Monday, June 29, 2015

ANATHI DEVAN UNN ADAIKKALAME

அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே

அனுபல்லவி

இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்

சரணங்கள்

1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார் --- இந்த

2. கானகப் பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளை
அரும் நீரூற்றாய் மாற்றினாரே --- இந்த

3. கிருபை கூர்ந்து மன துருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை
உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் --- இந்த

4. இப்புவி யாத்திரை கடந்திடுவாய்
தூய தேவ தயவால்
கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினிலே
கிடைக்கும் இளைப்பாறுதலே --- இந்த

5. வறண்ட வாழ்க்கை செழித்திடுமே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் --- இந்த

6. ஆனந்தம் பாடித் திரும்பியே வா
தூய தேவ பெலத்தால்
சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் --- இந்த

UNTHAN SITHAM POL NADATHUM

உந்தன் சித்தம் போல் நடத்தும்
கர்த்தாவே நீர் நித்தம் என்னை
எந்தன் சித்தம் போல வேண்டாம்
என் பிதாவே என் யெகோவா

இன்பமான வாழ்க்கை வேண்டேன்
இனிய செல்வம் சீரும் வேண்டேன்
துன்பமற்ற சுகமும் வேண்டேன்
நின் தொண்டு செய்யும் அடியேன்

நேர் சமனாம் நின் வழியோ
சிறு துரமோ மாதொலைவோ
எவ்விதத் துயர்கடலோ
ஏழையின் வாழ்வு எதிலும்

அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்
ஆம் இவற்றால் நீர் நடத்தி
அனுதினம் என்னோடிருப்பீர்
ஐயனே கடைக்கனியே

ANTHA NAAL BAKIYA NAAL - NAAN MEETKAPPATTA

அந்த நாள் பாக்கிய நாள் - நான் மீட்கப்பட்ட
அந்த நாள் பாக்கிய நாள்

அனுபல்லவி

அந்தநாள் ஆனந்தநாள், அருமை இரட்சகரென்னை
அன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள் --- அந்த

சரணங்கள்

1. அன்றே எனக்குப் பேதித்தார் - அவர் வழியில்
அநுதினம் செல்லக் கற்பித்தார்;
என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய
ஏவினார் என் இரட்சகர், எங்கும் எடுத்துரைப்பேனே --- அந்த

2. என்றனை அன்றே இழுத்தார்- தமதன்பினால்
இசைவாய்த் தம்முடன் இணைத்தார்;
சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்கு,
இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன் --- அந்த

3. ஆறுதல்களால் நிறைந்தேன் - அளவில்லாத
ஆசிகளினால் மகிழ்ந்தேன்;
தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து
மாறாத யேசுவினில் மகிமையாய்த் தங்கப் பெற்றேன் --- அந்த

4. அந்நாளில் வாக்குப் பண்ணினேன் - உறுதியாக
எந்நாளும் நான் புதுப்பிப்பேன்;
சொன்ன இவ்வாக்கை நிதம் , சுத்தமாய் நிறைவேற்ற
உன்னத பலம் தாராய் , என்னையாட்கொண்ட தேவா --- அந்த

ANATHIYAANA KARTHARE

1. அநாதியான கர்த்தரே,
தெய்வீக ஆசனத்திலே
வானங்களுக்கு மேலாய் நீர்
மகிமையோடிருக்கிறீர்.

2. பிரதான தூதர் உம்முன்னே
தம் முகம் பாதம் மூடியே
சாஷ்டாங்கமாகப் பணிவார்,
'நீர் தூய தூயர்' என்னுவார்.

3. அப்படியானால், தூசியும்
சாம்பலுமான நாங்களும்
எவ்வாறு உம்மை அண்டுவோம்?
எவ்விதமாய் ஆராதிப்போம்?

4. நீரோ உயர்ந்த வானத்தில்,
நாங்களோ தாழ்ந்த பூமியில்
இருப்பதால், வணங்குவோம்,
மா பயத்தோடு சேருவோம்.

ANANTHA KOODI KOOTTATHAR அநந்த கோடி கூட்டத்தார்

1. அநந்த கோடி கூட்டத்தார்
ஆனந்த கீதம் பாடியே,
பண் இசைப்பார் வெண் உடையார்
தெய்வாசனம் முன்னே.
விண்வேந்தர் தயை போக்கிற்றே
மண் மாந்தர் பாவம் நோவுமே;
மேலோகிலே நீர் நோக்குவீர்
உம் நாதர் மாட்சியே.
பாடற்ற பக்தர் சேனையே,
கேடோய்ந்து தூதரோடுமே
பண் மீட்டுவீர்; விண் நாதர்தாம்
தம் வார்த்தை நல்குவார்.

2. மா தாழ்வாய் வாழ்ந்தீர் பாரினில்,
கோதற்ற வெண்மை அணிந்தீர்;
உம் நீதிக்காய் நம் நாதரே
பொற் கிரீடம் சூட்டுவார்;
பூலோக வாழ்வின் கண்ணீரை
மேலோகில் ஸ்வாமி நீக்கினார்;
போம் திகிலும்; உம் மீட்பரின்
நல் மார்பில் சாய்குசீர்
விண் வீட்டினில் மா பந்தியை
மாண் வேந்தரோடு அடைந்தீர்;
நீர் பெற்றீரே பேர் வாழ்வுமே
கர்த்தாவோடென்றுமே.

3. ஆ, வீரர் சூரர் சேனையே,
மா தீரச் செய்கை ஆற்றினீர்,
நீர் சகித்தீர், நீர் ஜெயித்தீர்
நீர் வாழ்க, பக்தரே!
மண் மாந்தர் கீர்த்தி இகழ்ந்தீர்,
விண் வேந்தரோடும் சிலுவை
நீர் சுமந்தீர், நீர் அறுப்பீர்
உம் கண்ணீர் பலனே.
மெய் மணவாட்டி, போற்றுவாய்!
வையகமே முழங்குவாய்!
எம் ஸ்வாமியே, என்றென்றுமே
உம் ஸ்தோத்ரம் ஏறுமே.

MAGIBANAI ANUTHINAME LYRICS

மகிபனையே அனுதினமே
மகிழ்வுடனே துதித்திடுவேன் - தினம்

1. என்னை அன்பில் இணைத்திடவே
கண்டிப்பா உருவாகுமுன்னே
ஜோதியாய் தேவ மகிமையை பெறவே
தேவன் என்னை தெரிந்தெடுத்ததினால் --- மகிபனையே

2. தூதராலும் செய்யவொண்ணா
தூய பணியை அற்புதமாய்
தோசியாலும் செய்திட கிருபை
தூயன் கிறிஸ்து தந்தனரே --- மகிபனையே

3. அழைத்தாரே சுவிஷேசத்தினால்
அடைய தேவ சாயலதை
பயத்துடனே பரிசுத்தமதையே
பாரினில் பூரணமாக்கிடுவோம் --- மகிபனையே

4. ஆவலுடனே காத்திருந்தேன்
சேவை புரிவோம் இயேசுவுக்காய்
ஆசை இயேசு மணவாளன் வருவார்
சீயோனில் என்னை சேர்த்திடவே --- மகிபனையே

KANMANEE NEE KANVALARAI LYRICS


கண்மணி நீ கண்வளராய்
விண்மணி நீ உறங்கிடுவாய்
கண்மணி நீ கண்வளராய்

1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
நீங்கும் துன்பம் நித்திரை வர
ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட
தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்
கந்தை துணி பொதிந்தாயோ

2. சின்ன இயேசு செல்லப்பாலனே
உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே
என்னைப் பாரும் இன்ப மைந்தனே
உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற
ஏழை மகவாய் வந்தனையோ

3. வீடும் இன்றி முன்னனைதானோ
காடும் குன்றும் சேர்ந்ததேனோ
பாடும் கீதம் கேளாயோ நீயும்
தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய
ஏழ்மைக் கோலம் கொண்டனையோ

ADHISAYAMAANA OOLIMAYA NAADAAM

அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் - நான்
வாஞ்சிக்கும் நாடாம் -என்

சரணங்கள்

1. பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா அல்லேலூயா --- அதிசயமான

2. சந்திர சூரியன் இல்லை
ஆனால் இருள் ஏதும் காணவில்லை
தேவ குமாரன் ஜோதியில் ஜோதி
நித்திய வெளிச்சமாவார் - என்றும் பகல் --- அதிசயமான

3. விதவிதக் கொள்கை இல்லை
பலப் பிரிவுள்ள பலகை இல்லை
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்பு மயம் - அன்புள்ளோர் செல்லும் --- அதிசயமான

4. பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை
மொழி , நிறம் , ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை --- அதிசயமான

5. கடைத்தெரு ஏதும் இல்லை
தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை
தரித்திரர் , செல்வர் ,சிறியவர் , பெரியோர்
ஆகிய சிறப்பும் இல்லை - எல்லாம் சமம் --- அதிசயமான

6. பல பலத் திட்டம் இல்லை - ஆளும்
சட்டங்கள் ஏதுமில்லை
காவல் துறையில்லை , கண்டிப்பும் இல்லை
மனிதனின் ஆட்சி இல்லை - பேரானந்தம் --- அதிசயமான

7. இயேசுவின் இரத்தத்தினால் - பாவம்
கழுவினால் செல்லலாமே
இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
பூமியில் எவரும் வேண்டாம் - இன்றே வாரீர் --- அதிசயமான

ATHISAYANGALAI YELLA IDAMUM SEIYUM

1. அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்
கர்த்தாவை, வாக்கினால் இருதயத்திலேயும்
துதியுங்கள்; அவர் நாம் ஜென்மித்த நாளே
முதல் இம்மட்டுக்கும் இரக்கம் செய்தாரே.

2. நர தயாபரர் முடிய ஆதரித்து,
நற்சமாதானத்தால் மகிழ்ச்சியை அளித்து,
தயையை நம்முட மேல் வைத்தெந்நேரமும்
ரட்சித்து, தீமையை எல்லாம் விலக்கவும்.

3. உன்னதமாகிய விண்மண்டலத்திலுள்ள,
மாறாத உண்மையும் தயையும் அன்புள்ள
பிதா சுதனுக்கும் திவ்விய ஆவிக்கும்
எத்தேச காலமும் துதி உண்டாகவும்

ATHIKAALAILUMAI THEDUVEN MULU MANATHALE

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே

அனுபல்லவி

இதுகாறும் காத்த தந்தை நீரே;
இனிமேலும் காத்தருள் செய்வீரே,
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே! --- அதிகாலை

சரணங்கள்

1. போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!
ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?
எனக்கான ஈசனே! வான ராசனே!
இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! --- அதிகாலை

2. பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது
தப்பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,
விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? --- அதிகாலை

3. நரர்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே!
தீநாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
பரலோக ஆவியைநல் மாரி போலெனிலே பெய்யே!
புகழார நாதனே! வேத போதனே!
பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே! --- அதிகாலை

ADHIKAALAI YESU VANTHU LYRICS

1. அதிகாலை இயேசு வந்து
கதவண்டை தினம் நின்று
தட்டித் தமக்குத் திறந்து
இடம் தரக் கேட்கிறார்.

2. உம்மை நாங்கள் களிப்பாக
வாழ்த்தி: நேசரே, அன்பாக
எங்களண்டை சேர்வீராக
என்று வேண்டிக்கொள்ளுவோம்.

3. தினம் எங்களை நடத்தி,
சத்துருக்களைத் துரத்தி,
எங்கள் மனதை எழுப்பி,
நல்ல மேய்ப்பராயிரும்.

4. தாழ்ச்சி நாங்கள் அடையாமல்,
நம்பிக்கையில் தளராமல்
நிற்க எங்களுக்கோயாமல்
நல்ல மேய்ச்சல் அருளும்.

5. ஆமேன், கேட்டது கிடைக்கும்
இயேசு இன்றும் என்றென்றைக்கும்
நம்மைக் காப்பார் அவர் கைக்கும்
எல்லாம் ஒப்புவிக்கிறோம்.

ADHI MANGALA KAARANANE THUTHI

அதி-மங்கல காரணனே, துதி-தங்கிய பூரணனே, நரர்
வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!

சரணங்கள்

1. மதி-மங்கின எங்களுக்கும்,
திதி-சிங்கினர் தங்களுக்கும்
உனின் மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றிடவையாய் துங்கவனே --- அதி-மங்கல

2. முடி-மன்னர்கள் மேடையும்,
மிகு-உன்னத வீடதையும் நீங்கி
மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,
வந்தனையோ தரையில்? --- அதி-மங்கல

3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,
உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்
பெற்ற நற்கோலம் இதோ? --- அதி-மங்கல

ADAIKKALAM ADAIKKALAME YESU NAADHA

அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா, உன்
அடைக்கலம் அடைக்கலமே!

அனுபல்லவி

திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு --- அடைக்கலம்

சரணங்கள்

1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,
அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;
மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! ---அடைக்கலம்

2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;
கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,
கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! --- அடைக்கலம்

3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்;
பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! --- அடைக்கலம்

4. என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ
அன்றுனது பக்கமதில் ஆகியிருந்த கள்ளனுக்கு
இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? --- அடைக்கலம்

AKKINI ABHISHEGAM YEENDHIDUM

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்
தேவ ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும்

1. பரமன் இயேசுவை நிறைத்தீரே
பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்
உந்தன் சீஷருக்களித்தீரெ
அன்பின் அபிஷேகம் ஈந்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் --- அக்கினி

2. சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே
கர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்
தீர்க்கன் எலிசாவுக் களித்தீரே
இரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் --- அக்கினி

3. அன்பர் இயேசுவின் நாமத்திலே
வன் துயர் பேய் பிணி நீங்கவே
அற்புதம் அடையாளம் நிகழ்ந்திடவே
பொற்பரன் ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் --- அக்கினி

4. வானில் இயேசு வருகையிலே
நானும் மறுரூபம் ஆகவே
எந்தன் சாயல் மாறிடவே
மைந்தன் ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் --- அக்கினி

AGILATHAIYUM AAGAYATHAYUM

அகிலத்தையும் ஆகாயத்தையும்
உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே
ஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரே
உந்தன் நல்ல கரத்தினாலே

ஆகாதது ஒன்றுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை
சர்வ வல்லவரே கனமகிமைக்கு
பாத்திரரே ஆகாதது என்று
ஏதுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை