Friday, September 4, 2015

THOOYA AAVIYANAVAR IRANGUM


தூய ஆவியானவர் இறங்கும்
  1. தூய ஆவியானவர் இறங்கும்
துரிதமாக வந்திறங்கும்
தடையாவையும் தயவாய் நீக்கி இறங்கும்

பரிசுத்த பிதாவே இறங்கும்
இயேசுவின் மூலம் இறங்கும்

2. பல பல வருடங்கள் கழிந்தும்
பாரினில் இன்னும் இருளும்
அகவில்லை எனவே நீரே இறங்கும்

3. ஜெபிப்பவர் பலரையும் எழுப்பும்
கிறிஸ்தவ சமுகத்தைத் திருத்தும்
தயாபரனே தயவாய் வேகம் இறங்கும்

4. ஜந்து கண்டம் வாழும் மனிதர்
ஜந்து காயம் காண இறங்கும்
பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும

DEIVA AATUKUTTIYE LOGATHARIN MEETPARE


தெய்வ ஆட்டுக்குட்டியே, லோகத்தாரின் மீட்பரே
  1. தெய்வ ஆட்டுக்குட்டியே,
லோகத்தாரின் மீட்பரே,
உம்மால் மீட்கப்பட்ட நான்
தேவரீர்க்கு அடியான்
நீர் என் கோட்டை, தஞ்சமாம்,
ஆர் என் வாழ்வை நீக்கலாம்?

2. கர்த்தரே, என் உள்ளத்தில்
அருள் தந்தென் மனதில்
அந்தகாரம் நீங்கிட,
அன்பின் தீபம் ஸ்வாலிக்க,
ஆவியின் நல் ஈவையும்
பூர்த்தியாக அளியும்.

3. எந்த நாழிகையிலே
நீர் வந்தாலும், இயேசுவே,
உம்மையே நான் சந்திக்க,
கண்ணால் கண்டு களிக்க,
நான் விழித்திருக்கவே
நித்தம் ஏவிவாருமே.

DEIVAATTU KUTTIKKU PAN MUDI SOOTIDUM


தெய்வாட்டுக் குட்டிக்கு
  1. தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும்
இன்னிசையாய்ப் பேரோசையாய் விண் கீதம் முழங்கும்
உள்ளமே போற்றிடு, உனக்காய் மாண்டோராம்
சதாகாலமும் அவரே ஒப்பற்ற வேந்தராம்.

2. அன்பார்ந்த கர்த்தர்க்கு பன் முடி சூட்டிடும்
கை கால் விலாவின் காயங்கள் விண்ணிலும் வியங்கும்.
பார்ப்பரோ தூதரும் ஏறிட்டக் காயங்கள்?
பணிவரே சாஷ்டாங்கமாய் மூடுவர் தம் கண்கள்.

3. சமாதானக் கர்த்தர்! பன் முடி சூட்டிடும்
போர் ஓய்ந்து ஜெப ஸ்தோத்ரமே பூமியை நிரப்பும்
ஆள்வார் என்றென்றைக்கும் ஆளும் எவ்விடமும்
விண் லோக பாக்கிய சிறப்பு விளங்கி வளரும்.

4. ஆண்டாண்டும் ஆள்வோர்க்கு பன் முடி சூட்டிடும்
சராசரங்கள் சிஷ்டித்தோர் உன்னத தெய்வமும்
பாவிக்காய் ஆருயிர் ஈந்த என் மீட்பரே,
சதா நித்திய காலமாய் உமக்குத் துதியே.

DEIVEEGA KOODARAME EN DEVANIN

தெய்வீகக் கூடாரமே
  தெய்வீகக் கூடாரமே - என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே
மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே

1. கல்வாரி திருப்பீடமே
கறை போக்கும் திரு இரத்தமே
உயிருள்ள பரிசுத்த ஜீவப் பலியாக
ஒப்புக் கொடுத்தோம் ஐயா

2. ஈசோப்புல்லால் கழுவும்
இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனி போல
வெண்மையாவோம் ஐயா
உம்திரு வார்த்தையினால்

3. அப்பா உன் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா
எப்போதும் உம் திருப்பாதம் அமாந்திட
ஏங்கித் தவிக்கின்றோம்

4. உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரியவிடும்

5. தூபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்
எந்தாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்

6. ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா
மகா பரிசுத்த கூடரத்திற்குள்ளே
மகிமையில் நுழைந்து விட்டோம்

DESAME BAYAPADAATHE MAGILNTHU KALIKOORU

தேசமே பயப்படாதே
  தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களிகூறு
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்

1. பலத்தினாலும் அல்லவே
பராக்கிரமும் அல்லவே
ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே

2. தாய் மறந்தாலும் மறவாமல்
உள்ளங்கையில் வரைந்தாரே
வலக்கரத்தாலே தாங்கி உன்னை
சகாயம் செய்து உயர்த்திடுவார்

3. கசந்த மாறா மதுரமாகும்
கொடிய யோர்தான் அகன்றிடும்
நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார்

4. கிறிஸ்து இயேசு சிந்தையில்
நிலைத்தே என்றும் ஜீவிப்பாய்
ஆவியின் பெலத்தால் அனுதினம் நிறைந்தே
உத்தம சாட்சியாய் விளங்கிடுவாய்

5. மாம்சமான யாவர் மீதும்
உன்னத ஆவியைப் பொழிவாரே
ஆயிரமாயிரம் ஜனங்கள் தருவார்
எழும்பி சேவையும் செய்திடுவார்

DEVA DEVANAI THUTHIDUVOM LYRICS

தேவ தேவனைத் துதித்திடுவோம்
1. தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒரு மனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்திப் போற்றிடுவோம்

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா இராஜனுக்கே

2. எங்கள் காலடி வழுவிடாமல்
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மணிபோல காத்தருளும்
கிருபையால் நிதம் வழி நடத்தும்

3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடவே
தேவ வசனம் கீழ்ப்படிவோம்
தேவ சாயலாய் மாறிடுவோம்

4. வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
இயேசு மேகத்தில் வந்திடுவார்
நாமும் அவருடன் சேர்ந்திடவே
நம்மை ஆயத்தமாக்கிக் கொள்வோம்

devanukke magimai deivathirkke magimai

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
  தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீடடவரே தினம் உமக்கே மகிமை - ஐயா
வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க

1. உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் - இந்தப்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் - ஐயா

2. செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் - இந்தப்
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமே - ஐயா

3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே - எங்கள்
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே - ஐயா

4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் - இன்று
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே - ஐயா

5. குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே - பாவக்
கறை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே - ஐயா

DEVANE AARATHIKKINREN


தேவனே ஆராதிக்கின்றேன்
  தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்

1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்

2. கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன்

3. முழமனதோடு ஆராதிக்கின்றேன்
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்

4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாமே பார்த்துக் கொள்வீர்

5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர்

6. யேகோவா ஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே

DEVANE UMMAI NAAN AARATHIPPEN

தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன்

1. உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா
சுத்தமான தண்ணீர் இரசமானதுவே
அச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர்

2. உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா
காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார்
ருசித்தோர் கூறுவார் - இயேசுவே ஆண்டவர்

3. உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் - அல்லேலூயா
மாறிடும் உலகில் மாறாதவர் நீரே
உம்மை அறிந்தவர் .. கூறுவார் ஸ்தோத்திரம்

DEVATHI DEVANE BETHALAI OORINILE



  தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
  1. தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
சத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலே
தம்மை வேண்டா மானிடர்க்காய், தம்சொல் கேளா பாவிகட்காய்
தம்மைத்தாம் வெறுமையாக்கினார், அடிமை ரூபம் எடுத்து வந்தாரே
ஆ வினோதமே ஆ வினோதமே

2. தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
சத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலே
மந்தைக் காக்கும் வேளையிலே, தங்க மாட்டு கொட்டினிலே
கந்தைக் கோலம் பூண்டு வந்தனர், மனுஷத் தன்மை யாவும் ஏற்றாரே
ஆ வினோதமே ஆ வினோதமே

3. தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
சத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலே
வானம் பார்த்த மேய்ப்பர்கட்கும், நிதம் பார்த்த சாஸ்திரகட்கும்
உன்னதத்தின் தேவன் தோன்றினார், தேவ பாலனாய் பிறந்தாரே
ஆ வினோதமே ஆ வினோதமே

THEVAI NIRAINTHAVAR YESU DEVA

தேவை நிறைந்தவர் இயேசு தேவா வல்லமைதந்திடுமே
தேவைகள் சந்திக்க ஏற்றதோர் வல்லமை
வேளையில் தந்திடுமே .. இந்த

1. தேவைமிக்க ஒரு நாட்டினைத் தந்தீர் வல்லமைதந்திடுமே
எத்தனை மதங்கள் எத்தனை தெய்வங்கள்
கர்த்தரே தெய்வம் என்றே காட்ட வல்லமை தந்திடுமே

2. நாடுகள் நடுவினில் அமைதியே இல்லை வல்லமைதந்திடுமே
திறப்பின் வாசலில் நின்று களைப்பின்றி புலம்பிட
எங்களை எழுப்பிடுமே தேவா வல்லமை தந்திடுமே

3. நித்திய நாட்டுக்கு மக்களைச் சேர்க்க வல்லமைதந்திடுமே
நிலையில்லா உலகினில் நிலைநிற்கும் சேமிப்பு
ஆத்துமாக்கள் மட்டுமே தேவா வல்லமை தந்திடுமே

NANMAIGALIN NAYAGANE NANDRI SOLLI MAGILGIREN

நன்மைகளின் நாயகனே
  நன்மைகளின் நாயகனே, நன்றி சொல்லி மகிழ்கிறேன்
உண்மையுள்ள தெய்வமே, உயிரோடு கலந்தவரே
நன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயா
உண்மையுள்ள தெய்வமே, உயிரோடு கலந்தவரே

1. கடந்த ஆண்டெல்லாம்
கண்மணி போல் காத்தீரே
புதிய (ஆண்டு) நாள் தந்து
புதியன (புதுமைகள்) செய்பவரே

2. உமக்காய் காக்திருந்து
புதுபெலன் அடைகின்றேன்
உம்மையே பற்றிக் கொண்டு
புதிய மனுஷனானேன்

3. கர்த்தர் கரம் என்னோடு
இருப்பதை உணர வைத்தீர்
அநேகர் அறிக்கையிட
அப்பா நீர் கிருபை செய்தீர்

4. எனக்கு எதிரானோர்
என் சார்பில் வரவைத்தீர்
சமாதானம் செய்ய வைத்தீர்
சர்வ வல்லவரே

5. எப்சிபா என்றழைத்து
என்மேலே பிரியமானீர்
பியூலா என்றழைத்து
மணமகளாக்கிவிட்டீர்

6. ஏசேக்கு, சித்னா
இன்றோடு முடிந்தது
ரெகோபோத் தொடங்கியது
தடைகளும் விலகியது

7. பழையன கடந்தன
புதியன புகுந்தன
எல்லாமே புதிதாயிற்று
அல்லேலூயா பாடுவேன்

NANDRI BALIPEEDAM KATTUVOM

நன்றிப்பலிபீடம் கட்டுவோம்
  நன்றிப்பலிபீடம் கட்டுவோம்
நல்ல தெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மை ஆயிரங்கள்
சொல்லிச் சொல்லி பாடுவேன்

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
பாவம் நீங்கிட கழுவி விட்டீர்
உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
உமது ஊழியம் செய்ய வைத்தீர்

2. சிறந்த முறையிலே குரல் எழுப்பும்
சிலுவை இரத்தம் நீர் சிந்தினீரே
இரத்தக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டு
எதிரி நுழையாமல் காத்துக்கொண்டீர்

3. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
இயேசு அரசுக்குள் சேர்;த்துவிட்டீர்
உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
உரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர்

4. புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
புனித இரத்தம் ஊற்றினீரே
சத்திய ஜீவ வார்த்தையாலே
மரித்த வாழ்வையே மாற்றினீரே

5. எதிராய் வாழ்ந்து வந்த இவ்வுலகை
ஒப்புரவாக்கினீர் உம் இரத்தத்தால்
தூரம் வாழ்ந்து வந்த எங்களையே
அருகில் கொண்டுவந்தீர் ஆவியினால்

6. குற்றம் செய்ததால் மரித்திருந்தோம்
இயேசுவோடே கூட எழச்செய்தீர்
கிருபையினாலே இரட்சித்தீரே
உன்னதங்களிலே உட்காரச் செய்தீர்

உடலுக்குரிய ஆசீர்வாதம்

7. பார்க்கும் கண்களை தந்தீரய்யா
பாடும் உதடுகள் தந்தீரய்யா
உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
ஓடும் கால்களைத் தந்தீரய்யா

8. இதய பெலவீனம் நீக்கினீரே
சுகர் வியாதிகள் போக்கினீரே
ஆல்சர் இல்லாமல் காத்தீரே
ஆஸ்மா முற்றிலும் நீக்கியதே

உகத்துக்குரிய ஆசீர்வாதம்

9. நல்ல குடும்பம் நீர் தந்தீரய்யா
செல்ல பிள்ளைகள் தந்தீரய்யா
அணைக்கும் கணவனை தந்தீரய்யா
அன்பு மனைவியை தந்தீரய்யா

10. இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர்
வாழத் தேவையான வசதி தந்தீர்
கடுமையாக தினம் உழைக்க வைத்தீர்
கடனே இல்லாமல் வாழ வைத்தீர்

NANDRIYAL THUTHIPAADU NAM YESUVAI

நன்றியால் துதிபாடு - நம் இயேசுவை
  நன்றியால் துதிபாடு - நம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர் - நன்றி

1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும்

2. செங்கடல் நம்மைச் சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழலுண்டு
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்துவிடும்

3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம்
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம்

NAMAKKORU PALAGAN PIRANTHAR

நமக்கொரு பாலகன் பிறந்தார்
  நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கோர் சுதன் கொடுக்கப்பட்டார்
அவர் இயேசு தெய்வ மைந்தனாம்
அவர் பாதம் வணங்குவோம்
உன்னதத்தில் மகிமை
பூமியில் அமைதி
என்றும் உண்டாகவே

1. அதிசயமானவர் அவர் ஆலோசனை கர்த்தா
வல்லமையுள்ளவர் அமைதி காப்பவர்
இம்மானுவேலவர் என்றும் நம்மோடிருப்பவர்
இருளை அகற்றி ஒளியை தருபவர்
- நமக்கொரு

2. பாவிகள் நமக்காய் இந்த பாரில் உதித்தவர்
வான்மகிமைவிட்டு ஏழையாய் வந்தவர்
தேவாதி தேவனை இந்த ராஜாதி ராஜனை
ஏகமாய் போற்றியே வாழ்த்திடுவோம் நாமே
- நமக்கொரு

NAM YESU NALLAVAR ORU POTHUM

நம் இயேசு நல்லவர்
  நம் இயேசு நல்லவர்
ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்

ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்திரிப்போம்

1. அதிசயமானவர்
ஆறுதல் தருகிறார்
சர்வ வல்லவர்
சமாதானம் தருகிறார் - உனக்கு

2. கண்ணீரைக் காண்கிறார்
கதறலைக் கேட்கிறார்
வேதனை அறிகிறார்
விடுதலை தருகிறார் - இன்று

3. எதிர்காலம் நமக்குண்டு
எதற்கும் பயமில்லை
அதிகாரம் கையிலே
ஆளுவோம் நேசத்தை - நாம்

4. நொறுங்குண்ட நெஞ்சமே
நோக்கிடு இயேசுவை
கூப்பிடு உண்மையாய் - இன்று
குறையெல்லாம் நீக்குவார் - உன்

5. நண்பனே கலங்காதே
நம்பிக்கை இழக்காதே
கண்ணீரைத் துடைப்பவர்
கதவண்டை நிற்கிறார்

6. எத்தனை இழப்புகள்
ஏமாற்றம் தோல்விகள்
கர்த்தரோ மாற்றுவார்
கரம் நீட்டித் தேற்றுவார்

7. என் இயேசு வருகிறார்
மேகங்கள் நடுவிலே
மகிமையில் சேர்த்திட
மறுரூபமாக்குவார்

NAMBI VANTHEN MESIAH NAAN

நம்பிவந்தேன் மேசியா
  நம்பிவந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே -திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே.

1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே - வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே - நான்

2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் - நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர்;
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே - கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே.

5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே - உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த - நம்பிவந்தேனே – நான

NAL MEETPER YESU NAAMAME


நல் மீட்பர் இயேசு நாமமே
  1. நல் மீட்பர் இயேசு நாமமே
என் காதுக்கின்பமாம்
புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
ஊற்றுண்ட தைலமாம்

2. அந்நாமம் நைந்த ஆவியை
நன்றாகத் தேற்றுமே
துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை
திடப்படுத்துமே

3. பசித்த ஆத்துமாவுக்கு
மன்னாவைப்போலாகும்
இளைத்துப்போன ஆவிக்கு
ஆரோக்கியம் தந்திடும்

4. என் ரட்சகா, என் கேடகம்
என் கோட்டையும் நீரே
நிறைந்த அருள் பொக்கிஷம்
அனைத்தும் நீர்தாமே

NALLIRAVINIL MATTU THOLUVATHIL


நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்
  நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்
சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே

1. அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரே
மந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரே
இம்மானுவேல் தேவ இம்மானுவேல்
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்
- நள்ளிராவினில்

2. மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லை
செல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமே
இம்மானுவேல் தேவ இம்மானுவேல்
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்
- நள்ளிராவினில

NALLIRAVIL MAA THELIVAI


நள்ளிரவில் மா தெளிவாய்
  1. நள்ளிரவில் மா தெளிவாய்
மாண் பூர்வ கீதமே
விண் தூதர் வந்தே பாடினார்
பொன் வீணை மீட்டியே;
“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்
ஸ்வாமி அருளாலே;”
அமர்ந்தே பூமி கேட்டதாம்
விண் தூதர் கீதமே.

2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள்
தம் செட்டை விரித்தே,
துன்புற்ற லோகம் எங்குமே
இசைப்பார் கீதமே;
பூலோகக் கஷ்டம் தாழ்விலும்
பாடுவார் பறந்தே;
பாபேல் கோஷ்டத்தை அடக்கும்
விண் தூதர் கீதமே.

NAANUM EN VEETARUMOVENDRAL

நானும் என் வீட்டாருமோவென்றால்
  நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா - 2

1. கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய்

2. நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா

3. நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா

NAAN AARATHIKKUM YESU NALLAVAR

நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
  நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
நம்பிடுவாய் நீ நம்பிடுவாய்

1. கலங்கிபோன நேரத்திலும்
கரம் பிடித்து நடத்துவார்
தம் சிரகாலே உன்னை மூடி
பாதுகாத்து நடத்துவார்

2. பொல்லாத வார்த்தைகள் வந்தனவோ
பொறுமையாக நீ சகித்தாயோ
இயேசுவின் அன்பு தேற்றிடுமே நீ
அவரின் மார்பில் சாய்ந்திடுவாய்

3. மனிதர் உன்னை வெறுத்தாலும்
மாராத இயேசு இருக்கிறார்
தனிமையான நேரத்திலும் உன்
தந்தையாய் வந்து தேற்றிடுவார்

NAAN UMMAIPATTRI RATCHAGA WEEN LYRICS


நான் உம்மைப்பற்றி இரட்சகா வீண் வெட்கம் அடையேன
1. நான் உம்மைப்பற்றி இரட்சகா வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தாண்டவா நான் சாட்சி கூறுவேன்

சிலுவையண்டையில் நம்பி வந்து நிற்கையில்
பாவப் பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்

2. ஆ, உந்தன் நல்ல நாமத்தை, நான் நம்பி சார்வதால்
நீர் கைவிடீர்! இவ்வேழையை, காப்பீர் தேவாவியால்

3. மா வல்ல வாக்கின் உண்மையை, கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை, விடாமல் காக்கிறீர்

NAAN NESIKKUM DEVAN YESU LYRICS



நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் - அவர்
நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)
நான் பாடி மகிழ்ந்திடுவேன், என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவிய காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்

1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
படகாய் அவர் வருவார்
இருள் தனிலே பகலவனாய்
துணையாய் ஒளி தருவார்!

2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவராகிடுவார்
மயங்கிவிழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார்!

3. தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனைத்
தேற்றிட வந்திடுவார்
கால் தளரும் வேளையிலே
ஊன்று கோலாகிடுவார்

nimishagal nimishagal valkaiyin nimishagal

நிமிஷங்கள் நிமிஷங்கள்
  நிமிஷங்கள் (2) வாழ்க்கையின் நிமிஷங்கள்
ஒவ்வொன்றாய் ஓடி மறைந்துவிடும்
கனவுகள் ஆயிரம் மனதார கண்டு நீ
நினைவுகள் ஆகியே மறைந்திடுமே
………. நிமிஷங்கள்

துளிதுளி சாரலும் பெரு வெள்ளமாகும்
தனிதனியாகவே சேர்ந்துவிடும்
இளைப்பாறும் நாட்களும் விரைவாக வந்திடும்
கரைசேரும் முன்னே நினைத்திடுவாய்
………. நிமிஷங்கள்

இருளினில் ஒளிகாட்டும் பெருவாழ்வு ஈட்டும்
மறுமையில் உன்னையும் சேர்த்துவிடும்
இனிதான நேசரை கரம் கூப்பி சாற்றுவாய்
கனிவாக உன்னையே அழைக்கிறாரே
………. நிமிஷங்கள்

NESARE UMTHIRU PAATHAM AMARTHEN

நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்
  நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித்துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே
அடைக்கலமே அதிசயமே
ஆராதனை ஆராதனை

1. உம்வல்ல செயல்கள்
நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதையா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா
வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை

2. பலியான செம்மறி
பாவங்கள் எல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே
பரிசுத்தரே படைத்தவரே
ஆராதனை ஆராதனை

3. எத்தனை இன்னல்கள்
என் வாழ்வில் வந்தாலும்
உம்மைப் பிரியேன் ஐயா
இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வோன்
நிச்சயம் நிச்சயம்
இரட்சகரே இயேசு நாதா
ஆராதனை ஆராதனை

PAGALON KADHIRPOLUME


பகலோன் கதிர்போலுமே
  1. பகலோன் கதிர்போலுமே
இயேசுவின் ராஜரீகமே
பூலோகத்தில் வியாபிக்கும்
நீடூழி காலம் வர்த்திக்கும்.

2. பற்பல ஜாதி தேசத்தார்
அற்புத அன்பைப் போற்றுவார் ;
பாலரும் இன்ப ஓசையாய்
ஆராதிப்பார் சந்தோஷமாய்.

3. நல் மீட்பர் ராஜ்யம் எங்குமே
சிரேஷ்ட பாக்கியம் தங்குமே;
துன்புற்றோர் ஆறித் தேறுவார்,
திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார்.

4. பூலோக மாந்தர் யாவரும்
வானோரின் சேனைத் திரளும்
சாஷ்டாங்கம் செய்து போற்றுவார்,
“நீர் வாழ்க, ராயரே” என்பர்.

PANI THOOVIDUM IRAVIL KANNI


பனி தூவிடும் இரவில்
  பனி தூவிடும் இரவில்
கன்னி மைந்தனாய் புவிமீதினில்
இயேசு பாலன் அவதரித்தார்
அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே

1. அவர் நாமமே மிக அதிசயமாமே!
ஆலோசனையின் கர்த்தர் என்றும் இவர் தானே! (2)
அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே

2. ராஐன் தாவீதின் இன்ப சிங்காசனமே
இவர்தாகுமே நித்திய ஆட்சி செய்வாரே (2)
அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே

3. அவர் பெரியவர் அவர் உலக இரட்சகரே!
அன்பு தேவனை நாமும் போற்றி துதிப்போமே! (2)
அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே

BAYANTHU KARTHARIN THOOYA VALIYIL

பயந்து கர்த்தரின் பாதை யதனில்
பணிந்து நடப்போன் பாக்யவான்.

அனுபல்லவி
முயன்று உழைத்தே பலனை உண்பான்
முடிவில் பாக்யம் மேன்மை காண்பான்.

சரணங்கள்

1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்,
தண்ணிழல் திராட்சைக் கொடிபோல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்.

2. ஒலிவமரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போலே
மெலிவிலா நல்ல பாலருன் பாலே
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே.

3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதைக்
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்தரம் பிள்ளைகள்
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை.

PARATHIN JOTHIYE ENMEL IRANGIDUM

பரத்தின் ஜோதியே
  1. பரத்தின் ஜோதியே
என்மேல் இறங்கிடும்
பிரகாசத்துடனே
உள்ளத்தில் விளங்கும்
நீர் ஜீவ ஜோதி, தேவரீர்
நற் கதிர் வீசக்கடவீர்.

2. நிறைந்த அருளால்
லௌகீக ஆசையை
அகற்றி, ஆவியால்
பேரின்ப வாஞ்சையை
வளர்த்து நித்தம் பலமாய்
வேரூன்றச் செய்யும் தயவாய்.

3. நீர் என்னை ஆளுகில்
நான் வாழ்ந்து பூரிப்பேன்
நீர் என்னை மறக்கில்
நான் தாழ்ந்து மாளுவேன்
என் ஊக்கம் ஜீவனும் நீரே
கடாட்சம் செய்யும், கர்த்தரே.

4. தெய்வன்பும் தயவும்
உம்மாலேயே உண்டாம்
நற் குணம் யாவுக்கும்
நீர் ஜீவ ஊற்றேயாம்
நான் வாழும்படி என்றைக்கும்
என்னை நிரப்பியருளும்.

PARATHILE IRUNTHUTHAN ANUPPAPATTA THOOTHAN

பரத்திலே யிருந்துதான்
  1. பரத்திலே யிருந்துதான்
அனுப்பப்பட்ட தூதன் நான்
நற்செய்தி அறிவிக்கிறேன்
பயப்படாதிருங்களேன்.

2. இதோ எல்லா ஜனத்துக்கும்
பெரிய நன்மையாய் வரும்
சந்தோஷத்தைக் களிப்புடன்
நான் கூறும் சுவிசேஷகன்

3. இன்றுங்கள் கர்த்தரானவர்
மேசியா உங்கள் ரட்சகர்
தாவீதின் ஊரில் திக்கில்லார்
ரட்சிப்புக்காக ஜென்மித்தார்

4. பரத்திலே நாம் ஏகமாய்
இனி இருக்கத்தக்கதாய்
இக்கட்டும் பாவமுமெல்லாம்
இம்மீட்பரால் நிவிர்தியாம்

5. குறிப்பைச் சொல்வேன் ஏழையாய்
துணியில் சுற்றப்பட்டதாய்
இப்பிள்ளை முன்னணையிலே
கிடக்கும் ஆர் கர்த்தர் தாமே.

PARALOGATHILIRUNTHU VANDHIDUVAAR

பரலோகத்திலிருந்து வந்திடுவார்
  பரலோகத்திலிருந்து வந்திடுவார்
பரிசுத்த ஆவி என்னில் நிறைத்திடுவார்
பரிவாய் என்னை என்றும் காத்திடுவார்
என் மனதில் நிறைந்து அருள் புரிவார்

1. பரனே மனதை காத்திடுவார்
குறையை நீக்கி அருள் புரிவார்
நெருப்பாய் என்னில் எரிந்திடுவார்
புதிய ஜீவன் தந்திடுவார்

2. கருணை கடலே காத்திடுவார்
என் கலக்கம் தீர்த்து அணைத்திடுவார்
ஜீவ ஊற்றாய் வந்திடுவார்
ஆவி அபிஷேகம் தந்திடுவார்

3. அருகில் இருந்து ஆண்டிடுவார்
அருளை தினமும் பொழிந்திடுவார்
காலம் கடந்தும் நின்றிடுவார்
இரட்சிப்பின் பாதை காட்டிடுவார்

PARISUTHA AAVIYE VAARUMAIAH

பரிசுத்த ஆவியே, வாருமையா
  பரிசுத்த ஆவியே, வாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா
புது எண்ணையால், புது பெலத்தால்
பாத்திரம் நிரம்பி வழியட்டுமே

1.ஆத்தும ஆதாயம் செய்திடவே
அழியும் மக்களை மீட்டிடவே
அனுப்பும் தேவா ஆவியினை உம்
அற்புதம் இன்று விளங்கட்டுமே

2.சிம்சோனுக்கு நீர் இரங்கினீர்
புதிய பெலத்தை கொடுத்தீரே
சோர்ந்து போன ஊழியரே, உன்னை
உயிர்பிக்க செய்யும் அபிஷேகமே

3.உலர்ந்த எலும்புகள் உயிரடைய
உன்னத ஆவியை அனுப்பினீரே
சபைகள் வளர, கால் ஊன்றி நிற்க
எழுப்புதல் இன்று அனுப்பிடுமே

PARISUTHARAM DEVAMAINDHAN PIRANTHA NANNAL INDRU



  பரிசுத்தராம் தேவமைந்தன் பிறந்த நன்னாள்
  1. பரிசுத்தராம் தேவமைந்தன் பிறந்த நன்னாள் இன்று
மரிமடியில் குழந்தையாக தவழ்ந்து வந்தார் அன்று
நாசரேத்தில் வளர்ந்து வந்தார் பெற்றோருடன் நன்று
சுவிசேஷம் சொல்லி வந்தார் பல இடங்கள் சென்று

மகிழ் கொண்டாடுவோம் நாம் மகிழ் கொண்டாடுவோம்
பாவபாரம் நம்மை விட்டு மறைந்து போனதே
மகிழ் கொண்டாடுவோம் நாம் மகிழ் கொண்டாடுவோம்
கர்த்தர் இயேசு கிறிஸ்து நமது உள்ளில் பிறந்ததால்

2. வானில் வெள்ளி வழி நடத்த ராயர்களும் விரைந்தனர்
தொழுவத்திலே புல்லணையில் பாலகனைக் கண்டனர்
யூதர் ராஜா இயேசு எனக் கண்டு மனம் மகிழ்ந்தனர்
பொன் போளம் தூபம் தனை காணிக்கையாய் படைத்தனர்
- மகிழ்

3. பாவிகளை மீட்பதற்காய் கர்த்தர் இயேசு உதித்தார்
பாவங்களைத் தோளின் மேலே சிலுவையாக சுமந்தார்
தேவ அன்பை உலகம் உணர ஜீவ பலியாக தந்தார்
சாவை வென்று தேவ சுதன் மூன்றாம் நாளில் உயிர்த்தார்
- மகிழ்

4. குதூகலமாய் தேவனை மனம் ஸ்தோத்தரித்து பாடுதே
களிப்புடனே எந்தன் கால்கள் குதித்து நடனம் ஆடுதே
இரட்சிப்பினை நல்க வந்த இயேசுவை மனம் தேடுதே
ஜெய கிறிஸ்து மீண்டும் வரும் நாளை உலகம் நாடுதே
- மகிழ்

PARITHI THUGIDA PATHIRAA NERATHIL


பரிதி தூங்கிட பாதிரா நேரத்தில்
  பரிதி தூ…ங்கிட பாதிரா நே…ரத்தில்
பாரிடை பிறந்தவரே…
பாவங்கள் போ…க்கவும் சாபங்கள் நீ…க்கவும்
தரணியில் பிறந்தவரே… (2)

1. மயில்கள் ஆ…டட்டும் குயில்கள் பா…டட்டும்
வானவர் வாயார வாழ்த்…திடட்டும்… (2)
தேவ குமாரா தாவீதின் மைந்தா
தாழ்மையின் திரு…வுருவே – தியாகத்தின் திருவடிவே
- பரிதி

2. கனிகள் கனி…யட்டும் மலர்கள் மல…ரட்டும்
பரமன் நின் பெருமை புகழ்ந்தி…டட்டும் (2)
மாட்டுக்கொட்டிலில் மாபெரும் தேவன்
மானிடன் ஆ…னாரே – மாந்தரை மீட்டிடவே
- பரிதி

PALLANGAL ELLAM NIRAMBIDA VENDUM

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
  பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்

ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2)
இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்வோம்

1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்

2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே

3. அந்நாளில் வானம் வெந்து அழியும்
பூமியெல்லாம் எரிந்து உருகிப் போகும்

4. கரையில்லாமலே குற்றமில்லாமலே
கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம்

5. அநுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம்
அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம்

BAARA SILUVAIYINAI THOLIL SUMAKKUM


பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும்
  பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும் அந்தப்
பாதம் என் தெய்வம் அல்லவோ!
தாகமாய் இருக்கிறேன் என்று சொல்லும் அவர்
ஞாபகம் நான் அல்லவோ!
அவர் ஞாபகம் நான் அல்லவோ!

1. ஈராறு சீடருடன் வாழ்ந்த அவருக்கு
இருபக்கம் கள்வர் அல்லவோ!
பாவம் அறியா அவர் பாதத்தில்
பணிந்திடும் பாக்கியம் தந்தாரல்லோ!
சுப பாக்கியம் தந்தாரல்லோ!

2. கண்களில் கண்ணீரால் பார்வையில் ஒளி மங்க
பார்த்திபன் சாவதன்றோ!
தன்னலமாகச் சென்ற பாதகன்
எனை வெல்லப் பொற்பாதம் ஆணி அல்லோ
அவர் பொற்பாதம் ஆணி அல்லோ!

3. கல்வாரி மலையில் நின்றிடும் சிலுவையே
மாபாவி நானும் வந்தேன்!
தொங்கிடும் என் தெய்வம்
தங்கிட என் உள்ளம் தந்திட இதோ வந்தேன்!
நேசர் தங்கிட இதோ வந்தேன்!

PAAR MUNNANAIYIL DEVAKUMARAN WIN AALUM


பார் முன்னணையில் தேவகுமாரன் விண் ஆளும்
  1. பார் முன்னணையில் தேவகுமாரன் விண் ஆளும்
நாதர் பாலகனாய் நம்பாவம் யாவும் தம்மீது
ஏற்கும் தேவாட்டுக் குட்டித் தோன்றினார்

2. மாதூய பாலன் மீட்பின் நல்ல வேந்தன் மாசற்றோ
ராகப் பூவில் வாழ்ந்தார் தீயோனை வென்று நம் பாவம்
போக்கி மகிமை மீட்பர் ஆளுகின்றார்

3. தீர்க்கர் முன்கூற, விண்தூதர் பாட விந்தையின்
பாலன் வந்துதித்தார் பூலோக மீட்பர் பாதாரம்
சேர்வோர் அழியா வாழ்வைக் கண்டடைவார்

PAAR MUNNANAI ONDRIL THOTTIL

பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே
  1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே
பாலனாம் நம் இயேசு கிடந்தனரே;
வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்
காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம்.

2. மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,
ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்;
நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,
தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர்.

3. என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,
என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;
உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தே
சேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே.

PAAVA NAASAR PATTA KAAYAM NOKKI

பாவ நாசர் பட்ட காயம்
  1. பாவ நாசர் பட்ட காயம் நோக்கி தியானம் செய்வது
ஜீவன், சுகம், நற்சகாயம், ஆறுதலும் உள்ளது

2. இரத்த வெள்ளம் பாய்ந்ததாலே அன்பின் வெள்ளம் ஆயிற்று
தெய்வ நேசம் அதினாலே மானிடர்க்குத் தோன்றிற்று.

3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம் தஞ்சம் என்று பற்றினேன்
அவர் திவ்விய நேச முகம் அருள் வீசக் காண்கிறேன்

4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி துக்கத்தால் கலங்குவேன்
அவர் சாவால் துக்கம் மாறி சாகா ஜீவன் அடைவேன்

5. சிலுவையை நோக்கி நிற்க, உமதருள் உணர்வேன்
தீர்த்த ரத்தம் நெஞ்சில் பட, சமாதானம் பெறுவேன்

6. அவர் சிலுவை அடியில் நிற்பதே மா பாக்கியம்
சோர்ந்த திரு முகத்தினில் காண்பேன் திவ்விய உருக்கம்

7. உம்மை நான் கண்ணாரக் காண விண்ணில் சேரும் அளவும்
உம்மை ஓயா தியானம் செய்ய என்னை ஏவியருளும்

PAAVATHIN BALAN NARAGAM OH PAAVI


பாவத்தின் பலன் நரகம்
  1. பாவத்தின் பலன் நரகம் - ஓ பாவி நடுங்கிடாயோ,
கண் காண்பதெல்லாம் அழியும் காணாததல்லோ நித்தியம்

இயேசு இராஜா வருவார்
இன்னுங் கொஞ்ச காலந்தான்
மோட்சலோகம் சேர்ந்திடுவோம்

2. உலக இன்பம் நம்பாதே, அதின் இச்சை யாவும் ஒழியும்
உன் ஜீவன் போகும் நாளிலே, ஓர் காசும்கூட வராதே

3. உன் காலமெல்லாம் போகுதே, உலக மாய்கையிலே,
ஓ தேவகோபம் வருமுன், உன் மீட்பரண்டை வாராயோ

4. தேவன்பின் வெள்ளம் ஓடுதே, கல்வாரி மலை தனிலே
உன் பாவம் யாவும் நீங்கிப்போம்,அதில்ஸ்நானம்செய்வதாலே.

5. மாபாவியான என்னையும், என் நேசர் ஏற்றுக் கொண்டாரே
ஒபாவி நீயும் ஓடிவா, தேவாசீர்வாதம் பெறுவாய்

PAAVIYAAGAVE VAAREN PAAVAM POKKUM



  பாவியாகவே வாறேன்
  பாவியாகவே வாறேன், பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே, வாறேன்

1.பாவக்கறை போமோ என் பாடால்? உன் பாடாலன்றிப்
போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் - பாவி

2. நீ வா, உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே;
தேவா, உன் வாக்கை நம்பி, சீர்கேடன் நீசனும் நான் - பாவி

3. பேய்மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப்
போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் - பாவி

4. ஜீவ செல்வ ஞான சீல சுகங்கள் அற்றேன்,
தாவென்று வேண்டிய சாவில் சஞ்சரித்த நான் - பாவி

5. துன்பங்கள் நீக்கி உன்னை தூக்கி அணைப்பேன் என்றீர்
இன்ப வாக்குத்தத்தத்தை இன்றைக்கே நம்பியே நான் - பாவி

6. உன்னைச் சேர ஒட்டாமல் ஊன்றிய தடை யாவும்
உன்னன்பால் நீங்கி நல் உயிர் அடைந்தோங்கவே நான் - பாவி

PIRANTHAR PIRANTHAR PIRANTHAR PAARINAI


பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

பாரினை மீட்டிட பரமன் இயேசு
பரிசுத்தராய் பிறந்தார் (2)

1. நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் நன்மைகள் பெருகிடவே
நமக்கொரு குமாரன் ஈவானார் நீதியாய் ஆகிடவே
யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்திடவே இப்பூமியில் ஒளிதரவே - இன்று
- பிறந்தார்

2. சாத்தானின் சேனை வீழவே சத்தியம் நிலைத்திடவே
காரிருள் பாவங்கள் நீக்கவே கிருபையும் பெருகிடவே
தேவ குமாரன் ஜெயமனுவேலன் தாழ்மையின் ரூபமானார் - இன்று
- பிறந்தார்

PUTHIYA PAADAL PAADI PAADI YESU

புதிய பாடல் பாடி பாடி இயேசு
  புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்

1. கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே
திடன் தந்தார் ஆவியாலே - எனக்கு

2. உறுதியாய் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பூரண சமாதானம்
புவிதனில் தருபவரே - தினமும்

3. அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமை உள்ள தேவா
வரங்களின் மன்னவனே - எல்லா

4. கூப்பிட்டேன் பதில் வந்தது
குறைவெல்லாம் நிறைவானது
மகிமையின் ராஜா அவர்
மகத்துவமானவரே - இயேசு

5. மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு
கோபமோ ஒரு நிமிடம்
கிருபையோ நித்தம் நித்தம் - அவர்

BUTHIYAAI NADANDHU VAARUNGAL



  புத்தியாய் நடந்து வாருங்கள்
  பல்லவி
புத்தியாய் நடந்து வாருங்கள் - திருவசனப்
பூட்டைத் திறந்து பாருங்கள்

அனுபல்லவி
சத்தியத்தைப் பற்றிக்கொண்டு,
தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு,
நித்தமும் ஜெபம், தருமம்,
நீதி செய்து, பாடிக்கொண்டு - புத்தி

சரணங்கள்
1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? – திரு உரையில்
அறிந்து உணர்ந்து பாருங்கள்ளூ
சீருடைய தெய்வப் பிள்ளைகள் - நீங்கள்ளூ ஏதித்த
தித்தரிப்பு செய்யும் வகைகள்?
கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம்
நேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே –

2. ஆவியை அடக்காதிருங்கள்;ளூ - மறை சொல்லுவதை
அசட்டை செய்யாமல் பாருங்கள்ளூ
ஜீவனை அடையத் தேடுங்கள்ளூ - யேசுக் கிறிஸ்தின்
சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள்ளூ
மேவியே ஜெபம், மன்றாட்டு, விண்ணப்பம், வேண்டுதலோடு
தாவி, யேசுவைப் பிடித்துத் தளரா நடையோடுன்னிப் -

3. ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத் - துதித்துப் போற்றி,
இன்பமாய்ச் சத்திய வேதத்தை
வாசித்து ஆராய்ந்து, நலத்தைப் - பிடித்துளத்தில்
வைத்துக் கொண்டு, இவ்வுலகத்தை
நேசியாமல் பிழைத்துங்கள் நித்திய ரட்சிப்பைத் தினம்
ஆசையோடு தேடி, நீங்கள் அடையும்படி முற்றிலும் -

4. பரிசுத்த கூட்டம் அல்லவோ? - நீங்கள் எல்லாரும்
பரன் மகன் தேட்டம் அல்லவோ?
தரிசிக்க நாட்டம் அல்லவோ? – கிறிஸ்தின் உள்ளம்
தன்னிலே கொண்டாட்டம் அல்லவோ?
புரிசனை செய்தவர்பொற்பாதத்தை மனதில் உன்னிக்
கரிசனை யோடு தேடிக் காணத் தீயோன் நாணப் படிப் -

POORANA VALKAIYE DEIVASAM VITTU

பூரண வாழ்க்கையே
  1. பூரண வாழ்க்கையே!
தெய்வாசனம் விட்டு,
தாம் வந்த நோக்கம் யாவுமே
இதோ முடிந்தது!

2. பிதாவின் சித்தத்தை
கோதற முடித்தார்
தொல் வேத உரைப்படியே
கஸ்தியைச் சகித்தார்.

3. அவர் படாத் துக்கம்
நரர்க்கு இல்லையே:
உருகும் அவர் நெஞ்சிலும்
நம்துன்பம் பாய்ந்ததே.

BETHLEGEM ENNUM THAVEETHIN OORIL

பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில்
பிறந்தனர் இயேசு பெருமான்

பாவியை மீட்க பரலோகம் விட்டு
பூலோகத்தில் உதித்தார் - பெத்லகேம்

1. விண்ணுலகம் விட்டு
மண்ணுலகம் வந்து
விண்ணோர்கள் போற்றும் தேவா

2. தொழுவத்தில் பிறந்த
பாலனை பணிய
பொன் தூபம் போளம் படைத்தார்

PETROR UNNAI MARANTHALUM

பெற்றோர் உன்னை மறந்தாலும்
  பெற்றோர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை துறந்தாலும்
தேசமே உன்னைப் பகைத்துத் தள்ளினாலும்
இயேசு உன்னை ஏற்றுக்கொள்வார்

1. குற்றம் பல புரிந்தாலும்
நீ சற்றும் தயங்காமலே
இயேசுவிடம் வந்துவிட்டாலுன்னை
நேசமாய் மன்னித்தருள்வார்

2. காசு ஒன்றும் கேட்பதில்லை
இந்த இயேசு உன்னை மீட்பதர்க்கு
நெஞ்சம் மட்டும் தந்துவிட்டால் நானே
தஞ்சம் என காத்துக்கொள்வார்