Monday, August 31, 2015

KIRUBAI PURINTHANAI AAL NEE PARANE

கிருபை புரிந்தெனை ஆள் - நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள் - நிதம்

சரணங்கள்

1. திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து,
வரில்நரனாகிய மா துவின் வித்து! --- கிருபை

2. பண்ணின பாவமெலாம் அகல்வித்து,
நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து --- கிருபை

3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு,
எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு --- கிருபை

4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி --- கிருபை

5. தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
நல்வினையே செய் திராணி அளித்து --- கிருபை

6. அம்பரமீதுறை வானவர் போற்ற
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த --- கிருபை

KIRUBAI VENDUM NAADHA YESUVE LYRICS

கிருபை வேண்டும் நாதா - இயேசுவே உம் திவ்விய
கிருபை வேண்டும் நாதா - இவ்வாராதனையில்

1. உம் கிருபை தான் வேண்டும் சொர்லோக ராஜாவே
உம் கிருபை யல்லாது எங்களால் ஆகாது --- கிருபை

2. ஏழு பிசாசுகள் ஓட்டியே மரியாளை
இன்பமாய் நேசித்து அன்பால் நிரப்பின --- கிருபை

3. இருவராம் சீசரின் சஞ்சலங்கள் நீக்கி
இருதயம் குளிர்ந்திட இனிமையாய் பேசின --- கிருபை

4. பாவத்தை இனிமேல் செய்யாதே என்றுமே
பாவியாம் ஸ்திரிக்கு நேசமாய்க் கூறின --- கிருபை

5. பெந்தே கொஸ்தே நாளில் அன்பராம் சீஷர் மேல்
உந்தன் வரங்களை மாரிபோல் பொழிந்தே --- கிருபை

6. தாசனாம் ஸ்தேவானின் சாயலை மாற்றின
நேசமாய் கிருபையை எம்மேலும் ஊற்றிடும் --- கிருபை

7. வருகிறேன் சீக்கிரம் என்றுரைத்த நேசா
தருகிறேன் என்னையே ஆசீர்வதித்திட --- கிருபை

8. அடியாராம் ஏழைகள் உம்மைச் சந்தித்திட
முடிவு வரைக்கும் , காத்திடும் கிருபையால் --- கிருபை

KIRUBAIYITHE DEVA KIRUBAIYITHE

கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்
1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே
ஜீவிய பாதையிலே - இயேசுபரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே --- கிருபையிதே

2. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே
மகிமை சேர்ந்தனரே - பூரணமாய்
காத்தனரே கர்த்தர் எமை
கருணையினால் தூய சேவை செய்ய --- கிருபையிதே

3. அன்பின் அகலமும் நீளம் உயரமும்
ஆழமும் அறிந்துணர - அனுக்கிரகித்தார்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் --- கிருபையிதே

4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் - பெற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
அசையாது அழைப்பினை காத்துக்கொள்வோம் --- கிருபையிதே

5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
வாருமென்றழைக்கின்றாரே - வாருமென்பீர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் --- கிருபையிதே

6. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
வியாதியும் வேதனையும் - வைத்தியராய்
இயேசுவல்லால் சார்ந்திடவோ
இகமதில் வேறெமக் காருமில்லை --- கிருபையிதே

KIRUBAIYE UNNAI INNAL VARAIYUM KATHATHU

கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது
என் கிருபையே
1. பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன்
பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான்
எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த --- கிருபையே

2. சோதனையாலே சோர்ந்திடும்போது
சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன்
ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன்
ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன் --- கிருபையே

3. ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே
ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன்
ஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்
என்றும் உன்னை என் சொந்தமாக்கினேன் --- கிருபையே

4. ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன்
செப்பமாக உன் கரம் பிடித்தேன்
ஜெய ஜெயகீதங்கள் தொனித்திடச் செய்தேனே
சேவை செய்யவும் கிருபை தந்தேனே --- கிருபையே

5. என்றென்றுமாக என் கிருபை காட்ட
கொண்டேன் உன்னை இம்மண்னில் பிரித்து
என் அரும் மகனே காப்பேனே உன்னை நான்
உன் தந்தை நான் உன்னை விடேனே --- கிருபையே

KRISHTHAVA ILLARAME SIRANDHIDA

கிறிஸ்தவ இல்லறமே - சிறந்திடக்
கிருபை செய்வீர், பரனே!

அனுபல்லவி

பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்
பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல --- கிறிஸ்தவ

சரணங்கள்

1. ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,
திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,
சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்,
சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் --- கிறிஸ்தவ

2. ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,
உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல,
நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி,
நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் --- கிறிஸ்தவ

3. அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்,
அருமையாக நிறைந்த அயலார்க் கொளிவிளக்காய்த்,
துன்பஞ் செய்கிற பலதொத்து வியாதிகளைத்,
தூரந்துரத்தும் வகை சொல்லிச் சேவையைச் செய்து --- கிறிஸ்தவ

4. மலையதின் மேலுள்ள மாளிகையைப் போலவே,
மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நின்று,
கலைஉடை உணவிலும், கல்வி முயற்சியிலும்,
கர்த்தருக் கேற்ற பரிசுத்தக் குடும்பமாகக் --- கிறிஸ்தவ

KRISHTHORE ELLORUM KALIKOORNTHU PAADI

1. கிறிஸ்தோரே எல்லாரும்
களிகூர்ந்து பாடி
ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்
தூதரின் ராஜா
மீட்பராய்ப் பிறந்தார்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

2. மகத்துவ ராஜா,
சேனையின் கர்த்தாவே,
அநாதி பிறந்த மா ஆண்டவா;
முன்னணை தானோ
உமக்கேற்கும் தொட்டில்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

3. விண் மண்ணிலும் கர்த்தர்
கனம் பெற்றோர் என்று
தூதாக்களே பாக்கியவான்களே
ஏகமாய்ப் பாடி
போற்றி துதியுங்கள்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

4. அநாதி பிதாவின்
வார்த்தையான கிறிஸ்தே!
நீர் மாமிசமாகி இந்நாளிலே
ஜென்மித்தீர் என்று
உம்மை ஸ்தோத்திரிப்போம்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

GUNAPADU PAAVI DEVA

குணப்படு பாவி, தேவ
கோபம் வரும் மேவி - இப்போ

அனுபல்லவி

கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
காலமிருக்கையில் சீலமதாக நீ

சரணங்கள்

1. கர்த்தனை நீ மறந்தாய் - அவர்
கற்பனையைத் துறந்தாய்,
பக்தியின்மை தெரிந்தாய் - பொல்லாப்
பாவ வழி திரிந்தாய்,
புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,
உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்

2. துக்கமடையாயோ? பாவி
துயரமாகாயோ?
மிக்கப் புலம்பாயோ? - மனம்
மெலிந்துருகாயோ?
இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ?
தக்க அருமறைப் பக்கந் தொடராயோ?

3. தாவீ தரசனைப்போல் - தன்னைத்
தாழ்த்தும் மனாசேயைப்போல்
பாவி மனுஷியைப்போல் - மனம்
பதைத்த பேதுருபோல்,
தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று
கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி

4. உன்னை நீ நம்பாதே! - இவ்
வுலகையும் நம்பாதே;
பொன்னை நீ நம்பாதே - எப்
பொருளையும் நம்பாதே;
தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
நின்னையும் ரட்சிப்பார் , அனைவரைப் பற்று

KUTHUGALAM NIRAINTHA NANNAL

குதூகலம் நிறைந்த நன்னாள்
நடுவானில் மின்னிடுமே
இதுவரை இருந்த துன்பமில்லை
இனி என்றுமே ஆனந்தம்
1. தள கர்த்தனாம் இயேசு நின்று
யுத்தம் செய்திடுவார் நன்று
அவர் ஆவியினால் புது பெலனடைந்து
ஜெயகீதங்கள் பாடிடுவோம் --- குதூகலம்

2. புவி மீதினில் சரீர மீட்பு
என்று காண்போம் என ஏங்கும்
மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்
மணவாட்டியாய்ச் சேர்த்திடவே --- குதூகலம்

3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக
அவர் வருகையை எதிர் நோக்கி
நவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய்
நாம் ஆயத்தமாகிடுவோம் --- குதூகலம்

4. ஜீவ ஒளி வீசும் கற்களாக
சீயோன் நகர்தனிலே சேர்க்க
அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார்
அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் --- குதூகலம்

5. தேவ தூதர்கள் கானமுடன்
ஆரவார தொனி கேட்கும்
அவர் கிருபையினால் மறுரூபமாக
நம்மை இனிதுடன் சேர்த்திடுவார் --- குதூகலம்

KUMBIDUGIREN NAAN KUMBIDUGIREN ENGAL LYRICS

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் - எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்

சரணங்கள்
1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் - எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்
நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் - பவ
நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்
தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் - நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்
உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் - தொனித்
தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் --- கும்பிடு

2. ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் - ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்
திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் - தவிது
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்
குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் - யூதர்
குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன்
அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் - என
தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன் --- கும்பிடு

ITHU SINTHIKKUM KAALAM SEYALPADUM NERAM

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மௌனமாயிருக்காதே
மௌனமாயிருக்காதே (2) - நீ

சரணங்கள்

அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்
அறுவடை இழப்பாயே
ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புத்தான் வருமோ?

இந்தியர் இயேசுவை அறிந்திடும் காலம்
இதுதான் இதுதானே
இந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புதான் வருமோ?

பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது?
கணக்குக் கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ?

KURUSINIL THONGIYE KURUDHIYUM VADIYA LYRICS

குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே - நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி,
கொள்ளாய் கண் கொண்டு

சரணங்கள்

1. சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ! - தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,
சேனைத்திரள் சூழ --- குருசினில்

2. பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன் போல் தொங்க - யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை --- குருசினில்

3. சந்திர சூரிய சசல வான் சேனைகள்
சகியாமல், நாணுதையோ! - தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ? -- குருசினில்

4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே - அவர்
தீட்டிய திட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூறோடுது பார் --- குருசினில்

5. எருசலேம் மாதே, மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ? - நின்
எருசலையதிபன் இள மணவாளன்
எடுத்த கோல மிதோ? --- குருசினில்

paadiye paranai thuthi maname

பாடியே பரனை துதி மனமே, துதி மனமே
கொண்டாடி துதி தினமே - (2)

சரணங்கள்

1. சென்ற நாளெல்லாம் கருத்துடன் காத்த
நாதனை துதி மனமே
நாளுக்கு நாளாய் செய்பல நன்மைக்காய்
நாதனை துதி மனமே
ஆதரவாய் எம்மை காத்ததினாலே
தேவனை துதி மனமே --- பாடியே

2. நானில தனிலெம் பாவங்கள் போக்கிய
நாதனை துதி மனமே
என்றும் எம்மேல் வைத்த மாறிடா அன்பிற்காய்
நாதனை துதி மனமே
கானகமதிலே ஜீவ ஊற்றான
தேவனை துதி மனமே --- பாடியே

KOOR AANI DEGAM PAAYA

1. கூர் ஆணி தேகம் பாய
மா வேதனைப்பட்டார்
பிதாவே, இவர்கட்கு
மன்னிப்பீயும் என்றார்.

2. தம் ரத்தம் சிந்தினோரை
நல் மீட்பர் நிந்தியார்;
மா தெய்வ நேசத்தோடு
இவ்வாறு ஜெபித்தார்.

3. எனக்கே அவ்வுருக்கம்
எனக்கே அச்செபம்;
அவ்வித மன்னிப்பையே
எனக்கும் அருளும்.

4. நீர் சிலுவையில் சாக
செய்ததென் அகந்தை;
கடாவினேன், இயேசுவே,
நானுங் கூர் ஆணியை.

5. உம் சாந்தக் கண்டிதத்தை
நான் நித்தம் இகழ்ந்தேன்;
எனக்கும் மன்னிப்பீயும்,
எண்ணாமல் நான் செய்தேன்.

6. ஆ, இன்ப நேச ஆழி!
ஆ, திவ்விய உருக்கம்!
நிந்திப்போர் அறியாமல்
செய் பாவம் மன்னியும்.

KEL JENMITHA RAAYARKE

1. கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே;
அவர் பாவ நாசகர்,
சமாதான காரணர்,
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர்போல் கெம்பீரித்து
பெத்லெகேமில் கூடுங்கள்,
ஜென்ம செய்தி கூறுங்கள்.
கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே.

2. வானோர் போற்றும் கிறிஸ்துவே,
லோகம் ஆளும் நாதரே,
ஏற்ற காலம் தோன்றினீர்,
கன்னியிடம் பிறந்தீர்.
வாழ்க நர தெய்வமே,
அருள் அவதாரமே!
நீர், இம்மானுவேல், அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்.

3. வாழ்க, சாந்த பிரபுவே!
வாழ்க, நீதி சூரியனே!
மீட்பராக வந்தவர்,
ஒளி, ஜீவன் தந்தவர்;
மகிமையை வெறுத்து,
ஏழைக் கோலம் எடுத்து,
சாவை வெல்லப் பிறந்தீர்,
மறு ஜென்மம் அளித்தீர்.

AANIGAL PAINTHA KARANGALAI VIRITHE

ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே
ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே

சரணங்கள்

1. பார் ! திருமேனி வாரடியேற்றவர்
பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே
பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்
பயமின்றி வந்திடுவாய் --- ஆணிகள்

2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்
நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே
உணர்ந்திதையுடனே உன்னதனண்டை
சரண்புகுவாய் இத்தருணம் --- ஆணிகள்

3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே
மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே
உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர
கிருபையும் அளித்திடுவார் --- ஆணிகள்

4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்
பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே
மறுரூப நாளின் அச்சாரமதுவே
மகிமையும் அடைந்திடுவாய் --- ஆணிகள்

5. இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர்
இரட்சகர் வேறு இகமதிலுண்டோ
அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே
அவரே உன் நாயகரே --- ஆணிகள்

ALLELUJAH AANANTHAME NAAN LYRICS

அல்லேலூயா ஆனந்தமே
நான் அல்லேலூயா பாடி ஆனந்திப்பேன்

அனுபல்லவி
அல்லேலூயா ஆனந்தமே அருமை இரட்சகர் என்னை
அன்போடழைத்தனர் பாவங்கள் நீக்கினரே

சரணங்கள்
1. இனி துன்பம் இல்லையே
இயேசு மகா ராஜன் எல்லோருக்கும் உண்டு
இன்பம் என்றென்றுமே - அல்லேலூயா

2. தினம் போற்றிப் பாடுவேன்
இவ்வுலகை போலே விண்ணுலகில் ஓர் நாள்
இணைந்து பாடிடுவேன் - அல்லேலூயா

KOLGATHA MALAIMEL THONDRUTHOR SILUVAI

1. கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவை
அல்லல் பழிப்பின் சின்னமதாம்
நீசப் பாவிகட்காய் நேசர் மாண்டாரதில்
நேசிப்பேன் அத்தொல் சிலுவையை

பல்லவி

அந்தச் சிலுவையை நேசிப்பேன்
பெலன் ஓய்ந்து நான் சாகும் வரை
தொல் சிலுவையை நான் பற்றுவேன்
பின் அதால் க்ரீடத்தை அணிவேன்
2. தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்து
உலகோர் பழித்த குருசை
கல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய்
கவர்ந்த தென்னுள்ளத் தையது -- அந்தச் சிலுவையை

3. என் பாவம் மன்னிக்க என்னைச் சுத்தமாக்க
நேசர் மாண்ட சிலுவையதோ !
தூய ரத்தம் தோய்ந்த அந்தச் சிலுவையின்
அழகெத்தனை மாட்சிமை பார் ! --- அந்தச் சிலுவையை

4. குருசின் இழிவை மகிழ்வாய் சுமந்தே
மேன்மை பாராட்டுவேன் நிந்தையில்
பின்னால் மோட்சலோகில் நேசர் கூட்டிச் சென்று
பங்களிப்பார் தம் மகிமையில் --- அந்தச் சிலுவையை

SAGOTHIRAR ORUMITTHU

1. சகோதரர்க ளொருமித்துச்
சஞ்சரிப்பதோ எத்தனை
மகா நலமும் இன்பமும்
வாய்த்த செயலாயிருக்குமே

2. ஆரோன் சிரசில் வார்த்த நல்
அபிஷேகத்தின் தைலந்தான்
ஊறித் தாடியில் அங்கியில்
ஒழுகுமானந்தம் போலவே
3. எர்மோன் மலையின் பேரிலும்
இசைந்த சீயோன் மலையிலும்
சேர்மானமாய்ப் பெய்கின்ற
திவலைப் பனியைப் போலவே

4. தேசம் மார்க்கம் இரண்டிற்கும்
சேனை எகோவா தருகிற
ஆசீர்வாதம் சீவனும்
அங்கே என்றுமுள்ளதே

SATHAM KETTU SITHAM SEYYA ALAIKIRARE

சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே --- இயேசு
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே
சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே
காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது - ஆ ஆ ஆ
கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய்
வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே ( 2 )

1. கற்பனைகள் யாவும் நன்றல்லவோ - ஆ- ஆ- ஆ- ஆ
கற்பனைகள் யாவும் நன்றல்லவோ அதைக் கடைப்பிடித்தாக வேண்டுமே கீழ்ப்படிந்தவர்கள் அவர்க்குச் சொந்த சம்பத்து அல்லவோ
கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும்
கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெருகும் --- சத்தம்

2. தேவை அதிகம் ஏராளம் - ஆ- ஆ- ஆ- ஆ
தேவை அதிகம் ஏராளம் ஏராளம் ஏராளமே
குஜராத், பீகார், இமயத்தில் ஏராளம் ஏராளமே
இராஜஸ்தான் , காஷ்மீர் , ஒரிஸாவில்
நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார்? --- சத்தம்

3. உலக மாமிசப் பிடியினின்றும் - ஆ- ஆ- ஆ- ஆ
உலக மாமிசப் பிடியினின்றும் பிசாசின் தந்திர வலையினுன்றும்
விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம் சாத்தானை முறியடிப்போம்
உப்பைப்போல கரைந்திடுவோம்
மெழுகைப் போல உருகிடுவோம் --- சத்தம்

4. வெற்றியே தரும் ஆண்டவர்க்கு - ஆ- ஆ- ஆ- ஆ
வெற்றியே தரும் ஆண்டவர்க்கு நம்மை காணிக்கையாக்கிடுவோம்
உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே காணிக்கையாக்கிடுவோம்
தேசம் இயேசுவைக் கண்டுவிடும்
சபைகள் ஏராளம் பெருகிவிடும் --- சத்தம்

SATHAI NISHKALAMAI SAMIYA MUMMILA

1. சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய மும்மில தாய்ச்
சித்தாயானந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
எத்தால் நாயடியேன் , கடைத்தேறுவனென் பாவந்தீர்ந்து
அத்தாவுன்னை யல்லா லெனக்கார் துணை யாருறவே?

2. எம்மாவிக்குருகி உயிரீந்து புரந்த தற்கோர்
கைமாறுண்டு கொலோ? கடைகாறும் கையடையாய்
சும்மா ரஷணை செய் சொல் சுதந்தரம் யாதுமிலேன்
அம்மானுன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே?

3. ஈண்டே யென்னுள்ளத்தில் விசுவாச விளக்கிலங்கத்
தூண்டா யென்னிலந்தோ மயல் சூழ்ந்து கெடுத்திடுங்காண்
மாண்டா யெம் பிழைக்காய் உயிர்த்தாயெமை வாழ்விக்கவே
ஆண்டா யுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே?

4. மையார் கண்ணிருண்டு செவி வாயடைத்துக் குழறி
ஐயால் மூச்சொடுங்கி உயிராக்கை விட்டே கிடும்நாள்
நையேல் கை வெகிவேனுனை நாணுண் பஞ்சலென
ஐயா உன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே?

5. திரைசேர் வெம்பவமாங் கடல் மூழ்கிய தீயரெமைக்
கரை சேர்த்துய்க்க வென்றே புணையாயினை கண்ணிலியான்
பரசேன் பற்றுகிலேனெனைப் பற்றிய பற்றுவிடாய்
அரசேயுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே

6. தாயே தந்தை தமர் , குரு சம்பத்து நட்பெவையும்
நீயே எம் பெருமான் கதிவேறிலை நிண்ணயங்காண் ,
ஏயே வென்றி கழுமுலகோடெனக் கென்னுரிமை
ஆயேவுன்னை அல்லாலெனக் கார் துணை யாருறவே?

SATHIYA VEDATHAI DHINAM DHIYANI

சத்திய வேதத்தைத் தினம் தியானி
சகல பேர்க்கும் அதபிமானி

அனுபல்லவி

உத்தமஜீவிய வழிகாட்டும்
உயர்வானுலகில் உனைக்கூட்டும் --- சத்திய

சரணங்கள்

1. வாலிபர்தமக்கூண் அதுவாகும்
வயோதியர்க்கும் அதுணவாகும்
பாலகர்க்கினிய பாலும் அதாம்
படிமீ தாத்மபசி தணிக்கும் --- சத்திய

2. சத்துருப் பேயுடன் அமர்புரியும்
தருணம் அதுநல் ஆயுதமாம்
புத்திரர் மித்திரரோடு மகிழும்
பொழுதும் அதுநல் உறவாகும் --- சத்திய

3. புலைமேவிய மானிட ரிதயம்
புனிதம் பெறுதற்கதுமருந்தாம்
நிலையா நரர்வாணாள் நிலைக்க
நேயகாய கற்பம் அதாம் --- சத்திய

4. கதியின் வழிகாணாதவர்கள்
கண்ணுக்கரிய கலிக்கம் அது
புதிய எருசாலேம்பதிக்குப் போகும்
பயணத்துணையும் அது --- சத்திய

SATHIYA VEDAM BAKTHARIN GEETHAM

சத்திய வேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்

அனுபல்லவி

எத்தனை துன்பம் துயரம் வந்தும்
பக்தனைத் தேற்றிடும் ஔஷதம்

சரணங்கள்

1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்
சுத்தம் பசும்பொன் தெளிந்திடும் தேன்
இதயம் மகிழும் கண்கள் தெளியும்
இருண்ட ஆத்மா உயிரடையும்

2. பேதைகளிடம் ஞானம் அருளும்
வேத புத்தகம் மேன்மை தரும்
இரவும் பகலும் இதன் தியானம்
இனிமை தங்கும் தனிமையிலும்

3. வேதப் பிரியர் தேவ புதல்வர்
சேதமடையா நடந்திடுவார்
இலைகள் உதிரா மரங்கள் போல
இவர்கள் நல்ல கனி தருவார்

4. உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
கடிந்துக் கொள்ளும் கறைகள் போக்கும்
கனமடைய வழி நடத்தும்

5. கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
கன் மலையையும் நொறுக்கிடுமே
இதய நினைவை வகையாய் அறுக்கும்
இரு புறமும் கருக்குள்ளதே

6. வானம் அகலும் பூமி அழியும்
வேத வசனம் நிலைத்திருக்கும்
பரமன் வேதம் எனது செல்வம்
பரவசம் நிதம் அருளும்

SINGARA MAALIGAIYIL JEYA GEETHANGAL

சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன்

1. ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் – அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம்

2. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்
துதியின் உடையுடனே அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம்

3. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் – அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவார்

4. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடி
புன்னகை பூத்திடுவோம் புது
எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஒழித்திடுவோம்

5. அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கிறதே – அவர்
வரும்வேளை யறியாதிருப்பதால் எப்போதும்
ஆயத்தமாயிருப்போம்

SANTHOSAM PONGUTHE

சந்தோஷம் பொங்குதே (2)
சந்தோஷம் என்னில் பொங்குதே
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே
1. வழி தப்பி நான் திரிந்தேன் - பாவப்
பழியதைச் சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே
அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன்
பாவம் நீங்கிற்றே --- சந்தோஷம்

2. சத்துரு சோதித்திட தேவ
உத்திரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார்
தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல ஏசு எந்தன்
சொந்தமானாரே --- சந்தோஷம்

3. பாவத்தில் ஜீவிப்பவர்
பாதாளத்தில் அழிந்திடுவார்
அவரும் பரலோகத்தில்
ஆண்டவரோடு வாழவே
நானும் தேவ அன்பையே
நாளும் கூறிடுவேன் --- சந்தோஷம்

sabaiyin asthibaram

1. சபையின் அஸ்திபாரம்
நம் மீட்பர் கிறிஸ்துவே;
சபையின் ஜன்மாதாரம்
அவரின் வார்த்தையே;
தம் மணவாட்டியாக
வந்ததைத் தேடினார்.
தமக்குச் சொந்தமாக
மரித்ததைக் கொண்டார்.

2. எத்தேசத்தார் சேர்ந்தாலும்;
சபைஒன்றே ஒன்றாம்;
ஒரே விஸ்வாசத்தாலும்
ஒரே ரட்சிப்புண்டாம்;
ஒரே தெய்வீக நாமம்
சபையை இணைக்கும்;
ஓர் திவ்ய ஞானாகாரம்
பக்தரைப் போஷிக்கும்.

3. புறத்தியார் விரோதம்
பயத்தை உறுத்தும்;
உள்ளானவரின் துரோகம்
கிலேசப் படுத்தும்;
பக்தர் ஓயாத சத்தம்,
எம்மட்டும் என்பதாம்;
ராவில் நிலைத்த துக்கம்
காலையில் களிப்பாம்.

4. மேலான வான காட்சி
கண்டாசீர்வாதத்தை
பெற்று, போர் ஓய்ந்து வெற்றி
சிறந்து, மாட்சிமை
அடையும் பரியந்தம்
இன்னா உழைப்பிலும்,
நீங்காத சமாதானம்
மெய்ச் சபை வாஞ்சிக்கும்.

5. என்றாலும் கர்த்தாவோடு
சபைக்கு ஐக்கியமும்,
இளைப்பாறுவோரோடு
இன்ப இணக்கமும்.
இப்பாக்ய தூயோரோடு
கர்த்தாவே, நாங்களும்
விண் லோகத்தில் உம்மோடு
தங்கக் கடாட்சியும்.