Tuesday, September 18, 2018

KOLKOTHAA MALAIMAEL THONTUTHOR SILUVAI LYRICS

1. கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவை
அல்லல் பழிப்பின் சின்னமதாம்
நீசப் பாவிகட்காய் நேசர் மாண்டாரதில்
நேசிப்பேன் அத்தொல் சிலுவையை
அந்தச் சிலுவையை நேசிப்பேன்
பெலன் ஓய்ந்து நான் சாகும் வரை
தொல் சிலுவையை நான் பற்றுவேன்
பின் அதால் க்ரீடத்தை அணிவேன்
2. தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்து
உலகோர் பழித்த குருசை
கல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய்
கவர்ந்த தென்னுள்ளத் தையது — அந்தச் சிலுவையை
3. என் பாவம் மன்னிக்க என்னைச் சுத்தமாக்க
நேசர் மாண்ட சிலுவையதோ !
தூய ரத்தம் தோய்ந்த அந்தச் சிலுவையின்
அழகெத்தனை மாட்சிமை பார் ! — அந்தச் சிலுவையை
4. குருசின் இழிவை மகிழ்வாய் சுமந்தே
மேன்மை பாராட்டுவேன் நிந்தையில்
பின்னால் மோட்சலோகில் நேசர் கூட்டிச் சென்று
பங்களிப்பார் தம் மகிமையில் — அந்தச் சிலுவையை


1. kolkothaa malaimael thontuthor siluvai
allal palippin sinnamathaam
neesap paavikatkaay naesar maanndaarathil
naesippaen aththol siluvaiyai
anthach siluvaiyai naesippaen
pelan oynthu naan saakum varai
thol siluvaiyai naan pattuvaen
pin athaal kreedaththai annivaen
2. thaevaattuk kuttitham maatchimai veruththu
ulakor paliththa kurusai
kalvaari malaikkae sumanthaar enakkaay
kavarntha thennullath thaiyathu — anthach siluvaiyai
3. en paavam mannikka ennaich suththamaakka
naesar maannda siluvaiyatho !
thooya raththam thoyntha anthach siluvaiyin
alakeththanai maatchimai paar ! — anthach siluvaiyai
4. kurusin ilivai makilvaay sumanthae
maenmai paaraattuvaen ninthaiyil
pinnaal motchalokil naesar koottich sentu
pangalippaar tham makimaiyil — anthach siluvaiyai

KIRUBAI KIRUBAI NAM DEVANIN LYRICS

கிருபை… கிருபை…
நம் தேவனின் மாறாத கிருபை
கிருபை… கிருபை…
நம் இயேசுவின் மாறாத கிருபை…
அனுதினமும் நம்மை நடத்திடும்
அற்புத தேவனின் கிருபை
பாவத்தை மன்னிக்கும் கிருபை – நம்
சாபத்தை போக்கிடும் கிருபை
நமக்காய் ஜீவன் தந்த கிருபை – நம்மை
நாள்தோறும் பாதுகாக்கும் கிருபை
பரிச்சுத்தமாக்கிடும் கிருபை – நம்மை
பரலோகம் சேர்த்திடும் கிருபை – கிருபை
எத்தனை இழப்புகள் வந்தாலும் – நம்மை
தாங்கி நடத்திடும் கிருபை – கிருபை
நம்மை விட்டு விலகாத கிருபை
நமக்காய் பரிந்து பேசும் கிருபை


kirupai… kirupai…
nam thaevanin maaraatha kirupai
kirupai… kirupai…
nam Yesuvin maaraatha kirupai…
anuthinamum nammai nadaththidum
arputha thaevanin kirupai
paavaththai mannikkum kirupai – nam
saapaththai pokkidum kirupai
namakkaay jeevan thantha kirupai – nammai
naalthorum paathukaakkum kirupai
parichchuththamaakkidum kirupai – nammai
paralokam serththidum kirupai – kirupai
eththanai ilappukal vanthaalum – nammai
thaangi nadaththidum kirupai – kirupai
nammai vittu vilakaatha kirupai
namakkaay parinthu paesum kirupai

PAJITHTHIDUM SUVISEDA THIRUCHCHAPAIYORAE LYRICS

பஜித்திடும் சுவிசேட திருச்சபையோரே
பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே.
பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தாரே
பரனருளால் ஜெயமடைந்தீரே
துஜம் பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே
தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே
நித்ய சுவிசேடமே நேர்வழியாமே,
நிமலனருள் வழிபோவோமே
சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே
தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே
திருக்குருசில் மரித்தோரது நேசம்,
தினம் மறவாதே, வைவிசுவாசம்,
இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம்,
இனிபெறலாமென வெண்ணுதல் மோசம்.


pajiththidum suviseda thiruchchapaiyorae
paranai ninaiththuth thinam makilveerae.
pajiththidum suviseshasapaikkul vanthaarae
paranarulaal jeyamataintheerae
thujam pitiththae jeyamenap pukalveerae
thothrasangaீrththanam thuthyam seyveerae
nithya suvisedamae naervaliyaamae,
nimalanarul valipovomae
sathya maraipitikkil valithavaromae
thathva kunnaakaran thanaiththuthippomae
thirukkurusil mariththorathu naesam,
thinam maravaathae, vaivisuvaasam,
irakka punnnniyangalaal elil nakarvaasam,
iniperalaamena vennnuthal mosam.