Wednesday, May 8, 2024

SUTHA AAVI ENNIL THANGUM சுத்த ஆவி என்னில் தங்கும் , நானும்


1.சுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே :
   பாவ அழுக்கெல்லாம் நீக்கும் ;உம ஆலயமாகவே
   என்னை நீர் சிங்காரியும் வாசம் பண்ணும்  நித்தமும் 

2. சத்திய ஆவி, என்னில் தங்கும் , நானும் சத்யன் ஆகவே :
   தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே :
   நீர் என்னில் பிரவேசியும் , ஆண்டு கொள்ளும் நித்தமும் .

3. நேச ஆவி , என்னில் தங்கும் நானும் நேசன் ஆகவே :
   துர்ச் சுபாவம் போகப் பண்ணும் : அன்பில் நான் வேரூன்றவே
   அன்பின் ஸுவாலை எழுப்பும் , மென் மேலும் வளர்ந்திடும். 

4. வல்ல ஆவி என்னில் தங்கும் ; நானும் வல்லோன் ஆகவே ;
   சாத்தான் என்னை தூண்டிவிடும்  போது  ஜெயங் கொள்ளவே
   நீர் என் பக்கத்தில் இரும் என்னை பலப்படுத்தும்.

5. நல்ல ஆவி என்னில் தங்கும்  நானும் நல்லோன் ஆகவே ;
   பகை மேட்டிமை , விரோதம் மற்றும் தீமை யாவுமே
   என்னை விட்ட கற்றுமேன், என்னை  சீர்ப்படுத்துமேன்

YAARAI NAAN PUGALUVEN YAARAI யாரை நான் புகழுவேன் யாரை நான் அறிகிறேன்


  1. யாரை நான் புகழுவேன் யாரை நான் அறிகிறேன் ?
          என் கதியும் பங்கும் யார் , நான் பாராட்டும் மேன்மை யார்?
          தெய்வ ஆட்டுக்குட்டி தான்.
     2. யார் நான் நிற்கும் கன்மலை , யார் என் திட நம்பிக்கை ?
         குற்றத்தை சுமந்தோர் யார் , தெய்வ நேசம் தந்தோர் யார் ?
         தெய்வ ஆட்டுக்குட்டி தான்.
     3. எந்தன் எந்தன் பிராண பெலன் யார், ஆத்துமத்தின் சாரம் யார் ?
         யாரால் பாவி நீதிமான், யாரால் தெய்வ பிள்ளை நான்?
         தெய்வ ஆட்டுக்குட்டியால் .
      4. கஸ்தியில் சகாயர் யார்,சாவின் சாவு ஆனோர் யார் ?
          என்னை தூதர் கூட்டத்தில்,சேர்ப்போர் யார் நான் சாகையில்?
         தெய்வ ஆட்டுக்குட்டி தான்.
      5. இயேசு தான் என் ஞானமே , அவர் என் சங்கீதமே :
         நீங்களும் புகழுங்கள் , அவரைப் பின் செல்லுங்கள்
         தெய்வ ஆட்டுக்குட்டியை .
         

KARTHARE THARKAARUM AASIRWATHAM THARUM கர்த்தரே தற்காரும்


கர்த்தரே தற்காரும், ஆசீர்வாதம் தாரும் ,
எங்கள் மேல் உம் முகத்தை வைத்து வீசும் ஒளியை .
எங்களுக்கன்றன்று சமாதானம் தந்து
கிறிஸ்துவைக் காட்டிப் போதிக்கும் உமதாவியைக் கொடும்
எங்கள் மீட்பரான இயேசுவின் மேலான
நாமத்துக்கு மகிமை ; ஆமென் , கேட்பீர் ஜெபத்தை.

KARTHAER THANTHA EEVUKKAGA கர்த்தர் தந்த ஈவுக்காக


கர்த்தர் தந்த ஈவுக்காக என்றென்றைக்கும் தோத்திரம்!
விண்ணோர் மண்ணோர் கூட்டமாக பாடுவார் சங்கீர்த்தனம்
மீட்கப்பட்ட யாவராலும் ஏக தேவரீருக்கே 
ஆரவாரமாய் என்றைக்கும் தோத்திரம் உண்டாகவே

ELLA NANMAIKKUM KARANA எல்லா நன்மைக்கும் காரணா!


எல்லா நன்மைக்கும் காரணா!
எல்லாரும் போற்றும் ஆரணா!
நல்ல நாதா! வல்ல வேந்தா !
பொல்லாப்பைப் போக்கும் பேர் மன்னா!
பலகோடி நன்றி பூரணா!
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா!

EN JEEVAN POGUM NERAM SAMEEBAM என் ஜீவன் போகும் நேரம் பாமாலை


1.என் ஜீவன் போகும் நேரம் சமீபம் வந்ததே ;
பேரின்ப அருணோதயம் , இதோ! விடிந்ததே ;
ராக் கால மோசம் நீங்கும் வின் சுடரொளியில் ;
மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில். 

2.ஆ, நேச ஜீவ ஊற்று என் அருள் நாதரே !
ஈண்டுண்ணும் ஜீவ தண்ணீர் அங்காழி போலாமே ;
பேரன்பின் பெருவெள்ளம் பாய்ந்தோடும் மோட்சத்தில் ;
மா அருள் ஜோதி வீசும் பேரின்ப மோட்சத்தில்;

3. அன்போடும் நீதியோடும் என் சுக துக்கமும் 
ஆண்டென்னைப் பாதுகாத்து வந்தார் எந்நேரமும் ;
ஆ! போற்றுவேன் தெய்வன்பை ஆனந்த கடலில் ;
மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில் .

4. நல் நித்திரை செய்து பின்பு மாசற்றெழும்புவேன் ;
என் மீட்பரை நான் கண்டு ஆனந்தம் அடைவேன் ;
ராஜாதி ராஜன் என்னை அழைக்கும் நேரத்தில் 
மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில் .

5. தன் ஆடையைப் பாராமல் பர்த்தாவின் முகத்தை 
பத்தினி நோக்குமாறு , நான் ஜீவ கீரடத்தை 
நோக்காமல் , மீட்பர் மாண்பை பார்ப்பேன் அவ்வேளையில் ;
இம்மானுவேலே ஜோதி பேரின்ப தேசத்தில்

ELLARUKKUM MAA UNNADHAR KARTHATHI எல்லாருக்கும் மா உன்னதர் கர்த்தாதி பாமாலை


1. எல்லாருக்கும் மா உன்னதர், கர்த்தாதி கர்த்தரே ,
மெய்யான தெய்வ மனிதர் , நீர் வாழ்க, இயேசுவே .

2.விண்ணில் பிரதானியான நீர் பகைஞர்க்காகவே ,
மண்ணில் இறங்கி மரித்தீர்; நீர் வாழ்க, இயேசுவே

3.பிசாசு, பாவம், உலகை உம் சாவால் மிதித்தே,
ஜெயித்தடைந்தீர் வெற்றியை; நீர் வாழ்க ,இயேசுவே

4.நீர் வென்றபடி நாங்களும் வென்றேறிப் போகவே ;
பரத்தில் செங்கோல் செலுத்தும் நீர் வாழ்க , இயேசுவே. 

5.விண்ணோர்களோடு மண்ணுள்ளோர் என்றைக்கும் வாழவே ,
பரம வாசல் திறந்தோர் நீர் வாழ்க, இயேசுவே.

ENNODIRUM MAA NESA KARTHARE என்னோடிரும் மா நேசக் கர்த்தரே


1.என்னோடிரும் மா நேசக் கர்த்தரே ,

வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே ;

மற்றோர் சகாயம் அற்ற போதிலும், 

நீங்கா ஒத்தாசை நீரே என்னோடிரும். 

2.நீர் மேல் குமிழி போல் என் ஆயுசும் ,

இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும் 

கண் கண்ட யாவும் மாறி வாடிடும் ;

மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும் .

3.நியாயம் தீர்ப்போராக என்னண்டை 

வராமல் , சாந்தம் தயை கிருபை 

நிறைந்த மீட்பராக சேர்ந்திடும் 

நீர் பாவி நேசரே என்னோடிரும் .

4.நீர் கூட நின்று அருள் புரியும் ;

பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும் 

என் துணை நீர் ,என் தஞ்சமாயிரும் ;

இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும் .

5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;

நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன் ;

சாவே, எங்கே என் கூரும் ஜெயமும் ?

நான் உம்மை வெல்ல நீர் என்னோடிரும் .

6.நான் சாகும் அந்தகார நேரத்தில் 

உம் சிலுவையைக் காட்டும் ; சாகையில் 

விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும் ;

வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்

ARANYINDHU PAARUM KARTHARE ஆராய்ந்து பாரும் ,கர்த்தரே


ஆராய்ந்து பாரும், கர்த்தரே ,
என் செய்கை யாவையும்
நீர் காணுமாறு காணவே
என்னில் பிரகாசியும் .

ஆராயும் எந்தன் உள்ளத்தை
நீர் சோதித்தறிவீர் ;
என் அந்தரங்க பாவத்தை
மா தெளிவாக்குவீர்.

ஆராயும் சுடரொளியால்
தூராசை தோன்றவும் ;
மெய் மனஸ்தாபம் அதனால்
உண்டாக்கியருளும் .

ஆராயும் சிந்தை, யோசனை
எவ்வகை நோக்கமும் ,
அசுத்த மனோபாவனை
உள்ளிந்திரியங்களும்.

ஆராயும் மறைவிடத்தை 
உமா தூய கண்ணினால் ;
ஆரோசிப்பேன் என் பாவத்தை 
உம பேரருளினால் .

இவ்வாறு நீர் ஆராய்கையில்
சாஷ்டாங்கம் பண்ணுவேன் ;
உம சரணார விந்ததில்
பணிந்து போற்றுவேன்

UNN NENGELE UNDAANA VISARANGALAI NEE உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை


1.உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ
கர்த்தாவின் உண்மையான கரத்துக்கொப்புவி ;
விண்மனை ஆண்டிருக்கும் மகா தயாபரர்
உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார்.


2.ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளை போல்
நீ நம்பி மனதார பணிந்து பற்றிக்கொள்.
உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குது;
வேண்டாம் ,ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு .

3.ஏழை அடியாருக்கு பிதாவாம் தேவரீர்
இன்னின தெங்களுக்கு வேண்டும் என்றறிவீர் ;
நீர் எதை நல்லதாக கண்டீரோ , அதை நீர்
உம் வேளை பலமாக வர விடுகிறீர் .

4.பல வழிவகையும் உம்மாலே ஏற்படும் ;
நீர் செய்வது இசையும் , நீர் சொன்னது வரும்;
நீர் வாக்குத்தத்தமாக பொழிந்தவை எல்லாம்
உம்மாலே திட்டமாக நற்காலத்தில் உண்டாம்.

5.இக்கட்டுகளினாலே கலங்கினோனே , நீ
திடன் கொள் ,கர்த்தராலே இக்கட்டான ராத்திரி
சந்தோஷமாக மாறும் ,சற்றே பொறுத்திரு ;
நீ பூரிப்பாய் கொண்டாடும் நாள் வரப்போகுது .

5.உன் கவலைகளுக்கு இன்றே விடை கொடு;
இனிவிசாரத்துக்கு இடங்கொடாதிரு ;
நீ ஆளும் தெய்வமல்ல , நீ பூச்சி யென்றறி;
சருவத்திற்கும் வல்ல கர்த்தர் அதிபதி .

6.நீ பக்தியை விடாமல் பொறுத்திருக்கையில்
கர்த்தர் நீ நினையாமல் இருக்கும் நேரத்தில்
உன் துக்கத்தை அகற்ற வெளிச்சம் காண்பிப்பார் ;
நீ நன்மைக்காகப் பட்ட சலிப்பை நீக்குவார் .

7.அட்சணமே பலத்த ஜெயமும் பூரிப்பும்
ஆசிர்வதிக்கப்பட்ட தெய்வீகத் தேற்றலும்
அடைந்து இன்பமான மன மகிழ்ச்சியாய்
அன்புள்ள மீட்பரான கர்த்தாவைப் பாடுவாய் .

8.கர்த்தாவே, எங்களுக்கு எல்லா இக்கட்டிலும்
ரட்சிப்பளிப்பதற்கு நேரிட்டுக்கொண்டிரும் ;
ஆ, எங்களைத் தேற்றிடும்;பரகதிக்குப் போம் ,
வழியிலும் நடத்தும் , அப்போ பிழைக்கிறோம் .

YESU NAATHA KAAKIREER இயேசு நாதா காக்கிறீர்


1.இயேசு நாதா! காக்கிறீர் ,
இளைப்பாறச் செய்கிறீர் ,
மோசம் நேரிடாமலும் ,
பாதம் இடறாமலும்,
என்னைத் தாங்கி நிற்கிறீர் ;
நேச நாதா காக்கிறீர்.

2.வாரிபோன்ற லோகத்தில்
யாத்திரை செய்து போகையில் ,
சூறைக்காற்று மோதினும் ,
ஆழி கோஷ்டமாயினும்,
அமைதல் உண்டாக்குவீர் !
நேச நாதா காக்கிறீர் !

3.சற்று தூரம் செல்லவே ,
மோட்ச கரை தோன்றுமே !
துன்பம் நீங்கி வாழுவேன் ;
இன்பம் பெற்று போற்றுவேன் ;
அதுமட்டும் தாங்குவீர் ;
நேச நாதா காக்கிறீர் .

ANBODU EMMAI BOSHIKKUM அன்போடு எம்மைப் போஷிக்கும்


1.அன்போடு எம்மைப் போஷிக்கும்
பெத்தேலின் தெய்வமே ;
முன்னோரையும் நடத்தினீர்
கஷ்ட இவ்வாழ்விலே .

2.கிருபாசன்முன் படைப்போம்
எம் ஜெபம் ஸ்தோத்ரமும் ;
தலைமுறையாத் தேவரீர்
எம் தெய்வமாயிரும் .

3.மயங்கும் ஜீவா பாதையில்
மெய்ப் பாதை காட்டிடும் ;
அன்றன்றுமே நீர் தருவீர்
ஆகாரம் வஸ்திரமும் .

4.இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,
பிதாவின் வீட்டினில்
சேர்ந்திளைப்பாருமளவும்
காப்பீர் உம் மறைவில் .

5.சிலுவை சுமந்தோராக
அவரைப் பின்பற்றுவோம் ;
தீரங்கொண்டு வீரராக
துன்பம் நிந்தை சகிப்போம்.

6.நேசர் தயவாய் நம்மோடு  
சொல்லும் ஒரு வார்த்தையே ,
துக்கத்தை எல்லாம் கட்டோடு
நீங்கிப்போகச் செய்யுமே .

7.சாகும்பொது, திறவுண்ட
வானத்தையும் , அதிலே
மகிமையினால் சூழுண்ட
இயேசுவையும் காண்போமே .

8.வாழ்க, சிலுவையே ! வாழ்க
மோட்சத்தின் முன் தூதனே !
நீதிமான்கள் இளைப்பாற
நேர் வழியாம் வாசலே!

NAAN PAAVI THAN AANALUM NEER நான் பாவி தான் -ஆனாலும் நீர்


1.நான் பாவி தான் ,- ஆனாலும் நீர்
மாசற்ற ரத்தம் சிந்தினீர்;
'வா' என்று என்னை அழைத்தீர் ;
என் மீட்பரே வந்தேன் .

2.நான் பாவி தான் -என் நெஞ்சிலே 
கறை பிடித்து கெட்டேனே ;
என் கறை நீங்க இப்போதே ,
என் மீட்பரே வந்தேன் .

3.நான் பாவி தான்- மா பயத்தால் 
திகைத்து பாவ பாரத்தால் 
அமிழ்ந்து மாண்டு போவதால் 
என் மீட்பரே வந்தேன் .

4.நான் பாவி தான் ,- மெய்யாயினும்
சீர், நேர்மை , செல்வம், மோட்சமும் 
அடைவதற்கு உம்மிடம் 
என் மீட்பரே வந்தேன் .

5. நான் பாவி தான் ,-இரங்குவீர் ,
அணைத்து, காத்து , ரட்சிப்பீர் ,
அருளாம் செல்வம் அளிப்பீர் ,
என் மீட்பரே வந்தேன் .

6.நான் பாவி தான் -அன்பாக நீர் 
நீங்கா தடைகள் நீக்கினீர் ;
உமக்கு சொந்தம் ஆக்கினீர் ;
என் மீட்பரே வந்தேன் .
மாண்டு 

KALIKOORUVOM KARTHAR NAM PATCHAME களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே


1.களிகூருவோம் ,கர்த்தர் நம் பட்சமே ;தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;
அவர் நமக்கு யாவிலும் எல்லாமே ,எப்பாவம் பயம் நீக்குவார் ,
கர்த்தர் நம் பட்சம் கர்த்தர் நம்மோடு கர்த்தர் சகாயர்
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர் ?
யார் எதிர்க்க வல்லோர் ? யார் வல்லோர்?

2.திடனடைவோம் , தீமை மேற்கொள்ளுவோம்
கர்த்தாவின் வல்ல கரத்தால் !
உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம் ,
அவரே திடன் ஆகையால் .

3.வாக்கை நம்புவோம், உறுதி மொழியாய்
கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே ;
பூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய் 
நிலைக்கும் , இது மெய் மெய்யே

4. நிலைத்திருப்போம் ,கர்த்தரின் கட்டினில்,
அதால் நித்திய ஜீவன் உண்டாம் ;
பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில்
வைத்தென்றும் பாதுகாப்பாராம்