே
இந்த சிலுவை உமது ஞானமே (2) --- அல்லேலூ

3. நெஞ்சினில் அமைதியை இழக்கின்றோம் - மன
நிம்மதி இழந்தே தவிக்கின்றோம்
நோவிலும் சாவிலும் துடிக்கின்றோம் - எங்கள்
தேவனே சிலுவையின் பொருள் சொல்வாய்
இந்தச் சிலுவை உமது வல்லமையோ
இந்தச் சிலுவை உமது ஞானமோ (2) --- அல்லேலூ

4. உறவுகள் நிறைவு தருவதில்லை எங்கள்
உள்ளத்தில் அன்பு வளர்வதில்லை
பிரிவுகள் பிளவுகள் பிணக்குகளே எங்கள்
வீட்டிலும் நாட்டிலும் வளர்வது ஏன்
இந்தச் சிலுவை உமது வல்லமையோ
இந்தச் சிலுவை உமது ஞானமோ (2) --- அல்லேலூ

KANDENEN KANKULIRA KARTHANAI INDRU

கண்டேனென் கண்குளிர - கர்த்தனை யின்று

அனுபல்லவி

கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் --- கண்

சரணங்கள்

1. பெத்தலேம் - சத்திர முன்னணையில்
உற்றோருக் - குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் --- கண்

2. தேவாதி - தேவனை, தேவசேனை
ஓயாது - தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் --- கண்

3. பாவேந்தர் - தேடிவரும் பக்தர் பரனை,
ஆரேந்தர் - அடிதொழும் அன்பனை, என் இன்பனைநான் --- கண்

4. முத்தொழிற் - கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை - மீட்க எனை நத்தி வந்த மன்னவனைக் --- கண்

5. மண்ணோர் - இருள்போக்கும் மாமணியை,
விண்ணோரும் - வேண்டி நிற்கும் விண்மணியைக், கண்மணியைக் --- கண்

6. அண்டி னோர்க் - கன்புருவாம் ஆரணனை,
கண்டோர்கள் - கலிதீர்க்கும் காரணனை, பூரணனைக் --- கண்

7. அன்னையாம் - கன்னியும் ஐயனுடன்
முன்னறி - யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் --- கண்

RAJAN BALAN PIRANTHANARE

ராஜன் பாலன் பிறந்தனரே
தாழ்மையான தரணியிலே

ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரே
ஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்
தாழ்மையாய் அவதரித்தார் --- ராஜன்

1. அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார்
அன்னல் ஏழையாய் வந்தார்
அவர் வாழ்வினில் மானிடரை
காக்க என்னிலே அவதரித்தார்
அன்னல் ஏழையாய் வந்தார் --- ராஜன்

2. பாரினில் பாவம் போக்கவே பாங்குடன்
மானிட ஜென்மம் எடுத்தார்
அவர் பாதம் பணிந்திடுவோம்
பாலனின் அன்புக்கு எல்லை உண்டோ
மானிட ஜென்மம் எடுத்தார் --- ராஜன்

KARTHAVIN JANAME KAITHALAMUDANE

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு!
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு!
அல்லேலூயா! அல்லேலூயா! (2)

சரணங்கள்

1. பாவத்தின் சுமையகற்றி --- கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) --- கர்த்தாவின்

2. நீதியின் பாதையிலே --- அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்!
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) --- கர்த்தாவின்

3. மறுமையின் வாழ்வினிலே --- இயேசு
மன்னவன் பாதத்திலே
பசிதாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா (2) --- கர்த்தாவின்

KARTHAR AAVI ENNIL ASAIVAADUMPOTHU

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடும்போது
தாவீதைப்போல் துதிப்பேன்
துதிப்பேன், துதிப்பேன்
தாவீதைப் போல் துதிப்பேன்

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடும்போது
தாவீதைப்போல் தட்டுவேன்
தட்டுவேன், தட்டுவேன்
தாவீதைப் போல் தட்டுவேன்

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடும்போது
தாவீதைப்போல் ஆடுவேன்
ஆடுவேன், ஆடுவேன்
தாவீதைப் போல் ஆடுவேன்

KARTHAVE YUGAYUGAMAI EM THUNAI AAYINEER

1. கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்;
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்.

2. உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்;
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்.

3. பூலோகம் உருவாகியே,
மலைகள் தோன்றுமுன்,
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்.

4. ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே;
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே

5. சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்;
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்.

6. கர்த்தாவே, யுக யுகமாய்
எம் துணை ஆயினீர்;
இக்காட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர்.

KARTHAVAI NALLA BAKTHIYAALE

1. கர்த்தாவை நல்ல பக்தியாலே
எப்போதும் நம்பும் நீதிமான்
எத்தீங்கிலேயும் அவராலே
அன்பாய்க் காப்பாற்றப்படுவான்;
உன்னதமான கர்த்தரை
சார்ந்தோருக்கவர் கன்மலை.

2. அழுத்தும் கவலைகளாலே
பலன் ஏதாகிலும் உண்டோ?
நாம் நித்தம் சஞ்சலத்தினாலே
தவிப்பது உதவுமோ?
விசாரத்தாலே நமக்கு
இக்கட்டதிகரிக்குது.

3. உன் காரியத்தை நலமாக
திருப்ப வல்லவருக்கு
நீ அதை ஒப்புவிப்பாயாக!
விசாரிப்பார், அமர்ந்திரு.
மா திட்டமாய்த் தயாபரர்
உன் தாழ்ச்சியை அறிந்தவர்.

4. சந்தோஷிப்பிக்கிறதற்கான
நாள் எதென்றவர் அறிவார்;
அநேக நற்குணங்கள் காண
அந்தந்த வேளை தண்டிப்பார்;
தீவிரமாயத் திரும்பவும்
தெய்வன்பு பூரிப்பைத் தரும்.

5. நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்
என்றாபத்தில் நினையாதே;
எப்போதும் பாடும் நோவுமற்றோன்
பிரியனென்றும் எண்ணாதே;
அநேக காரியத்துக்கு
பின் மாறுதல் உண்டாகுது.

6. கதியுள்ளோனை ஏழையாக்கி
மகா எளியவனையோ
திரவிய சம்பன்னனாக்கி
உயர்த்த ஸ்வாமிக்கரிதோ?
தாழ்வாக்குவார், உயர்த்துவார்,
அடிக்கிறார், அணைக்கிறார்.

7. மன்றாடிப் பாடி கிறிஸ்தோனாக
நடந்துகொண்டுன் வேலையை
நீ உண்மையோடே செய்வாயாக,
அப்போ தெய்வாசீர்வாதத்தை
திரும்பக் காண்பாய் நீதிமான்
கர்த்தாவால் கைவிடப்படான்.

YESU RATCHAGAR PEYARAI SONNAL

இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்
எதுவும் நடக்குமே
அவர் இதயத்தோடு கலந்து விட்டால்
எல்லாம் கிடைக்குமே (2)

1. வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே
அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே
பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு
பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு

2. எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு
நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு
தீமை வளரும் எண்ணம் தன்னை அகற்ற சொன்னவர் இயேசு
தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு

KALVAARI ANBAI ENNIDUM VELAI

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் நித்தமும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
1. கெத்சமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை
எத்திசை அந்தோ தொனிக்கின்றதே
எந்தன் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே --- கல்வாரி

2. சிலுவையில் மாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறமாக்கினரோ
அப்போது அவர்க்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களைக் கண்டீரன்றோ
அப்பா உம் அன்பு பெரிதே --- கல்வாரி

3. என்னையும் உம்மைப்போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரை மட்டும் தாழ்த்துகின்றேன்
தந்துவிட்டேன் அன்பு கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் --- கல்வாரி

KARAIYERI UMADHANDAI NIRKUMPOTHU RATCHAGA

1. கறையேறி உமதண்டை
நிற்கும்போது ரட்சகா
உதவாமல் பலனற்று
வெட்கப்பட்டுப் போவேனோ

பல்லவி

ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்
வெட்கத்தோடு ஆண்டவா
வெறுங்கையனாக உம்மைக்
கண்டுகொள்ளல் ஆகுமா?
2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
வைத்திடாமல் சோம்பலாய்க்
காலங்கழித்தோர் அந்நாளில்
துக்கிப்பார் நிர்ப்பந்தராய்

3. தேவரீர் கை தாங்க சற்றும்
சாவுக்கஞ்சிக் கலங்கேன்
ஆயினும் நான் பெலன் காண
உழைக்காமற் போயினேன்

4. வாணாள் எல்லாம் வீணாளாகச்
சென்று போயிற்றே ஐயோ
மோசம் போனேன் விட்ட நன்மை
அழுதாலும் வருமோ?

5. பக்தரே உற்சாகத்தோடு
எழும்பிப் பிரகாசிப்பீர்
ஆத்துமாக்கள் யேசுவண்டை
வந்துசேர உழைப்பீர்

CHINNA CHINNA JEEVA VANDI

சின்ன சின்ன ஜீவ வண்டி
தேவன் அமைத்த ஜீவ வண்டி
சுக்கு ..... சுக்கு ஜீவ வண்டி
தேவன் அமத்த ஜீவ வண்டி

சரணங்கள்

1. ஆச்சரியமான ஜீவ வண்டி
அற்புதமான ஜீவ வண்டி (2) --- சின்ன

2. போகும் தூரம் வெகுதூரம்
போகும் வண்டி இதுவேதான் (2) --- சின்ன

3. ஸ்டேஷன் மாஸ்டர் இயேசுதான்
தங்க டிக்கட் கொடுப்பாராம் (2) --- சின்ன

4. போகும் திக்கு இரண்டேதான்
மோட்சம் நரகம் என்பதுதான் (2) --- சின்ன

5. நீயும் இயேசுவை ஏற்றுக்கொண்டால்
மோட்சம் கொண்டு சேர்ப்பாரே (2) --- சின்ன

KALVAARI MAAMALAIMEL KAI KAALGAL

1. கல்வாரி மாமலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப் பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்
குருசின் வேதனையும் சிரசின் முள் முடியும்
குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை

2. அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே
ஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார்

3. கர்த்தரின் சத்தமதை சத்தியம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோஷம் பொங்கியதே

em uyarntha vasasthalamadhuve

எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே
எம் பூரண சீயோனே

கன்மலையின் மேலே கழுகுபோல்
உன்னதத்தில் வாழுவோம் - இயேசு
பக்தர்கள் ஜெயம் பெற்றே
பிதா முகம் காண்போம்

1. ஞானக் கன்மலையே கிறிஸ்தேசு எம் அரணே
வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம்
ஏழு தூண்களுடன் திட அஸ்திபாரமுடன்
ஏசுவின் மேல் நின்று வீடாய் நாமிலங்கிடுவோம்

2. அன்பின் பூரணமே அதிலே பயமில்லையே
அன்பர் இயேசுவிடம் அதை நாடி பெற்றிடவே
ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே
ஆ! பேரின்ப ஆத்மாவில் ஆனந்தங் கொள்வோம்

3. மா சமாதானமே விசுவாச நம்பிக்கையே
மா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளே
தேவ சாயலுமே நம்மில் பூரணம் அடைய
தூய வாழ்வை நாடி நாம் முன்னேறியே செல்வோம்

4. ஓட்டமே ஜெயமாய் நாமும் ஓடியே முடிக்க
ஒவ்வொரு தினமும் புதிய பெலனடைவோம்
பாவ சாபங்களும் புவி ஆசையும் ஜெயித்தோர்
பாழுலகை வேகம் தாண்டி அக்கறை சேர்வோம்

5. வாலையும் சுழற்றி வலுசர்ப்பம் தோன்றிடுதே
வீர ஆண்பிள்ளையை விழுங்க வகைதேடுதே
வான அக்கினியால் அதைத்தீக் கொளுத்திடுவோம்
வல்லமை மிகுந்த கர்த்தர் இயேசு நாமத்திலே

6. வானங்கள் வழியே இறங்கி பரன் வருவார்
வாஞ்சையாய் சபையாய் அன்று யேசுவை சந்திப்போம்
மீட்பின் நாள் நெருங்க தலைகள் உயர்த்திடுவோம்
மத்திய வானவிருந்தில் பங்கடைந்திடுவோம்

kalikooruvom karther nam patchame

1. களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே;
தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;
அவர் நமக்கு யாவிலும் எல்லாமே
எப்பாவம் பயம் நீக்குவார்.
கர்த்தர் நம் பட்சம், கர்த்தர் நம்மோடு, கர்த்தர் சகாயர்
யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்?

2. திடனடைவோம், தீமை மேற்கொள்ளுவோம்
கர்த்தாவின் வல்ல கரத்தால்;
உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்,
அவரே திடன் ஆகையால்.
யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்?

3. வாக்கை நம்புவோம், உறுதி மொழியாய்
கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே;
பூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய்
நிலைக்கும், இது மெய் மெய்யே.
யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்?

4. நிலைத்திருப்போம் , கர்த்தரின் கட்டினில்,
அதால் நித்திய ஜீவன் உண்டாம்;
பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில்
வைத்தென்றும் பாதுகாப்பாராம்
யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்?

Ootra Pada Vendume unnathathin aavi

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே – (2)

எண்ணெய் அபிஷேகமே என்தலையை நனைக்க
ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ
அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்த்திடும் – ஊற்றப்பட

1. தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே – எண்ணெய்

2. ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் – எண்ணெய்

3. ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்
தேவ புத்திரர் என முத்திரை போடும் – எண்ணெய்

4. ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கிறோம்
சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும் – எண்ணெய்

5. ஆவியின் வரங்களை அருள் செய்யும் தேவா
ஆவியின் கனிகள் என்றும் ஈந்திடவே – எண்ணெய்

VISUVASA KAPPAL ONDRU SELKINDRATHU LYRICS

விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
அசைந்தாடி செல்கின்றது – (2)
அக்கரை நோக்கி – (2)

1. பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
பாரச்சுமையோடு செல்கின்றது
பரபரப்போடே செல்கின்றது
பரமன் வாழும் பரம் நோக்கி
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

2. ஆழம் நிறை கடலில் செல்கின்றது
அலைவந்து மோதியும் செல்கின்றது
ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

3. நீடிய பொறுமையோடே செல்கின்றது
நீண்ட பயணமாக செல்கின்றது
நிலைப் பலமாக செல்கின்றது
நிரந்தரமான இடத்தைக் காண
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

SUTHAM PANNA PADATHA DESAME

சுத்தம் பண்ணப் படாத தேசமே
சுத்திகரிக்க உன்னைத் தருவாயோ?
ஸ்திரப்படாத தேசமே ..
நீதியின் வஸ்திரம் தரிப்பாயோ?

1. பெலனான வயதுள்ள வாலிபரே
தொலைநோக்க கண்களை ஏறெடுங்கள் (2)
எதிர் காலம் கனவாக மறைவதற்குள்
சுடராக இருளுக்குள் ஒளி கொடுங்கள் (2)

2. தேசத்தை ஆளும் பிரபுக்களே
தாழ்மையின் குரலுக்கு செவிகொடுங்கள் (2)
தேவைக்கு அதிகம் இருப்பதெல்லாம்
ஏழைக்கு தானம் செய்திடுங்கள் (2)

3. வேதத்தை சுமக்கும் சீடர்களே
வேண்டாத சுமைகளை விட்டுவிடுங்கள் (2)
பாவத்தை சுமக்கும் பாரதத்தில்
தூய்மைக்கு மாதிரி காட்டிடுங்கள் (2)