Sunday, June 14, 2015

ADAIKALAME UMATHADIAI NAANE LYRICS

அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே

அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே - ஆ

கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமதே - ஆ

என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனை காட்டுபவரே
நம்பி வந்தோரைக் கிருபை சூழ்ந்து கொள்ளுதே - ஆ

கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னைக் குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றி விட்டீரே - ஆ

ASAIVAADUM AAVIYE THOOIMAYIN LYRICS

அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே (2)
இடம் அசைய உள்ம் நிரம்ப
இறங்கி வாருமே(2)

பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே (2)
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின் ஆவியே (2)
அசைவாடும்...

தேற்றிடுமே உள்ங்களை
இயேசுவின் நாமத்தினால் (2)
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால் (2)
அசைவாடும்...

துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால் (2)
நிறைத்திடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே (2)
அசைவாடும்...

SAALEMIN RAASA, SANGAIYIN RAASA

சாலேமின் ராசா, சங்கையின் ராசா
  1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன், - இந்தத்
தாரணி மீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன்

2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே - இந்தச்
சீர் மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ?

3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக் கண்பூத்துப் போகுதேளூ - நீர்
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே.

4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதேளூ - இந்த
நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே.

5. சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதேளூ - உந்தஞ்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே.

URUGAYO NENJAME LYRICS

1. உருகாயோ நெஞ்சமே
குருசினில் அந்தோ பார்!
கரங் கால்கள் ஆணி யேறித்
திரு மேனி நையுதே!

2. மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவர்தாம்,
இந்நிலமெல் லாம் புரக்க
ஈன குரு சேறினார்.

3. தாக மிஞ்சி நாவறண்டு
தங்க மேனி மங்குதே,
ஏகபரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்.

4. மூவுலகைத் தாங்கும் தேவன்
மூன்றாணி தாங்கிடவோ?
சாவு வேளை வந்தபோது
சிலுவையில் தொங்கினார்.

5. வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்,
புல்லர் இதோ நன்றி கெட்டுப்
புறம் பாக்கி னார் அன்றோ?

ADIYAAR VENDAL KELUM YESUVE

அடியார் வேண்டல் கேளும், இயேசுவே
  1. அடியார் வேண்டல் கேளும், இயேசுவே
உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே
நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர்,
உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே.

2. எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர்
பந்தியில் நீரும் கூட அமர்வீர்.
எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர்,
எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர்.

3. பாலனாய் வந்த இயேசு ரட்சகா,
எம் பாலர் முகம் பாரும், நாயகா
தெய்வ கிருபை நற்குணம் நற்செயல்
யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே.

4. வாலிபர் நெறி தவறாமலும்,
ஈனர் இழிஞரைச் சேராமலும்,
ஞானமாய் வாழ்ந்து சீலமுடனே
நல் சேவை செய்ய நீர் அருள்வீரே.

5. மூத்தோர் முதியோர் யாரையும் அன்பாய்
காரும், உம் பலம் ஆறுதல் தாரும்
நோயுற்றோர் பலவீனர் யாரையும்
தளர்ச்சி தீர்த்துத் தாபரித்திடும்.

6. எம் வீட்டை இந்நாள் பிரிந்து சென்று
எங்கெங்கோ தங்கும் எல்லாப்பேரையும்
அன்பாய் அணைத்து ஆதரித்திடும்
அவரைக் காத்து அல்லும் பகலும்.

7. ஆண்டாண்டாய் எங்கள் வீடு வளர,
ஆவியில் அன்பில் என்றும் பெருக,
எங்கள் நல் நாட்டில் இன்ப இல்லங்கள்
இயேசுவின் வீடாய் என்றும் பொலிக.