Monday, September 7, 2015

UMMAI POL YARUNDU LYRICS

உம்மைப் போல் யாருண்டு
எந்தன் இயேசு நாதா
இந்தப் பார்தலத்தில்
உம்மைப் போல் யாருண்டு
பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
தேவா தம் அன்பினால் மன்னித்தீர் --- உம்மைப்

1. உலகம் மாமிசம் பிசாசுக் கடியில்
அடிமை யாகவே பாவி நான் ஜீவித்தேன்
நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்
மனம் போல் நடந்தேன் ஏமாற்றம் அடைந்தேன்
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
உம்மை மறந்த ஓர் துரோகி நான்
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
அடிமை உமக்கே இனி நான் --- உம்மைப்

2. இன்றைக்கு நான் செய்யும் இந்தத் தீர்மானத்தை
என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும்
நொறுக்கும் , உறுக்கும் , உடையும் வனையும்
உமக்கே உகந்த தூய சரீரமாய்
ஐம் பொறிகளையும் உமக்குள் அடக்கும்
இயேசுவே ஆவியால் நிரப்பும்
வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய் திகழ
அக்கினி என் உள்ளம் இறக்கும் --- உம்மைப்

3. வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும்
சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்
மேசியா வருகை வரையில் பலரை
சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும்
முழங்காலில் நிற்க வேதத்தை அறிய
தினந்தோறும் தேவா உணர்த்தும்
உமக்கும் எனக்கும் இடையில் எதுவும்
என்றுமே வராமல் காத்திடும் --- உம்மைப்

UMMAIYE NAAN NESIPPEN

உம்மையே நான் நேசிப்பேன் (3)
நான் பின் திரும்பேனே!

உம் சந்நிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே!

உம்மையே நான் ஆராதிப்பேன் (3)
நான் பின் திரும்பேனே!

UYIR THELUNTHARE ALLELUJAH

உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே

சரணங்கள்

1. கல்லறை திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயலிதுவே --- உயிர்

2. மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே --- உயிர்

3. எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே
எம்மனக் கலக்கங்கள் நீங்கினதாலே
எல்லையில்லாப் பரமானந்தமே--- உயிர்

4. மரணமுன் கூர் எங்கே?
பாதாள முன் ஜெய மெங்கே?
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்--- உயிர்

5. ஆவியால் இன்றும் என்றும்
ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எனக்களித்தாரே
அல்லேலுயா துதி சாற்றிடுவோம்--- உயிர்

6. பரிசுத்தமாகுதலை
பயத்தோடென்றும் காத்துக்கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே--- உயிர்

SILUVAIYAI SUMANTHUMAI PIN SELLAVE

சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே
இயேசுவே என்னையும் அழைத்தீரே
கல்வாரி மலையில் ஜீவனை இழந்துமே
நல்லதோர் வழியை வகுத்தீரே

முற்றுமாய் பலியாய் படைக்கின்றேன்
உந்தனின் திருப்பாதத்தில்
ஏற்றுக் கொள்ளும் என்னை இயேசுவே
உம் சித்தம் நிறைவேற்றிடும்

1. நேசரே உம் அடிச் சுவடுகளை
நேசித்து தொடர்வேன் என் வாழ்வினிலே
இயேசுவே உம் திரு கரங்களில் பெற்ற - நல்
சேவையை நிறைவேற்ற வாஞ்சிக்கிறேன் - முற்றுமாய்

2. நேசத்தில் நின் சித்தம் நிறைவேற்றியே
வேகமாய் உம் அண்டை வந்திடுவேன்
ஏகமாய் உம்முடன் சீயோனில் இணைந்தும்மை
யுகயுகமாக சேவை செய்வேன் - முற்றுமாய்

urakkam thelivom urchagam kolvom

உறக்கம் தெளிவோம்
உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதிவரை
கல்வாரித் தொனிதான்
மழை மாறி பொழியும்
நாள்வரை உழைத்திடுவோம்

சரணங்கள்

1. அசுத்தம் களைவோம்
அன்பை அழைப்போம்
ஆவியில் அனலும் கொள்வோம்
அவர் படை ஜெயிக்க
நம்மிடை கருத்து
வேற்றுமையின்றி வாழ்வோம் --- உறக்கம்

2. அச்சம் தவிர்ப்போம்
தைரியம் கொள்வோம்
சரித்திரம் சாட்சி கூறும்
இரத்தச் சாட்சிகள்
நம்மிடை தோன்றி
நாதனுக்காய் மடிவோம் --- உறக்கம்

3. கிறிஸ்துவுக்காய்
இழந்தவர் எவரும்
தரித்திரர் ஆனதில்லை
இராஜ்ய மேன்மைக்காய்
கஷ்டம் அடைந்தோர்
நஷ்டப்பட்டதிலை --- உறக்கம்

4. உயிர் பெறுவீர்
ஒன்று கூடுவீர்
உலர்ந்த எலும்புகளே
நீங்கள் அறியா
ஒருவர் உங்கள்
நடுவில் வந்துவிட்டார் --- உறக்கம்