Thursday, July 30, 2015

MANTHAYIL SERA AADUGALE

மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே - மந்தையில்

அனுபல்லவி

அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு நடத்திடுவார்

சரணங்கள்

1. காடுகளில் பல நாடுகளில்
என் ஜனம் சிதறுண்டு சாகுவதா?
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை?

2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
என்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்

3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
அதை உன்னிடம் கேட்கிறேன் தரவேண்டும்

MARANTHEDATHE NEE MANNAN YESUVIN

மறந்திடாதே நீ, மன்னவன் இயேசுவின்
மாண்பினைக் கூற, மறந்திடாதே நீ

சரணங்கள்

1. பாலைவனமதில் வாழுகின்றார் - சிலர்
பட்டண வீதியில் அலைகின்றார்
பார் புகழும்படி நடக்கின்றார் - சிலர்
பகலிர வெதிலும் உழைக்கின்றார் - இவர்களை

2. வான மெட்டும் வண்ண மாளிகையில் - சிலர்
வானரம் வாழ்ந்திடும் கானகத்தில்
வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் - சிலர்
வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் - இவர்களை

3. பற்பல தேசத்தில் வாழுபவர் - பலர்
அற்புத அன்பினை அறியாரே
அத்தனை பேருமே அறிந்திடவே - தினம்
அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார் - இவர்களை

ENNAI MARAVA YESU NAATHA

என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்

சரணங்கள்

1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்!
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்லதீபமிதே --- என்னை

2. பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே , ஸ்தோத்திரம்!
பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவரு மென்னை --- என்னை

3. தாய் தன் சேயை மறந்துவிட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்!
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே --- என்னை

4. திக்கற்றோராய்க் கைவிடேனே
கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்!
நீர் அறியா தேதும் நேரிடா
என் தலைமுடியும் எண்ணினீரே --- என்னை

5. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே --- என்னை

6. உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
பறந்திடுமே உம் நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக்கொடியே --- என்னை

7. என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னை சேர்த்திடுமே --- என்னை

MALAIMAA NADHIYO MIGU AAL KADALO

மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ
மருள் சூழும் கானக வனமோ - எங்கும்
மீட்பர் சிலுவை சுமப்பேனே

சரணங்கள்

1. பள்ளம் மேடு தடை தாண்டியே
பசாசின் கண்ணிக்கு நீங்கியே
உள்ளார்வமுடன் விண் பார்வையுடன் - நான்
மெள்ள மெள்ள நடந்தே எனின்
மீட்பர் சிலுவை சுமப்பேனே --- மலைமா

2. இன்னல் துயர் பிணி வாதையில்
ஈனரெனைத் தாக்கும் வேளையில்
துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே - நான்
தூயன் பாதையில் ஊர்ந்தே அவர்
தூயச் சிலுவை சுமப்பேனே --- மலைமா

3. பூலோக மேன்மை நாடிடேன்
புவிமேவும் செல்வம் தேடிடேன்
சீலன் சிலுவை சிறியேன் மேன்மை - என்
ஜீவன் வழி மறை இயேசுவே - அவர்
ஜீவ சிலுவை சுமப்பேனே --- மலைமா

ULAGAM TARATHA ANBAI

உலகம் தராத அன்பை
தருவாய் இயேசு பாலா
பலம் இல்லை என்ற நெஞ்சில்
அருள் கூரும் தேவ பாலா

1. வானோர்கள் சேனை பாட
மேய்ப்பர்கள் தேடி சென்றார்
மாமன்னர் பொன்னும் தந்தார்
நான் என் செய்வேன் தேவ பாலா
என் உள்ளம் உன் சொந்தம் பாலா

2. கரைகாணா துன்ப வெள்ளம்
புரண்டோடும் வேளை வந்தீர்
திருக் கைகள் மீட்டி என்னை
உம் அருகில் அணைத்து கொண்டீர்
உம் அருகில் அணைத்து கொண்டீர்

MAARIDA EM MAA NESARE LYRICS

1. மாறிடா எம் மா நேசரே - ஆ
மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரி சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே - ஆ

ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதன் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணை ஏதும் வேறில்லையே

2. பாவியாக இருக்கையிலே - அன்பால்
பாரில் உன்னைத் தேடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே. --- ஆ! இயேசு

3. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் - தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே --- ஆ! இயேசு

4. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட - தூய
தேவனின் விண் சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க --- ஆ! இயேசு

5. நியாய விதி தினமதிலே - நீயும்
நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே --- ஆ! இயேசு

6. பயமதை நீக்கிடுமே - யாவும்
பாரினிலே சகித்திடுமே
அது விசுவாசம் நாடிடுமே
அன்பு ஒருக்காலும் ஒழியாதே --- ஆ! இயேசு


maaridaar em maa naesarae
aa maaraathavar anpennaalumae
kalvaari siluvai meethilae
kaanuthae im maa anpithae
aa Yesuvin makaa anpithae
athin aalam ariyalaakumae
itharkinnaiyaethum vaerillaiyae
paaviyaaka irukkaiyilae anpaay
paaril unnaiththaeti vanthaarae
neesan entunnaith thallaamalae
naesanaaka maattidavae
ullaththaal avarai thallinum
tham ullam pol naesiththathinaal
allal yaavum akattidavae
aathi thaevan paliyaanaarae
aaviyaal anpai pakarnthida
thooya thaevanin vinn saayal anniya
aaviyaalae anpaich sorinthaar
aavalaay avaraich santhikka
niyaayavithi thinamathilae
neeyum nilaiyaakum thairiyam peravae
pooranamaay anpu peruka
punnnniyarin anpu vallathae
payamathai neekkidumae
yaavum paarinil sakiththidumae
athu viduvaasam naadidumae
anpu orukkaalum oliyaathae

MEI BAKTHARE NEER VILITHELUMBUM

1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,
சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;
இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,
விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;
கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,
ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார்.

2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே
இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
பூலோக மீட்பராகப் பிறந்தார்,
எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
இராவில் தோன்றி மொழிந்திட்டானே.

3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,
ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்து
விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,
என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்.

4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
அற்புத காட்சி காண விரைந்து,
யோசேப்புடன் தாய் மரியாளையும்
முன்னணைமீது தெய்வ சேயையும்
கண்டே, தெய்வன்பை எண்ணிப் போற்றினார்,
ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்.

5. கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்;
தம்ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
அன்போடு தியானம் செய்து வருவோம்,
நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம்.

6. அப்போது வான சேனைபோல் நாமும்
சங்கீதம் பாடலாம் எக்காலமும்;
இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்
அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்;
நம் ராயன் அன்பால் ரட்சிப் படைந்தோம்;
அவரின் நித்திய துதி பாடுவோம்.

ULLAM YELLAM URUGUTHAYE LYRICS

1. உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மை யல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்றும் தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொள்ளடங்கா நேசத்தாலே உன்
சொந்தமாக்கிக் கொண்டீரே

2. எந்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் ஏசையா
எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமல்லோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் செய்வேன் உம் சேவையே

3. மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் தோன்றும் நாளொன்றோ
லோக மீதில் காத்திருப்போர்
ஏக்க மெல்லாம் தீர்ந்திட
தியாக ராஜன் ஏசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் என்றோ?

MEGANGAL NADUVE VALI PIRAKKUM

1.மேகங்கள் நடுவே வழி பிறக்கும்
பூதங்கள் கடந்து கடந்து வரும்
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் 

வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நான் இருப்பேன்
பரமன் இயேசுவின் புன்னகை முகம் - என்
கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும் 

2.நாற்றிசையினின்றும் கூடிடுவார்
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
தோத்திரக் கீதமே தொனித்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

3.கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
கர்த்தரின் வருகை நாளின்போது
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

4.திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகு சமீபம்
காலையோ மாலையோ நள்ளிரவோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

MOTCHA YAATHRRAI SELGIROM

1. மோட்ச யாத்திரை செல்கின்றோம் மேலோகவாசிகள் - இம்
மாய லோகம் தாண்டியே எம் வீடு தோன்றுதே
கடந்து செல்கின்றோம் கரையின் ஓரமே
காத்திருந்த ராஜ்ஜியம் கண்டடைவோம்

பல்லவி

ஆனந்தமே ஆ ஆனந்தமே
ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்
ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்

2. சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே - தம்
நித்திய இராஜ்ஜியம் மக்களை ஆயத்தமாக்கவே
தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே --- ஆனந்தமே

3. அள்ளித் தூவிடும்விதை சுமந்து செல்கின்றோம் தம்
அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார் --- ஆனந்தமே

4. கர்த்தர் எம் அடைக்கலம் கவலை இல்லையே - இக்
கட்டு துன்ப நேரமோ கலக்கமில்லையே
கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
கைவிடாமல் நித்தமும் நடத்துவார் --- ஆனந்தமே

YAARAI NAAN PUGALVEN, YAARAI NAAN ARIGIREN

1. யாரை நான் புகழுவேன், யாரை நான் அறிகிறேன்?
என் கதியும் பங்கும் யார், நான் பாராட்டும் மேன்மை யார்?
தெய்வ ஆட்டுக்குட்டிதான்.

2. யார் நான் நிற்கும் கன்மலை, யார் என் திட நம்பிக்கை?
குற்றத்தைச் சுமந்தோர் யார்? தெய்வ நேசம் தந்தோர் யார்?
தெய்வ ஆட்டுக்குட்டிதான்.

3. என்தன் பிராண பெலன் யார், ஆத்துமத்தின் சாரம் யார்?
யாரால் பாவி நீதிமான், யாரால் தெய்வ பிள்ளை நான்?
தெய்வ ஆட்டுக்குட்டியால்.

4. கஸ்தியில் சகாயர் யார், சாவின் சாவு ஆனோர் யார்?
என்னைத் தூதர் கூட்டத்தில், சேர்ப்போர் யார் நான் சாகையில்?
தெய்வ ஆட்டுக்குட்டிதான்.

5. இயேசுதான் என் ஞானமே, அவர் என் சங்கீதமே;
நீங்களும் புகழுங்கள், அவரைப் பின் செல்லுங்கள்,
தெய்வ ஆட்டுக்குட்டியை.

YUTHAM SEIVOR VAARUM KRISTHU VEERARE

1. யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!
வெற்றி வேந்தராக முன்னே போகிறார்!
ஜெயக் கொடி ஏற்றி போர் நடத்துவார்.
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!

2. கிறிஸ்து வீரர்கள், நீர் வெல்ல முயலும்;
பின்னிடாமல் நின்று ஆரவாரியும்!
சாத்தான் கூடம் அந்த தொனிக்கதிரும்!
நரகாஸ்திவாரம் அஞ்சி அசையும்!
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!

3. கிறிஸ்து சபை வல்ல சேனைபோன்றதாம்!
பக்தர் சென்ற பாதை செல்கின்றோமே நாம்;
கிறிஸ்து தாசர் யாரும் ஓர் சரீரமே;
விசுவாசம், அன்பு, நம்பிக்கை ஒன்றே!
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!

4. கிரீடம், ராஜ மேன்மை யாவும் சிதையும்,
கிறிஸ்து சபைதானே என்றும் நிலைக்கும்;
நரகத்தின் வாசல் ஜெயங்கொள்ளாதே
என்ற திவ்விய வாக்கு வீணாய்ப் போகாதே.
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!

5. பக்தரே, ஒன்றாக கூட்டம் கூடுமேன்;
எங்களோடு சேர்ந்து ஆர்ப்பரியுமேன்!
விண்ணோர் மண்ணோர் கூட்டம் இயேசு ராயர்க்கே
கீர்த்தி, புகழ், மேன்மை என்றும் பாடுமே.
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!

YUTHA RAAJASINGAM UYIRTHELUNTHARE

யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்

சரணங்கள்

1. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே, உருகி வாடிடவே --- யூத

2. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே, பரனைத் துதித்திடவே --- யூத

3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன, நொடியில் முறிபட்டன --- யூத

4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே
எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே --- யூத

5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார் --- யூத

6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை --- யூத

7. கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம் --- யூத

YESU NASARAYIN NADHIPATHIYE

யேசு நசரையி னதிபதியே, - பவ நரர்பினை யென வரும்.

தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ. --- யேசு

1. இந்த உலகு சுவை தந்து போராடுதே,
எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே;
தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே;
சாமி, பாவியகம் நோயினில் வாடுதே. --- யேசு

2. நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏது
நினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது;
தஞ்சம் உனை அடைந்தேன், தவற விடாது;
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும். --- யேசு

3. கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்;
கேடுபாடுகள் யாவையும் தீரும்;
பொறுமை, நம்பிக்கை, அன்பு போதவே தாரும்;
பொன்னு லோகமதில் என்னையே சேரும். --- யேசு

YESUVE KIRUBASANA PATHIYE, KETTA

யேசுவே, கிரு பாசனப்பதியே, கெட்ட
இழிஞன் எனை மீட்டருள்,
ஏசுவே, கிரு பாசனப்பதியே.

1. காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக்காதரவு
கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!
நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து
நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, --- யேசு

2. பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,
பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்;
தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட
தேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி, --- யேசு

3.சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்டஅதி
தீரமுள்ள எங்கள்உப கார வள்ளலே,
குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச் சதிக்கும்
குற்றங்கள் அறவே தீர்த்து, முற்றுமுடியக் கண் பார்த்து, --- யேசு

4. பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை,
புண்ணியனே, உன் சரணம் நண்ணி அண்டினேன்;
எல்லார்க்குள் எல்லாம்நீ அல்லோ எனக்குதவி?
இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து, --- யேசு

RATCHA PERUMANE PAARUM

1. ரட்சா பெருமானே, பாரும்,
புண்ணிய பாதம் அண்டினோம்
சுத்தமாக்கி சீரைத் தாரும்,
தேடிவந்து நிற்கிறோம்!
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்

2. மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்;
ஜீவ தண்ணீரண்டை என்றும்
இளைப்பாறச் செய்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்

3. நீதி பாதை தவறாமல்
நேசமாய் நடத்துவீர்;
மோசம் பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்

4. ஜீவ கால பரியந்தம்
மேய்த்தும் காத்தும் வருவீர்;
பின்பு மோட்ச பேரானந்தம்
தந்து வாழச் செய்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்

RAAKAALAM BETHALEM MEIPPERGAL

1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்

2. அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன் திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்

3. தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்

4. இதுங்கள் அடையாளமாம்
முன்னணைமீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்

5.என்றுரைத்தான் அக்ஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்

6. மா உன்னதத்தில் ஆண்டவா
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்

RAASA RAASA PITHA MAINTHA



ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!

ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக --- ராச

1. மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்தர
நேசமே பணியே, தந்திர மோசமே தணியே!
நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை --- ராச

2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த
வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே,
பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித --- ராச

3. மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே, தொன்மை
பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே
கிருபா கரா நரா! சருவேசுரா, பரா திரு --- ராச

4. வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே, மைந்தர்
கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே,
நரவேட மேவினான், சுரராடு கோவினான், பர --- ராச

RAASATHI RAASAN YESU , YESU MAGA RAASAN

ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்! - அவர்
ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்க
அவர் திருநாமமே விளங்க, - அவர் திருநாமமே விளங்க,
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலுயாவே!
அல்பா, ஒமேகா, அவர்க்கே அல்லேலுயாவே!

1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள்!

2. நாலாதேசத் திலுள்ளோரே, நடந்து வாருங்கள்,
மேலோனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்!

3. நல்மனதோடு சொல்கிறேன், நாட்டார்களே, நீங்கள்
புன்னகையொடு நிற்பானேன்? பூமுடி சூட்டுங்கள்!

4. இந்தநல் தேசத்தார்களே, ஏகமாய்க் கூடுங்கள்,
சிந்தையில் மகிழ்வடைந்தே செம்முடி சூட்டுங்கள்!

5. யேசுவென்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்,
ராசாதிராசன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்!

6. சகல கூட்டத்தார்களே, சாஷ்டாங்கம் செய்யுங்கள்,
மகத்வ ராசரிவரே, மாமுடி சூட்டுங்கள்!

RAAJAN THAVEETHURILULLA

1. ராஜன் தாவீதூரிலுள்ள
மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
கன்னி மாதா பாலன் தன்னை
முன்னணையில் வைத்தாரே
மாதா, மரியம்மாள் தான்
பாலன், இயேசு கிறிஸ்துதான்

2. வானம் விட்டுப் பூமி வந்தார்
மா கர்த்தாதி கர்த்தரே
அவர் வீடோமாட்டுக்கொட்டில்,
தொட்டிலோ முன்னணையே
ஏழையோடு ஏழையாய்
வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்

2. பாலனாய்க் கீழ்ப்படிந்தார்
பாலிய பருவம் எல்லாம் அன்பாய்
பெற்றோர்க்கு அடங்கினார்
அவர்போல் கீழ்ப்படிவோம்,
சாந்தத்தோடு நடப்போம்

4. பாலர்க்கேற்ற பாதை காட்ட
பாலனாக வளர்ந்தார்
பலவீன மாந்தன்போல
துன்பம் துக்கம் சகித்தார்
இன்ப துன்ப நாளிலும்
துணைசெய்வார் நமக்கும்

5. நம்மை மீட்ட நேசர் தம்மை
கண்ணால் கண்டு களிப்போம்
அவர் தாமே மோஷ லோக
நாதர் என்று அறிவோம்
பாலரை அன்பாகவே
தம்மிடத்தில் சேர்ப்பாரே

6. மாட்டுத் தொழுவத்திலல்ல
தெய்வ ஆசனத்திலும்
ஏழைக்கோலமாக அல்ல
ராஜ கிரீடம் சூடியும்
மீட்பர் வீற்றிருக்கின்றார்
பாலர் சூழ்ந்து போற்றுவர்

YENGUMULLOR YAARUM SERTHU STHOTHARIPPOME

எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே
இஸ்ரவேலின் கர்த்தருக்குத் துதி செலுத்துமே
யாக்கோபின் சந்ததியாரும் கூடி வாருமே
இயேசு எங்கள் கர்த்தர் என்று ஸ்தோத்தரிப்போமே

1. தேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமே
பரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமே
கடந்த கால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமே
ஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமே
கோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர்
செத்ததாகில் பலன் மிகுதி ஸ்தோத்தரிப்போமே --- எங்கு

2. நம்பிக்கை இழக்காவண்ணம் முன் நடப்போமே
இராஜாவின் கட்டளைக்குக் கனம் கொடுப்போமே
தேவ சமூகப் பழக்கம் உள்ளோர் பயம் கொள்ளமாட்டார்
கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார்
அவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக் கிட்டும்
நித்திய மகிழ்ச்சி அவரை மூடும் ஸ்தோத்தரிப்போமே --- எங்கு

3. அத்தி மரம் துளிர்விடாமல் போனபோதிலும்
திராட்சைச் செடியில் கனி காணாமல் கருகிப்போயினும்
ஒலிவ மரத்தின் பலன்கள் கூட அற்றுப்போயினும்
வயலில் மகசூல் இன்றி ஏக்கம் வந்தபோதிலும்
இம்மைக்காக அல்ல இயேசுநாதர் மேலே உள்ள பற்று
நம் இருப்பு பரலோகத்தில் ஸ்தோத்தரிப்போமே --- எங்கு

VANTHANAM VANTHANAME DEVA THUNDUMI KONDITHANE

வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! - இது
வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத் தந்தனம்.

1. சந்ததஞ்சசந்ததமே, எங்கள் தகுநன்றிக் கடையாளமே, - நாங்கள்
தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே.

2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே - எங்கள்
சாமி, பணிவாய் நேமி, துதிபுகழ் தந்தனமே நிதமே!

3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, சத்ய
சருவேசுரனே, கிருபாகரனே, உன் சருவத்துக்குந் துதியே.

4. உந்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் -
ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே.

5. மாறாப் பூரணனே, எல்லா வருடங்களிலும் எத்தனை - உன்றன்
வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே.

ANUTHINAMUM UNNIL; NAAN VALARTHIDAVE

அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே
உன் அனுக்கிரகம் தரவேண்டுமே
என்னால் ஒன்றும் கூடாதையா
எல்லாம் உம்மால் கூடும்

1. என் ஞானம் கல்வி செல்வங்கள் எல்லாம்
ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன்
என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை
என்றே உணர்ந்தேன் என் இயேசுவே --- அனுதினமும்

2. அழைத்தவரே உன்னில் பிழைத்திடவே
அவனியில் உமக்காய் உழைத்திடவே
அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்று
ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே --- அனுதினமும்

VARAVENUM ENATHARASE

வரவேணும் எனதரசே
மனுவேல், இஸ்ரேல் சிரசே
அருணோதயம் ஒளிர் பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா

1. வேதா கருணாகரா மெய்யான பராபரா
ஆதார நிராதரா அன்பான சகோதரா
தாதாவும் தாய் சகலமும் நீயே
நாதா, உன் தாபரம் நல்குவாயே --- வரவே

2. படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா
முடியாதருள் போசனா, முதன் மாமறை வாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய் --- வரவே

3. வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே
ஞானாகரமே, நடு நிலை யோவா
நண்பா, உனத நன்மையின் மகா தேவா! --- வரவே

VARAVENDUM DEVA AAVIYE

வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் மத்தியிலே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் உள்ளத்திலே

ஆட்கொள்ளும் ஐயா
அபிஷேகியும்
அனல் மூட்டி
எரிய விடும்

தூய ஆவியே அன்பின் ஆவியே
துணையாளரே தேற்றும் தெய்வமே
ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
வரவேண்டும் நல்லவரே வல்லவரே

VARUVAI THARUNAMITHUVE ALAIKIRARE

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

1. வாழ்நாளெல்லாம் வீண்நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக்கொள்வார்

2. கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவிட்டு உன் ஆவி போனால்
கூட உன்னோடு வருவதில்லை

3. அழகும் மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர் நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை

4. வானத்தின் கீழே பூமிமேலே
வானவர் இயேசு நாமம் அல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே

5. தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக் குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களால் நீ குணமடைய

VALLAMAI THEVAI DEVA

 

 வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா

பொழிந்திடும் வல்லமை
உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை
அக்கினியின் வல்லமை

1.மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்க தரிசனம் சொல்வாரே - பொழிந்திடும்

2. நித்திய காலம் வாசம் செய்யும்
சத்திய ஆவியைத் தாரும்
திக்கற்றோனாய் விட்டிடாமல்
தேற்றரவாளனாய் வந்திடும் - பொழிந்திடும்

3.மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையான ஆவியைத்தாரும்
பிதாவே என்று அழைக்க
புத்ர சுவிகாரம் ஈந்திடும் - பொழிந்திடும்

PONGI VALIYUM DEVA KIRUBAI

பொங்கி வழியும் தேவ கிருபை
மண்ணில் வந்தது
இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க
தன்னை ஈந்தது

1. கருவில் உதித்த தூய கனியே
கவலை தீர்க்கும் கண்ணின் மணியே
உளமெலாம் பூரிக்கும் தூய்மையே
உந்தன் வரவே --- பொங்கி

2. விழிகள் திறந்த விந்தை தெய்வம்
பழிகள் சுமந்து வந்த தெய்வம்
உலகெலாம் தொழுதிடும் உன்னதம்
உந்தன் நாமம் --- பொங்கி

VALIPOKKER YENGE POGIRIR

1. வழிப்போக்கர் எங்கே போறீர்?
கையிலே கோல் பிடித்தே?
பிரயாணம் போறோம் எங்கள்
ராஜாவின் சொற்படிக்கே
காடு மேடு ஓடை தாண்டி
எங்கள் ராஜன் நகர் நோக்கி
எங்கள் ராஜன் நகர் நோக்கி
போறோம் இன்ப நாட்டுக்கே

2. வழிப்போக்கர் யாது நாடி
போகிறீர் மேலோகத்தில்?
வெள்ளை அங்கி வாடா க்ரீடம்
பெறுவோம் அத்தேசத்தில்
ஜீவ ஆற்றில் தாகம் தீர்ப்போம்
தேவனோடென்றென்றும் வாழ்வோம்
தேவனோடென்றென்றும் வாழ்வோம்
இன்ப மோட்ச லோகத்தில்

3. வழிப்போக்கர் உங்களோடே
வரலாமா நாங்களும்?
வாரும்! வாரும்! கூடவாரும்
மனமுள்ளோர் யாவரும்
வல்ல மீட்பர் நம்மைக் காப்பார்
பின்பு வாழ்த்தி நம்மைச் சேர்ப்பார்
பின்பு வாழ்த்தி நம்மைச் சேர்ப்பார்
மோட்ச வாழ்வைத் தரவும்

VAA PAAVI MALAITHU NILLATHE VAA LYRICS

வா, பாவீ, மலைத்து நில்லாதே, வா

1. என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்
றெண்ணித் திகையாதே;
உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே,
உள்ளபடி வாவேன். --- வா

2. உன்றனுக்காகவே நானேயடி பட்டேன்,
உன் பாவத்தைச் சுமந்தேன்;
சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்
தீர்த்து விட்டேன், பாவி, வா. --- வா

3. கொடிய பாவத்தழலில் விழுந்து
குன்றிப் போனாயோ?
ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான்,
ஒன்றுக்கும் அஞ்சாதே, வா. --- வா

4. விலக யாதொரு கதியில்லாதவன்
உலகை நம்பலாமோ?
சிலுவை பாவிகளடைக்கலமல்லோ?
சீக்கிரம் ஓடி வாவேன். --- வா

5. என்னிடத்தில் வரும் பாவி யெவரையும்
இகழ்ந்து தள்ளேனே;
மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே,
வாராயோ, பாவி? --- வா

VAASALANDAI NINDRU AASAIYAI THATTUM

வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்
நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோ

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று உன்னை அழைக்கிறாரே

1. ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணி
ஆதரை மீதினில் அலைந்திடுவாயே
காணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர்
கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் --- வாசலண்டை

2. அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணி
தற்பரன் தயவை தள்ளிடலாமா?
நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்? --- வாசலண்டை

3. பாவத்தினால் சாப ரோகத்தால் தொய்ந்து
மாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்
பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின்
ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ? --- வாசலண்டை

4. மனம் மாறி மறுபடி பிறந்திடாயாகில்
மகிபரின் இராஜ்ஜியம் காணக் கூடுமோ
பிறந்தாலோ ஜலத்தாலும் ஆவியாலும் மெய்யாய்
பிரவேசிப்பாய் தேவ இராஜ்ஜியத்தில் --- வாசலண்டை

5. வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு
வாசலும் மேய்ப்பனும் நாதனும் இயேசு
இயேசுவல்லால் வேறு இரட்சிப்பு இல்லையே
இரட்சண்ய நாள் இன்றே வந்திடாயோ? --- வாசலண்டை

KOLGATHA METTINILE SINTHENEER UM THOOYA RATHAM

கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம்
பாவத்தின் சன்மானமான என் சாபத்தை
நீராக ஏற்றதெல்லாம் கொடு பாதகன் எனக்காக

வா என் கல்வாரி நாயகா உன் கிருபை பொழிந்திடவா
வா கருணையின் திருக்குமரா உன் அன்பால் அணைத்திடவா
அந்த அழகு தேவனே உமது சாயலை என்னிலும் உடுத்திடவா

என் பாவத்தால் தேவனே உம்மைத் துறந்தேன்
என் மீறுதலால் வீணாக கெட்டலைந்தேன் - 2
மாயை அதின் மயக்கத்தினால் வழிதப்பி சீரழிந்தேன்

என் துரோகமே வெளியே சொல்லி ஒப்புக்கொண்டேன்
மனந்திருந்தியே இயேசுவோடிணைத்துக்கொண்டேன் - 2
தெய்வத்தின் மன்னிப்பினால் நெடுநல் வாழ்வு பெற்றேன்

MAASILLATHA DEVA PUTHIRAN MADINARANAR JEYA JEYA

மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)
ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!
மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய!

1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)
ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன

2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)
வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்

3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)
தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய

VAAN PUGAL VALLA DEVANAIYE NITHAM

வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்
வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே
காத்திடும் கரகதின் வல்லமையை என்றும்
கனிவுடன் பாடியே போற்றிடுவோமே

1. யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம்
யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம்
யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர்
நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே --- வான்

2. பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து
இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன்
அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம்
கர்த்தன் தன் சேனைகொண்டு காத்திடுவாரே --- வான்

3. உக்கிரமாய் எரியும் அக்கினி நடுவில்
சுற்றி உலாவின நித்திய தேவன்
மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்
முற்றும் தம் தாசரைக் காத்திடுவாரே --- வான்

4. சிறைச்சாலைக் கதவுகள் அதிர்ந்து நொறுங்க
சீஷரை சிறை மீட்டார் சத்திய தேவன்
சத்துருவின் எண்ணங்கள் சிதறுண்டு மாள
சேனைகளின் கர்த்தர் காத்திடுவாரே --- வான்

5. அழைத்தனரே தம் மகிமைக்கென்றே எம்மை
தெரிந்தெடுத்தாரே தம் சாயலை அணிய
வழுவ விடாமலே காத்திடும் தேவன்
மாசற்றோராய் தம்முன் நிறுத்திடுவாரே --- வான்

6. மகத்துவ தேவன் வானில் ஆயத்தமாக
மகிமையாய் நிற்கிறார் சடுதியாய் இறங்க
மணவாளன் வரும்வேளை அறியலாகாதே
மணவாட்டி சபையே நீர் விழிப்புடனிருப்பீர் --- வான்

CHINNACHIRU SUDANE ENNARUM THAVAME

சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே
மன்னர் மன்னவனே உன்னதத் திருவே

1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டு
கூடுண்டு பறவைகட்கு
பாடுண்டு உமக்கு மனிதகுமாரனே
வீடுண்டோ உந்தனுக்கு

தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்க
காரணம் நீரானீரோ
கோர வெம்பகைகள் பாரச்சுமைகள்
தீர மருந்தானீரோ ஆ.. ஆ.. ஆ

2. சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்
முற்றிலும் நீரல்லவோ
குற்றம் துடைக்க பற்றினை நீக்க
உற்றவர் நீரல்லவோ

பாசமாய் வந்து காசினை மீட்ட
நேசமுள்ள ஏசுவே
நீச சிலுவை தொங்கப் பிறந்த
தாசரின் தாபரமே ஆ.. ஆ.. ஆ

VAARA VINAI VANTHALUM SORATHA MANAME

வாரா வினை வந்தாலும், சோராதே, மனமே;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.

சரணங்கள்

1. அலகை சதித்துன் மீது வலை வீசினாலும்,
அஞ்சாதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே. --- வாரா

2. உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
உறுதி விட்டயராதே, நெறி தவறாதே. --- வாரா

3. பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே. --- வாரா

4. தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே. --- வாரா

5. மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,
மருள விழாதே, நல் அருளை விடாதே. --- வாரா

6. வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
வானவனை முற்றும் தான் அடைவாயே! --- வாரா

ATHIMARAM POLETHANAI PERGAL VAALGINDRARGAL

அத்திமரம் போல் எத்தனை பேர்கள் வாழுகிறார்கள்?
தினம் அர்த்தமில்லாமல் கர்த்தர் இல்லாமல் வாழுகிறார்கள்?

1. பார்க்க பார்க்க அழகாய் இருந்தது அத்திமரம்
இயேசு ஆசையோடு க‌னியைத் தேடினார் ஏமாற்ற‌ம்
இப்ப‌டித்தானே ம‌னித‌ர்க‌ள், வாழும் வாழ்க்கை ப‌ல‌ வேஷ‌ம்

2. ஊருக்குள்ளே உத்த‌ம‌ர் போல் ந‌டிப்பார்க‌ள்
ஆனால் உண்மையிலே அத்தி ம‌ர‌ம் போல் இருப்பார்க‌ள்
பேசுவ‌தெல்லாம் வேத‌ங்க‌ள், போடுவ‌தெல்லாம் வேஷ‌ங்க‌ள்

3. ஊருக்கு எல்லாம் உபதேசங்கள் செய்தாலும்
வெறும் புகழுக்காக தான தர்மம் செய்தாலும்
அன்பு அதிலே இல்லையென்றால், வாழ்ந்து என்ன லாபம் தான்

4. ம‌னித‌னை ம‌ட்டும் ந‌ம்புவ‌தாலே ப‌ய‌னில்லை ஆனால்
இறைவ‌னை ம‌ட்டும் ந‌ம்பிடுவாய் துன்ப‌மில்லை
க‌வ‌லைக‌ள் எல்லாம் போக்கிடுவார், க‌ண்ணீர் எல்லாம் துடைத்திடுவார்

VAARUM IYYA POTHAGARE

1. வாரும் ஐயா, போதகரே,
வந்தெம்மிடம் தங்கியிரும்;
சேரும் ஐயா பந்தியினில்,
சிறியவராம் எங்களிடம்.

2. ஒளிமங்கி இருளாச்சே,
உத்தமனே, வாரும் ஐயா!
கழித்திரவு காத்திருப்போம்,
காதலனே, கருணை செய்வாய்.

3. நான் இருப்பேன், நடுவில் என்றார்,
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க,
தாமதமேன் தயை புரிய
தற்பரனே, நலம் தருவாய்.

4. உன்றன் மனை திருச்சபையை
உலகமெங்கும் வளர்த்திடுவாய்,
பந்தமறப் பரிகரித்தே
பாக்யம் அளித் தாண்டருள்வாய்.

AA VARUM NAAM ELLARUM KOODI

வாரும் நாம் எல்லோரும் கூடி,
மகிழ் கொண்டாடுவோம்; - சற்றும்
மாசிலா நம் யேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோம். ஆ!

சரணங்கள்

1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் - இந்தத்
தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் --- வாரும்

2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் - அங்கே
மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் --- வாரும்

3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் - பாரும்
நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் --- வாரும்

4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே - இந்த
மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் --- வாரும்

5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே - அவர்
பட்சம் வைத் துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார் --- வாரும்

VANTHALUME ENNALUME UB NAAMAME EN THAABAME

1. வந்தாளுமே எந்நாளுமே, உன் நாமமே என் தாபமே
இந்நேரமே கண்பாருமே

2. தேவாவியே வரந்தாரும், இப்பாவியின் பாவம் தீரும்
உம் ஜோதியின் ஒளிவீசும்

3. சத்துருக்கள் சதி செய்ய நித்தம் என்னை நெருக்குகிறார்
அத்தனே நீர் அடைக்கலம்

4. இப்பாரிலே நின்பேரையே தப்பாமலே யான் பாடியே
எப்போதுமே கொண்டாடுவேன்

5. என் மேசையா உன் ஆசையைக் கொண்டோசையாய் நான் பேசவே
நின்னாசி தா நந் நேசமாய்

6. நாதனுன்னை எந்நேரமும் ஓதும் ஏழைப் பாவியேனை
ஆதரித்தே ஆண்டருள்வாய்

VAARUM EMATHU VARUMAI NEEKA VAARUM

வாரும், எமது வறுமை நீக்க வாரும், தேவனே!
மழைதாரும், ஜீவனே.

1. பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே; வெகு
கெடும் நீண்டதே. --- வாரும்

2. நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்போச்சுதே; மிகக்
கஷ்டம் ஆச்சுதே. --- வாரும்

3. பச்சை மரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்போச்சுதே; மிகக்
கஷ்டம் ஆச்சுதே. --- வாரும்

4. தரணி யாவும் வெம்மையாலே ததும்புதே, ஐயா; நரர்
தயங்கிறோம் மெய்யாய். --- வாரும்

5. கருணையுள்ள நாதனே, இத் தருணம் வாருமே; எங்கள்
தயங்கல் தீருமே. --- வாரும்

VISUVAASATHAL NEETHIMAN PILAIPPAN

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்; - மெய்
விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.

1. நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்; - முழு
விஷமான பாவத்தினால் இறந்தோர். --- விசு

2. உய்யும் வகையறியோம்; பெலனேயில்லை; - நரர்
செய்யும் கிரியைகளில் நலனேயில்லை. --- விசு

3. பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்; - எச்
சாபம் அழிவினுக்கம் தகைமை யுற்றோம். --- விசு

4. தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும்; - அவர்
மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும். --- விசு

5. நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும்? - அவன்
பாதகம் பழிமரணம், யாவுமே போகும். --- விசு

6. தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான்; - தீய
பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான். --- விசு

VISUVAASIYIN KAADHIL PADA YESU VENDRA NAAMAM

விசுவாசியின் காதில்பட, யேசுவென்ற நாமம் விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்.

1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே;
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே. --- விசு

2. துயரையது நீக்கிக் காயமாற்றிக் குணப்படுத்தும்;
பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியே போகும். --- விசு

3. காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்,
மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கம். --- விசு

4. எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்,
எல்லா நாளும் மாறாச்செல்வம் யேசுவென்ற பெயரே. --- விசு

5. என்னாண்டவா, என் ஜீவனே, என் மார்க்கமே, முடிவே,
என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும், தேவே. --- விசு

ULAGIL VANTHAAR THEIVA SUTHAN

உலகில் வந்தார் தெய்வ சுதன்
வையம் போற்றும் வல்ல பரன்
அதிக் குளிரில் நடு இரவில்
உதித்தனரே மானிடனாய்

1. பெத்தலையில் மாடடையில்
புல்லணையில் அவதரித்தார்
வேதத்தின் சொல் நிறைவேறிட
தேவன் வந்தார் நம்மை மீட்டிடவே

2. வான சேனை கீதம் பாடி
வாழ்த்தினரே விண்ணவனை
உன்னதத்தில் மாமகிமை
மண்ணுலகில் சமாதானமே

VINNOREGAL POTTRUM AANDAVAA

1. விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா, உம் மேன்மை அற்புதம்;
பளிங்குபோலத் தோன்றுமே உம் கிருபாசனம்!

2. நித்தியானந்த தயாபரா, அல்பா ஒமேகாவே,
மா தூயர் போற்றும் ஆண்டவா ராஜாதி ராஜாவே!

3. உம் ஞானம் தூய்மை வல்லமை அளவிறந்ததே;
நீர் தூயர், தூயர்; உந்தனை துதித்தல் இன்பமே!

4. அன்பின் சொரூபி தேவரீர், நான் பாவியாயினும்,
என் நீச நெஞ்சைக் கேட்கிறீர் உம் சொந்தமாகவும்.

5. உம்மைப்போல் தயை மிகுந்த ஓர் தந்தையும் உண்டோ?
உம்மைப்போல் அன்பு நிறைந்த தாய்தானும் ஈண்டுண்டோ?

6. என் பாவமெல்லாம் மன்னித்தீர் சுத்தாங்கம் நல்கினீர்;
என் குற்றமெல்லாம் தாங்கினீர் அன்பின் பிரவாகம் நீர்!

7. மேலோக நித்திய பாக்கியத்தை நான் பெற்று வாழுவேன்;
உம் திவ்விய இன்ப முகத்தை கண்ணுற்றுப் பூரிப்பேன்.

VINAI SOOLA TINTHA IRAVINIL

வினை சூழா திந்த இரவினில் காத்தாள்,
விமலா, கிறிஸ்து நாதா.

அனுபல்லவி

கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர், பிர
காசனே, பவ நாசனே, ஸ்வாமி! --- வினை

சரணங்கள்

1. சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்;
செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்;
பொன்றா தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்;
பொல்லாப் பேயின் மோசம் நின்றெனைக் காத்தாய். --- வினை

2. சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே;
ஜோதி நட்சத்திரம் எழுந்தன வானே;
சேரும் விலங்கு பட்சி உறைபதி தானே
சென்றன; அடியேனும் பள்ளி கொள்வேனே. --- வினை

3. ஜீவன் தந்தெனை மீட்டோய் சிறியேன் உன் சொந்தம்;
ஜெகத் தின்பங்கள் விழைந்து சேர்தல் நிர்ப்பந்தம்;
பாவியேன் தொழுதேன் நின் பாதார விந்தம்;
பட்சம் வைத்தாள்வையேல், அதுவே ஆனந்தம். --- வினை

4. இன்றைப் பொழுதில் நான் செய் பாவங்கள் தீராய்;
இடர்கள் துன்பங்கள் நீங்க என்னைக் கை சேராய்;
உன்றன் அடிமைக் கென்றும் உவந்தருள் கூராய்;
உயிரை எடுப்பையேல், உன் முத்தி தாராய். --- வினை

VINTHAI KRISTHUESU RAASA

விந்தை கிறிஸ்தேசு ராசா!
உந்தஞ் சிலுவை என் மேன்மை

சுந்தரம் மிகும் இந்தப் பூவில் எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் --- விந்தை

1. திரண்ட செல்வம் , உயர்ந்த கல்வி ,
செல்வாக்குகள் மிக விருந்தாலும் ,
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமை யாவும் அற்பமே --- விந்தை

2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் , வற்றா ஜீவநதியாம்;
துங்க இரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்து மேன்மையாகினேன் --- விந்தை

3. சென்னி , விலா , கை கானின்று
சிந்துததோ! துயரோடன்பு;
மன்னா , இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன் --- விந்தை

4. இந்த விந்தை அன்புக் கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்;
எந்த அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் --- விந்தை

VILAINTHA PALANAI ARUPPARILLAI

விளைந்த பலனை அறுப்பாரில்லை
விளைவின் நற்பலன் வாடிடுதே
அறுவடை மிகுதி ஆளோ இல்லை
அந்தோ மனிதர் அழிகின்றாரே

1. அவர்போல் பேசிட நாவ இல்லை
அவர்போல் அலைந்திட கால்கள் இல்லை
எண்ணிலடங்கா மாந்தர் சப்தம்
உந்தன் செவியினில் தொனிக்கலையோ

2. ஆத்தும இரட்சண்யம் அடையாதவர்
ஆயிரம் ஆயிரம் அழிகிறாரே
திறப்பின் வாசலில் நிற்பவன் யார்
தினமும் அவர் குரல் கேட்கலையோ

3. ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்
ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்
விரைந்து சென்று சேவை செய்வாய்
விளைவின் பலனை அறுத்திடுவாய்

4. தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய்
உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய்
கர்த்தர் நாட்டின தோட்டத்திலே
கடைசி வரை நயும் கனி கொடுப்பாய்

VEDA PUTHAGAME VEDA PUTHAGAME

வேத புத்தகமே, வேத புத்தகமே,
வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே.

1. பேதைகளின் ஞானமே, - பெரிய திரவியமே,
பாதைக்கு நல்தீபமே, - பாக்யர் விரும்புந் தேனே! --- வேத

2. என்னை எனக்குக் காட்டி - என் நிலைமையை மாற்றிப்,
பொன்னுலகத்தைக் காட்டிப் - போகும் வழி சொல்வாயே. --- வேத

3. துன்பகாலம் ஆறுதல் - உன்னால்வரும் நிசமே
இன்பமாகுஞ் சாவென்றாய் - என்றும் நம்பின பேர்க்கே. --- வேத

4. பன்னிரு மாதங்களும் - பறித்துண்ணலாம் உன்கனி;
உன்னைத் தியானிப்பவர் - உயர்கதி சேர்ந்திடுவார். --- வேத