Tuesday, October 20, 2015

EGAMANU DEVA NAMASKARIPPEN

இகமனுதேவா நமஸ்கரிப்பேன்
இயேசு தயாளா சரணடைந்தேன்

1. மாசணுகாத திரு உருவே
மகிமையைத் துறந்த எம்பரம் பொருளே
தீமைக் கண்டேன் என் இதயத்திலே
தாழ் பணிந்தேன் உம் பாதத்திலே
குருபர நாதா தேடி வந்தீர்
குறை நீக்க மனுவாய் அவதரித்தீர்

2. ஞானியர் போற்றிய தூயவனே
மேய்ப்பர்கள் வணங்கின மறையவனே
ஆர்ப்பரித்து உம் புகழ் உரைப்பேன்
ஆனந்தமாய் நின் பணிபுரிவேன்
அகிலமே உமது அடிதொடர
ஆணை பெற்றேன் நான் முன் நடக்க

3. காலத்தால் அழிந்திடா காவலனே
கன்னியின் மைந்தனாய் வந்தவனே
மாமன்னனாய் வருவீரே
முகமுகமாய் காண்பேனோ
திரிமுதல் தேவா காப்பீரே
தினம் எமை கழுவி மீட்பீரே

IDUKKAMAANA VAASAL VALIYE

இடுக்கமான வாசல் வழியே
வருந்தி நுழைய முயன்றிடுவோம்
சிலுவை சுமந்து இயேசுவின் பின்
சிரித்த முகமாய் சென்றிடுவோம்

1. வாழ்வுக்கு செல்லும்
வாசல் இடுக்கமானது
பரலோகம் செல்லும்
பாதை குறுகலானது - சிலுவை

2. நாம் காணும் இந்த உலகம்
ஒருநாள் மறைந்திடும்
புது வானம் பூமி நோக்கி
பயணம் செய்கின்றோம்

3. இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்
சிலகாலம் தான் நீடிக்கும்
இணையில்லாத மகிமை
இனிமேல் நமக்குண்டு

4. அழிவுக்கு செல்லும் வாயில்
மிகவும் அகன்றது
பாதாளம் செல்லும் பாதை
மிகவும் விரிந்தது

INTHA KULANTHAIYAI NEER YETRUKKOLLUM

இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே,

அனுபல்லவி

உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த,

சரணம்

1. பிள்ளைகள் எனக்கதிகப் பிரியம், வரலாம், என்று
உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே.

2. பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்த
சீலமாயின்றும் வந்தாசீர்வதம் செய்யும், ஐயா.

3. உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்,
உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து.

4. உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல்,
நலமாய் இதைக் காத்தாளும், நன்மைப் பராபரனே!

5. விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடங்கிப்,
புசிய மரம்போல் தெய்வ பத்தியிலே வளர.

INNALVARAIKKUM KARTHARE

1. இந்நாள்வரைக்கும் கர்த்தரே
என்னைத் தற்காத்து வந்தீரே
உமக்குத் துதி ஸ்தோத்திரம்
செய்கின்றதே என் ஆத்துமம்

2. ராஜாக்களுக்கு ராஜாவே
உமது செட்டைகளிலே
என்னை அணைத்துச் சேர்த்திடும்
இரக்கமாகக் காத்திடும்.

3. கர்த்தாவே, இயேசு மூலமாய்
உம்மோடு சமாதானமாய்
அமர்ந்து தூங்கும்படிக்கும்,
நான் செய்த பாவம் மன்னியும்.

4. நான் புதுப் பலத்துடனே
எழுந்து உம்மைப் போற்றவே,
அயர்ந்த துயில் அருளும்;
என் ஆவியை நீர் தேற்றிடும்.

5. நான் தூக்கமற்றிருக்கையில்,
அசுத்த எண்ணம் மனதில்
அகற்றி, திவ்விய சிந்தையே
எழுப்பிவிடும், கர்த்தரே.

6. பிதாவே, என்றும் எனது
அடைக்கலம் நீர் உமது
முகத்தைக் காணும் காட்சியே
நித்தியானந்த முத்தியே

7. அருளின் ஊற்றாம் ஸ்வாமியை
பிதா குமாரன் ஆவியை
துதியும், வான சேனையே,
துதியும், மாந்தர் கூட்டமே.

INNALIL YESUNAADHAR UYIRTHAR

1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார், கம்பீரமாய்
இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்,

மகிழ் கொண்டாடுவோம்,
மகிழ் கொண்டாடுவோம்.

2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க,
புகழார்ந்தெழுந்தனர், தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க

3. அதி காலையில் சீமோனொடு யோவானும் ஓடிட,
அக்கல்லறையின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட

4. பரி சுத்தனை அழிவுகாண வொட்டீர், என்று முன்
பகர் வேதச்சொற்படி பேதமற்றெழுந்தார் திருச்சுதன்

5. இவ்வண்ணமாய்ப் பரன் செயலை எண்ணி நாடுவோம்ளூ
எல்லாருமே களி கூர்ந்தினிதுடன் சேர்ந்துபாடுவோம்

INDRU KANDA EGIPTHIYANAI

1. இன்று கண்ட எகிப்தியனை
என்றுமேஇனி காண்பதில்லை (2)

இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை (2) இன்று...

2. கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2)
கண்ணீரோடு நீ விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2) இஸ்ரவே...

3. தண்ணீரை நீ கடக்கும்போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார் (2)
வௌ;ம்போல சத்துரு வந்தால்
ஆவியில் கொடியேற்றிடுவார் (2) இஸ்ரவே...

4. வாதை உந்தன் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார் (2)
பாதையிலே காக்கும்படிக்கு
தூதர்களை அனுப்பிடுவார் (2) இஸ்ரவே...

5. சோர்ந்து போன உனக்கு அவர்
சத்துவத்தை அளித்திடுவார் (2)
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார் (2) இஸ்ரவே...

INDRU MUTHAL NAAN UNNAI

இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன்

1. பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்
உனது பெயரை நான் உயர்த்திடுவேன்
ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய்

2. செல்லும் இடமெல்லாம் காவலாய் நான் இருப்பேன்
சொன்னதை செய்திடுவேன் கைவிடவேமாட்டேன்
நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன்

3. பரவி பாயகின்ற ஆறுகள் நீதானே
நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே
வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே

4. பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்
வானத்தின் பலகனிகள் திறந்திடுவேன்
இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன்

5. எனது சாயலாய் உருவாக்கி நடத்துகிறேன்
பலுகி பெருகிடுங்கள் பூமியெல்லாம் நிரம்பிடுங்கள்
உயிர் வாழும் அனைத்தின் மேல் ஆளுகை செய்திடுங்கள்

6. வானத்து விண்மீன் போல ஒளிக் கொடுப்பாய்
கடற்கரை மணலை போல பெருகிடுவாய்
எதிரியின் வாசல்களை உரிமை ஆக்கிடுவாய்

7. நீரண்டை வளருகின்ற செடியும் நீதானே
மதில் மேல் ஏறுகின்ற கொடியும் நீதானே
பகை நிறைந்த உலகத்தில் அன்பு கரம் நீட்டிடுவாய்

8. மாராவின் கசந்த கண்ணீர் மதுரமாகிடும்
பன்னிரெண்டு நீரற்றும் ஏலீமும் உனக்கு உண்டு
கல்வாரி நிழலதனிலே காலமெல்லாம் வாழ்ந்திடுவாய்

9. கர்த்தரின் குரலுக்கு கவனமாய் செவிகொடுத்து
பார்வைக்கு நல்லதையே செய்து நீ வாழ்ந்துவந்தால்
வியாதி வருவதில்லை குணமாக்கும் ஆண்டவர் நான்

10. உணவையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பேன்
மலடு இருப்பதில்லை யுடிழசவழைn ஆவதில்லை
ஆவியிலும் உண்மையிலும் ஆராதனை செய்திடுங்கள்

IPPOVINIL NAM YESUVE THEDIYE


இப்பூவினில் நம் இயேசுவே - தேடியே
மீட்க வந்தார் (2)
விண்ணோர்களும் பண்பாடவே (2)
விந்தையாய் இயேசுவே வந்துதித்தார் (2)

1. அருணோதயம் பூவில் தோன்றினதே
பாதை காட்டிடவே (2)
தாவீதின் வேரில் தோன்றினவர்
தேவ பாலன் இவர் (2)
- இப்பூவினில்

2. ஆலோசனை கர்த்தர் நாமமிதே
வல்ல தேவன் இவர் (2)
கர்த்தத்துவம் அவர் தோளில் உண்டே
பாதம் போற்றிடுவோம் (2)
- இப்பூவினில்

3. அல்லேலூயா நாம் பாடுவோம்
மீட்பர் பாரில் வந்தார் (2)
இம்மானுவேலரை நம் தேவனை
வாழ்த்தி போற்றிடுவோம் (2)
- இப்பூவினில்

IPPOTHU NESA NAATHA THALAI SAITHU

1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து
தெளிந்த அறிவோடு ஆவியை
ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது:
பொங்க நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே

2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கபாரம்
நீர் தாங்கி மனதார மரித்தீர்:
உம் சாவில் பெலன் ஊற்றே, ஆவியையும்
அமைதலாய்த் தந்தைக்குக்கொப்புவித்தீர்

3. நல் மீட்பரே, சாவிருள் என்னை சூழ்ந்து
மரண அவஸ்தை உண்டாகையில்,
தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து
ஒளி உண்டாக்கும் அச்சராவினில்.

YESU THIRU NAAMAM YEEYA UYAR MAGIMAIYIL


இயேசு திருநாமம் ஈய உயர் மகிமையில் ஜெய மகிழ்
இயேசு திருநாமம் எனக்குயிரே
ஆசீர்வாதம் தாரும் ஆசீர்வாதம் தான்
ஆசீர்வாதம் பேசுருபாதம் மேசியா நீர் தான்
- இயேசு … எனக்குயிரே

1. இந்த சபையோரும் உன் செயலாம்
இதை நன்றுணர்ந்தே – புகழ்
நெஞ்சமே கொண்டாடி என்றும் போற்றவே (2)
மிஞ்சும் வாக்கும் செய்கை
ஒன்றிதே உம் மீட்பை
சென்றுலகெங்கும் தந்தையுகந்தை
நன்று காட்டவே - இயேசு … எனக்குயிரே

2. விண்ணுலகோர் பாட
மண்ணுலகோர் அடிபணிந்திட
பாதளத்துள்ளோரும் பயந்தோடிட (2)
எந்தன் நடு வா வா
உந்தன் அருன் தா தா
வந்தனம் சந்ததம் என்றுமே தந்தனம்
உந்தன் அடிமை நான் - இயேசு … எனக்குயிரே

YESU BAALAGA EN JEEVIYA KAALA

இயேசு பாலகா என்
ஜீவகால மெல்லாம்
உம் பிறந்க நாளை
வாழ்த்தி பாடுவேன் (2)

1. விண்ணை விட்டு மண்ணுலகம் வந்ததால்
என்னை மீட்க ஏழைக்கோலம் கொண்டதால்
ஜீவ நாயகா என் அருமை ரட்சகா
பூவுலகை மீட்க வந்த இயேசு பாலகா - இயேசு

2. எந்தன் உள்ளம் இன்பத்தால் நிறைந்தாலும்
துன்பம் என்னை சூழ்ந்தலைக்கழித்தாலும்
ஜீவ நாயகா என் அருமை ரட்சகா
பூவுலகை மீட்க வந்த இயேசு பாலகா - இயேசு

ISRAVEL ENNUM NAATINILE

1. இஸ்ரவேல் என்னும் நாட்டினிலே
பெத்லகேம் என்னும் ஊரினிலே
பிறந்தார் (4) தேவ குமாரன் பிறந்தார்
பிறந்தார் (4) இயேசு கிறிஸ்து பிறந்தார்

உன்னதத்தில் மகிமை
பூமியிலே சமாதானம்
மனுஷர் மேல் பிரியம்
மனுஷர் மேல் பிரியம்

2. கன்னிமரியின் தாய்மையிலே
தாவீது இராஜா வம்சத்திலே
பிறந்தார் (4) அதிசயமானவர் பிறந்தார்
பிறந்தார் (4) முன்னோரின் மேசியா பிறந்தார்
- உன்னதத்தில்

3. சத்திரத்தில் இடம் இல்லையே
மெத்தையோ தொழுமுன்னணையே
பிறந்தார் (4) சிருஷ்டிப்பின் தேவன் பிறந்தார்
பிறந்தார் (4) கர்த்தாதி கர்த்தர் பிறந்தார்
- உன்னதத்தில்

UNGA OOLIYAM NAAN YEN KALAGANUM

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்
அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க

1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா
எஜமானனே என் ராஜனே
எஜமானன் நீர் இருக்க
வேலைக்காரனுக்கு ஏன் கவலை

2. எலியாவை காகம் கொண்டு போஷத்தீரே
சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே
தெய்வமே பேசும் தெய்வமே
எலியாவின் தேவன் இருக்க
எதுவும் என்னை அசைப்பதில்லை

3. பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரே
சிறையிலே நள்ளிரவீல் ஜெபிக்க வைத்தீரே
கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன
காக்கும் தெய்வம் நீர்இருக்க
கவலை பயம் எனக்கெதற்கு

4. ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கின்றேன்
ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர்
நல் ஆயனே என் மேய்ப்பரே
என் ஆயன் நீர் இருக்க
ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை

5. தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பதுபோல
இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர்
தகப்பனே தாங்கும் தெய்வமே
தகப்பன் நீர் இருக்கையிலே
பிள்ளை எனக்கு ஏன் கவலை

UNGAL DHUKKAM SANTHOSAMAI MAARUM

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்

கலங்காதே மகனே, கலங்காதே மகளே
என் இயேசு கைவிட மாட்டார்

1. கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்துவிடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய்... கலங்கிடவே வேண்டாம்

2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைகின்றார் - (உன்)

3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
ஒருநாளும் விட மாட்டார்
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பி செல்ல வழி செய்வார் - (நீ)

4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக் கொள்வோம்
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார் - நம்

5. மாலையில் மகனே அழுகின்றாயா
காலையில் அக மகிழ்வாய்
நித்திய பேரானந்தம்
நேசரின் சமூகத்திலே

6. அக்கினியின் மேல் நடந்தாலும்
எரிந்து போக மாட்டாய்
ஆறுகளை நீ கடந்தாலும்
மூழ்கி போக மாட்டாய்

7. முழுமையாய் மனம் திரும்பிவிடு
முற்றிலும் வாழ்வை ஒப்புக்கொடு
வேண்டாத அனைத்தையும் விட்டுவிடு
ஆண்டவர் விருப்பம் நிறைவேற்று
எங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

எங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்துவிடும்
கலங்கிடவே மாட்டோம்
நாங்கள் கலங்கிடவே மாட்டோம்