Monday, May 6, 2024

YESU SWAMY UMADHU இயேசு ஸ்வாமி ,உமது வசனத்தின்


1.இயேசு ஸ்வாமி,உமது
வசனத்தின் பாலைத் தேட
வந்தோம்; எங்கள் மனது
மண்ணைவிட்டு உம்மைச் சேர
எங்கள் சிந்தையை நீர் முற்றும்
தெய்வ சொல்லுக்குட்படுத்தும் .

2.உமதாவி யெங்களில்
அந்தகாரத்தை அறுத்து 
ஒளியை வீசிராகில்,
புத்திக் கண்ணெல்லாம் இருட்டு ;
சீர் உண்டாக்கும் நற்சிந்திப்பு
உம்முடைய நடப்பிப்பு .

3. மகிமையின் ஜோதியே ,
ஸ்வாமி , நாங்கள் மாயமற 
பாடிக் கெஞ்சி , நெஞ்சிலே 
வசனத்தைக் கேட்டுணர 
வாய் செவி மனமும் கண்ணும்
திரவுண்டுபோகப் பண்ணும்.

ALANGARA VAASALALE KOVILUKKUL அலங்கார வாசலாலே கோவிலுக்குள் போகிறேன்


1.அலங்கார வாசளாலே
கோவிலுக்குள் போகிறேன் ;
தெய்வ வீட்டின் நன்மையாலே
ஆத்துமத்தில் பூரிப்பேன் ;
இங்கே தெய்வ சமுகம் ,
மெய் வெளிச்சம் , பாக்கியம்

2.கர்த்தரே ,உம்மண்டை வந்த
என்னண்டைக்கு வாருமேன் ,
நீர் இறங்கும்போதானந்த
இன்பத்தால் மகிழுவேன் ,
என்னுட இதயமும்
தெய்வ ஸ்தலமாகவும்.


3. பயத்தில் உம்மண்டை சேர,
என் ஜெபம் புகழ்ச்சியும்
நல்ல பலியாக ஏற
உமதாவியைக் கொடும்.
தேகம் ஆவி யாவையும்
சுத்தமாக்கியருளும்.

4. நல்ல நிலத்தில் விழுந்த
விதை பயிராகுமே ;
நானும் அவ்வாறே மிகுந்த
கனிகளைத் தரவே ,
வசனத்தைக் காக்க நீர்
ஈவளிக்கக் கடவீர் .

5.விசுவாசத்தை விடாமல்
அதில் பலப்படவும் ,
ஒருக்காலும் தவறாமல்
உம்மை நான் பின்செல்லவும்,
மெய் வெளிச்சத்தை நீரே
என்னில் வீசும் கர்த்தரே .

5. சொல்லும் , கர்த்தரே, நான் கேட்பேன்
நீர்இப்பாழ் நிலத்திலே
பெய்யப்பண்ணும் மன்னா சேர்ப்பேன்
நல்தியானத்துடனே ;
தாரும் ஜீவ பானத்தை,
தீரும் பசிதாகத்தை

AA KARTHAVE THALMAIYAAGA ஆ கர்த்தாவே தாழ்மையாக


1.ஆ கர்த்தாவே , தாழ்மையாக 

திருப்பாதத்ண்டையே

தெண்டனிட ஆவலாக 

வந்தேன், நல்ல இயேசுவே;

உம்மை தேடி 

தரிசிக்கவே வந்தேன்.

2. வல்ல கர்த்தாவினுடைய

தூய ஆட்டுக்குட்டியே ,

நீரே என்றும் என்னுடைய 

ஞான மணவாளனே ;

உம்மை தேடி 

தரிசிக்கவே வந்தேன் .

3.என் பிரார்த்தனையைக் கேளும்,

அத்தியந்த பணிவாய் 

கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும் 

உம்முடைய பிள்ளையாய் 

உம்மை தேடி தரிசிக்கவே வந்தேன்

ANATHIYANA KARTHARE DEIVEEGA ASANATHILE1 அநாதியான கர்த்தரே , தெய்வீக ஆசனத்திலே

1.அநாதியான கர்த்தரே ,

தெய்வீக ஆசனத்திலே 

வானக்களுக்கு மேலாய் நீர் 

மகிமையோடிருக்கிறீர். 

2. பிரதான தூதர் உம்முன்னே 

தம் முகம் பாதம் மூடியே 

சாஷ்டாங்கமாயப் பணிவார் ,

நீர் தூய தூயர் எண்ணுவார் .

அப்படியானால் , தூசியும் 

சாம்பலுமான நாங்களும் 

எவ்வாறு உம்மை அண்டுவோம் ?

எவ்விதமாய் ஆராதிப்போம் ?

நீரோ உயர்ந்த வானத்தில் ,

நாங்களோ தாழ்ந்த பூமியில் 

இருப்பதால் , வணங்குவோம் ,

மா பயத்தோடு சேருவோம்

PITHA SUDHAN AAVIYE பிதா சுதன் ஆவியே


1.பிதா சுதன் ஆவியே
ஏகரான ஸ்வாமியே ,
கேளும் நெஞ்சின் வேண்டலை ,
தாரும் சமாதானத்தை ;
அன்புக்கேற்ற உணர்வும்
அன்னியோன்னிய ஐக்கியமும்
ஈந்து ஆசிர்வதியும் ,
திவ்ய நேசம் ஊற்றிடும்

2.உந்தன் அடியாரை, நீர்
ஒரே மந்தையாக்குவீர் ;
விசுவாசமும் ஒன்றே ;
ஒன்றே எங்கள் நம்பிக்கை ;
ஐக்கியமாக்கி எங்களை
ஆண்டு கொள்ளும் கர்த்தரே ,
ஏக சிந்தை தாருமே.

3.மீட்டுக் கொண்ட ஆண்டவா ,
அன்னியோன்னிய காரணா
ஜீவ நேசா ,தேவரீர் 
வேண்டல் கேட்டிரங்குவீர்;
பிதா சுதன் ஆவியே, 
ஏகரான ஸ்வாமியே ,
உந்தன் திவ்விய ஐக்கியமும் 
தந்து ஆட்கொண்டருளும் .

ANJATHIRU ENN NENJAME அஞ்சாதிரு என் நெஞ்சமே பாமாலை


1.அஞ்சாதிரு ,என் நெஞ்சமே ,
உன் கர்த்தர் துன்ப நாளிலே
கண் பார்ப்போம் என்கிறார் ;
இக்கட்டில் திகையாதிரு ,
தகுந்த துணை உனக்கு
தப்பாமல் செய்குவார். 

2. தாவீதும் யோபும் யோசேப்பும் 
அநேக நீதிமான்களும் 
உன்னிலும் வெகுவாய் .
கசதி அடைந்தும் ,பக்தியில் 
வேரூன்றி ஏற்ற வேளையில்
வாழ்ந்தார்கள் பூர்த்தியாய் .

3.கருத்தாய் தெய்வ தயவை 
எப்போ தும் நம்பும் பிள்ளையை 
சகாயர் மறவார் ;
மேயபக்தி உன்னில் வேர்கொண்டால்
இரக்கமான கரத்தால் 
அணைத்து பாலிப்பார் .

4.என் நெஞ்சமே ,மகிழ்ந்திரு 
பேய் ,லோகம், துன்பம் உனக்கு 
பொல்லாப்புச் செய்யாதே ;
இம்மானுவேல் உன் கன்மலை ,
அவர் மேல் வைத்த நம்பிக்கை 
அபத்தம் ஆகாதே.

KAARIRULIL ENN NESA DEEPAME காரிருளில் என் நேச தீபமே பாமாலை


1.காரிருளில் என் நேச தீபமே ,நடத்துமேன் ;
வேறொளியில்லை, வீடும் தூரமே நடத்துமேன் ;
நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன்
ஓர் அடிமட்டும் என்முன் காட்டுமேன் .


2.என் இஷ்டப்படி நடந்தேன் ஐயோ !முன்னாளிலே ;
ஒத்தாசை தேடவில்லை ;இப்போதோ நடத்துமே
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்பு கொண்டேன் , அன்பாக மன்னியும் .

3.இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்; இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும் ;
உதய நேரம் வர களிப்பேன்
மறைந்து போன நேசரைக் காண்பேன்

PAATHAI KAATUM MAA YEGOVA பாதை காட்டும் மா யெகோவா பாமாலை


1.பாதை காட்டும் மா யெகோவா,

பரதேசியான நான் 

பலவீனன், அறிவீனன் ,

இவ்வுலோகம் காடு தான்,

வானாகரம்

தந்து என்னைப் போஷியும்.



2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை 

நீர் திறந்து தாருமேன் ;

தீப மேக ஸ்தம்பம் காட்டும்.

வழியில் நடத்துமேன் ;

வல்ல மீட்பர் !

என்னைத் தாங்கும், இயேசுவே.



3.சாவின் அந்தகாரம் வந்து

என்னை மூடும் நேரத்தில் 

சாவின் மேலும் வெற்றித் தந்து ,

என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ;

கீத வாழ்த்தல் 

உமக்கென்றும் பாடுவேன் .

KARTHAVAI NALLA BAKTHIYALE கர்த்தாவை நல்ல பக்தியாலே பாமாலை


1.கர்த்தாவை நல்ல பக்தியாலே 

எப்போதும் நம்பும் நீதிமான் 

எத்தீங்கிலும் அவராலே 

அன்பைக் காப்பற்றப்படுவான் ;

உன்னதமான கர்த்தரை 

சார்ந்தோர்க்கவர் கன்மலை .

2.அழுத்தும் கவலைகளாலே 

பலன் ஏதாகிலும் உண்டோ?

நாம் நித்தம் சஞ்சலத்தினாலே 

தவிப்பது உதவுமோ ?

விசாரத்தாலே நமக்கு 

இக்கட்டதிகரிக்கது .

3.உன் காரியத்தை நலமாக 

திருப்ப வல்லவர்க்கு 

நீ அதை ஒப்புவிப்பாயாக ;

விசாரிப்பார் ,அமர்ந்திரு ,

மா திட்டமாய்த் தயாபரர் 

உன் தாழ்ச்சியை அறிந்தவர் .

4.சந்தோஷிப்பிக்கிறதான

நாள் எதென்றவர் அறிவார் ;

அநேக நற்குணங்கள் காண 

அந்தந்த வேளை தண்டிப்பார் ,

தீவிரமாய்த் திரும்பவும் 

தெய்வன்பு பூரிப்பைத் தரும் .

4.நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன் 

என்றாபத்தில் நினையாதே ;

எப்போதும் பாடும் நோவுமற்றோன்

பிரிய னென்றும் எண்ணாதே ;

அநேக காரியத்துக்கு 

பின் மாறுதல் உண்டாகுது .

5.கதியுள்ளோனை ஏழையாக்கி 

மகா எளியவனையோ 

திரவிய சம்பன்னணாக்கி

உயர்த்த ஸ்வாமிக்கரிதோ ?

தாழ்த்துவார் ,உயர்த்துவார் 

அடிக்கிறார் ,அணைக்கிறார் .

7.மன்றாடி பாடி கிரிஸ்தோனாக 

நடந்து கொண்டுன் வேலையை 

நீ உண்மையோடே செய்வாயாக ;

அப்போ தெய்வாசீர்வாதத்தை

திரும்பக் காண்பாய் ; நீதிமான் 

கர்த்தாவால் கைவிடப்படான்

NEERODAIYAI MAAN VAANJITHU நீரோடையை மான் வாஞ்சித்து பாமாலை


பாமாலை 375
1 நீரோடையை மான் வாஞ்சித்து

கதறும் வண்ணமாய் ,

என் ஆண்டவா , என் ஆத்துமம்

தவிக்கும் உமக்காய் .

2. தாள கர்த்தா, உமக்காய்

என் உள்ளம் ஏங்காதோ ?

உம மாட்சியுள்ள முகத்தை

எப்போது காண்பேனோ?

3.என் உள்ளமே . விசாரம் ஏன்?

நம்பிக்கை கொண்டு நீ

சதா ஜீவ ஊற்றேயாம்

கர்த்தாவை ஸ்தோத்தரி.

4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா 

குமாரன், ஆவிக்கும்,

ஆதி முதல் என்றென்றுமே 

துதி உண்டாகவும்.

YESU ENGAL MEIPPER இயேசு எங்கள் மேய்ப்பர் பாமாலை


1.இயேசு எங்கள் மேய்ப்பர் ,
கண்ணீர் துடைப்பார் ;
மார்பில் சேர்த்தணைத்து
பயம் நீக்குவார் ;
துன்பம் நேரிட்டாலும் ,
இன்பம் ஆயினும் .
எசுவின்பின் செல்வோம்
பாளர் யாவரும் .
2. நல்ல மேய்ப்பர் சத்தம்
நன்றாய் அறிவோம் ;
காதுக்கின்பமாக
கேட்டுக் களிப்போம் ;
கண்டித்தாலும், நேசர்
ஆற்றித் தேற்றுவார் ;
நாங்கள் பின்னே செல்ல
வழி காட்டுவார்.

3. ஆட்டுக்காக மேய்ப்பர்
ரத்தம் சிந்தினார்;
அதில் மூழ்கினோரே
தூயர் ஆகுவார்;
பாவ குணம் நீக்கி
முற்றும் ரட்சிப்பார்!
திவ்விய தூய சாயல் 
ஆக மாற்றுவார் .

4.இயேசு நல்ல மேய்ப்பர் 
ஆட்டைப் போஷிப்பார் !
ஓநாய்கள் வந்தாலும் 
தொடவே ஒட்டார் ,
சாவின் பள்ளத்தாக்கில் 
அஞ்சவே மாட்டோம் ,
பாதாளத்தின் மேலும் 
ஜெயங்கொள்ளுவோம்

EN MEETPER YESU CHRISTHUVE என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே


1.என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே ;
உம பாதத்தண்டை நிற்கிறேன் ;
திக்கற்ற பிள்ளை கெஞ்சவே ,
தள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமென் .

2. என் கிரியைகள் எம்மாத்திரம் ?
பிரயாசை எல்லாம் விருதா '
உம்மாலேயே மெய்ப் பாக்கியம்
உண்டாகும் நேச ரட்சகா .

3. உந்தன் சரீரம் ரத்தமும்
மெய்ப் பொருள் என்று அறிவேன் ;
உட்கொண்டன்பாய் அருந்தவும்,
நன் பரவசமாகுவேன்.

4. மாசற்ற திரு ரத்தத்தைக்
கொண் டென்னைச் சுத்திகரியும் ;
மா திவ்விய ஜீவா அப்பத்தை
என் நெஞ்சில் தந்தருளும் .

5 . என் நாதா, உம ஸரிரமாஎ
மேலான திவ்விய போஜனம்;
மாசற்ற உந்தன் ரத்தமே
மையான பான பாக்கியம்

UNNADHAM AALAM YENGEYUM உன்னதம், ஆழம், எங்கேயும்


பாமாலை
1. உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம் ;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம்.

2. பாவம் நிறைந்த பூமிக்கு,
இரண்டாம் ஆதாமே,
போரில் சகாயராய் வந்தார்
ஆ, நேச ஞானமே !

3. முதல் ஆதாமின் பாவத்தால்
விழுந்த மாந்தர் தாம்
ஜெயிக்கத் துணையாயினார்;
ஆ ஞான அன்பிதாம் !

4. மானிடர் சுபாவம் மாறவே ,
அருளைப் பார்க்கிலும்
சிறந்த ஏது தாம் என்றே
ஈந்தாரே தம்மையும்

5. மானிடனாய் மானிடர்க்காய்
சாத்தானை வென்றாரே;
மானிடனாய் எக்கஸ்தியும்
பட்டார் பேரன்பிதே!

6. கெத்செமெனெயில், குருசிலும்
வேதனை சகித்தார்
நாம் அவர் போன்றே சகித்து
மரிக்க கற்பித்தார் .

7. உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம் ;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம்

UMMALE THAN YEN YESUVE உம்மாலே தான் என் ஏசுவே


1 . உம்மாலே தான் என் ஏசுவே,
ரட்சிக்கப்படுவேன்;
உம்மாலே தான் பேரின்பத்தை
அடைந்து

2 . இப்பத்தியில் நீர் ஈவது ,
பரம அமிர்தம்;
இனி நான் பெற்றுக் கொள்வது
அனந்த பாக்கியம் .

3 .இவ்வேழை அடியேனுக்கு
சந்தோஷத்தை தந்தீர்;
இக்கட்டு வரும் பொழுது ,
நீர் என்னைத் தேற்றுவீர் .

4.பூமியில் தங்கும் அளவும் 
உம்மையேப் பற்றுவேன் ;
எவ்வேளையும் எவ்விடமும்
நான் உம்மைப் போற்றுவேன்

UMMAI THUTHIKKIROM YAAVUKKUM உம்மைத் துதிக்கிறோம்

உம்மைத் துதிக்கிறோம்


பாமாலை 2

1. உம்மைத் துதிக்கிறோம் ,யாவுக்கும் வல்ல பிதாவே ;
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமீ, ராஜாதி ராஜாவே;
உமது மா மகிமைக்காக கர்த்தா ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே .

2.கிறிஸ்துவே, இரங்கும் சுதனே, கடன் செலுத்தி,
லோகத்தின் பாவத்தை நீக்கும் தெய்வாட்டுக்குட்டி,
எங்கள் மனு கேளும் பிதாவினது ஆசனத் தோழா இரங்கும்.

3. நித்திய பிதாவின் மகிமையில் ஏசுவே
நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே.
ஏகமாய் நீர் அர்சிக்கப்படுகிறீர்.உன்னத கர்த்தரே ஆமேன்

AATHMAME UNN AANDAVARIN ஆத்மமே, உன் ஆண்டவரின்

ஆத்மமே, உன் ஆண்டவரின்


பாமாலை 1

1. ஆத்மமே, உன் ஆண்டவரின்
திருப்பாதம்பணிந்து,
மீட்பு, சுகம், ஜீவன், அருள்
பெற்றதாலே துதித்து,
அல்லேலுயா , என்றென்றைக்கும்
நித்திய் நாதரைப் போற்று.

2 .நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய்த் துதி:
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி :
அல்லேலுயா , அவர் உண்மை
மா மகிமையாம் துதி

3. தந்தைபோல் மா தயை உள்
ள்ளோர்;நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம்கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே;
அல்லேலுயா , இன்னும் அவர்
அருள் விரிவானதே .
4. என்றும் நின்றவர் சமுகம்
போற்றும் தூதர் கூட்டமே;
நாற்றிசையும் நின்றெழுந்து
பணிவீர் நீர் பக்தரே ;
அல்லேலுயா , அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே

UNNADHARE NEER MAGIMAI.உன்னதரே நீர் மகிமை


1.உன்னதரே நீர் மகிமை,
இந்நிலம் சமாதானத்தை
அடைய அன்பு ஓங்க!
பரபரனார் கர்த்தாவே ,
பரம ராஜர் பார்த்தாவே,
வல்லமை தந்தாய், வாழ்க !
தாழ்ந்து வீழ்ந்து ,
போற்றுவோமே புகழ்வோமே
தொழுவோமே;
மாட்சி மேன்மைகென்றும்
ஸ்தோத்ரம் .

2.பிதாவின் ஒரே மைந்தனே
சுதாவே கர்த்தா ராஜரே,
தெய்வாட்டுக்குட்டி நீரே :
பார் மாந்தர் போக்கிடும்,
மா தந்தை பக்கல் ஆண்டிடும்
மகத்துவ கிறிஸ்து நீரே ;
கேட்பீர் ஏற்பீர்
ஏழை நீசர் எங்கள் ஜெபம் தாழ
வாம் வேண்டல் ;
இறங்குவீர் தயவாவடே .

3.நீர் தூயர் தூயர் தூயரே
நீர் கர்த்தர் கர்த்தர் கர்த்தரே ,
என்றென்றும் ஆள்வீர் நீரே;
பிதாவின் ஆசனத்திலே
மேதையாய் வீற்றுப் பாங்கினில்
கர்த்தாவாம் ஆவியோடே
இன்றும் என்றும்
ஏக மாண்பு ஏக மாட்சி ஏக
மேன்மை
தாங்கி ஆள்வீர் தேவரீரே .

OO BETHLEGAME SITOORE ஓ பெத்லகேமே சிற்றூரே


ஓ பெத்லகேமே சிற்றூரே,
என்னே உன் அமைதி !
அயர்ந்த நித்திரை செய்கையில்
ஊர்ந்திடும் வான் வெள்ளி,
வின் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே
உன் வீதியில் இன்றே ;
நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்
உன் பாலன் இயேசுவே.

கூறும் ஓ விடி வெள்ளி காள்!
இம்மைந்தன் ஜென்மமே !
விண்வேந்தர்க்கு மகிமையே ,
பாரில் அமைதியாம் ;
மா திவ்விய பாலன் தோன்றினார்
மண்மாந்தர் தூக்கத்தில் ,
விழித்திருக்க தூதரும்
அன்போடு வானத்தில்

அமைதியாய் அமைதியாய்
விண் ஈவு தோன்றினார் ;
மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும்
அமைதியால் ஈவார் .
கேளாதே அவர் வருகை
இப்பாவ லோகத்தில்;
மெய் பக்தர் ஏற்பார் ஸ்வாமியை
தம் சாந்த ஆன்மாவில் .

வேண்ட நற் சிறு பாலரும்
இத்தூய பாலனை,
அழைக்க ஏழை மாந்தரும்
இக்கன்னி மைந்தனை
விஸ்வாசமும் நம் பாசமும்
வரவைப் பார்க்கவே,
இராவை நீக்கித் தோன்றுவார்
இம்மாட்சி பாலனே !

பெத்லேகேம் தூய பலனே,
இறங்கி வருவீர்!
ஜனிப்பீர் எங்களில் இன்றும்
எம் பாவம் நீக்குவீர் ;
நற்செய்தி இவ்விழா தன்னில்
இசைப்பார் தூதரே ;
ஆ வாரும், வந்து தங்கிடும்
இம்மனுவேலரே .

எழுதியவர் 

பிலிப்ஸ் ப்ருக்ஸ்

KAARIRULIL ENN NESA DEEPAME காரிருளில் என் நேச தீபமே


1.காரிருளில் என் நேச தீபமே ,
நடத்துமேன் ;
வேறொளியில்லை; வீடும் தூரமே ,
நடத்துமேன் ;
நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன் :
ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமேன் .

2. என் இஷ்டப்படி நடந்தேன் ஐயோ !
முன்னாளிலே ;
ஒத்தாசை தேடவில்லை இப்போதோ
நடத்துமே;
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும்

3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் ;
இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர்
நடத்திடும் ;
உதய நேரம் வரக் கழிப்பேன்
மறைந்து போன நேசரைக் காண்பேன்

எழுதியவர் ஜான் .H. நியூமன்

Karthave Yugayugamai கர்த்தாவே யுகயுகமாய்


கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர் ;
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர் .

உம ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம் ;
உம வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம் .

பூலோகம் உருவாகியே
மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன் .


ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே ;
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே

சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார் ;
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார் .

கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர் ;
இக்கட்டில் நற் சகயராய்
எம் நித்ய வீதாவீர்

எழுதியவர் 
ஐசக் வாட்ஸ்