Tuesday, December 10, 2019

VAANIL EKKAALAM MULANKIDAVEY

வானில் எக்காளம் முழங்கிடவே
வாஞ்சையோடு பறந்திடுவோம்
இப்புவித் துன்பங்கள் மறைந்திடுமே
இயேசுவின்இராஜ்ஜியம்நெருங்கிடுதே
ஆ ஆமென் அல்லேலூயா
ஆமென் வாரும் இயேசுவே (2)

2.கன்மலை வெடிப்பினில் உத்தமியாய்
கறைகள் திரைகள் அகற்றிடுவோம்
கற்புள்ள கன்னியாய் விழிப்புடனே
அவர் வரும் வேளைக்காய் காத்திருப்போம்

3.மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த
மகிபன் உரைத்த வாக்கின்படி
மாசற்ற மணவாட்டி சபையதனை
மகிமையில் சேர்க்கவே வந்திடுவார்

4.பாரில் பலியாய் ஜீவன் வைத்தோர்
பாடுகள் பாதையில் ஏற்றதினால்
தியாகத்தின் மேன்மையைக் காத்துக் கொண்டோர்
அவர் போல் மாறியே பறந்திடுவார்

5.மகிமையின் நாளும் நெருங்கிடுதே
மணவாளன் சத்தம் கேட்டிடுதே
மகிழ்ச்சியின் நிறைவை அனுபவிக்க
ஆயத்தம் விரம் அடைந்திடுவோம்

VAAN VELLI PRAKASIKKUTHE

வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுமே
யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே

1. பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார் — வான்

2. இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம் — வான்

AAKAATHATHU ETHUVUMILLAI UMMAL

வல்லவர் சர்வ வல்லவர்
நல்லவர் எப்போதும் நல்லவர்
எல்ஷடாய் அல்லேலூயா

ஆகாதது எதுவுமில்ல
உம்மால் ஆகாதது எதுவுமில்ல
அகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றீர்

1. துதி செய்யத் தொடங்கியதும்
எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடியச் செய்தீர் (2)
உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்

2. அலங்கார வாசலிலே
அலங்கோல முடவன் அன்று
நடந்தானே இயேசு நாமத்தில் (2)

3. கோலும் கையுமாக
பிழைக்கச் சென்றார் யாக்கோபு
பெருகச் செய்தீர் பெரும் கூட்டமாய்

4. கண்ணீரைக் கண்டதாலே
கல்லறைக்குச் சென்றவனை
கரம் பிடித்து தூக்கி விட்டீர்

5. ஈசாக்கு ஜெபித்ததாலே
ரெபேக்காள் கருவுற்று
இரட்டையர்கள் பெற்றெடுத்தாள்

6. எலியாவின் வார்த்தையாலே
சாறிபாத் விதவை வீட்டில்
எண்ணெய் மாவு குறையவில்லையே

7. ஜெப வீரன் தானியேலை
சிங்கங்களின் குகையினிலே
சேதமின்றிக் காப்பாற்றினீர்

8. கானாவூரில் வார்த்தை சொல்ல
கப்பர்நகூம் சிறுவனங்கே
சுகமானான் அந்நேரமே

9. தண்ணீரால் ஜாடிகளை கீழ்படிந்து நிரப்பினதால்
திராட்சை ரசம் வந்ததையா

MUTCHEDI NADUVIL VANDHEERE

முட்செடி நடுவில் வந்தீரே - என்னை
முற்றும் மாற்றம் செய்தீரே
ஏணியாக நின்றீரே - என்னை
உயரத்தில் தூக்கி சென்றீரே - முட்செடி

அற்புதம் செய்தீரே
கிருபை தந்தீரே
அபிஷேகத்தாலே நிறைத்தீரே - (2)

அல்லேலூயா - (4)

1) சிங்கத்தின் கெபி போல இருந்தாலும்
பார்வோன் சுற்றி சுற்றி வந்தாலும்
கவலையில்லை எனக்கு கவலையில்லை
மகிமையின் இயேசுவாலே - (2)
மகிமையின் இயேசுவாலே - அற்புதம்

2) சாத்தானின் சூழ்ச்சியாய் இருந்தாலும்
சேனையாய் அணிவகுத்து வந்தாலும்
கவலையில்லை எனக்கு கவலையில்லை
ஜெயித்திடுவேன் இயேசுவாலே - (2) - நான்
ஜெயித்திடுவேன் இயேசுவாலே - முட்செடி

VAIKARAIYIL UMAKKAGA VALIMEL

வைகரையில் உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா
காலை நேரம் உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா
என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும்

1. உம்இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
நிறைவான மகிழ்ச்சி உம்சமூகத்தில்
குறைவில்லாத பேரின்பம் உம்பாதத்தில்

2. ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா
உம்மையன்றி வேறுஒரு செல்வம இல்லையே
நீர்தானே எனது உரிமைச் சொத்து
எனக்குரிய பங்கு நீர்தானய்யா

3. படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்
அழிந்துபோக அனுமதியும் தரமாட்டீர்
என்இதயம் பூரித்து துள்ளுகின்றது
என்உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது

4. உம் கிருபையால் காலைதோறும் திருப்தியாக்கும்
நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
எப்போதும் என்முன்னே நீர்தானய்யா
ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்

STHOTHIRAM SEIVENAE RATCHAGANAI

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை
பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த
பாத்திரனை யூத கோத்திரனை -என்றும்

அன்னை மரிசுதனை
புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை
முன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை

கந்தை பொதிந்தவனை
வானோர்களும் வந்தடி பணிபவனை
மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை
வான பரன் என்னும் ஞான குருவானை

செம்பொன்னுருவானைத்
தேசிகர்கள் தேடும் குரவானை
அம்பரமேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று பைம்பொன் மலர் துவி

THIRUPATHAM SERAMAL IRUPENO

திருப் பாதம் சேராமல் இருப்பேனோ - நான்
தெய்வத்தைத் தேடாமல் பிழைப்பேனோ

அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன்
உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன்

ஆவியும் ஆத்மமும் ஆண்டவர் பங்கே
பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே

சத்திய மார்க்கமும் சகலமுமான
நித்திய ஜீவனும் நிமலனுமான

ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன்
கூறு மகிமையில் சேர்த்திடும் தூயன்

உலையில் மெழுகு போல் உருகுதென் நெஞ்சம்
மலையாதுன் திருவடி வணங்கினேன் தஞ்சம்

THEERAATHA THAAKATHTHAAL ENN ULLAM

1. தீராத தாகத்தால் என் உள்ளம் தொய்ந்ததே,
ஆ, ஜீவ தண்ணீரால் தேற்றும் நல் மீட்பரே.

2. விடாய்த்த பூமியில் என் பசி ஆற்றுமே;
நீர் போஷிக்காவிடில், திக்கற்றுச் சாவேனே.

3. தெய்வீக போஜனம், மெய் மன்னா தேவரீர்,
மண்ணோரின் அமிர்தம் என் ஜீவ ஊற்று நீர்.

4. உம் தூய ரத்தத்தால் எம் பாவம் போக்கினீர்,
உம் திரு மாம்சத்தால் ஆன்மாவைப் போஷிப்பீர்.

5. மா திவ்விய ஐக்கியத்தை இதால் உண்டாக்குவீர்;
மேலான பாக்கியத்தை ஏராளமாக்குவீர்.

6. இவ்வருள் பந்தியில் பிரசன்னமாகுமே;
என் ஏழை நெஞ்சத்தில் எப்போதும் தங்குமே.

THANGA PATTANAM MOTCHAM

தங்கப் பட்டணம் மோட்சம் என் விடு
நான் அங்கு வாழுவேன்
என் நண்பர் இயேசு அங்கிருப்பார்
நான் அங்கு வாழுவேன்
பாவமில்லை சாபமில்லை
துன்பமில்லை என்றும் இன்பமே தங்கப்

JEEVANAI PARKILUM UM KIRUBAI

ஜீவனை பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே
இவ்வாழ்க்கையைப் பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே

கிருபை மேலானதே
கிருபை மேலானதே

போக்கிலும் வரத்திலும்
என்னைக் காத்தது கிருபையே
கால்கள் இடறாமல் என்னைக்
காத்தது கிருபையே

பெலவீன நேரங்களில்- உம்
கிருபை என் பெலனானதே
சோர்வுற்ற வேளைகளில் - உம்
கிருபை எனை தாங்கிற்றே

கஷ்டத்தின் நேரங்களில்- உம்
கிருபை எனைக் காத்ததே
கண்ணீரின் மத்தியிலும்-உம்
கிருபை எனைத் தேற்றுதே

JEEVANAI VIDA DHEVANAI NAESIKKANUM

ஜீவனை விட தேவனை நேசிக்கணும் - இந்த
செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் - தம்பி
அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்
அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்

போராடு... தைரியமாய் போராடு...
வெற்றி நிச்சயம்
விடுதலை சத்தியம்
ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன்
இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் நான்
அதனால் சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்
அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன்
போராடுவேன்... தைரியமாய் போராடுவேன்
வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்

SORVANA AAVIYAI NEEKUM

சோர்வான ஆவியை நீக்கும்
துயர ஆவியை அகற்றும்
கண்ணீரின் மத்தியில் வாரும்
அப்பா வேண்டுகிறேன்

இயேசுவே இயேசுவே இயேசுவே
எல்லாம் எனக்கு நீரே

காத்திருந்து பெலன் பெறுவேன்
கழுகு போல பறப்பேன்
காகத்தின் வம்சம் நான் அல்ல
சிங்கத்தின் குட்டி நானே

SELVOEM VAAREER IYAESU PAERIL

செல்வோம் வாரீர் இயேசு பேரில்
பாரில் உள்ளோர் ஆசை கொள்ள
அணி அணியாய்க் கூடிவந்து
துதி செலுத்திச் செல்வோமே செல்வோமே!

1. ஏழே நாளில் எரிகோ கோட்டை குடை சரிந்து வீழ்ந்ததே
கோல் அடியில் செங்கடலும் இரண்டு பிரிவாய் நின்றதே – 2
கிபியோன் மேலே சூரியனும் ஆயலோனில் அம்புலியும் – 2
நடுவானில் பகல் முழுதும் நின்றதே
செல்வோமே! செல்வோமே! செல்வோமே!

2. சமுத்திரம் புரண்டு வந்தால் இயேசு கதவடைத்துத் தாளிடுவார்
இடிக்கும் மின்னல் ஒளிக்கும் அவரே வழிவகுத்துத் தந்திடுவார் – 2
இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவார் – 2
வல்லவர் நம் நடுவில் வந்தார் – செல்வோமே
செல்வோமே! செல்வோமே! செல்வோமே!

3. முகில் உலாவும் இமயம் தொட்டு அலை இரையும் குமரி வரை
அணி அணியாய் இயேசுவின் கீழ் ஊழியராய்ச் செல்வோமே – 2
நீலவானில் காற்றினூடே சிலுவைக்கொடியை ஏற்றியே – 2
வாழ்க இயேசு நாமம் வாழ்க என்போமே!
செல்வோமே! செல்வோமே! செல்வோமே! -செல்வோமே!