Thursday, September 3, 2015

POTHUMAANAVARE PUTHUMAIYANAVARE

போதுமானவரே புதுமையானவரே
  போதுமானவரே புதுமையானவரே
பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே
ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை

1. எனக்காக தண்டிக்கப்பட்டீரே
அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
எனக்காக காயப்பட்டீரே
அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்

2. பாவங்கள் சுமந்ததனால் - நான்
நீதிமானாய் மாற்றப்பட்டேன்
மரணத்தை ஏற்றுக் கொண்டதால் - நித்திய
ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா

3. எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்
எனக்காக அவமானமடைந்து - உம்
மகிமையிலே பங்குபெறச் செய்தீர்

4. சிலுவையிலே ஏழ்மையானதால் - என்னை
செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே - நீர்
சாபங்களை சுமந்து கொண்டதால் - நான்
ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன்

MAGIMAI UMAKANDRO MATCHIMAI UMAKANDRO


மகிமை உமக்கன்றோ!
  மகிமை உமக்கன்றோ! மாட்சிமை உமக்கன்றோ!
துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கன்றோ!

ஆராதனை - ஆராதனை
என் அன்பர் இயேசுவுக்கே

1. விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலை கொடுத்தீர்,
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்!

2. வழிகாட்டும் தீபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே,
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே!

3. எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே,
உம் நாமம் வாழ்க! உம் அரசு வருக!
உம் சித்தம் நிறைவேறுக!

4. உம் வல்ல செயல்கள்
மிகவும் பெரிய அதிசயமன்றோ!
உம் தூய வழிகள் நேர்மையான
சத்திய தீபமன்றோ!

MANNORAI MEETIDAVE PAARIL


மண்ணோரை மீட்டிடவே பாரில்
  மண்ணோரை மீட்டிடவே பாரில்
விண் வேந்தன் மைந்தனாகினார் (2)

1. தீர்க்கர் உறைத்த வாக்கின்படியே
மார்க்கம் திறக்க மனிதனானார்
வாக்கு மாறா தேவ மைந்தன்
ஏழைக் கன்னி மடியில் உதித்தார்
மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே
தூதரோடு நாமும் பாடுவோம்

2. மண்ணில் கொடிய இருள் நீங்க
மன்னன் ஜீவ ஒளியாய் தோன்றினார்
விண்ணில் மா ஒளிவிளங்க
மன்னர் மூவர் தேடி வந்தார்
மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே
தூதரோடு நாமும் பாடுவோம்

MARITHOR EVARUM UYIRTHELUVAR


மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்
  பல்லவி
மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்,
வானெக்காளத் தொனி முழங்க.

அனுபல்லவி
எரி புகை மேக ரத மேறி
ஏசு மகா ராஜன் வருங்கால்.

சரணங்கள்

1. தூதர் மின் னாற்றிசை துலங்க,
ஜோதி வான் பறை இடி முழங்க,
பாதகர் நெஞ்சம் நடுநடுங்க,
பரிசுத் தோர் திரள் மனதிலங்க.

2. வானம் புவியும் வையகமும்
மட மட வென்று நிலை பெயர,
ஆன பொருளெல்லாம் அகன் றோட,
அவரவர் தம் தம் வரிசையிலே.

3. அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர்
அழியா மேனியை அணிந்திடுவார்;
எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்
என்றும் வாழும் ஜோதிகளாய்.

MAA MAATCHI KARTHAR SASTANGAM SEIVOM


1. மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்
வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்
நம் கேடகம் காவல் அனாதியானோர்
மகிமையில் வீற்றுத் துதி அணிந்தோர்

2. சர்வ வல்லமை தயை போற்றுவோம்
ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம்
குமுறும் மின்மேகம் கோபரதமே
கொடும் கொண்டல் காற்றிருள் சூழ்பாதையே

3. மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்
என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்
ஆ, உருக்க தயை! முற்றும் நிற்குமே
மீட்பர் நண்பர் காவலர் சிருஷ்டிகரே

4. ஆ, சர்வ சக்தி! சொல்லொன்னா அன்பே!
மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே
போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும்
மெய் வணக்கமாய் துதி பாடலோடும்

MAASILLA DEVA PUTHIRAN

மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானார், ஜெய! ஜெய! (2)
மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானாரே, ஜெய! ஜெய!
மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானார், ஜெய! ஜெய!

1. ஆசீர்வாதமே! - - - - கன தேசார் நீதமே
ஆசீர்வாதமே! - - - - கன தேசார் நீதமே - - ஒளிர்
குhசினி மீததி நேசப் பி…ரகாச விண் வாச கிருபாசன
- மாசில்லாத்

2. சத்திய வாசகர் - - - - சதா - - நித்திய தேசிகர்
சத்திய வாசகர் - - - - சதா - - நித்திய தேசிகர் - - வளர்
பெத்லகேம் ஊர்தனிலே கரி சித்துக் கன்னி…யாஸ்திரி வித்தினில்
- மாசில்லாத்

3. அந்தரம் பூமியும் - - - - அதி - - சுந்தர நேமியும்
அந்தரம் பூமியும் - - - - அதி - - சுந்தர நேமியும் - - தினம்
ஐந்தொரு நாளினிலே தரு முந்தின மூ...ன்றிலொன்றாகிய
- மாசில்லா

MOOLAI KAL KRISHTHUVE


1. மூலைக் கல் கிறிஸ்துவே
அவர்மேல் கட்டுவோம்
அவர் மெய் பக்தரே
விண்ணில் வசிப்போராம்
அவரின் அன்பை நம்புவோம்,
தயை பேரின்பம் பெறுவோம்

2. எம் ஸ்தோத்ரப் பாடலால்
ஆலயம் முழங்கும்
ஏறிடும் எம் நாவால்
திரியேகர் துதியும்
மா நாமம் மிக்கப் போற்றுவோம்,
ஆனந்தம் ஆர்க்கப் பாடுவோம்

3. கிருபாகரா, இங்கே
தங்கியே கேட்டிடும்
மா ஊக்க ஜெபமே
பக்தியாம் வேண்டலும்
வணங்கும் அனைவோருமே
பெற்றிட ஆசி மாரியே

MEI JOTHIYAM NAL MEETPARE

1. மெய் ஜோதியாம் நல் மீட்பரே,
நீர் தங்கினால் ராவில்லையே;
என் நெஞ்சுக்கும்மை மறைக்கும்
மேகம் வராமல் காத்திடும்.

2. என்றைக்கும் மீட்பர் மார்பிலே,
நான் சாய்வது பேரின்பமே;
என்றாவலாய் நான் ராவிலும்
சிந்தித்துத் தூங்க அருளும்.

3. என்னோடு தங்கும் பகலில்,
சுகியேன் நீர் இராவிடில்;
என்னோடே தங்கும் ராவிலும்
உம்மாலே அஞ்சேன் சாவிலும்.

4. இன்றைக்குத் திவ்விய அழைப்பை
அசட்டை செய்த பாவியை
தள்ளாமல் வல்ல மீட்பரே,
உம்மண்டை சேர்த்துக் கொள்ளுமே.

5. வியாதியஸ்தர், வறியோர்,
ஆதரவற்ற சிறியோர்,
புலம்புவோர் எல்லாரையும்
அன்பாய் விசாரித்தருளும்.

6. பேரன்பின் சாகரத்திலும்
நான் மூழ்கி வாழுமளவும்,
என் ஆயுள்காலம் முழுதும்
உம் அருள் தந்து காத்திடும்.

RAJAN THAVEETHIN OORILE RAKKAALAM

ராஜன் தாவீதின் ஊரினிலே
  ராஜன் தாவீதின் ஊரினிலே
ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
மந்தையைக் காக்க
விண்தூதர்கள் இறங்க
விண் ஜோதி கண்டவரே

1. திகையாதே கலங்தாதே
மகிழ்விக்கும் செய்தியுண்டு
ராஜாதி ராஜன் வல்லமைத் தேவன்
மானிடனாய் உதித்தார்

2. ஒரு மாட்டுத் தொழுவத்தினில்
அன்னை மரியின் மடியினில்
புல்லணை மீதினிலே
கடுங்குளிர் நேரத்தில்
பாலகனாய் பிறந்தார்

3. நட்சத்திரத்தின் ஒளியிலே
மூன்று ஞானியர் வந்தனரே
பொன் வெள்ளைத் தூபம்
காணிக்கையேந்தி
பாதம் பணிந்தனரே

RAJAN PAALAN PIRANTHANARE


ராஜன் பாலன் பிறந்தனரே
  ராஜன் பாலன் பிறந்தனரே
தாழ்மையான தரணியிலே

ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரே
ஏழ்மையானதொரு மாட்டுக் கொட்டில்தனில்
தாழ்மையாய் அவதரித்தார்
… ராஜன்

1. அன்னை மரியின் கர்ப்பத்திலுதித்தார்
அன்பன் ஏழையாய் வந்தார்
அவர் மண்ணினில் மானிடரை
காக்க வென்றே அவதரித்தார்
… ராஜன்

2. பாரில் பாவம் போக்கவே பாங்குடன்
மானிட ஜென்மம் எடுத்தார்
அவர் பாதம் பணிந்திடுவோம்
பாலனின் அன்புக்கோர் எல்லையுமுண்டோ
மானிட ஜென்மம் எடுத்தார்
… ராஜன

RAJA UM PRASANNAM POTHUMAIYAH


ராஜா உம் பிரசன்னம் போதுமையா
  ராஜா உம் பிரசன்னம் போதுமையா
எப்போதும் எனக்குப் போதுமையா
பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம்

1. அதிகாலமே தேடுகிறோன்
ஆர்வமுடன் நாடுகிறேன்

2. உலகமெல்லாம் மாயையையா
உம் அன்பொன்றே போதுமையா

3. இன்னும் உம்மை அறியணுமே
இன்னும் கிட்டி சோணுமே

4. கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே

5. ஆட்கொண்ட அதிசயமே
ஆறதலே அடைக்கலமே

6. துதியினிலே வாழ்பவரே
துணையாளரே என் மணவாளரே

7. அநாதி தேவன் அடைக்கலமே
அவர் புயங்கள் ஆதாரமே

8. சகாயம் செய்யும் கேடகமே
மகிமை நிறை பட்டயமே

9. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே

10. பெலப்படுத்தும் போதகரே
நிலைநிறுத்தும் நாயகரே

RAJATHI RAJATHI RAAJAN

ராஜாதி ராஜாதி ராஜன்
  ராஜாதி ராஜாதி ராஜன்
ராஜாதி ராஜனே
ராஜாதி ராஜாதி ராஜன்
ராஜாதி ராஜன் இயேசு, இயேசுவே

1. பாவத்தை போக்கிட தேவன் வந்தார்
பாவத்தை தீப மானார்
பரம பிதா தன் அன்பையீந்து
உலகுக்கு ஒளியாய் அவதரித்தார் -- ராஜாதி

2. ஆயர்கள் போற்றிடும் திருவிளக்கே
சாஸ்திரிகள் வணங்கினாரே
காரிருள் நீக்கிடும் திருச்சுடரே
காலமெல்லாம் எந்தன் புகலிடமே – ராஜாதி

3. வினை யாவும் நீக்கிட நீர் பிறந்தீர்
பிணி யாவும் அகற்றிடவே
ஒளியாக இதயத்தில் நீர் நிறைந்தீர்
வழியாக வாழ்வினில் நீர் இருப்பீர் – ராஜாதி

varusha pirappam indru pudhu bakthiyudane

வருஷப் பிறப்பாம் இன்று
  1. வருஷப் பிறப்பாம் இன்று
புது பக்தியுடனே
தேவரீரிடத்தில் வந்து
வாழ்த்தல் செய்ய இயேசுவே
உந்தன் ஆவியை அளித்து
என்னைப் பலப்படுத்தும்
அடியேனை ஆதரித்து
வழிகாட்டியாய் இரும்

2. இது கிருபை பொழியும்
வருஷம் ஆகட்டுமேன்
என்னில் ஒளி வீசச்செய்யும்
என் அழுக்கை அடியேன்
முழுவதும் கண்டறிந்து
அருவருக்கச் செய்யும்
பாவம் யாவையும் மன்னித்து
நற்குணத்தை அளியும்

3. நீர் என் அழுகையைக் கண்டு
துக்கத்தாலே கலங்கும்
அடியேனைத் தேற்றல் செய்து
திடன் அளித்தருளும்
இந்த புது வருஷத்தில்
பாவத்துக்கும் கேட்டுக்கும்
தப்புவித்து என்னிடத்தில்
கிருபை கூர்ந்தருளும்

4. மாயமற்ற கிறிஸ்தோனாக
இந்த வருஷத்திலே
நான் நடக்கத்தக்கதாக
ஈவளியும் கர்த்தரே
யாவர்மேலும் அன்பின் சிந்தை
வைத்து தெய்வ பக்தியை
எனக்கு ரட்சிப்புண்டாக
காண்பித்திருப்பேனாக

5. பூரிப்பாய் இவ்வருஷத்தை
நான் முடிக்க என்னை நீர்
தாங்கி உந்தன் திருக் கையை
என்மேல் வைக்கக்கடவீர்
வருத்தம் வந்தாலும் உம்மை
நம்பிப் பற்றிக்கொள்ளுவேன்
மரித்தாலும் பேரின்பத்தை
நான் அடைந்து வாழுவேன்.

vaana thoothar senaigal


வான தூதர் சேனைகள்
  வான தூதர் சேனைகள்
கீதங்களைப் பாடியே
ஓய்வின்றி துதித்துப் பாலனை வாழ்த்தினர் (2)

1. ராவேளை மேய்ப்பர்கள் மந்தை காக்கையில்
தோன்றினர் தூதர்கள் அட்சணமே
அச்சத்தை நீக்கியே மேய்ப்பரிடம்
நற்செய்தி கூறியே மகிழ்வித்தனர்
சேர்ந்து நாமும் சென்றங்கு
காண்போம் நம் பாலனை
- வானதூதர்

2. பொன் தூபம் வெள்ளைப் போளம் ஏற்றிடுவோம்
சென்றனர் பாலனை தரிசிக்க
வான் நட்சத்திரத்தின் ஒளியிலே
மாட்டுத் தொழுவத்தை அடைந்தனர்
சேர்ந்து நாமும் சென்றங்கு
காண்போம் நம் பாலனை
- வானதூதர்

vaanam boomiyo paraaparan manidan

வானம் பூமியோ? பராபரன்
  பல்லவி

வானம் பூமியோ? பராபரன்
மானிடன் ஆனாரோ? என்ன இது?

அனுபல்லவி

ஞானவான்களே, நிதானவான்களே, - என்ன இது? – வானம்

சரணங்கள்

1. பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்
பொறுமைக் கிருபாசனத்துரை,
பூபதி வந்ததே அதிசயம்! – ஆ! என்ன இது? – வானம்

2. சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,
நித்ய பிதாவினோர்ம
கத்துவக் குமாரனோ இவர்? – ஆ! என்ன இது? – வானம்

3. மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலே
கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,
நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! – ஆ! என்ன இது? – வானம்

4. வேறே பேரல்ல, சுரர் விண்ணவர் ஆருமல்லளூ
மாறில்லாத ஈறில்லாத
வல்லமைத் தேவனே புல்லில் கிடக்கிறார்! – ஆ! என்ன இது? – வானம்

5. சீயோனின் மகளே, இனி திரிந்தலையாதே
மாயமென்ன? உனக்குச் சொல்லவோ?
வந்தவர் மணவாளனல்லவோ? – ஆ! என்ன இது? – வானம்

VAANAM VALTHATTUM VAIYAM POTTRATTUM LYRICS

வானம் வாழ்த்தட்டும்
வானம் வாழ்த்தட்டும் வையம் போற்றட்டும்
பூமி மகிழட்டும் பூதலம் பணியட்டும்
பாடுங்கள் (2) பாலன் இயேசு இன்று பிறந்தார் (2)
Merry (4) Christmas (4)

1. காலம் சிந்தும் கானம் தாலாட்டு பாடிடுதே
மேகம் சிந்தது வானம் தேனாக மாறிடுதே
குளிரும் பணியும் வாட்டிட
குளிரில் கோமகன் தூங்கிட
விண்மீன்கள் கூட்டமே ஒளிருங்கள்
விண் பாலனோடு விளையாடவே
வா வா வா வானத்து வெண்ணிலவே

2. ஏதேன் தந்த பாவம் சாபங்கள் நீங்கிடவே
ஏழை கோலம் கொண்டார் இயேசு பாலனின்றே
அன்னை மரியின் மடியிலே
அன்பின் ரூபம் ஆனாரே
இனி மீட்க வந்த தேவ மைந்தனே
இனி பாடவைத்த இயேசு பாலனே
வா வா வா வாழ்த்து பாடுகிறேன்

vaanor rajan piranthar piranthar

வானோர் ராஜன் பிறந்தார் பிறந்தார்
  வானோர் ராஜன் பிறந்தார் பிறந்தார் (2)

1. பூவினை மீட்கப் பரலோகப் பூமான் பூதலந்தனில் பிறந்தார்
பூட்டிய வீட்டுயர் வாசலைத் திறக்கப் பூலோகத்தில் பிறந்தார் (2)
வாசல்களே உயருங்கள் கதவுகளே திறவுங்கள் (2)
வானாதி ராஜன் வல்லமை தேவனை வாழ வழிவிடுங்கள் (2)

2. ஆக்கினைத் தீர்ப்பை அடையாதவாறு அடைக்கலந்தரப் பிறந்தார்
ஆருயிரீந்து அன்பினைக் காட்ட ஆண்டவரே பிறந்தார் (2)
ஆத்துமமே ஸ்தோத்தரி அல்லேலுயா ஆர்ப்பரி (2)
ஆண்டவரான அருளுள்ள வள்ளல் ஆள ஆசைப்படுங்கள் (2)

vaan nilave nee vaa vaa baalanai


வான் நிலவே நீ வா வா
  வான் நிலவே நீ வா வா, பாலனை பாராட்ட வா
வீசும் தென்றலே வா வா, விண்மணி மகிழ்ந்திட வா
மரியன்னை மடியில் மகிமையின் தேவன் மானிடன் ஆனாரே
பாடுவோம் போற்றுவோம் புகழுவோம்
வான் நிலவே நீ வா வா, வா வா

1. வாடை வீசும் நேரம், பெத்தலை சத்திர ஓரம்
கண்மணி அவதாரம் (2)
கந்தை ஆடை தானோ, பசும்புல்லணை மேடை தானோ (2)
என் பாவம் நீக்க இன்று என் இயேசு மண்ணில் வந்தார்
- வான் நிலவே

2. வானில் தவழும் மேகம், மேகங்கள் நடுவில் இராகம்
தூதரின் பண் கேட்குதே (2)
வானம் தேன் சிந்துதே, புது கானம் தாலாட்டுதே (2)
என் பாவம் நீக்க இன்று என் இயேசு மண்ணில் வந்தார்
- வான் நிலவே

vaalibar thamakoon athuvaagum

1. வாலிபர்தமக்கூண் அதுவாகும்;
வயோதியர்க்கும் அதுணவாகும்;
பாலகர்க்கினிய பாலும் அதாம்;
படிமீ தாத்மபசி தணிக்கும்.

2. சத்துருப் பேயுடன் அமர்புரியும்
தருணம் அது நல் ஆயுதமாகும்;
புத்திரர் மித்திரரோடு மகிழும்
பொழுதும் அதுநல் உறவாகும்.

3. புலைமேவிய மானிட
ரிதயம் பெறுதற்கதுமருந்தாய்;
நிலையா நரர்வாணாள் நிலைக்க
நேயகாய கற்பம் அதாம்.

4. கதியின் வழிகாணாதவர்கள்
கண்ணுக்கரிய கலிக்கம் அது;
புதிய எருசாலேம்பதிக்குப் போகும்
பயணத்துணையும் அது

vidiyarkaalathu velliye thondri

1. விடியற்காலத்து வெள்ளியே தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்
உதய நக்ஷத்திரமே ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்

2. தண் பனித் துளிகள் இலங்கும் போது
முன்னணையில் அவர் தூங்குகின்றார்
வேந்தர் சிருஷ்டிகர் நல் மீட்பர் என்று
தூதர்கள் வணங்கிப் பாடுகின்றார்

3. ஏதோமின் சுகந்தம் கடலின் முத்து
மலையின் மாணிக்கம் உச்சிதமோ?
நற்சோலையின் வெள்ளைப்போளம் எடுத்து
தங்கமுடன் படைத்தல் தகுமோ?

4. எத்தனை காணிக்கைதான் அளித்தாலும்
மீட்பர் கடாக்ஷம் பெறல் அரிதே
நெஞ்சின் துதியே நல் காணிக்கையாகும்
ஏழையின் ஜெபம் அவர்க்கருமை.

5. விடியற்காலத்து வெள்ளியே தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்
உதய நக்ஷத்திரமே ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்

win thoothar vaanil thondriye thondriye


விண் தூதர் வானில் தோன்றியே
  விண் தூதர் வானில் தோன்றியே தோன்றியே
நற்செய்தி ஒன்று கூறினார்
இருள் நீக்கும் மெய் இயேசு பாலகன்
இன்று பெத்லகேமில் பிறந்திருக்கிறார்
துன்பம் இன்பமாக மாறிட
மாந்தர் உள்ளம் மகிழ்ந்தாடுதோ!

1. சருவாதிலோக தேவனே
மானிடனாகத் தோன்றினார்
சந்திக்க வந்த உந்தனின்
சாபம் தனைப் போக்கினார்

2. பரலோக மேன்மை நீங்கியே
தன்னைத் தாழ்த்தி பூமியில் வந்தார்
மாந்தர் பாவம் யாவும் போக்கவே
பலியாகவே மாறினார்

3. தேவன் மாந்தர் உறவை ஏற்கவே
பாலமாக இயேசு பிறந்தார்
பாவிகள் மேல் கொண்ட அன்பினால்
தேவாதி தேவன் உதித்தார்

vinnappathai ketpavare

விண்ணப்பத்தைப் கேட்பவரே
  விண்ணப்பத்தைப் கேட்பவரே - என்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

2. மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே

3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்

4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா

5. குருடப்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்

6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே

vinnil oor natchathiram kanden


விண்ணில் ஓர் நட்சத்திரம் கண்டேன்
  1. விண்ணில் ஓர் நட்சத்திரம் கண்டேன்
அதை எண்ணி வியப்பு மிக கொண்டேன்
அதன் காரணம் என்னவென்று கேட்டேன்
தேவன் மானிடன் ஆனார் என்றறிந்தேன்
ஆ…ஆ…ஆ…

அந்த பாலன் இயேசு ராஜன்
அவர் பாதம் பணிவோம் (2)

2. மந்தை காக்கும் மேய்ப்பர் சிலர் கண்டேன்
அவர் விந்தையான செய்தி சொல்ல கேட்டேன்
தேவ தூதர்கள் கூடி பாடிய பாடலையும்
இயேசுவை கண்டதையும் கேட்டேன்
ஆ…ஆ…ஆ…

3. ஒட்டகத்தில் மூவர் செல்ல கேட்டேன்
அதை திட்டமாய் அறிய அங்கு சென்றேன்
இயேசுவை தரிசித்த ஞானிகள் மூவர்
தங்கள் தேசம் திரும்புவதை கண்டேன்
ஆ…ஆ…ஆ…

vinnor magilthu paadum paadal


விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்
  விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்
உம்மைத் தாலாட்ட
மண்ணோர் உவந்து பாடும் பாடல்
உம்மை வரவேற்க

1. தந்தை நெஞ்சில் மஞ்சம் கொண்ட
வார்த்தை நீயன்றோ
தேவ வாழ்வில் தூய மேன்மை
ஏன் துறந்தாயோ
என் தாழ்ந்த உள்ளம் தன்னில்
நீ வந்தருள்வாயோ
- விண்ணோர்

2. அன்னை மரியும் அவரது மடியில்
உம்மைத் தாலாட்ட
மாபெரும் மகிழ்வை வழங்கும் செய்தி
வானவன் அறிவித்து
என் வாழ்வில் இன்பம் பொழிய
நின் வாழ்வை ஈந்தாயோ
- விண்ணோh

virunthu vaippome nalla virunthu vaipome


விருந்து வைப்போமே நல்ல விருந்து வைப்போமே
  அல்-லே-லுயா அல்லேலுயா (2)

விருந்து வைப்போமே நல்ல விருந்து வைப்போமே
ஜாதிமதம் பேதமின்றி அனைவருக்கும் நல்லதொரு
கிறிஸ்மஸ் விருந்து வைப்போமே - அல்-லே-லுயா

1. பெத்தலையில் பிறந்தாரே அல்லேலுயா
மாட்டுக்கொட்டிலில் பிறந்தாரே அல்லேலுயா
பெத்தலையில் பிறந்தவரை போற்றி துதிமனமே
மாட்டுக்கொட்டில் பிறந்தவரை போற்றி துதிமனமே
மாட்டுக்கொட்டில் ஏழ்மை கோலம்
தாழ்மையுள்ள முன்னணையில் நீர் பிறந்தீரே
விண்ணுலகம் துறந்தீரே மண்ணுலகம் மீட்டீரே (2)
பாவம் போக்கிடவே நீர் பிறந்தீரே - விருந்து

2. ஆயர் பாலர் தேடினர் அல்லேலுயா
பாலன் இயேசு தோன்றினார் அல்லேலுயா
கன்னி மகவாய் பிறந்தவரை போற்றி துதிமனமே
ஏழ்மை கோலம் ஏற்றவரை போற்றி துதிமனமே
மேய்ப்பர்களும் ஞானியரும்
வந்தும்மை பணிந்து தொழுதனரே
அன்று சொன்ன தீர்க்கனின் மொழி நிறைவேறுதே (2)
பாவம் போக்கவே நீர் பிறந்தீரே - விருந்து

3. ஆடுவதும் பாடுவதும் கிறிஸ்மஸ் ஆகுமோ
உண்டு உடுத்தி மகிழ்ந்து விட்டால் கடமை தீருமோ
இயேசுவை போல் கிறிஸ்தவர்கள் அன்புகாட்டனும்
கிறிஸ்தவரின் தாழ்மை இந்த உலகம் போற்றனும்
உன்னைப்பார்த்து உலகில் வாழும் மக்கள் திருந்தனும்
உனது உருவில் இயேசு இந்த உலகம் பார்க்கனும் - விருந்து

veenaiye olithidu vinnavar piranthar


வீணையே ஒலித்திடு விண்ணவர் பிறந்தார்
  வீணையே ஒலித்திடு
விண்ணவர் பிறந்தார்
கவிதையே மலர்ந்திடு
கர்த்தர் பிறந்தார் (2)

தேவன் சாரோனின் வண்ண ரோஜா
பள்ளத்தாக்கின் அழகு லீலி (2)
- வீணையே

1. பூந்தென்றலே பார் வெண்ணிலவே
விண் மீன்களே மகிழ்ந்து பாடுங்கள் - தேவன்

2. பூங்குயில்களே ஆடும் மயில்களே
தேன் மலர்களே மகிழ்ந்து போற்றுங்கள் - தேவன்

3. இன்பாடல்கள் உம் கிருபைகள்
என்றும் பாடுவேன் ஏசு பாலனே - வீணையே

veru jenmam venum manam

வேறு ஜென்மம் வேணும்
  வேறு ஜென்மம் வேணும், - மனம்
மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.

1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்
தேறுதலான விண்பேறு பெற இங்கே; - வேறு

2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
தேவனின் சாயலை மேவுவதாகிய; - வேறு

3. மானிடரின் அபிமானத்தினாலல்ல,
வானவரின் அருள் தானமாக வரும்; - வேறு

4. ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி,
மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; - வேறு

5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,
சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; - வேறு

6. மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,
விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்; - வேறு

IYANE UMADHU THIRUVADI KALUKKE

1. ஐயனே! உமதுதிருவடி களுக்கே
ஆயிரந்தரந் தோத்திரம்!
மெய்யனே! உமது தயைகளை அடியேன்
விவரிக்க எம்மாத்திரம்?

2. சென்றதாம் இரவில் தேவரீனென்னைச்
சேர்த்தரவணைத்தீரே;
அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை
யாகவா தரிப்பீரே

3. இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்
ஏழையைக் குணமாக்கும்
கருணையாய் என்னை உமதகமாக்கிக்
கன்மமெல்லாம் போக்கும்

4. நாவிழி செவியை, நாதனே, இந்த
நாளெல்லாம் நீர் காரும்,
தீவினை விலகிநான் திருமுகம் நோக்க,
தெய்வமே, அருள்கூரும்

5. கைகாலால் நான் பவம்புரி யாமல்
சுத்தனே துணை நில்லும்
துய்யனே, உம்மால் தான் எனதிதயம்
தூய்வழியே செல்லும்

6. ஊழியந் தனைநான் உண்மையாச் செய்ய
உதவி நீர் செய்வீரே
ஏழைநான் உமக்கே இசையநல் ஆவி
இன்பமாய்ப் பெய்வீரே

7. அத்தனே! உமது மகிமையை நோக்க,
அயலான் நலம்பார்க்கச்
சித்தமாய் அருளும், மெய்விசுவாசம்,
தேவனே உமக்கேற்க

8. இன்றும் என் மீட்பைப் பயம் நடுக்கத்தோ
டேயடியேன் நடத்தப்
பொன்றிடா பலமே தாரும், என் நாளைப்
பூவுலகில் கடத்த

9. இந்த நாளிலுமே திருச்சபை வளர
ஏகா தயைகூரும்
தந்தையே, நானதற் குதவியாயிருக்கத்
தற்பரா வரந்தாரும்

IYAYAAH NAAN ORU MAAPAAVI ENNAI

ஐயையா, நான் ஒரு மாபாவி - என்னை
ஆண்டு நடத்துவீர், தேவாவி!

சரணங்கள்

1. மெய் ஐயா, இது தருணம், ஐயா - என்றன்
மீதிலிரங்கச் சமயம் ஐயா
ஐயையா, இப்போ தென்மேல் இரங்கி - வெகு
அவசியம் வரவேணும், தேவாவி! --- ஐயையா

2. எனதிருதயம் பாழ்நிலமாம் - ஏழை
என்னைத் திருத்தி நீர் அன்பாகத்
தினமும் வந்து வழி நடத்தும் - ஞான
தீபமே, உன்னத தேவாவி! --- ஐயையா

3. ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம் - தினம்
அருவருத்து நான் தள்ளுதற்கு
வாகன சத்த மனம் தருவீர் - நீர்
வல்லவராகிய தேவாவி! --- ஐயையா

4. பத்தியின் பாதை விலகாமல் - கெட்ட
பாவத்தில் ஆசைகள் வையாமல்
சத்திய வேதப்படி நடக்க - என்னைத்
தாங்கி நடத்திடும், தேவாவி! --- ஐயையா

5. அன்பு, பொறுமை, நற்சந்தோஷம் - என்
ஆண்டவரின் மேல் விசுவாசம்,
இன்பமிகு மெய்ச் சமாதானம் - இவை
யாவும் தருவீரே, தேவாவி! --- ஐயையா

6. ஏசுகிறிஸ்துவில் நான் சார்ந்து - அவர்
இடத்திலேயே நம்பிக்கை வைக்க,
மாசில்லாத் துய்யனே, வந்துதவும் - நீர்
வராமல் தீராதே, தேவாவி! --- ஐயையா

IYAYYA NAAN PAAVI ENNAI AALUM

ஐயையா, நான் பாவி - என்னை
ஆளும் தயாபரனே!

சரணங்கள்

1. பொய்யாம் உலக உல்லாசாத்தினால் மனம்
போனவழி நடந்தேன் – ஏ
சையா, அபயம்! அபயம்! இரங்கும், பேர்
ஐயா, என் தாதாவே --- ஐயையா

2. எத்தனை சூதுகள், எத்தனை வாதுகள்,
எத்தனை தீதுகளோ? - எனது
அத்தனே! என் பிழை அத்தனையும் பொறுத்
தாண்டருளும், கோவே --- ஐயையா

3. வஞ்சகமோ, கரவோ, கபடோ, மாய்
மாலமோ, ரண்டகமோ? – மனச்
சஞ்சலம் நீக்கி எனக்கருள் செய்யும்,
சமஸ்த நன்மைக் கடலே --- ஐயையா

4. பொய்யும், புரட்டும், உருட்டும், திருட்டும்,
பொறாமையும், ஆணவமும், விட்
டுய்யும்படி அருள் செய்யும், அனாதி ஓர்
ஏகதிரித்துவனே --- ஐயையா

5. உன்னை யாவற்றிலும் பார்க்கச் சிநேகித்
துன தடியார்களையும் – நான்
என்னைச் சிநேகிக்கிறாற்போல் சிநேகிக்க
ஏவும், பராபரனே --- ஐயையா

ORUPOTHUM MARAVATHA UNMAI TAMIL LYRICS

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க,
உனக்கென்ன குறை மகனே?

அனுபல்லவி

சிறுவந்தொட்டுனை யொரு
செல்லப் பிள்ளைபோற் காத்த
உரிமைத் தந்தை யென்றென்றும்
உயிரோடிப்பாருன்னை --- ஒருபோதும்

சரணங்கள்

1. கப்பலினடித் தட்டில் - களைப்புடன் தூங்குவார்,
கதறுமுன் சத்தங்கேட்டால் - கடல் புசலமர்த்துவார்,
எப்பெரிய போரிலும் - ஏற்ற ஆயுதமீவார்,
ஏழைப்பிள்ளை உனக்கு - ஏற்ற தந்தை நானென்பார் --- ஒருபோதும்

2. கடல் தனக் கதிகாரி - கர்த்தரென் றறிவாயே,
கடவாதிருக்க வெல்லை - கற்பித்தாரவர்சேயே,
விடுவாளோ பிள்ளையத் தாய் - மேதினியிற்றனியே?
மெய்ப் பரனை நீ தினம் - விசுவாசித்திருப்பாயே --- ஒருபோதும்

3. உன்னாசை விசுவாசம் - ஜெபமும் வீணாகுமா?
உறக்க மில்லாதவர் கண் - உன்னைவிட டொழியுமா?
இந்நில மீதிலுனக் - கென்னவந்தாலும் சும்மா
இருக்குமா அவர்மனம்? - உருக்கமில்லாதே போமா? --- ஒருபோதும்

4. உலகப் பேயுடலாசை - உன்னை மோசம் செய்யாது,
ஊக்கம் விடாதே திரு - வுளமுனை மறவாது,
இலகும் பரிசுத்தாவி - எழில் வரம் ஒழியாது,
என்றும் மாறாத நண்பன் - இரட்சகருடன் சேர்ந்து --- ஒருபோதும்

ORU MARUNTHARUM KURUMARUNTHU

ஒரு மருந்தரும் குருமருந்-(து)
உம்பரத்தில் நான் கண்டேனே.

அனுபல்லவி

அருள் மருந்துடன் ஆனந்த மருந்து,
ஆதியிற்றனாய் முளைத்த மருந்து,
வரும் வினைகளை மாற்றும் மருந்து,
வறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து. --- ஒரு

சரணங்கள்

1. சிங்கார வனத்தில் செழித்த மருந்து,
ஜீவதரு மீதில் படர்ந்த மருந்து,
அங்குவிளை பவம் மாற்றும் மருந்து,
வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து --- ஒரு

2. மோசே முதல் முன்னோர் காணா மருந்து,
மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து,
தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து,
தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து --- ஒரு

3. தீராத குஷ்டத்தைத் தீர்த்த மருந்து,
செவிடு குருடூமை தின்ற மருந்து,
மானா திருத்துவ மான மருந்து,
மனுவாய் உலகினில் வந்த மருந்து. --- ஒரு

4. செத்தோரை உயிரோ டெழுப்பும் மருந்து,
ஜீவன் தவறா தருளும் மருந்து,
பத்தரைச் சுத்திகரித்திடும் மருந்து,
பரம வாழ்வினில் சேர்க்கும் மருந்து. --- ஒரு

YEASUVUKKE OPPUVITHEN YAVAIYUM

1. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
யாவையும் தாரளமாய்
என்றும், அவரோடு தங்கி
நம்பி நேசிப்பேன் மெய்யாய்

ஒப்புவிக்கிறேன், ஒப்புவிக்கிறேன்
நேச இரட்சகர்! நான் யாவும் ஒப்புவிக்கிறேன்.

2. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
அவர் பாதம் பணிந்தேன்
லோக இன்பம் யாவும் விட்டேன்
இன்றே ஏற்றுக் கொள்ளுமேன். --- ஒப்பு

3. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
முற்றும் ஆட்கொண்டருளும்
நான் உம் சொந்தம் நீர் என் சொந்தம்
சாட்சியாம் தேவாவியும். --- ஒப்பு

4. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
நாதா! அடியேனையும்
அன்பு பெலத்தால் நிரப்பி
என்னை ஆசீர்வதியும். --- ஒப்பு

OPILLA THIRU IRA

1. ஒப்பில்லா - திரு இரா!
இதில் தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
அன்பின் அதிசயமாம்.

2. ஒப்பில்லா - திரு இரா!
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்;
எத்தனை தாழ்த்துகிறார்;

3. ஒப்பில்லா - திரு இரா!
ஜென்மித்தார் மேசியா;
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து, பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்.

HOSANNA UNNATHATHIL HOSANNA

ஓசன்னா (2) உன்னதத்தில் ஓசன்னா
உம்மை உயர்த்திடுவோம் துதி நிறைவுடன்
கர்த்தரே நீர் உயர்த்திடுவீர்
ஒசன்னா ராஜ ராஜனே

மகிமை (2) மகிமை ராஜ ராஜனுக்கே
உம்மை உயர்த்திடுவோம் துதி நிறைவுடன்
கர்த்தரே நீர் உயர்த்திடுவீர்
மகிமை ராஜ ராஜனுக்கே

OO DEVANUKKU MAGIMAI THUKKI EDUTHAR

ஓ , தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்
என்னைத் தூக்கி எடுத்தார் இயேசு
தம் கரத்தை நீட்டி இரட்சித்தாரே
ஓ தேவனுக்கு மகிமை

இயேசுவை நேசிக்கிறேன்
மென்மேலும் நேசிக்கிறேன்
அக்கரையில் நின்று நானும் அவரை
என்றென்றும் வாழ்த்துவேன்

ALAITHEERE YESUVE ANBODU YENNAI ALAITHEERE

அழைத்தீரே ஏசுவே
அன்போடே என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே

1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
என் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோ
என் காரியமாக யாரை அழைப்பேன்
என்றீரே வந்தேனிதோ --- அழைத்தீரே

2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
என்னை விட்டோடும் என் ஜனமே
எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்
எப்படி நான் மறப்பேன் --- அழைத்தீரே

3. ஆதி விஸ்வாசம் தங்கிடவே
ஆண்டவர் அன்பு பொங்கிடவே
ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
நல் பூரண தியாகப் பாதை நடந்தே
நன்றியுடன் உழைப்பேன் --- அழைத்தீரே

4. எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே
ஏழை ஜனத்தை மீட்டிடுமே
எந்தன் பித்த சித்தமே எந்தன் போஜனமும் அதுவே
என் பிரணனைக்கூட நேசித்திடாமல்
என்னையும் ஒப்படைத்தேன் --- அழைத்தீரே

5. ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
ஆசாபாசங்கள் பெருகிடுதே
ஆயிரம் ஆயிரமே நரக வழிபோகின்றாரே
ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
ஆண்டவரே இரங்கும் --- அழைத்தீரே

6. பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்தே செய்திடுவேன்
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை அடைவேன் --- அழைத்தீரே

ONDRUMILLAI NAAN ANBU ENAKIRAVITTAL

ஒன்றுமில்லை நான் (2)
அன்பு எனக்கிராவிட்டால்
ஒன்றுமில்லை நான்

சரணங்கள்

1. பல பல பாஷை படித்தறிந்தாலும்
கல கல வென்னும் கை மணியாமே
என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் --- ஒன்று

2. கண் கண்ட பிறனிடம் அன்பு கூராதவன்
கண் காணா தேவனில் அன்பு கூருவானோ
விண்ணவர் மொழிதனை கற்றறிந்தாலும்
அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் --- ஒன்று

3. சகலத்தைத் தாங்கி சகலத்தைச் சகித்து
சகலத்தையும் விசுவாசித்து நம்பி
சாந்தமும் தயவும் பொறுமையுமுள்ள
அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் --- ஒன்று

HOSANNA PAADUVOM YESUVIN THASARE

ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!

சரணங்கள்

1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,
அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம்.

2. சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்,
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்.

3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்,
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்.

4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்,
ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்.

5. குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்,
கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம்.

hosanna paalar paadum rajavaam meetperke

ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே
மகிமை , புகழ் , கீர்த்தி எல்லாம் உண்டாகவே
1. கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே , நீர்
தாவீதின் ராஜா மைந்தன் , துதிக்கப்படுவீர்.

2. உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார்;
மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார்.

3. உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார்போலும்,
மன்றாட்டு , கீதம் , ஸ்தோத்திரம் கொண்டும்மைச் சேவிப்போம்

4. நீர் பாடுபடுமுன்னே பாடினார் யூதரும்;
உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும்.

5. அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல் கேளுமே;
நீர் நன்மையால் நிறைந்த காருணிய வேந்தரே.

KANGALAI YEREDUPPEN MAAMERU NERAI EN

கண்களை ஏறெடுப்பேன் - மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

அனுபல்லவி

விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் --- கண்களை

சரணங்கள்

1.காலைத் தள்ளாட வொட்டார் - உறங்காது காப்பவர்
காலைத்தள்ளாட வொட்டார்,
வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் --- கண்களை

2.பக்க நிழல் அவரே -- எனை ஆதரித்திடும்
பக்க நிழல் அவரே
எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தா- து
முக்காலம் நின்றென்னை நற்காவல் புரியவே --- கண்களை

3.எல்லாத் தீமைகட்கும் - என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் --- கண்களை

KARTHAR EN MEIPPERAI IRUKINDRAR

கர்த்தர் என் மேய்ப்பராய்
இருக்கின்றார் தாழ்வடையேன் (4)

1. அவர் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார்
குளிர் நீரோடும் ஊற்றினிலே
என்னை கூட்டிச் செல்வார் அங்கு சேர்ப்பார்
அவர் காட்டிய வழி செல்வேன் --- கர்த்தர்

2. எந்தன் ஆத்துமம் நிறைந்திடும் வண்ணம்
அவர் அன்பின் வழி வளர்ப்பார்
மரண இருள் மூடிடும் வேளை
இயேசுவே என்னோடிருப்பார் --- கர்த்தர்

3. எந்தன் பகைவர்கள் கண்களின் முன்னே
ஒரு பந்தியை ஏற்படுத்தி
சுக தைலங்கள் கொண்டென்னை தேற்றி
அபிஷேகம் செய்திடுவார் --- கர்த்தர்

4. எந்தன் ஜீவிய காலம் எல்லாம்
அவர் கிருபை வரம் பெறுவேன்
எந்தன் கர்த்தரின் வானக வீட்டில்
என்றென்றும் வாழ்ந்திடுவேன் --- கர்த்தர்

KADAL KONDHALITHU PONGA

1. கடல் கொந்தளித்துப் பொங்க
கப்பல் ஆடிச் செல்கையில்
புயல் காற்று சீறி வீச
பாய் கிழிந்து போகையில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்று
கரை சேரச் செய்திடும்

2. கப்பலிலே போவோருக்கு
கடும் மோசம் வரினும்
இடி , மின் முழக்கம் காற்று
உமக்கெல்லாம் அடங்கும்
இருளில் நீர் பரஞ்சோதி
வெயிலில் நீர் நிழலே
யாத்திரையில் திசை காட்டி
சாவில் எங்கள் ஜீவனே

3. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும்
இன்ப துன்ப காலத்தில்
எங்கள் ஆவி உம்மில் தங்கும்
இகபர ஸ்தலத்தில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்று
கரை சேரச் செய்திடும்

KADHIRAVAN ELUGINDRA KAALAIYIL IRAIVANAI

1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
துதி செய்ய மனமே - எழுந்திராய்.

2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்
திரண்ட தயை தேவை- நாடுவேன்.

3. கடவுளின் வல்லமை,கன மகிமை காணும்
இடமதில் செல்வதே - என் இஷ்டம்.

4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
ஆவலாய் நாடி நான் - போற்றுவேன்.

5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
நேயமாய் பாடி நான் - உயர்த்துவேன்.

6. மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்
கர்த்தரின் செயல்களை - சிந்திப்பேன்.

7. அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த்
தொல்லைக்கு நீங்கியே - ஒதுங்குவேன்.

8. ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர்
நேத்திரம்போல் என்னைக் - காக்கிறார்.

BOOMIKKORU PUNITHAM VANDHATHIPPO

பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ!
மன்னவனின் பிறப்பால்
பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ!
மன்னவனின் வரவால்
பாவமில்லை, இனி சாபமில்லை
இன்பத்திற்கும் இனி எல்லையில்லை
இறைவன் பிறந்ததால்

1. வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்கநாள்
கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்
இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசுவின் பிறந்தநாள்
பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள்

2. தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவர் தோன்றும் நாள்
உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்தநாள்
பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்த நாள்
பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள்

UNNADHATHIN THOOTHARGALE ONDRAGA KOODUNGAL

1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள்

ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் - அவர்
ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்க
அவர் திரு நாமமே விளங்க - (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவே
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே

2. நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்
மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்

3. இயேசுவென்னும் நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்
ராஜாதிராஜன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்

4. சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள்
மகத்துவ ராசரிவரே மாமுடி சூட்டுங்கள்

KARAM PIDITHENNAI VALI NADATHUM

1. கரம் பிடித்தென்னை வழி நடத்தும்
இயேசுவே என்னை நான் ஒப்புவிக்கிறேன் (2)
பாதை தெரியாத பாவி நானைய்யா
என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2)

இயேசுவே இரங்குமே
வழி நடத்துமே (2)

2. பாவ இருள் நீக்கி வழி நடத்தும்
பாவக்கறை போக்கி சுத்திகரியும் (2)
செம்பாவம் அகற்றி வெண்மையாக்குமே
என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) --- இயேசுவே

3. நேசரே என்னை நீர் வழி நடத்தும்
காருண்யத்தைக் காட்டி அழைத்துச் செல்லும் (2)
உறைந்த மழையைப் போல் வெண்மையாக்குமே
என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) --- இயேசுவே

4. தீபம் காட்டி என்னை வழி நடத்தும்
ஆவியை கொடுத்துத் தேற்றியருளும் (2)
வெளிச்சத்தின் பாதையில் அழைத்துச் சென்று
என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) --- இயேசுவே

KARTHARIN KAI KURUGAVILLAI

1. கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய் மாறிடவே
சுதன் அருள் புரிந்தனரே

பல்லவி

விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசத்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்
2. திருச்சபையே நீ கிரியை செய்வாய்
திவ்விய அன்பில் பெருகிடுவாய்
தலைமுறையாய் தலைமுறையாய்
தழைத்திட அருள் புரிவாய் --- விசுவாசியே

3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே
தஞ்சம் இயேசு உன் அரணே
தம் ஜனத்தை சீக்கிரமாய்
தம்முடன் சேர்த்துக் கொள்வார் --- விசுவாசியே

4. மேகம் போன்ற வாக்குத்தத்தம்
சூழ நின்றே காத்திருக்க
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
விரைந்து முன் ஏகிடுவாய் --- விசுவாசியே

KARTHARUKKU KAATHIRUPPOR YARUM

கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்
வெட்கப்பட்டுப் போவதில்லை -- (2)

சரணங்கள்

1. துன்பங்கள் தொல்லைகள் , கஷ்டங்கள் வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை --- கர்த்தருக்கு

2. வியாதிகள் வறுமை , வேதனை வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை --- கர்த்தருக்கு

3. தேசத்தில் கொள்ளைநோய் , யுத்தங்கள் வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை --- கர்த்தருக்கு

4. பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை --- கர்த்தருக்கு