Tuesday, March 18, 2025

oru raja maganukku kalyanamam ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்



ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்
கச்சேரி நடனமும் ப்ரமாதமாம்
விருந்து ஏற்பாடும் மும்முரமாம்
அருசுவை உணவும் ஆயத்தமாம் (2) (ஒரு ராஜா)

அழைக்கப்பட்டவர்கள் அந்த விருந்துக்கு வரல
ஏழை மனிதர்கள் அதை நினைச்சு பார்க்கல
கல்யாண வஸ்திரம் ராஜாவின் விருந்து
கிடைக்கும் என்று அவர் கனவு காணல (கல்யாண வஸ்திரம்)

வான லோகத்தில் ஒரு திருமண விருந்து
ஞான மணவாளன் இயேசுவுடன் அருந்து
இரட்சிப்பு என்றோரு இலவச ஆடையை
இங்கே அணிந்தவர் அங்கு செல்லாம் (இரட்சிப்பு என்றொரு)

seerar vivaham ethen govile சீரார் விவாகம் ஏதேன் காவிலே

 சீரார் விவாகம் ஏதேன் காவிலே

நேராய் அமைத்த தேவ தேவனே
தாராய் மன்ற லாசியே
வாராய் சுபம் சேரவே

நேயனே மகா தூய தேவ தேவனே
சீர் மேவும் மெய்மனாசி நீதரவா
நேயனே மகா தூய தேவ தேவனே
சீர் மேவுமே ஆசி தா.

1. மங்கள மணமகன் ஜானுடனே
  மங்கள மணமகள் சுதா சேர்ந்துமே
  நேச தேவ தயவாய்
  பாசத்துணை சேர்த்துவை - நேயனே

2. நாடோரும் செல்ல பாதைத் தீபமாய்
  நாடு உயர்ந்த தேவ நூலதைத்
  தேடித் துணை கொண்டன்பாய்
  நீடித்திவர் வாழ்ந்திட - நேயனே

3. வாழ்க வாழ்க என்றும் இம்மணர்
  வாழ்க இலங்கும் தந்தை தாயாரும்
  வாழ்க சுற்றத்தார் அன்பர்
  வாழ்க சுபமன்றலும் - நேயனே

ippo naam bethleham sendru இப்போ நாம் பெத்லெகேம் சென்று




1. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
  ஆச்சரிய காட்சியாம்
  பாலனான நம் ராஜாவும்
  பெற்றோரும் காணலாம்,
  வான் ஜோதி மின்னிட
  தீவிரித்துச் செல்வோம்,
  தூதர் தீங்கானம் கீதமே
  கேட்போம் இத்தினமாம்.

2. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
  ஆச்சரிய காட்சியாம்
  பாலனான நம் ராஜாவும்
  பெற்றோரும் காணலாம்,
  தூதரில் சிறியர்
  தூய தெய்வ மைந்தன்,
  உன்னத வானலோகமே
  உண்டிங் கவருடன்.

3. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
  ஆச்சரிய காட்சியாம்
  பாலனான நம் ராஜாவும்
  பெற்றோரும் காணலாம்,
  நம்மை உயா;த்துமாம்
  பிதாவின் மகிமை!
  முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,
  போற்றுவோம் தெய்வன்பை.

4. அப்போ நாம் ஏகமாய்க் கூடி
  விஸ்வாசத்தோடின்றே
  சபையில் தங்கும் பாலனின்
  சந்நிதி சோ;வோமே,
  மகிழ்ந்து போற்றுவோம்
  ஜோதியில் ஜோதியே!
  கா;த்தா! நீர் பிறந்த தினம்
  கொண்டாடத் தகுமே

opilla thiru era ஒப்பில்லா - திரு இரா!

 




1. ஒப்பில்லா - திரு இரா!
  இதில் தான் மா பிதா
  ஏக மைந்தனை லோகத்துக்கு
  மீட்பராக அனுப்பினது
  அன்பின் அதிசயமாம்
  அன்பின் அதிசயமாம்.

2.ஒப்பில்லா - திரு இரா!
  யாவையும் ஆளும் மா
  தெய்வ மைந்தனார் பாவிகளை
  மீட்டுவிண்ணுக்குயர்ந்த தம்மை
  எத்தனை தாழ்த்துகிறார்
  எத்தனை தாழ்த்துகிறார்.

3.ஒப்பில்லா - திரு இரா!
  ஜென்மித்தார் மேசியா
  தெய்வ தூதரின் சேனைகளை
  நாமும் சேர்ந்துபராபரனை
  பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
  பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்.

Samadhanam oothum yesukristhu சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

 

               பல்லவி
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம்இவர் தாம்இவர் தாம்.

             சரணங்கள்
1. நமதாதி பிதாவின் திருப் பாலர் இவர்
  அனுகூலர் இவர்மனுவேலர் இவர் - சமா

2.நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
  பரம ராயர் இவர்நம தாயர் இவர் - சமா

3.ஆதி நரர் செய்த தீதறவே
  அருளானந்தமாய் அடியார்சொந்தமாய் - சமா

4.ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
  அறிஞோர் தேடவே ஆயரும் கூடவே - சமா

5.மெய்யாகவே மேசியாவுமே
  நம்மை நாடினாரே கிருபை கூறினாரே - சமா

Aathi thiru varthai divya ஆதித் திருவார;த்தை திவ்விய

 1. ஆதித் திருவார;த்தை திவ்விய

  அற்புதப் பாலகனாகப் பிறந்தார்
  ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
  ஆதிரை யோரையீ டேற்றிட.

              அனுபல்லவி
மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார் ரஞ்சிதனார்
தாம்தாம் தன்னரர் வன்னரர்
தீம்தீம் தீமையகற்றிட
சங்கிர்தசங்கிர்தசங்கிர்தசந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கிர்தஇங்கிர்தஇங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

              சரணங்கள்
2. ஆதாம் ஓதி ஏவினர் ஆபிரகாம் விசுவாசவித்து
  யூதர் சிம்மாசனத்தாளுகை செங்கோல்
  ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்

3. பூலோகப் பாவ விமோசனர்பூரண கிருபையின் வாசனர்
  மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
  மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார்

4. அல்லேலுயா சங்கீர்த்தனம்ஆனந்த கீதங்கள் பாடவே
  அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட
  அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார்

Mei Bakthare neer vizhithelumpum மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்

 


1. மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்
  சந்தோஷமாய் இந்நாளை வாழ்த்திடும்
  இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்
  விண்ணோர் இவ்விந்தையை கொண்டாடினார்
  கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்
  ரட்சண்ய கர்த்தாவாகத் தோன்றினார்

2. இதோ! நற்செய்தி கேளும்இன்றைக்கே
  இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
  பூலோக மீட்பராகப் பிறந்தார்,
  எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
  என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
  இராவில் தோன்றி மொழிந்திட்டானே.

3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,
  ஆனந்த பாட்டைப் பாடிஇசைந்து
   விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
  மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்
  என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
  தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்.

4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
  அற்புத காட்சி காண விரைந்து,
  யோசேப்புடன் தாய் மரியாளையும்
  முன்னணைமீது தெய்வ சேயையும்
  கண்டேதெய்வன்பை எண்ணிப் போற்றினார்,
  ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்.

5. கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
  உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்
  தம் ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
  அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
  அன்போடு தியானம் செய்து வருவோம்,
  நம் மீட்பர் பின்னே செல்ல நாடுவோம்.

6. அப்போது வான சேனை போல் நாமும்
  சங்கீதம் பாடலாம் எக்காலமும்
  இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்
  அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்
  நம் ராயன் அன்பால் ரட்சிப்படைந்தோம்
  அவரின் நித்ய துதி பாடுவோம்

Bakthare Vaarum asai Avaladum பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்

 1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்

   நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனை
   வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே

சாஷ்டாங்கம் செய்ய வாரும்
சாஷ்டாங்கம் செய்ய வாரும்
சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை

2. தேவாதி தேவா ஜோதியில் ஜோதி
   மானிட தன்மை நீர் வெறுத்திலீர்
   தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன்

3. மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடு
   ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்
   விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர;

4. இயேசுவே வாழ்க இன்று ஜென்மித்தீரே
   புகழும் துதியும் உண்டாகவும்
   தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும்