Tuesday, November 12, 2019

ELLAM UMAKAAGHA YESUVIN DIVYA



எல்லாம் உமக்காக ஏசுவின் திவ்ய இருதயமே 
எல்லாம் உமக்காக 

எந்தன்  சிந்தனை சொல் அனைத்தும் 
எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும் 
எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும் (2)
உம் புகழ்  அதிமிகு மகிமைக்கே --  (எல்லாம் உமக்காக...)

ஒளியை நாடா மலரில்லை 
நீரை வேண்டா வேரில்லை 
உன் புகழ் தேடா வாழ்வனைத்தும் (2)
வாழ்வில்லை அதில் பயனில்லை  -- (எல்லாம் உமக்காக...)

வழியும் ஒளியும் உறுதுணையும் 
வாழ்வின் நிறைவும் நீரன்றோ 
உன்னருள் ஒன்றே  வேண்டி நின்றேன் (2) 

இன்றுன் திருப்பதம் சரணடைந்தேன் -- (எல்லாம் உமக்காக...)

No comments: