Saturday, July 25, 2015

Maasilla Kanniyae Mathavae

மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல்
நேசமில்லாதவர் நீசரேயாவார் 

வாழ்க வாழ்க வாழ்க மரியே - 2

மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய்
ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய்  (2) -வாழ்க

தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ
நேசம் வைத்தாள்வது நின் கடனாமே  (2)  -வாழ்க

Annaiyin Arulthiru Vathanam

அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் - நம்
அல்லல்கள் அகன்று விடும் - அவள்
கண்களில் மின்னிடும் கருணையைக் கண்டால்
கவலைகள் மறைந்து விடும்

வாடா லில்லியும் வாழ்த்திப் பாடிடும்
தூய்மை தான் அவள் தோற்றம் - இன்று
தேடா மானிடர் யாருளர் தரணியில்
பாடார் அவள் ஏற்றம் -- 2 

பொன் தாள் வெண்ணிலா தாங்கிட வதனம்
பொலிவால் திகழ்ந்தோங்கும் - இன்று
செந்நீர் பாய்ச்சிய கரங்களில் எம்மை
எடுத்தே அரவணைக்கும் -- 2

Theva Thaayin Maatham Ithu

தேவ தாயின் மாதம் இது அல்லவோ..! இதை
சிறப்பாய் கொண்டாடிடவே புறப்பட்டு வாரீர் தோழா  -- 2

பூவிலுள்ள மானிடர்க்கு தேவசுதன் தந்த அன்னை
புண்ணிய வரங்கள் எல்லாம் கொண்ட அன்னையே  -- 2
ஆவலுடன் நாம் எல்லோரும் தேவமரி பாதம் கூடி
ஆனந்த மிகுந்த பல கீதங்களைப் பாடுவோமே   --தேவ தாயின்

தோட்டங்களில் உள்ள பல வாட்டமில்லா புஷ்பங்களை
சோடு சோடாய் சேர்த்து நல்ல மாலை கட்டுவோம்  -- 2
கூட்டமாக எல்லாம் சேர்ந்து வீட்டிலுள்ள பேரை சேர்த்து --2
கோயிலுக்கு சாயும் வேளை ஆவலுடன் போவோம் வாரீர் -- தேவ தாயின்

ஒவ்வொரு வீட்டார்களெல்லாம் ஒவ்வொரு நாள் சிறப்பிக்க
ஒப்பந்தமே செய்தால் ஒரு தப்புமில்லையே - 2
இவ்விதமே செய்தால் பலன் எவ்வளவோ கூடிவரும் - 2
இந்த மாதம் எல்லோருக்கும் நல்ல வரம் சேர்ந்து வரும் -- தேவ தாயின்

THAYIN MADITHAAN ULAGAM LYRICS

தாயின் மடிதான் உலகம் அவள் தாளைப் பணிந்திடுவோம் - 2
அவள் சேயின் மடிதான் மோட்சம்
நம் சேசுவைத் தொழுதிடுவோம் - 2

பிள்ளை என்றும் வாழ நல்லது எல்லாம் தருவாள் - 2
அவள் உள்ளம் என்றும் மகிழ
உண்மை வழியில் நாம் நடப்போம்

அன்னை மரியாள் உள்ளம் ஆழம் காணாக் கடலாம் - 2
அன்பு கருணை உருவாய்
ஆண்டவன் தந்த அரும்பொருளாம்

வங்கக் கடற்கரை யோரம் வேளாங்கண்ணியில் வாழும் - 2
தங்க நிலாவின் ஒளியால்
தாரகை சூடும் ஆரோக்கியமாதா

Vanaga Arasiyae Mantharin Annaiyae

வானக அரசியே மாந்தரின் அன்னையே - நான்
உனைப் பாடிடுவேன் மனம் மகிழ்ந்திட வாழ்த்திடுவேன்

பன்னிரு விண்மீன் முடியெனக் கொண்டவள் நீ
பொன் கதிரோனை ஆடையாய் அணிந்தவள் நீ - 2
அலகையின் தலைமிதித்தாய் விண் மன்னனை எமக்களித்தாய்

இன்றும் மீட்பின் பணி தொடர்கின்றாய்
காட்சிகள் வழி இறையருள் தருகின்றாய் - 2
புவியதன் தாய் எனவே மக்கள் அனைவரைக் காக்கின்றாய்

Annaikku Karam Kuvippom

அன்னைக்குக் கரம் குவிப்போம்
அவள் அன்பைப் பாடிடுவோம் – 2

கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் – அந்த
முன்னவனின் அன்னையெனத் திகழ்ந்தார் (2)
மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தார் – 2
தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்

பாவமதால் மனிதன் அருளிழந்தான் – அன்று
பாசமதால் அன்னை கருணை கொண்டாள் (2)
பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் -2
பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்

Azhakin Muzhumaiye Thayae

அழகின் முழுமையே தாயே
அலகையின் தலைமிதித்தாயே
உலகினில் ஒளி ஏற்றிடவே அமலனை எமக்களித்தாயே

இருளே சூழ்ந்திடும் போதே உதயத் தாரகை போலே -2
அருளே நிறைந்த மாமரியே அருள் வழி காட்டிடுவாயே

அன்பும் அறமும் செய்வோம்
அன்னை உனைப் பின் செல்வோம் (2)
உன்னைத் துணையாய்க் கொள்வோம்
என்றும் பாவத்தை வெல்வோம்

GNANAM NIRAI KANNIKAIYAE LYRICS

ஞானம் நிறை கன்னிகையே
நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் எழு தூண்களுமாய்
பலி பீடமுமாய் அலங்கரித்தாயே – ஞானம்

பாவ நிழலே அணுகா
பாதுகாத்தான் உன்னையே பரமன்
தாயுதரம் நீ தரித்திடவே
தனதோர் அமல தலமெனக் கொண்டார் – ஞானம்

வாழ்வோர் அனைவரின் தாயே
வானுலகை அடையும் வழியே
மக்கள் இஸ்ராயேல் தாரகையே
வானோர் துதிக்கும் இறைவியே வாழி – ஞானம்

Vanthom Un Mainthar Koodi

வந்தோம் உன் மைந்தர் கூடி – ஓ
மாசில்லாத் தாயே
சந்தோஷ மாகப் பாடி – உன்
தாள் பணியவே !

பூலோகந் தோன்று முன்னே – ஓ
பூரணத் தாயே !
மேலோனின் உள்ளந் தன்னில் – நீ
வீற்றிருந்தாயே !

தூயோர்களாம் எல்லோரும் – நீ
தோன்றும் நாளினை
ஓயாமல் நோக்கிப பார்த்தே – தம்
முள் மகிழ்ந்தாரே !

நாவுள்ள பேரெல் லோரும் – உன்
நாமம் போற்றுவார்
பாவுள்ள பேர்களோ உன் – மேற்
பாட்டிசைப்பரே!

AROKKIYA MATHAVE UMATHU PUGAZH LYRICS

ஆரோக்கிய மாதாவே உமது புகழ்
பாடித் துதித்திடுவோம் -எந்நாளும்
பாடித் துதித்திடுவோம்  (2) 

அலைகள் மோதிடும் கடற்கரை தனிலே
வசித்திட ஆசை வைத்தாயே  (2)
பலவிதக் கலைகளும் பாரில் சிறந்திட
அனைவருக்கும் துணை புரிந்தாயே  (2) 

தேன் கமழும் சோலை சூழ்ந்து விளங்கும்
வேளாங்கண்ணியில் அமர்ந்தாயே  (2)
வானுலகும் இந்த வையகமும்  -அருள்
ஓங்கிட எங்கும் நிறைந்தாயே  (2)

முடவன் தந்த மோரைப் பருகிக் கொண்டே -அவன்
குறைகளை நீக்கிட நினைத்தாயே  (2)
நடந்திடக் கால்களும் நோயற்ற வாழ்வும்
இயேசுவின் அருளால் கொடுத்தாயே  (2)

பாலன் இயேசுவின் பசியைப் போக்கவே
பசும்பால் வாங்கித் தந்தாயே  (2)  -இந்த
உலகம் உள்ளவரை உன்னை வேண்டிக்கொள்ளும்
அடிமைகள் வாழ்ந்திட அருள்புரிவாய் (2)

சக்தி விளங்கும் உந்தன் தரிசனம் கிடைத்தால்
சஞ்சலம் யாவும் தீர்ந்திடுமே  (2)
பக்தியுடன் உன்னைப் பணிந்து போற்றுபவர்
வாழ்வினிலே இன்பம் நிறைந்திடுமே  (2)

கவலையினால் மனம் வருந்தும் ஏழைகளின்
கண்ணீரைக் கனிவுடன் துடைத்தாயே   (2)  -நமது
நன்னாளில் வந்து தானங்கள் செய்பவர்
உன்னத நிலைபெற வைத்தாயே
(2)

Karunai Mazhaiyae Mary Matha

கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ   (2)



கன்னிமாதா தேவ சபையின் கதவு திறவாதோ   (2)
கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ  (2) -கருணை

தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே   (2)
சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே
ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே
உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே  (3)  -கருணை

ANNAI MAAMARI ENGAL ANBIN LYRICS

அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி
என்றும் உந்தன் புகழைப் பாடுவோம்
தேடும் மாந்தரைத் தேற்றிக் காத்திடும்
உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம் (2)

எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ
எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய் (2)

நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்
சகாயத் தாய்மரியே எம்மை
அரவணைத்துக் காப்பாய் நீயே-2

அண்ணல் இயேசு அன்பு வழியைக் கற்றுத் தந்த உன்
அன்புமிகு ஆதரவில் அச்சம் நீங்குதே -2

Oru Naalum Unai Maravaen

ஒரு நாளும் உனை மறவேன்
தாயே ஒருநாளும் உனை மறவேன்

கடல்நீரில் மிதந்தாலும் வானமதில் பறந்தாலும் -2
உலகமெலாம் அறுந்தாலும் -2 உத்தமனாய்ப் பிறந்தாலும்

நினைப்பவைகள் நடந்தாலும் நிலைகுலைந்தே மடிந்தாலும் -2
என்னைப்பிறர்தான் இகழ்ந்தாலும் -2 இனிதாகப் புகழ்ந்தாலும்

சோதனைகள் சூழ்ந்தாலும் வேதனைகள் அடைந்தாலும் -2
சாதனைகள் படைத்தாலும் – 2 சரித்திரமாய் முளைத்தாலும்

UMMAI THEDI VANTHEN LYRICS

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2

முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2)
பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் – 2
பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் – 2

கடல்நீரும் கூட உன் கோயில் காண
அலையாக வந்து உன் பாதம் சேரும் (2)
அருள்தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம் – 2
அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா – 2

Annai Un Pathathil Amarnthidum Velai

அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை
அல்லல்கள் யாவும் தீருதம்மா
என்னை நீ தாலாட்டி அமர்ந்திடும் வேளை
பிள்ளை என் உள்ளம் மகிழுதம்மா --2

சோகத்தின் ரேகைகள் சுடுகின்ற போது
சேதங்கள் தீண்டாமல் கரை சேர்க்கிறாய் --2
பாதங்கள் தடுமாறி பயில்கின்ற போது
படியேற என்னோடு கரம் கோர்க்கிறாய்
தாயே நீதான் எந்தன் வாழ்வாகிறாய்

நிஜமென்று எண்ணிய நேசங்கள் கூட
நிறம் மாறும் போது நிறை செய்கிறாய் --2
உயிரான உறவுகள் பிரிகின்ற போது
உயிரோடு கலந்து நீ குறை தீர்க்கிறாய்
உயிரே நீதான் எந்தன் உறவாகிறாய்

MATHAVE SARANAM LYRICS

மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்
கன்னி மாதாவே சரணம்
மாபாவம் எமை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயே- கன்னி

மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் (2)
செபம் செய்வோம் தினம் செபமாலை சொல்வோம் – 2
பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம் -மாதாவே

நானிலத்தில் சமாதானமே நிலவ
நானிலமெல்லாம் துன்பங்கள் ஒழிய (2)
உயிர் உடல் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் – 2
உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம் -மாதாவே

VIDIYALAI THEDUM NENJANKALAE LYRICS

விடியலைத் தேடும் நெஞ்சங்களே
விடியாக் கனவின் சொந்தங்களே --2
நமக்கொரு தாய் இருக்கின்றாள்
வாருங்கள் அவளிடம் செல்வோம் --2

இருள் சூழும் உலகினிலே ஒளிதேடி அலையுது நெஞ்சம்
கீழ்வானம் சிவக்குமென்று உறங்காது ஏங்குது நெஞ்சம் --2
தாயவள் அழகு பொற்சித்திரம்
கீழ்வானின் நம்பிக்கை நட்சத்திரம் --2

புயலாக துன்பங்களும் இதயத்தின் கரையினில் மோதும்
மலராத மொட்டுகளாய் இதயத்தில் இன்பங்கள் வாழும் --2
வாழ்வினில் என்றும் போராட்டமே
தாயவள் அன்பில் தேரோட்டமே என்றும் தேரோட்டமே

AROKIYA THAAYE AADHARAM NEEYE LYRICS

ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே  --2
தீராத துயர் போக்கும் மரியே எம் பரிவே
ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே

தீராத போராட்ட வாழ்க்கை எங்கள்
திகில் போக்க வரவேண்டுமே..!
கரை சேராத ஓடங்கள் ஆனோம் எம்மை
சிறை மீட்க வர வேண்டுமே..!  -- 2
வேறெங்கு போவோம் வினை தீர வேண்டி
நீர் எங்கள் நிறைவான தயவானதாலே  --ஆரோக்கியத் தாயே

உனை நம்பி வந்தோரில் யாரும் இங்கு
ஏமாந்த கதை இல்லையே
எங்கள் தாய் உன்னை தினம் போற்றும் நெஞ்சில்
ஒரு துளியேனும் துயர் இல்லையே..!   --2
விடியாத வாழ்வின் விடிவெள்ளியாக
விளங்கும் எம் தாயே உன் துணை வேண்டினோம்  --ஆரோக்கியத் தாயே

MATHA UN KOVILIL LYRICS

மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னைத் தான் - 2
பிள்ளைக்குக் காட்டினேன் மாதா

மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே - 2
மேரி உன் ஜோதி கொண்டால் விதிமாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா - மாதா

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே - 2
கரை கண்டிலாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ - மாதா

பிள்ளை பெறாத பெண்மை தாயானது - 2
அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா

IDAIVIDA SAHAYA MATHA LYRICS

இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா 
பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள் 
நிதம் துணை சேர்ப்பாயே - 2

ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் - அன்னை 
தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் - 2 
மாறாத கொடுமை நீங்காத வறுமை 
தானாக என்றுமே மாற்றிடுவாள் - 2

கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி 
உள்ளம் திறந்து சொல் உன் கதையை - 2 
வெள்ளம் போல அருள் கருணை பாய்ந்திட 
தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய் - 2

Amma Anbin Sikaram Nee

அம்மா அன்பின் சிகரம் நீ
அருளைப் பொழியும் முகிலும் நீ
அம்மா அழகின் முழுமை நீ
அம்மா என்றதும் கனிபவள் நீ
அம்மா அன்பின் சிகரம் நீ

மாசுடன் பிறந்த மனுக்குலத்தில்
மாசின்றிப் பிறந்த மாணிக்கம் நீ  -2
இயேசுவை அணைத்த கரங்களினால்
சேயரை அணைத்திடாய்த் தாய்மரியே

புழுதியில் பிறந்தோர் புழுதி சென்றார்
பழுதிலா உனக்கோர் அழிவுண்டோ  -2
மனிதனின் மாளிகை தகர்ந்துவிடும்
மாபரன் ஆலயம் தகர்தலுண்டோ

Katthum Alaikadal Oorathilae

அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர்
இன்று புவியெல்லாம் நீள்கடலாய் ஆனதம்மா
ஒன்றுதான் தெய்வமென உலகிற்குக் காட்டிடவே
இறைவனைக் குழந்தையாய் இடையில் சுமந்தவளே
 
கத்தும் அலைகடல் ஓரத்திலே அன்புத்தாங்கியே வந்தவளே - 2
சித்தம் இரங்கியே வேளைநகர் வந்தே
ஆரோக்கியம் தந்தவளே அம்மா - 2

வித்தகன் இயேசுவைப் பெற்றவள் நீயே
உத்தமர்க்கெல்லாம் நீ உற்றவள் தாயே - 2
சத்திய சன்மார்க்கம் தழைக்கச் செய்தாயே - 2
இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீயே
இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீ

நித்தம் உன் தாள் தேடி வருவார்கள் கோடி
நெஞ்செல்லாம் இனித்திடும் சுவையாகப் பாடி - 2
முக்திக்கு வழிசொன்ன இறைமகன் தாயே - 2
சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீயே
சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீ

Alaikadalin Oosaiyilae

அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மா
அன்னையவள் ஆலயத்தில் அருள் நிறைந்து காணுதம்மா --2

நொண்டி முடம் கூன் குருடு நோய்களெல்லாம் தீர்ந்திடவே --2
அண்டி வந்த அனைவருக்கும் அருள்வழங்கும் அன்னையம்மா --2

கண்கவரும் ஆலயமும் காணிக்கைப் பொருளனையும் --2
எண்ணில்லாக் கவிதைகளை என்றென்றும் கூறுதம்மா --2

வேளைநகர் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையிவள் --2
வேண்டும் வரம் தந்திடுவாள் வேதனைகள் தீர்த்திடுவாள் --2

Mathave Thunai Neerae

மாதாவே ! துணை நீரே உம்மை
வாழ்த்திப் போற்ற வரந்தாரும்
ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா !
ஏற்றன்பாக எமைப் பாரும்.

வானோர் தம் அரசே ! தாயே எம்
மன்றாட்டைத் தயவாய் கேளும்
ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல்
எக் காலத்துமே தற் காரும்.

ஒன்றே கேட்டிடு வோம் தாயே நாம்
ஓர் சாவான பவந்தானும்
என்றேனுஞ் செய்திடாமற் காத்து
எம்மைச் சுத்தர்களாய்ப் பேணும்