Tuesday, April 15, 2025

Theiveega Koodaramae தெய்வீகக் கூடாரமே

 தெய்வீகக் கூடாரமே – என்

தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே
மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே

கல்வாரி திருப்பீடமே
கறை போக்கும் திரு இரத்தமே
உயிருள்ள பரிசுத்த ஜீவப் பலியாக
ஒப்புக் கொடுத்தோம் ஐயா

ஈசோப்புல்லால் கழுவும்
இன்றே சுத்தமாவோம்
உறைகின்ற பனி போல
வெண்மையாவோம் ஐயா
உம்திரு வார்த்தையினால்

அப்பா உன் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா
எப்போதும் உம் திருப்பாதம் அமாந்திட
ஏங்கித் தவிக்கின்றோம்

உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரியவிடும்

தூபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்
எந்தாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்

ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா
மகா பரிசுத்த கூடரத்திற்குள்ளே
மகிமையில் றுழைந்து விட்டோம்

Thetratavaalan Yesuvae தேற்றரவாளன் இயேசுவே

 தேற்றரவாளன் இயேசுவே என்னைத் தேடி

வந்த அன்பு தெய்வமே
தாயைப்போல தேற்றுகிறீர் தந்தைப்போல்
தோளில் சுமக்கின்றீர்

வனாந்தரமான வாழ்க்கையிலே
வழியின்றித் தவிக்கும் நேரத்திலே
பகைவர்கள் சூழ்ந்திடும் நேரத்திலே
கடலினில் தரை வழி தந்தவர் நீர்
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா

இருண்ட வாழ்க்கைப் பாதையிலே
இன்னல்கள் சூழ்ந்த நேரத்திலே
இரவிலும் பகலிலும் நீர் எனக்கு
அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்
நன்றி ஐயா, உமக்கு நன்றி ஐயா

மனுஷரின் வார்த்தைகள் மாராவாகி
மனதினில் துயரங்கள் சூழ்கையிலே
மாராவின் கசப்பை மதுரமாக்கி
மகிமையின் வார்த்தையால் மகிழ்ச்சி தந்தீர்

Theva Janamae Paadi தேவ ஜனமே பாடித்துதிப்போம்

 தேவ ஜனமே பாடித்துதிப்போம்

தேவ தேவனை போற்றுவோம்
துதிகள் என்றும் ஏற்றியே
அவரைப் பணிந்திடுவோம்

சென்ற நாளில் கண்ணின் மணிபோல
காத்த தேவனை துதித்திடுவோம்
நீதி தயவு கிருபை நல்கும்
ஜீவ தேவனைத் துதித்திடுவோம்

வானம் பூமி ஆளும் தேவன்
வாக்கை என்றுமே காத்திடுவார்
அவரின் உண்மை என்றும் நிலைக்கும்
மகிமை தேவனைத் துதித்திடுவோம்

கர்த்தர் நாமம் ஓங்கிப் படர
தேவ மகிமை விளங்கிடவே
தேவ சுதராய் சேவை செய்து
தேவ ராஜனை வாழ்த்திடுவோம்

தம்மை நோக்கி வேண்டும் போது
தாங்கி என்றுமே ஆதரிப்பார்
மறந்திடாமல் உறங்கிடாமல்
நினைத்த தேவனை துதித்திடுவோம்

Theva Ummai Naan Nambuven தேவா உம்மை நான் நம்புவேன்

 தேவா உம்மை நான் நம்புவேன்

அதிகாலை தேடினேன்
தேவனே இவ்வேளையில்
நீங்கா உமது கிருபை பொழியும்

காலை தோறுமே உந்தன் கிருபை புதியதே
தேவனே உம் சாயலால் திருப்தியாக்கிடும்

காலை விழிப்பினால் உந்தன்
நேச மொழியதை – கேட்டுமே
இந்நாளெல்லாம் மகிழச் செய்யுமே

கடந்த இராவினில் எம்மைக் காத்தா இயேசுவே
படைக்கிறேன் இக்காலையில் கிருபை தாருமே

தாகம் தீர்த்திடும் நல்ல ஜீவ தண்ணீரே
உந்தன் பாதம் அமர்ந்துமே
தியானம் செய்குவேன்

மீட்பர் இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே
நாளெல்லாம் உம் பாதையில் செல்ல நடத்துமே

Thevanai Uyarthi Thuthiyungal தேவனை உயர்த்தித் துதியுங்கள்

 தேவனை உயர்த்தித் துதியுங்கள்

அவர் நாமத்தைப் போற்றியே
தேவனை உயர்த்தி துதியுங்கள்
தேவனின் செயல் அதிசயமென்று
அதிசயமென்று சொல்லி – நம்

கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும்
திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார்
படும் பலவந்தர் ஆரவாரம் என்றும்
ஆரவாரம் என்றுமே

இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார்
இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம்
இவர் பகைவரை வென்று கீழ்ப்படுத்தி
வென்று கீழ்படுத்தினார்

கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட
உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள்
பக்தருக்கென்று பலத்த நகரம்
பலத்த நகரம் உண்டு

அன்னியர் ஆள்வதில்லை இந்நிலம்
தன்னில் நம்மை மன்னாதி
மன்னனே நம் மகிபனாயிருப்பார்
மன்னரும் தேவ சமாதானம் தங்கும்
சமாதானம் தங்கிடுமே

புனிதராய் மரித்தோர் பூரித்தெழும்பிடுவார்
பனிபோல் கிருபையை
பக்தரின் மேல் பொழிவார்
இனி உலகத்தில் இன்னல் பெருகிடும்
இன்னல் பெருகிடும்

சிறந்த விருந்தொன்று சீயோன் மலையின் மீது
அருந்த யாவர்க்கும் ஆயத்தமாக்குவார்
நிந்தையை நீக்கிக் கண்ணீரைத் துடைத்துக்
கண்ணீரைத் துடைத்திடுவார்

Thevanaal Koodathathondrumillaye தேவனால் கூடாதுதொன்றுமில்லையே

 தேவனால் கூடாதுதொன்றுமில்லையே – என்

இயேசுவால் ஆகாததில்லையே – நம்
கர்த்தர் நல்லவர் நம் தேவன் வல்லவர் – நம்
இயேசு பெரியவர் அவர் மிகவும் உயர்ந்தவர்
வல்லமையுடையவர் என்று மகிமை நிறைந்தவர்
தேவனால் கூடாதுதொன்றுமில்லையே
இயேசுவால் ஆகாததில்லையே

வற்றாத செங்கடலைப் பிளந்தவர் அவரே தம்
ஜனத்தைக் காக்க கடலில் வழி திறந்தவர் அவரே
வாழ வழி இல்லாதோரின் வறுமை நீக்கும் தெய்வமாம்
இல்லை என்று ஏங்குவோர்க்கு அள்ளித்தரும் வள்ளலாம்

விழியிழந்த குருடருக்கும் பார்வையை தந்தார் – பாவ
இருளினிலே இருப்பவர்க்கும் ஒளியினை தந்தார்
வியாதியில் வாடுவோர்க்கு விடுதலை தரும் தெய்வமாம்
வெற்றிவேந்தன் இயேசுவாலே கூடாதது இல்லையாம்

உலர்ந்து போன எலும்புகளில் உயிர்வரச் செய்தார் – பாவ
உணர்வு இன்றி கிடப்பவரை உயிர்பெறச் செய்தார்
பரிசுத்த ஆவியினால் பெலப்படுத்தும் தேவனாம்
பக்தர்களின் பாதையில் தினம் அற்புதம் செய்யும் தேவனாம்

Thirappil Um Mugam திறப்பில் உம்முகம் நிற்கவும்

 திறப்பில் உம்முகம் நிற்கவும்

சுவரை அடைக்க நான் சம்மதம்
அழைக்கும் எஜமானர் சந்நிதி
அடிபணிந்தேன் நான் அர்ப்பணம்

ஜெபமே ஜெயம் ஜெபமே
ஜெயம் அல்லேலூயா

ஒலிவமலையில் கேட்ட ஓலம்
இதயம் நொறுங்கும் ஆத்மதாகம்
இயேசுவை மாதிரியாக்கிடும்
ஜெபத்தை அனுபவமாக்கிடும்
ஜெபவரம் நீர் தந்திடும்

என் சொந்த ஜனத்தின் பாவத்தை
நெஞ்சில் ஏற்று நான் கெஞ்சவும்
தலைவன் மோசே நெகேமியா
தானியேல் போல பரிந்துரைக்கும்
விசால உள்ளம் தந்திடும்

எப்போதும் கேட்கும் அப்பா பிதாவே
இப்போதென் வேண்டுதல் கேட்டருளும்
சுயலாப விண்ணப்பம் மறையவும்
பொதுநல மன்றாட்டில் வேர் ஊன்றவும்
உயர்ந்த மனதைத் தந்திடும்

Thunai Enrum Yesu Deva துணை என்றும் இயேசு தேவா

 துணை என்றும் இயேசு தேவா உமை நம்பினேன்

எம்மைக்காரும் தேவ மைந்தா உமைச் சாருவேன்

இருள் யாவும் நீக்கி எம்மில் அருள் யாவும் தந்தீர் தேவா
கனிவாக வந்தீரே துணையாக நின்றீரே
தேவ தேவன் இயேசுவே அன்பு போதுமே

எனக்காக யாவும் செய்யும் பலமுள்ள தேவன் நீரே
விளக்கினை ஏற்றுவீர் அபிஷேகம் பண்ணுவீர்
எந்தன் கொம்பு உயர்ந்திடும் நம்பும் தேவனே

அலை போல பாயும் துன்பம் கடல் போல சீறும் காற்றோ
இரையாதே என்றீரே அமைதலை தந்தீரே
வார்த்தை ஒன்று சொல்லுமே வல்ல தேவனே

பயந்திடும் யாவர் மீதும் நன்மையை பொழியும் நாதா
நம்பினேன் உம்மையே நன்மையே ஈந்திடுமே
நீதிமானின் தேவனே நித்தம் நடத்துமே

வழி என்றும் காட்டும் தேவா விழி என்னில் வைத்த மூவா
தினம் தினம் போதியும் அருள் நிதம் காட்டிடும்
உம்மைப் போல் தெய்வத்தை பூவில் கானேன் நான்

Thuthi Geethangalaal Puzhalvaen துதி கீதங்களால் புகழ்வேன்

 துதி கீதங்களால் புகழ்வேன்

உந்தன் நாம மகத்துவங்களை
இயேசுவே இரட்சகர்
உந்தன் நாமம் எங்கள் ஆறுதல்

தினந்தோறும் உம் தானங்களால்
நிறைத்திடுமே எங்களை நீர்
திரு உள்ளமது போல் எமை மாற்றிடுமே
கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்!

அலைமோதும் இவ்வாழ்க்கையிலே
அனுகூலங்கள் மாறும்போது
வழிகாட்டிடுமே துணை செய்திடுமே
கனிவோடடியார்களை காருண்யத்தால்

உம்மைத் துதிக்கும் வேளையிலே
ஊக்கம் அளித்த கிருபையல்லோ
உந்தன் சித்தம் என்னில் நிறைவேறிடவே
என்னை முற்றுமாக இன்று அர்ப்பணித்தேன்!

வானம் பூமியை படைத்தவரே
வாரும் என்று அழைக்கிறோமே
என்று வந்திடுவீர், ஆவல் தீர்ந்திடுமே
கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்

துன்ப துயரங்கள் வாட்டும்போது
வேத வசனங்கள் ஆறுதலே
சங்கீதங்களால் மகிழ் பாடிடுவேன்
உந்தன் வாக்குகளை எண்ணி ஆனந்தாய்

Thuthikka Piranthavan துதிக்க பிறந்தவன்

 துதிக்க பிறந்தவன்

சாத்தானை மிதிக்க பிறந்தவன் – இயேசுவை
துதித்து துதித்து உம்மை உயர்த்துவேன்
துதித்து துதித்து உம்மை பாடுவேன்

தாயின் கருவிலே என்னை தாங்கினீர்
தகப்பனே உம்மை துதிப்பேன் – என்

காலையில் துதிப்பேன் மாலையில் துதிப்பேன்
மதியத்திலும் இரவிலும் துதிப்பேன் – நான்

நஷ்டம் வந்தாலும், பணக்கஷ்டம்-வந்தாலும்
பாடி பாடி உம்மை துதிப்பேன் – நான்

தள்ளப்பட்டாலும் நான் வையப்படட்டாலும்
தளராமல் உம்மைத் துதிப்பேன்

உயிருள்ள நாளெல்லாம் என் தேவனை
உயர்த்தி துதித்திடுவேன்

அவர் செய்த நன்மைகளை நினைத்து நான்
எந்நாளும் உயர்த்திடுவேன்

Ulagam Thondrum Munne உலகம் தோன்றும் முன்னே உன்னை

 உலகம் தோன்றும் முன்னே உன்னை

தெரிந்துகொண்டாரே தேவன்
கருவினில் உருவாகும் முன்னே உன்னை
பிரித்தெடுத்தாரே தேவன்
கிறிஸ்து உனக்காய் அடிக்கப்பட்டார் உன்
பாவங்களுக்காக நொறுக்கப்பட்டார்
ஆவியாய் கூடவே இருக்கின்றார்
உனக்காய் பரிந்து பேசுகிறார்

Ulagai Ratchippavarae Unnatha உலகை இரட்சிப்பவரே உன்னத

 உலகை இரட்சிப்பவரே உன்னத தெய்வம் நீரே

உயர்ந்த அடைக்கலமே நீர் உயிரின் உறைவிடமே

காலங்கள் தொடங்கிடும் முன் கர்த்தராய் இருந்தவரே
பூமியை சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரே
வானத்தை விரிப்பதும் இஷ்டம்போல மடிப்பதும்
உமக்கு கடினமில்லை
மின்னலை கைகளுக்குள் மூடி வைத்து நடக்கிறீர்
உமக்கு நிகருமில்லையே
உம்மிடம் அனுமதி கேட்டே அணுவும் அசைகின்றதே
அண்டசராசரம் யாவும் உமக்குள் அடங்கிடுதே

எங்களை கிறிஸ்துவுக்குள்ளே தெரிந்துகொண்டவரும் நீர்
ரட்சிப்பின் திட்டங்களெல்லாம் முன்னரே அறிந்திருந்தீர்
கிறிஸ்துவை எங்களுக்காய் சாபமாக மாற்றியது
அன்பினை அறிவிக்கத்தான்
அன்றாடம் வெற்றிபெற பரிசுத்த ஆவி உண்டு
பேரன்பை நிரூபிக்கத்தானே
உமது மகிமைக்குத்தானே எங்களை படைத்துவிட்டீர்
எங்களை மகிமையில் சேர்க்க அன்புடன் அழைத்துவிட்டீர்

Ulagathil Irupavanilum உலகத்தில் இருப்பவனிலும்

 உலகத்தில் இருப்பவனிலும்

உங்களில் இருப்பவர் பெரியவர்
கர்த்தர் பெரியவர் நல்லவர்
வல்லவர் என்றுமே

தண்ணீரைக் கடந்திடும் போதும்
உன்மேல் அவைகள் புரளுவதில்லை
அக்கினியின் சோதனை ஒன்றும் செய்யாதே
அவைகளை மிதித்து ஜெயமே அடைவாய்

உன் பக்கம் ஆயிரம் பேரும்
உன் மேல் விழுந்தும் தீங்கொன்றுமில்லை
கண்களினால் காணுவாய் தேவன் துணை உனக்கே
ஜெயதொனியோடே முன்னே செல்வாய்

என்றென்றும் கர்த்தரின் நாமம்
துணையே என்று அறிந்துணர்வாயே
உனக்கெதிராய் எழும்பிடும் ஒன்றும் வாய்க்காதே
சேனைகளின் தேவன் ஜெயமே அளிப்பார்

எந்நாளும் இயேசுவை நம்பு
குறைவேயில்லை ஜீவியமதிலே
பசுமையின் ஜீவியிம் உந்தன் பங்காகும்
கர்த்தரின் ஆசீர் உனக்கே சொந்தம்

Ulagor Unnai Pagaithalum உலகோர் உன்னைப் பகைத்தாலும்

 உலகோர் உன்னைப் பகைத்தாலும்

உண்மையாய் அன்பு கூறுவாயா ?
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவையைச் சுமப்பாயா

உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய்
எனக்காக நீ என்ன செய்தாய்

உலக மேன்மை அற்பமென்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும்
உள்ளத்தினின்று கூறுவாயா
ஊழியம் செய்ய வருவாயா

மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்கின்றாய் பாவப் புல் வெளியில்
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி ஓடுவாயா

ஜீவ அப்பம் இயேசுவல்லோ
ஆத்தும பசியைத் தீர்க்குமன்றோ
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
ஜீவ அப்பம் கொடுப்பாயோ

ஐந்து சகோதரர் அழிகிறாரே
யாரையாவது அனுப்பிடுமே
யாரை நானும் அனுப்பிடுவேன்
யார் தான் போவார் எனக்காக

Ulagathin Paavangal உலகத்தின் பாவங்கள் சுமந்து தீர்த்த

 உலகத்தின் பாவங்கள் சுமந்து தீர்த்த

இறைவனின் திருக்குமரா
உமக்கே ஆராதனை
ஆராதனை -2  உமக்கே ஆராதனை

அதிகாலை நேரம் அப்பா உம் பாதம்
எப்போதும் ஆராதனை
தூதர்களோடு புனிதர்களோடு
புகழ்ந்து ஆராதிப்பேன்

அன்பான தேவா அபிஷேக நாதா
அன்பே ஆராதனை
என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
அன்பரே ஆராதனை

என்னை மறவாத என் இயேசு ராஜா
என்றென்றும் ஆராதனை
உம் நாமம் துதித்து உம் பாதம் பணிவேன்
உயிருள்ள நாளெல்லாம்

Ullam Aanantha உள்ளம் ஆனந்த கீதத்திலே

 உள்ளம் ஆனந்த கீதத்திலே

வெள்ளமாகவே பாய்கிறதே
எந்தன் ஆத்தும நேசரையே
என்றும் வாழ்த்தியே பாடிடுவேன்

பாவ பாரம் நிறைந்தவனாய்
பல நாட்களாய் நான் அலைந்தேன்
அந்த பாரச் சிலுவையிலே
எந்தன் பாவத்தைச் சுமந்தவரே

பல ஆசையின் ஆழியிலே
அழிந்தே மனம் சோர்ந்திருந்தேன்
அந்த பாசக் கரங்களிலே
அணைத்தே என்னைத் தூக்கினாரே

அந்தகாரத்தின் வாழ்க்கையிலே
தடுமாறியே நான் அலைந்தேன்
நிறைவானதோர் பேரொளியாய்
எந்தன் பாதையில் தோன்றினாரே

மலை போன்றதோர் சோதனையில்
மகிபன் அவர் கைவிடாரே
கல்வாரியின் அன்பினிலே
கனிவோடுன்னை அணைத்திடுவார்

உலகம் முடியும் வரைக்கும்
உந்தனோடிருப்பேன் என்றவர்
வாக்கு மாறிடா நேசரையே
நம்பிடுவாய் துணை அவரே

Um Janangal Orupothum உம் ஜனங்கள் ஒருபோதும்

 உம் ஜனங்கள் ஒருபோதும்

வெட்கப்பட்டுப்போவதில்லை
தேவனாகிய கர்த்தாவே
உம்மை போல் வேறொருவர் இல்லையே

எங்கள் மத்தியில்
என்றென்றென்றும் வாழ்பவரே
வெட்கப்பட்டுப்போவதில்லை-நாங்கள்
வெட்கப்பட்டுப்போவதில்லை

இயேசையா இரட்சகரே
இயேசையா மீட்பரே

தேசமே கலங்காதே
மகிழ்ந்து நீ களிகூறு
பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்கு
பெரிய காரியங்கள் செய்கிறார்
களங்கள் நிரப்பப்படும்
ஆலைகளில் வழிந்தோடும்
அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
திருப்தியாய் நம்மை நடத்திடுவார்

இயேசையா இரட்சகரே
இயேசையா மீட்பரே

இழந்த வருஷத்தையும்
வருஷங்களின் விளைச்சலையும்
மீட்டு தருபவரே இயேசையா
முன்மாரி மழையையும்
பின்மாரி மழையையும்
எங்கள் மேல் பொழிய செய்பவரே

இயேசையா இரட்சகரே
இயேசையா மீட்பரே

Um Paathapadiyil Ennai naan உம் பாதபடியில் என்னை நான்

 உம் பாதபடியில் என்னை நான் தாழ்த்துகிறேனே

உம் பாதம் பணிந்து உம்மையே உயர்த்திடுவேனே

இயேசுவே நீரே என் இரட்சகர்
நீர் இல்லாமல் என் வாழ்வு மலருமோ
நீர் இல்லாமல் என் வாழ்வு உயருமோ

இயேசுவே நீரே என் கன்மலை
உமது நிழலிலே மறைந்து கொள்ளுவேன்
உமது சிறகிலே ஒளிந்து கொள்ளுவேன்

இயேசுவே நீரே என் குயவனே
எனது வாழ்வு உமது கையில் வனையுமே
உம்மை போல் என்னை இன்று மாற்றுமே

இயேசுவே நீரே என் வைத்தியரே
உமது சுகம் என்னில் இன்று தாருமே
உமது கரம் என்னில் இன்று வையுமே

Um Sithampol Ennai உம் சித்தம் போல் என்னை

 உம் சித்தம் போல் என்னை என்றும்

தற்பரனே நீர் நடத்தும்
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே

திருமார்பில் நான் சாய்ந்திடுவேன்
மறுபிறையான காலம் வரை
பரனே உந்தன் திரு சித்தத்தை
அறிவதல்லோ தூய வழி

அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்
ஆம் இவற்றால் நீர் நடத்தும்
இராவு பகல் கூட நின்று
என்றென்றுமாய் நடத்திடுமே

Um Vazhigalai Arinthavan உம் வழிகளை அறிந்தவன் யார்

 உம் வழிகளை அறிந்தவன் யார்

உமக்கு ஆலோசனை கொடுத்தவன் யார்

வானங்கள் உயர்ந்தது போல்
உம் வழிகளும் உயர்ந்ததுவே
நல்லோசனைகள் ஆலோசனைகள்
சொல்வதில் பெரியவரே

மானிட வழிகளெல்லாம்
உம் வழிகள் இல்லை என்றீர்
என் யோசனைகள் உம் யோசனைகள்
எந்நாளும் வெவ்வேறென்றீர்

உந்தன் நல் வழிகள் எல்லாம்
ஆராய்ந்து முடியாதைய்யா
உந்தன் செயல்கள் மேலானவைகள்
எண்ணிட முடியாதைய்யா

Ummai Aaraadhikkathaan Ennai உம்மை ஆராதிக்கத்தான் என்னை

 உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர்

உம்மை ஆர்ப்பரிக்கத்தான் என்னை அழைத்தீர்
உந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர்
உம்மை பற்றிக்கொள்ளத்தான் என்னை படைத்தீர்

ஏழு விண்மீன் கைதனில் பொன்விளக்கு மத்தியில்
உலாவிடும் உன்னதர் நீரே உமக்கு நிகர்
முந்தினவரும் நீர்தான் பிந்தினவரும் நீர்தான்
மரித்தவரும் நீர்தான் மூன்றாம் நாளில் உயிர்பெற்று
வாழ்கின்ற வேந்தன்

எப்பக்கமும் கூர்மையோ பட்டயம் பற்றினீரோ
கண்கள் அக்னி ஜூவாலையோ பாதங்கள் வெண்கலமோ
தேவ அவி ஏழுண்டு விண்மீன்களும் ஏழுண்டு
எல்லாம் இயேசுவில் உண்டு அப்பேர்ப்பட்ட அழகுள்ள
ஆண்டவர் மைந்தன்

பரிசுத்தர் நீர்தானே சத்தியரும் நீர்தானே
தாவீதின் திறவுகோல் கொண்டவரும் நீர்தானே
நீர் பூட்டிய வாசலை மானிடன் திறப்பானோ
நீர் திறந்த வாசலை பூட்டிவைக்க கூடுமோ
நீர் ஆள்கின்றீர் என்றும்

உண்மையும் சத்தியமும் உள்ளடங்கும் சாட்சியே
தேவனின் சிருஷ்டிக்கு ஆதியே ஆமென் நீரே
நீதியுள்ள நாதனே நீர் என்றும் நித்தியரே
ஆலயத்தின் ஆண்டவா ஆராதனை நாயகா
நீர் வாழ்க வாழ்க என்று

அப்பா பிதாவே நான் உம்மை துதிப்பேன்- எந்தன்
ஆத்ம நேசரே நான் உம்மை துதிப்பேன்
பரிசுத்த ஆவியே என்றும் உம்மை துதிப்பேன்
மூன்றில் ஒன்றாய் விளங்கும் என் தேவ தேவனே

Ummai Pola Nalla Devan உம்மை போல நல்ல தேவன்

 உம்மை போல நல்ல தேவன்

யாரும் இல்லையே
உம்மை போல வல்ல தேவன்
யாருமில்லையே

உம்மைப் போல என்னைத் தாங்கிட
உம்மைப் போல என்னைக் காத்திட
உம்மைப் போல என்னை நடத்திட
யாருமில்லையே – இறைவா யாருமில்லையே

உம்மைப் போல என்னைத் நிரப்பிட
உம்மைப் போல என்னைக் தேற்றிட
உம்மைப் போல என்னை அணைத்திட
யாருமில்லையே – இறைவா யாருமில்லையே

உம்மை நான் போற்றுகிறேன்
போற்றுகிறேன்
என் தெய்வமே – என் இயேசுவே

உம்மை நான் போற்றுகிறேன்
போற்றுகிறேன்
என் தெய்வமே – இயேசுவே

தெய்வமே என் இயேசுவே
என் தெய்வமே இயேசுவே

உம்மை நான் போற்றுகிறேன்
போற்றுகிறேன்
என் தெய்வமே – என் இயேசுவே

உம்மை நான் போற்றுகிறேன்
போற்றுகிறேன்
என் தெய்வமே – இயேசுவே

Ummaithaan Ummai உம்மைத்தான் உம்மை மட்டும் தான்

 உம்மைத்தான் உம்மை மட்டும் தான்

என் கண்கள் தேடுதே என் உள்ளம் நாடுதே

மான்கள் நீரோடை வாஞ்சிக்கும்
அதுபோல் என்னுள்ளம் உம்மை வாஞ்சிக்கும்
தேவா உம் அன்பை எண்ணும்போது
பூலோகம் ஒன்றுமில்லை
எல்லாமே நஷ்டம் என்கிறேன்
தேவா உம்மை எண்ணும் போது
பூலோகம் ஒன்றுமில்லை
எல்லாமே நஷ்டம் என்கிறேன்
எல்லாமே நஷ்டம் என்கிறேன்

வேதம் சொல் சித்தம் செய்கிறேன்
உந்தன் பாதம் நல் முத்தம் செய்கிறேன்
தேவா உம்மைபோல் என்ன காக்க
மேலோகில் என்னை சேர்க்க
பூலோகில் யாருமில்லையே
பூலோகில் யாருமில்லையே
பூலோகில் யாருமில்லையே

Ummal Azhaikappadu உம்மால் அழைக்கப்பட்டு

 உம்மால் அழைக்கப்பட்டு

உம்மில் அன்பு வைக்கும்
உமது பிள்ளைகளுக்கு
எல்லாம் நன்மையாய் நடத்தி தந்திடும்
அன்பு தெய்வம் நீரே

நடந்ததோ நடப்பதோ
நடக்கவிருக்கும் காரியமோ
எதுவுமே உமதன்பை
என்னிடமிருந்து பிரிக்குமோ

முன்னறிந்தீரே முன்குறித்தீரே உமது
பிள்ளைகளை அழைத்தீரே
அழைக்கப்பட்ட எம்மை நீதிமானாக்கி
மகிமைப்படுத்தி மகிழ்ந்தீரே

எங்களுக்காக இயேசுவைகூட
மாசற்ற பலியாய் தந்துவிட்டீர்
ஏங்கி நிற்கும் உம் பிள்ளைகட்கு
மற்றவை எல்லாம் தந்தருள்வீர்

Ummel Vaanjaiyai Iruppathanal உம்மேல் வாஞ்சையாய்

 உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்

என்னை விடுவிப்பீர் நிட்சயமாய்
உந்தன் நாமத்தை அறிந்ததனால்
வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில்

ஏஷுவா ஏஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம்
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்குள் சுகம் காணுவேன்

ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு
பதில் அழிப்பீர் வெகு விரைவில்
என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்
தலை நிமிர செய்திடுவீர்

வேடனின் கண்ணீர் பாழாக்கும் கொள்ளை நோய்
அணுகாமலே தப்புவிப்பீர்
உமது சிறகுகளாலே
என்னை மூடி மறைத்து மறைத்து கொள்ளுவீர்

Unmai Anbu uranguvathillai உண்மை அன்பு உறங்குவதில்லை

 உண்மை அன்பு உறங்குவதில்லை -உம்

உண்மை அன்பு மறைவதே இல்லை
உன் அன்பொருநாள் வெளிப்படுமே கலங்காதே
உன் அன்பொருநாள் விளங்கிடுமே திகையாதே

உதவி செய்து உதை வாங்கித் தவிக்கின்றாயோ
உன் உள்ளமெல்லாம் காயங்களால் நிறைந்துள்ளதோ
நன்மை செய்தும் அது உனக்கு பயனில்லையோ
நாளெல்லாம் அதை நினைத்து
கலங்குகின்றாயோ

எனகென்ன செய்தாய் என்று கேட்கும் மக்கள் கூட்டமே
உன்னை என்ன செய்வேன் பார் என்று சொல்லும் கூட்டமே
என்ன செய்ய போகிறேன் என்னும் நெஞ்சமே
கலங்காதே நான் என்றும் உந்தன் பக்கமே

என் மகளே (னே) என்னை நீ எண்ணிப் பாரேன்
நான் கடந்து வந்த பாதைகள் தான் உனக்கும் தானே
மாயைகளை மனதில் நினைத்து சோர்ந்து போகாதே
நான் உனக்கு போதும் என்றும் உந்தன் வாழ்விலே

Ummai Nambi Vanthen உம்மை நம்பி வந்தேன்

 உம்மை நம்பி வந்தேன்

உந்தன் பாதம் வந்தேன்
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மை உயர்த்திட
உம்மை போற்றிட
நாவுகள் போதாதையா

இயேசுவே இயேசுவே
இயேசுவே என் தெய்வமே

நீர் வருகிற காலம் மிக சமீபமே
உம் முகத்தை பார்க்கணும்
என் இயேசுவே
உம் சித்தம் செய்திடணும்
உமக்காக வாழ்ந்திடணும்
என்னையே தருகிறேன் உருவாக்குமே

உடைந்து போன என் வாழ்வை
தூக்கி எடுத்தீர்
உன்னதங்களில் உயர்த்தி வைத்து
மகிமைபடுத்தினீர்
நீர் மட்டும் பெருகணும் என் வாழ்விலே
என் ஆசை நீர்தானே என் இயேசுவே

Ummaiyanri Ulaginil evarumillai உம்மையன்றி உலகினில் எவருமில்லை

 உம்மையன்றி உலகினில் எவருமில்லை

உம் துணை இன்றி வாழவேறு விருப்பமில்லை – என்
உடலும் உயிரும் நீர்தானய்யா
உம்மைப் பிரிந்தால் உலகில் வாழ்வேதய்யா
நீரே என் கண்கண்ட தெய்வம்
நிதம் எனக்கு வழிகாட்டும் தீபம்

பாதை மாறிய ஆட்டைப் போல் நானும்
பாரினில் ஓடினேன் ஒரு நாளிலே
நல்ல மேய்ப்பன் என் இயேசு வந்தார்
நான் செல்லும் பாதையில் ஒளியாய் நின்றார்
வாழ எனக்கு வழி காட்டீனீரே
உம்மைப் பாடிடும் வரம் தந்தீரே
உமக்காய் வாழ்ந்திட பெலன் தந்தீரே

தாழ்வில் இருந்தேன் தயவாக நினைத்தீர்
தரத்திரம் என்னை விட்டு நீங்கச் செய்தீர்
வாழ்வில் என்னை உயரத்தில் வைத்தீர்
வறுமையின் வேதனையை ஓடச் செய்தீர்
உம்மைப் பாடும் ஊழியம் செய்தேன்
ஒன்றுக்கும் குறைவில்லை என் வாழ்விலே
இயேசுவே நீரிருக்க கவலையில்லை
– உம்மையன்றி உலகினில் எவருமில்லை

சாட்டை இல்லா பம்பரம் போல தரையினில் நானும் கிடந்தேனய்யா
நூலறுத்த பட்டத்தைப் போல
இருளும் மேகத்தில் காணாமல் மறைந்தேனய்யா
உனக்கு ஒருவர் இருக்கின்றார் என்று
எனக்கு ஆறுதல் சொன்னீரய்யா
இருளும் புயலும் வந்தாலும் வரட்டும்
எனது இதயம் கலங்காதய்யா