Wednesday, December 11, 2019

MAANIDA URUVIL AVADHARITHA

மானிட உருவில் அவதரித்த
மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே

ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த
அவனியிலே உனக்காய் உதித்தார்
அண்டி வருவாய் வேண்டி அடைவாய்
அண்ணலே ஆத்தும வினை நீக்குவார்

கூவி அழைப்பது தேவ சத்தம்
குருசில் வடிவது தூய ரத்தம்
பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு
பாக்கியம் நல்கிட அவரே வழி

இயேசுவின் நாமத்தில் வல்லமையே
இதை நாடுவோர்க்கு விடுதலையே
துன்ப கட்டுகள் காவல் சிறைகள்
இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா

அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்
அதிசயங்கள் அவர் காட்டிடுவார்
உண்மை நிறைந்த உள்ளம் திறந்து
உன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய்

கர்த்தர் உன்னை இனி கைவிடாரே
கடைசி வரை தளராதே நம்பு
என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர்
இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார்

MAARANUM MANAM MAARANUM

மாறணும் மனம் மாறணும்
மனம் இன்றே மாறணும்
அலை பாய்ந்திடும் மனம் மாறணும்
தடுமாறியே சிறையாகிடும்
மனம் இன்றே மாறணும்
அடியோடு மாறணும்
மனம் மனம் கல்மனம் மாறணும்
வக்கிர சிலைகளை ஓழிக்கணும்
ஆவியின் அலை புரண்டோடணும்
சத்திய வசனம் பதிக்கணும்
கனிந்த இதயம் காணணும்!

1. சத்திய ஒளிப் பார்வையில்
தன் நிலை உணரனும்
பரமனுக்கெதிராய் செய்த குற்றம்
ஒப்புக்கொள்ளணும் – 2
திருமகன் சிலுவை பிராயச்சித்தம்
சொந்தம் கொண்டாடனும்
பிதா வழங்கும் மன்னிப்பை
ஆரத் தழுவணும் – அவர்
அன்புக்குச் சரணாகணும்!

2. ஆவியின் தின ஊட்டத்திலே
தனிவேறாய் துலங்கணும்
ஜெப வசனப் பயிற்சியினால்
திருவார்ப்பாய் மாறணும் – 2
பூரண வெற்றிப்பாட்டாக
வாழ்வைத் தொடரணும்
கிறிஸ்துவின் தூய அடிச்சுவட்டில்
நித்தம் பின் செல்லணும்
புகழ் ஆராதனை செய்யணும்!

3. தேவ அன்பினில் அசைவின்றி
நிலை உறுதி காக்கணும்
சகமனிதருடன் நல்லுறவை
கட்டியெழுப்பணும் – 2
தூய ஆவியின் மெருகேற்றம்
இயேசுவைக் காட்டணும்
தேவன் அழைத்த பந்தயத்தின்
இலக்கை அடையணும்
என்றும் பரலோகம் பூரிக்கணும்!

MULLMUDI NOGUDHO DEVANAE

முள்முடி நோகுதோ தேவனே
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவையாவும் எனக்காக தேவனே
முழங்காலில் நிற்கிறேன் நாதனே

முள்முடி நோகுதோ
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவையாவும் எனக்காக
முழங்காலில் நிற்கிறேன் நாதனே

ஆணிகுத்திய கைகளில் நிற்கிறீர்
களைத்ததோ கைகளும் ஏசுவே
சாட்டையால் முதுகில் அடித்தார்
சாட்டையும் ராஜனை அடித்ததோ

தாகத்துக்கு காடியா தந்தனர்
தண்ணீரை படைத்தவர் நீரன்றோ
தண்ணீரும் கண்களில் கொட்டுதோ
துடைப்பவர் யாரங்கும் இல்லையோ

தோளினில் சிலுவையை சுமந்தீரோ
தோள்களும் தாங்குதோ அப்பனே
முட்களும் கால்களில் குத்துதோ
முட்களை படைத்தவர் நீரன்றோ

MULMUDI PAARAMO THEVANE

முள்முடி பாரமோ தேவனே
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவை யாவும் எனக்காக தேவனே
முழங்காலில் நிற்கிறேன் நாதரே

தோளிலே சிலுவையை சுமக்கிறீர்
தோள்களும் தாங்குதோ அப்பனே
முட்களும் கால்களில் குத்துதோ
முட்களைப் படைத்தவர் நீர் அன்றோ

கைகளில் ஆணியா குத்தினர்
களைக்குதோ கைகளும் இயேசுவே
சாட்டையால் முதுகினில் அடித்தனர்
சாட்டையும் ராஜனை அடித்ததோ

காடியா தாகத்துக்கு தந்தனர்
தண்ணீரைப் படைத்தவர் நீரன்றோ
கண்ணீரும் கண்களில் கொட்டுதோ
துடைப்பவர் யாருமே இல்லையோ

YEAR ENN KARIYAMAAI POVAN

யார் என் காரியமாய் போவான்?
யார் யாரோ வாழ்விலே
சிலுவையைக் கண்டீரோ
சிலுவைக்காய் பணி செய்ய வாரீரோ?

1. தேசங்கள் சந்திக்க தேவையை நிரப்ப
பாசம் கொண்டு பின்னே வருவோன் யார்?
என்னைப்போல் தன்னையும் நித்தமும் வெறுத்து
சிலுவையை எடுத்து வருவோன் யார்?

2. பாவம் உலகைப் பலமாக மூடுது
பக்தர் பலர்கூட சோர்புற்றார்
தீர்க்க தரிசனம் கூறியவர்கூட
பின் வாங்கி இந்நாளில் போய்விட்டார்

3. சீயோன் குமாரத்தி சிந்தையில் வைத்துக்கொள்
உன்னை அழைப்பது நானல்லோ
வானமும் பூமியும் அதிலுள்ள யாவையும்
அழகாய் அமைத்ததென் கரமல்லோ!

4. உலகைப் பகைத்து பாவத்தை வெறுத்து
பரிசுத்தப் போர் செய்யச் செல்வோன் யார்?
சிலுவையின் மேன்மைக்காய் சிறுமை அடைவோரை
ஆசீர்வதிப்பதென் கடன் அல்லோ?

YAAR YAAROE VAAZHVILAE

யார் என் காரியமாய் போவான்?

யார் யாரோ வாழ்விலே
சிலுவையைக் கண்டீரோ
சிலுவைக்காய் பணி செய்ய வாரீரோ?

1. தேசங்கள் சந்திக்க தேவையை நிரப்ப
பாசம் கொண்டு பின்னே வருவோன் யார்?
என்னைப்போல் தன்னையும் நித்தமும் வெறுத்து
சிலுவையை எடுத்து வருவோன் யார்?

2. பாவம் உலகைப் பலமாக மூடுது
பக்தர் பலர்கூட சோர்புற்றார்
தீர்க்க தரிசனம் கூறியவர்கூட
பின் வாங்கி இந்நாளில் போய்விட்டார்

3. சீயோன் குமாரத்தி சிந்தையில் வைத்துக்கொள்
உன்னை அழைப்பது நானல்லோ
வானமும் பூமியும் அதிலுள்ள யாவையும்
அழகாய் அமைத்ததென் கரமல்லோ!

4. உலகைப் பகைத்து பாவத்தை வெறுத்து
பரிசுத்தப் போர் செய்யச் செல்வோன் யார்?
சிலுவையின் மேன்மைக்காய் சிறுமை அடைவோரை
ஆசீர்வதிப்பதென் கடன் அல்லோ?

YEHOWA ROOVA EN NALLA MEIPPEN

யெஹோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்
தாழ்ச்சி எனக்கில்லையே
யெஹோவா ரூவா என் நல்ல ஆயன்
குறைவொன்றும் எனக்கில்லையே
ஆராதனை ஓ ஆராதனை ஓ ஆராதனை உமக்கே
ஆராதனை ஓ ஆராதனை துதி ஆராதனை உமக்கே

1. புல்லுள்ள இடங்களில் மேய்த்து சென்று என்னைப் போஷிக்கின்றீர்
அமர்ந்த தண்ணீரண்டை என்னை நடத்தி தாகம் தீர்க்கின்றீர்
உம் நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில்
நாள்தோறும் நடத்துகிறீர் – 2
ஆராதனை ஓ ஆராதனை ஓ ஆராதனை உமக்கே
ஆராதனை ஓ ஆராதனை துதி ஆராதனை உமக்கே

2. எதிரிகள் முன்னே எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்துகின்றீர்
பாத்திரம் நிரம்பிட எண்ணெயினாலே அபிஷேகம் செய்கின்றீர்
வாழ்நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும்
தொடர்ந்திட செய்திடுவீர் – 2
ஆராதனை ஓ ஆராதனை ஓ ஆராதனை உமக்கே
ஆராதனை ஓ ஆராதனை துதி ஆராதனை உமக்கே

3. கதறின நேரம் என்னவென்று கேட்க வந்தீர் என்னைக் காணும் எல் ரோயீயே
கூப்பிட்ட நேரம் உதவிட வந்தீர் என்னைத் தேற்றும் எபிநேசரே
தனிமையில் நடந்தேன் துணையாக வந்தீர்
யெஹோவா ஷம்மா நீரே – 2
நான் தனிமையில் நடந்தேன் என் துணையாக வந்தீர்
யெஹோவா அப்பா நீரே
ஆராதனை ஓ ஆராதனை ஓ ஆராதனை உமக்கே
ஆராதனை ஓ ஆராதனை துதி ஆராதனை உமக்கே

யெஹோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்
தாழ்ச்சி எனக்கில்லையே
யெஹோவா ரூவா என் நல்ல ஆயன்
குறைவொன்றும் எனக்கில்லையே
ஆராதனை ஓ ஆராதனை ஓ ஆராதனை உமக்கே
ஆராதனை ஓ ஆராதனை துதி ஆராதனை உமக்கே

RAJA UM PRASANNAM

ராஜா உம் பிரசன்னம் போதுமையா
எப்போதும் எனக்கு போதுமையா

பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம்

அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்

உலகமெல்லாம் மாயையையா
உம் அன்பொன்றே போதுமையா

இன்னும் உம்மை அறியணுமே
இன்னும் கிட்டி சேரணுமே

கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே

துதியினிலே வாழ்பவரே
துணையாளரே என் மணவாளரே

சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே

பெலப்படுத்தும் போதகரே
நிலை நிறுத்தும் நாயகரே

LAABAMAANA ANAITHAYUM

லாபமான அனைத்தையும் நஷ்டம் என்று எண்ணுகிறேன்
நீர் தான் என் ஆதாயமே
நான் பார்க்கும் யாவையுமே மாயை என்று அறிகின்றேன்
நீர் தான் என் சுதந்திரமே

அர்ப்பணிக்கிறேன் என்னை அர்ப்பணிக்கிறேன்
இன்று அர்ப்பணிக்கிறேன் இயேசுவே - உம் பாதத்தில் - 2

1) என்னைக் கொண்டு நீர் செய்ய நினைத்தது
ஒருநாளும் தடைபடாதய்யா - (2) - அர்ப்பணிக்கிறேன்

2) என்னை அழைத்தீர் தெரிந்து கொண்டீர்
உம் நாமம் மகிமைக்காக - (2) - அர்ப்பணிக்கிறேன்

3) உம் நாமத்தில் யுத்தம் செய்வேன்
உம்மாலே ஜெயம் எடுப்பேன் - (2) - அர்ப்பணிக்கிறேன்

VALUVAMAL ENNAI KAATHIDUM

வழுவாமல் என்னை காத்திடும்
அழகான தேவன் நீரே (2)

வானம் மேலே பூமியின் கீழே
அளந்து விட்டாலும்
உம் அன்பை அளக்க என்னால்
இன்றும் முடியவில்லையே (2)

அன்பே உம்மை ஆராதிப்பேன்
கிருபையை உம்மை ஆராதிப்பேன் (2)

1.தீமைகளெல்லாம்
நீர் நன்மையாய் மற்றினீர்
உந்தன் அன்பு சிறந்தது (2)
இடராமல் காத்து கொண்டீர்
கண் உறங்காமல் பாதுகாத்தீர் (2) - அன்பே

2.அக்கினியில் நடந்தேன்
நான் ஆறுகளை கடந்தேன்
உந்தன் அன்பு காத்ததே (2)
என்னோடு என்றும் இருந்தீர்
என் வாழ்வோடு என்றும் இருப்பீர் (2) - அன்பே