Tuesday, September 1, 2015

ABHISHEKA NATHA ANAL MOOTTUM LYRICS

அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே

1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமே
ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே – அபிஷேக நாதா

2. ரகசியம் பேசிட கிருபை தாருமே
சத்திய ஆவியாய் என்மேல் வாருமே – அபிஷேக நாதா

3. தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே
திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே – அபிஷேக நாதா

4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமே
பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே – அபிஷேக நாதா

5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே
சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே – அபிஷேக நாதா

6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே
சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே – அபிஷேக நாதா

Vaarthaiyai Anuppiyae en vaadhaiyai poekkumae

வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே
என் வேதனை உமக்கு புரிகின்றதா
என் வேண்டுதல் உம்மை அடைகின்றதா
என் சோகங்கள் என் காயங்கள்
உம் காலடி வருகின்றதா

1. வார்த்தையை அனுப்புவேன் உன் வாதையை போக்குவேன்
உன் வேதனை எனக்கு புரிகின்றதே
உன் வேண்டுதல் என்னை அடைகின்றதே
உன் சோகங்கள் உன் காயங்கள் நான் சிலுவையில் சுமந்துவிட்டேன்
என் பிள்ளையென்றால் சிட்சிக்கிறேன்
உன்னை சிட்சித்தப்பின் ரட்சிக்கிறேன்

MUTHIRAI MUTHIRAI YEZHU MUTHIRAI LYRICS

முத்திரை முத்திரை ஏழு முத்திரை
இவைகளை திறப்பது யாரது
இயேசு கிறிஸ்து தானது

1. வெள்ளை குதிரையில் ஒருவன்
அந்தி கிறிஸ்து அவன்
ஜெயிக்க வரும் ஒருவன்
ஜனங்களை வஞ்சிப்பவன்
போலியாய் பலர் வந்துபோவார் எச்சரிக்கை வேண்டும்
வேதம் சொல்வதை நன்கு அறிய வேண்டும்
இது முத்திரை முதல் முத்திரை

2. சிவப்பு குதிரையில் ஒருவன்
அதிகாரம் கொண்டவன்
பட்டயம் கையில் கொண்டவன்
பலரை கொல்லும் ஒருவன்
யுத்த செய்திகள் கேட்கும்போது எச்சரிக்கை வேண்டும்
இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டும்
இந்த முத்திரை இரண்டாவது

3. கறுப்பு குதிரையில் சவாரி செய்து ஒருவன் வருகின்றான்
தராசை கையில் ஏந்திக்கொண்டு அவனே வருகின்றான்
பூமி எங்கும் பஞ்சம் உண்டாகும்
பட்டினியாலே துன்பம் உண்டாகும்
இந்த முத்திரை மூன்றாவது

4. நாலாம் முத்திரை உடைத்தபோது மங்கின நிறமுள்ள குதிரை
மரணம் என்பது அவனது நாமம்
மேற்கொள்ளுமே பலரை
பஞ்சத்தாலும், போரினாலும், பூமி அதிர்ந்ததாலும்,
கொள்ளை நோயின் பிடியினாலும் மரணம் மேற்கொள்ளும்
மனிதனை மரணம் மேற்கொள்ளும்
முத்திரை முத்திரை ஏழு முத்திரை

5. ஐந்தாம் முத்திரை உடைத்தபோது
பலிபீடத்தின் கீழே
ரத்த சாட்சியாய் மாண்ட மாந்தரின்
விண்ணப்பம் சென்றது மேலே
தேவனை தொழுதிடும் ஆத்துமாக்களை
உலகம் பகைத்திடும்
கர்த்தரே தேவன் என்று போற்றினால்
கொலையும் செய்திடும்

6. ஆறாம் முத்திரை உடைத்தபோது பூமியும் அதிர்ந்ததே
சூரியன் கறுத்து சந்திரன் சிவந்து
விண்மீண் விழுந்ததே
மனுஷ குமாரனின் அடையாளங்கள் விண்ணில் தெரியுது பார்
மன்னாதி மன்னன் வருவதை பார்த்து மனிதர் புலம்பிடுவார் – பூமியின் மனிதர் புலம்பிடுவார்

7. இறுதி முத்திரை உடைந்தது
பரலோகில் அமைதி நிலவியது
பூமியின் நியாயத்தீர்ப்புக்காய்
ஆயத்தமாகும் ஒரு அமைதியது

Saalem raja saaron roja pallathaakin leele neer

சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர்
சிங்காசனம் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர்

1. தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமே
என் உள்ளத்தில் வாருமே
ஆமென் ஆமென் ஆமென்

2. பேரானந்தம் உம் பிரசன்னம்
மாறாததுந்தன் வசனம்
கேருபீன்கள் உம் வாகனம்
உம் சரீரமே என் போஜனம்

3. பூலோகத்தின் நல் ஒளியே
மேலோகத்தின் மெய் வழியே
பக்தரை காக்கும் வேலியே
குற்றம் இல்லாத பலியே

4. நீர் பேசினால் அது வேதம்
உம் வார்த்தையே பிரசாதம்
உம் வல்ல செயல்கள் பிரமாதம்
போதும் போதும் நீர் போதும்

5. கண்ணோக்கி எம்மை பாரும்
தீமை விலக்கி எமை காரும்
இன்றே எம் பந்தியில் சேரும்
வாரும் நீர் விரைவில் வாரும்

ULAGAI RATCHIPPAVARAE UNNATHA DEIVAM LYRICS

உலகை இரட்சிப்பவரே உன்னத தெய்வம் நீரே
உயர்ந்த அடைக்கலமே நீர் உயிரின் உறைவிடமே

1. காலங்கள் தொடங்கிடும் முன் கர்த்தராய் இருந்தவரே
பூமியை சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரே
வானத்தை விரிப்பதும் இஷ்டம்போல மடிப்பதும்
உமக்கு கடினமில்லை
மின்னலை கைகளுக்குள் மூடி வைத்து நடக்கிறீர்
உமக்கு நிகருமில்லையே
உம்மிடம் அனுமதி கேட்டே அணுவும் அசைகின்றதே
அண்டசராசரம் யாவும் உமக்குள் அடங்கிடுதே

2. எங்களை கிறிஸ்துவுக்குள்ளே தெரிந்துகொண்டவரும் நீர்
ரட்சிப்பின் திட்டங்களெல்லாம் முன்னரே அறிந்திருந்தீர்
கிறிஸ்துவை எங்களுக்காய் சாபமாக மாற்றியது
அன்பினை அறிவிக்கத்தான்
அன்றாடம் வெற்றிபெற பரிசுத்த ஆவி உண்டு
பேரன்பை நிரூபிக்கத்தானே
உமது மகிமைக்குத்தானே எங்களை படைத்துவிட்டீர்
எங்களை மகிமையில் சேர்க்க அன்புடன் அழைத்துவிட்டீர்

Naan Oru Paavi Naan Oru Paavi

நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
நான் செய்த பாவங்கள் பல்லாயிரம்
நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
நான் செய்த பாவத்துக்கு நான் காரணம்

1. பாவத்தில் பாவத்தில் நான் விழுந்து விட்டேன்
என்னை நான் என்னை நான் வெறுத்து விட்டேன்
உமது ஆலோசனை பாரம் என்றேன்
உம்மை நான் தள்ளிவிட்டு தூரம் சென்றேன்

2. சந்தர்பங்கள் என்றும் சூழ்நிலைகள் என்றும்
பாவம் செய்த பின்னாலே பழி சுமத்தி
தூண்டிவிட்டார் என்றும் மாற்றிவிட்டார் என்றும்
மற்றவரை எந்நாளும் குற்றப்படுத்தி
நான் செய்த பாவத்துக்கு நியாயங்கள் சொன்னேன் – என்னை
இரட்சித்த தேவனிடம் காரணம் சொன்னேன்
குற்றங்கள் ஒப்புக்கொள்ளும் மனமுமில்லை
என்னில் நல்லதோர் குணமுமில்லை

3. எண்ணங்களுக்குள்ளே எக்கச்சக்க பாவம்
வேஷம்போட்டு திரிவதால் தெரிவதில்லை
சொல்லில் ஒரு வாழ்க்கை சொல்லாமல் ஓர் வாழ்க்கை
மற்றவர்கள் எந்தன் நிலை அறிவதில்லை
கட்டளை மீறுகின்றேன் அனுதினமும் – ஒரு
கல்லைப்போல் மாறினது எந்தன் மனமும்
என்னைப்போல் பாவி இந்த உலகில் உண்டா – ஐயோ
எனக்கு மன்னிப்பு உண்டா

4. மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்
மன்றாடும் உன்னை என் மகனாக்கினேன்
மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்
மன்றாடும் உன்னை என் மகளாக்கினேன்

5. புதிய இதயத்தை கொடுத்திடுவேன்
பாவங்கள் நீங்க உன்னை கழுவிடுவேன்
எனது ஆவியினால் நிரப்பிடுவேன்
உன்னை நான் என்னோடு சேர்த்துக்கொள்வேன்

Naanum Oru Computer

நானும் ஒரு கம்ப்யூட்டர்
என்னை தேவன் உண்டாக்கினார் (2)
நாளும் அவர் கட்டளையாலே
நன்றாய் இயங்குகிறேன் (2)

ஐ எம் எ சூப்பர் கம்ப்யூட்டர்
அன்ட் ஜீஸஸ் மை மாஸ்டர் ஆப்பரேட்டர்

எந்தன் வைரஸ் எல்லாம்
வசனத்தாலே சாகும்
எந்தன் ஹார்டிஸ்க் எப்போதும்
இயேசுவைத் தேடும் (2)

கீபோர்ட் அவர் கையில்
மௌஸும் அவர் கையில்
அவர் தட்ட தட்ட டெஸ்க்டாப்
அவர் அழகை காட்டிடுமே

நானும் ஒரு கம்ப்யூட்டர்
என்னை தேவன் உண்டாக்கினார்
ந…நா…ந ந நா…..

Vidudhalai Thaarumae En Aandavaa

விடுதலை தாருமே என் ஆண்டவா
வினை தீர்க்கும் விண்ணரசா
1. நித்தம் நித்தம் கண்ணீரினால்
நித்திரையை தொலைத்தேனைய்யா
நிந்தை தீர்க்க வாருமைய்யா

2. ஆறுதலின் தெய்வம் நீரே
தேற்றுவீரே உம் வார்த்தையால்
ஜீவ வார்த்தை நீரல்லவோ

3. யாரும் இல்லை காப்பாற்றிட
தோளில் சாய்த்து எனை தேற்றிட
நிலை மாற்ற வாருமைய்யா

KAAKKUM KARAGAL UNDENAKKU

காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்

நம்பிவா இயேசுவை நம்பிவா இயேசுவை
1. நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என் மேல் பறக்க
நேசருக்காய் ஜீவித்திடுவேன் --- நம்பி

2. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
கர்த்தர் உன்னைக் கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போலே எழும்பிடுவாய் --- நம்பி

3. அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டுமந்தை முதலற்றாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை --- நம்பி

KAAPPAR UNNAI KAAPPAR

காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார் , இன்னும் இனிமேல் காத்திடுவார்
கலங்காதே மனமே --- காத்திடுவார்

சரணங்கள்

1. கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் , அவர் கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார்
என்ணிப்பார் , என்ணிப்பார் , எண்ணிப்பார்
ஒன்றொன்றாயதை எண்ணிப்பார் --- காப்பார்

2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோ
இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ
இல்லையோ , இல்லையோ , இல்லையோ
மனஸ்தாபம் கொள்ளவில்லையோ --- காப்பார்

3. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
ஜெயமும் , கனமும் , சுகமும்
இரக்கமா யுனக்களிப்பவரும் --- காப்பார்

4. தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது கை கொடுத்தெடுத்தவரே
அன்பு கொண்டு மணந்தவரே --- காப்பார்

5. ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமாயிருந்தார்
காதலுடன்னவர் கைப்பணி செய்திடக் கனிவுடனாதரித்தார்
பரிசுத்தத்தில் லங்கரித்தார் --- காப்பார்

ANBARIN NESAM PERIYATHE ATHAI

அன்பரின் நேசம் பெரிதே
அதை நினைந்தே மகிழ்வோம்

1. உலகத் தோற்றம் முன்னமே
உன்னத அன்பால் தெரிந்தோரே
இந்த அன்பு ஆச்சரியமே
இன்பம் இகத்தில் வேறு இல்லை

2. அன்பின் அகலம் நீளமும்
ஆழம் உயரம் அறிவேனோ
கைவிடாமல் காக்கும் அன்பு
தூக்கி எடுத்து தேற்றும் அன்பு

3. பாவ சேற்றில் எடுத்தென்னை
பாவமெல்லாம் தொலைத்தாரே
தூய இரத்தம் சிந்தி மீட்ட
தூய்மையான தேவ அன்பு

KAARIRULIL ENN NESA DEEPAME NADATHUMEN

1. காரிருளில், என் நேச தீபமே, நடத்துமேன்;
வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்;
நீர் தாங்கின், தூரக்காட்சி ஆசியேன்;
ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமேன்.

2. என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ! முன்னாளிலே;
ஒத்தாசை தேடவில்லை; இப்போதோ நடத்துமேன்;
உல்லாசம் நாடினேன், திகிலிலும்
வீம்பு கொண்டேன், அன்பாக மன்னியும்.

3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்; இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்;
உதய நேரம் வர, களிப்பேன்;
மறைந்து போன நேசரைக் காண்பேன்

VAAN VELLI PRAKASIKKUTHE

வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுமே
யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே

1. பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார் --- வான்

2. இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம் --- வான்

kaalathin arumaiyai arinthu

காலத்தின் அருமையை அறிந்து
வாழாவிடில் கண்ணீர் விடுவாயே

அனுபல்லவி

ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தை
சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்

சரணங்கள்

1. மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால்
வருங்கோபம் அறிந்திடாயோ?
கதியாம் ரட்சண்ய வாழ்வை நீ கண்டு மகிழ்ந்திட
காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? --- காலத்தின்

2. நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டு
நோக்கிப்பின் அழித்தாரன்றோ?
தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்த
தவணையின் காலமிவ் வருட முடியலாமே --- காலத்தின்

3. இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேற
யேசுனை அழைத்தாரல்லோ,
மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்
பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய்? --- காலத்தின்

4. முந்தின எரேமியா அனனியாவுக் குரைத்த
முடிவை நீ அறியாயோ?
எந்தக் காலமும் சிரஞ்சீவி யென்றெண்ணிடாமல்
ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ? --- காலத்தின்

KAALAM KADANTHIDUM MUNNER KARUTHU KOLVAAR

1. காலம் கடந்திடும் முன்னர் கருத்துக் கொள்வார் வாருமே
ஞாலத்தில் இயேசுவின் நாமம் எடுத்துச் செல்லச் சேருமே
சுத்தக் கரத்தை உயர்த்தி பரிசுத்தர் யாரும் சேருமே
பாவத்தில் சாகும் ஜனத்தை தடுத்து நிறுத்தக் கூடுமே - இன்றே

காலம் கடந்திடும் முன்னர்
கருத்துக்கொள்வார் வாருமே
ஞாலத்தில் இயேசுவின் நாமம்
எடுத்துச் செல்லச் சேருமே
2. தன் கடன் செய்யா மனிதர், கவலையில் வாடி நிற்பார்
தீபத்தில் எண்ணெய் பெறாதோர் துக்கத்தில் மூழ்கிடுவார்
ஆத்தும ஆதாயம் செய்யார் சிரசினில் அடித்துக் கொள்வார்
மாய் மாலம் புரிந்தோருக்கு செம்மையாய்ப் பதில் கொடுப்பார் - இன்றே

3. சீஷர்கள் யாவரும் ஒன்றாய் ஜோதியாய்த் திகழ்ந்திடுவார்
இரத்த சாட்சிகளின் கூட்டம், வெற்றி முழக்கம் செய்யும்
ஜெபித்தோர், சிரத்தை எடுத்தோர், ஆனந்த பாடல் செய்குவார்
இராஜாதி இராஜன் இயேசுவே, நீதியாய் அரசாளுவார் - இன்றே

4. நீ வாழும் இப்பூமி நாசம் ஆகும் காலம் வருதே
உலகின் கடைசி சந்ததி, நீயாக இருக்கலாமே
எழும்பு, எழும்பு தெபொராள் பாராக்கே, விழித்துவிடு
தேவைக்கு ஏற்ற பெலனை, இன்றைக்கே பெற்றெழும்பு - இன்றே

KAALAIYIL DEVANAI THEDU JEEVA

காலையில் தேவனைத் தேடு - ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு

அனுபல்லவி

சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு ,
சீரான நித்திய ஜீவனை நாடு --- காலையில்

சரணங்கள்

மன்னுயிர்க்காய் மரித்தாரே - மனு
மைந்தனென நாமம் வைத்திருந்தாரே
உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு --- காலையில்

பாவச் சோதனைகளை வெல்லு - கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய் மனுவேலனைப் பணிய --- காலையில்

சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடை
செய்யா திருங்களென்றார் மனதார
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் --- காலையில்

வேலையுனக்குக் கைகூட - சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட
காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே
கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே --- காலையில்

KAALAIYUN MAALAIYUM EVVELAYUM KARTHARAI

காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன்

அனுபல்லவி

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர்
பாடிடும் தொனி கேட்குதே

சரணங்கள்

1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் இரட்சிப்புமானார்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி
அனுதினம் வாழ்ந்திடுவேன் --- காலையும்

2. எனக்கெதிராய் ஓர் பாளையமிறங்கி
என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
பயப்படேன்; எதிராளி நிமித்தமாய் செவ்வையான
பாதையில் நடத்திடுவார் --- காலையும்

3. ஒன்றை நான் கேட்டேன் , அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்து நாடிடுவேன் --- காலையும்

4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
தேடிச் சேர்த்தென்னை மறைப்பார்
உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து
உயர்த்துவார் கன்மலைமேல் --- காலையும்

5. எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று
என் கர்த்தர் சொன்னதினாலே
தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு
தயவாகப் பதிலளிப்பார் --- காலையும்

6. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார்
எந்தன் உள்ளம் ஸ்திரமாகத் திடமாகக் கர்த்தருக்கே
என்றென்றும் காத்திருக்கும் --- காலையும்

7. எனக்காக யாவும் செய்து முடிப்பார்
என் கர்த்தர் வாக்கு மாறிடார்
தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர் விருப்பமும்
தவறாமல் நிறைவேற்றுவார் --- காலையும்

NARKARUNAI NAADHANE SARGURUVE

நற்கருணை நாதனே
சற்குருவே அருள்வாய் பொறுமை (2)

1. கோதுமை கனிமணி போல்
தீ திலோர் குண நலன்கள்
யோக்கியமாய் சேர்ந்திடவே
தூயனே அருள் மழை பொழிவாய் (2)

2. திராட்சை கனி ரசமே
தெய்வீக பானமதாம்
பொருளினில் மாறுதல் போல்
புவிக்கு ஒரு புது முகம் நல்கிடுவார் (2)

3. சுவை மிகு தீங்கனியே
திகட்டாத தேன் சுவையே
தித்திக்கும் கிருபையினாலெ
எங்களை மார்பினில் அணைத்து கொள்வார் (2)

4. தேடி வந்தவரே
தினம் உனதன்பாலே
தாய் மனம் போல் அருளி
தாரணி செழித்தோங்கிடவே (2)

KINJITHAMUM NENJE ANJIDATHE NALLA

கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே - நல்ல
கேடகத்தைப் பிடி நீ - விசுவாசக்
கேடகத்தைப் பிடி நீ

அனுபல்லவி

வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை
வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில்,
நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல
நிச்சயமான பரிசை அறிந்து நீ – கிஞ்சிதமும்

சரணங்கள்

1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க,
பத்தியில் தெளிக்கவும், - நித்ய
ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க,
திறமை அளிக்கவும்,
சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன்
ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும்,
தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,
செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம் --- கிஞ்சிதமும்

2. பண்டையர் அந்தப் பரிசையினால் அல்லோ,
கண்டடைந்தார் பேறு? - நல்ல
தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத்
தொகுத்து வெவ்வேறு
விண்டுரைக்கில் பெருகும் தீ அணைத்ததும்,
வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும்,
கண்டிதமாய் வெற்றி கொண்டது மாம்பல
காரியங்களையும் பார் இது மா ஜெயம் --– கிஞ்சிதமும்

3. ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திட
உன் செயல் மா பேதம் - அதின்
தோற்றமும் முடிவும் ஏசுபரன் செயல்,
துணை அவர் பாதம்
ஏற்றர வணைக்கவே பணிவாக
இரந்து மன்றாடி அவர் மூலமாகவே,
ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த
ஆவி உதவியை மேவி, அடைந்து நீ --– கிஞ்சிதமும்

ALLELUJAH NAMADHANDAVARAI AVAR AALAYATHIL

அல்லேலூயா நமதாண்டவரை அவர் ஆலயத்தில் தொழுவோம் (2)
அவருடைய கிரியையான ஆகாய விரிவை பார்த்து

1. மாட்சியான வல்ல கர மகத்துவத்துகாகவும் துதிப்போம்
மா எக்காள தொனியோடும் வீணையோடும் துதிப்போம் (2)
மாசில்லா சுர மண்டலத்தோடும் தம்புருவோடும் நடனத்தோடும்
மாபெரியாழோடும் இன்னிசை தேன் குழலோடும் துதித்திடுவோம்

2. அல்லேலூயா ஓசையுள்ள கைத்தாளங்களை கொண்டும் துதிப்போம்
அவருடைய புதுப்பாட்டை பண்ணிசைத்து துதிப்போம் (2)
அதிசய படைப்புகள் அனைத்தோடும் உயிரினை பெற்ற யாவற்றோடும்
அல்லேலூயா கீதம் அனைவரும் பாடி துதித்து உயர்த்திடுவோம்