Monday, November 9, 2015

paadi thuthi maname kon daadi thuthi diname

பாடித் துதி மனமே பரனைக் கொன் - டாடித் துதி தினமே

நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப்     -   பாடி

1. திர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
    செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்
   மார்கமதாகக் குமாரனைக் கொண்டு
  விளக்கின அன்பை விழைந்து தியானித்துப்   -     பாடி

2.  சொந்த ஜனமாக யூதர் இருந்திட
     தொலையில் கிடந்த புற சாதியாம் எமை
     மந்தையில் சேர்த்துப் பராபரண் தம்முடை
    மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்       -  பாடி

3. எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர் ,
    எத்தனை போதகர்கள், இரத்தச் சாட்சிகள்
   எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்-கு
   இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் - பாடி