Thursday, April 12, 2018

EKKALAM OOTHIDUVOM LYRICS

எக்காளம் ஊதிடுவோம்
எரிக்கோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்
1. கிதியோன்களே புறப்படுங்கள்
எதிரிகளை துரத்திடுங்கள்
தீபங்களை ஏந்திடுங்கள்
தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள்
2. சிம்சோன்களே எழும்பிடுங்கள்
வல்லமையால் நிரம்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைபிடித்து கிழித்திடுங்கள்
3. தெபோராக்களே விழித்திடுங்கள்
உபவாசித்து ஜெபித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளை பகலாக்குங்கள்
4. அதிகாலையில் காத்திருப்போம்
அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்
கழுகுபோல பெலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுவோம்

BOOMIYIN KUDIGALE LYRICS

பூமியின் குடிகளே வாருங்கள்
கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்
1. மகிழ்வுடனே கர்த்தருக்கு
ஆராதனை செய்யுங்கள்
ஆனந்த சப்தத்தோடே
திருமுன் வாருங்கள் – அவர்
2. கர்த்தரே நம் தேவனென்று
என்றும் அறிந்திடுங்கள்
அவரே நம்மை உண்டாக்கினார்
அவரின் ஆடுகள் நாம்
3. துதியோடும் புகழ்ச்சியோடும்
வாசலில் நுழையுங்கள்
அவர் நாமம் துதித்திடுங்கள்
ஸ்தோத்திர பலியிடுங்கள்
4. நம் கர்த்தரோ நல்லவரே
கிருபை உள்ளவரே
அவர் வசனம் தலைமுறைக்கும்
தலைமுறைக்கும் உள்ளது

AZHAIKIRAR AZHAIKIRAR ITHO LYRICS

அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா! உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் இதோ
1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே
கண்டிடாய் வேண்டிடாய் பாவ பாரம் நீங்கிடும்
2. நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்
நீதிபரன் உன் நோயை நிச்சயமாய்த் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார்
3. துன்பம் சகித்தவர் துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே, அண்ணல் ஏசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே துரிதமாய் நீ வாராயோ
4. அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார்
சொந்தமாகச் சேர்த்திட இந்தப் பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ
5. கல்லறை திறக்க காவலர் நடுங்க
கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே
6. சாந்த சொரூபனே சத்திய வாசனே
வஞ்சமற் வாயனே வந்தணைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே தந்துனை அழைக்கிறார்

AZHAITHAVARE AZHAITHAVARE LYRICS

அழைத்தவரே! அழைத்தவரே!
என் ஊழியத்தின் ஆதாரமே
1. எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – அழைத்தவரே
2. வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்
பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம்
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – அழைத்தவரே

DHIVYA ANBIN SATHATHAI LYRICS

திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா
கேட்டு உம்மை அண்டினேன்
இன்னும் கிட்டிச் சேர என் ஆண்டவா
ஆவல் கொண்டிதோ வந்தேன்
இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்
பாடுபட்ட நாயகா
இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்
ஜீவன் தந்த இரட்சகா
1. என்னை முற்றுமே இந்த நேரத்தில்
சொந்தமாக்கிக் கொள்ளுமேன்
உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில்
நாடித் தேடச் செய்யுமேன் – இன்னும்
2. திருப்பாதத்தில் தங்கும் போதெல்லாம்
பேரானந்தம் காண்கிறேன்
உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்
மெய் சந்தோஷமாகிறேன் – இன்னும்
3. இன்னும் கண்டிராத பேரின்பத்தை
விண்ணில் பெற்று வாழுவேன்
திவ்ய அன்பின் ஆழமும் நீளமும்
அங்கே கண்டானந்திப்பேன் – இன்னும்

ELLAM KUDUME ELLAM KUDUME LYRICS

எல்லாம் கூடுமே எல்லாம் கூடுமே
ஒரேயொரு வார்த்தை சொன்னால் போதும்
எல்லாம் கூடுமே – 2
மழை வந்தாலும் பயமில்லை
அலை வந்தாலும் பயமில்லை
புயலடித்தாலும் பயமில்லையே
பயமில்லை பயமில்லை பயமில்லையே – 2 (- எல்லாம்)
1. தண்ணீர் ரசமாய் மாறிற்றே
கசப்பும் இனிப்பாய் மாறிற்றே
மாரா போன்ற அனுபவம் எல்லாம் மதுரமாய் மாறிற்றே
அடடே நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் குறைவுகள் நீங்கிற்றே
நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் வாழ்க்கை மாறிற்றே – எல்லாம்
2. தேவைகள் எல்லாம் தீர்ந்ததே என்
பாரங்கள் எல்லாம் போனதே
என் பண்டகசாலையில் ஒவ்வொருநாளும் மீனாய் நிரம்பியதே
அடடே நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் சூழ்நிலை மாறினது
நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் ஊழியம் மாறினது – எல்லாம்