Sunday, March 8, 2020

ELUNTHAR IRAIVAN JEYAME

எழுந்தார் இறைவன் – ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்

1. விழுந்தவரைக் கரையேற்றப் – பாவத்
தழுந்து மனுக்குலத்தை மாற்ற – விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற – எழுந்தார்


2. செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
பக்தர் யாவரும் களிக்க – எழுந்தார்


3. கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
இரு திறத்தாரையும் சேர்க்க – எழுந்தார்


4. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
பூவின் மீதுசபை செழிக்க – எழுந்தார்


5. ஏதுந் தீவினை செய்யாத் தூயன் – எப்
போதுமே நன்மைபுரி நேயன் – தப்
பாது காத்திடும் நல்லாயன் – எழுந்தார்

GEETHAM GEETHAM JAYA JAYA

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கை கொட்டிப் பாடிடுவோம் -இயேசு
ராஜன் உயிர்த்தெழுந்தார் -அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்

பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
புரண்டுருண்டோடுது பார் - அங்கு
போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நிதி முன்

வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுவோம் -தாம்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு

அன்னா காய்பா ஆசாரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் -இன்னா
பூதகணங்கள் இடி ஒலி கண்டு
பயந்து நடுங்குகின்றார்

வாசல் நிலைகளை உயிர்த்தி நடப்போம்
வருகின்றார் ஜெய வீரர் - நம்
மேளவாத்தியம் கைமணி பூரிகை
எடுத்து முழுங்கிடுவோம்