Friday, November 15, 2019

SUGAM THARAVENDUM YEHOWA ROBBA

சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா -இன்று
இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்
தூய ஆவியின் வல்லமையால் (2)

நிமிரமுடியாத மகளை அன்று
நிமிர்ந்து துதிக்கச் செய்தீர்
நிரந்தாரமாய் குணமாக்கி
உமக்காய் வாழச் செய்தீர் -சுகம்

தொழுநோய்கள் சுகமானதே
உம் திருக்கரம் தொட்டதால்
கடும் வியாதிகள் விலகியதே
உமது வல்லமையால்

பிறவியிலே முடவர் அன்று
உம் நாமத்தில் நடந்தாரே
பெரும்பாடுள்ள பெண் அன்று
சாட்சி பகர்ந்தாளே

லேகியோனை தேடிச் சென்று
உம்பாதம் அமரச் செய்தீர்
தெக்கப்போலி நாடெங்கும்
உம் நாமம் பரவச் செய்தீர்

பேதுரு மாமி குணமாக்கினீர்
பணிவிடை செய்ய வைத்தீர்
பேய் பிடித்த அநேகரை
அதட்டி விடுவித்தீர்

SUGAM UNDU BELAN UNDU

சுகம் உண்டு பெலன் உண்டு
ஜீவன் உண்டு உம் பாதத்தில்

நேசிக்கிறேன் உம்மைத் தானே
என் தெய்வமே என் இயேசுவே

நேசம் உண்டு பாசம் உண்டு
இரக்கம் உண்டு உம் பாதத்தில்

அடைக்கலமே அதிசயமே
அண்டி வந்தேன் உம் பாதமே

துக்கம் நீங்கும் துயரம் நீங்கும்
துன்பம் நீங்கும் உம் பாதத்தில்

வியாதி நீங்கும் வறுமை நீங்கும்
பாரம் நீங்கும் உம் பாதத்தில்

உயர்த்துகிறோம் உம்மைத்தானே
என் தெய்வமே என் இயேசுவே

சுகப்படுத்தும் பெலப்படுத்து
திடப்படுத்தும் இந்நேரத்தில்

உயர்த்துகிறேன் உம்மைத் தானே
என் தெய்வமே என் இயேசுவே

CHINNACHIRU SUDANE ENNARUM THAVAME

சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே
மன்னர் மன்னவனே உன்னதத் திருவே

1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டு
கூடுண்டு பறவைகட்கு
பாடுண்டு உமக்கு மனிதகுமாரனே
வீடுண்டோ உந்தனுக்கு 
தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்க
காரணம் நீரானீரோ
கோர வெம்பகைகள் பாரச்சுமைகள்
தீர மருந்தானீரோ ஆ.. ஆ.. ஆ 

2. சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்
முற்றிலும் நீரல்லவோ
குற்றம் துடைக்க பற்றினை நீக்க
உற்றவர் நீரல்லவோ
பாசமாய் வந்து காசினை மீட்ட
நேசமுள்ள ஏசுவே
நீச சிலுவை தொங்கப் பிறந்த
தாசரின் தாபரமே ஆ.. ஆ.. ஆ

CHINNA SIRIYA PADAGU ONDRU

சின்னஞ் சிறிய படகு ஒன்று 
நீந்திக் கடலில் சென்றதம்மா
இயேசுவை சீடரை சுமந்து கொண்டு 
இனிதே அசைந்து விரைந்ததம்மா

1.பொங்கி அலைகள் எழுந்ததம்மா 
அங்கும், இங்கும் அசைந்ததம்மா
புயலைக் கண்டு சீடரெல்லாம் 
பயந்து, கலங்கி நின்றாரம்மா

2.இரைச்சல் கேட்டு எழுந்த இயேசு 
இரையும் கடலை அதட்டிடவே 
பொங்கிய கடலும் ஓய்ந்ததம்மா
எங்கும் அமைதி சூழ்ந்ததம்மா

3.வாழ்க்கை என்னும் படகில் இயேசு 
என்றும் என்னோடிருப்பாரம்மா 
துன்பங்கள் ஏதும் வந்தாலும் 
பயமே எனக்கு இல்லையம்மா

SATHANUKKU SAVAL VIDUM SANGATHI

சாத்தானுக்கு சவால் விடும் சந்ததி நாங்க
சேனைகளின் தேவனைப்போல் வீரர்கள் நாங்க
சவாலே சமாளி சாத்தனே நீ ஏமாளி
சவால் …………..சவாலே
நாங்க பவுல போல சவால் விடுவோம் சவாலே

1. சாவுக்கேதுவான ஏதும் ஒன்றும் செய்வதில்லையே
ஆவியானவர் எங்களோடு பயமும் இல்லையே
சவால் ……………சவாலே
நாங்க தாவிதைப் போல் சவால் விடுவோம் சவாலே

2. சாத்திராக் மேஷாக் ஆபேத்நேகோ ஆவி எனக்குள்ளே
ஏழு மடங்கு எரியும் சூளை எனக்கு பயம் இல்லை
சவால் …………….சவாலே
நாங்க தானியல் போல் சவால் விடுவோம் சவாலே

3. பாலியத்தின் இச்சைகளுக்கு விலகி ஓடியே
எங்கள் வாலிபத்தை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
சவால் ……………….சவாலே
நாங்க ஜோசேப்பைப் போல் சவால் விடுவோம் சவாலே

4. என் இயேசுவாலே நான் பெரும் சேனைக்குள் பாய்வேன்
என் இயேசுவாலே நான் பெரும் மதிலை தாண்டுவேன்
சவால் ……சவாலே
நாங்க இயேசுவைப் போல் சவால் விடுவோம் சவாலே.

SATHIYA VEDHAM BAKTHARIN GEETHAM

சத்திய வேதம் பக்தரின் கீதம்

பல்லவி

சத்திய வேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும் 

அனுபல்லவி

எத்தனை துன்பம் துயரம் வந்தும்
பக்தனைத் தேற்றிடும் ஔஷதம் 

சரணங்கள்

1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்
சுத்தம் பசும்பொன் தெளிந்திடும் தேன்
இதயம் மகிழும் கண்கள் தெளியும்
இருண்ட ஆத்மா உயிரடையும்

2. பேதைகளிடம் ஞானம் அருளும்
வேத புத்தகம் மேன்மை தரும்
இரவும் பகலும் இதன் தியானம்
இனிமை தங்கும் தனிமையிலும்

3. வேதப் பிரியர் தேவ புதல்வர்
சேதமடையா நடந்திடுவார்
இலைகள் உதிரா மரங்கள் போல
இவர்கள் நல்ல கனி தருவார்

4. உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
கடிந்துக் கொள்ளும் கறைகள் போக்கும்
கனமடைய வழி நடத்தும்

5. கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
கன் மலையையும் நொறுக்கிடுமே
இதய நினைவை வகையாய் அறுக்கும்
இரு புறமும் கருக்குள்ளதே

6. வானம் அகலும் பூமி அழியும்
வேத வசனம் நிலைத்திருக்கும்
பரமன் வேதம் எனது செல்வம் 
பரவசம் நிதம் அருளும்

SABAIYAE VIZHITHIDU MANDRAADI JEBITHIDU

சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு
திறப்பிலே நின்றிடு போராடி ஜெபித்திடு(2)

ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம்
ஜெபத்தால் ஜெயமெடுப்போம் (2)

தேசத்தின் எதிர்காலம்
ஜெபிக்கும்நம் கையிலே
தேவ நாமம் தரித்த நாம்
நம்மை தாழ்த்தியே வேண்டுவோம் - ஜெபம்

தேசத்தின் குடிகள் அழியுதே
நம்மனம் பதறாதோ
நம் கண்ணீர் சிந்தியே
ஜனத்தை ஜெபத்தால் மூடுவோம் - ஜெபம்

SARANAALAYAM SARANAALAYAM YESUVIN THIRUVADI

சரணாலயம் சரணாலயம்
இயேசுவின் திருவடி சரணாலயம்(2)

1.பாவங்கள்போக்கிமன்னிப்பைஅருளும்
இயேசுவின் திருவடி சரணாலயம்(2)
மனம்மாறினோரை மகிழ்வுடன்
ஏற்கும் இயேசுவின் திருவடி
சரணாலயம் (2)

2. களைத்தவர் மனதை
இளைப்பாறச் செய்யும்
இயேசுவின் திருவடி சரணாலயம்(2)
குருவினைத்தொடரும்சீஷருக்கெல்லாம்
இயேசுவின் திருவடி சரணாலயம்(2)

3. திவ்விய வாடிநவினை திருவாடீநு
மலர்ந்த இயேசுவின் திருவடி
சரணாலயம் (2)
தூடீநுமையின்வாடிநவிற்குதூயாவிஅருளும்
இயேசுவின் திருவடி சரணாலயம்(2)

4. பாவத்தைவென்று உலகினை
ஜெயிக்க இயேசுவின் திருவடி
சரணாலயம் (2)
தீமையைநன்மையால்ஜெயித்திடச்செடீநுத
இயேசுவின் திருவடி சரணாலயம் (2)

THAESAM THAEVANAI ARIYUM

தேசம் தேவனை அறியும்

1. தேசம் தேவனை அறியும்
திசையெங்கும் எதிரொலி கேட்கும்
திருச்சபையெங்கும் எழும்பும்
தேவனுக்கே என்றும் மகிமை

அல்லேலூயா – 7

2. களங்கமற்ற வாழ்வு
கசிந்திடாத நிறைவு
கலைந்திடாத கனவு
கடமையில் வெற்றியைக் காணும் 

3. இடைவிடாது ஜெபித்தால்
இளைப்படையாது உழைத்தால்
போவதும் போகச் செய்வதுமே
மிக மிக எளிதேயாகும் 

4. மாநிலங்கள் எல்லாம்
பல நூறு ஊழியர் பெற்று
பல்லாயிரம் திருச்சபையை
பலகோடி மக்களால் நிரப்பும் 

5. அர்ப்பணம் செய்வோம் இன்று
நம் அத்தனையும் அவர்க்கென்று
அற்பமே ஆரம்பம் ஆனால்
யார் அசட்டை செய்திட முடியும்?