Wednesday, August 26, 2015

THUTHIPPOM ALLELUJAH PAADI

துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி
மகிமை தேவ மகிமை
தேவ தேவனுக்கே மகிமை
அல்லேலூயா

1. தேவன் நன்மை வந்தடையச் செய்தார்
தம்மை யென்றும் அதற்காகத் தந்தார்
அற்புதங்கள் செய்யும் சர்வவல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார் --- துதிப்போம்

2. அஞ்சிடேனே இருளிலே என்றும்
நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன் --- துதிப்போம்

3. தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒருபோதும் பொல்லாப்பு வராதே
சர்வ வல்ல தேவன் தாபரமாக நின்றே
விடுவித்துக் காத்திடுவார் --- துதிப்போம்

4. கூப்பிடும் வேளைகளிலே என்னை
தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்
சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
சர்ப்பங்களை மிதித்திடுவேன் --- துதிப்போம்

5. பாதம் கல்லில் என்றும் இடறாமல்
கரங்களில் தாங்கிடுவார் தூதர்
ஒருபோதும் வாதை என் கூடாரத்தை
அணுகாமலே காத்திடுவார் --- துதிப்போம்

THOOYATHI THOOYAVARE UMADHU PUGALAI

தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன்

அனுபல்லவி

பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் --- தூயாதி

சரணங்கள்

1. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே! --- பாரில்

2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே! --- பாரில்

3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே! --- பாரில்

4. பரலோகில் இடமுன்று என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே! --- பாரில்

THOOYA THOOYA THOOYAA SARVAVALLA NAADHA

1. தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!
தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே!

2. தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்று
தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே,
கேருபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப்பெற்று,
இன்றென்றும் வீற்றாள்வீர், அநாதியே!

3. தூய, தூய, தூயா! ஜோதி பிரகாசா,
பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர்?
நீரே தூய தூயர், மனோவாக்குக் கெட்டா
மாட்சிமை, தூய்மை, அன்பும் நிறைந்தோர்,

4. தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!
வானம் பூமி ஆழி உம்மை ஸ்தோத்திரிக்குமே,
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே!

MEGA MEETHINIL VEGAMUDAN

மேக மீதினில் வேகமுடன்
மேசியா ஏசுவே வந்திடுவார்

1. மின்னலைப் போன்ற பேரொளியில்
மத்திய வானில் தோன்றிடுவார்
எண்ணிலடங்கா பக்தர்களும்
விண் தூதசேனை சூழ்ந்திடவே

2. யூதர்கள் கூடி சேர்ந்தனரே
வேதமும் நிறை வேறிடுதே
இவ்வடையாளம் நோக்கிடுவோம்
இயேசுவின் நாளை சந்திக்கவே

3. தாமதம் ஏனோ தம் வருகை
தீவிரம் வந்தால் நம் நிலைமை
கானக சத்தம் கேட்டிடுமோ
கர்த்தரைக் காண ஆயத்தமா

4. காலம் இனியும் சென்றிடாதே
காலையோ மாலை இராவினிலோ
நாம் நினையாத நேரத்திலே
நம்மையும் கர்த்தர் தாம் அழைப்பார்

5. இந்த கடைசி காலத்திலே
இப்புவி இன்பம் தள்ளிடுவோம்
பாரங்கள் யாவும் நீக்கிடுவோம்
பேரின்ப இராஜ்யம் சேர்ந்திடுவோம்

6. கண் விழிப்போடு நாம் ஜெபிப்போம்
கர்த்தருக்காகக் காத்திருப்போம்
ஆனந்தமான நாள் நெருங்க
ஆர்ப்பரிப்போடு சென்றிடுவோம்

THOOIMAI PERA NAADU KARTHAR PATHAME

1. தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமே
நிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே;
கூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய்,
யாவிலுமே தெய்வ தயை நாடுவாய்.

2. தூய்மை பெற நாடு; லோகத்தில் கோஷ்டத்தில்
தனித்திரு நாளும் அவர் பாதத்தில்
யேசுவைப் போலாவாய், நோக்கின் அவரை
பார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை.

3. தூய்மை பெற நாடு; கர்த்தர் நடத்த,
என்ன நேரிட்டாலும், அவர்பின் செல்ல;
இன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரை,
நோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை.

4. தூய்மை பெற நாடு; ஆத்மா அமர்ந்து,
சிந்தை செய்கை யாவும் அவர்க்குட்பட்டு,
அன்பின் ஜீவ ஊற்றைச் சேர்ந்து ருசிக்க,
முற்றும் தூய்மையாவாய் விண்ணில் வசிக்க.

DEIVANBIN VELLAME THIRUVARUL

1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,
மெய் மனதானந்தமே!
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
ஐயா, நின் அடி பணிந்தேன்

2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோ யான்?
புந்திக்கமலமாம் பூமாலை கோத்து நின்
பொற்பதம் பிடித்துக் கொள்வேன்

3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றித்
தேவே தவறிடினும்,
கூவி விளித்துந் தன் மார்போடணைத் தன்பாய்
யாவும் பொறுத்த நாதா!

4. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
மேற்கொள்ளும் நாச ஏக்கம்
தாக்கித் தடுமாறித் தயங்கிடும் வேளையில்
தூக்கித் தற்காத்தருள்வாய்

5. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
பூசைப் பீடம் படைப்பேன்
மோச வழிதனை முற்று மகற்றியென்
நேசனே நினைத் தொழுவேன்

6. மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ,
மகிமையோ, வருங்காலமோ,
பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ,

THEN INIMAIYILUM YESUVIN NAAMAM

தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே - அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே

சரணங்கள்

1. காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே - பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுனர் நீ மனமே --- தேன்

2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் - பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி மனமே --- தேன்

3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும்
உபாயமாய் நீங்கிவிடும் - என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ, மனமே --- தேன்

4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் - நீயும்
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே --- தேன்

5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்று நாமம் - அதைப்
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே --- தேன்

DEVA KIRUBAI AASIRVAATHAM

தேவ கிருபை ஆசீர்வாதம்
தினமும் எங்களில் பெருகிட

சரணங்கள்

1. ஆவலாயும தோய்வு நாளில்
ஆலயந்தனில் பணிந்து புகழ
பாவ அறிக்கை செய்யும் ஜனங்கள்
பரனின் கிருபை பெற்று மகிழ --- தேவ

2. ஆவலாய் எங்கள் ஆண் குழந்தைகள்
அழகான இள மரங்கள் போலவும்
பாவையர்களாம் பெண் குழந்தைகள்
பலத்த சித்திர அரண்கள் போலவும் --- தேவ

3. எங்கள் பண்டக சாலை சகல
இன்ப வஸ்துக்கள் நிறைந்திருக்கவும்
பங்க வலசை பகலின் கூக்குரல்
பதியில் என்று மில்லாதிருக்கவும் --- தேவ

4. எங்கள் மாடுகள் பலத்திருக்கவும்
இடுக்கணுள்ளே வராதிருக்கவும்
எங்கள் ஆடுகள் கிராமங்களிலே
லட்சங் கோடியாய்ப் பெருகி வரவும் --- தேவ

5. ஆலயந்தனில் உமது வசனம்
அறிவிக்கும் போதக ரனைவருக்குள்ளும்
வேலை ஓய்ந்து பணியும் சபையார்
விரும்பிப் படிக்கும் சகலருக்குள்ளும் --- தேவ

6. இத்தன்மையுடன் இருக்கும் ஜனங்கள்
இவர்கள் தாமென உலகம் சொல்லவும்
கர்த்தர் தெய்வமென் றிருக்கும் பாக்கியம்
கண்ட ஜனமென் றெம்மைச் சொல்லவும் --- தேவ

7. உன்னதங்களின் இருக்கும் தெய்வத்தின்
உயர்ந்த நாமம் மகிமைப்படவும்
இந்நிலம் சமாதானம் பெற்றிட
இஷ்டம் மானிடர் மேலுண்டாகவும் --- தேவ

8. இந்த வீட்டுக்குச் சமாதானம்
இன்ப சுகங்கள் அனைத்துண்டாகவும்
சந்ததியாய் நீடூழி வாழவும்
சபை யனைவரும் துதித்திப் பாடவும் --- தேவ

PONNANA NERAM VEN PANI THOOVUM NERAM

பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்
தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்

1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக
பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க
பிறந்து வந்தார்
உலகை ஜெயிக்க வந்தார்
அல்லேலுயா பாடுவோம்
மீட்பரை வாழ்த்துவோம்

2. உண்மையின் ஊழியம் செய்திடவே
வானவர் இயேசு பூவில் வந்தார்
வல்லவர் வருகிறார்
நம் மீட்பர் வருகிறார்

3. வானமும் பூமியும் அண்டமும் படைத்து
வேதத்தின் ஓளியை பரப்பினாரே
இருளை அகற்றுவார்
நம்மை இரட்சித்து நடத்துவார்

MAGILTHU KALI KOORUNGAL

மகிழ்ந்து களிகூறுங்கள் - 2
இயேசு இராஜன் பிறந்ததினால்
மகிழ்ந்து களிகூறுங்கள்

1. விண்ணுலகம் துறந்து மண்ணுலகம் உதித்து
தம்மைத் தாமே வெறுத்து அவர் நம்மை மீட்க வந்தார்

2. பாவமறியா அவரே ஜீவன் தந்திடவே
நித்திய வாழ்வு நமக்களிக்க இயேசு இராஜன் பிறந்தார்

3. வாழ்ந்து காட்டிய வழியை மகிழ்ந்து பின்பற்றியே
வேறுபலரை அவர் மந்தையில் இணைத்து பலன் அடைவோம்

PAARA SILUVAIYINAI THOLIL SUMAKKUM ANTHA

பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும் அந்தப்
பாதம் என் தெய்வம் அல்லவோ!
தாகமாய் இருக்கிறேன் என்று சொல்லும் அவர்
ஞாபகம் நான் அல்லவோ!
அவர் ஞாபகம் நான் அல்லவோ!

1. ஈராறு சீடருடன் வாழ்ந்த அவருக்கு
இருபக்கம் கள்வர் அல்லவோ!
பாவம் அறியா அவர் பாதத்தில்
பணிந்திடும் பாக்கியம் தந்தாரல்லோ!
சுப பாக்கியம் தந்தாரல்லோ!

2. கண்களில் கண்ணீரால் பார்வையில் ஒளி மங்க
பார்த்திபன் சாவதன்றோ!
தன்னலமாகச் சென்ற பாதகன்
எனை வெல்லப் பொற்பாதம் ஆணி அல்லோ
அவர் பொற்பாதம் ஆணி அல்லோ!

3. கல்வாரி மலையினில் நின்றிடும் சிலுவையே
மாபாவி நானும் வந்தேன்!
தொங்கிடும் என் தெய்வம்
தங்கிட என் உள்ளம் தந்திட இதோ வந்தேன்!
நேசர் தங்கிட இதோ வந்தேன்!

DEVA IRAKKAM ILLAYO YESU DEVA LYRICS

தேவா, இரக்கம் இல்லையோ? - இயேசு
தேவா, இரக்கம் இல்லையோ?

அனுபல்லவி

ஜீவா, பரப்ரமஏ கோவா, திரித்துவத்தின்
மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் , ஒரே --- தேவா

சரணங்கள்

1. எல்லாம் அறிந்த பொருளே - எங்கள்
இல்லாமை நீக்கும் அருளே - கொடும்
பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்
கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதர்! --- தேவா

2. எங்கும் நிறைந்த ஜோதியே - ஏழைப்
பங்கில் உறைந்த நீதியே - எங்கள்
சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்
துங்க இசரவேலின் வங்கிஷ க்ரீடாபதி ! --- தேவா

3. வேதாந்த வேத முடிவே - ஜெக
ஆதாரம் ஆன வடிவே - ஐயா,
தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே - யேசு
நாதா, ரட்சியும், வேறே ஆதாரம் எமக்கில்லை --- தேவா

DEVA SENAI VAANAMEETHU KODI KODIYAGA THONDRUM

1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்
பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும்
விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்

அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 )

2. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்
இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும்
தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்

அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 )

3. கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம்
போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை
வாக்குமாறா வேதம் கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும்
நானோ ஆடி மிகப்பாடி என்நேசருடன் சேர்வேன்

அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 )

DEVANE NAAN UMATHANDAIYIL

தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.

அனுபல்லவி

மாவலிய கோரமாக வன்சிலுவை மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் --- தேவனே

சரணங்கள்

1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட,
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! --- தேவனே

2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத்தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் --- தேவனே

3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் --- தேவனே

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்,
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் --- தேவனே

DEVANAI THUTHIPPATHUM KEERTHANAM

தேவனைத் துதிப்பதும்
கீர்த்தனம் பண்ணுகிறதும் - நல்லது

சரணங்கள்

1. எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார்
துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் --- தேவனை

2. இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார்
நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் --- தேவனை

3. நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார்
பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார் --- தேவனை

4. ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர்
அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் --- தேவனை

5. சாந்தகுண முள்ளோர்களை வேந்தன் உயர்த்துகிறார்
மாந்தரில் துன்மார்க்கரை அகாந்தமாய்த் தாழ்த்துகிறார் --- தேவனை

THOLUGIROM ENGAL PITHAVE

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

அனுபல்லவி

பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

சரணங்கள்

1. வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர்
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம் சரணம் --- தொழுகிறோம்

2. தலை தங்க மயமானவர்
தலை மயிர் சுருள் சுருளானவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவர்
பதினாயிரமாம் சரணம் சரணம் --- தொழுகிறோம்

3. கண்கள் புறாக்கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல
சின்னங்கள் சிறந்ததாலே
எண்ணில்லாத சரணம் சரணம் --- தொழுகிறோம்

4. கரங்கள் பொன் வளையல்கள் போல
நிறங்களும் தந்தத்தைப் போல
கால்களும் கல் தூண்கள் போல
காண்பதாலே சரணம் சரணம் --- தொழுகிறோம்

5. சமஸ்த சபையின் சிரசே
நமஸ்காரம் எங்கள் அரசே
பிரதானம் எம் மூலைக்கல்லே
ஏராளமாய் சரணம் சரணம் --- தொழுகிறோம்

6. அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம்
கூடி வந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம் --- தொழுகிறோம்

7. பார்த்திபனே கன தோத்திரம்
கீர்த்தனம் மங்களம் நித்தியம்
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென் --- தொழுகிறோம்

THOTHIRA PAATHIRANE DEVA

தோத்திர பாத்திரனே, தேவா,
தோத்திரந் துதியுமக்கே!
நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்
நித்தியம் துதியுமக்கே!

சரணங்கள்

1. சத்துரு பயங்களின்றி - நல்ல
நித்திரை செய்ய எமை
பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே
சுற்றிலுங் கோட்டையானாய் --- தோத்திர

2. விடிந்திருள் ஏகும்வரை - கண்ணின்
விழிகளை மூடாமல்,
துடி கொள் தாய்போல் படிமிசை எமது
துணை எனக் காத்தவனே --- தோத்திர

3. காரிருள் அகன்றிடவே - நல்ல
கதிரொளி திகழ்ந்திடவே,
பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன
பாங்கு சீராக்கி வைத்தாய் --- தோத்திர

4. இன்றைத் தினமிதிலும் - தொழில்
எந்தெந்த வகைகளிலும்
உன் திறுமறைப்படி ஒழுகிட எமக்கருள்
ஊன்றியே காத்துக் கொள்வாய் --- தோத்திர

THOTHIRAM YESU NAATHA

1. தோத்திரம் இயேசுநாதா
உமக்கென்றும் தோத்திரம் இயேசுநாதா
தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில் !

2. வான தூதர் சேனைகள்
மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடி துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு !

3. இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம் !

4. நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவ புது வழியாம்
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம் !

5. இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக் கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே !

6. நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே !

THOTHIRAM SEIVENE RATCHAGANAI

தோத்திரம் செய்வேனே - ரட்சகனைத்
தோத்திரம் செய்வேனே

அனுபல்லவி

பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
பார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் --- தோத்திரம்

சரணங்கள்

1. அன்னை மரி சுதனை - புல்மீது
அமிழ்துக் கழுதவனை,
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை --- தோத்திரம்

2. கந்தை பொதிந்தவனை - வானோர்களும்
வந்தடி பணிபவனை,
மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,
வான பரன் என்னும் ஞான குணவானை --- தோத்திரம்

3. செம்பொன் னுருவானைத் - தேசிகர்கள்
தேடும் குருவானை,
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி --- தோத்திரம்

THOTHIRAM THUTHI PATHIRA UMMAI

தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்

அனுபல்லவி

காத்தீரே என்னைக் கருத்தாக
வழுவாமல் என்னை உமக்காக
எடுத்தீர் எனையும் உமக்காக
கொடுத்தீர் உமையும் எனக்காக --- தோத்திரம்

சரணங்கள்

1. வல்ல வான ஞான விநோதா
துதியே துதியே துதித்திடுவேன்
எல்லாக் குறையும் தீர்த்தீரே
தொல்லை யாவும் தொலைத்தீரே
அல்லல் யாவும் அறுத்தீரே
அலையும் எனையும் மீட்டீரே --- தோத்திரம்

2. நம்பினோரைக் காக்கும் தேவா
துதியே துதியே துதித்திடுவேன்
அம்புவியாவும் படைத்தீரே
அம்பரா உந்தன் வாக்காலே
எம்பரா எல்லாம் ஈந்தீரே
நம்பினோர்க் குந்தன் தயவாலே --- தோத்திரம்

3. கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
அண்ணலே உந்தன் அருளாலே
அடியாரைக் கண் பார்த்தீரே
மன்னா எமக்கும் நீர் தாமே
எந்நாளும் எங்கள் துணை நீரே --- தோத்திரம்

4. தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
தேவா நீர் உந்தன் சிறகாலே
தினமும் மூடிக் காத்தீரே
தீதணு காதும் மறைவினிலே
தேடியுமதடி தங்கிடுவேன் --- தோத்திரம்

5. அல்லேலூயா தோத்திரமே
துதியே துதியே துதித்திடுவேன்
அகில சிருஷ்டிகளும் துதிக்க
அடிமை துதியா திருப்பேனோ ?
அல்லும் பகலும் நித்தியமாய்
அன்பே உமையும் துதித்திடுவேன் --- தோத்திரம்