Thursday, May 17, 2018

OPPILLA THIRU IRA LYRICS


1. ஒப்பில்லா – திரு இரா
இதில்தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
அன்பின் அதிசயமாம்
2. ஒப்பில்லா – திரு இரா
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டு விண்ணுக்குயர்த்த தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்
எத்தனை தாழ்த்துகிறார்
3. ஒப்பில்லா – திரு இரா
ஜென்மித்தார் மேசியா
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்

NAM YESU NALLAVAR LYRICS


நம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்தரிப்போம்
1. அதிசயமானவர் ஆறுதல் தருகிறார்
சர்வ வல்லவர் சமாதானம் தருகிறார்
2. கண்ணீரைக் காண்கிறார் கதறலைக் கேட்கிறார்
வேதனை அறிகிறார் விடுதலை தருகிறார்
3. எதிர்காலம் நமக்குண்டு எதற்கும் பயமில்லை
அதிகாரம் கையிலே ஆளுவோம் தேசத்தை
4. நொறுங்குண்ட நெஞ்சமே நோக்கிடு இயேசுவை
கூப்பிடு உண்மையாய் குறையெல்லாம் நீக்குவார்
5. நண்பனே கலங்காதே நம்பிக்கை இழக்காதே
கண்ணீரைத் துடைப்பவர் கதவண்டை நிற்கிறார்
6. எத்தனை இழப்புகள் ஏமாற்றம் தோல்விகள்
கர்த்தரோ மாற்றுவார் கரம்நீட்டித் தேற்றுவார்
7. என் இயேசு வருகிறார் மேகங்கள் நடுவிலே
மகிமையில் சேர்த்திட மறுரூபமாக்குவார்

NAAN NANAGAVAY VANDIROUKIRAIN LYRICS

நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா
உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொள்வீரா
1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
ஆபிரகாமைப் போல் விசுவாசியில்லையே
தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
நான் நானாக தானாக வந்திருக்கிறேன்
2. மார்த்தாளைப்போல் உம்மை சேவிக்கலையே
மரியாளைப்போல் உம்மை நேசிக்கலையே
எஸ்தரைப்போல் எதையும் செய்யவில்லையே
எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்

NAAN NADANTHU VANTHA PATHAIGAL LYRICS


நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள் (2)
நடக்க முடியல டாடி நடக்க முடியல – என்னை
தாங்கிக் கொள்ளுங்க கரத்தில் ஏந்திக் கொள்ளுங்க
என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன் ஓட முடியல
என் மன பெலத்தால் நடந்து பார்த்தேன் நடக்க முடியல
என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன் சுமக்க முடியல
என் கால் பெலத்தால் கடந்து பார்த்தேன் கடக்க முடியல — நடக்க
என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன் ஆள முடியல
என் பண பெலத்தால் படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல
என் சொல் பலத்தால் சாதிக்கப் பார்த்தேன் ஒன்றும் முடியல
என் வாய் பெலத்தால் வாழ பார்த்தேன் வாழ முடியல — நடக்க

NAM DEVAN ANBULLAVAR LYRICS


நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர்
நம் தேவன் நீதிபரர் நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே
1. நன்மை ஏதும் நம்மில் ஒன்றும் இல்லையே
என்ற போதும் நம்மை நேசித்தாரே
ஆ..அந்த அன்பில் மகிழ்வோம்
அன்பரின் பாதம் பணிவோம்
2. அத்திமரம் துளிர் விடாமல் போனாலும்
திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும்
ஆ..அவர் காயம் நோக்குவோம்
அதுவே என்றும் போதுமே
3. வான மீதில் இயேசு இறங்கி வருவார்
தேவ தூதர் போல மகிமை அடைவோம்
ஆ … எங்கள் தேவா வாருமே
அழைத்து வானில் செல்லுமே
4. அல்லேலூயா கீதம் நாம் என்றும் பாடுவோம்
ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம்
ஆ..அந்த நாள் நெருங்குதே
நினைத்தால் நெஞ்சம் பொங்குதே

NAM DEVANAI THUTHITHU PAADI LYRICS


நம் தேவனைத் துதித்துப்பாடி
அவர் நாமம் போற்றுவோம்
களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றுவோம்
1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
அவர் நாமம் போற்றுவோம்
துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கி
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்
2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
அவர் நாமம் போற்றுவோம்
நல் ஆவியின் கனிகள் ஈந்து
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்
3. மேலோக தூதர் கீதம் பாடி
அவர் நாமம் போற்றுவோம்
பேரின்ப நாடு தன்னில் வாழ
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்

STHOTHIRAM YAESU THEVA LYRICS

ஸ்தோத்திரம் இயேசு தேவா
ஸ்தோத்திரமே நாதா           ஆ!  ஆ!!
ஸ்தோத்திரம் தேவா

               சரணங்கள்
1.      அன்புடன் அருளும் ஆழ்ந்த கிருபையும்
  என் போல் ஈனருக்காமோ      -    ஆ!
  உன் போல் ஒருவரையும் உலகெங்கும் காணேன்
  தன் உயிர் தந்த தயாளா        -  ஆ!  ஆ!!

2.   மீட்பின் செயலால் மீண்டும் பிறக்கா
    ஆட்கொண்ட அருள் நிறை வேதா
    காட்டினீர் கருணை கல்வாரி தனிலே
    நாட்டினீர் என்னில் உம் அன்பை – ஆ!  ஆ!!

3.  துன்மார்க்கம் நிறை துரோகியாம் என்னை நீர்
   நல் மார்க்கம் தன்னில் சேர்த்தீர்
   என் மார்க்கம் இனி இல்லையே ஏதும்
   உம் மார்க்கம் ஒன்றே போதும்      - ஆ!  ஆ!!

4.  இருள்தனை நீக்கி இருதயத்தில் இருந்ததாம்
   மருள்தனை மாற்றிய மன்னா
   அருள் ஒளி வீச அகம் வந்த ராஜா
   திருவழி திறந்த தியாகா        -  ஆ!    ஆ!!

JEEVA THANNEER ODUM NADHI LYRICS

பல்லவி

ஜீவத் தண்ணீர் ஓடும் நதி கண்டேன்
தாகம் தீர்க்க நானும் ஓடி வந்தேன்
நேசர் இயேசுவே என்றேன்    -        ஜீவ

 சரணங்கள்

1.  தாகமாய் இருப்பவர் அனைவருமே
என்னிடம் வாருங்கள் என்றாரே
பாவமே நீங்கிடும் வருவதினால்

பாக்கியம் வாழ்வில் காண்பேனே

VAREERO VAAN PATHIYAE LYRICS

  பல்லவி

வாரீரோ வான்பதியே சேரீரோ திருமதியே
தீரீரோ எம் குறைவை தாரீரோ உம் நிறைவை

     சரணங்கள்

1.    பூ உலகில் போற்றும் உம்மை
புகழ்ந்து மேலோகில் வாழ்த்த எம்மை
தீ உலகில் நின்று தீவிரமாய்
சேர்த்துக் கொள்வீரே உம்மிடமாய் - வாரீரோ

2.     கண்டதில்லை நேர் முகமாய்
கல்வாரியின் காந்தனை நாம்
கண்டிடவே முகமுகமாய்
கர்த்தா உன் சாயல் முழுமையுமாய்வாரீரோ

3.     காயம் கொண்ட கால் கரமும்
கருணை பொங்கும் விலாபுரமும்
நேயன் உன் அங்க மகத்துவமாம்
நீர் வரும் போதுள்ளம் பொங்கிடுமாம்வாரீரோ

4.     இருப்பதுவும் நாம் இவ்வுலகில்
இயேசுவே உம் மா தயவில்
விருப்பம் முழுவதும் உம் வரவில்
வேந்தனே வாருமே நீர் விரைவில்வாரீரோ

5.     இயேசுவே எம் இன்ப முகம்
ஏழையாம் காண மகிழும் முகம்
வீசும் மின்னொளியென விசும்பினில் நீர்

வேகமே வந்தெம்மை சேர்த்துக் கொள்வீர்வாரீரோ

IMMATTUM KIRUBAI THANTHA DEVA LYRICS

பல்லவி

      இம்மட்டும் கிருபை தந்த தேவா
      இனி மேலும் கிருபை தாரும் மூவா
      இன்றும் என்றும் உம்மில் நான் நிற்கவே
      இயேசு நீர் என்னில் உருவாகவேஉம்மை காணவே

 சரணங்கள்

1. சோதிக்கப்பட்ட தூய தேவா
சோதனையில் பெலன் தாரும் மூவா
துன்பங்கள் தொல்லைகள் சூழ்கையிலே
இன்ப ஒளி என்னில் வீசியே
இருள் நீக்குமே                        -        இம்

2. பக்தியில்லை நான் ஆராதிக்க
யுக்தியில்லை உம்மை துதிக்க
சத்திய ஆவியின் வல்லமையால்
சக்தியைத் தாரும் உத்தமராய்
உம்மை துதிக்க                       -        இம்

3. நன்றியால் உள்ளம் பூரிக்குதே
என்றும் நின் கிருபை பொழிவதினால்
அன்றுன் உதிரம் சிந்தினதால்
இன்றும் உம் அன்பு பெருவெள்ளமாய்
புரண்டோடுதே                        -        இம்

4. சத்துருவான சாத்தான் என்னை
நித்தம் நெருங்கி ஏய்க்கையிலே
சாத்தானை ஜெயம் பெற்றிடவே
சத்திய ஆவி வல்லமையை
என்னில் ஊற்றும்                     -        இம்

5. ஜெபத்தின் ஆவி என் அகத்தில் ஊற்றும்
ஜெபத்தினால் உலகை நான் ஜெயிக்க
உன்னதா உலகை நீர் ஜெயித்தீர்
உம் நாமத்தினாலே நான் ஜெயிப்பேன்

அல்லேலூயா                        -        இம்

IRAIVAN THANTHA VARTHTHAI LYRICS

பல்லவி

இறைவன் தந்த வார்த்தை
இயேசுவின் வடிவானதேஅவர்
பேசும் எந்த சொல்லும்
வாழ்வின் வழியானதே

சரணங்கள்

1.  யாவீரு மகளான சிறுமியும்
    நாயீனூர் விதவையின் மைந்தனும்
    லாசரு எனும் ஓர் நண்பனும்
    உயிரோடு எழுந்திட உதவினார்

ஒளியும் வாய்மையும் இயேசுவே
வழியும் வாழ்வும் இயேசுவே  - இறைவன்

2.  தொழு நோய் கொடுமைகள் தீரவே
    அழிவின் பேய்கள் ஓடவே
    உடலின் குறைகள் மாறவே
    இறைவன் இயேசு உதவினார்

ஒளியும் வாய்மையும் இயேசுவே

வழியும் வாழ்வும் இயேசுவே  - இறைவன்

THAGAM THEERKKUM JEEVATHANNEER LYRICS

பல்லவி
      தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர்
      தரணியில் நானும் கண்டேன்
      பாசம் கொண்ட நேசர் அன்பால்
      பாவி என் தாகம் தீர்த்திடுவேன்   -           தாகம்
சரணங்கள்
1.   கல்வாரி மலையின் மேட்டினிலே
     நேசர் இயேசுவின் காயங்களால்
     ஜீவ நதி தண்ணீர் ஓடிடுதே
     மூழ்கியே தாகம் நான் தீர்த்திடுவேன் -          தாகம்

2.   நானோ நல்கிடும் ஜீவத்தண்ணீரை
     நாளும் பருகி வாழ்வாயானால்
     தாகம் இல்லை என்றும் இல்லையே
     தஞ்சம் இயேசு உனக்கு எல்லையே  -            தாகம்

KATHAI ONNU SOLLA PORAENGA LYRICS

 பல்லவி
      கதை ஒண்ணு சொல்லப் போறேங்க
      இயேசு சொன்னக் கருத்தை அதில்
      நல்லாவே கேளுங்க                         - கதைஒண்ணு

சரணங்கள்
1.   இடையருக்கு சொந்தம் ஆடுகள் நூறு
      இந்த ஊரில் அவருக்கு நல்லொதொருப் பேரு
      காலையிலே மந்தைப் போகும் அழகினைப் பாரு
      காடு மேடு செல்லும் அவை சத்தத்தினைக் கேளு         - கதை ஒண்ணு

2.   மாலை வந்த போது ஆடு ஒன்றைக் காணோம்
      மேடு பள்ளம் தாண்டி தேடிச் சென்றார் மேய்ப்பர்
      தப்பிப்போன ஆட்டை அங்குக் கண்டு மகிழ்ந்தார்
      தட்டிக் கொடுத்து அதனையே திருப்பிக் கொண்டு வந்தார்  - கதை ஓண்ணு

3.   நாதர் இயேசு மீட்பர் நல்ல மேய்ப்பர் அறிவாய்
      நாளும் பொழுதும் நம்மை நன்றாய் அவர் மேய்ப்பார்
      பாவக்காட்டில் ஓடும் உன்னை என்னைத் தேடி

      பாசத்துடன் அழைத்து பரம நன்மையும் தருவார்          -  கதை ஒண்ணு

YESU SONNATHAI KEL LYRICS

 பல்லவி

இயேசு சொன்னதைக் கேள்
இயேசு வாழ்ந்ததைப் பார்
இன்பமாகவே என்றும் வாழவே
 உண்டு மார்க்கமே வா!        -   இயேசு

 சரணங்கள்

1.     அன்பினால் பகையும் வெல்லலாம்
         நன்று செய் நலம் காணலாம்
         பண்போடுப் பழகுப் பணிவொடுப் பேசு
         பொன்மொழி இது போல் ஆயிரம் -   இயேசு

2.     அன்பினால் வாழ்ந்துக் காட்டினார்
         தொண்டுகள் யாவும் ஆற்றினார்
         இன்னுயிரும் தந்தார் உயிர்த்தே எழுந்தார்

         உலகினைக் காக்கும் தேவனாம் -    இயேசு