Thursday, September 10, 2015

INNOR AANDU MUTRUMAAI

1. இன்னோர் ஆண்டு முற்றுமாய்
எங்களை மகா அன்பாய்
காத்து வந்தீர் இயேசுவே;
உம்மைத் துதி செய்வோமே.

2. நீரே இந்த ஆண்டிலும்
எங்கள் துணையாயிரும்;
எந்தத் துன்பம் தாழ்விலும்
கூடத் தங்கியருளும்.

3. யாரேனும் இவ்வாண்டினில்
சாவின் பள்ளத்தாக்கினில்
செல்லின், உந்தன் கோலாலே
தேற்றும், நல்ல மேய்ப்பரே.

4. நாங்கள் உந்தன் தாசராய்
தூய்மை பக்தி உள்ளோராய்
சாமட்டும் நிலைக்க நீர்
காத்து கிரீடம் ஈகுவீர்.

5. ஏசு கர்த்தராம் நீரே
மன்னர் மன்னன் எனவே
என்றும் உம்மைப் போற்றுவோம்
உந்தன் வீட்டில் வாழுவோம்.

INDRU KRISTHU YELUNTHAR

1. இன்று கிறிஸ்து எழுந்தார்,
அல்லேலூயா!
இன்று வெற்றி சிறந்தார்;
அல்லேலூயா!
சிலுவை சுமந்தவர்,
அல்லேலூயா!
மோட்சத்தைத் திறந்தவர்,
அல்லேலூயா!

2. ஸ்தோத்ரப் பாட்டுப் பாடுவோம்,
அல்லேலூயா!
விண்ணின் வேந்தைப் போற்றுவோம்,
அல்லேலூயா!
அவர் தாழ்ந்துயர்ந்தாரே;
அல்லேலூயா!
மாந்தர் மீட்பர் ஆனாரே,
அல்லேலூயா!

3. பாடநுபவித்தவர்,
அல்லேலூயா!
ரட்சிப்புக்குக் காரணர்,
அல்லேலூயா!
வானில் இப்போதாள்கிறார்;
அல்லேலூயா!
தூதர் பாட்டைக் கேட்கிறார்,
அல்லேலூயா!

INDRITHINAM UN ARUL YEEGUVAI

இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் , இயேசுநாதையா ,
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்

அனுபல்லவி

அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனை
வென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு --- இன்றை

சரணங்கள்

1. போன ராவில் என்னைக் கண் பார்த்தாய் - பலவிதமாம்
பொல்லா மோசங்களில் தற்காத்தாய் ;
ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி ,
ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய் --- இன்றை

2. கையிட்டுக் கொள்ளும் , என்றன் வேலை - யாவிலுமுன்றன்
கடைக்கண் ணோக்கி , அவற்றின் மேலே ,
ஐயா , நின் ஆசீர்வாதம் அருளி , என் மனோவாக்கு
மெய்யால் நின் மகிமையே விளங்கும்படி ஒழுக --- இன்றை

3. எத்தனையோ விபத்தோர் நாளே - தஞ்சம் நீ என
எளியேன் அடைந்தேன் உன்றன் தாளே ;
பத்தர் பாலனா , எனைப் பண்பாய் ஒப்புவித்தேன் , உன்
சித்தம் எனது பாக்கியம் , தேவ திருக்குமாரா --- இன்றை

4. பாவ சோதனைகளை வென்று , பேயுலகுடல்
பண்ணும் போர்களுக் கெதிர் நின்று ,
ஜீவ பாதையில் இன்றும் திடனாய் முன்னிட்டுச் செல்ல ,
தேவ சர்வாயுதத்தைச் சிறக்க எனக் களித்து --- இன்றை

IPPO NAAM BETHLEGEM CHENDRU

1. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
ஆச்சரிய காட்சியாம்
பாலனான நம் ராஜாவும்
பெற்றோரும் காணலாம்;
வான் ஜோதி மின்னிட
தீவிரித்துச் செல்வோம்,
தூதர் தீங்கானம் கீதமே
கேட்போம் இத்தினமாம்.

2.இப்போ நாம் பெத்லெகேம் சென்று
ஆச்சரிய காட்சியாம்
பாலனான நம் ராஜாவும்
பெற்றோரும் காணலாம்;
தூதரில் சிறியர்
தூய தெய்வ மைந்தன்;
உன்னத வானலோகமே
உண்டிங் கவருடன்.

3. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
ஆச்சரிய காட்சியாம்
பாலனான நம் ராஜாவும்
பெற்றோரும் காணலாம்;
நம்மை உயர்த்துமாம்
பிதாவின் மகிமை!
முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,
போற்றுவோம் தெய்வன்பை.

4. அப்போ நாம் ஏகமாய்க் கூடி
விஸ்வாசத்தோடின்றே
சபையி தங்கும் பாலனின்
சந்நிதி சேர்வோமே;
மகிழ்ந்து போற்றுவோம்
ஜோதியில் ஜோதியே!
கர்த்தா! நீர் பிறந்த தினம்
கொண்டாடத் தகுமே.

IMMATUM JEEVAN THANTHA KARTHAVAI

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய்த் தோத்தரிப்போமாக

அனுபல்லவி

நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும். --- இம்மட்டும்

சரணங்கள்

1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும்,
கனாவைப் போலேயும் ஒழியும்;
வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும்,
மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது;
கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே
கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக்
கண்டு கருணைகள் விண்டு தயவுடன். ---- இம்மட்டும்

2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் ;
பரம பாதையைத் தொடர்ந்தோம் ;
வலிய தீமையை வென்றோம் , நலியும் ஆசையைக் கொன்றோம் ,
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ;
கலிஎன்ற தெல்லாம் விண்டோம் , கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்;
காய்ந்த மனதொடு பாய்ந்துவிழு கணம்
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் --- இம்மட்டும்

3. சனசேதம் வருவிக்கும் , கேடுகட்கோர் முடிவு
தந்து , நொறுங்கினதைக் கட்டிக்
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
கண்ணோக்கி எல்லார்மேல் அன்றன்று
தினமும் அருள் உதிக்கச் செய்து , தமது தேவ
சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
மைந்தனால் எங்களை இந்த வினோதமாய் --- இம்மட்டும்

IMMATUM JEEVAN THANTHA

1. இம்மட்டும் ஜீவன் தந்த
கர்த்தாவை அத்தியந்த
பணிவோடுண்மையாக
இஸ்தோத்திரிப்போமாக.

2. நாள் பேச்சைப்போல் கழியும்
தண்ணீரைப்போல் வடியும்;
இதோ, இந்தாள் வரைக்கும்
இவ்வேழை மண் பிழைக்கும்.

3. அநேக விதமான
இக்கட்டையும், உண்டான
திகிலையும் கடந்தோம்;
கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்.

4. அடியார் எச்சரிப்பும்
விசாரிப்பும் விழிப்பும்,
தயாபரா, நீர் தாமே
காக்காவிட்டால் வீணாமே.

5. தினமும் நவமான
அன்பாய் நீர் செய்ததான
அநுக்ரகத்துக்காக
துதி உண்டாவதாக.

6. துன்னாளில் நாங்கள் தாழ்ந்து
நொந்தாலும், உம்மைச் சார்ந்து
நிலைக்கிறதற்காக
திடன் அளிப்பீராக.

7. மா ஜன சேதத்துக்கும்,
உண்டான போர்களுக்கும்
ஓர் முடிவு வரட்டும்,
நொறுங்கினதைக் கட்டும்.

8.சபையை ஆதரித்து,
அன்பாய் ஆசீர்வதித்து,
எல்லாருக்கும் அன்றன்றும்
அருள் உதிக்கப்பண்ணும்.

9. பொல்லாரைத் தயவாக
திருப்பிக்கொள்வீராக;
இருளிலே திரியும்
ஜனத்துக்கொளி தாரும்.

10. திக்கற்றவரைக் காரும்,
நோயாளிகளைப் பாரும்,
துக்கித்தவரைத் தேற்றும்,
சாவோரைக் கரையேற்றும்.

11. பரத்துக்கு நேராக
நடக்கிறதற்காக,
அடியாரை எந்நாளும்
தெய்வாவியாலே ஆளும்.

12. அடியார் அத்தியந்த
பணிவாய்க் கேட்டுவந்த
வரங்களை அன்பாக
தந்தருளுவீராக.

kalvaari kurusandai yengi nindren

கல்வாரி குருசண்டை ஏங்கி நின்றேன்
திரு இரத்தம் புரண்டோடி பெரு வெள்ளமாய்
என் மீது பாய்ந்திட நான் சுத்தமாயினேன்
என் பாவம் நீங்கினதே

1. மண் வாழ்வில் இன்பங்கள் வெறுத்துமே
விண் வாழ்வின் நன்மைகள் நாம் பெற்றிட
உன்னத ஜீவனை என்னில் நீர் ஈந்ததால்
உம்மை என்றும் துதிப்பேன்
என்றும் உம்மை துதிப்பேன்

2. உம் சித்தம் செய்து நான் ஜீவித்திட
உம் பெலனாம் என்னை தேற்றிடுமே
ஆத்தும பாரம் நான் பெற்றென்றும் உமக்காய்
ஊழியம் செய்திடவே
தேவா அருள் செய்குவீர்

3. உன்னத ஆவியை என்னில் ஊற்றும்
இந்நிலம் தன்னில் நான் பிராகாசிக்க
கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்
உம் கரம் பற்றிடுவேன்
உம் வழி நான் நடப்பேன்

4. சிலுவைக் காட்சியைக் கண்டிடுவேன்
அதை எண்ணி தினமும் வாழ்ந்திடுவேன்
சாந்த சொரூபியாம் ஏசுவின் சிலுவையில்
சாய்ந்திடுவேன் நானும்
ஏசுவை என்றும் விடேன்

5. என்னையே முற்றிலும் உம் கரத்தில்
ஜீவ பலியாக படைக்கிறேன்
மன்னவா விண்மீது நீர் வரும் வேளையில்
ஏழையான் காணப்பட
நீர் என்னைக் காத்துக் கொள்வீர்

YESU ARPUTHAMAANAVARE YESU ARPUTHAMAANAVARE

இயேசு அற்புதமானவரே - இயேசு அற்புதமானவரே
அவர் மீட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்
அவர் அற்புதமானவரே

இயேசு உன்னதர் என்றனரே - இயேசு உன்னதர் என்றனரே
விண் , சூரிய , சந்திர , நட்சத்திரங்கள்
அவர் உன்னதர் என்றனரே

இயேசு அற்புதமானவரே - இயேசு அற்புதமானவரே
அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
அவர் அற்புதமானவரே

இயேசு உன்னதர் என்றனரே - இயேசு உன்னதர் என்றனரே
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
அவர் உன்னதர் என்றனரே
 

YESU ALAIKIRAR YESU ALAIKIRAR

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் - இயேசு அழைக்கிறார்

சரணங்கள்

1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்
என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் --- இயேசு

2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார்
கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
கருத்துடன் உன்னைக் காத்திடவே --- இயேசு

3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய் --- இயேசு

4. சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
கிருபையாய் அன்பை அளித்திடவே --- இயேசு

YESU ENGAL MEIPAR

1. இயேசு எங்கள் மேய்ப்பர்
கண்ணீர் துடைப்பார்;
மார்பில் சேர்த்தணைத்து
பயம் நீக்குவார்;
துன்பம் நேரிட்டாலும் ,
இன்பம் ஆயினும் ,
இயேசுவின்பின் செல்வோம்
பாலர் யாவரும்.

2. நல்ல மேய்ப்பர் சத்தம்
நன்றாய் அறியோம்;
காதுக்கின்பமாக
கேட்டுக் களிப்போம்;
கண்டித்தாலும் , நேசர்
ஆற்றித் தேற்றூவார்;
நாங்கள் பின்னே செல்ல
வழி காட்டுவார்.

3. ஆட்டுக்காக மேய்ப்பர்
ரத்தம் சிந்தினார்;
அதில் மூழ்கினாரே
தூயர் ஆகுவார்;
பாவ குணம் நீக்கி
முற்றும் ரட்சிப்பார் ,
திவ்விய தூய சாயல்
ஆக மற்றுவார்.

4. இயேசு நல்ல மேய்ப்பர்
ஆட்டைப் போஷிப்பார்;
ஓனாய்கள் வந்தாலும் ,
தொடவே ஒட்டார்;
சாவின் பள்ளத்தாக்கில்
அஞ்சவே மாட்டோம்;
பாதாளத்தின்மேலும்
ஜெயங்கொள்ளுவோம்.

YESU ENTHAN VALVIN BELANANAL

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்
எனக்கென்ன ஆனந்தம் (2)

சரணங்கள்

1. எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானார்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக

எந்தன் இதயமே உம்மைப் பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்

2. பெரும் தீமைகள் அகன்றோட
பொல்லா மாயைகள் மறைந்தோட
உமதாவியின் அருள் காண
வரும் காலங்கள் உமதாகும் --- எந்தன்

3. இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எனக்களித்தீர்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக --- எந்தன்

YESU EN ASTHIBAARAM AASAI ENAKKAVARE

1. இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே
நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்!

2. பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும்,
அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் இயேசு இருக்கையில்!

3. என்ன மதுரம் அவர் நன்னய நாமச் சுவை
என்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே

4. லோகம் என்னை எதிர்த்து போவென்று சொல்லிடினும்
சோகம் அடைவேனோ? என் ஏகன் எனக்கிருக்க?

5. என்னென்ன மாய லோகக் கன்னல் என்மேல் வந்தாலும்
முன்னும் பின்னுமாய் இயேசு என்னை நடத்திடுவார்

6. வியாதியால் எந்தனது காயம் கெட்டுப் போயினும்
மாயத்தோற்றத்தை இயேசு நாயகன் மாற்றிடுவார்

YESU ENTHAN NESARE KANDEN

1. இயேசு என்தன் நேசரே,
கண்டேன் வேத நூலிலே;
பாலர் அவர் சொந்தந்தான்,
தாங்க அவர் வல்லோர்தான்.

இயேசு என் நேசர்,
இயேசு என் நேசர்,
இயேசு என் நேசர்,
மெய் வேத வாக்கிதே.

2. என்னை மீட்க மரித்தார்,
மோட்ச வாசல் திறந்தார்,
என்தன் பாவம் நீக்குவார்,
பாலன் என்னை ரட்சிப்பார்.

3. பெலவீனம் நோவிலும்,
என்றும் என்னை நேசிக்கும்
இயேசு தாங்கித் தேற்றுவார்,
பாதுகாக்க வருவார்.

4. என்தன் மீட்பர் இயேசுவே,
தாங்குவார் என்னருகே;
நேசனாய் நான் மரித்தால்
மோட்சம் சேர்ப்பார் அன்பினால்.

YESU KARPITHAR OLI VEESAVE

1. இயேசு கற்பித்தார் ஒளி வீசவே
சிறு தீபம்போல இருள் நீக்கவே
அந்தகார லோகில் ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்

2. முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்
ஒளி மங்கிடாமல் காத்துக் கொள்ளுவோம்
இயேசு நோக்கிப் பார்க்க ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்

3. பிறர் நன்மைக்கும் ஒளி வீசுவோம்
உலகின் மாஇருள் நீக்க முயல்வோம்
பாவம் சாபம் யாவும் பறந்தோடிப்போம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்

YESU KRISHTHU MAARAATHAVARE

இயேசு கிறிஸ்து மாறாதவரே
மாறாதவரே மாறாதவரே
ஆமாம் இயேசு கிறிஸ்து மாறாதவரே
நித்திய நித்தியமாய்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

YESU KRISTHUVIN NAL SEEDARAGUVOM

1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்

2. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்

3. சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
இந்தப் பார் முழுவதும் இயேசு நாமத்தையே
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்

4. ஆவி ஆத்துமா தேகம் அவர் பணிக்கே
இனி நான் அல்ல , அவரே எல்லாம்
என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்

YESUVIN KUDUMBAM ONDRU UNDU

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு (2)

1. உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழை இல்லை பணக்காரனில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார் --- இயேசுவின்

2. பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார் --- இயேசுவின்

3. இன்பம் உண்டு சமாதானம் உண்டு
வெற்றி உண்டு துதி பாடல் உண்டு
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார் --- இயேசுவின்

YESU RAAJANIN THIRUVADIKKU

இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதனின் மலரடிக்கு
சரணம் சரணம் சரணம்

1. துன்ப துயரம் சூழும் வேளையும் - வெகு
கஷ்ட நஷ்டம் வரும் நாளிலும்
அன்பருக்கருள் தரும் இன்பமே
சரணம் சரணம் சரணம் --- இயேசு

2. ஆடுபோல் அடிக்கப்பட்டீரே - அன்பால்
தேடி எமை மீட்கவந்தீரே - எங்கள்
ஜீவ பலியாய் மாண்டீரே
சரணம் சரணம் சரணம் --- இயேசு

3. பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலன் ஈந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கிறேன்
சரணம் சரணம் சரணம் --- இயேசு

YESU NESIKKIRAR YESU NESIKKIRAR

இயேசு நேசிக்கிறார் - இயேசு நேசிக்கிறார் ;
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மாதவமோ!

சரணங்கள்

1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்,
மாசில்லாத பரன் சுதன்றன் முழு
மனதால் நேசிக்கிறார் --- இயேசு

2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென
நவிலல் ஆச்சரியம் --- இயேசு

3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்,
நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல்
நித்தம் ஆச்சரியம் --- இயேசு

4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்;
அதை நினைந்தவர் அன்பின் கரத்துளெ
ஆவலாய்ப் பரப்பேன் --- இயேசு

5. ராசன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில் ,
ஈசன் இயேசெனைத் தானெசித்தாரென்ற
இணையில் கீதஞ் சொல்வேன் --- இயேசு

EN NESAR VELLAI POLA SENDU

என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து
நான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே - நான் (2)

அருமையானவர் எந்தன் நேசர்
இன்பமானவர் ஆத்ம நேசர்
மதுரமானவர் எந்தன் நேசர்
பிரியமானவர் மதுரமானவர் - என் நேசர்

1. காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி
மரம் போல் ஆனவர் இவர்
கன்மலைக் குன்றின் வெடிப்பிலே
ஓடிவரும் மானுக்கு சமானமாவார் --- என்

2.வெண்மையும் சிவப்புமானவர்
புறாவின் கண்கள் கொண்டவர் அவர்
கேதுரு மரம்போல் ஆனவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவராவார் --- என்

YESU THANE ATHISAYA THEIVAM

இயேசு தானே அதிசய தெய்வம்
என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்

சரணங்கள்

1. அதிசயமே அவர் அவதாரம்
அதிலும் இனிமை அவர் உபகாரம்
அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்
அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம் --- இயேசு

2. இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே
இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே
அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்
அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் --- இயேசு

3. மனிதன் மறு பிறப்படைவதவசியம்
மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்
மறையும் முன்னே மகிபனைத் தேடு
இறைவனோடு பரலோகம் சேரு --- இயேசு

4. ஆவியினால் அறிந்திடும் தெய்வம்
பாவிகளை நேசிக்கும் தெய்வம்
ஆவியோடு உண்மையாய் தொழுதால்
தேவசாயலாய் மாறி நீ மகிழ்வாய் --- இயேசு