Friday, July 31, 2015

MAGILVOM MAGILVOM DINAM AGA MADILVOM

1. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே - இந்த
2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டுக்கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்

3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்

4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

MANGALAM SELIKKA KIRUBAI ARULUM MANGALA NAADANE

மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே

சரணங்கள்

1. மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுக் கத்தனாம் ஆபிராம் தேவ நீ --- மங்களம்

2. மணமகன் ..............................
மணமகள் ...................................
மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே - உனைத்
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் --- மங்களம்

3. சங்கை நித்திய நாதனும் நீ
பங்கமில் சத்திய போதனும் நீ
மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ
இத்தரை இத் திருமணத்தின் இருவர்
ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே --- மங்களம்

MANAVALVU PUVI VALVINIL VALVU

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு - மங்கள வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு

சரணங்கள்

1. துணை பிரியாது, தோகையிம்மாது
துப மண மகளிவர் இதுபோது
மனமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது - நல்ல --- மண

2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண வலங்காரா,
தேவகுமாரா, திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? - நல்ல --- மண

3. குடித்தன வீரம், குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
அடக்கமாசாரம், அன்பு, உதாரம்
அம்புவி தனில் மனைக்கலங்காரம் - நல்ல --- மண

4. மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி
மந்திரம் அவர் குறையுமே தாவி
மன்றியிப் புவி யமர்ந்த சஞ்சீவி
அவளையில்லாதவ னொரு பாவி - நல்ல --- மண