Wednesday, June 10, 2015

RATCHANYAM MAGIMAI LYRICS

இரட்சண்யம் மகிமை
துதி கன வல்லமை
இயேசுவுக்கு சொந்தமல்லவோ
ஆவியின் வல்லமை
கிருபை மேல் கிருபை
தருகின்ற தேவன் அல்லவா
பாடி ஸ்தோத்தரிப்பேன்
சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்
உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன்

1.சாரோனின் ரோஜா நீரே
சீயோனில் பெரியவரே
சாத்தானை ஜெயிக்க
சத்துவம் அளிப்பீர்
பாடுவேன் அல்லேலூயா

2.காருண்யம் உள்ளவரே
கரம் பற்றி நடத்திடுமே
கண்மணி போல
காத்திட்டதாலே
பாடுவேன் அல்லேலூயா

3.சாலேமின் ராஜா நீரே
சமாதான காரணரே
ஷாலோம் என்றாலே
சமாதானம் தானே
பாடுவேன் அல்லேலூயா

4.மரணத்தை வென்றவரே
மறைவிடமானவரே
வசனத்தை அனுப்பி
குணமாக்குவீரே
பாடுவேன் அல்லேலூயா

BAYAMILLAI BAYAMILLAYE


பயமில்லை பயமில்லையே
ஜெயம் ஜெயம்தானே – 2
ஜெபத்திற்கு பதிலுண்டு
இயேசு நாமத்தில் ஜெயமுண்டு – 2
இயேசு நாமத்தில் ஜெயமுண்டு – 2
பயமில்லை பயமில்லையே
ஜெயம் ஜெயம்தானே – 2

1.ஆபிரகாமின் தேவன் என்னோடே இருக்கின்றார்
   ஆசீர்வதிக்கின்றார் பெருக செய்திடுவார் – 2
ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2
தோல்வி எனக்கில்லையே
நான் தோற்றுப்போவதில்லையே
ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே – 2
பயமில்லை பயமில்லையே
ஜெயம் ஜெயம்தானே – 2
2.இதயம் விரும்புவதை எனக்குத் தந்திடுவார்
என் ஏக்கம் எல்லாமே எப்படியும் நிறைவேற்றுவார் -2
ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2
தோல்வி எனக்கில்லையே
நான் தோற்றுப்போவதில்லையே
ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே – 2
பயமில்லை பயமில்லையே
ஜெயம் ஜெயம்தானே – 2
3.எதிராய் செயல்படுவோர் என் பக்கம் வருவார்கள்
என் இரட்சகர் எனக்குள்ளே இதை இவ்வுலகம் அறியும்
ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2
தோல்வி எனக்கில்லையே
நான் தோற்றுப்போவதில்லையே
ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே – 2
பயமில்லை பயமில்லையே
ஜெயம் ஜெயம்தானே – 2
ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே – 4

EN MUDIVUKKU VIDIVU NEERE

என் முடிவுக்கு விடிவு  நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே
1. பூமியிலே நான் பரதேசி
   ஆனால் உமக்கோ இப்பொழுது விசுவாசி
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே
என் முடிவுக்கு விடிவு  நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே
2. புல்லைப்போல் உலர்ந்திடும் என் வாழ்க்கை
   ஆனால் உம்மிடத்தில் எனக்கோர் இடம்தந்தீர்
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே
என் முடிவுக்கு விடிவு  நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே
3. சோதித்தப்பின் சுத்த பொன்னாக
    இந்த மண்ணிலே என்னை வீளங்கச்செய்தீர்
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே
என் முடிவுக்கு விடிவு  நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே

UMMAI ALLAMAL ENAKKU YAAR UNDU

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
1. இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே
இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே
எவ்வேளையும் ஐயா நீர்தானே
எவ்வேளையும் ஐயா நீர்தானே
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
2. என் ஸ்நேகமும் நீரே என் ஆசையும் நீரே
என் ஸ்நேகமும் நீரே என் ஆசையும் நீரே
என் எல்லாமே ஐயா நீர்தானே
என் எல்லாமே ஐயா நீர்தானே
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
3. இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே
இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே
எந்நாளுமே ஐயா நீர்தானே
எந்நாளுமே ஐயா நீர்தானே
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா

YEEN MAGANE INNUM INNUM BAYAM

ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
உன்னோடு நான் இருக்க உன் படகு மூழ்கிடூமோ
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
1. நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார் – உன்னில்
திகிலூட்டும் காரியங்கள்
செய்திடுவார் உன் வழியாய்
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
2. நீதியினால் ஸ்திரப்படுவாய்
கொடுமைக்கு நீ தூரமாவாய்
திகில் உன்னை அணுகாது
பயமில்லா வாழ்வு உண்டு
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
3. படைத்தவரே உனக்குள்ளே
செயலாற்றி மகிழ்கின்றார் – உன்னை
விருப்பத்தையும் ஆற்றலையும்
தருகின்றார் அவர் சித்தம் செய்ய
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
உன்னோடு நான் இருக்க உன் படகு மூழ்கிடூமோ
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
கரை சேர்ந்திடுவாய் கலங்காதே
ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?

THOOYA THOOYA EM YESU NATHA LYRICS

தூயா தூயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்த பெறுக
துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்கு தந்தோம்

1.விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்
  மாபெரும் அன்பல்லவோ
  பாவம் சுமந்தீர் சாபமானீர்
  பாதம் பணிந்திடுவோம்
தூயா தூயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்த பெறுக
துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்கு தந்தோம்

2.சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர்
  சாத்தானைத் தோற்கடித்தீர்
  நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்
  நித்தம் தொழுதிடுவோம்
தூயா தூயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்த பெறுக
துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்கு தந்தோம்

3.மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்
  மார்போடு அணைத்திடுவீர்
  மங்கா வாழ்வை எமக்குத் தருவீர்
  மன்னா தொழுதிடுவோம்
தூயா தூயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்த பெறுக
துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்கு தந்தோம்

EN YESU RAJA STHOTHIRAM LYRICS


என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே (2)
உயிருள்ள நாளெல்லாமே

1. இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
நீடிய சாந்தம், பொறுமை அன்பு
நிறைந்து வாழ்பவரே

2. துதிகன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம்

3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும்
குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே

4. உலகத்தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு
புதுவாழ்வு தந்து விட்டீர்

DEVANBIBN VELLAMAE THIRU ARUL LYRICS


தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே
மெய்ம் மனதானந்தமே
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ்வேளை
அய்யா நின் அடி பணிந்தேன்

1. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோ யான்
புந்திக்கமலமாம் ப10மாலை கோர்த்து நின்
பொற்பதம் பிடித்துக்கொள்வேன்

2. பாவச்சேற்றில் பலவேளை பல மின்றப்
பாதையைத் தவறிடினும்
கூவி விளித்தும் தம் மார்போடணைத்தன்பாய்
கோது பொருத்த நாதா

3. மூர்க்கக்குணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
மோக ஏக்கமானதைத்
தாக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்
தற்பரா தற்காத்தருள்வாய்

4. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின் திருப்
பூசைப் பீடம் படைப்பேன்
மோச வழிதனை முற்று மகற்றியென்
நேசனே நினைத் தொழுவேன்

5. மரணமோ ஜீவனோ மறுமையோ பூமியோ
மகிமையோ வருங்காலமோ
பிற சிருஷ்டியோ உயர்ந்ததோ தாழ்ந்ததோ
பிரித்திடுமோ தெய்வன்பை?

Devanae Naan Umathundail


தேவனே நான் உமதண்டையில்
இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மாவலிய கோரமாக வன் சிலுவை
மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

1. யாக்கோபைப் போல் போகும் பாதையில்
பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டி சேர்வேன்
வாக்கடங்கா நல்ல நாதா

2. பரத்துக்கேறும் படிகள் போலவே
என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்தன் தேவனே
கிருபையாக நீர் எனக்குத்
தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து

3. நித்திரையினின்று விழித்துக் காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய்
என் துயர்க் கல் நாட்டுவேனே
என்றன் துன்பத்தின் வழியாய்
இன்றும் உம்மைக் கிட்டி சேர்வேன்

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து
பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான்
மருவியும்மைக் கிட்டிக் சேர்வேன்

DEVA UM SAMUGAME YENATHU LYRICS


தேவா உம் சமூகமே எனது பிரியமே – 2
அல்லேலூயா அல்லேலூயா 2

1. வானத்தின் வாசல் நீரே
வாழ்க்கையின் அப்பம் நீரே – 2

2. நம்பிக்கை தெய்வம் நீரே
நங்கூரம் என்றும் நீரே – 2

3. கர்த்தாதி கர்த்தர் நீரே
கானான் தேசம் நீரே – 2

4. ஆதி அந்தம் நீரே
ஆட்கொண்ட சொந்தம் நீரே – 2

5. அக்கினி ஜீவாலை நீரே
காலை பனியும் நீரே – 2

Deva sitham niraivera


தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம் பலமாக தொனிக்குதே

1. முட்களுக்குள் மலர்கின்றதோர்
மக்களை கவரும் லீலி புஷ்பம் போல்
என்னையுமே தம் சாயலாய்
என்றென்றும் உருவாக்குவார்

2. முன்னறிந்து அழைத்தவரே
முன்னின்று நலமுடன் நடத்துவார்
சகலமும் நன்மைக்கென்றே
சாட்சியாய் முடித்திடுவார்

3. பொன்னைப் போல புடமிட்டாலும்
பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே
திராணிக்கு மேல் சோதித்திடார்
தாங்கிட பெலன் அளிப்பார்

4. கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்
கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்
இரட்டிப்பான பங்கை பெற
இரட்சகர் அழைத்திடுவார்

Deva Saranam Kartha Saranam


தேவா சரணம்
கர்த்தா சரணம்
ராஜா சரணம் இயேசையா சரணம்

1. தேவாதி
தேவனுக்கு சரணம்
இராஜாதி
இராஜனுக்கு சரணம்
தூய ஆவி சரணம்
அபிஷேக நாதா சரணம்
சரணம் சரணம் சரணம்

2. கர்த்தாதி
கர்த்தனுக்கு சரணம்
காருண்ய
கேடகமே சரணம்
பரிசுத்த ஆவி சரணம்
ஜீவ நதியே சரணம்
சரணம் சரணம் சரணம்

3. மகிமையின் மன்னனுக்கு சரணம்
மாசற்ற
மகுடமே சரணம்
சத்தியஆவியே சரணம்
சர்வ வியாபியே சரணம்
சரணம் சரணம் சரணம்
ராஜா சரணம் இயேசையா சரணம்

DEVA PRASANNAM THARUME LYRICS


தேவா பிரசன்னம் தாருமே
தேடி உம்பாதம் தொழுகிறோம்
இயேசுவே உம் திவ்ய நாமத்தில்
இன்பமுடன் கூடி வந்தோம்

1. வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதஸ்தலம்
பணிந்து குனிந்து தொழுகிறோம்
கனிந்தெம்மைக் கண்பாருமே

2. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
சாந்த சொரூபி என் இயேசுவே
ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
ஆண்டவரைத் தொழுகிறோம்

3. கர்த்தர் செய்த உபகாரங்கள்
கணக்குரைத்து எண்ணலாகுமோ
இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகரைத் தொழுகிறோம்

4. கர்த்தர் சமூகம் ஆனந்தமே
பக்தர் சபையில் பேரின்பமே
கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்
சுத்தர்கள் போற்றும் தேவனே

5. நூற்றிருபது பேர் நடுவே
தேற்றரவாளனே வந்தீரே
உன்னத ஆவியை ஊற்றிடுமே
மன்னவனே இந்நேரமே

6. எப்போ வருவீர் என் இயேசுவே
ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே
பறந்து விரைந்து தீவிரமே
இறங்கி வாரும் இயேசுவே

Deva Naan Ethinal Viseshithavan


தேவா நான் எதினால் விசேஷித்தவன்
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
எதினால் இது எதினால் -2
நீர் என்னோடு வருவதினால்

1. மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதை காட்ட பகலெல்லாம் கூடச் செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அது போதும் என் வாழ்விலே

2. தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது
என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன்

3. வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு

Anandame Jeya Jeya


ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஞானரட்சகர் நாதர் நமை – இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் – ஆனந்தமே

1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்
எங்கள் ரட்சகரேசு நமை – வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் – ஆனந்தமே

2. முந்து வருட மதினில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல
தந்து நமக்குயிருடையுணவும் – வெகு
தயவுடன் இயேசு தற்காத்ததினால் – புகழ் – ஆனந்தமே

3. பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை – இத்
தரை தனில் குறை தணித்தாற்றியதால் – புகழ் – ஆனந்தமே

AMEN ALLELUIA MAGATHUVA LYRICS


ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,
ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா
தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்
துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! – ஆமென்

1. வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து – முறித்து
பத்ராசனக் கிறிஸ்து – மரித்து
பாடுபட்டுத்தரித்து முடித்தார் – ஆமென்

2. சாவின் கூர் ஒடிந்து – மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து – விழுந்து
ஜீவனே விடிந்து – தேவாலயத்
திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது – ஆமென்

3. வேதம் நிறைவேற்றி – மெய் தோற்றி
மீட்டுக் கரையேற்றி – பொய் மாற்றி
பாவிகளைத் தேற்றி – கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் – ஆமென்

AALUGAI SEIYUM AAVIYANAVARE LYRICS


ஆளுகை செய்யும் ஆவியானவரே
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
ஆவியானவரே-என் ஆற்றலானவரே

1. நினைவெல்லாம் உமதாகணும்
பேச்செல்லாம் உமதாகணும்
நாள் முழுதும் வழிநடத்தும்
உம் விருப்பம் செயல்படுத்தும்

2. அதிசயம் செய்பவரே
ஆறுதல் நாயகனே
காயம் கட்டும் கர்த்தாவே
கண்ணீரெல்லாம் துடைப்பவரே-என்

3. புதிதாக்கும் பரிசுத்தரே
புதுபடைப்பாய் மாற்றுமையா
உடைத்துவிடும் உருமாற்றும்
பண்படுத்தும் பயன்படுத்தும்

4. சங்கீதம் கிர்த்தனையால்
பிறரோடு பேசணுமே
எந்நேரமும் எப்போதுமே
நன்றிப் பலி செலுத்தணுமே

Adimai Naan Andavare


அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்

1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில்
எந்நாளும் வாசம் செய்யும்

2. உலக இன்பமெல்லாம் – நான்
உதறித் தள்ளி விட்டேன்

3. பெருமை செல்வமெல்லாம் – இனி
வெறுமை என்றுணர்ந்தேன்

4. வாழ்வது நானல்ல – என்னில்
இயேசு வாழ்கின்றீர்

5. என் பாவம் மன்னித்தருளும் – உம்
இரத்தத்தால் கழுவிவிடும்

6. முள்முடி எனக்காக – ஐயா
கசையடி எனக்காக

7. என் பாவம் சுமந்து கொண்டீர் – என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர்

Adhikalai Neram


அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்

1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா

2. பெலனே கன்மலையே
பெரியவரே என் உயிரே

3. நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே

4. நலன்தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே

5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி
ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா

6. விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீர் துடைப்பவரே

ADHIKAALAI STHOTHIRABALI LYRICS


அதிகாலை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்கு தான்
ஆராதனை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்குத்தான் (2)

1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர்
இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர்

2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர்

3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய்

4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே
என்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி

5. யோகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர் – 2
எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே

6. அதிசய தெய்வமே ஆலோசனைக் கர்த்தரே
ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே

7. யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே
எங்களோடு இருப்பவரே யேகோவா ஷம்மா

8. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்
சமாதானம் தருகிறீர் யேகோவா ஷாலோம்

9. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்;
எந்நாளும் வெற்றி தருவீர் யேயோவா நிசியே

10. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
சுகம் தரும் தெய்வமே யேகோவா ரஃப்பா

Aatkonda Deivam


ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்

1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே (3) தினம்

2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே – தினம்

3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே – என்னைவிட்டு

4. இருள் நீக்கும் சுடரே என்இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே

5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும் சந்தோஷமே

6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
நல்ல சமாரியனே

AATHI PITHA KUMARAN LYRICS



ஆதி பிதா குமாரன் -ஆவி திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்.

நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் ,
நிறைந்த சத்திய ஞான மனோகர
உறைந்த நித்திய வேதா குணாகர,
நீடு வாரி திரை சூழ மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் .-ஆதி

எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர் ,
துங்கமா மறைப்பிர போதர்-கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்,
பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம் ,நீதி என்னும்
பங்கில்லான் , தாபம் இல்லான் ,பகர்அடி முடிவில்லான்
பண்பதாய்சு யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு , மீட்பு ,பரி
பாலனைத்தையும் பண்பாய் நடத்தி , அருள் .- ஆதி

நீதியின் செங்கோல் கைக்கொண்டு -நடத்தினால் நாம்
நீணலத்தில்லாமல் அழிந்து ,
தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு
பரண் எங்கள்மிசை தயை வைத்தனர் ;இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் ,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும் .- ஆதி

AATHARAM NEER THAAN AIYA LYRICS


ஆதாரம் நீர்தானையா (2)
காலங்கள் மாற கவலைகள் தீர
காரணம் நீர்தானையா (2)

1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை (2)
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
குழப்பங்கள் நிறைகின்றன (2) – என் நிலை மாற … – ஆதாரம்

2. குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை
பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை (2)
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
அமைதிதான் கலைகின்றது (2) – என் நிலை மாற … – ஆதாரம்

3. உந்தனின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2)
உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2) – என் நிலை மாற … – ஆதாரம்

AASIRVATHIKUM DEVAN THAM ASSIR LYRICS


ஆசீர்வதிக்கும் தேவன்
தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்
பெருக்கத்தை அளித்திடும் தேவன்
நம்மை பெருக செய்வார் இவ்வருடம்
பெலத்தின்மேல் பெலனே
கிருபையின்மேல் கிருபை
மகிமையின்மேல் மகிமை
பரிசுத்தம் பரிசுத்தமே – என் வாழ்வில்

1. சோர்வான சூழ்நிலை வந்திடினும்
எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்
நெருக்கத்திலும் பெருக்கத்தையே
அளித்திடும் தேவன் நம்மோடுண்டு

2. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
கிருபையின் ஊற்றுகள் பெருகிடுதே
நூறு மடங்கு பலன் தந்திடும்
பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு

3. ஆத்தும பாரம் பெருகிடுதே
ஊழியம் தீவிரம் அடைந்திடுதே
திரள் கூட்டம் சீயோனையே
நோக்கி வந்திடும் காலமிது

AARUTHALIN DEIVAME UMMUDAIYA LYRICS


ஆறுதலின் தெய்வமே
உம்முடைய திருச்சமூகம்
எவ்வளவு இன்பமானது

1. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
ஆர்வமுடன் கதறுகின்றது
உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும்
கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென்

2. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே பாக்கியவான்கள்
தூய மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென்

3. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள்
ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார் – ஆமென்

4. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள்
வல்லமை மேலே வல்லமை கொண்டு
சீயோனைக் காண்பார்கள் – ஆமென்

5. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
வாசலில் காத்திருப்பேன் – ஆமென்

AANANDHAMAAI NAAME AARPARIPPOME LYRICS


ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
அருமையாய் இயேசு நமக்களித்த
அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ
அனுதின ஜீவியத்தில்

ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே – அல்லேலூயா
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே

1. கருணையாய் இதுவரை கைவிடாமலே
கண்மணி போல் என்னைக் காத்தாரே
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம்

2. படகிலே படத்து உறங்கினாலும்
கடும் புயல் அடித்து கவிழ்ந்தாலும்
காற்றையும் கடலையும் அமர்த்தி எம்மைக்
காப்பாரே அல்லேலூயா

3. பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்
அதி சீக்கிரமாய் முடிகிறதே
விழிப்புடன் கூடி தரித்திருப்போம்
விரைந்தவர் வந்திடுவார்