Saturday, September 5, 2015

EN PAAVAM THEERTHA NAALAIYE

1. என் பாவம் தீர்ந்த நாளையே
அன்போடு எண்ணி ஜீவிப்பேன்
அந்நாளில் பெற்ற ஈவையே
சந்தோஷமாய்க் கொண்டாடுவேன்

பல்லவி

இன்ப நாள்! இன்ப நாள்!
என் பாவம் தீர்ந்து போன நாள்!
பேரன்பர் என்னை ரட்சித்தார்
சீராக்கி இன்பம் நல்கினார்
இன்ப நாள்! இன்ப நாள்!
என் பாவம் தீர்ந்து போன நாள்!
2. இம்மானுவேல் இப்பாவியைத்
தம் சொந்தமாக்கிக் கொண்டனர்
சந்தேகம் நீக்கி மன்னிப்பைத்
தந்தென்னை அன்பாய் சேர்த்தனர்

3. என் உள்ளமே உன் மீட்பரை
என்றைக்கும் சார்ந்து வாழுவாய்
ஆருயிர் தந்த நாதரை
ஓர்காலும் விட்டு நீங்கிடாய்

4. ஆட்கொண்ட நாதா! எந்தனை
நாடோறும் தத்தம் செய்குவேன்
பின் மோட்ச வீட்டில் பேரன்பை
இன்னோசையாலே பாடுவேன்

ISRAVELIN DEVANAI YESU RAJAN BAALAGANAI

இஸ்ரவேலின் தேவனை இயேசு இராஜன் பாலகனை
துதிபாடுவோம் அவரை வாழ்த்தி துதிமலர் தூவிடுவோம்

Merry Merry Christmas
Happy Happy Happy Christmas - 2

1. இருளின் அதிகாரத்தினால் நாம்
அடிமைகளாயிருந்தோம்
அன்பின் குமாரன் தியாகத்தினால்
நாம் விடுதலையாக்கப்பட்டோம்
தம் அன்பின் ஜனத்திரளாக
நம்மை சேர்த்துக்கொண்டாரே
பாவ மன்னிப்பு மீட்பு எல்லாமே
அன்பின் இலவச பரிசாக அளித்தாரே

2. சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர்
திருச்சபையின் தலையானார்
சகல பரிபூரணமும்
அவருக்குள் வாசமாகும்
ஆதியும் தற்சொரூபமும் அவரே
சமாதானம் தருபவரே
பூலோகம் மேலோகம் யாவுமே
ஒன்றாய் இணைந்தே வாழ்ந்திடும் சீக்கிரமே

ENNA BAKKIYAM YEVARKUNDU INTHA SILAKIYAM

என்ன பாக்கியம், எவர்க்குண்டு
இந்தச் சிலாக்கியம்?

அனுபல்லவி

விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,
மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் --- என்ன

சரணங்கள்

1. வானகந் தானோ - அல்லதிது – வையகந் தானோ?
ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்
கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது --- என்ன

2. சாமியைக் கண்டேன் - மகானந்தம் - சாலவுங்கொண்டேன்,
காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,
கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும் --- என்ன

3. அன்னமும் நீயே - கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே;
மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ?
மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ? --- என்ன

4. போதும் இவ்வாழ்வு - பரகதி - போவேன் இப்போது;
ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது;
எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது --- என்ன

ENNA SUGAM AHAHA ENNA SUGAM

என்ன சுகம் ஆஹா, என்ன சுகம்
என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம்
பரமானந்த மோட்ச சுகானந்தம்
அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம்

சரணங்கள்

1. பொன்னகர் மேடையில் எந்நேரம் பாடலாம் (2)
கிண்ணரம் தம்புருவீணை இன்னோசை கேட்கலாம் --- என்ன சுகம்

2. வெற்றி பொன் வெண் அங்கி தரித்துக் கொள்ளலாம் (2)
சுத்தப் பொன்னால் செய்த வீதியில் உலாவலாம் --- என்ன சுகம்

3. ஜீவ நதியில் குளித்துக் களிக்கலாம் (2)
ஜீவ விருஷக் கனியைப் புசிக்கலாம் --- என்ன சுகம்

4. தங்கக் கிரீடம் தலையில் தரிக்கலாம் (2)
சிங்காசனத்தினின்று ஜெயகீதம் பாடலாம் --- என்ன சுகம்

5. வாட்டம் பசி தாகம் பட்டினி சாவில்லை (2)
கேட்டின் மனுடர் வந்து ஊடே யிருப்பதில்லை --- என்ன சுகம்

6. துன்பம் ஒழிந்து மீட்பு இன்பமடையலாம் (2)
துயரின் சமூகத்தில் கூடி கொண்டாடலாம் --- என்ன சுகம்

7. இயேசுவின் ரத்தத்தால் மீட்பை யடைந்தவர்கள் (2)
ஆசனம் மீதிருந்து ஜெயகீதம் பாடுவார்கள் --- என்ன சுகம்

EN MEETPER UYIRODIRUKKAYILE

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறைவுண்டு ? நீ சொல் , மனமே

சரணங்கள்

1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர் ,
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் ;
விண்ணுல குயர்ந்தோர் , உன்னதஞ்சிறந்தோர் ,
மித்திரனே சுகபத்திர மருளும் --- என் மீட்பர்

2. பாபமோ , மரணமோ , நரகமோ ,பேயோ ,
பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர் ,
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன் ;
சஞ்சலமினியேன் ? நெஞ்சமே , மகிழாய் --- என் மீட்பர்

3. ஆசி செய்திடுவார் , அருள்மிக அளிப்பார் ,
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார் ;
மோசமே மறைப்பார் , முன்னமே நடப்பார் ;
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் --- என் மீட்பர்

4. கவலைகள் தீர்ப்பார் , கண்ணீர் துடைப்பார் ,
கடைசிமட்டுங் கைவிடா திருப்பார் ;
பவமனிப்பளிப்பார் , பாக்கியங் கொடுப்பார் ,
பரம பதவியினுள் என்றனை எடுப்பார் --- என் மீட்பர்

5. போனது போகட்டும் , புவிவசை பேசட்டும் ,
பொல்லான் அம்புக ளெய்திடட்டும் ,
ஆனது ஆகட்டும் , அருள்மழை பெய்திடும் ,
அன்புமிகும் பேரின்ப மெனக்கருள் --- என் மீட்பர்

EN MEETPER RATHAM SINTHINAR

1. என் மீட்பர் ரத்தம் சிந்தினார்,
மா நீதியும் சம்பாதித்தார்;
என் சொந்த நீதி வெறுத்தேன்,
இயேசுவின் நாமம் நம்புவேன்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.

2. கார் மேகம் அவர் முகத்தை
மறைக்கும் காலம், அவரை
எப்போதும்போல நம்புவேன்,
மாறாதவர் என்றறிவேன்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.

3. மரண வெள்ளம் பொங்கினும்,
என் மாம்சம் சோர்ந்து போயினும்,
உன் வாக்குத்தத்தம் ஆணையும்
என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்;
நன் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.

4. நியாயத்தீர்ப்புக் காலத்தில்
எக்காள சத்தம் கேட்கையில்,
அஞ்சேன் என் மீட்பர் நீதியே
அநீதன் என்னை மூடுமே;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.

ENNA EN AANANTHAM ENNA EN AANANTHAM

என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !
இயம்பலாகாதே ,
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே.

சரணங்கள்

1. கூடுவோம் , ஆடுவோம் , பாடுவோம் , நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம் ;
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்.

2. பாவங்கள் , சாபங்கள் , கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே ;
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே.

3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு ,
அருளினதாலே ,
நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
பகர வேண்டியதே.

4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
ஜெயக் கொடியுடனே ,
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனைத் தோத்தரிப்போம்.

EN MUNNE MEIPPER POGIRAR

1. என் முன்னே மேய்ப்பர் போகிறார்;
நல்மேய்ப்பராகக் காக்கிறார்;
ஓர்காலும் என்னைக் கைவிடார்;
நேர் பாத காட்டிப் போகிறார்.

முன் செல்கின்றார்! முன் செல்கின்றார்!
என் முன்னே சென்று போகிறார்!
நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்
அன்போடு பின்சென்றேகுவேன்.

2. கார் மேகம் வந்து மூடினும்,
சீர் ஜோதி தோன்றி வீசினும்,
என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்;
என்றைக்கும் முன்னே போகிறார்.

3. மெய்ப் பாதைகாட்டி பின் செல்வேன்,
தெய்வீக கையால் தாங்குமேன்;
எவ்விக்கினம் வந்தாலும் நீர்
இவ்வேழைமுன்னே போகிறீர்.

4. ஒப்பற்ற உம் காருணியத்தால்
இப்பூமி பாடு தீருங்கால்,
நீர் சாவை வெல்லச் செய்குவீர்,
பேரின்பம் காட்டி முன்செல்வீர்.

ENTHAN AATHMA NESARE

1. என்தன் ஆத்ம நேசரே,
வெள்ளம் போன்ற துன்பத்தில்,
தாசன் திக்கில்லாமலே
தடுமாறிப் போகையில்,
தஞ்சம் தந்து, இயேசுவே,
திவ்விய மாஅர்பில் காருமேன்;
அப்பால் கரையேற்றிய
மோட்ச வீட்டில் சேருமேன்.

2. வல்ல தேவரீர் அல்லால்
வேறே தஞ்சம் அறியேன்;
கைவிடாமல் நேசத்தால்
ஆற்றித் தேற்றித் தாங்குமேன்;
நீரே என்தன் நம்பிக்கை,
நீர் சகாயம் செய்குவீர்;
ஏதுமற்ற ஏழையை
செட்டையாலே மூடுவீர்.

3. குறை யாவும் நீக்கிட,
நாதா, நீர் சம்பூரணர்;
திக்கற்றோரைத் தாங்கிட
நீரே மா தயாபரர்;
நான் அசுத்த பாவிதான்,
நீரோ தூயர் தூயரே;
நான் அநீதி கேடுள்ளான்,
நீர் நிறைந்த நித்தியரே.

4. பாவம் யாவும் மன்னிக்க
ஆரருள் அமைந்த நீர்
என்னைச் சுத்திகரிக்க
அருள் பாயச் செய்குவீர்;
ஜீவ ஊற்றாம் இயேசுவே,
என்தன் தாகம் தீருமேன்,
ஸ்வாமீ, என்றும் என்னிலே
நீர் சுரந்து ஊற்றுமேன்

ENTHAN JEEVAN YESUVE

1. என்தன் ஜீவன், இயேசுவே,
சொந்தமாக ஆளுமே;
எந்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்.

2. என்தன் கை பேரன்பினால்
ஏவப்படும்; என்தன் கால்
சேவை செய்ய விரையும்,
அழகாக விளங்கும்.

3. என்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும், என் வாய்
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்.

4. என்தன் ஆஸ்தி, தேவரீர்,
முற்றும் அங்கிகரிப்பீர்;
புத்தி கல்வி யாவையும்
சித்தம்போல் பிரயோகியும்.

5. என்தன் சித்தம், இயேசுவே,
ஒப்புவித்துவிட்டேனே;
என்தன் நெஞ்சில் தங்குவீர்,
அதை நித்தம் ஆளுவீர்.

6. திருப் பாதம் பற்றினேன்;
என்தன் நேசம் ஊற்றினேன்;
என்னையே சமூலமாய்
தத்தம் செய்தேன் நித்தமாய்.

ENNAI UNDAKIYA EN DEVATHI DEVAN

என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்லை , உறங்குவதுமில்லை (2)
1. என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே --- என்னை

2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
கேடகமும் , துருகமும் பெலன் அவரே --- என்னை

3. ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே
வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே
வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் --- என்னை

ENNAI JEEVA BALIYAI OPPUVITHEN

என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் ,
ஏற்றுக் கொள்ளும் , யேசுவே

அனுபல்லவி

அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று
சொன்ன வாக்குத்தத்த மல்லாது , இப்போது --- என்னை

சரணங்கள்

1. அந்தகாரத்தி னின்றும் , பவப் பேய்
அடிமைத் தனத்தி னின்றும் ,
சொந்த ரத்தக் கிரயத்தால் எனைமீட்ட
எந்தையே , உந்தனுக்கிதோ ! படைக்கிறேன் --- என்னை

2. ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீன மாக்கி வைத்தேன் ;
பாத்ரமதாய் அதை பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கின்றேன் ; கருணைசெய் , தேவா --- என்னை

3. நீதியி னாயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேன் உமக்கு ;
ஜோதி பரிசுத்த ராலய மாகவே
சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை --- என்னை

YETRUKONDARULUME DEVA IPPO

ஏற்றுக்கொண்டருளுமே, தேவா! - இப்போ
தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்

சரணங்கள்

1. சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும்,
சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கையும்,
தேற்றிக் கொண்டருளும் மன்னிப்பின் மருவும்
திவ்விய பாதத்தில் வைக்கிறேன், ஸ்வாமி --- ஏற்று

2. குறைவுண்டு இதிலே, அருமைப் பிதாவே
குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்;
முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி;
முழுதும் மேசியாமேல் வைக்கிறேன், ஸ்வாமி --- ஏற்று

3. மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமி;
மனமெல்லாம் புதிதாக்கிடும் ஸ்வாமி,
சிறுமைப்பட் டடியேன், கேட்கிறேன் ஸ்வாமி
தேற்றிடும் புதுபலன் ஊற்றிடும் ஸ்வாமி --- ஏற்று

4. விசுவாசம் பெருகி நிலைத்திடச் செய்யும்;
வெளிப்படும் மறைபொருள் பலப்படச் செய்யும்;
சிசுவைப்போல் மறுபடி பிறந்திடச் செய்யும்;
தேவாவி என்னுளந் தங்கிடச் செய்யும் --- ஏற்று

RATHATHAL JEYAM RATHATHAL JEYAM

1. இரத்தத்தால் ஜெயம்
இரத்தத்தால் ஜெயம்
இரத்தத்தால் ஜெயம் இயேசுவே
அல்லேலூயா ! அல்லேலூயா !
இரத்தத்தால் ஜெயம் , இயேசுவே

2. இயேசு ஜெயித்தார்
இயேசு ஜெயித்தார்
இயேசு ஜெயித்தார் சாத்தானை
அல்லேலூயா ! அல்லேலூயா !
இயேசு ஜெயித்தார் சாத்தானை

3. நாமும் ஜெயிப்போம்
நாமும் ஜெயிப்போம்
நாமும் ஜெயிப்போம் சாத்தானை
அல்லேலூயா ! அல்லேலூயா !
நாமும் ஜெயிப்போம் சாத்தானை

4. சாத்தான் தோல்வியுற்றான்
சாத்தான் தோல்வியுற்றான்
சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால்
அல்லேலூயா ! அல்லேலூயா !
சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால்

YESUVAIYE THUTHISEI NEE MANAME

ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் - கிறிஸ் தேசுவையே

சரணங்கள்

ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் - கிறிஸ் தேசுவையே

1. மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து --- ஏசுவையே

2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் --- ஏசுவையே

3. எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க --- ஏசுவையே

ENNODIRUM MAA NESA KARTHARE

1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;
மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,
நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும்.

2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;
கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;
மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும்.

3. நியாயம் தீர்ப்போராக என்னண்டை
வராமல், சாந்தம் தயை கிருபை
நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்;
நீர் பாவி நேசரே, என்னோடிரும்.

4. நீர் கூடநின்று அருள் புரியும்;
பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
என் துணை நீர், என் தஞ்சமாயிரும்;
இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்.

5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;
நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்;
சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?
நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்.

6. நான் சாகும் அந்தகார நேரத்தில்
உம் சிலுவையைக் காட்டும்; சாகையில்
விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்;
வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.

NAAN UMMAI URUTHIYAGA

நான் உம்மை உறுதியாக
என்றென்றும் பற்றிடுவேன்
சமாதானம் பூரணமாய்
அளித்து என்றும் நடத்திடுவீர்

1. என் ஆத்துமாவின் வாஞ்சை நீர்
என் ஆவி உம்மைத்தேடும்
உந்தனின் பாதையில்
செம்மையாய் நடத்துவீர் --- நான்

2. நல் வாசல்கள் திறந்திட
உம தாசர் உள்ளே செல்வார்
தேவனே ராஜனே
ஜெயமதைத் தந்திடுவீர் --- நான்

3. என் கிரியைகள் அனைத்துமே
நீர் ஏற்று என்றும் காப்பீர்
நடத்தியே தாங்குவீர்
சமாதானம் அருள்வீர் --- நான்

4. உம் கைகள் உமக்காய் ஓங்கிட
உம் வல்லமை விளங்கும்
உம்மையே சார்ந்துமே
உம் புகழ் சாற்றிடுவோம் --- நான்

ELIYAVIN DEVAN NAM DEVAN

எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன்
தாசர்களின் ஜெபம் கேட்பார்
வல்ல பெரும் காரியம் செய்திடுவார்

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே ஆர்ப்பரிப்போம் - 2
1. வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே
பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன்
பஞ்ச காலத்தில் விதவை வீட்டில்
பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார்

2. சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்
வீரமுடன் முழங்கினார் தேவ மனிதன்
அக்கினியால் பதிலளிக்கும்
தேவனே தேவன் என்றார் தேவ மனிதன்

3. தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்
பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார்
கேட்டருளும் கேட்டருளும்
என்றே கதறினார் தேவ மனிதன்

4. வானங்களை திறந்தே வல்ல தேவன்
அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன்
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள்

ELLAM YESUVE YENAKKELLA MESUVE

எல்லாம் இயேசுவே - எனக்கெல்லா மேசுவே

அனுபல்லவி

தொல்லைமிகு மிவ்வுலகில் - தோழர் யேசுவே ;

சரணங்கள்

1. ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும் ,
நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும் --- எல்லாம்

2. தந்தை தாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர் ,
சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும் --- எல்லாம்

3. கவலையில் ஆறுதலும் , கங்குலிலென் ஜோதியும் ,
கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும் --- எல்லாம்

4. போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில் ,
ஆதரவு செய்திடுங் கூட்டாளிமென் தோழனும் ---எல்லாம்

5. அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் - சம்பாத்யமும் ,
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும் --- எல்லாம்

6. ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும் ,
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும் --- எல்லாம்

ELLARUKKUM MAA UNNATHAR

1. எல்லாருக்கும் மா உன்னதர்,
கர்த்தாதி கர்த்தரே,
மெய்யான தெய்வ மனிதர்,
நீர் வாழ்க, இயேசுவே.

2. விண்ணில் பிரதானியான நீர்
பகைஞர்க்காகவே
மண்ணில் இறங்கி மரித்தீர்
நீர் வாழ்க, இயேசுவே.

3. பிசாசு, பாவம், உலகை
உம் சாவால் மிதித்தே,
ஜெயித்தடைந்தீர் வெற்றியை
நீர் வாழ்க, இயேசுவே.

4. நீர் வென்றபடி நாங்களும்
வென்றேறிப் போகவே
பரத்தில் செங்கோல் செலுத்தும்
நீர் வாழ்க, இயேசுவே.

5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்
என்றைக்கும் வாழவே,
பரம வாசல் திறந்தோர்
நீர் வாழ்க, இயேசுவே.

ELUNTHAR IRAIVAN JEYAME JEYAMANAVE

எழுந்தார் இறைவன் - ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்

சரணங்கள்

1. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் - கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க - இப்
பூவின்மீது சபை செழிக்க --- எழுந்தார்

2. செத்தவர் மீண்டுமே பிழைக்க - உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் - தேவ
பக்தர் யாவரும் களிக்க --- எழுந்தார்

3. விழுந்தவரைக் கரையேற்றப் - பாவத்
தெழுந்து மனுக்குலத்தை மாற்ற - விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற --- எழுந்தார்

4. கருதிய காரியம் வாய்க்கத் - தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க - நம்
இரு திறத்தாரையும் சேர்க்க --- எழுந்தார்

YELUPUTHAL ANUPPUM YELUPUTHAL ANUPPUM

எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
எங்கள் உள்ளத்திலே
எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
சீக்கிரத்திலே

எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
எங்கள் உள்ளத்திலே
எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
இந்த நேரத்திலே

பாவத்தை மன்னியும் ஆவியைத் தாரும்
இரட்சகரின் நாமத்திலே
வியாதியை நீக்கும் , பிசாசைத் துரத்தும்
இயேசுவின் நாமத்திலே

EVANNAMAAGA KARTHARE UMMAI VANAGUVEN

1. எவ்வண்ணமாக, கர்த்தரே,
உம்மை வணங்குவேன்;
தெய்வீக ஈவைப் பெறவே
ஈடென்ன தருவேன்?

2. அநேக காணிக்கைகளால்
உம் கோபம் மாறுமோ?
நான் புண்ணிய கிரியை செய்வதால்
கடாட்சம் வைப்பீரோ?

3. பலியின் ரத்தம் வெள்ளமாய்
பாய்ந்தாலும், பாவத்தை
நிவிர்த்தி செய்து சுத்தமாய்
ரட்சிக்கமாட்டாதே.

4. நான் குற்றவாளி, ஆகையால்
என்பேரில் கோபமே
நிலைத்திருந்து சாபத்தால்
அழிதல் நியாயமே.

5. ஆனால் என் பாவம் சுமந்து
ரட்சகர் மரித்தார்;
சாபத்தால் தலை குனிந்து
தம் ஆவியை விட்டார்.

6. இப்போதும் பரலோகத்தில்
வேண்டுதல் செய்கிறார்
உம் திவ்விய சந்நிதானத்தில்
என்னை நினைக்கிறார்

7. இவ்வண்ணமாக, கர்த்தரே,
உம்மை வணங்குவேன்.
என் நீதி இயேசுகிறிஸ்துவே,
அவரைப் பற்றினேன்.

KRISHTHUVIN ADAIKALATHIL SILUVAIYIN MAANILALIL

  கிறிஸ்துவின் அடைக்கலத்தில்
  கிறிஸ்துவின் அடைக்கலத்தில் சிலுவையின் மாநிழலில்
கன்மலை வெடிப்பதனில் புகலிடம் கண்டு கொண்டோம்

1. கர்ச்சிக்கும் சிங்கங்களும் ஓநாயின் கூட்டங்களும்
ஆடிடைக் குடிலினில் மந்தைகள் நடுவினில் நெருங்கவும் முடியாது

2. இரட்சிப்பின் கீதங்களும் மகிழ்ச்சியின் சப்தங்களும்
கார்மேக இருட்டினில் தீபமாய் இலங்கிடும் கர்த்தரால் இசை வளரும்

3. தேவனின் இராஜியத்தை திசை எங்கும் விரிவாக்கிடும்
ஆசையாய் ஜெபித்திடும் அதற்கென்றே வாழ்ந்திடும் யாருக்கும் கலக்கம் இல்லை

4. பொல்லோனின் பொறாமைகளும் மறைவான சதி பலவும்
வல்லோனின் கரத்தினில் வரைபடமாயுள்ள யாரையும் அணுகாது

KRISHTHUVUKKUL VALLUM ENAKKU



  கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
  கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு 2

1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்

2. என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன்

3. சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக்கொண்டார்
சிலுவையில் அறைந்துவிட்டார் காலாலே மிதித்துவிட்டார்

4. பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கிவிட்டார்
இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன்

5. மேகங்கள் நடுவினிலே என்நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பாh

KEETHAM KEETHAM JEYA JEYA KEETHAM


கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
  கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கை கொட்டிப் பாடிடுவோம்

இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் - ஆ! ஆ!

1.பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
புரண்டுருண்டோடுது பார் - அங்கு
போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நிதிமுன் - ஆ! ஆ!

2.வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுங்கள் - தாம்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு – ஆ! ஆ!

KERITH AATRU NEER VATRINAALUM


கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்
  கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்
தேசம் பஞ்சத்தில் வாடினாலும் (2)
பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்
காக்கும் தேவன் உனக்கு உண்டு (2)

கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
தூதன் உண்டு அவர் அற்புதம் உண்டு (2)


1. இல்லை என்ற நிலை வந்தாலும்
இருப்பதைப் போல் அழைக்கும் தேவன் (2)
உயிர்ப்பிக்கும் ஆவியினால்
உருவாக்கி நடத்திடுவார் (2) ...கர்த்தர் உண்டு (2)

2. முடியாததென்று நினைக்கும் நேரம்
கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமே (2)
அளவற்ற நன்மையினால்
ஆண்டு நடத்திடுவார் (2) ... கர்த்தர் உண்டு (2)

3. இருளான பாதை நடந்திட்டாலும்
வெளிச்சமாய் தேவன் வந்திடுவார் (2)
மகிமையின் ப்ரசன்னத்தால்
மூடி நடத்திடுவார் (2) ... கர்த்தர் உண்டு (2)

SARVA SRISTIKUM YEJAMAANUM NEERE

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே
  சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்
ஆஹா ஹா அல்லேலூயா (8) ஆமென்.


1. வானம் ப+மி ஒழிந்து போனாலும் உம்
வார்த்தைகள் என்றும் மாறாதே
உலகம் அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான் - ஆஹா ஹா

2. சாத்தான் உன்னை எதிர்த்து போதும்
ஜெயக் கிறிஸ்து உன்னோடே உண்டே
தோல்வி என்றும் உனக்கில்லையே
துதிகானம் தொனித்து மகிழ்வாய் - ஆஹா ஹா

3. எந்தன் மீட்பருமட் ஜீவனும் நீரே
என்னை காக்கும் கர்த்தரும் நீரே
என்னை உமக்கு என்றும் அர்ப்பணித்தேன்
என் வாழ்வில் ஜோதியும் நீரே - ஆஹா ஹா

saantha yesu swamy


சாந்த இயேசு ஸ்வாமீ
  1.சாந்த இயேசு ஸ்வாமீ,
வந்திந்நேரமும்,
எங்கள் நெஞ்சை உந்தன்
ஈவால் நிரப்பும்.

2.வானம், பூமி, ஆழி
உந்தன் மாட்சிமை
ராஜரீகத்தையும்
கொள்ள ஏலாதே.

3.ஆனால், பாலர் போன்ற
ஏழை நெஞ்சத்தார்
மாட்சி பெற்ற உம்மை
ஏற்கப் பெறுவார்.

4.விண்ணின் ஆசீர்வாதம்
மண்ணில் தாசர்க்கே
ஈயும் உம்மை நாங்கள்
போற்றல் எவ்வாறே?

5.அன்பு, தெய்வ பயம்
நல் வரங்களும்,
சாமட்டும் நிலைக்க
ஈயும் அருளும்.

SILUVAIYAI PATRI NINDRU

சிலுவையைப் பற்றி நின்று
  1. சிலுவையைப் பற்றி நின்று
துக்கம் மகனைக் கண்ணுற்று.
வம்மிப் பொங்கினாள் ஈன்றாள்
தெய்வ மாதா மயங்கினார்,
சஞ்சலத்தால் கலங்கினார்,
பாய்ந்ததாத்துமாவில் வாள்.

2. பாக்கியவதி மாதா உற்றார்
சிலுவையை நோக்கிப் பார்த்தார்,
அந்தோ என்ன வேதனை,
ஏசு புத்திரனிழந்து,
துக்க சாகரத்தில் ஆழ்ந்து,
சோகமுற்றார் அன்னை.

3. இணையில்லா இடருற்ற
அன்னை அருந்துயருற
யாவரும் உருகாரோ?
தெய்வ மைந்தன் தாயார் இந்த
துக்க பாத்திரம் அருந்த,
மாதாவோடழார் யாரோ?

IYAIAH NAAN VANTHEN DEVA


ஜயையா, நான் வந்தேன்
  ஜயையா, நான் வந்தேன்; - தேவ
ஆட்டுக்குட்டி, வந்தேன்.

1. துய்யன் நீர் சோரி, பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர், - தயை
செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
- ஜயையா

2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன், என்று – நில்லேன்;
தௌ; உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
- ஜயையா

3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம்
எத்தனை எத்தனையோ! - இவை
திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
- ஜயையா

4. ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து சுத்திகரித்
தென்னை அரவணையும்; - மனம்
தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்
- ஜயையா

JEBA AAVI OOTRUMAIAH JEBIKKANUM



  ஜெப ஆவி ஊற்றுமையா
  ஜெப ஆவி ஊற்றுமையா...
ஜெபிக்கணும்... ஜெபிக்கணுமே

1. ஸ்தோத்திர பலி விண்ணப்ப ஜெபம்
எந்நேரமும் நான் ஏறெடுக்கணும்

2. உபவாசித்து உடலை ஒறுத்து
ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே

3. திறப்பின் வாசலில் நிற்கணுமே
தேசத்திற்காய் கதறணுமே

4. முழங்கால்கள் முடங்கணுமே
கண்கள் எல்லாம் குளமாகணும் - என்

5. தானியேல் போல மூன்று வேளையும்
தவறாமல் நான் ஜெபிக்கணுமே

6. உலகை மறந்து சுயம் வெறுத்து
உம் பாதத்தில் கிடக்கணுமே

JEBATHIN AAVALAI EN NENJIL ARULUM



  ஜெபத்தின் ஆவலை
  1. ஜெபத்தின் ஆவலை
என் நெஞ்சில் அருளும்;
தெய்வாவீ, லோக நேசத்தை
என்னை விட்டகற்றும்.

2. பூலோக சிந்தையை
வெறுத்துத் தள்ளுவேன்;
மேலான நித்திய இன்பத்தை
நான் தேட ஏவுமேன்.

3. எனக்குத் துணையாய்
என் பக்கத்தில் இரும்;
நான் நிலைநிற்கும்படியாய்
கிருபை அளியும்.

4. தெய்வன்பின் பாசத்தால்
கட்டுண்டு, என்றைக்கும்
உம்மை என் முழு மனதால்
பின்பற்றச்செய்திடும்.

JEYAM UNDU ENDRUM JEYAM UNDU


ஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு
  ஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு
இயேசுவின் நாமத்தில் ஜெயம் உண்டு
ஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு
இயேசுவின் இரத்தத்தால் ஜெயம் உண்டு

அல்லேலுயா என்று ஸ்தோத்தரிப்பேன்
அல்லேலுயா என்று போற்றிடுவேன்
அல்லேலுயா என்று ஆராதிப்பேன்
அல்லேலுயா என்று ஆர்பரிப்பேன்

1. யோசபாத்தின் சேனையின் முன் சென்றவர்
துதியினால் என்றும் ஜெயம் தருவார்
தேவ சமுகம் முன் செல்வதால்
தோல்வி என்றும் நமக்கில்லையே

2. யாவே ஷம்மா நம்மோடிருப்பார்
யாவே எல்ஷடாய் சர்வவல்லவர்
யாவே ரஃப்பா சுகம் தருவார்
யாவே ஜெய்ரா கூட இருப்பார்

3. எரிகோவின் கோட்டைகள் இடிந்துவிழும்
சாத்தானின் தடைகள் தகர்ந்து விழும்
இராஜாதி இராஜா நம் இயேசு
வெற்றியின் பாதையில் நடத்தி செல்வார்

JEYAM JEYAM JEYAM NAMAKKU

ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கு
  ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கு
இயேசு இருக்கையில் பயம் எதற்கு

1.மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும்
உன்னை விட்டு விலகாதவர்
உடன்படிக்கையின் தேவன்! வல்லமையின் ராஜா!
அவர் சேனைகளின் கர்த்தர்!

2.அக்கினி இறங்கிடும் அந்தகாரம் அழிந்திடும்
ஆவியின் பெலன் கூடும்
பெலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல
தேவனாலே ஆகும் என் தேவனாலே ஆகும்

3.சாத்தானை ஜெயிக்க சாபத்தை அழிக்க
வல்லமை இறங்கிடுதே
சிலுவையில் இரத்தம் சிந்திய இயேசு
எனக்காய் யுத்தம் செய்குவார் அவர்
எனக்காய் யுத்தம் செய்குவார்

GNANA NAADHA VAANAM BOOMI

ஞான நாதா வானம் பூமி
  1. ஞான நாதா வானம் பூமி
நீர் படைத்தீர்
ராவு பகல் ஓய்வு வேலை
நீர் அமைத்தீர்
வான தூதர் காக்க எம்மை
ஊனமின்றி நாங்கள் தூங்க
ஞான எண்ணம் தூய கனா
நீர் அருள்வீர்.

2. பாவ பாரம் கோப மூர்க்கம்
நீர் தீர்த்திடும்
சாவின் பயம் ராவின் அச்சம்
நீர் நீக்கிடும்
காவலராய்க் காதலராய்
கூடத் தங்கி தூய்மையாக்கும்
ராவின் தூக்கம் நாளின் ஊக்கம்
நீர் ஆக்கிடும்.

3. நாளில் காரும் ராவில் காரும்
ஆயுள் எல்லாம்
வாழும் காலம் மா கரத்தால்
அமைதியாம்
சாகும் நேரம் மோட்சம் சேர்ந்து
ஆகிடவே தூதர்போன்று
ஆண்டிடவே மாட்சியோடு
உம்மோடெனடறும்.

THAM RATHATHAL THOITHA ANGI PORTHU


தம் ரத்ததததில் தோய்ந்த
  I கேள்வி

1. தம் ரத்ததததில் தோய்ந்த
அங்கி போர்த்து,
மாதர் பின் புலம்ப
நடந்து

2. பாரச் சிலுவையால்
சோர்வுறவே
துனையாள் நிற்கின்றான்
பாதையே.

3. கூடியே செல்கின்றார்
அப்பாதையே
பின்னே தாங்குகின்றான்
சீமோனே

4. குருசை சுமந்தெங்கே
செல்லுகின்றார்?
முன் தபங்கிச் சுமக்கும்
அவர் யார்?

II மறுமொழி

5. அவர் பின் செல்லுங்கள்
கல்வாரிக்கே
அவர் பராபரன்
மைந்தனே.

6. அவரின் நேசரே,
நின்று, சற்றே
திவ்விய முகம் உற்று
பாருமே.

7. சிலுவைச் சரிதை
கற்றுக் கொள்வீர்
பேரன்பை அதனால்
அறிவீர்.

8. பாதையில் செல்வோரே:
முன் ஏகிடும்
ரூபத்தில் காணீரோ
சௌந்தரியம்?


III சிலுவை சரிதை

9. குருசில் அறையுண்ட
மனிதனாய்
உம்மை நோக்குகின்றேன்
எனக்காய்

10. கூர் முள் உம் கிரீடமாம்
குரூசாசனம்
சிந்தினீர் எனக்காய்
உம் ரத்தம்

11. உம் தலை சாய்க்கவோ
திண்டு இல்லை:
கட்டையாம் சிலுவை
உம் மெத்தை.

12. ஆணி கை கால், ஈட்டி
பக்கம் பாய்ந்தும்,
ஒத்தாசைக்கங்கில்லை
எவரும்

13. பட்டபகல் இதோ
ராவாயிற்றே:
தூரத்தில் நிற்கின்றார்
உற்றாரே.

14. ஆ, பெரும் ஓலமே!
தோய் சோரியில்
உம் சிரம் சாய்க்கிறீர்
மார்பினில்:

15. சாகும் கள்ளன் உம்மை
நிந்திக்கவும்,
சகிக்கின்றீரே நீர்
என்னாலும்.

16. தூரத்தில் தனியாய்
உம் சொந்தத்தார்
மௌனமாய் அழுது
நிற்கின்றார்.

17. “இயேசு நாசரேத்தான்
யூதர் ராஜா”
என்னும் விலாசம் உம்
பட்டமோ?

18. பாவி என் பொருட்டு
மாளவும் நீர்
என்னில் எந்நன்மையை
காண்கின்றீர்?

IV சிலுவையின் அழைப்பு
(குருவானவர் பாடுவது)

19. நோவில் பெற்றேன் சேயே:
அன்பில் காத்தேன்
நீ வண்ணில் சேரவே
நான் வந்தேன்.

20. தூரமாய் அலையும்
உன்னைக் கண்டேன்:
என்னண்டைக் கிட்டிவா,
அணைப்பேன்.

21. என் ரத்தம் சிந்தினேன்
உன் பொருட்டாய்:
உன்னைக் கொள்ள வந்தேன்
சொந்தமாய்.

22. எனக்காய் அழாதே,
அன்பின் சேயே:
போராடு, மோட்சத்தில்
சேரவே.

V இயேசுவை நாம் வேண்டல்

23. நான் துன்ப இருளில்
விண் ஜோதியே,
சாமட்டும் உம் பின்னே
செல்வேனே:

24. எப்பாரமாயினும்
உம் சிலுவை
நீர் தாங்கின் சுமப்பேன்
உம்மோடே.

25. நீர் என்னைச் சொந்தமாய்
கொண்டால், வேறே
யார் உம்மிலும் நேசர்
ஆவாரே?

26. இம்மையில் உம்மண்டை
நான் தங்கியே
மறுமையில் வாழ
செய்யுமே.

THAMANDAI VANTHA BAALARAI

தம்மண்டை வந்த பாலரை
  1. தம்மண்டை வந்த பாலரை
ஆசீர்வதித்த ரட்சகர்,
இப்போதும் சிறுவர்களை
அணைக்கத் தயையுள்ளவர்.


2. ஆ, இயேசுவே, இப்பிள்ளையை
அணைத்து ஏந்தியருளும்
அளவில்லாசீர்வாதத்தை
அன்பாகத் தந்திரட்சியும்.

THAYALA YESU DEVARIR


தயாள இயேசு, தேவரீர்
  1. தயாள இயேசு, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
வெள்ளோலை தூவிக்கூட்டத்தார்
ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார்.

2. தாழ்வாய் மரிக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
மரணம் வெல்லும் வீரரே
உம் வெற்றி தோன்றுகின்றதே.

3. விண்ணோர்கள் நோக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
வியப்புற்றே அம்மோஷத்தார்
அடுக்கும் பலி பார்க்கிறார்.

4. வெம் போர் முடிக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்!
தம் ஆசனத்தில் ராயனார்
சுதனை எதிர்பார்க்கிறார்.

5. தாழ்வாய் மரிக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்!
நோ தாங்கத் தலை சாயுமே@
பின் மேன்மை பெற்று ஆளுமே.

THAVITHAI POLA NADANAMAADI APPAVAI


தாவீதைப் போல நடனமாடி
  தாவீதைப் போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
இயேசப்பா ஸ்தோத்திரம்

1. என்ன வந்தாலும் எது நடந்தாலும்
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் - இயேசப்பா

2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்

3. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்

4. ஆவியினாலே அபிஷேகம் செய்த
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்

5. கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே
அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்

THUTHIGALIN MATHIYIL VAASAM SEYUM SENAIKALIN



  துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
  1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் சேனைகளின் தேவன்
தாழ்வில் நம்மை நினைத்த அவரை வாழ்வில் போற்றிடுவோம்

அல்லேலூயா அல்லேலூயா
ஆரவாரம் செய்வோம்

2. எரிகோவின் மதிலும் இடிந்து விழுந்தது துதியின் ஆயுதத்தால்
சாத்தான் சேனை பயந்து நடுங்கிடும் துதியின் முழக்கத்தினால்

3. பவுலும் சீலாவும் சிறையில் துதித்தனர் பாடுகள் மத்தியிலும்
மீட்கப்பட்டோர் சீயோனில் பாடுவார் துதியின் புதுப்பாடல்

4. மௌனத்தில் இறங்கும் மரித்தவர் எவரும் துதிக்க முடியாதே
தேகத்தில் ஆவி உள்ளவரை துதித்தே ஆராதிப்போம்

THUTHIKKIROM UMMAI VALLA PITHAVE


துதிக்கிறோம் உம்மை – வல்ல பிதாவே
  1.துதிக்கிறோம் உம்மை – வல்ல பிதாவே
துத்தியம் செய்வோம் – உமை மா அரசே
தோத்ரம் உம் மாட்சிமைக்கே – பரனே
துந்துமி மாட்சிமைக்கே – பிதாவே.

2.சுதனே யிரங்கும் – புவியோர் கடனைச்
சுமந்ததைத் தீர்த்த – தூயசெம்மறியே,
சுத்தா ஜெபங்கேளும் – பரன்வலத்
தோழா ஜெபங்கேளும் – கிறிஸ்தே.

3.நித்தியபிதாவின் மகிமையில் – நீரே,
நிமலாவியினோ – டாளுகிறீரே,
நிதமேகார்ச்சனையே – உன்னத
நேயருக் கர்ச்சனையே – ஆமேன்

THUTHISEI MANAME NIDHAM THUTHISEI


துதிசெய் மனமே நிதம் துதிசெய்
  பல்லவி

துதிசெய் மனமே நிதம் துதிசெய்
துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே

சரணங்கள்

1. உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரத்தில் ஏந்தி
வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே

2. ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே

3. சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும்
சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை

THUTHIPPOM YESUVAI THUTHIPPOM


துதிப்போம் இயேசுவை துதிப்போம்
  துதிப்போம் இயேசுவை துதிப்போம்
துதிப்போம் இராஜாவை துதிப்போம் ….. (2)

1.எரிகோ மதிலை தகர்த்திட்ட
தேவன் நம்மோடு இருக்கிறார் ….. (2)
யோசுவாவின் தேவன் இன்றும்
நம்மோடிருந்து தடையை தகர்ப்பார் ….. (2)

2.சிங்கத்தின் வாயை கட்டின
தேவன் நம்மோடு இருக்கிறார் ….. (2)
தானியேலின் தேவன் இன்றும்
நம்மோடிருந்து நம்மை காப்பார் ….. (2)

3.சிறையில் கட்டுகள் அறுத்திட்ட
தேவன் நம்மோடு இருக்கிறார் ….. (2)
பவுல்சீலாவின் தேவன் இன்றும்
நம்மோடிருந்து கட்டுகள் அறுப்பார் ….. (2)

THUYARUTTRA VENDHARE SILUVAI AASANARE


துயருற்ற வேந்தரே
  1. துயருற்ற வேந்தரே,
சிலுவை ஆசனரே,
நோவால் வாடும் முகத்தை
இருள் திரை மூடிற்றே,
எண்ணிறந்த துனபம் நீர்
மௌனமாக சகித்தீர்.

2. பலியாக மரிக்கும்
வேளை வரும் அளவும்
மூன்று மணி நேரமாய்,
துணையின்றி மௌனமாய்
காரிருளில் தேவரீர்
பேயோடே போராடினீர்.

3. தெய்வ ஏசு மைந்தனார்,
அபிஷேக நாதனார்
“தேவனே, என் தேவனே,
என்தனை ஏன் கைவிட்டீர்?”
என்றுரைக்கும் என் வாசகம்
கேள் இருண்ட ரகசியம்