Wednesday, September 9, 2015

YESUVIN KAIGAL KAAKKA MARBINIL

1. இயேசுவின் கைகள் காக்க,
மார்பினில் சாருவேன்;
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்.
பளிங்குக் கடல் மீதும்
மாட்சி நகர்நின்றும்
தூதரின் இன்ப கீதம்
பூரிப்புண்டாக்கிவிடும்.

2. இயேசுவின் கைகள் காக்க,
பாழ்லோகின் கவலை
சோதனை பாவக் கேடும்
தாக்காது உள்ளத்தை;
கஷ்டம் துக்கம் கண்ணீரும்
காணாமல் நீங்குமே;
வதைக்கும் துன்பம் நோவும்
விரைவில் தீருமே.

3. இயேசு என் இன்பக் கோட்டை;
எனக்காய் மாண்டோரை
சார்ந்தென்றும் நிற்பேன், நீரே
நித்திய கன்மலை.
காத்திருப்பேன் அமர்ந்து
ராக்காலம் நீங்கிட,
பேரின்ப கரை சேர
மா ஜோதி தோன்றிட.

YESUVIN PINNE POGA THUNINTHEN

இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3)
பின் நோக்கேன் நான் (2)

சிலுவை என் முன்னே , உலகம் என் பின்னே (3)
பின் நோக்கேன் நான் (2)

கர்த்தர் என் மித்ரு சாத்தான் என் சத்ரு (3)
பின் நோக்கேன் நான் (2)

யேசு என் நேசர் மாம்சம் என் தோஷம் (3)
பின் நோக்கேன் நான் (2)

YESUVIN NAAMAM YELLAVATRIRKKUM MELANA

இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்
மேலான நாமம் இயேசுவின் நாமம்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

சரணங்கள்

1. துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும்
பேய் பிசாசின் தந்திரத்திற்கும்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

2. வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும்
இம்மையிலும் மறுமையிலும்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

3. ஸ்தோத்திரிப்பீர் ஸ்தோத்திரிப்பீர்
விசுவாசிப்போர் ஸ்தோத்திரிப்பீர்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

YESUVIN NAAMAM INITHANA NAAMAM

இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்

சரணங்கள்

1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் --- இயேசுவின்

2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் --- இயேசுவின்

3. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம் --- இயேசுவின்

4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம் --- இயேசுவின்

5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் --- இயேசுவின்

6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசை துரத்திட்ட நாமம் --- இயேசுவின்

YESUVIN NAAMAME THIRUNAAMAM MULU

இயேசுவின் நாமமே திருநாமம் - முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்

சரணங்கள்

1. காசினியில் அதனுக் கிணையில்லையே - விசு
வாசித்த பேர்களுக்குக் குறையில்லையே --- இயேசு

2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் - அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெயநாமம் --- இயேசு

3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் - இது
சத்திய விதேய மனமொத்த நாமம் --- இயேசு

4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம் - நமை
அண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம் --- இயேசு

5. பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி - பெரும்
பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி --- இயேசு

YESUVE VAZHI SATHYAM JEEVAN

இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
இயேசுவே ஒளி நித்யம் தேவன்

1. புது வாழ்வு எனக்கு தந்தார்
சமாதானம் நிறைவாய் அளித்தார்
பாவங்கள் யாவும் மன்னித்தார்
சாபங்கள் யாவும் தொலைத்தார்

2. கல்வாரி மீதில் எனக்காய்
தம் உதிரம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிர்த்தார்
உன்னதத்தில் அமர்ந்தார்

3. நல் மேய்ப்பனாக காத்தார்
எனை தமையனாகக் கொண்டார்
என் நண்பனாக வந்தார்
என் தலைவனாக நின்றார்

4. மேகங்கள் மீதில் ஓர்நாள்
மணவாளனாக வருவார்
என்னை அழைத்துக் கொள்வார்
வானில் கொண்டு செல்வார்

YESUVE UMMAI DHIYANITHAL

1. இயேசுவே, உம்மை தியானித்தால்
உள்ளம் கனியுமே;
கண்ணார உம்மைக் காணுங்கால்
பரமானந்தமே.

2. மானிட மீட்பர் இயேசுவின்
சீர் நாமம் போலவே,
இன் கீத நாதம் ஆய்ந்திடின்
உண்டோ இப்பாரிலே?

3. நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு
நம்பிக்கை ஆகுவீர்;
நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு
சந்தோஷம் ஈகுவீர்.

4. கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர்
ஈவீர் எந்நன்மையும்;
கண்டடைந்தோரின் பாக்கிய சீர்
யார் சொல்ல முடியும்?

5. இயேசுவின் அன்பை உணர்ந்து
மெய் பக்தர் அறிவார்;
அவ்வன்பின் ஆழம் அளந்து
மற்றோர் அறிந்திடார்.

6. இயேசுவே, எங்கள் முக்தியும்
பேரின்பமும் நீரே;
இப்போதும் நித்திய காலமும்
நீர் எங்கள் மாட்சியே.

YESUVAI NAMBINOR MAANDATHILLAI

1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயின்றும் இரட்சிப்பார்
பங்கம் வராதுன்னை ஆசீர்வதிப்பார்

பல்லவி

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரைக் கிருபை சூழ்ந்திட
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார்
2. நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
நம்புவதில்லை தம் ஆலோசனை
கோர பயங்கர காற்றடித்தும்
கன்மலைமேல் கட்டும் வீடு நிற்கும் --- நெஞ்சமே

3. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
ஏகிப் பறந்திடும் பக்தரோடே
சேர்ந்தென்றும் வாழ்த்திடும் ஐக்கியத்திலே
ஜெய கம்பீரமே உனக்குண்டே --- நெஞ்சமே

4. விஸ்வாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலது பாரிசத்திலே
கர்த்தன் தாம் நிற்பதால் அசைந்திடான் --- நெஞ்சமே

5. ஏழை உன் ஆத்துமா பாதாளத்தில்
என்றும் அழிந்திட விட்டு விடார்
தம் சமூகம் நித்திய பேரின்பமே
சம்பூரண ஆனந்தம் பொங்கிடுமே --- நெஞ்சமே

6. அங்கே அநேக வாசஸ்தலங்கள்
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
நேர்த்தியான இடங்களில் உந்தன்
நித்திய பங்கு கிடைத்திடுமே --- நெஞ்சமே

ANTHO KALVAARIYIL ARUMAI RATCHAGARE

அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குறார்

சரணங்கள்

1. மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாயலோகத்தோடழியாதூயான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே --- அந்தோ

2. அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே --- அந்தோ

3. முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரை மீட்டிடவே --- அந்தோ

4. அதிசயம் இது இயேசுவின் தியாகம்
அதிலும் இன்பம் அன்பரின் தியாகம்
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே --- அந்தோ

5. சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் --- அந்தோ

RATHAM KAAYAM KUTHUM NIRAINTHU

1. இரத்தம் காயம் குத்தும் நிறைந்து, நிந்தைக்கே
முள் கிரீடத்தாலே சுற்றும் சூடுண்ட சிரசே,
முன் கன மேன்மை கொண்ட நீ லச்சை காண்பானேன்?
ஐயோ, வதைந்து நொந்த உன்முன் பணிகிறேன்.

2. நீர் பட்ட வாதை யாவும் என் பாவப் பாரமே;
இத்தீங்கும் நோவும் சாவும் என் குற்றம் கர்த்தரே,
இதோ, நான் என்றுஞ் சாக நேரஸ்தன் என்கிறேன்;
ஆனாலும் நீர் அன்பாக என்னைக் கண்ணோக்குமேன்.

3. நான் உம்மைத் தாழ்மையாக வணங்கி நித்தமே
நீர் பட்ட கஸ்திக்காக துதிப்பேன், இயேசுவே;
நான் உம்மில் ஊன்றி நிற்க சகாயராயிரும்;
நான் உம்மிலே மரிக்க கடாட்சித்தருளும்.

4. என் மூச்சொடுங்கும் அந்த கடை இக்கட்டிலும்
நீர் எனக்காய் இறந்த ரூபாகக் காண்பியும்;
அப்போ நான் உம்மைப் பார்த்து கண்ணோக்கி நெஞ்சிலே
அணைத்துக்கொண்டு சாய்ந்து, தூங்குவேன், இயேசுவே.

RAAJATHI RAAJAN YESU VARUKIRAR

1. இராஜாதி இராஜன் இயேசு வருவார்
சிந்திக்க ஆயத்தமா ?
வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்
சந்திக்க ஆயத்தமா ?

பல்லவி

கேள் ! கேள் ! மானிடரே
சந்திக்க ஆயத்தமா ?
இராஜாதி இராஜனாய் வந்திடுவார்
சந்திக்க ஆயத்தமா ?
2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே
சந்திக்க ஆயத்தமா ?
பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தை
சந்திக்க ஆயத்தமா ?

3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார்
சந்திக்க ஆயத்தமா ?
கத்திக் கதறியே தாழிடுவார்
சந்திக்க ஆயத்தமா ?

4. உலகமனைத்துமே கண்டிடுமே
சந்திக்க ஆயத்தமா ?
பரிசுத்தவான்களின் போர் நிற்குமே
சந்திக்க ஆயத்தமா ?

IVARE PERUMAAN MATRA PER ALAVE

இவரே பெருமான் , மற்றப்
பேர் அலவே பூமான் - இவரே பெருமான்

சரணங்கள்

1. கவலைக் கிடங்கொடுத் தறியார் - வேறு
பவவினை யாதுமே தெரியார் - இப்
புவனமீது நமக்குரியார் --- இவரே

2. குருடர்களுக் குதவும் விழியாம் - பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம் - தெய்வம்
இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் --- இவரே

3. பலபிணி தீர்க்கும் பரிகாரி - சொல்லும்
வலமையில் மிக்க விபகாரி - எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி --- இவரே

4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் - கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன் - இங்கே
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் --- இவரே

5. அலகை தனை ஜெயித்த வீரன் - பவ
உலகை ரட்சித்த எழிற்பேரன் - விண்
ணுலகு வாழ் தேவ குமாரன் --- இவரே

6. பொன்னுலகத் தனில்வாழ் யோகன் - அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் - நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன் --- இவரே

SILUVAI YEN AVARUKKU SIRU KUTRAMUM

சிலுவை ஏன் அவர்க்கு
சிறு குற்றமும் செய்யாதவர்க்கு
சிலுவை ஏன் அவர்க்கு

சிலுவை ஞானம் தேவ ஞானம்
மற்றதெல்லாம் உலக ஞானம்
சிலுவை ஏன் அவர்க்கு

1. கொடிய பாவத்தால் உண்டான குஷ்டரோகியை (2)
குனிந்து கரத்தால் அவனை தொட்டு (2)
குரோதத்தை மாற்றினதாலோ - சிலுவை ஏன் அவர்க்கு

2. இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் பிலாத்து
இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் ஏரோது
இயேசுவை கண்டவர் எல்லாம் (2)
ஏதும் குற்றம் இல்லை என்றார் - சிலுவை ஏன் அவர்க்கு

3. உலகோர் பாவ பாரம் யாவும் உத்தமர் சுமந்து (2)
சிலுவையில் மரித்ததாலே (2)
இரட்சிப்பை உண்டாக்கி வைத்தார் - சிலுவை ஏன் அவர்க்கு

isaimalaiyil thenkavi poliyuthe

இசைமழையில் தேன்கவி பொழிந்தே
கர்த்தர் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள் - 2

1. வான்மலர்தான் இப்புவியினிலே
மலர்ந்திட்டதே நம் வாழ்வில் இன்று
நமக்காய் பிறந்தார் பாசம்கொண்டு
வாழ்வின் மீட்பின் பாதை இதே

2. மாசற்றவர் நம் வாழ்வினிலே
மகிமையென்றே கண்டோமே இன்று
விடிவெள்ளியாக தேவபாலன்
தாழ்மை தாங்கி அவதரித்தார்

3. உலகம் என்னும் பெதஸ்தாவிலே
கரைதனில் பல ஆண்டுகளாய்
பாதை தெரியாதிருந்த நம்மை
வாழ வைக்க வந்துதித்தார்