Tuesday, September 29, 2015

ENDRENDRUM JEEVIPPOR ATHARISANOR

என்றென்றும் ஜீவிப்போர்
  1. என்றென்றும் ஜீவிப்போர்
அதரிசனர்
எட்டா ஒளியிலுள்ளோர் சர்வஞானர்
மா மேன்மை மகத்துவர்
அநாதியோராம்
சர்வவல்லோர் வென்றோர்
நாமம் போற்றுவோம்.

2. ஓய்வோ துரிதமோ இன்றி
ஒளிபோல்
ஒடுங்கா பொன்றா சக்தியோடாள்வதால்
வான் எட்டும் மலைபோல் உம்
நீதி நிற்கும்
அன்பு நன்மை பெய்யும்
உந்தன் மேகமும்.

3. பேருயிர் சிற்றுயிர்
ஜீவன் தேவரீர்
யாவர்க்குள்ளும் உய்வீர்
மெய்யாம் ஜீவன் நீர்
மலர் இலைபோல்
மலர்வோம் செழிப்போம்
உதிர்வோம் சாவோம்
நீரோ மாறாதோராம்.

4. மா மாட்சி பிதா தூய
ஜோதி தந்தாய்
தாழுவர் உம் தூதர்
மா வணக்கமாய்
துதிப்போம் மகத்தாய்க்
காணத் தோற்றுவீர்
கண் கூசும் ஜோதியாம்
ஜோதி தேவரீர்.

EPPADI PAADUVEN NAAN EN

எப்படி பாடுவேன் நான் - என்
இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன் - 2

1. ஒரு வழி அடையும் போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ

2. எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்iலை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்


3. கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசிர்வதித்தீர்

YERUSALEM EN AALAYAM AASITHA

1.எருசலேம் என் ஆலயம்,
ஆசித்த வீடதே@
நான் அதைக் கண்டு பாக்கியம்
அடையவேண்டுமே.

2.பொற்றளம் போட்ட வீதியில்
எப்போதுலாவுவேன்?
பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்
எப்போது பணிவேன்?

3.எந்நாளும் கூட்டம் கூட்டமாய்
நிற்கும் அம்மோட்சத்தார்
கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்
ஓய்வின்றிப் பாடுவார்.

4.நானும் அங்குள்ள கூட்டத்தில்
சேர்ந்தும்மைக் காணவே
வாஞ்சித்து, லோக துன்பத்தில்
களிப்பேன், இயேசுவே.

5.எருசலேம் என் ஆலயம்,
நான் உன்னில் வாழுவேன்@
என் ஆவல், என் அடைக்கலம்,
எப்போது சேருவேன்?

ETHAVATHU ETHAVATHU ETHAVATHU SEIYA VENDUM

ஏதாவது ஏதாவது ஏதாவது செய்ய வேண்டும்
ஒவ்வொரு நாளும்
என் இயேசு ராஜாவுக்கு

1. துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்
துரத்த வேண்டும்
சாத்தானை துரத்த வேண்டும்

2. சொல்ல வேண்டும் தேசமெங்கிலும்
சொல்ல வேண்டும்
இயேசுவின் சுவிசேஷத்தை

3. தாங்க வேண்டும் ஊழியங்களை
நமது ஜெபத்தால் நமது பணத்தால்
தாங்க வேண்டும்

oru thai thetruvathu pol en

ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் - அல்லேலூயா (4)

1. மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே

2. கரம்பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார்

3. எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே

4. ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்

Thursday, September 24, 2015

ORUNAAL VARUVAAR RAJATHI RAAJAN


ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்
  ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்
ஆயத்தமாகிடுவோம்

நம் கால மனிதர் இயேசுவை காண ஆயத்தமாகிடுவோம்
நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து வருகை மிக சமீபம்

1. தீபத்தில் எண்ணெய் வற்றாது காத்து
ஆயத்தமாகிடுவோம் தாலந்தைத் தரையில்
புதைத்துவிடாமல் ஆயத்தமாகிடுவோம் - நம் கால

2. முந்தினோர் அநேகர் பிந்தினோராவார்
ஆயத்தமாகிடுவோம் முடிவு பரியந்தம்
நிற்பவர் மகிழ்வார் ஆயத்தமாகிடுவோம் - நாம் கால

3. தேடாதே உனக்குப் பெரிய காரியம்
ஆயத்தமாகிடுவோம் தேடு தொழுவத்தில்
இல்லாத ஆடுகளை ஆயத்தமாகிடுவோம் - நம் கால

OOH BETHLEGEME SITTRURE


ஓ பெத்லெகேமே சிற்றூரே
  1. ஓ பெத்லெகேமே சிற்றூரே
என்னே உன் அமைதி!
அயர்ந்தே நித்திரை செய்கையில்
ஊர்ந்திடும் வான் வெள்ளி
விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே
உன் வீதியில் இன்றே
நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்
உன் பாலன் இயேசுவே.

2. கூறும் ஓ விடி வெள்ளிகான்
இம்மைந்தன் ஜன்மமே
விண் வேந்தர்க்கு மகிமையே
பாரில் அமைதியாம்
மா திவ்விய பாலன் தோன்றினார்
மண் மாந்தர் தூக்கத்தில்
விழித்திருக்க தூதரும்
அன்போடு வானத்தில்.

KATTUM KARTHAVE NEER KATTUM KARTHAVE


கட்டும் கர்த்தாவே நீர்
கட்டும் கர்த்தாவே
அறுந்து போகாத கயிற்றால்
கட்டும் கர்த்தாவே நீர்
கட்டும் கர்த்தாவே நீர்
கட்டும் எங்களை அன்பால்

தேவன் ஒருவராம்
இராஜனும் ஒருவரே
சரீரம் ஒன்றுதானே
பாடுவோம் ஆதலால்

Bind us together Lord
Bind us together with
Cords that cannot be broken
Bind us together Lord
Bind us together Lord
Bind us together with love

There is only one God
There is only one King
There is only one Body
That is why we sing

KANGALAI PATHIYA VAIPOM

கண்களை பதிய வைப்போம்
கர்த்தராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன் செல்லுவோம்

1. சூழ்ந்து நிற்கும் சுமைகள்
நெருங்கி பற்றும் பாவங்கள்
உதறித் தள்ளிவிட்டு
ஓடுவோம் உறுதியுடன்

2. இழிவை எண்ணாமலே
சிலுவையை சுமந்தாரே
வல்லவர் அரியணையின்
வலப்பக்கம் விற்றிருக்கின்றார்

3. தமக்கு வந்த எதிர்ப்பை
தாங்கி கொண்ட அவரை
சிந்தையில் நிறுத்திடுவோம் - மனம்
சோர்ந்து போக மாட்டோம்

4. ஓட்டத்தை தொடங்கினவர்
தொடர்ந்து நடத்திடுவார் - நம்
நிறைவு செய்திடுவார்
நிச்சயம் பரிசு உண்டு

5. மேகம் போன்ற சாட்சிகள்
நம்மை சூழ்ந்து நிற்க
நியமித்த ஓட்டத்திலே
ஓடுவோம் பொறுமையோடு

6. பாவத்திற்கு எதிராய்
போராட்டம் நமக்கு உண்டு
இரத்தம் சிந்தும் அளவு
எதிர்த்து நிற்கவில்லையே

7. தடைகள் நீக்கும் இயேசு
நமக்கு முன் செல்கிறார்
தடை செய்யும் கற்களெல்லாம்
முன்னேற்றும் படிகளாகும்

KANTHAI THUNIGALIL THAVALTHIDUM BAALAN


கந்தை துணிகளில் தவழ்ந்திடும் பாலன்
  சதபா – சதபா – ரிசகா – ரிசகா – நிக – சரி – கச – பத – மகரிசா
சரிகபா – கபதரிசா

கந்-தை துணிகளில் தவழ்ந்திடும் பா-லன்
சிந்-தை மகிழ்ந்-திடவே சங்-கீதம் பா-டிடுவோ-ம் (2)

1. பொன்மேனி பா-லகன் பிறந்தா-ர் புல்லணை மீ-தினில் பிறந்தா-ர் (2)
பாவங்கள் நீக்கிட பிறந்தா-ர் பரகதி சேர்த்திட பிறந்தா-ர்
- சதபா …. கந்தை

2. மன்னாதி மன்-னன் பிறந்தா-ர் மரியன்னை மகவாய் பிறந்தா-ர் (2)
ஏழையின் ரூபமாய் பிறந்தா-ர் உலகம் மகிழ்ந்திட பிறந்தா-ர்
- சதபா …. கந்தை

KANNI PETRA PAALANE KAN URANGU

கன்னி பெற்ற பாலனே
கண் உறங்கு
விண்ணிண்; தேவ மைந்தனே
விழி உறங்கு
ஆரிராரிரரோ (4)

1. பெத்லகேம் ஊர்தனிலே
தேவ புத்திரன் தோன்றினாரே (2)
உத்தம சத்தியரும்
மனம் மெத்த மகிழ்ந்தனரே (2)
- கன்னி

2. ஆயர்கள் ஓடி வர
மூன்று சாஸ்திரிகள் தேடி வர (2)
பாலகன் இயேசு கண்டு
அவர் பாதம் பணிந்தனரே (2)
- கன்னி

KARAIYORA KADALALAI SATHAM KAADHORA KAATHULA

கரையோர கடலலை சத்தம் - காதோர காத்துல நித்தம்
சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி..
சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி..

1. வருஷமு இரண்டாயிரமுமாச்சி அடங்கல அவியல இந்த பேச்சி
வருஷமு இரண்டாயிரமுமா– –ச்சி அடங்கல அவியல இந்த பேச்சி
மரணத்துக்கப்பாலே நிசமாவே ஒருவாழ்க்கை இருக்குதென்ற ராசாவே (2)
- கரையோர

2. கெட்டுப்போன எனக்காக பிறந்தாரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாரு
கெட்டுப்போன எனக்காக பிறந்தா– –ரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாரு
பட்டுப்போன என் வாழ்வு மலர்ந்திருச்சி - இயேசு உயிர்த்தெழுந்தார் என்ன நம்பிக்கைவைச்சி (2)
- கரையோர

3. திரும்பவும் வருவேன்னு சொன்னாருங்க சத்திய வேதத்தில் உள்ள செய்திங்க
திரும்பவும் வருவேன்னு சொன்னாருங் – –க சத்திய வேதத்தில் உள்ள செய்திங்க
வாழ்ந்தாலும் இயேசுவுக்காய் வாழ்ந்திருப்பேன் உயிர்போனாலும் அவரோடு சேர்ந்திருப்பேன் (2)
- கரையோர

KARTHARIN MAAMSAM VANTHUT KOLLUNGAL


1. கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள்
சிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள்

2. தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம்
நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம்

3. தெய்வ குமாரன், மீட்பின் காரணர்
தம் சிலுவையால் வெற்றி பெற்றவர்.

4. தாமே ஆசாரி, தாமே பலியாய்
தம்மைச் செலுத்தினார் எல்லார்க்குமாய்.

5. பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம்
இந்த ரகசியத்தின் முன்குறிப்பாம்

6. சாவின் கடூர வன்மை மேற்கொண்டார்
தம் பக்தருக்கருள் கடாட்சிப்பார்

7. உண்மை நெஞ்சோடு சேர்ந்து வாருங்கள்
ரட்சிப்பின் பாதுகாப்பை வாங்குங்கள்

8. தம் பக்தரை ஈங்காண்டு காக்கிறார்
அன்பர்க்கு நித்திய ஜீவன் ஈகிறார்.

9. விண் அப்பத்தாலே திருப்தி செய்கிறார்
ஜீவ தண்ணீரால் தாகம் தீர்க்கிறார்.

10. எல்லாரும் தீர்ப்புநாளில் வணங்கும்
அல்பா ஒமேகா நம்மோடுண்டிங்கும்.

KARTHARAI THUTHIYUNGAL AVAR KIRUBAI

கர்த்தரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

1. இம்மட்டும் நடத்தினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2
இனிமேலும் நடத்துவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2

2. இம்மட்டும் தாங்கினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2
இனிமேலும் தாங்குவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2

3. இம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2
இனிமேலும் பாதுகாப்பார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2

4. நம்பினால் கைவிடார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2
ஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது - 2

KARTHAR EN PAKKAMAGIL

1. கர்த்தர் என் பக்கமாகில்
எனக்கு பயம் ஏன்?
உபத்திரவம் உண்டாகில்
மன்றாடிக் கெஞ்சுவேன்;
அப்போதென்மேலே வந்த
பொல்லா வினை எல்லாம்
பலத்த காற்றடித்த
துரும்புபோல ஆம்.

2. என் நெஞ்சின் அஸ்திபாரம்
மேலான கர்த்தரே;
அதாலே பக்தர் யாரும்
திடன்கொள்வார்களே;
நான் ஏழைப் பலவீனன்,
வியாதிப்பட்டோனே;
அவரில் சொஸ்தம்இ ஜீவன்
சமஸ்தமும் உண்டே.

3. தெய்வாவி என்னில் தங்கி
என்னை நடத்தவே,
பயம் எல்லாம் அடங்கி
திடனாய் மாறுதே;
அப்பாவே என்று சொல்ல,
அவர் என் நெஞ்சுக்கே
ஆற்றல் சகாயம்செய்ய
என் ஆவி தேறுதே.

4. என் உள்ளமே களிக்கும்
துக்கிக்கவேண்டுமோ?
கர்த்தர் என்மேல் உதிக்கும்
பகலோன் அல்லவோ?
பரத்தில் வைக்கப்பட்ட
அநந்த பூரிப்பே
என் ஆவிக்கு பலத்த
திடன் உண்டாக்குமே.

KARTHAR ENNAI VISARIPPAR

கர்த்தர் என்னை விசாரிப்பவர்
கர்த்தர் என்னை ஆதரிப்பவர்
கர்த்தர் என்னை உயர்த்துபவர்
கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர்.

1. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னை
அவர் நித்தம் நடத்திச் செல்வதால்
எந்தன் கவலை பாரத்தை முற்றும்
அவர் மீது வைத்திடுவேன் நான்.

2. தேவன் எந்தன் பட்சத்தில் இருக்க
மனிதன் எனக்கு என்னதான் செய்வான்?
எந்தன் கண்ணீரைத் தம் துருத்தியில்
அவரின் கணக்கில் வைத்துள்ளார் அல்லோ.

3. வலது கரத்தைப் பிடித்து என்னையும்
உனது துணை நான் என்று சொல்லி
வழக்காடுவோர் அனைவரையுமே
வெட்கப்பட்டு போகச் செய்வாரே.

4. தேவன் தமது ஐசுவரியத்தினால்
எந்தன் குறைகளை எல்லாமே
கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையில்
நிறைவாக்குவாரே கவலை ஏன்?

KARTHAR NALLAVAR THUTHIYUNGAL

1. கர்த்தர் நல்லவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தாதி கர்த்தரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அற்புதம் செய்பவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

மகிழ்ந்து பாடு ஹாலேலூயா
புகழ்ந்து பாடு ஹாலேலூயா
சேர்ந்து பாடு ஹாலேலூயா
போற்றி பாடு ஹாலேலூயா
அல்லேலூயா ஆமென்
களித்து பாடு ஹாலேலூயா
துதித்து பாடு ஹாலேலூயா
அல்லேலூயா ஆமென்

2. தாழ்வில் நினைத்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
விடுதலை தந்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
ஆகாரம் தருபவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
பரத்தின் தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
…….மகிழ்ந்து பாடு
ஹாலேலூயா – (18 Times) (TWICE)

karthar naamam en pugalidame

கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்

1. யெகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
துதியுமக்கே என்றும் துதியுமக்கே

2. யெகோவாநிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

3. யெகோவா ரஃபா சுகம் தரும் தெய்வமெ
துதியுமக்கே - என்றும் துதியுமக்கே

4. யெகோவா ரூபா - எங்கள் நல்ல மேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

5. யெகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
துதியுமக்கே - என்றும் துதியுமக்கே

6. யெகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

kalippudan kooduvom kartharai naam

1. களிப்புடன் கூடுவோம்,
கர்த்தரை நாம் போற்றுவோம்
அவர் தயை என்றைக்கும்
தாசரோடு நிலைக்கும்.

2. ஆதிமுதல் அவரே
நன்மை யாவும் செய்தாரே
அவர் தயை என்றைக்கும்
மாந்தர்மேலே சொரியும்.

3. இஸ்ரவேலைப் போஷித்தார்,
நித்தம் வழி காட்டினார்
அவர் தயை என்றைக்கும்
மன்னாபோலே சொரியும்.

4. வானம் பூமி புதிதாய்
சிஷ்டிப்பாரே ஞானமாய்
அவர் தயை என்றைக்கும்
அதால் காணும் யாருக்கும்.

kaakum karangal undenakku

1. காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்

நம்பி வா இயேசுவை!
நம்பி வா இயேசுவை!

2. நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என் மேல் பறக்க
நேசர் உமக்காய் ஜீவித்திடுவேன்

3. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்க்
கர்த்தர் என்னைக் கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போல எழும்பிடுவேன்

4. அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டுமந்தை முதல் அற்றாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை

kaarirul velaiyil kadunkulir nerathil

காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலம தாய்
பாரினில் வந்த மன்னவனே உம்
மாதயவே தயவு

1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிட னானது
மாதயவே தயவு
- காரிருள்

2. விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மனுடரில் பிரியம் மலர்ந்தது உந்தன்
மாதயவே தயவு
- காரிருள்

3. விந்தை விதந்தனில் வந்தவனே,
வானவனே, நாங்கள்
தந்தையின் அன்பைக் கண்டதும் உந்தன்
மாதயவே தயவு
- காரிருள்

kaalaiyum maalaiyum evvelaiyum


காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என தூதர்
பாடிடும் தொனி கேட்குதே

1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் இரட்சிப்புமானவர்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றி திகிலின்றி
அனுதினம் வாழ்ந்திடுவேன்

2. எனக்கெதிராய் ஓர், பாளையமிறங்கி
என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான
பாதையில் நடத்திடுவார்

3. ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்து நாடிடுவேன்

4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
தேடிச் சேர்த்தென்னை மறைப்பார்
உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து
உயர்த்துவார் கன்மலைமேல்

KAAL MITHIKKUM DESAMELLAM LYRICS

கால் மிதிக்கும் தேசமெல்லாம் - என்
கர்த்தருக்குச் சொந்தமாகும்
கண்பார்க்கும் +மியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும்

1. பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி - அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம் - அல்லேலூயா

2. எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள் - அல்லேலூயா
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று - அல்லேலூயா

3. செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை - அல்லேலூயா
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை - அல்லேலூயா

4. திறக்கட்டும் திறக்கட்டும்
சுவிசேஷ வாசல்கள் - அல்லேலூயா
வளரட்டும் வளரட்டும்
அபிஷேகத் திருச்சபைகள் - அல்லேலூயா

Saturday, September 19, 2015

En karam pidithu enai nadathu

என் கரம் பிடித்து எனை நடத்து
என்னுடன் நடந்து வழி நடத்து
என் கரம் பிடித்து எனை நடத்து
வருவாய் இயேசுவே வழி துணையே
என் வாழ்கை பயணம் முழுவதுமே
என் கரம் பிடித்து எனை நடத்து

1. இருளின் ஆட்சி தொடங்கிவிட
என் இதயம் சோர்ந்து தளர்ந்துவிட (2)
என்னுடன் நீயும் இல்லாமல்
வேறு எங்கோ போவது சரிதானா?
எங்கோ போவது சரிதானா?
என் கரம் பிடித்து எனை நடத்து

2. என்னுடன் நீயும் நடந்து வந்தால்
இங்கு எல்லாம் அழகாய் மாறிவிடும் (2)
என்னுடன் நீயும் இல்லையென்றால்
என் உலகே இருளில் மூழ்கி விடும்
உலகே இருளில் மூழ்கி விடும்
என் கரம் பிடித்து எனை நடத்து
என்னுடன் நடந்து வழி நடத்து
என் கரம் பிடித்து எனை நடத்து

ADIYAR VENDAL KELUM YESUVE

1. அடியார் வேண்டல் கேளும், இயேசுவே;
உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே;
நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர்,
உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே.

2. எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர்
பந்தியில் நீரும் கூட அமர்வீர்,
எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர்,
எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர்.

3. பாலனாய் வந்த இயேசு ரட்சகா,
எம் பாலர் முகம் பாரும்,நாயகா;
தெய்வ கிருபை நற்குணம் நற்செயல்
யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே.

4. வாலிபர் நெறி தவறாமலும்,
ஈனர் இழிஞரைச் சேராமலும்,
ஞானமாய் வாழ்ந்து சீலமுடனே
நல் சேவை செய்ய நீர் அருள்வீரே.

5. மூத்தோர் முதியோர் யாரையும் அன்பாய்
காரும், உம் பலம் ஆறுதல் தாரும்;
நோயுற்றோர் பலவீனர் யாரையும்
தளர்ச்சி தீர்த்துத் தாபரித்திடும்.

6. எம் வீட்டை இந்நாள் பிரிந்து சென்று
எங்கெங்கோ தங்கும் எல்லாப் பேரையும்
அன்பாய் அணைத்து ஆதரித்திடும்
அவரைக் காத்து அல்லும் பகலும்.

7. ஆண்டாண்டாய் எங்கள் வீடு வளர,
ஆவியில் அன்பில் என்றும் பெருக,
எங்கள் நல் நாட்டில் இன்ப இல்லங்கள்
இயேசுவின் வீடாய் என்றும் பொலிக.

ADAIKALAM ADAIKALAME YESU NAADHA

அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா, உன்
அடைக்கலம் அடைக்கலமே!

அனுபல்லவி

திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு --- அடைக்கலம்

சரணங்கள்

1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,
அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;
மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! ---அடைக்கலம்

2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;
கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,
கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! --- அடைக்கலம்

3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்;
பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! --- அடைக்கலம்

4. என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ
அன்றுனது பக்கமதில் ஆகியிருந்த கள்ளனுக்கு
இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? --- அடைக்கலம்

ATHI MANGALA KAARANANE THUTHI THANGIYA

அதி-மங்கல காரணனே, துதி-தங்கிய பூரணனே, நரர்
வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!

சரணங்கள்

1. மதி-மங்கின எங்களுக்கும்,
திதி-சிங்கினர் தங்களுக்கும்
உனின் மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றிடவையாய் துங்கவனே --- அதி-மங்கல

2. முடி-மன்னர்கள் மேடையும்,
மிகு-உன்னத வீடதையும் நீங்கி
மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,
வந்தனையோ தரையில்? --- அதி-மங்கல

3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,
உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்
பெற்ற நற்கோலம் இதோ? --- அதி-மங்கல

ATHIKAALAIYILUMAI THEDUVEN MULU MANATHALE

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே

அனுபல்லவி

இதுகாறும் காத்த தந்தை நீரே;
இனிமேலும் காத்தருள் செய்வீரே,
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே! --- அதிகாலை

சரணங்கள்

1. போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!
ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?
எனக்கான ஈசனே! வான ராசனே!
இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! --- அதிகாலை

2. பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது
தப்பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,
விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? --- அதிகாலை

3. நரர்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே!
தீநாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
பரலோக ஆவியைநல் மாரி போலெனிலே பெய்யே!
புகழார நாதனே! வேத போதனே!
பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே! --- அதிகாலை

ENTHAN ULLAM THANGUM YESU NAAYAGA

1. எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா

2. மாம்சக்கிரியை போக்கும் இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா

3. திரும்ப விழாது பாரும் இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா

4. என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா
இனி நான் அல்ல , நீரே இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
இனி நான் அல்ல , நீரே இயேசு நாயகா

MAGIBANAI ANUDHINAME

மகிபனையே அனுதினமே
மகிழ்வுடனே துதித்திடுவேன் - தினம்

1. என்னை அன்பில் இணைத்திடவே
கண்டிப்பா உருவாகுமுன்னே
ஜோதியாய் தேவ மகிமையை பெறவே
தேவன் என்னை தெரிந்தெடுத்ததினால் --- மகிபனையே

2. தூதராலும் செய்யவொண்ணா
தூய பணியை அற்புதமாய்
தோசியாலும் செய்திட கிருபை
தூயன் கிறிஸ்து தந்தனரே --- மகிபனையே

3. அழைத்தாரே சுவிஷேசத்தினால்
அடைய தேவ சாயலதை
பயத்துடனே பரிசுத்தமதையே
பாரினில் பூரணமாக்கிடுவோம் --- மகிபனையே

4. ஆவலுடனே காத்திருந்தேன்
சேவை புரிவோம் இயேசுவுக்காய்
ஆசை இயேசு மணவாளன் வருவார்
சீயோனில் என்னை சேர்த்திடவே --- மகிபனையே

KANMANI NEE KANVALARAI

கண்மணி நீ கண்வளராய்
விண்மணி நீ உறங்கிடுவாய்
கண்மணி நீ கண்வளராய்
1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
நீங்கும் துன்பம் நித்திரை வர
ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட
தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்
கந்தை துணி பொதிந்தாயோ

2. சின்ன இயேசு செல்லப்பாலனே
உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே
என்னைப் பாரும் இன்ப மைந்தனே
உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற
ஏழை மகவாய் வந்தனையோ

3. வீடும் இன்றி முன்னனைதானோ
காடும் குன்றும் சேர்ந்ததேனோ
பாடும் கீதம் கேளாயோ நீயும்
தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய
ஏழ்மைக் கோலம் கொண்டனையோ

ANUGRAGHA VAARTHAIYODE IPPOTHU

1. அனுக்ரக வார்த்தையோடே - இப்போது
அடியாரை அனுப்புமையா!
மனமதில் தயவுறும் மகத்துவபரனே!
வந்தனம் உமக்காமென்.

2. நின்திரு நாமமதில் - கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்.

3. தோத்திரம், புகழ், மகிமை, - கீர்த்தி,
துதிகனம் தினமுமக்கே
பாத்திரமே; அதிசோபித பரனே!
பாதசரண் ஆமென்!

ANBIN DEVA NARKARUNAIYILE

அன்பின் தேவ நற்கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையின் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்

1. அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
பொற்புடன் அப்ப குண ரசத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்

2. கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும்
நற் கருணை விஸ்வாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
இளமையின் பொலிவால் திருச்சபையும்
யாவரும் வாழ தயை புரிவீர்

ANBIN DEVAN YESU UNNAI ALAIKIRAR

அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்
கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
உன்னை எண்ணி உள்ளம் நொந்து
அணைக்க ஏசு துடிக்கிறார்
கவலையேன் கலக்கமேன் கர்த்தர் ஏசு அழைக்கிறார்

சரணங்கள்

1. மனிதர்கள் அன்பு மாறலாம்
மறைவாக தீது பேசலாம்
அன்பு காணா இதயமே
அன்பின் தேவனை அண்டிக்கொள் --- அன்பின்

2. வியாதிகள் தொல்லையோ தோல்வியோ
வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
கலங்காதே மன்னன் ஏசு பார் --- அன்பின்

3. வேலை வசதிகள் இல்லையோ
வீட்டினில் வறுமை தொல்லையோ
மரண பயமும் நெருங்குதோ
மரணம் வென்ற ஏசு பார் --- அன்பின்

ANBIL ENNAI PARISUTHANAAKKA

1. அன்பில் என்னை பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற்பேறானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ

பல்லவி

என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்

2. மரித்தோரில் முதல் எழுந்ததினால்
புது சிருஷ்டியின் தலையானீரே
சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே
ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை --- என்

3. முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேராய் நீர் இருக்க
ஆவியால் அபிஷேகத்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர --- என்

4. வருங்காலங்களில் முதற்பேராய்
நீர் இருக்க நாம் சோதரராய்
உம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிருஷ்டியிலே --- என்

5. நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
நான் எப்படி பதில் செய்குவேன்
உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
என்னை தந்தேன் நடத்திடுமே --- என்

ANBURUVAAM EM AANDAVA

1. அன்புருவாம் எம் ஆண்டவா,
எம் ஜெபம் கேளும், நாயகா;
நாங்கள் உம் ராஜ்ஜியம் ஆண்டாண்டும்
பாங்குடன் கட்ட அருளும்.

2. வாலிபத்தில் உம் நுகமே
வாய்மை வலுவாய் ஏற்றுமே,
வாழ்க்கை நெறியாம் சத்தியம்
நாட்ட அருள்வீர் நித்தியம்.

3. அல்லும் பகலும் ஆசையே
அடக்கி ஆண்டு, உமக்கே;
படைக்க எம்மைப் பக்தியாய்
பழுதேயற்ற பலியாய்.

4. சுய திருப்தி நாடாதே,
உம் தீர்ப்பை முற்றும் நாடவே;
வேண்டாம் பிறர் பயம் தயை,
வீரமாய்ப் பின் செல்வோம் உம்மை.

5. திடனற்றோரைத் தாங்கிட,
துக்கிப்பவரை ஆற்றிட;
வாக்கால் மனத்தால் யாரையும்
வருத்தா பலம் ஈந்திடும்.

6. எளிதாம் வாழ்க்கை ஏங்கிட,
தீங்கற்ற இன்பம் தேடிட,
மன்னிக்க முற்றும் தீமையை
நேசிக்க மனு ஜாதியை.

VAARUMAIAH POTHAGARA VANTHEMIDAM

வாருமையா போதகரே, வந்தெம்மிடம் தங்கியிரும்
சேருமையா பந்தியினில் சிறியவராம் எங்களிடம்

ஒளி மங்கி இருளாச்சே உத்தமனே வாருமையா
களித்திரவு காத்திருப்போம் காதலனே கருணை செய்வாய்

ஆதரையிலென் ஆறுதலே அன்பருக்குச் சதா உறவே
பேதையர்க்குப் பேரறிவே பாதை மெய் ஜீவ சற்குருவே

நாமிருப்போம் நடுவிலென்றீர் நாயனுன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய தற்பரனே நலம் தருவாய்

உந்தன் மனை திருச்சபையை வையமெங்கும் வளர்த்திடுவாய்
பந்த மற பரிகரித்தே பாக்கியமளித் தாண்டருள்வாய்

பாடும் தேவதாசரின் கவி பாரினில் கேட்டனுதினமும்
தேடும் தொண்டர் துலங்கவுந்தன் திவ்ய ஆவி தந்தருள்வாய்

THUTHIYUNGAL DEVANAI

துதியுங்கள் தேவனை
துதியுங்கள் தூயோனை (2)

1. அவரது அதிசயங்களை பாடி
அவர் நாமத்தை பாராட்டி,
அவரை ஆண்டவர் என்றறிந்து
அவரையே போற்றுங்கள் (2)

ஆப்ரகாமின் தேவனை
ஈசாக்கின் தேவனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள் --- துதியுங்கள்

2. இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை
இடையூட்டினை போக்கினோனே
கானானின் தேசத்தை காட்டினோனே
கர்த்தரை போற்றுங்கள் (2)

ராஜாதி ராஜனை
கர்த்தாதி கர்த்தனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள் --- துதியுங்கள்

ANBULLA YESAIAH

அன்புள்ள இயேசையா
உம் பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளி பிறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும்

1. காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை
நாடி என்னை தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் --- அன்புள்ள

2. பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
நாடி என்னை தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் --- அன்புள்ள

3. தாகம் தீர ஜீவத் தண்ணீர்
உள்ளங்கையில் என்னையும் கண்டீர்
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் --- அன்புள்ள

ANBE ANBE ANBE AARUYIR

அன்பே ! அன்பே ! அன்பே !
ஆருயிர் உறவே
ஆனந்தம் ! ஆனந்தமே !

சரணங்கள்

1. ஒருநாள் உம் தயை கண்டேனையா
அந்நாளென்னை வெறுத்தேனையா
உம்தயை பெரிதையா - என் மேல்
உம் தயை பெரிதையா --- அன்பே

2. பரலோகத்தின் அருமைப் பொருளே ,
நரலோகரி லன்பேனையா ?
ஆழம் அறிவேனோ - அன்பின்
ஆழம் அறிவேனோ --- அன்பே

3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே - எனையும்
அணைத்தீர் அன்பாலே --- அன்பே

4. பூலோகத்தின் பொருளில் மகிமை
அழியும் புல்லின் பூவைப் போல
வாடாதே ஐயா - அன்பு
வாடாதே ஐயா --- அன்பே

5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற் கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ - பரத்தில்
இசைக்கவும் எளிதாமொ --- அன்பே

ANBE PIRATHANAM SAGOTHARA

அன்பே பிரதானம் - சகோதர
அன்பே பிரதானம்

சரணங்கள்

1. பண்புறு ஞானம் - பரம நம்பிக்கை,
இன்ப விஸ்வாசம் - இவைகளிலெல்லாம் --- அன்பே

2. பலபல பாஷை - படித்தறிந்தாலும்,
கல கல வென்னும் - கைம்மணியாமே --- அன்பே

3. என் பொருள் யாவும் - ஈந்தளித்தாலும்,
அன்பிலையானால் - அதிற்பயனில்லை --- அன்பே

4. துணிவுடனுடலைச் - சுடக்கொடுத்தாலும்,
பணிய அன்பில்லால் - பயனதில்லை --- அன்பே

5. சாந்தமும் தயவும் - சகல நற்குணமும்,
போந்த சத்தியமும் - பொறுமையுமுள்ள --- அன்பே

6. புகழிறு மாப்பு - பொழிவு பொறாமை,
பகைய நியாயப் - பாவமுஞ் செய்யா --- அன்பே

7. சினமடையாது - தீங்கு முன்னாது,
தினமழியாது - தீமை செய்யாது --- அன்பே

8. சகலமுந் தாங்கும் - சகலமும் நம்பும்,
மிகைபட வென்றும் - மேன்மை பெற்றோங்கும் --- அன்பே

ARASANAI KAANAMALIRUPPOMO NAMADHU

அரசனைக் காணமலிருப்போமோ? - நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ?

அனுபல்லவி

பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? - யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ? - யூத

சரணங்கள்

1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, - இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! - யூத --- அரசனை

2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! - மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்
பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! - யூத --- அரசனை

3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! - அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! - நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! - யூத --- அரசனை

4. அரமனையில் அவரைக் காணோமே! - அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே!
மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, - பெத்லேம்
வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்! - யூத --- அரசனை

5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, - ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே!
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், - தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல், - யூத --- அரசனை

ARUL YERALAMAI PEIYUM

1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
உறுதி வாக்கிதுவே!
ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையை உயிர்ப்பிக்குமே

பல்லவி

அருள் ஏராளம்
அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாயல்ல
திரளாய்ப் பெய்யட்டுமே

2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
மேகமந்தார முண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரிப்புமாம் --- அருள்

3. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
இயேசு ! வந்தருளுமேன் !
இங்குள்ள கூட்டத்திலேயும்
கிரியை செய்தருளுமேன் --- அருள்

4. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே --- அருள்

ARPANITHEN ENNAI MUTTRILUMAI

1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்

பல்லவி

அனைத்தும் கிறிஸ்துவுக்கே - எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
என் முழு தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே
2. என் எண்ணம் போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்ட தாருமில்லை
உம் சிலுவை அன்பை சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்

3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான் புவி கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்

4. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம் பணி சிறந்திட முற்றும் தந்தேன்

ARUPPU MIGUTHI RAAJAVE ULIYAM

1. அறுப்பு மிகுதி ராஜாவே
ஊழியர் தந்திடும்
வெறுப்பில் அலையும் ஜனத்தின் மேல்
எம் பொறுப்பை உணர்த்திடும்

பல்லவி

இந்தியாவில் கோடி கோடி
உம்மை அறியாரே
என்னை அனுப்பும் ராஜாவே
நீர் என்னை அனுப்பிடும்
2. பாதாள சேனை இன்னும் இன்னும்
ஜெயிக்க விடாதிரும்?
சேனை வீரராய் வாலிபர் பலர்
எழும்பச் செய்திடும்

3. யாரை அனுப்ப யார் போவார்
என்றலையும் இயேசுவே
என்னை உந்தன் கண்கள் காண
உம்முன் நிற்கிறேன்

4. மெய் வீரனாக ராஜாவே
நான் எழுந்து வருகிறேன்
கோதுமை மணியாக மாற
என்னைப் படைக்கிறேன்

KALVAARI SILUVAI NAADHA

கல்வாரி சிலுவை நாதா
காரிருள் நீக்கும் தேவா

அனுபல்லவி

பல்வினை பலனாம் பாவம்
புரிந்தவர் எமைக்கண் பாரும் (2) --- கல்வாரி

சரணங்கள்

1. மன்னுயிர் மீட்கும் அன்பால்
தன் உயிர் மாய்த்தாய் அன்பே
மன்பதை மாந்தர் முன்னால்
தரணியை இழுத்தாய் நின்பால் (2) --- கல்வாரி

2. தூயவன் நின்னை கண்டோர்
தீ உள்ளம் தெளிந்தே நிற்பார்
சேய் உள்ளம் தந்தாய் அருளாய்
வாய் உள்ளம் தந்தேன் புகழாய் (2) --- கல்வாரி

ALLELUJAH KARTHARAIYE YEGAMAI THUTHIYUNGAL

1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்

பல்லவி

இராஜாதி இராஜனாம் இயேசுராஜன்
பூமியில் ஆட்சி செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
தேவனைத் துதியுங்கள்
2. தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் , கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள்

3. சூரியனே , சந்திரனே தேவனைத் துதியுங்கள்
ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
அக்கினியே , கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள்

4. பிள்ளைகளே , வாலிபரே தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
பெரியவரே , பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்

5. ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள்

SANTHOSA GEETHAM ENNIL PONGUTHE

1. சந்தோஷ கீதம் என்னில் பொங்குதே
சர்வ வல்ல ஏசு என்னை நேசித்தார்
பெற்றதாம் நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணியே
பேரன்பு பொங்க என்றும் பாடுவேன்

ஆர்ப்பரித்து நான் ஆனந்தங் கொள்வேன்
ஆண்டவர் சமூகம் என்னைத் தேற்றுமெ
துன்பங்கள் யாவுமே துரிதமாய் நீங்குதே
இன்ப இயேசு நாமத்தில்

2. பேரின்ப கீதம் என்னில் பொங்குதே
போன நாட்கள் என்னைக் கர்த்தர் தாங்கினார்
சோதனை சூழ்ந்து என் நம்பிக்கை குன்றினும்
சோர்ந்தழியாமல் என்றும் காத்ததால் --- ஆர்ப்பரி

3. இரட்சிப்பின் கீதம் என்னில் பொங்குதே
இரட்சகர் என் பாவம் முற்றும் மன்னித்தார்
மானிடர் மாறினும் அன்பை விட்டோடினும்
மாதேவ அன்பில் என்னைக் காத்ததால் --- ஆர்ப்பரி

4. ஆனந்த கீதம் என்னில் பொங்குதே
ஆரவாரத்தோடே இயேசு தோன்றுவார்
ஆவலாய் விழித்தே ராவிலும் ஜெபித்தே
ஆயத்தமாய் நான் காத்து நிற்பதால் --- ஆர்ப்பரி

5. சீயோனின் கீதம் என்னில் பொங்குதே
சீக்கிரம் வந்தென்னை சேர்த்துக் கொள்வார்
பொன்முடி வேந்தனாம் எந்தை என் இயேசுவின்
பொன் மாளிகை நான் கிட்டிச்சேர்வதால் --- ஆர்ப்பரி

Tuesday, September 15, 2015

allelujah allelujah allelujah ippo por mudinthathe

1. அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா!
இப்போது போர் முடிந்ததே;
சிறந்த வெற்றி ஆயிற்றே;
கெம்பீர ஸ்துதி செய்வோமே.
அல்லேலூயா!

2. கொடூர சாவை மேற்கொண்டார்;
பாதாள சேனையை வென்றார்;
நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்.
அல்லேலூயா!

3. இந்நாள் எழுந்த வேந்தரே,
என்றைக்கும் அரசாள்வீரே;
களித்து ஆர்ப்பரிப்போமே!
அல்லேலூயா!

4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர்
மரித்துயிர்த்திருக்கிறீர்;
சாகாத ஜீவன் அருள்வீர்.
அல்லேலூயா!

ALAGAI NIRKUM YAAR IVARGAL

அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?

சரணங்கள்

1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ பெரிதானதோ
பெற்ற பணி செய்து முடித்தோர் --- அழகாய்

2. காடு மேடு கடந்து சென்று
கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாக ஜெபித்தவர்கள் --- அழகாய்

3. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் --- அழகாய்

4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர் --- அழகாய்

5. வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு
வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று --- அழகாய்

6. இனி இவர்கள் பசி அடையார்
இனி இவர்கள் தாகமடையார்
வெயிலாகிலும் அனலாகிலும்
வேதனையை அளிப்பதில்லை --- அழகாய்

7. ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை
அற அகற்றித் துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப் பருக இயேசு தாமே --- அழகாய்

ALAIKIRAR ALAIKIRAR ANBAI INDRE UNNAI

அழைக்கிறார் அழைக்கிறார்
அன்பாய் இன்றே உன்னை
கல்லும் கரையும் கல்வாரியண்டை
கர்த்தர் அழைக்கிறார்

சரணங்கள்

1. கேட்டின் மகன் கெட்டழிந்தான்
கெட்ட குமாரனைப்போல்
பாவத்தின் சம்பளம் மரணமே
பாவத்தில் மாளாதே --- அழைக்கிறார்

2. உந்தன் நீதி கந்தையாகும்
உன்னில் நன்மை ஒன்றில்லை
பாவஞ் செய்தே மகிமையிழந்தாய்
பாவியை நேசித்தார் --- அழைக்கிறார்

3. பாவங்களை மறைப்பவன்
பாரில் வாழ்வை அடையான்
சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும்
சங்காரம் அடைவார் --- அழைக்கிறார்

4. நானே வழி சத்தியமும்
நித்திய ஜீவன் என்றார்
இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால்
இரட்சணியம் அடைவாய் --- அழைக்கிறார்

5. காலங்களும் கடந்திடும்
வால வயதும் மாறும்
தேவனைச் சந்திக்கும் வேளையிதே
தேடி நீ வாராயோ --- அழைக்கிறார்

ALAIKIRAR ALAIKIRAR ITHO NEEYUM VAA

அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் - இதோ

சரணங்கள்

1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே
கண்டிடும் , வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும் --- அழைக்கிறார்

2. நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்
நேசர் உந்தன் நோய்களை நிச்சயமாய் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார் --- அழைக்கிறார்

3. துன்பம் சகித்தவர் , துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே அண்ணல் யேசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே துரிதமாக வாராயோ --- அழைக்கிறார்

4. அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார்
சொந்தமாகச் சேர்ந்திட இந்தப் பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ --- அழைக்கிறார்

5. கல்லறைத் திறக்கக் காவலர் நடுங்கக்
கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் , ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே --- அழைக்கிறார்

6. சாந்த சொரூபனே ! சத்திய வாசனே !
வஞ்சமற்ற வாயனே வந்தணைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே தந்துனை அழைக்கிறார் --- அழைக்கிறார்

KANGAL PANNIR THARUM ULLAM VANDHU VIDUM

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்
தெய்வ திருமகவே
உன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு
ஏழைப் பாடுகின்றேன் - (2)
கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ

1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்
உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் - (2) --- கண்கள்

2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு
இது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் - (2) --- கண்கள்

AVAR ARPUTHAR ENDRANARE

அவர் அற்புதர் என்றனரே (2)
விண் சூரிய சந்திரநட்சத்திரங்கள்
அவர் அற்புதர் என்றனரே (2)

1. அவர் அற்புதமானவரே (2)
அவர் மீட்டென்னை
காத்தென்னை தாங்குகிறார்
அவர் அற்புதமானவரே (2)

2. அவர் அற்புத வைத்தியரே
அவர் தழும்புகளால்
குணமாக்கினாரே
அவர் அற்புத வைத்தியரே

Monday, September 14, 2015

AA INBA ILLAME NEE ENDRUM

1. ஆ இன்ப இல்லமே! நீ என்றும்
தழைத்து வாழ்க;
அன்புடன் பாலர் யாரும் அங்கு
ஐக்கியமாய் ஓங்க;
அன்னை தந்தை
ஆவலாய்ப் பாலகரை
ஆண்டவன் பாதம் படைக்க.

2. ஆ இன்ப இல்லமே! உன் செல்வம்
சுகம் தழைக்க;
உன் மக்கள் யாவரும் ஓர் வேலை
உகந்து செய்ய;
பக்தியுடன்
பற்பல சேவை ஆற்றி,
கர்த்தன் அருள் பெற்று ஓங்க.

3. ஆ இன்ப இல்லமே! நன்மை
பெருகும் அந்நாளில்
ஆண்டவர் நாமத்தை ஆர்வ
நன்றியுடன் போற்று;
துன்பம் துக்கம்
துயரம் தொடர் நாளில்
அன்றும் அவரைக் கொண்டாடு.

4. ஆ இன்ப இல்லமே! உன்
உண்மை நண்பர் கிறிஸ்தேசு;
அன்பர் அவர் பிரசன்னம் உன்னை
என்றும் நடத்தும்;
இவ்வாழ்வின்பின்
உன் மக்களை அவரே
விண்ணோடு சேர்த்துக் காப்பாரே.

AA YESUVE NAAN BOOMIYIL

1. ஆ இயேசுவே, நான் பூமியில்
உயர்த்தப்பட்டிருக்கையில்
எல்லாரையும் என் பக்கமே
இழுத்துக்கொள்வேன் என்றீரே.

2. அவ்வாறென்னை இழுக்கையில்,
என் ஆசை கெட்ட லோகத்தில்
செல்லாமல்; பாவத்தை விடும்,
அநந்த நன்மைக்குட்படும்.

3. தராதலத்தில் உம்முடன்
உபத்திரவப்படாதவன்
உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்;
சகிப்பவன் சந்தோஷிப்பான்.

4. பிதாவின் வீட்டில் தேவரீர்
ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்;
அங்கே வசிக்கும் தூயவர்
இக்கட்டும் நோவும் அற்றவர்.

AA YESUVE UMMALE NAAN

1. ஆ இயேசுவே, உம்மாலே
நான் மீட்கப்பட்டவன்;
உம் திவ்விய ரத்தத்தாலே
நான் சுத்தமானவன்;
மிகுந்த கஸ்தியாலே
என் தோஷத்தைத் தீர்த்தீர்;
உமது சாவினாலே
நீர் என்னை ரட்சித்தீர்.

2. நான் உம்மால் என்றும் வாழ,
இப்பந்தியில் நீரே
என் ஆவிக் கேற்றதான
அமிர்தம் தந்தீரே;
உம் ஆசீர்வாதம் ஈந்து,
என் பாவம் மன்னியும்;
அன்போடு என்னைச் சேர்த்து,
தயாளம் காண்பியும்.

3. நீர் இன்னும் என்னில் காணும்
பொல்லாங்கு யாவையும்
அகற்றிப்போட வாரும்,
என் நெஞ்சில் தங்கிடும்;
நான் உம்மைப் பற்றிக் கொள்ள
கருணை புரியும்;
மிகுந்த தாழ்மையுள்ள
சித்தம் கடாஷியும்.

4. நல் மீட்பரே, உம்மோடு
நான் ஐக்கியமாகவும்,
நாடோறும் வாஞ்சையோடு
உம்மில் நிலைக்கவும்,
மிகுந்த அன்பினாலே
துணை செய்தருளும்;
தெய்வீக அப்பத்தாலே
நீர் என்னைப் போஷியும்.

AA YESUVE NEER EN BALIYANEER

1. ஆ இயேசுவே, நீர்
என் பலியானீர்;
பாவி உம்மை அகற்ற, கல்வாரி சென்றீர்;
மன்றாடிடுவீர்
இப்பாவிக்காய் நீர்;
என்னைக் கொன்றோருக்காய்
உயிர் ஈந்தேன் என்பீர்.

2. இறங்கிடுமேன்,
அகற்றிடுமேன்
உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை;
சிலுவை அன்பால்
என்னை இழுத்தால்
ஆவேன் விடுதலை பாவியாம்
அடிமை.

3. கோபம் பெருமை
போக்கும் சிலுவை;
அகற்றுமே தூய ரத்தமும்
தோஷத்தை;
தீய மனத்தை
பாவ பாரத்தை
அகற்றி, ரத்தத்தால் சேர்த்திடும்
உம்மண்டை.

4. தூய வெண்மையே
இப்போ இப்போதே;
உந்தன் ரத்தத்தால் தூய்மையாவேன் பாவியே;
தூயோன் ஆக்குவீர்
முற்றும் மாற்றுவீர்;
உந்தன் சாயல் என் வாழ்க்கையில்
உண்டாக்குமே.

5. உம் ரத்தம் என்னில்
நிலைத்திருப்பின்,
ஒழிந்திடும் எப்பாவம் பலவீனமும்
பிதாவின் முன்னர்
சகாயராம் நீர்,
சுதா, பாவியேனை உம் அன்பால்
வாழ்விப்பீர்.

AA KARTHAVE THALMAIYAGA

1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக
திருப் பாதத்தண்டையே
தெண்டனிட ஆவலாக
வந்தேன், நல்ல இயேசுவே;
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.

2. வல்ல கர்த்தாவினுடைய
தூய ஆட்டுக்குட்டியே,
நீரே என்றும் என்னுடைய
ஞான மணவாளனே;
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.

3. என் பிரார்த்தனையைக் கேளும்,
அத்தியந்த பணிவாய்;
கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்
உம்முடைய பிள்ளையாய்;
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.

AA BAKIYA DEIVA BAKTHARE

1. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
உம் நீண்ட போர் முடிந்ததே;
வெற்றிகொண்டே, சர்வாயுதம்
வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
இயேசுவின் பாதத்தில் வாழ்வீர்.

2. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
மா அலுப்பாம் பிரயாணத்தை
முடித்து, இனி அலைவும்
சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
நல் வீட்டில் இளைப்பாறுவீர்.

3. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே;
இப்போதபாய புயலும்
உம்மைச் சேராது கிஞ்சித்தும்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
இன்பத் துறையில் தங்குவீர்.

4. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
உம் மேனி மண்ணில் தூங்கவே,
மாண்பாய் எழும்புமளவும்
விழித்துக் காத்துக்கொண்டிரும்;
சீர் பக்தரே, மகிழ்ந்து நீர்
நம் ராஜா வருவார் என்பீர்.

5. கேளும், தூயோரின் நாதரே,
பரிந்து பேசும் மீட்பரே,
வாழ் நாள் எல்லாம், நல்லாவியே,
சீர் பக்தரோடு நாங்களும்
மேலோகில் சேரச் செய்திடும்.

AA AMBARA UMBARAMUM PUGALNTHIRU

ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்

அனுபல்லவி

ஆதிபன் பிறந்தார் - அமலாதிபன் பிறந்தார்

சரணங்கள்

1. அன்பான பரனே! - அருள் மேவுங் காரணனே! - நவ
அச்சய சச்சித - ரட்சகனாகிய
உச்சிதவரனே! --- ஆ! அம்பர

2. ஆதம் பவமற, - நீதம் நிறைவேற, - அன்று
அல்லிராவினில் - தொல்லையிடையினில்
புல்லணையிற் பிறந்தார். --- ஆ! அம்பர

3. ஞானியர் தேட , - வானவர் பாட , -மிக
நன்னய , உன்னத - பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார். --- ஆ! அம்பர

4. கோனவர் நாட , - தானவா கொண்டாட - என்று
கோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே , யூத
கோத்திரன் பிறந்தார். --- ஆ! அம்பர

5. விண்ணுடு தோண , - மன்னவர் பேண , - ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார். --- ஆ! அம்பர

AADHARAM NEE THAN IYYA EN THURAIYE

ஆதாரம் நீ தான் ஐயா , என்துரையே,
ஆதாரம் நீ தான் ஐயா

அனுபல்லவி

சூதாம் உலகில்நான் தீதால் மயங்கையில்

சரணங்கள்

1. மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
மற்றோர்க்குப் பற்றேதையா , எளியன்மேல்,
மற்றோர்க்குப் பற்றேதையா , எளியனுக்கு --- ஆதாரம்

2. நாம் , நாம் துணையென நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா ; தனியனை
நட்டாற்றில் விட்டாரையா ; தனியனுக்கு --- ஆதாரம்

3. கற்றோர் பெருமையே , மற்றோர் அருமையே
வற்றாக் கிருபை நதியே , என்பதியே
வற்றாக் கிருபை நதியே , என்பதியே --- ஆதாரம்

4. சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே,
துக்கம் மிகுவேளையில் , உன் தாசனுக்கு --- ஆதாரம்

AATHI THIRUVAARTHAI DIVYA

ஆதித் திருவார்த்தை திவ்விய
அற்புதப் பாலகனாகப் பிறந்தார்;
ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட

அனுபல்லவி

மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்,
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,
மின்னுச்சீர் வாசகர் , மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
தாம் , தாம் , தன்னரர் வன்னரர்
தீம் , தீம் , தீமையகற்றிட
சங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட --- ஆதி

சரணங்கள்

1. ஆதாம் சாதி ஏவினர் ; ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷனத்தானுதித்தார். --- ஆதி

2. பூலோகப் பாவ விமோசனர் , பூரண கிருபையின் வாசனர்,
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் --- ஆதி

3. அல்லேலூயா! சங்கீர்த்தனம் , ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் , தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார் --- ஆதி

AA ENNIL NOORU VAAYUM NAAVUM

1. ஆ, என்னில் நூறு வாயும் நாவும்
இருந்தால், கர்த்தர் எனக்கு
அன்பாகச் செய்த நன்மை யாவும்,
அவைகளால் பிரசங்கித்து,
துதிகளோடே சொல்லுவேன்,
ஓயா தொனியாய்ப் பாடுவேன்.

2. என் சத்தம் வானமளவாக
போய் எட்டவேண்டும் என்கிறேன்;
கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாக
என் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;
ஒவ்வொரு மூச்சும் நாடியும்
துதியும் பாட்டுமாகவும்.

3. ஆ, என்னில் சோம்பலாயிராதே,
என் உள்ளமே நன்றாய் விழி;
கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதே
கருத்துடன் இஸ்தோத்திரி;
இஸ்தோத்திரி, என் ஆவியே,
இஸ்தோத்திரி, என் தேகமே.

4. வனத்திலுள்ள பச்சையான
எல்லா வித இலைகளே,
வெளியில் பூக்கும் அந்தமான
மலர்களின் ஏராளமே,
என்னோடேகூட நீங்களும்
அசைந்திசைந்து போற்றவும்.

5. கர்த்தாவால் ஜீவன் பெற்றிருக்கும்
கணக்கில்லா உயிர்களே,
பணிந்து போற்ற உங்களுக்கும்
எந்நேரமும் அடுக்குமே;
துதியாய் உங்கள் சத்தமும்
ஓர்மித் தெழும்பி ஏறவும்.

AA SAGOTHARAR ONDRAI YEGAMAANA

1. ஆ, சகோதரர் ஒன்றாய்
ஏகமான சிந்தையாய்
சஞ்சரித்தல், எத்தனை
நேர்த்தியான இனிமை.

2. அது ஆரோன் சிரசில்
வார்த்துக் கீழ்வடிகையில்,
கந்தம் வீசும் எண்ணெயே,
போன்றதாயிருக்குமே.

3. அது எர்மோன்மேலேயும்
சீயோன் மேடுகளிலும்
பெய்கிற ஆகாசத்து
நற்பனியைப்போன்றது.

4. அங்கேதான் தயாபரர்
ஆசீர்வாதம் தருவார்,
அங்கிப்போதும் என்றைக்கும்
வாழ்வுண்டாகிப் பெருகும்.

5. மேய்ப்பரே, நீர் கிருபை
செய்து, சிதறுண்டதை
மந்தையாக்கி, யாவையும்
சேர்த்தணைத்துக்கொள்ளவும்.

6. எங்கள் நெஞ்சில் சகல
நற்குணங்களும் வர,
தெய்வ அன்பை அதிலே
ஊற்றும், இயேசு கிறிஸ்துவே.

7. நீரே நெஞ்சை நெஞ்சுடன்
கட்டி, நேசத்தின் பலன்
நன்மை தீமை நாளிலும்
காணக் கட்டளையிடும்.

8. மூன்றொன்றாகிய பிதா
மைந்தன் ஆவியும் எல்லா
நாளும் ஒருமைப்படும்
போல் இம்மந்தை ஒன்றவும்.

ASIRVATHIYUM KARTHARE ANANTHA MIGAVE

1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசீரோ வானஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாழனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்
2. இம் மணவீட்டில் வாரீரோ, ஏசு ராயரே
உம் மணம் வீசச் செய்யீரோ, ஓங்கும் நேசமதால்
இம்மணமக்கள் மீதிறங்கிடவே
இவ்விரு பேரையுங் காக்கவே
விண் மக்களாக நடக்கவே
வேந்தா நடத்துமே --- வீசீரோ
3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோடென் பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கித்தரிக்க
ஊக்கமருளுமே --- வீசீரோ
4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம்,
உற்றவான் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே --- வீசீரோ
5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க
ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன் --- வீசீரோ
6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே
வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை
ஆனந்தமாகவே தூய தன்மையைதை
ஆடையாய் நீர் ஈயத்தரித்து
சேனையோடே நீர் வரையில்
சேர்ந்து நீர் சுகிக்கவே --- வீசீரோ

BALIBEEDATHIL ENNAI PARANE

1. பலிபீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே

பல்லவி

கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கரை நீங்க இருதயத்தை
2. நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னைக்
காத்துமக்காய் நிறுத்தி --- கல்வாரியின்

3. ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும் ஈந்தேன்
ஆலய மாக்கியே இப்போது
ஆசீர்வதித்தருளும் --- கல்வாரியின்

4. சுயம்மென்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் மாய
தேவா அருள் செய்குவீர் --- கல்வாரியின்

5. பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல்
இந்நிலத்தில் கண்டதால் --- கல்வாரியின்

AANDAVA PRASANNAMAGI JEEVAN OOTHI

1. ஆண்டவா பிரசன்னமாகி
ஜீவன் ஊதி உயிர்ப்பியும்;
ஆசை காட்டும் தாசர்மீதில்
ஆசீர்வாதம் ஊற்றிடும்.

      அருள்மாரி எங்கள் பேரில்
      வருஷிக்கப் பண்ணுவீர்.
      ஆசையோடு நிற்கிறோமே,
      ஆசீர்வாதம் ஊற்றுவீர்.

2. தேவரீரின் பாதத்தண்டை
ஆவலோடே கூடினோம்;
உந்தன் திவ்விய அபிஷேகம்
நம்பி நாடி அண்டினோம்.

3. ஆண்டவா , மெய்பக்தர் செய்யும்
வேண்டுகோளைக் கேட்கிறீர்;
அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்
இன்று மூட்டி நிற்கிறீர்.

4. தாசர் தேடும் அபிஷேகம்
இயேசுவே! கடாட்சியும்;
பெந்தே கொஸ்தின் திவ்விய ஈவை
தந்து ஆசீர்வதியும்.

AANDAVA VAA MELOGIL UM

1. ஆண்டவா! மேலோகில் உம்
அன்பின் ஜோதி ஸ்தலமும்,
பூவில் ஆலயமுமே
பக்தர்க்கு மா இன்பமே.
தாசர் சபை சேர்ந்திட,
நிறைவாம் அருள் பெற,
ஜோதி காட்சி காணவும்,
ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும்.

2. பட்சிகள் உம் பீடமே
சுற்றித் தங்கி பாடுமே,
பாடுவாரே பக்தரும்
திவ்விய மார்பில் தங்கியும்;
புறாதான் பேழை நீங்கியே
மீண்டும் வந்தாற்போலவே,
ஆற்றில் காணா நின் பக்தர்
ஆறிப்பாதம் தரிப்பர்.

3. அழுகையின் பள்ளத்தில்
ஆர்ப்பரிப்பார் உள்ளத்தில்;
ஜீவ ஊற்றுப்பொங்கிடும்,
மன்னா நித்தம் பெய்திடும்;
பலம் நித்தம் ஓங்கியே
உந்தன் பாதம் சேரவே,
துதிப்பார் சாஷ்டாங்கமாய்
ஜீவ கால அன்புக்காய்.

4. பெற மோட்ச பாக்கியம்
பூவில் வேண்டும் சமுகம்;
ரட்சை செய்யும் தயவால்
பாதம் சேர்த்தருள்வதால்,
நீரே சூரியன் கேடகம்,
வழித்துணை காவலும்;
கிருபை மகிமையும்
மேலும் மேலும் பொழியும்.

AATHIYIL IRULAI AGATRI OLIYAI

1. ஆதியில் இருளை
அகற்றி, ஒளியை
படைத்த நீர்,
உம் சுவிசேஷத்தை
கேளாத தேசத்தை
கண்ணோக்கி கர்த்தாவே,
பிரகாசிப்பீர்.

2. நற்சீராம் சுகத்தை,
மெய்ஞான பார்வையை
அளித்த நீர்,
நைந்தோர் சுகிக்கவும்
கண்ணற்றோர் காணவும்
மானிடர் பேரிலும்
பிரகாசிப்பீர்.

3. சத்தியமும் நேசமும்
உள்ளான ஜீவனும்
அளிக்கும் நீர்,
வெள்ளத்தின் மீதிலே
புறாப்போல பறந்தே,
பார் இருள் நீக்கியே,
பிரகாசிப்பீர்.

4. ஞானமும் வன்மையும்,
தூய்மையும் அருளும்
திரியேகா நீர்,
கடலைப் போன்றதாய்
மெய்யொளி எங்குமாய்,
பரம்பும் வண்ணமாய்,
பிரகாசிப்பீர்.

AATHUMA AATHAYAM SEIGUVOME ITHU

ஆத்தும ஆதாயம் செய்குவோமே - இது
ஆண்டவர்க்குப் பிரியம் - நாமதினால் நாம
ஆசீர்வாதம் பெறுவோம்

அனுபல்லவி

சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்
தஞ்சத்தைப் பெற்று நாமிந்த மாவேலையில்
ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்
அற்புதமான பலனை அடையலாம்

சரணங்கள்

1. பாழுலக முழுதையும் ஒருவன் சம்
பாதித்துக் கொண்டாலும் - ஒரு
நாளுமழியாத ஆத்துமத்தை அவன்
நஷ்டப்படுத்தி விட்டால்,
ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே,
அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,
ஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்த
எம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே --- ஆத்தும

2. கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க
மட்டில்லா தேவசுதன் - வானை
விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்
விட்டதும் விந்தைதானே;
துட்டை யொருத்தியி னாத்துமத்தை மீட்க
தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே
இட்டமுடன் செய்த இரட்சணிய வேலையை
இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே --- ஆத்தும

AATHUMA KARTHARAI THUTHIKKINDRATHE

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே - இதோ!

அனுபல்லவி

நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன்
பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே - இதோ! --- ஆத்துமா

சரணங்கள்

1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே - என்னை
அனைவரும் பாக்கிய ளென்பாரே ,
முடிவில்லா மகிமை செய்தாரே , பல
முடியவர் பரிசுத்தர் என்பாரே - இதோ! --- ஆத்துமா

2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் - நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ;
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் - தன்னை
உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் - இதோ! --- ஆத்துமா

3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல் - அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால் ,
நட்புடன் நினைவொடு நல்லிசரேல் - அவன்
நலம் பெற ஆதரித் தார்மறவேல் - இதோ! --- ஆத்துமா

AATHUMAAKKAL MEIPPARE MANTHAIYAI PATCHIKKAVUM

1. ஆத்துமாக்கள் மேய்ப்பரே,
மந்தையைப் பட்சிக்கவும்
சாத்தான் பாயும் ஓநாய் போல்
கிட்டிச்சேரும் நேரமும்,
நாசமோசம் இன்றியே
காரும், நல்ல மேய்ப்பரே.

2. பணம் ஒன்றே ஆசிக்கும்
கூலியாளோ ஓடுவோன்;
காவல் இன்றிக் கிடக்கும்
தொழுவத்தின் வாசல்தான்;
வாசல், காவல் ஆன நீர்
மந்தைமுன் நின்றருள்வீர்.

3. கெட்டுப்போன யூதாஸின்
ஸ்தானத்திற்குத் தேவரீர்,
சீஷர் சீட்டுப்போடவே
மத்தியா நியமித்தீர்;
எங்கள் ஐயம் யாவிலும்,
கர்த்தரே, நடத்திடும்.

4. புது சீயோன் நகரில்
பக்தர் வரிசையிலே
நிற்கும் மத்தியாவோடும்
நாங்கள் சேரச் செய்யுமே
கண் குளிர உம்மையும்
காணும் பாக்கியம் அருளும்.AATHU

AATHMAME UN AANDAVARIN

1. ஆத்மமே, உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து,
மீட்பு, சுகம், ஜீவன், அருள்
பெற்றதாலே துதித்து,
அல்லேலுயா, என்றென்றைக்கும்
நித்திய நாதரைப்போற்று.

2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய் துதி;
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி;
அல்லேலுயா, அவர் உண்மை
மா மகிமையாம் துதி.

3. தந்தை போல் மா தயை உள்ளோர்;
நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம் கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே!
அல்லேலுயா, இன்னும் அவர்
அருள் விரிவானதே.

4. என்றும் நின்றவர் சமுகம்
போற்றும் தூதர் கூட்டமே,
நாற்றிசையும் நின்றெழுத்து
பணிவர் நீர் பக்தரே;
அல்லேலுயா, அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே.

AANANTHAME JEYA JEYA

ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

அனுபல்லவி

ஞானரட்சகர் நாதர் நமை -இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் --- புகழ்

சரணங்கள்

1. சங்கு கனம் , வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம் ,
எங்கள் ரட்சகரேசு நமை -வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் --- புகழ்

2. முந்து வருடமதனில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல ,
தந்து நமக்குயிருடையுணவும் - வெகு
தயவுடன் யேசு தற்காத்ததினால் --- புகழ்

3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகுகொடும்
பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும் ,
தஞ்சரட்சகர் தவிர்த்து நமை -இத் ,
தரைதனில் குறைதணித் தாற்றியதால் --- புகழ்

AANANTHA GEETNANGAL ENNALUM PAADI

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா

சரணங்கள்

1. புதுமை பாலன் திரு மனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப்படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே --- ஆனந்த

2. மகிமை தேவன் மகத்துவராஜன்
அடிமை ரூபம் தரித்திகலோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரன் பிறந்தாரே --- ஆனந்த

3. மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே --- ஆனந்த

4. அருமை இயேசுவின் திருநாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே --- ஆனந்த

5. கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடுவோம் --- ஆனந்த

AAR IVAR AARARO INTHA AVANIYOR MAATHIDAME

ஆர் இவர் ஆராரோ - இந்த - அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத
பாலகனார் ?

சரணங்கள்

1. பாருருவாகுமுன்னே - இருந்த - பரப் பொருள் தானிவரோ ?
சீருடன் புவி , வான் , அவை பொருள் யாவையுஞ் சிருட்டித்த
மாவலரோ ? --- ஆர்

2. மேசியா இவர்தானோ ? - நம்மை - மேய்த்திடும் நரர்கோனோ ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள
மனசானோ ? --- ஆர்

3. தித்திக்குந் தீங்கனியோ ? - நமது தேவனின் கண்மணியோ ?
மெத்தவே உலகிறுள் நீக்கிடும் அதிசயமேவிய விண்
ணொளியோ ? --- ஆர்

4. பட்டத்துத் துரைமகனோ ? - நம்மைப் - பண்புடன் ஆள்பவனோ ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந்
தாயகனோ ? --- ஆர்

5. ஜீவனின் அப்பமோதான் ? - தாகம் தீர்த்திடும்பானமோதான் ?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர்
இவர்தானோ ? --- ஆர்

CHINNACHIRU KULANTHAIYAI PIRANTHAR

சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்! இயேசு பிறந்தார்!
பாவத்தைப் போக்க, பயமதை நீக்க, பாலகனாய்ப் பிறந்தார்

1. மேய்ப்பர்கள் வந்தனரே! மிக வேகமாய் வந்தனரே!
சாஸ்திரிகள் வந்து சாஷ்டாங்கம் செய்து பணிந்து கொண்டனரே!

2. வாருங்கள் மானிடரே! இயேசுவின் பின் செல்லவே!
சிலுவையை எடுத்து, சுயத்தை வெறுத்து, பின் செல்லுவீர் என்றுமே!

AARAINTHU PAARUM KARTHAVE

1. ஆராய்ந்து பாரும், கர்த்தரே
என் செய்கை யாவையும்
நீர் காணுமாறு காணவே
என்னில் பிரகாசியும்

2. ஆராயும் என்தன் உள்ளத்தை
நீர் சோதித்தறிவீர்!
என் அந்தரங்க பாவத்தை
மா தெளிவாக்குவீர்

3. ஆராயும் சுடரொளியால்
தூராசை தோன்றவும்;
மெய் மனஸ்தாபம் அதனால்
உண்டாக்கியருளும்

4. ஆராயும் சிந்தை, யோசனை,
எவ்வகை நோக்கமும்,
அசுத்த மனோபாவனை
உள்ளிந்திரியங்களும்

5. ஆராயும் மறைவிடத்தை
உம் தூயக் கண்ணினால்;
அரோசிப்பேன் என் பாவத்தை
உம பேரருளினால்

6. இவ்வாறு நீர் ஆராய்கையில்,
சாஷ்டாங்கம் பண்ணுவேன்;
உம் சரணார விந்தத்தில்
பணிந்து போற்றுவேன்

AARATHIPPOM YESURAAJANAI

ஆராதிப்போம் இயேசுராஜனை
இராக்காலத்தில் நிற்கும் ஊழியரே
நம் கைகளை உயர்த்தியே நாம்
ஆராதிப்போம் இயேசுராஜனை

ருசித்துப்பார், இயேசு நல்லவர் (3)
ஆராதிப்போம் இயேசுராஜனை

தூக்கினாரே சேற்றினின்றே
நிறுத்தினாரே கன்மலைமேல்
புதுப்பாடலை எந்தன் நாவில் தந்தார்
துதி பாடுவேன், துதி பாடுவேன்

AAYIRAM AAYIRAM PAADALGALAI AAVIYIL

1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை
ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்
யாவரும் தேமொழிப் பாடல்களால்
இயேசுவைப் பாடிட வாருங்களேன்

பல்லவி

அல்லேலூயா ! அல்லேலூயா !
என்றெல்லாரும் பாடிடுவோம்
அல்லலில்லை ! அல்லலில்லை !
ஆனந்தமாய்ப் பாடிடுவோம்
2. புதிய புதிய பாடல்களைப்
புனைந்தே பண்களும் சேருங்களேன்
துதிகள் நிறையும் கானங்களால்
தொழுதே இறைவனைக் காணுங்களேன்

3. நெஞ்சின் நாவின் நாதங்களே
நன்றி கூறும் கீதங்களால்
மிஞ்சும் ஓசைத் தாளங்கலால்
மேலும் பரவசம் கூடுங்களேன்

4. எந்த நாளும் காலங்களும்
இறைவனைப் போற்றும் நேரங்களே
சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்
சீயோனின் கீதம் பாடுங்களேன்

AANANTHAMAAI NAAME AARPARIPPOME LYRICS

1. ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
அருமையாம் இயேசு நமக்களித்த
அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ
அனுதின ஜீவியத்தில்

பல்லவி

ஆத்துமமே என் முழு உள்ளமே 
உன் அற்புத தேவனையே ஸ்தோத்திரி 
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே

2. கருணையாய் இதுவரை கைவிடாமலே
கண்மணிபோல் எமைக் காத்தாரே
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம் --- ஆத்துமமே

3. படகிலே படுத்து உறங்கினாலும்
கடும் புயல் அடித்து கவிழ்த்தினாலும்
கடலையுங் காற்றையும் அமர்த்தியெமைக் 
காப்பாரே அல்லேலூயா --- ஆத்துமமே

4. யோர்தானைக் கடப்போம் அவர் பெலத்தால்
எரிகோவைத் தகர்ப்போம் அவர் துதியால்
இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே
என்றென்றுமாய் வாழ்வோம் --- ஆத்துமமே

5. பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம் 
அதி சீக்கிரமாய் முடிகிறதே
விழிப்புடன் கூடித் தரித்திருப்போம்
விரைந்தவர் வந்திடுவார் --- ஆத்துமமே