Thursday, February 20, 2020

ENNAI JEEVA BALIYAAI

என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்
ஏற்று கொள்ளும் இயேசுவே


அன்னை தந்தை உந்தன் சன்னதி முன்னின்று
சொன்ன வாக்குத்தத்தமல்லாது இப்போது – என்னை


1. அந்தகாரத்தினின்றும் பாவப் பேய்
அடிமைத்தனத்தினின்றும்
சொந்த ரத்தக்கிரயத்தால் என்னை மீட்ட
எந்தையே உந்தனுக்கிதோ படைக்கிறேன் – என்னை


2. ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீனமாக்கி வைத்தேன்
பாத்ரமதாயதைப் பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கிறேன் கருணை செய்தேவா – என்னை


3. நீதியினாயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேனுமக்கு
ஜோதி பரிசுத்தராலயமாகவே
சொந்தமாய்த் தந்தேன் எந்தன் சரீரத்தை – என்னை

EN NEETHIYAI VELICHATHAI POLAKKUVEER

என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
இயேசையா – என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் – என்னை

நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர்
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா

ELLAVATRIKKUM NANDRI SOLLUVEN

எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
யார் மேலும் கசப்பு இல்லப்பா
எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா
1. இதுவரை உதவி செய்தீர்
இனிமேலும் உதவி செய்வீர்
2. கவலைகள் பெருகும் போது…
கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர்
3. எப்போதும் உம் புகழ்தானே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
4. வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை
5. என் சமூகம் முன் செல்லும்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர்
6. எனக்காய் யுத்தம் செய்தீர்
யாவையும் செய்து முடிப்பீர்

ELLAVATRIKKAGAVUM NANDRI SOLLUVEN

எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
யார் மேலும் கசப்பு இல்லப்பா
எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா

1. இதுவரை உதவி செய்தீர்
இனிமேலும் உதவி செய்வீர்
2. கவலைகள் பெருகும் போது…
கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர்
3. எப்போதும் உம் புகழ்தானே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
4. வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை
5. என் சமூகம் முன் செல்லும்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர்
6. எனக்காய் யுத்தம் செய்தீர்
யாவையும் செய்து முடிப்பீர்

ENGUM PUGAL YESU RAJANUKKE

எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே
உங்களையல்லவோ
உண்மை வேதங் காக்கும்
உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்

ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர்
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி யேசுவுக்கிதயம் தந்திடுவீர்

கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்கு
கடன் பட்டவர் கண்திறக்கவே
பல்வழி அலையும் பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்

தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி?
பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ?

சுத்த சுவிசேஷம் துரிதமாய் செல்ல
தூதர் நீங்களே தூயன் வீரரே
கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கி
கருணை நிறை வசனம் கற்றிடுவீர்

ULLATHIL EZUPUTHAL THAARUM

உள்ளத்தில் எழுப்புதல் தாரும்
நாம் எழும்பும் வரை நற்செய்தி இன்றி
நம் தேசம் பாழானதே
இயேசு ராஜனை நாடி சேரும்வரை
நம் வாழ்வும் வீணானதே

தேவா எழுப்புதல் எங்கள் உள்ளத்தில்
நித்தம் தாரும் எம் நேசரே
எங்கள் வாழ்வும் வழியும்
எங்கள் சொல்லும் செயலும்
உம் பாதம் தந்தோம் ஐயா – 2 – தேவா

1. மாயையாம் இப்பூமியில்
மயங்கியே அலைந்தோம் ஐயா – 2
நேசரே உயிர் ஈந்ததால்
நேசமாய் வாழ்வை பெற்றோம் – 2 – தேவா

2. இருளின் பாதைதனில்
வாழ்ந்திடும் மாந்தர்தனை – 2
ஒளியண்டை நடத்திடவே
ஒளியாய் மாற்றும் தேவா – தேவா

3. திறந்த வாசல் இன்றே
நற்செய்தி சொல்வோம் நன்றே – 2
வருகையின் நாள் முன்னமே
விரைந்தே செயல்படுவோம்

UMMAI NAMBIYIRUKIRAEN

உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே
என்னில் இரக்கமாயிரும் இயேசுவே

உன் கணவனை விட
உன் மனைவியை விட
உன்னில் அன்பு வைத்தவர் இயேசுதான்

உன் பெற்றோரை விட
உன் நண்பர்களை விட
உன்னில் பாசம் வைத்தவர் இயேசுதான்

அவரைப்போல நல்ல
நேசர் உலகில் இல்லை
அவரைப்போல உண்மை
நண்பன் உனக்கு கிடைக்காதே

உயிரை கொடுத்து நான்
நேசித்தோர்களோ-என்னை
உதறி தள்ளினர் குப்பை போல
இந்த உலக பாசங்கள் அழிந்து போயிடும்
அழியாத அன்புதான் இயேசுவே
என் அன்பை நான் உமக்காக தருவேனே
என் உயிரை நான் உமக்காக கொடுப்பேனே

VARAVENUM ENA THARASE

வரவேணும் எனதரசே
மனுவேல் இஸ்ரேல் சிரசே

அருணோ தயம் ஒளிர் பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா

வேதா கருணா கரா மெய்யான பரா பரா
ஆதார நிராதரா அன்பான சகோ தரா
தாதாவும் தாய் சகலமும் நீயே
நாதா உன் தாபரம் நல்குவாயே

படியோர் பவ மோசனா பரலோக சிம்மாசனா
முடியா தருள் போசனா முதன் மா மறைவாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய்

வானோர் தொழும் நாதனே மறையாகம போதனே
கானாவின் அதீதனே கலிலேய வினோதனே
ஞானாகரமே நடு நிலை யோவா
நண்பா உனத நன்மையின் மகா தேவா

VANDE KADAIKAN PAARUMEN

வந்தே கடைக்கண் பாருமேன் - சர்வேசுரனே
வந்தே கடைக்கண் பாருமேன்

வந்தே கடைக்கண் பாரும் மானிடர் மீதிரங்கி
எந்தா துயரம் யாவும் எவ்விதமும் நீக்க

கொள்ளைநோய் மிகுத்ததின் கொடுமை பெருக்கமாச்சே
வள்ளலுன் சகாயத்தால் மாற்றும் கருணைத் தேவே

எண்ணா வேளை வாலரும் இறந்துபோறார் ஐயோ
கண்ணீர் சொரியும்மாந்தர் கலக்கம் அனைத்தும் போக்க

எங்கே விரைந் தோடுவோம் இறைவா உமை அல்லாமல்
எங்கள் தஞ்சம் வேறாரும் இல்லை சரணம் ஐயா

மானிடர் துயரத்தால் மறுகியே திரிகின்றோம்
ஏன் இந்தக் கஸ்தி யாவும் எந்தையே கண்பாருமேன்

எந்த மட்டும் இந்நோயால் ஈனர் எமை வாதிப்பீர்
அந்தி சந்தி அலறும் ஆதுலர் மீதிரங்கி

வாரும் கருணாகரா வந்தே கொள்ளை நோயதைத்
தீரும் இவ்வேளை தானே தீனா எம்மீதினின்றே

RAAJAN PAALAN PIRANTHANARAE

ராஜன் பாலன் பிறந்தனரே
தாழ்மையான தரணியிலே
ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரே
ஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்
தாழ்மையாய் அவதரித்தார் — ராஜன்

1. அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார்
அன்னல் ஏழையாய் வந்தார்
அவர் வாழ்வினில் மானிடரை
காக்க என்னிலே அவதரித்தார்
அன்னல் ஏழையாய் வந்தார் — ராஜன்

2. பாரினில் பாவம் போக்கவே பாங்குடன்
மானிட ஜென்மம் எடுத்தார்
அவர் பாதம் பணிந்திடுவோம்
பாலனின் அன்புக்கு எல்லை உண்டோ
மானிட ஜென்மம் எடுத்தார் — ராஜன்

RAAJAN THAAVEETHOORILULLA

1. ராஜன் தாவீதூரிலுள்ள
மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
கன்னி மாதா பாலன் தன்னை
முன்னணையில் வைத்தாரே
மாதா, மரியம்மாள் தான்
பாலன், இயேசு கிறிஸ்துதான்

2. வானம் விட்டுப் பூமி வந்தார்
மா கர்த்தாதி கர்த்தரே
அவர் வீடோமாட்டுக்கொட்டில்,
தொட்டிலோ முன்னணையே
ஏழையோடு ஏழையாய்
வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்

2. பாலனாய்க் கீழ்ப்படிந்தார்
பாலிய பருவம் எல்லாம் அன்பாய்
பெற்றோர்க்கு அடங்கினார்
அவர்போல் கீழ்ப்படிவோம்,
சாந்தத்தோடு நடப்போம்

4. பாலர்க்கேற்ற பாதை காட்ட
பாலனாக வளர்ந்தார்
பலவீன மாந்தன்போல
துன்பம் துக்கம் சகித்தார்
இன்ப துன்ப நாளிலும்
துணைசெய்வார் நமக்கும்

5. நம்மை மீட்ட நேசர் தம்மை
கண்ணால் கண்டு களிப்போம்
அவர் தாமே மோஷ லோக
நாதர் என்று அறிவோம்
பாலரை அன்பாகவே
தம்மிடத்தில் சேர்ப்பாரே

6. மாட்டுத் தொழுவத்திலல்ல
தெய்வ ஆசனத்திலும்
ஏழைக்கோலமாக அல்ல
ராஜ கிரீடம் சூடியும்
மீட்பர் வீற்றிருக்கின்றார்
பாலர் சூழ்ந்து போற்றுவர்

YUTHAM SEIVOR VAARUM KRISTHU VEERARE

1. யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!
வெற்றி வேந்தராக முன்னே போகிறார்!
ஜெயக் கொடி ஏற்றி போர் நடத்துவார்.
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!

2. கிறிஸ்து வீரர்கள், நீர் வெல்ல முயலும்;
பின்னிடாமல் நின்று ஆரவாரியும்!
சாத்தான் கூடம் அந்த தொனிக்கதிரும்!
நரகாஸ்திவாரம் அஞ்சி அசையும்!
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!

3. கிறிஸ்து சபை வல்ல சேனைபோன்றதாம்!
பக்தர் சென்ற பாதை செல்கின்றோமே நாம்;
கிறிஸ்து தாசர் யாரும் ஓர் சரீரமே;
விசுவாசம், அன்பு, நம்பிக்கை ஒன்றே!
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!

4. கிரீடம், ராஜ மேன்மை யாவும் சிதையும்,
கிறிஸ்து சபைதானே என்றும் நிலைக்கும்;
நரகத்தின் வாசல் ஜெயங்கொள்ளாதே
என்ற திவ்விய வாக்கு வீணாய்ப் போகாதே.
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!

5. பக்தரே, ஒன்றாக கூட்டம் கூடுமேன்;
எங்களோடு சேர்ந்து ஆர்ப்பரியுமேன்!
விண்ணோர் மண்ணோர் கூட்டம் இயேசு ராயர்க்கே
கீர்த்தி, புகழ், மேன்மை என்றும் பாடுமே.
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!

YAAR VENDUM NATHA

யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணாண வாழ்க்கை வெறுத்தேனையா

உலகத்தின் செல்வம் நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ - பின்னை
ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும்

சிற்றின்ப மோகம் சீக்கிரம் போகும்
பேரின்ப நாதா போதாதா
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லால்

உம்மோடல்லாது வாழ்வது ஏன்
உம் உள்ளம் மகிழாது வாழ்வது ஏன்
மனம் போன வாழ்கை வாழ்க்கையல்ல
வாழ்வேனே என்றும் உமக்காக நான்

என்னைத் தள்ளினால் நான் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால்
கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்