Monday, November 11, 2019

THUYARATHIL KOOPITTEN UDAVIKKAI KADHARINEN

1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்
அழுகுரல் கேட்டீரையா – 2
குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்
உமது காருண்யத்தால் – 2
குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே
உமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே – 2

2. எனது விளக்கு எரியச் செய்தீர்
இரவைப் பகலாக்கினீர் – 2
எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை – 2
எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் – 2

3. நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம்
நீர்தான் நீர்தானையா – 2
தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர்
ஆறுதல் நீர்தானையா – 2
தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே
ஆறுதல் நீர்தானையா துதிக்குப் பாத்திரரே – 2

4. சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே
மதிலைத் தாண்டிடுவேன் – 2
புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம் – 2
புகழ்ந்து பாடிடுவேன் உம்மையே உயர்த்திடுவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம் உம்மையே உயர்த்திடுவேன்

THUNBAMAA THUYARAMAA ATHU THANEERPATTA

துன்பமா துயரமா அது தண்ணீர்பட்ட உடை போன்றதம்மா
காற்றடிச்சா வெயில் வந்தா
காய்ந்து போய்விடும் கலங்காதே

1. இயேசுதான் நீதியின் கதிரவன்
உனக்காக உதயமானார் உலகத்திலே
நம்பிவா வெளிச்சம் தேடிவா
உன் துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது

2. இழந்து போனதை தேடி இயேசு வந்தார்
இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார்
எழுந்து வா போதும் பயந்தது… உன்
புயல்காற்று இன்றோடு ஓய்ந்தது

3. உன் துக்கங்கள் இயேசு சுமந்து கொண்டார்
உன் பிணிகள் எல்லாம் ஏற்றுக் கொண்டார்
நீ சுமக்க இனி தேவையில்லை
ஒரு சுகவாழ்வு இந்நாளில் துளிர்த்தது

4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பில்லை
இயேசு நாமம் சொல்லாமல் மீட்பு இல்லை
கூப்பிடு இயேசு இயேசு என்று
உன் குறைகளெல்லாம் நிறைவாக்கி நடத்திடுவார்

THUNBAMAANA VELAIYIL INBAMAANA VELAIYIL

துன்பமான வேளையில் இன்பமானவேளையில்
கஷ்டமான பாதையில் களிப்பானநேரத்தில்
என் இயேசு என்னோடு இருக்கின்றாரே
அவரே என் கன்மலை என் கோட்டையுமானார்
எந்தன் இயேசுவே -3

1. நான் நம்பும் கன்மலை என்றும்
அவரை நான் சார்ந்திடுவேன்
அவரை நான் என்றும் சார்ந்திடுவேன்… (3)

2. கலங்கினவேளையில் கண்ணீர்மத்தியில்
வியாதியின் பாதையில் புலம்பலின் நேரத்தில்
அழாதே என் மகனே, உன்னை விடுவிப்பாரே
நீ நம்பும் தேவன் உன்னை கைவிடாரே
எந்தன் இயேசுவே -3 (நான் நம்பும்)

3. ஊழியப்பாதையில் சோர்வானநேரத்தில்
பணக்கஷ்டம் வந்தாலும், சபைவளராவிட்டாலும்
திடன்கொள் மனமே கலங்கிடாதே
உன்னை அழைத்தவர் உன்னை காத்திடுவார்
எந்தன் இயேசுவே -3 (நான் நம்பும்)

DEVA PITHA ENTHAN MEIPPAN ALLOW

தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ,
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே .

அனுபல்லவி 

ஆவலதாய் எனைப் பைம்புன் மேல் 
அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ 

சரணங்கள் 

ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி 
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம் 
நிதமும் சுகமாய் நடத்துகின்றார். -தேவ 

சா நிழல் பள்ளத் திறங்கிடினும்,
சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே ;
வானபரன் என்னோடிருப்பார் ;
வளை தடியும் கோலுமே தேற்றும் .- தேவ 

பகைவர்க் கெதிரே ஒரு பந்தி 
பாங்காய் எனக்கென் றேற்படுத்திச் 
சுக தயிலம் கொண்டென் தலையைச் 
சுபமாய் அபிஷேகம் செய்குவார் ,-தேவ 

ஆயுள் முழுவதும் என் பாத்ரம் 
அருளும் நலமுமாய் நிரம்பும் ,
நேயன் வீட்டினில் சிறப்போடே ,
நெடு நாள் குடியாய் நிலைத்திருப்பேன் –தேவ

JEBA SINTHAI ENIL THAARUM DEVA

ஜெப சிந்தை எனில் தாரும், தேவா – என்னை 
அனுபல்லவி
அபயமென் றுனக் குக்கை
அளித்தேன் பொற்பாதா — ஜெப 

சரணங்கள்

1. உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச – உல
கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச,
தொன்மை ஆயக்காரன் போலஞ்ச – பவ 
தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச — ஜெப 

2. இடைவிடாமல் செய்யும் எண்ணம் – என் 
இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்,
சடமுலகப் பேயை வெல்லும் – நற் 
சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம் — ஜெப

3. ஊக்கமுடன் ஜெபம் செய்ய – தகா 
நோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய,
பேய்க்கண மோடுபோர் செய்ய – நல்
ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய — ஜெப

THEN INIMAIYILUM YESUVIN NAAMAM

தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் 
திவ்விய மதுரமாமே – அதைத் 
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே 

1. காசினிதனிலே நேசமதாகக் 
கஷ்டத்தை உத்தரித்தே – பாவக் 
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார் 
கண்டுனர் நீ மனமே — தேன் 

2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத் 
தாமே ஈந்தவராம் – பின்னும் 
நேமியாம் கருணை நிலைவரமுண்டு 
நிதம் துதி மனமே — தேன் 

3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் 
உபாயமாய் நீங்கிவிடும் – என்றும் 
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு 
கருத்தாய் நீ, மனமே — தேன் 

4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல 
துணைவராம் நேசரிடம் – நீயும் 
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார் 
ஆசை கொள் நீ மனமே — தேன் 

5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும் 
புகழ்ந்து போற்று நாமம் – அதைப் 
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில் 
புகுவாய் நீ மனமே — தேன்