Monday, June 29, 2015

ANATHI DEVAN UNN ADAIKKALAME

அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே

அனுபல்லவி

இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்

சரணங்கள்

1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார் --- இந்த

2. கானகப் பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளை
அரும் நீரூற்றாய் மாற்றினாரே --- இந்த

3. கிருபை கூர்ந்து மன துருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை
உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் --- இந்த

4. இப்புவி யாத்திரை கடந்திடுவாய்
தூய தேவ தயவால்
கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினிலே
கிடைக்கும் இளைப்பாறுதலே --- இந்த

5. வறண்ட வாழ்க்கை செழித்திடுமே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் --- இந்த

6. ஆனந்தம் பாடித் திரும்பியே வா
தூய தேவ பெலத்தால்
சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் --- இந்த

UNTHAN SITHAM POL NADATHUM

உந்தன் சித்தம் போல் நடத்தும்
கர்த்தாவே நீர் நித்தம் என்னை
எந்தன் சித்தம் போல வேண்டாம்
என் பிதாவே என் யெகோவா

இன்பமான வாழ்க்கை வேண்டேன்
இனிய செல்வம் சீரும் வேண்டேன்
துன்பமற்ற சுகமும் வேண்டேன்
நின் தொண்டு செய்யும் அடியேன்

நேர் சமனாம் நின் வழியோ
சிறு துரமோ மாதொலைவோ
எவ்விதத் துயர்கடலோ
ஏழையின் வாழ்வு எதிலும்

அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்
ஆம் இவற்றால் நீர் நடத்தி
அனுதினம் என்னோடிருப்பீர்
ஐயனே கடைக்கனியே

ANTHA NAAL BAKIYA NAAL - NAAN MEETKAPPATTA

அந்த நாள் பாக்கிய நாள் - நான் மீட்கப்பட்ட
அந்த நாள் பாக்கிய நாள்

அனுபல்லவி

அந்தநாள் ஆனந்தநாள், அருமை இரட்சகரென்னை
அன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள் --- அந்த

சரணங்கள்

1. அன்றே எனக்குப் பேதித்தார் - அவர் வழியில்
அநுதினம் செல்லக் கற்பித்தார்;
என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய
ஏவினார் என் இரட்சகர், எங்கும் எடுத்துரைப்பேனே --- அந்த

2. என்றனை அன்றே இழுத்தார்- தமதன்பினால்
இசைவாய்த் தம்முடன் இணைத்தார்;
சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்கு,
இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன் --- அந்த

3. ஆறுதல்களால் நிறைந்தேன் - அளவில்லாத
ஆசிகளினால் மகிழ்ந்தேன்;
தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து
மாறாத யேசுவினில் மகிமையாய்த் தங்கப் பெற்றேன் --- அந்த

4. அந்நாளில் வாக்குப் பண்ணினேன் - உறுதியாக
எந்நாளும் நான் புதுப்பிப்பேன்;
சொன்ன இவ்வாக்கை நிதம் , சுத்தமாய் நிறைவேற்ற
உன்னத பலம் தாராய் , என்னையாட்கொண்ட தேவா --- அந்த

ANATHIYAANA KARTHARE

1. அநாதியான கர்த்தரே,
தெய்வீக ஆசனத்திலே
வானங்களுக்கு மேலாய் நீர்
மகிமையோடிருக்கிறீர்.

2. பிரதான தூதர் உம்முன்னே
தம் முகம் பாதம் மூடியே
சாஷ்டாங்கமாகப் பணிவார்,
'நீர் தூய தூயர்' என்னுவார்.

3. அப்படியானால், தூசியும்
சாம்பலுமான நாங்களும்
எவ்வாறு உம்மை அண்டுவோம்?
எவ்விதமாய் ஆராதிப்போம்?

4. நீரோ உயர்ந்த வானத்தில்,
நாங்களோ தாழ்ந்த பூமியில்
இருப்பதால், வணங்குவோம்,
மா பயத்தோடு சேருவோம்.

ANANTHA KOODI KOOTTATHAR அநந்த கோடி கூட்டத்தார்

1. அநந்த கோடி கூட்டத்தார்
ஆனந்த கீதம் பாடியே,
பண் இசைப்பார் வெண் உடையார்
தெய்வாசனம் முன்னே.
விண்வேந்தர் தயை போக்கிற்றே
மண் மாந்தர் பாவம் நோவுமே;
மேலோகிலே நீர் நோக்குவீர்
உம் நாதர் மாட்சியே.
பாடற்ற பக்தர் சேனையே,
கேடோய்ந்து தூதரோடுமே
பண் மீட்டுவீர்; விண் நாதர்தாம்
தம் வார்த்தை நல்குவார்.

2. மா தாழ்வாய் வாழ்ந்தீர் பாரினில்,
கோதற்ற வெண்மை அணிந்தீர்;
உம் நீதிக்காய் நம் நாதரே
பொற் கிரீடம் சூட்டுவார்;
பூலோக வாழ்வின் கண்ணீரை
மேலோகில் ஸ்வாமி நீக்கினார்;
போம் திகிலும்; உம் மீட்பரின்
நல் மார்பில் சாய்குசீர்
விண் வீட்டினில் மா பந்தியை
மாண் வேந்தரோடு அடைந்தீர்;
நீர் பெற்றீரே பேர் வாழ்வுமே
கர்த்தாவோடென்றுமே.

3. ஆ, வீரர் சூரர் சேனையே,
மா தீரச் செய்கை ஆற்றினீர்,
நீர் சகித்தீர், நீர் ஜெயித்தீர்
நீர் வாழ்க, பக்தரே!
மண் மாந்தர் கீர்த்தி இகழ்ந்தீர்,
விண் வேந்தரோடும் சிலுவை
நீர் சுமந்தீர், நீர் அறுப்பீர்
உம் கண்ணீர் பலனே.
மெய் மணவாட்டி, போற்றுவாய்!
வையகமே முழங்குவாய்!
எம் ஸ்வாமியே, என்றென்றுமே
உம் ஸ்தோத்ரம் ஏறுமே.

MAGIBANAI ANUTHINAME LYRICS

மகிபனையே அனுதினமே
மகிழ்வுடனே துதித்திடுவேன் - தினம்

1. என்னை அன்பில் இணைத்திடவே
கண்டிப்பா உருவாகுமுன்னே
ஜோதியாய் தேவ மகிமையை பெறவே
தேவன் என்னை தெரிந்தெடுத்ததினால் --- மகிபனையே

2. தூதராலும் செய்யவொண்ணா
தூய பணியை அற்புதமாய்
தோசியாலும் செய்திட கிருபை
தூயன் கிறிஸ்து தந்தனரே --- மகிபனையே

3. அழைத்தாரே சுவிஷேசத்தினால்
அடைய தேவ சாயலதை
பயத்துடனே பரிசுத்தமதையே
பாரினில் பூரணமாக்கிடுவோம் --- மகிபனையே

4. ஆவலுடனே காத்திருந்தேன்
சேவை புரிவோம் இயேசுவுக்காய்
ஆசை இயேசு மணவாளன் வருவார்
சீயோனில் என்னை சேர்த்திடவே --- மகிபனையே

KANMANEE NEE KANVALARAI LYRICS


கண்மணி நீ கண்வளராய்
விண்மணி நீ உறங்கிடுவாய்
கண்மணி நீ கண்வளராய்

1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
நீங்கும் துன்பம் நித்திரை வர
ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட
தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்
கந்தை துணி பொதிந்தாயோ

2. சின்ன இயேசு செல்லப்பாலனே
உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே
என்னைப் பாரும் இன்ப மைந்தனே
உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற
ஏழை மகவாய் வந்தனையோ

3. வீடும் இன்றி முன்னனைதானோ
காடும் குன்றும் சேர்ந்ததேனோ
பாடும் கீதம் கேளாயோ நீயும்
தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய
ஏழ்மைக் கோலம் கொண்டனையோ

ADHISAYAMAANA OOLIMAYA NAADAAM

அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் - நான்
வாஞ்சிக்கும் நாடாம் -என்

சரணங்கள்

1. பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா அல்லேலூயா --- அதிசயமான

2. சந்திர சூரியன் இல்லை
ஆனால் இருள் ஏதும் காணவில்லை
தேவ குமாரன் ஜோதியில் ஜோதி
நித்திய வெளிச்சமாவார் - என்றும் பகல் --- அதிசயமான

3. விதவிதக் கொள்கை இல்லை
பலப் பிரிவுள்ள பலகை இல்லை
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்பு மயம் - அன்புள்ளோர் செல்லும் --- அதிசயமான

4. பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை
மொழி , நிறம் , ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை --- அதிசயமான

5. கடைத்தெரு ஏதும் இல்லை
தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை
தரித்திரர் , செல்வர் ,சிறியவர் , பெரியோர்
ஆகிய சிறப்பும் இல்லை - எல்லாம் சமம் --- அதிசயமான

6. பல பலத் திட்டம் இல்லை - ஆளும்
சட்டங்கள் ஏதுமில்லை
காவல் துறையில்லை , கண்டிப்பும் இல்லை
மனிதனின் ஆட்சி இல்லை - பேரானந்தம் --- அதிசயமான

7. இயேசுவின் இரத்தத்தினால் - பாவம்
கழுவினால் செல்லலாமே
இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
பூமியில் எவரும் வேண்டாம் - இன்றே வாரீர் --- அதிசயமான

ATHISAYANGALAI YELLA IDAMUM SEIYUM

1. அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்
கர்த்தாவை, வாக்கினால் இருதயத்திலேயும்
துதியுங்கள்; அவர் நாம் ஜென்மித்த நாளே
முதல் இம்மட்டுக்கும் இரக்கம் செய்தாரே.

2. நர தயாபரர் முடிய ஆதரித்து,
நற்சமாதானத்தால் மகிழ்ச்சியை அளித்து,
தயையை நம்முட மேல் வைத்தெந்நேரமும்
ரட்சித்து, தீமையை எல்லாம் விலக்கவும்.

3. உன்னதமாகிய விண்மண்டலத்திலுள்ள,
மாறாத உண்மையும் தயையும் அன்புள்ள
பிதா சுதனுக்கும் திவ்விய ஆவிக்கும்
எத்தேச காலமும் துதி உண்டாகவும்

ATHIKAALAILUMAI THEDUVEN MULU MANATHALE

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே

அனுபல்லவி

இதுகாறும் காத்த தந்தை நீரே;
இனிமேலும் காத்தருள் செய்வீரே,
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே! --- அதிகாலை

சரணங்கள்

1. போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!
ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?
எனக்கான ஈசனே! வான ராசனே!
இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! --- அதிகாலை

2. பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது
தப்பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,
விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? --- அதிகாலை

3. நரர்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே!
தீநாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
பரலோக ஆவியைநல் மாரி போலெனிலே பெய்யே!
புகழார நாதனே! வேத போதனே!
பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே! --- அதிகாலை

ADHIKAALAI YESU VANTHU LYRICS

1. அதிகாலை இயேசு வந்து
கதவண்டை தினம் நின்று
தட்டித் தமக்குத் திறந்து
இடம் தரக் கேட்கிறார்.

2. உம்மை நாங்கள் களிப்பாக
வாழ்த்தி: நேசரே, அன்பாக
எங்களண்டை சேர்வீராக
என்று வேண்டிக்கொள்ளுவோம்.

3. தினம் எங்களை நடத்தி,
சத்துருக்களைத் துரத்தி,
எங்கள் மனதை எழுப்பி,
நல்ல மேய்ப்பராயிரும்.

4. தாழ்ச்சி நாங்கள் அடையாமல்,
நம்பிக்கையில் தளராமல்
நிற்க எங்களுக்கோயாமல்
நல்ல மேய்ச்சல் அருளும்.

5. ஆமேன், கேட்டது கிடைக்கும்
இயேசு இன்றும் என்றென்றைக்கும்
நம்மைக் காப்பார் அவர் கைக்கும்
எல்லாம் ஒப்புவிக்கிறோம்.

ADHI MANGALA KAARANANE THUTHI

அதி-மங்கல காரணனே, துதி-தங்கிய பூரணனே, நரர்
வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!

சரணங்கள்

1. மதி-மங்கின எங்களுக்கும்,
திதி-சிங்கினர் தங்களுக்கும்
உனின் மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றிடவையாய் துங்கவனே --- அதி-மங்கல

2. முடி-மன்னர்கள் மேடையும்,
மிகு-உன்னத வீடதையும் நீங்கி
மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,
வந்தனையோ தரையில்? --- அதி-மங்கல

3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,
உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்
பெற்ற நற்கோலம் இதோ? --- அதி-மங்கல

ADAIKKALAM ADAIKKALAME YESU NAADHA

அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா, உன்
அடைக்கலம் அடைக்கலமே!

அனுபல்லவி

திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு --- அடைக்கலம்

சரணங்கள்

1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,
அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;
மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! ---அடைக்கலம்

2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;
கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,
கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! --- அடைக்கலம்

3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்;
பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! --- அடைக்கலம்

4. என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ
அன்றுனது பக்கமதில் ஆகியிருந்த கள்ளனுக்கு
இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? --- அடைக்கலம்

AKKINI ABHISHEGAM YEENDHIDUM

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்
தேவ ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும்

1. பரமன் இயேசுவை நிறைத்தீரே
பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்
உந்தன் சீஷருக்களித்தீரெ
அன்பின் அபிஷேகம் ஈந்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் --- அக்கினி

2. சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே
கர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்
தீர்க்கன் எலிசாவுக் களித்தீரே
இரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் --- அக்கினி

3. அன்பர் இயேசுவின் நாமத்திலே
வன் துயர் பேய் பிணி நீங்கவே
அற்புதம் அடையாளம் நிகழ்ந்திடவே
பொற்பரன் ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் --- அக்கினி

4. வானில் இயேசு வருகையிலே
நானும் மறுரூபம் ஆகவே
எந்தன் சாயல் மாறிடவே
மைந்தன் ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் --- அக்கினி

AGILATHAIYUM AAGAYATHAYUM

அகிலத்தையும் ஆகாயத்தையும்
உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே
ஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரே
உந்தன் நல்ல கரத்தினாலே

ஆகாதது ஒன்றுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை
சர்வ வல்லவரே கனமகிமைக்கு
பாத்திரரே ஆகாதது என்று
ஏதுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை

Thursday, June 18, 2015

AIYA NAN VANTHEN LYRICS

ஐயையா, நான் வந்தேன் ;-தேவ
ஆட்டுக்குட்டி ,வந்தேன் .

சரணங்கள்

துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர் ,-தயை
செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை ;
தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா


உள்ளக் கரைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன் என்று -நில்லேன் ;
தெள் உம உதிரம் கறை யாவும் தீர்த்திடும் ;
தேவாட்டுக்குட்டி வந்தேன் -ஐயையா


எண்ணம் .வெளியே போராட்டங்கள் உட்பயம்
எத்தனை எத்தனையோ !-இவை
திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் ,
தேவாட்டுக்குடி வந்தேன் - ஐயையா

ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்துசுத்திகரித்
தென்னை அரவணையும் ;-மனம்
தேற்றிக் கொண்டேன் உந்தன் வாக்குத் தத்தங்களால்
தேவாடுக்குட்டி வந்தேன் -ஐயையா

மட்டற்ற உம அன்பினாலே தடை எதும்
மாறி அகன்றதுவே ,-இனி
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா

UM NAAMAM SOLLA SOLLA LYRICS



உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா
சரணங்கள்

1. மாணிக்க தேரோடு, காணிக்கை தந்தாலும்
உமக்கது இணையாகுமா
உலகமே வந்தாலும், உறவுகள் நின்றாலும்
உமக்கு அது ஈடாகுமா --- உம் நாமம்

2. பாலென்பேன் தேனென்பேன், தெவிட்டாத அமுதென்பேன்
உம் நாமம் என்னவென்பேன்
மறையென்பேன் நிறையென்பேன், நீங்காத நினைவென்பேன்
உம் நாமம் என்னவென்பேன் --- உம் நாமம்

3. முதலென்பேன் முடிவென்பேன், மூன்றில் ஓர் வடிவென்பேன்
முன்னவர் நீரே என்பேன் 
மொழியென்பேன் மொழியென்பேன், வற்றாத ஊற்றென்பேன்
வாழ்க உம் நாமம் என்பேன் --- உம் நாமம்

Nam Devan Anbullavar

நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர்
நம் தேவன் நீதிபரர் நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே
1.நன்மை ஏதும் நம்மில் ஒன்றும் இல்லையே
என்ற போதும் நம்மை நேசித்தாரே
ஆ..அந்த அன்பில் மகிழ்வோம்
அன்பரின் பாதம் பணிவோம்
2.அத்திமரம் துளிர் விடாமல் போனாலும்
திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும்
ஆ..அவர் காயம் நோக்குவோம்
அதுவே என்றும் போதுமே
3.வான மீதில் இயேசு இறங்கி வருவார்
தேவ தூதர் போல மகிமை அடைவோம்
ஆ ... எங்கள் தேவா வாருமே
அழைத்து வானில் செல்லுமே
4.அல்லேலூயா கீதம் நாம் என்றும் பாடுவோம்
ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம்
ஆ..அந்த நாள் நெருங்குதே
நினைத்தால் நெஞ்சம் பொங்குதே

PANIVILUM RAAVINIL KADUNKULIR

பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்

பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்
கன்னிமரி மடியில் .....
விண்ணவர் வாழ்த்திட (2)
ஆயர்கள் போற்றிட
இயேசு பிறந்தாரே ...
ராஜன் பிறந்தார் (2) , நேசர் பிறந்தாரே (2)....


மின்னிடும் வானக தாரகையே
தேடிடும் ஞானியர் கண்டிடவே … (2)
முன்வழி கட்டிச் சென்றதுவே
பாலனைக் கண்டு பணிந்திடவே …
மகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை ( பனி )


மகிமையில் தோன்றிய தவமணியே
மாட்சிமை தேவனின் கண்மணியே ... (2)
மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே
மானிடனாக உதிதவரே …
பணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை ( பனி

Neer Mathram Pothum

யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்
நீர் மாத்ரம் போதும் எனக்கு
யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமானோம்
யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
என் தேவையெல்லாம் சந்திப்பீர்
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மை போல் வேறு தேவன் இல்லை
யெகோவா ஷாலோம் உம் சமாதானம்
தந்தீர் என் உள்ளத்திலே
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
இயெசுவே நீரே என் ஆத்ம நேசர்
என்னில் எவ்வளவன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) - எனக்கு

ORUPOTHUM UNNAIPIRIYA NILAYANA LYRICS


ஒருபோதும் உனைப் பிரியா
நிலையான உறவொன்று வேண்டும்
என் உடல்கூட எரிந்தாலும்
உன் நாமம் நான் சொல்ல வேண்டும்
நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே -2
நீங்காத நிழலாக வா இறைவா

1. உன் கையில் என்னை நீ பொறித்தாய்
பெயர் சொல்லி அன்பாய் எனை அழைத்தாய் (2)
ஏன் என்னை நீ தெரிந்தாய் என் வாழ்வில் ஏன் நுழைந்தாய்
உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன் - தாய்
உறவொன்று தேடும் பிள்ளைபோல் நின்றேன்
உன்னோடு நான் வாழுவேன்

2. நீர் தேடும் மான் போல தேடி வந்தேன்
நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன் (2)
என்னுள்ளே வாழும் தெய்வம் என்னை நீ ஆளும் தெய்வம்
என் இயேசு நீயே என்னுள்ளம் நின்றாய் - நிதம்
என் பாதை முன்னே நீ தானே சென்றாய்
உன்னோடு நான் வாழுவேன்

ORUNALUM UNNAI MARAVEAN LYRICS


ஒரு நாளும் உனை மறவேன்
தாயே ஒருநாளும் உனை மறவேன் (2)

1. கடல்நீரில் மிதந்தாலும் வானமதில் பறந்தாலும் -2
உலகமெலாம் அறிந்தாலும் -2 உத்தமனாய்ப் பிறந்தாலும்

2. நினைப்பவைகள் நடந்தாலும் நிலைகுலைந்தே மடிந்தாலும் -2
என்னைப்பிறர்தான் இகழ்ந்தாலும் -2 இனிதாகப் புகழ்ந்தாலும்

3. சோதனைகள் சூழ்ந்தாலும் வேதனைகள் அடைந்தாலும் -2
சாதனைகள் படைத்தாலும் - 2 சரித்திரமாய் முளைத்தாலும்

ENTHAN SONTHAME YESUVE


எந்தன் சொந்தமே இயேசுவே
எந்தன் நெஞ்சிலே வாருமே
உன்னில் மகிழ்ந்து வாழ உன்னை எனக்குத் தாராய்
எந்தன் சொல்லும் செயலும் உந்தன் உணர்வில் ஓங்குமே (2)
எந்தன் சொந்தமே இயேசுவே

1. சுமைகளால் வாழ்வை நான் வெறுத்திடும் போது
சுகமாய் வாழ எழுந்தென்னில் வா (2)
எனக்காய் நின் வாழ்வை வெறுமையாக்கினீர் - 2
என்னையும் பிறர் அன்பில் வாழச் செய்குவாய்

2. சிங்கார வாழ்வின் சிகரத்தில் இருந்தாலும்
என் நெஞ்சிலே நீ இல்லையேல் (2)
சரிந்தே வீழும் வாழ்வின் செல்வங்கள் - 2
இதனையே உணர்ந்தே நான் வாழ விழைகிறேன்

ANAATHIYAANA KARTHARE

அனாதியான கர்த்தரே
  1. அனாதியான கர்த்தரே,
தெய்வீக ஆசனத்திலே
வானங்களுக்கு மேலாய் நீர்
மகிமையோடிருக்கிறீர்.

2. பிரதான தூதர் உம்முன்னே
தம் முகம் பாதம் மூடியே
சாஷ்டாங்கமாகப் பணிவார்,
‘நீர் தூய தூயர்’ என்னுவார்.

3. அப்படியானால், தூசியும்
சாம்பலுமான நாங்களும்
எவ்வாறு உம்மை அண்டுவோம்?
எவ்விதமாய் ஆராதிப்போம்?

4. நீரோ உயர்ந்த வானத்தில்,
நாங்களோ தாழ்ந்த பூமியில்
இருப்பதால், வணங்குவோம்,
மா பயத்தோடு சேருவோம்.

VIRUNTHAI SERUMEN ALAIKIRAR

விருந்தைச் சேருமேன், அழைக்கிறார்
  1.விருந்தைச் சேருமேன்,
அழைக்கிறார்
ஆகாரம் பாருமேன், போஷிப்பிப்பார்
தாகத்தைத் தீர்க்கவும்
இயேசுவின் மார்பிலும்
சாய்ந்திளைப்பாறவும்
வா, பாவி, வா.

2. ஊற்றண்டை சேரவும் ஜீவனுண்டாம்
பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம்
நம்பி வந்தோருக்கு
திருப்தி உண்டாயிற்று
ஜீவாற்றின் அண்டைக்கு
வா, பாவி, வா.

3. மீட்பரின் பாதமும் சேராவிடில்
தோல்வியே நேரிடும் போராட்டத்தில்
இயேசுவே வல்லவர்,
இயேசுவே நல்லவர்,
இயேசுவே ஆண்டவர்
வா, பாவி, வா.

4. மோட்சதிதின் பாதையில் முன்செல்லுவாய்
சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்?
வாடாத கிரீடமும்
ஆனந்த களிப்பும்
பேர் வாழ்வும் பெறவும்
வா, பாவி, வா.

5. சேருவேன், இயேசுவே, ஏற்றுக்கொள்வீர்
பாவமும் அறவே சுத்தம்செய்வீர்
அப்பாலே மோட்சத்தில்
ஆனந்நக் கடலில்
மூழ்கிப் பேரின்பத்தில்
கெம்பீரிப்பேன்.

VEENAIYE OLITTHIDU VINNAVAR PIRANTHAR

வீணையே ஒலித்திடு விண்ணவர் பிறந்தார்
  வீணையே ஒலித்திடு
விண்ணவர் பிறந்தார்
கவிதையே மலர்ந்திடு
கர்த்தர் பிறந்தார் (2)

தேவன் சாரோனின் வண்ண ரோஜா
பள்ளத்தாக்கின் அழகு லீலி (2)
- வீணையே

1. பூந்தென்றலே பார் வெண்ணிலவே
விண் மீன்களே மகிழ்ந்து பாடுங்கள் - தேவன்

2. பூங்குயில்களே ஆடும் மயில்களே
தேன் மலர்களே மகிழ்ந்து போற்றுங்கள் - தேவன்

3. இன்பாடல்கள் உம் கிருபைகள்
என்றும் பாடுவேன் ஏசு பாலனே - வீணையே

VERU JENMAM VENUM LYRICS

வேறு ஜென்மம் வேணும், - மனம்
மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.

1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்
தேறுதலான விண்பேறு பெற இங்கே; - வேறு

2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
தேவனின் சாயலை மேவுவதாகிய; - வேறு

3. மானிடரின் அபிமானத்தினாலல்ல,
வானவரின் அருள் தானமாக வரும்; - வேறு

4. ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி,
மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; - வேறு

5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,
சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; - வேறு

6. மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,
விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்; - வேறு

ANAATHI DEVAN UNN ADAIKALAME LYRICS

அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே

இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரணபரியந்தம் நம்மை நடத்திடுவார்

1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
தூய தேவ அன்பே
இவ் வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார்

2. கானகப் பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீரூற்றாய் மாற்றினாரே

3. கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கைதனை
உண்மையாய்க் கர்த்தர் காத்துக்கொள்வார்

4. இப்புவி யாத்திரை கடந்திடுவாய்
தூய தேவ தயவால்
கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினில்
கிடைக்கும் இளைப்பாருதல்

5. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம

Monday, June 15, 2015

ATHIMARAM THULIRVIDAAMEL PONAALUM அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
  அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களி கூருவேன்

1.ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்

2.மந்தையிலே ஆடுகளின்றிப்போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்

3.எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்

4.உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும

ATHISAYAMAANA OOLIMAYA NAADAAM அதிசயமான ஒளிமய நாடாம்

அதிசயமான ஒளிமய நாடாம்
  அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் - நான் வாஞ்சிக்கும் நாடாம்

1. பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு - 2
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா - அல்லேலூயா

2. சந்திர சூரியன் இல்லை ஆனால்
இருள் ஏதும் காணவில்லை - 2
தேவகுமாரன் ஜோதியில் ஜோதி
நித்திய வெளிச்சமவர் - என்றும் பகல்

3. விதவிதக் கொள்கையில்லை
பலப்பிரிவுள்ள பலகை இல்லை - 2
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்புமயம் - அன்புள்ளோர் செல்லும்

4. பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை - 2
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை - அன்பே மொழி

5. பல பல திட்டம் இல்லை
ஆளும் சட்டங்கள் ஏதும் இல்லை - 2
காவல்துறையில்லை கண்டிப்பும் இல்லை
மனிதனின் ஆட்சியில்லை - பேரானந்தமே

6. கடைத்தெரு ஏதும் இல்லை
தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை - 2
தரித்திரர் செல்வர் சிறியவர் பெரியோர்
ஆகிய சிறப்பும் இல்லை - எல்லாம் சமம்

7. இயேசுவின் இரத்ததினால்
பாவம் கழுவினால் செல்லலாமே - 2
இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
இப்ப+மியில் எவரும் வேண்டாம் - இன்றே வாரீர்

ATHIKAALAYIL BAALANAI THEDI அதிகாலையில் பாலனைத் தேடி

அதிகாலையில் பாலனைத் தேடி
  அதிகாலையில் பாலனைத் தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி,
தெய்வ பாலனைப் பணிந்திட வாரீர்…
அதிகாலையில் பாலனைத் தேடி…
வாரீர்… வாரீர்… வாரீர்…
நாம் செல்வோம்

1. அன்னை மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட,
விரைவாக நாம் செல்வோம் கேட்க…
- அதிகாலையில்

2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே
உன் சிந்தை குளிர்ந்திட போற்று
நல் காட்சியை கண்டிட நாமே…
- அதிகாலையில்

ATHIKAALAI STHOTHIRA BALI

அதிகாலை ஸ்தோத்திர பலி
  அதிகாலை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான்
ஆராதனை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான் - 2

1. எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவி செய்தீர்
இதுவரை உதவி செய்தீர்
எபிநேசர் எபிநேசர்

2. பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக ராஜாவே
பரலோக ராஜாவே
பரிசுத்தர் பரிசுத்தர்

3. எல்ஷடாய் எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே
எல்லாம் வல்லவரே
எல்ஷடாய் எல்ஷடாய்

4. எல்ரோயி எல்ரோயி
என்னை காண்பவரே
என்னை காண்பவரே
எல்ரோயி எல்ரோயி

5. யேகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யேகோவா யீரே

6. அதிசய தெய்வமே
ஆலோசனை கர்த்தரே
ஆலோசனை கர்த்தரே
அதிசய தெய்வமே

7. யேகோவா ஷம்மா
எங்களோடு இருப்பவரே
எங்களோடு இருப்பவரே
யேகோவா ஷம்மா

8. யேகோவா ஷாலோம்
சாமாதானம் தருகிறீர்
சாமாதானம் தருகிறீர்
யேகோவா ஷாலோம்

9. யேகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர்
எந்நாளும் வெற்றி தருவீர்
யேகோவா நிசியே

10. யேகோவா ரஃப்பா
சுகம் தரும் தெய்வம்
சுகம் தரும் தெய்வம்
யேகோவா ரஃப்பா

ATHIKAALAI NERAM அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)

அதிகாலை நேரம்
  அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்

1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா

2. பெலனே கன்மலையே
பெரியவரே என் உயிரே

3. நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே

4. நலன்தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே

5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா

6. விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீர் துடைப்பவரே

ANBODU EMMAI POOSHIKKUM அன்போடு எம்மைப் போஷிக்கும்

அன்போடு எம்மைப் போஷிக்கும்

1. அன்போடு எம்மைப் போஷிக்கும்
பெத்தேலின் தெய்வமே;
முன்னோரையும் நடத்தினீர்
கஷ்ட இவ்வாழ்விலே.

2. கிருபாசனமுன் படைப்போம்
எம் ஜெபம் ஸ்தோத்ரமும்;
தலைமுறையாய்த் தேவரீர்
எம் தெய்வமாயிரும்.

3. மயங்கும் ஜீவ பாதையில்
மெய்ப் பாதை காட்டிடும்;
அன்றன்றுமே நீர் தருவீர்
ஆகாரம் வஸ்திரமும்.

4. இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,
பிதாவின் வீட்டினில்
சேர்ந்திளைப்பாறுமளவும்
காப்பீர் உம் மறைவில்.

5. இவ்வாறான பேர் நன்மைக்காய்
பணிந்து கெஞ்சினோம்;
நீர்தாம் எம் தெய்வம் என்றுமே,
சுதந்தரமுமாம்.

ANBURUVAAM YEM AANDAVA LYRICS


1. அன்புருவாம் எம் ஆண்டவா,
எம் ஜெபம் கேளும், நாயகா;
நாங்கள் உம் ராஜ்ஜியம் ஆண்டாண்டும்
பாங்குடன் கட்ட அருளும்.

2. வாலிபத்தில் உம் நுகமே
வாய்மை வலுவாய் ஏற்றுமே,
வாழ்க்கை நெறியாம் சத்தியம்
நாட்ட அருள்வீர் நித்தியம்.

3. அல்லும் பகலும் ஆசையே
அடக்கி ஆண்டு, உமக்கே;
படைக்க எம்மைப் பக்தியாய்
பழுதேயற்ற பலியாய்.

4. சுய திருப்தி நாடாதே,
உம் தீர்ப்பை முற்றும் நாடவே;
வேண்டாம் பிறர் பயம் தயை,
வீரமாய்ப் பின் செல்வோம் உம்மை.

5. திடனற்றோரைத் தாங்கிட,
துக்கிப்பவரை ஆற்றிட;
வாக்கால் மனத்தால் யாரையும்
வருத்தா பலம் ஈந்திடும்.

6. எளிதாம் வாழ்க்கை ஏங்கிட,
தீங்கற்ற இன்பம் தேடிட,
மன்னிக்க முற்றும் தீமையை
நேசிக்க மனு ஜாதியை.

ALLELUJAH AAA MAANTHARE அல்லேலூயா! ஆ மாந்தரே

அல்லேலூயா! ஆ மாந்தரே

1. அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே, நாம் பாடுவோம்,
இந்நாளில் சாவை வென்றோராம்
விண் மாட்சி வேந்தர் போற்றுவோம்.
அல்லேலூயா!

2. அஞ்ஞாயிறு அதிகாலை
நல் மாதர் மூவர் கல்லறை
சென்றாரே காண தேகத்தை.

3. அம்மூவர் பார்த்தார் தூதன் தான்;
வெண் ஆடை தூதன் சொல்லுவான்:
நாதர் கலிலேயா செல்வார்.

4. பயந்த சீஷர் ராவிலே
கண்டார் கேட்டார் தம் நாதரே!
என் சமாதானம், தாசரே!

5. உயிர்த்த நாதர் கண்டோமே
என்றோரைத் தோமா கேட்டானே;
நம்பான், சந்தேகங்கொண்டானே.

6. வா, தோமா, என் விலாவைப் பார்,
இதோ, என் கைகள் கால்கள் பார்;
நம்பு, சந்தேகம் தீர் என்பார்.

7. தோமா சந்தேகம் தீர்ந்தனன்;
விலா, கை, கால்கள் நோக்கினன்;
என் நாதா! ஸ்வாமி! என்றனன்.

8. காணாமல் நம்பின் பாக்கியர்;
மாறா விஸ்வாசம் வைப்பவர்
மா நித்திய ஜீவன் பெறுவர்.

9. மா தூயதாம் இந்நாளில் நாம்
நம் பாடல் ஸ்தோத்ரம் படைப்போம்;
பரனைப் போற்றி மகிழ்வோம்.
அல்லேலூயா!

ARULIN OOLIYAI KANDAAR அருளின் ஒளியைக் கண்டார்

அருளின் ஒளியைக் கண்டார்

1. அருளின் ஒளியைக் கண்டார்
இருளின் மாந்தரே;
மருள் மரண மாந்தரில்
திரு ஒளி வீச.

2. ஜாதிகளைத் திரளாக்கி
நீதி மகிழ்ச்சியால்
கோதில் அறுப்பில் மகிழ
ஜோதியாய்த் தோன்றினார்.

3. கர்த்தன், பிறந்த பாலகன்,
கர்த்தத்துவமுள்ளோன்;
சுத்த அவரின் நாமமே
மெத்த அதிசயம்.

4. ஆலோசனையின் கர்த்தனே,
சாலவே வல்லோனே,
பூலோக சமாதானமே,
மேலோக தந்தையே.

5. தாவீதின் சிங்காசனத்தை
மேவி நிலைகொள்ள
கூவி நியாயம் நீதியால்
ஏவி பலம் செய்வார்.

AMAITHI ANBIN SWAMIYE LYRICS

அமைதி அன்பின் ஸ்வாமியே
1. அமைதி அன்பின் ஸ்வாமியே,
இப்பாரில் யுத்தம் மூண்டதே;
விரோதம் மூர்க்கம் ஓய்த்திடும்,
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

2. எம் முன்னோர் காலம் தேவரீர்
செய்த மா கிரியை நினைப்பீர்;
எம் பாவம் நினையாதேயும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

3. நீர்தாம் சகாயம் நம்பிக்கை;
கடைப்பிடிப்போம் உம் வாக்கை;
வீண் ஆகாதே யார் வேண்டலும்;
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

4. விண் தூதர் தூயோர் அன்பினில்
இசைந்தே வாழும் மோட்சத்தில்
உம் அடியாரைச் சேர்த்திடும்;
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

ATHO OOR JEEVA VAASALE

அதோ! ஓர் ஜீவ வாசலே!

1. அதோ! ஓர் ஜீவ வாசலே!
அவ்வாசலில் ஓர் ஜோதி
எப்போதும் வீசுகின்றதே,
மங்காத அருள்ஜோதி.

ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!
அவ்வாசல் திறவுண்டதே!
பாரேன்! பாரேன்!
பார்! திறவுண்டதே.

2. அவ்வாசலுள் பிரவேசிப்போர்
கண்டடைவார் மெய்வாழ்வும்
கீழோர், மேலோர்,இல்லோர்,உள்ளோர்,
எத்தேச ஜாதியாரும்.

3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம்,
அவ்வாசலில் உட்செல்வோம்;
எப்பாவம் துன்பும் நீங்கிப்போம்,
கர்த்தாவைத் துதிசெய்வோம்.

ANANTHA KOODI KOOTATHAR LYRICS

அநந்த கோடி கூட்டத்தார்

1. அநந்த கோடி கூட்டத்தார்
ஆனந்த கீதம் பாடியே,
பண் இசைப்பார் வெண் உடையார்
தெய்வாசனம் முன்னே.
விண்வேந்தர் தயை போக்கிற்றே
மண் மாந்தர் பாவம் நோவுமே;
மேலோகிலே நீர் நோக்குவீர்
உம் நாதர் மாட்சியே.
பாடற்ற பக்தர் சேனையே,
கேடோய்ந்து தூதரோடுமே
பண் மீட்டுவீர்; விண் நாதர்தாம்
தம் வார்த்தை நல்குவார்.

2. மா தாழ்வாய் வாழ்ந்தீர் பாரினில்,
கோதற்ற வெண்மை அணிந்தீர்;
உம் நீதிக்காய் நம் நாதரே
பொற் கிரீடம் சூட்டுவார்;
பூலோக வாழ்வின் கண்ணீரை
மேலோகில் ஸ்வாமி நீக்கினார்;
போம் திகிலும்; உம் மீட்பரின்
நல் மார்பில் சாய்குசீர்
விண் வீட்டினில் மா பந்தியை
மாண் வேந்தரோடு அடைந்தீர்;
நீர் பெற்றீரே பேர் வாழ்வுமே
கர்த்தாவோடென்றுமே.

3. ஆ, வீரர் சூரர் சேனையே,
மா தீரச் செய்கை ஆற்றினீர்,
நீர் சகித்தீர், நீர் ஜெயித்தீர்
நீர் வாழ்க, பக்தரே!
மண் மாந்தர் கீர்த்தி இகழ்ந்தீர்,
விண் வேந்தரோடும் சிலுவை
நீர் சுமந்தீர், நீர் அறுப்பீர்
உம் கண்ணீர் பலனே.
மெய் மணவாட்டி, போற்றுவாய்!
வையகமே முழங்குவாய்!
எம் ஸ்வாமியே, என்றென்றுமே
உம் ஸ்தோத்ரம் ஏறுமே.

AGORA KATTRADITHATHE

அகோர காற்றடித்ததே

1. அகோர காற்றடித்ததே,
ஆ! சீஷர் தத்தளித்தாரே;
நீரோ நல் நித்திரையிலே
அமர்ந்தீர்.

2. மடிந்தோம்! எம்மை ரட்சிப்பீர்!
எழும்பும் என்க, தேவரீர்;
காற்றை அதட்டிப் பேசினீர்
அமரு.

3. அட்சணமே அடங்கிற்றே
காற்று கடல் - சிசு போலே;
அலைகள் கீழ்ப்படிந்ததே
உம் சித்தம்.

4. துக்க சாகர கோஷ்டத்தில்
ஓங்கு துயர் அடைகையில்
பேசுவீர் ஆற உள்ளத்தில்
அமரு.

ANBE VIDAAMAL SERTHUK KONDIR

1. அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;
தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்,
பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்
ஜீவாறாய்ப் பெருகும்.

2. ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே;
வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்;
நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே;
பேர் ஒளிக் கதிரால் உள்ளம்
மேன்மேலும் ஸ்வாலிக்கும்.

3. பேரின்பம் நோவில் என்னைத் தேடும்!
என் உள்ளம் உந்தன் வீடே என்றும்;
கார் மேகத்திலும் வான ஜோதி!
விடியுங்காலை களிப்பாம்!
உம் வாக்கு மெய் மெய்யே.

4. குருசே! என் வீரம் திடன் நீயே;
உந்தன் பாதம் விட்டென்றும் நீங்கேன்;
வீண் மாயை யாவும் குப்பை நீத்தேன்;
விண் மேனியாய் நித்திய ஜீவன்
வளர்ந்து செழிக்கும்.

ALANGAARA VAASALAALE

அலங்கார வாசலாலே

1. அலங்கார வாசலாலே
கோவிலுக்குள் போகிறேன்;
தெய்வ வீட்டின் நன்மையாலே
ஆத்துமத்தில் பூரிப்பேன்
இங்கே தெய்வ சமூகம்,
மெய் வெளிச்சம், பாக்கியம்.

2. கர்த்தரே, உம்மண்டை வந்த
என்னண்டைக்கு வாருமேன்
நீர் இறங்கும்போதனந்த
இன்பத்தால் மகிழுவேன்.
என்னுட இதயமும்
தெய்வ ஸ்தலமாகவும்.

3. பயத்தில் உம்மண்டை சேர,
என் ஜெபம் புகழ்ச்சியும்
நல்ல பலியாக ஏற
உமதாவியைக் கொடும்.
தேகம் ஆவி யாவையும்
சுத்தமாக்கியருளும்.

4. நல்ல நிலத்தில் விழுந்த
விதை பயிராகுமே
நானும் அவ்வாறே மிகுந்த
கனிகளைத் தரவே
வசனத்தைக் காக்க நீர்
ஈவளிக்கக் கடவீர்.

5. விசுவாசத்தை விடாமல்
அதில் பலப்படவும்
ஒருக்காலும் தவறாமல்
உம்மை நான் பின்செல்லவும்,
மெய்வெளிச்சத்தை நீரே
என்னில் வீசும் கர்த்தரே.

6. சொல்லும், கர்த்தரே, நான் கேட்பேன்
நீர் இப்பாழ் நிலத்திலே
பெய்யப்பண்ணும் மன்னா சேர்ப்பேன்
நல்தியானத்துடனே
தாரும் ஜீவ பானத்தை
தீரும் பசிதாகத்தை.

ALLELUYAA IPPOTHU POOR MUDITHATHE

அல்லேலூயா! இப்போது போர்

1. அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா!
இப்போது போர் முடிந்ததே;
சிறந்த வெற்றி ஆயிற்றே;
கெம்பீர ஸ்துதி செய்வோமே.
அல்லேலூயா!

2. கொடூர சாவை மேற்கொண்டார்;
பாதாள சேனையை வென்றார்;
நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்.
அல்லேலூயா!

3. இந்நாள் எழுந்த வேந்தரே,
என்றைக்கும் அரசாள்வீரே;
களித்து ஆர்ப்பரிப்போமே!
அல்லேலூயா!

4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர்
மரித்துயிர்த்திருக்கிறீர்;
சாகாத ஜீவன் அருள்வீர்.
அல்லேலூயா!

ARUL MAARI YENGUMAAGA LYRICS


1. அருள் மாரி எங்குமாக
பெய்ய, அடியேனையும்
கர்த்தரே, நீர் நேசமாக
சந்தித்தாசீர்வதியும்;
என்னையும், என்னையும்
சந்தித்தாசீர்வதியும்.

2. என் பிதாவே, பாவியேனை
கைவிடாமல் நோக்குமேன்;
திக்கில்லா இவ்வேழையேனை
நீர் அணைத்துக் காருமேன்;
என்னையும், என்னையும்
நீர் அணைத்துக் காருமேன்.

3. இயேசுவே, நீர் கைவிடாமல்
என்னைச் சேர்த்து ரட்சியும்;
ரத்தத்தாலே மாசில்லாமல்
சுத்தமாக்கியருளும்;
என்னையும், என்னையும்
சுத்தமாக்கியருளும்.

4. தூய ஆவீ, கைவிடாமல்
என்னை ஆட்கொண்டருளும்;
பாதை காட்டிக் கேடில்லாமல்
என்றும் காத்துத் தேற்றிடும்;
என்னையும், என்னையும்
என்றும் காத்துத் தேற்றிடும்.

5. மாறா சுத்த தெய்வ அன்பும்,
மீட்பர் தூய ரத்தமும்,
தெய்வ ஆவி சக்திதானும்
மாண்பாய்த் தோன்றச்செய்திடும்;
என்னிலும், என்னிலும்
மாண்பாய்த் தோன்றச்செய்திடும்.

ARULNAATHA NAMBI VANTHEN

அருள்நாதா நம்பி வந்தேன்

1. அருள்நாதா நம்பிவந்தேன்,
நோக்கக்கடவீர்.
கைமாறின்றி என்னை முற்றும்
ரக்ஷிப்பீர்.

2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப் பாதத்தில்;
பாவ மன்னிப்பருள்வீர் இந்
நேரத்தில்.

3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்;
சுத்திசெய்வீர் மாசில்லாத
ரத்தத்தால்.

4. துணை வேண்டி நம்பி வந்தேன்,
பாதை காட்டுவீர்;
திருப்தி செய்து நித்தம் நன்மை
நல்குவீர்.

5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்,
ஞானம் பெலனும்;
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும்.

6. இயேசு நாதா, நம்பி வந்தேன்,
தவறாமலே
என்னை என்றும் தாங்கி நின்று
காருமே.

ANAATHIYAANA KARTHARE

அநாதியான கர்த்தரே

1. அநாதியான கர்த்தரே,
தெய்வீக ஆசனத்திலே
வானங்களுக்கு மேலாய் நீர்
மகிமையோடிருக்கிறீர்.

2. பிரதான தூதர் உம்முன்னே
தம் முகம் பாதம் மூடியே
சாஷ்டாங்கமாகப் பணிவார்,
'நீர் தூய தூயர்' என்னுவார்.

3. அப்படியானால், தூசியும்
சாம்பலுமான நாங்களும்
எவ்வாறு உம்மை அண்டுவோம்?
எவ்விதமாய் ஆராதிப்போம்?

4. நீரோ உயர்ந்த வானத்தில்,
நாங்களோ தாழ்ந்த பூமியில்
இருப்பதால், வணங்குவோம்,
மா பயத்தோடு சேருவோம்.

ATHIKAALAI YESU VANTHU

அதிகாலை இயேசு வந்து

1. அதிகாலை இயேசு வந்து
கதவண்டை தினம் நின்று
தட்டித் தமக்குத் திறந்து
இடம் தரக் கேட்கிறார்.

2. உம்மை நாங்கள் களிப்பாக
வாழ்த்தி: நேசரே, அன்பாக
எங்களண்டை சேர்வீராக
என்று வேண்டிக்கொள்ளுவோம்.

3. தினம் எங்களை நடத்தி,
சத்துருக்களைத் துரத்தி,
எங்கள் மனதை எழுப்பி,
நல்ல மேய்ப்பராயிரும்.

4. தாழ்ச்சி நாங்கள் அடையாமல்,
நம்பிக்கையில் தளராமல்
நிற்க எங்களுக்கோயாமல்
நல்ல மேய்ச்சல் அருளும்.

5. ஆமேன், கேட்டது கிடைக்கும்
இயேசு இன்றும் என்றென்றைக்கும்
நம்மைக் காப்பார் அவர் கைக்கும்
எல்லாம் ஒப்புவிக்கிறோம்.

ANJATHIRU ENN NENJAME

அஞ்சாதிரு, என் நெஞ்சமே

1. அஞ்சாதிரு, என் நெஞ்சமே,
உன் கர்த்தர் துன்ப நாளிலே
கண்பார்ப்போம் என்கிறார்;
இக்கட்டில் திகையாதிரு,
தகுந்த துணை உனக்கு
தப்பாமல் செய்குவார்.

2. தாவீதும் யோபும் யோசேப்பும்
அநேக நீதிமான்களும்
உன்னிலும் வெகுவாய்
கஸ்தி அடைந்தும், பக்தியில்
வேரூன்றி ஏற்ற வேளையில்
வாழ்ந்தார்கள் பூர்த்தியாய்.

3. கருத்தாய் தெய்வ தயவை
எப்போதும் நம்பும் பிள்ளையை
சகாயர் மறவார்;
மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்
இரக்கமான கரத்தால்
அணைத்து பாலிப்பார்.

4. என் நெஞ்சமே, மகிழ்ந்திரு;
பேய், லோகம்,துன்பம் உனக்கு
பொல்லாப்புச் செய்யாதே;
இம்மானுவேல் உன் கன்மலை,
அவர்மேல் வைத்த நம்பிக்கை
அபத்தம் ஆகாதே.

AGORA KASTHI PATTORAI

அகோர கஸ்தி பட்டோராய்

1. அகோர கஸ்தி பட்டோராய்
வதைந்து வாடி நொந்து,
குரூர ஆணி தைத்தோராய்
தலையைச் சாய்த்துக்கொண்டு,
மரிக்கிறார் மா நிந்தையாய்!
துன்மார்க்கர் சாகும் வண்ணமாய்
மரித்த இவர் யாவர்?

2. சமஸ்தமும் மா வடிவாய்
சிஷ்டித்து ஆண்டுவந்த,
எக்காலமும் விடாமையாய்
விண்ணோரால் துதிபெற்ற
மா தெய்வ மைந்தன் இவரோ?
இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ
பிதாவின் திவ்விய மைந்தன்?

3. அநாதி ஜோதி நரனாய்
பூலோகத்தில் ஜென்மித்து,
அரூபி ரூபி தயவாய்
என் கோலத்தை எடுத்து,
மெய்யான பலியாய் மாண்டார்
நிறைந்த மீட்புண்டாக்கினார்
என் ரட்சகர், என் நாதர்.

Sunday, June 14, 2015

ADAIKALAME UMATHADIAI NAANE LYRICS

அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே

அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே - ஆ

கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமதே - ஆ

என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனை காட்டுபவரே
நம்பி வந்தோரைக் கிருபை சூழ்ந்து கொள்ளுதே - ஆ

கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னைக் குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றி விட்டீரே - ஆ

ASAIVAADUM AAVIYE THOOIMAYIN LYRICS

அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே (2)
இடம் அசைய உள்ம் நிரம்ப
இறங்கி வாருமே(2)

பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே (2)
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின் ஆவியே (2)
அசைவாடும்...

தேற்றிடுமே உள்ங்களை
இயேசுவின் நாமத்தினால் (2)
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால் (2)
அசைவாடும்...

துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால் (2)
நிறைத்திடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே (2)
அசைவாடும்...

SAALEMIN RAASA, SANGAIYIN RAASA

சாலேமின் ராசா, சங்கையின் ராசா
  1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன், - இந்தத்
தாரணி மீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன்

2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே - இந்தச்
சீர் மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ?

3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக் கண்பூத்துப் போகுதேளூ - நீர்
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே.

4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதேளூ - இந்த
நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே.

5. சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதேளூ - உந்தஞ்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே.

URUGAYO NENJAME LYRICS

1. உருகாயோ நெஞ்சமே
குருசினில் அந்தோ பார்!
கரங் கால்கள் ஆணி யேறித்
திரு மேனி நையுதே!

2. மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவர்தாம்,
இந்நிலமெல் லாம் புரக்க
ஈன குரு சேறினார்.

3. தாக மிஞ்சி நாவறண்டு
தங்க மேனி மங்குதே,
ஏகபரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்.

4. மூவுலகைத் தாங்கும் தேவன்
மூன்றாணி தாங்கிடவோ?
சாவு வேளை வந்தபோது
சிலுவையில் தொங்கினார்.

5. வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்,
புல்லர் இதோ நன்றி கெட்டுப்
புறம் பாக்கி னார் அன்றோ?

ADIYAAR VENDAL KELUM YESUVE

அடியார் வேண்டல் கேளும், இயேசுவே
  1. அடியார் வேண்டல் கேளும், இயேசுவே
உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே
நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர்,
உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே.

2. எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர்
பந்தியில் நீரும் கூட அமர்வீர்.
எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர்,
எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர்.

3. பாலனாய் வந்த இயேசு ரட்சகா,
எம் பாலர் முகம் பாரும், நாயகா
தெய்வ கிருபை நற்குணம் நற்செயல்
யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே.

4. வாலிபர் நெறி தவறாமலும்,
ஈனர் இழிஞரைச் சேராமலும்,
ஞானமாய் வாழ்ந்து சீலமுடனே
நல் சேவை செய்ய நீர் அருள்வீரே.

5. மூத்தோர் முதியோர் யாரையும் அன்பாய்
காரும், உம் பலம் ஆறுதல் தாரும்
நோயுற்றோர் பலவீனர் யாரையும்
தளர்ச்சி தீர்த்துத் தாபரித்திடும்.

6. எம் வீட்டை இந்நாள் பிரிந்து சென்று
எங்கெங்கோ தங்கும் எல்லாப்பேரையும்
அன்பாய் அணைத்து ஆதரித்திடும்
அவரைக் காத்து அல்லும் பகலும்.

7. ஆண்டாண்டாய் எங்கள் வீடு வளர,
ஆவியில் அன்பில் என்றும் பெருக,
எங்கள் நல் நாட்டில் இன்ப இல்லங்கள்
இயேசுவின் வீடாய் என்றும் பொலிக.

Saturday, June 13, 2015

ENNA NADANTHALUM YAAR KAIVITTALUM

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

1.தேடி வந்தீரே தெரிந்துக் கொண்டீரே
   தூய மகனாக்கினீர் – 2
   துதிக்கும் மகனாக்கினீர் – இராஜா – 2
இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

2. ஆவியினாலே அன்பை ஊற்றி
   பாவங்கள் நீக்கினீரே – 2
   சுவாபங்கள் மாற்றினீரே – இராஜா – 2
இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

3. இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை
   எதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசு – 2
   நினைத்துப் பாடுகிறேன் – இராஜா
இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

ENN MEIPARE YESAIYA

என் மேய்ப்பரே இயேசையா
என்னோடு இருப்பவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2


1. பசும்புல் மேய்ச்சலிலே
(என்னை) இளைப்பாறச் செய்கின்றீர் – 2


2. அமர்ந்த தண்ணீரண்டை
(என்னை) அனுதினமும் நடத்துகின்றீர் – 2


3. ஆத்துமா தேற்றுகிறீர்
(என்னை) அபிஷேகம் செய்கின்றீர் – 2


4. (உம்) கோலும் கைத்தடியும்
(என்னை) தினமும் தேற்றிடுமே – 2


5. (உம்) நீதியின் பாதையிலே
(என்னை) நித்தமும் நடத்துகிறீர் – 2


6. (நான்) இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
(நான்) நடந்தாலும் பயமில்லையே – 2

 
7. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
(உம்) கிருபை என்னைத் தொடரும் – 2

ENN MEIPARAI YESU IRUKINDRAPOTHU

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?


1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்
ஆஹா என்றென்றும் இன்பமல்லவா

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?


2. என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி
ஆஹா எங்கெங்கும் ஒளிமயமே

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?


3. இப்பாதையில் என்னை நடத்திடவே
என் கரத்தைப் பிடித்தே முன் நடப்பார்
அஞ்சிடேனே நான் அஞ்சிடேனே
நான் எதற்கும் அஞ்சிடேனே

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?


4. என்னை அவர் ஆசீர்வதித்ததினால்
சத்ருக்கள்முன் உயர்த்தி வைத்ததினால்
என் உள்ளமே ஆஹா என் தேவனை
ஆஹா எந்நாளும் புகழ்ந்திடுமே

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?

ENN MEETPER EN NESAR SANNITHIYIL

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்?
ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்
தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்
1.மானானது நீரோடையை
  தேடித் தவிப்பதுப்போல்
  என் நெஞ்சம் உமைக் காண
  ஏங்கித் தவிக்கிறது
தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்
2.பகற்காலத்தில் உம் பேரன்பை
  கட்டளை இடுகிறீர்
  இராக்காலத்தில் உம் திருப்பாடல்
  என் நாவில் ஒலிக்கிறது
தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்
3.ஆத்துமாவே நீ கலங்குவதேன்
  (உன்) நம்பிக்கை இழப்பதேன் – என்
  கர்த்தரையே நீ நம்பி இரு
  அவர் செயல்கள்(செயல்களை) நினைத்து துதி
ஜீவனுள்ள தேவன் – அவர்
சீக்கிரம் வருகிறார்
ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்
தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்
என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்?

ENN THAGAPPAN NEERTHANAIYA

என் தகப்பன் நீர்தானையா
எல்லாமே பார்த்துக்கொள்வீர் – 2
எப்போதும் எவ்வேளையும்
உம் கிருபை என்னைத் தொடரும் – 2
என் தகப்பன் நீர்தானையா
எல்லாமே பார்த்துக்கொள்வீர்
1. மாண்பு மிக்கவர் நீர்தானே
மிகவும் பெரியவர் நீர்தானே – 2
உம்மையே புகழ்வேன் ஓய்வின்றி
உம்மைத்தான் பாடுவேன் பெலத்தோடு – 2
உயிருள்ள நாளெல்லாம் – 2
என் தகப்பன் நீர்தானையா
எல்லாமே பார்த்துக்கொள்வீர்
2. தாழ்ந்தோரை நீர் உயர்த்துகிறீர்
விழுந்தவரை நீர் தூக்குகிறீர் – 2
உம்மையே புகழ்வேன் ஓய்வின்றி
உம்மைத்தான் பாடுவேன் பெலத்தோடு – 2
உயிருள்ள நாளெல்லாம் – 2
என் தகப்பன் நீர்தானையா
எல்லாமே பார்த்துக்கொள்வீர்
3. ஏற்ற வேளையில் அனைவருக்கும்
ஆகாரம் நீர் தருகின்றீர் – 2
உம்மையே புகழ்வேன் ஓய்வின்றி
உம்மைத்தான் பாடுவேன் பெலத்தோடு – 2
உயிருள்ள நாளெல்லாம் – 2
என் தகப்பன் நீர்தானையா
எல்லாமே பார்த்துக்கொள்வீர் – 2
எப்போதும் எவ்வேளையும்
உம் கிருபை என்னைத் தொடரும் – 2
என் தகப்பன் நீர்தானையா
எல்லாமே பார்த்துக்கொள்வீர்

YELLAIILLA UNTHAN ANBAL

எல்லையில்லா உந்தன் அன்பால்
எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட
மன்னவா உமக்கு நன்றி 
இயேசு மன்னவா உமக்கு நன்றி
1. கள்ளமில்லா உந்தன் அன்பினால்
எனக்குள்ளதெல்லாம் மறந்தேன் – 2
கல்லும் முள்ளும் எந்தன் வாழ்வில் – 2
என்னை நடத்தின விதம் தனை மறவேன் – 2
நான் மறவேன் – 3 என்றென்றும் மறவேன் – 2
எல்லையில்லா உந்தன் அன்பால்
எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட
மன்னவா உமக்கு நன்றி 
இயேசு மன்னவா உமக்கு நன்றி
2. தொல்லை மிகுந்த உலகில்
இல்லை ஆறுதல் எனக்கு – 2
அல்லல் நிறைந்த எந்தன் வாழ்வில் – 2
என்னை அணைத்திட்ட விதம் தனை மறவேன் – 2
நான் மறவேன் – 3 என்றென்றும் மறவேன் – 2
எல்லையில்லா உந்தன் அன்பால்
எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட
மன்னவா உமக்கு நன்றி 
இயேசு மன்னவா உமக்கு நன்றி
3. சொல்லி முடியாது நாதா
உம் அன்பு அள்ளி தீராது தேவா – 2
உள்ள உறுதியுடன் நானும் – 2
உம் சமூகம் சேரும்வரை துதிப்பேன் – 2
நான் துதிப்பேன் – 3 என்றென்றும் துதிப்பேன் – 2
எல்லையில்லா உந்தன் அன்பால்
எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட
மன்னவா உமக்கு நன்றி 
இயேசு மன்னவா உமக்கு நன்றி

EPPOTHUM ENN MUNNE LYRICS

எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் – 2
என் மேய்ப்பர் நீர்தானையா
குறை ஒன்றும் எனக்கில்லையே – 2

என் நேசரே என் மேய்ப்பரே – 2
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா


1. உம் இல்லம் ஆனந்தம்
பரிபூரண ஆனந்தம் – 2
பேரின்பம் நீர்தானையா
நிரந்தர பேரின்பமே – 2

என் நேசரே என் மேய்ப்பரே – 2
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா


2. என் இதயம் மகிழ்கின்றது
உடலும் இளைப்பாறுது – 2
எனைக் காக்கும் தகப்பன் நீரே
பரம்பரைச் சொத்தும் நீரே – 2

என் நேசரே என் மேய்ப்பரே – 2
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா


3. என் செல்வம் என் தாகம்
எல்லாமே நீர்தானையா – 2
எனக்குள்ளே வாழ்கின்றீர்
அசைவுற விடமாட்டீர் – 2

என் நேசரே என் மேய்ப்பரே – 2
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா


4. கல்வாரி எனக்காக
காயங்கள் எனக்காக – 2
திரு இரத்தம் எனக்காக
சிந்தியே ஜீவன் தந்தீர் – 2

என் நேசரே என் மேய்ப்பரே – 2
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா

என் மேய்ப்பர் நீர்தானையா
குறைவொன்றும் எனக்கில்லையே – 2

பேரின்பம் நீர்தானையா
நிரந்தர பேரின்பமே – 2

என் நேசரே என் மேய்ப்பரே – 2
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா

EGIPTHILIRUNTHU KAANAANUKKU KOOTI SENDREERE

எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
1. கடலும் பிரிந்தது
மனமும் மகிழ்ந்தது – 2
கர்த்தரை என்றும்
மனது ஸ்தோத்தரித்தது – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
2. பாறையினின்று
தண்ணீர் சுரந்தது – 2
தாகம் தீர்ந்தது கர்த்தரை
மனமும் போற்றியது – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
3. பாடுகள் பட்டு
மரித்தாரே நமக்காய் – 2
உயிர் கொடுத்தாரே அவரை
உயர்த்திடுவோமே – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
4. யோர்தானைக் கடந்தோம்
எரிகோவை சூழ்ந்தோம் – 2
ஜெயம் கொடுத்தாரே அவரை
துதித்திடுவோமே – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா – 2

OOTRUGAIYA OOTRUGAIYA PERUMALAIYAGA

ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக
நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கையை

1.உம்மைப்போல் மழை உண்டாக்க
   தேவர்கள் உண்டோ
   வானமும் தானாகவே
   மழையைப் பொழியுமோ
நீரல்லவோ நீரல்லவோ –2


2.வயல்களும் ஆறுகளும்
   வற்றிப் போயிருக்கும்
   ஆவி ஊற்றப்பட்டால்
   வனாந்திரம் செழிக்கும்
நீரல்லவோ நீரல்லவோ –2

3.இராஜாவின் முகக்களையில்
   ஜீவன் இருக்கும்
   உங்க தயவுக்குள்ளே
   பின்மாரி இருக்கும்
நீரல்லவோ நீரல்லவோ –2

UNNATHARE ENN NESARE

உன்னதரே என் நேசரே
உமது பேரன்பினால் அசைவுராதிருப்பேன்


1. முழு மனதோடு நன்றி சொல்வேன்
முகமலர்ந்து நன்றி சொல்வேன்
கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே
ஆத்துமா வாழ பெலன் தந்தீரே

உன்னதரே என் நேசரே
உமது பேரன்பினால் அசைவுராதிருப்பேன்


2. உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்
நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
துன்பத்தின் நடுவே நடந்தாலும்
துரிதமாய் என்னை உயிர்பிக்கின்றீர்

உன்னதரே என் நேசரே
உமது பேரன்பினால் அசைவுராதிருப்பேன்


3. வலதுகரத்தால் காப்பாற்றினீர்
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்
எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்
என்றுமுள்ளது உமது அன்பு

உன்னதரே என் நேசரே
உமது பேரன்பினால் அசைவுராதிருப்பேன்


4. உந்தன் நினைவில் அகமகிழ்வேன்
நீர்தந்த வெற்றியில் களிகூறுவேன்
மனதின் ஏக்கங்கள் மலரசெய்தீர்
வாய்விட்டு கேட்டதை மறுக்கவில்லை

உன்னதரே என் நேசரே
உமது பேரன்பினால் அசைவுராதிருப்பேன்