Tuesday, September 8, 2015

KATHIRAVAN THONDRUM KAALAIYETHE


கதிரவன் தோன்றும் காலையிதே
புதிய கிருபை பொழிந்திடுதே - நல்
துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே
கதிரவன் தோன்றும் காலையிதே

1. வான சுடர்கள் கானக ஜீவன்
வாழ்த்திடவே பரன் மாட்சிமையே
காற்று பறவை ஊற்று நீரோடை
கர்த்தருக்கே கவி பாடிடுதே

2. காட்டில் கதறி கானக ஓடை
கண்டடையும் வெளி மான்களை போல்
தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீராம்
தற்பரன் யேசுவை தேடிடுவோம்

3. காலை விழித்தே கர்த்தரின் சாயல்
கண்களும் செவியும் காத்திருக்கும்
பாதம் அமர்ந்து தேவனை ருசித்து
கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன்

UNTHAN NAAMAM MENMAI POL VERORU

உந்தன் நாமம் மேன்மை போல்
வேறொரு நாமம் இல்லையே
நீரே என் தேவன் - (2)
வல்லமை உள்ளவரே
நீரே என் தேவன் (2)

ஆலோசனை கர்த்தரே
உம்மை ஆராதிக்கிறேன் (3)
என் இயேசுவே
என் அன்பரே நல்லவரே வல்லவரே
என் ஆண்டவரே என் அன்பரே

UTHAMAMAI MUNSELLA UTHAVI SEIYUM YEGOVA

1. உத்தமமாய் முன் செல்ல உதவி செய்யும் யெகோவா
ஊக்கமதைக் கைவிடாமல் காத்துக்கொள்ள உதவும் (2)

2. பலவிதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்கினி அஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும் (2)

3. தீர்மானங்கள் தோற்கா வண்ணம் காத்துக்கொள்ள உதவும்
நேர்மையாக வாக்கைக் காக்க வழி வகுத்தருள வேண்டும் (2)

4. இவ்வுலக மாயாபுரி அழியப்போவது நிச்சயம்
இரட்சகனே நீர் இராஜாவாக வருவது அதி நிச்சயம் (2)

5. தூதருடன் பாடலோடு பரலோகில் நான் உலாவ
கிருபை செய்யும் இயேசு தேவா உண்மை வழி காட்டியே (2)

UNNATHAMAANAVARIN UYAR MARAIVILIRUKKIRAVAN

1. உன்னதமானவரின் - உயர் மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே

பல்லவி

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்
2. தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே --- அவர்

3. இரவின் பயங்கரத்துக்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் --- அவர்

4. ஆயிரம் பதினாயிரம்
பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே --- அவர்

5. தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் --- அவர்

6. உன் வழிகளிலெல்லாம்
உன்னைத் தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தங்கள் கரங்களில் ஏந்திடுவார் --- அவர்

7. சிங்கத்தின் மேலும் நடந்து
வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்து காத்திடுவார் --- அவர்

8. ஆபத்திலும் அவரை நான்
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
என்னை தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர் --- அவர்

UNNAIYUM ENNAIYUM RATCHIKKAVE

1. உன்னையும் என்னையும் இரட்சிக்கவே
இயேசு தம் ஜீவனை ஈந்தனரே
குருசில் கண்டேன் (2) என் இயேசுவை

2. பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவே
பரன் தம் இரத்தத்தைச் சிந்தினாரே
குருசில் கண்டேன் (2) என் இயேசுவை

3. மன்னிப்பும் மோட்சமும் அடைந்திட
நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்
சோர்ந்திடாதே நம்பியேவா
நிச்சயம் நேசர் ஏய்றுக்கொள்வார்

4. இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார்
அவரை நீ இன்று ஏற்றுக்கொள்வாய்
அழைக்கிறார் (3) அன்புடனே

5. இரட்சகர் பாதம் நீ பற்றிக்கொண்டால்
நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்
அல்லேலூயா (3) ஆமென்

UNDRAN SUYAMATHIYE NERI ENDRU

உன்றன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே - அதில் நீ
மகிழ்ந்து மாயாதே

சரணங்கள்

1. மைந்தனே, தேவ மறைப்படி யானும்
வழுத்தும்மதித னைக் கேளாய் - தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய் --- உன்றன்

2. சொந்தம் உனதுளம் என்றுநீ பார்க்கிலோ,
வந்து விளையுமே கேடு - அதின்
தந்திரப் போக்கை விட்டோடு கதிதேடு --- உன்றன்

3. துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே - தீயர்
கெட்ட வழியில் நில்லாதே அது தீதே --- உன்றன்

4. சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே அவர்
ஐக்யம் நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே --- உன்றன்

5. நான் எனும் எண்ணமதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் - அதின்
மேல்நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம் --- உன்றன்

DEVA PITHAVE UM UNMAI PERIYATHE

1. தேவ பிதாவே! உம் உண்மை பெரிதே
மனம் மாற மாந்தன் அல்லவே நீர்
மாறா உம் மனதுருக்கம் நிலைக்கும்
இன்று போல் என்றும் நீர் நிலைப்பீரே
உம் உண்மை பெரிதே (2)
காலை தோறும் புதுக்கிருபையே
என் தேவை யாவும் உம் கரம் தந்ததே
உம் உண்மை பெரிதே என் மீதிலே
2. வெயிலும் , பனியும் , விதைப்பறுப்பும் ,
சூரிய சந்திர விண்மீன்களும் ,
படைப்பனைத்துடன் சாட்சி பகரும்
உம் பேருண்மை , இரக்கம் , அன்பிற்கே

3. சமாதானத்துடன் பாவ மன்னிப்பும்
மகிழ் பிரசன்னமும் வழிகாட்ட
இன்றைய பெலனும், நாளை நம்பிக்கை ,
ஆசி பல்லாயிரம் நான் பெற்றேனே

UMMANDAI KARTHARE NAAN SERATTUM

1. உம்மண்டை, கர்த்தரே, நான் சேரட்டும்;
சிலுவை சுமந்து நடப்பினும்,
என் ஆவல் என்றுமே
உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வதே.

2. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில்
திக்கற்றுக் கல்லின் மேல் தூங்குகையில்,
என்தன் கனாவிலே
உம்மண்டை, கர்த்தரே, இருப்பேனே.

3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்
விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்.
தூதர் அழைப்பாரே
உம்மண்டை, கர்த்தரே, நான் சேரவே.

4. விழித்து உம்மையே நான் துதிப்பேன்.
என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்;
என் துன்பத்தாலுமே
உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வேனே.

UMMAI THUTHIKKIROM YAVUKKUM VALLA PITHAVE

1. உம்மைத் துதிக்கிறோம், யாவுக்கும் வல்ல பிதாவே;
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமீ, ராஜாதி ராஜாவே;
உமது மா மகிமைக்காக கர்த்தா
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே.

2. கிறிஸ்துவே, இரங்கும் சுதனே, கடன் செலுத்தி,
லோகத்தின் பாவத்தை நீக்கும் தெய்வாட்டுக்குட்டி,
எங்கள் மனு கேளும் பிதாவினது
ஆசனத் தோழா இரங்கும்.

3. நித்திய பிதாவின் மகிமையில் ஏசுவே
நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே.
ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்.
உன்னத கர்த்தரே. ஆமேன்.

UMMAI THUTHIPPEN KARTHATHI KARTHARE

உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே
உம் கிரியைகள் மிக அற்புதமானதே
உம்மைப் பணிவேன் தேவாதி தேவனே
உம் ஆலோசனைகள் அருமையானதே

சரணங்கள்

1. என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்
என் நினைவையும் தூரத்தில் அறிவீர்
எந்தன் நாவில் சொல் பிறவா முன்னமே
எந்தன் தேவனே அவையாவும் அறிவீர்

2. உமக்கு மறைவாய் இருளும் மூடாதே
இரவும் பகல் போல் வெளிச்சமாகுமே
உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்
இந்த அறிவுதான் மா விந்தையானதே

3. வானில் சென்றாலும் அங்கேயும் இருக்கிறீர்
விடியற்காலத்துச் செட்டையில் பறந்தாலும்
பாதாளத்திலே படுக்கை போட்டாலும்
உமது கரத்தால் என்னைப் பிடிக்கிறீர்

4. என்னை ஆராய்ந்து அறிந்து கொள்ளுமே
வேதனை வழி என்னின்று அகல
நித்ய வழியிலே என்னை நடத்துமே
எந்தையே எந்தன் உள்ளம் பாடிட