Sunday, December 27, 2015

Imaipoludhum Ennai kaividamaateer

இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்
ஒரு நாளும் விட்டு விலகமாட்டீர்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே

1. நீரே என் அடைக்கலம்
என் கோட்டை என் கேடகம்
நான் நம்பும் தெய்வம் என்று சொல்லுவேன்
வேடனுடைய கண்ணிக்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
தப்புவித்து சிறகால் மூடி மறைக்கிறீர்

2. கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேன்
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்
அமர்ந்த தண்ணீர் அண்டையில் என்னை
கொண்டு போய்விடுகிறீர்
ஆத்துமாவை தேற்றி திருப்தியாய் நடத்துகிறீர்

3. சத்துருக்கள் முன்பாய் ஒரு பந்தி ஆயத்தப்படுத்தி
என் தலையை எண்ணெய்யால் அபிஷேகித்தீர்
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும்
என்னை தொடரும்
உம் வீட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா - (2)

4. பயமில்லை பயமில்லை எந்தன் குடும்பம்
உந்தன் கையில்
பயமில்லை பயமில்லை என் எதிர்காலம்
உந்தன் கையில்

5. நடத்துவீர் நடத்துவீர் கரம் பிடித்து நடத்துவீர்
காத்துக் கொள்வீர் காத்துக் கொள்வீர்
கண்மணிபோல காப்பீர்

6. அகற்றுவீர் அகற்றுவீர் என் வியாதிகளை அகற்றுவீர்
பார்த்துக்கொள்வீர் பார்த்துக்கொள்வீர்
என் தேவையை பார்த்துக் கொள்வீர்

7. என்னை பலுகச் செய்வீர் பெருகச் செய்வீர்
நீண்ட ஆயுசு தந்து காப்பாற்றுவீர்
குடும்பத்தை பேழையில் வைத்து காப்பாற்றுவீர்
குடும்பத்தை வேலி அடைத்து காப்பாற்றுவீர்

Yesu Maharajane meendum

இயேசு மகாராஜனே
மீண்டும் வந்திடுவீரே
உம் மக்களாய் ஒன்று கூடினோம்
உம் மகிமையை தரிசிக்க

பஞ்சங்கள் கொள்ளை நோயும் வாட்டுதே
பூகம்பம் யுத்தங்கள் பெருகுதே
மனிதனின் அன்பு தணிந்து போகுதே
உபத்திரவ காலம் தொடங்குதே

இது என்னவோ என்று சிந்தித்துப் பார் நண்பனே
காலங்கள் இது முடிவுதான் என் நேசமே
இவைகளெல்லாம் வேதனைக்கு ஆரம்பம்
இராஜாதி ராஜன் இயேசு மீண்டும் வருகிறார்

உம் நாமம் பரிசுத்த படுவதாக
உம் அரசு வருவதாக
உம் சித்தம் பூமியெங்கும் நிறைவேறுவதாக
என்னை மன்னித்தது போல் மற்றவர்களை
நானும் மன்னிக்கணுமே
எங்கள் அன்றாட உணவை அனுதினமும்
தரவேண்டுமே
உம் இராஜ்யம் கனமும் வல்லமை
என்றென்றும் உரித்தாகட்டும்

இயேசு மகாராஜனே
மீண்டும் வந்திடுவீரே
உம் மக்களாய் ஒன்று கூடினோம்
உம் மகிமையை தரிசிக்க
மகிமையை தரிசிக்க
மகிமையை தரிசிக்க

இயேசுவே வாருமே
இன்றே வாருமே
இயேசுவே வாருமே
ஆவலாய் நிற்கிறோம்
இயேசுவே இயேசுவே

Yesuvai Pol Oru Deivam illai

இயேசுவைப் போல் ஒரு தெய்வம் இல்லை
இந்த உலகத்தில் உம்ம போல யாரும் இல்லை
மேலே உயரே உயரே இருந்தவரே
விழுந்த மனிதனை தூக்கிட வந்தவரே

இயேசுவே... இயேசுவே...
இயேசுவே... இயேசுவே...

தண்ணீரை ரசமகா மாற்றினீரே
அதை கண்டவர் உம்மை கண்டு வியந்தனரே
கடும் காற்றையும் கடலையும் அதட்டினீரே
கடும் காற்றும் உம்மை கண்டு அடங்கினதே

இயேசுவே... இயேசுவே...
இயேசுவே... இயேசுவே...

லாசருவே நீ வா என்றதும்
அன்று மரித்தவன் உயிர் பெற்று நடந்தானே
உம் வார்த்தையில் உள்ளது வல்லமையே
அது ஜீவனை தந்திடும் நிச்சயமே

இயேசுவே... இயேசுவே...
இயேசுவே... இயேசுவே...

வாரால் அடித்து அறைந்தனரே
உம்மை ஆணிகள் கடாவி சிலுவையிலே
ஆனால் மரித்த பின்பு மூன்றாம் நாள்
நீர் உயிரோடெழுந்தது சரித்திரமே

இயேசுவே... இயேசுவே...
இயேசுவே... இயேசுவே...

UYIRODU EZHUNTHAVAREY UMMAI TAMIL LYRICS

உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா - (4)

மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா - (4)

அகிலத்தை ஆள்பவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஆனந்த பாக்கியமே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா - (4)

Ummai Nokki Parkidren

உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நினைத்து துதிக்கின்றேன்
இயேசையா ஸ்தோத்திரம் - (4)

சரணங்கள்

1. உலகம் வெறுக்கையில்
நீரோ அணைக்கிறீர்
உமது அணைப்பிலே அந்த
வெறுப்பை மறக்கின்றேன்

2. கண்ணின் மணிபோல
என்னைக் காக்கின்றீர்
உமது சமூகமே
தினம் எனக்குத் தீபமே

3. நீரே என் செல்வம்
ஒப்பற்ற என் செல்வம்
உம்மில் மகிழ்கின்றேன் - நான்
என்னை மறக்கின்றேன்

UMMAI UYARTHI UYARTHI

உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப் பார்த்து
இதயம் துள்ளுதையா

1. கரம்பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்

நன்றி நன்றி (2) – உம்மை

2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறீர்

3. நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே

4. இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே

5. வலுவூட்டும் திருஉணவே
வாழ வைக்கும் நல்மருந்தே

Ummodu Irupathu Thaan ullathin

உம்மோடு இருப்பதுதான்
உள்ளத்தின் வாஞ்சையையா
உம் சித்தம் செய்வது தான்
இதயத்தின் ஏக்கமையா

இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன்

1. எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே
என் பாரங்கள் என் சுமைகள்
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன்

2. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
கிருபையும் உள்ளவரே
என் ஜீவனை அழிவில் நின்று
மீட்டவரே என் மேய்ப்பரே

3. எபிநேசரே எல்எலியோன்
என்றுமே உயர்ந்தவரே
எல்ஷடாய் (சர்வ) வல்லவரே
எல்ரோயீ காண்பவரே

4. மன்னிப்பதில் வள்ளல் நீரே
சுகம் தரும் தெய்வம் நீரே
உம் அன்பையும் இரக்கத்தையும்
மணி முடியாய் சூட்டுகின்றீர்

Um Prasanam Naadi Vandhaan

உம் பிரசன்னம் நாடி வந்தேன்
கிருபையினால் நோக்கிடுமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
உம் பிள்ளையாய் என்னை மாற்றிடுமே

என் இயேசுவே என் இராஜனே
நான் ஏங்குகிறேன் உம் சமூகத்திற்கே

1. உம் வசனம் தியானிக்கையில்
இதயம் அதில் ஆறுதலே
மனிதர்கள் என்னை பகைத்தாலும்
அஞ்சிடேனே நீர் இருக்கையிலே --- என் இயேசுவே

2. வாழ்க்கையின் பாரங்கள் நெருக்கையிலே
உம் பிரசன்னம் என் அடைக்கலமே
திக்கற்ற நிலைமையில் இருந்தாலும்
திடன் கொள்ளுவேன் உம் சமூகத்திலே --- என் இயேசுவே

Saturday, December 26, 2015

Ummal Agatha Kariyam

உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை (3)
எல்லாமே உமால் ஆகும் அல்லேலுயா
எல்லாமே உம்மால் ஆகும்

ஆகும் எல்லாம் ஆகும், உம்மாலேதான் எல்லாம் ஆகும் (2)

1. சொல்லி முடியாத அற்புதம் செய்பவர் நீரே (ஐயா நீரே)
எண்ணி முடியாத அதிசயம் செய்பவர் நீரே (ஐயா நீரே) (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம், அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) --- உம்மால்

2. எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே (ஐயா நீரே)
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே (ஐயா நீரே) (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம், அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) --- உம்மால்

3. வறண்ட நிலத்தை நீருற்றாய் மாற்றுபவர் நீரே (ஐயா நீரே)
அவாந்தர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே (ஐயா நீரே) (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம், அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) --- உம்மா

Ummai Ninaikkum Pothellam

உம்மை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் மகிழுதையா
நன்றி பெருகுதையா

நன்றி நன்றி ராஜா
நன்றி இயேசு ராஜா

1. தள்ளப்பட்ட கல் நான்
எடுத்து நிறுத்தினீரே
உண்மை உள்ளவன் என்று கருதி
ஊழியம் தந்தீரையா

2. பாலை நிலத்தில் கிடந்தேன்
தேடி கண்டு பிடித்தீர்
கண்ணின் மணிபோல் காத்து வந்தீர்
கழுகு போல் சுமக்கின்றீர்

3. பேரன்பினாலே என்னை
இழுத்துக் கொண்டீர்
பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர்
பிள்ளையாய் தெரிந்து கொண்டீர்

4. இரவும் பகலும் கூட
இருந்து நடத்துகின்றீர்
கலங்கும் நேரமெல்லாம் கரம் நீட்டி
கண்ணீர் துடைக்கின்றீர்

5. உந்தன் துதியைச் சொல்ல
என்னை தெரிந்து கொண்டீர்
உதடுகளைத் தினம் திறந்தருளும்
புது ராகம் தந்தருளும்

6. சிநேகம் பெற்றேன் ஐயா
கனம் பெற்றேன் ஐயா
உந்தன் பார்வைக்கு அருமையானேன்
உம் ஸ்தானாதிபதியானேன்

7. உலக மகிமையெல்லாம்
உமக்கு ஈடாகுமோ
வானம் பூமியெல்லாம் ஒழிந்து போகும்
உம் வார்த்தையோ ஒழியாதையா

Ummai Padatha Natkalum Illaiye

உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே (2)

1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) --- உம்மை

2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச் செய்தீரே (2) --- உம்மை

3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) --- உம்மை

4. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2)
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும் (2) --- உம்மை

Ummai Padatha Navum

1. உம்மை பாடாத நாவும்
கேளாத செவியும் மகிமையிழந்ததே
பாரில் மகிமையிழந்ததே

உந்தன் சித்தம் செய்ய நித்தம்
இயேசுவை நீர் என்னை ஆட்கொள்ளுமே

2. எந்தன் பாவத்தைப் போக்க
பாரினில் வந்த பரனை போற்றுவேன் - தேவ
பரனை போற்றிடுவேன் --- உந்தன்

3. இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக
சிலுவை அண்டை நீ வா - அவர்
சிலுவை அண்டை நீ வா --- உந்தன்

4. இதோ சீக்கிரம் வரும் இயேசு ராஜனை
போற்றித் துதித்திடுவோம் - தினம்
போற்றித் துதித்திடுவோம் --- உந்தன்

Um Namam Valka Raja

உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே (2)
உம் அரசு வருக ராஜா என் தந்தையே(2)

வாழ்க ராஜா அல்லேலுயா (4)
அல்லேலுயா ஓசன்னா (4)

1. யேகோவா யீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் (2) --- வாழ்க

2. யேகோவா ரூவா உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
யேகோவா ரஃபா சுகம் தருபவர் நீர் (2) --- வாழ்க

3. ராஜாதி ராஜா நீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
உயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமையா (2) --- வாழ்க

மாரநாதா அல்லேலூயா (4)
அல்லேலூயா ஓசன்னா (4)

un vetkathirku bathilaga

உன் வெட்கத்திற்கு பதிலாக
இரட்டிப்பான பலன் வரும்
உன் இலட்சைக்கு பதிலாக
நித்திய மகிழ்ச்சி வரும்

துதித்திடுவோம் போற்றிடுவோம்
மகிழ்ந்திடுவோம் ஸ்தோத்தரிப்போம்

1. சாம்பலுக்கு பதிலாக
சிங்காரம் கொடுப்பாரே
துயரத்திற்கு பதிலாக
தைலத்தை கொடுப்பாரே - ஆனந்த

2. சோர்வை எல்லாம் மாற்றிடுவார்
துதியின் உடை தருவார்
நீதி தேவன் சரிக்கட்டுவார்
ஆறுதல் தந்திடுவார் - நல்ல

3. திறந்த வாசல் உனக்கு உண்டு
திகையாதே கலங்காதே
அவர் நாமத்தை தொழுதிடுவாய்
மகிமையை அடைந்திடுவாய் - அவர்

Undhan Prasanathaal vali nadathum

உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
சுத்திகரியும், பெலப்படுத்தும்
உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
சுத்திகரியும், பெலப்படுத்தும்

தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே
தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே

மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமே
உறவுகளால் வாழ்வில் எனக்கு - என்றும்
மனதில் சஞ்சலமே...
மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமே,
உறவுகளால் வாழ்வில் எனக்கு - என்றும்
மனதில் சஞ்சலமே...

என்றும் மனதில் சஞ்சலமே…..

தனிமையில் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமே
கேள்விகள் உள்ள எனக்கு - உம்
வசனம் பேர் ஆறுதலே...
தனிமையில் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமே
கேள்விகள் உள்ள எனக்கு - உம்
வசனம் பேர் ஆறுதலே...

உம் வசனம் பேர் ஆறுதலே…

உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
சுத்திகரியும், பெலப்படுத்தும்
உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
சுத்திகரியும், பெலப்படுத்தும்

தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே
தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே

Edhayum Thaangum oor Idhayam thaarum

எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்
இயேசு தேவா என் தேவா

அனுபல்லவி

ஏன் என்று கேட்க உரிமை இல்லையே
எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்

சரணங்கள்

1. கொடுத்த உயிரை நீர் எடுத்தீர்
குயவன் களிமண்ணின் அதிபதி அல்லோ
வாழ்நாள் குறைந்தவன், வருத்தம் நிறைந்தவன்
உயிருள்ள மனிதன் முறையிடுவானே --- ஏன் என்று

2. சோதித்த பின் சுத்த பொன்னாக்கிடும்
வேதத்தின் விளக்கத்தை உணரச் செய்யும்
மண்ணில் பிறந்தவன் மண்ணுக்கே திரும்புவான்
மனிதனை சோதிக்க எம்மாத்திரம் - அவன் --- ஏன் என்று

Ennai kandavare ennai kaanbavare

அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா

என்னை கண்டவரே
என்னை காண்பவரே
என்னை காத்தவரே
என்னை காப்பவரே

1. பாவீயாய் இருந்த என்னை கண்டு கொண்டீரே
பாசமாய் மார்போடு அணைத்து கொண்டீரே
நெருக்கத்தில் இருந்த என்னை தேடி வந்தீரே
நெருங்கி அன்பாக சேர்த்து கொண்டீரே

2. கடந்த காலம் எல்லாம் காத்து கொண்டீரே
வருகிற காலத்திலும் காத்து கொள்வீரே
கொடுத்த வாக்குத்தத்தம் பூர்த்தீ செய்தீரே
புதிய வாக்குறுதி கொடுத்து விட்டீரே

3. தள்ளாடி நடந்த என்னை தேடி வந்தீரே
மதில்களை தாண்டும்படி தூக்கி விட்டீரே
நெரிந்த நாணலை போல் வாழ்ந்து வந்தேனே
எரியும் தீப்பிளம்பாய் மாற்றி விட்டீரே

Ootridume Um Vallamayai

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடே

வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காய் கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல் கொண்டு உமக்காய் எழும்பிட

1. பெந்தே கோஸ்தே நாளில் செய்தது போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே
அப்போஸ்தலர் நாளில் செய்தது போல
இன்றும் செய்ய வேண்டும் --- ஊற்றிடுமே

2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேனென்று
வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே
நதியாய் பாய்ந்திடுமே --- ஊற்றிடுமே

3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே --- ஊற்றிடுமே

En Uyirana Uyirana Uyirana Yesu

என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்

1. உலகமெல்லாம் மறக்குதையா!
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே

2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா!
உம் வசனம் தியானிக்கிறேன்

3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பேனே

Elshaddai Enthan Thunai Neere

எல்ஷடாய் எந்தன் துணை நீரே
என் வாழ்வின் கேடகம்
எண்ணில்லா நன்மைகள்
என் வாழ்வில் செய்தீரே
எந்தன் வாழ்வின் பெலன் நீரே

1. காலைதோறும் கிருபை பொழியும்
கிருபையே ஸ்தோத்திரம்
உந்தன் நாமம் எந்தன் இன்பம்
உமது செட்டை அடைக்கலம்

2. இம்மட்டும் என்னை காத்து நடத்தின
எபனேசரே ஸ்தோத்திரம்
எந்த நாளும் கூட இருக்கும்
இம்மானுவேலே ஸ்தோத்திரம்

3. யேகோவா ராஃபா எந்த நாளும்
எந்தன் பரிகாரி
எந்த நாளும் வெற்றி தருவீர்
யேகோவா நிசியே ஸ்தோத்திரம்

4. யேகோவாயீரே எந்தன் தேவைகள்
பார்த்துக் கொள்வீரே
எந்தன் வாழ்வின் சமாதானமே
யேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம்

Endha Nilayil Nan Irundhaalum

எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே

அனாதையாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
அன்பு வேண்டுமா என்று அலைய வைப்பார்கள்
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே --- எந்த

பட்டப்படிப்பு இல்லா விட்டால் பலர் வெறுப்பார்கள்
என் பட்டங்களை சொல்லி சொல்லி பரிகசிப்பார்கள்
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே --- எந்த

நோயாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
என் நோய்களையே சொல்லி சொல்லி நோகடிப்பார்கள்
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே --- எந்த

கடனாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
என் கடன்களையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள்
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே --- எந்த

Ennai Anantha Thailathal


என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே - (4)

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - (4)

வறண்ட நிலங்கள் வயல்வெளியாகட்டும் ஆவியானவரே - (2)
அன்பின் ஆவியானவரே - (2) --- என்னை

உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே - (2)
அன்பின் ஆவியானவரே - (2) --- என்னை

Ellam Neer Thane yesu rajane

எல்லாம் நீர் தானே
இயேசு ராஜனே (2)

தாகம் நீர் தானே
தண்ணீர் நீர் தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே --- எல்லாம்

என் பசியும் நீர் தானே
உணவும் நீர் தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே --- எல்லாம்

உதவி நீர் தானே
ஒத்தாசை நீர் தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே --- எல்லாம்

எதிர்காலம் நீர் தானே
எதிர்பார்ப்பு நீர் தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே --- எல்லாம்

அர்ப்பணிப்பேன் என்னை இன்றே
அன்பரின் சேவைக்கென்றே
உம் ஆவி ஊற்றுமே
இன்று ஊற்றுமே - அப்பா
உம் அக்கினி ஊற்றுமே

நிரப்பிடுமே என்னை இன்றே
அப்பா உம் ஆவியாலே
உம் ஆவி ஊற்றுமே
இன்று ஊற்றுமே - அப்பா
உம் அக்கினி ஊற்றுமே

En Vaalvil Yesuve ennalum

என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
எல்லாமும் நீயாக வேண்டும்
எந்தன் எல்லாமும் நீயாக வேண்டும்

சோகங்கள் ஆறாமல் நான் வாடும் போது
தாயாக நீ மாற வேண்டும்
அன்புத் தாயாக நீ மாற வேண்டும்

1. பாரங்கள் தாங்காமல் சாய்கின்ற போது
பாதங்கள் நீயாக வேண்டும் - எந்தன்
பாவங்கள் கடலாகி நான் மூழ்கும் போது
ஓடங்கள் நீயாக வேண்டும் - வரும் --- என்

2. போராட்டம் சூழ்ந்தென்னை தீவாக்கும்போது
பாலங்கள் நீயாக வேண்டும் - இணை
தீராத ஆர்வத்தில் நான் தேடிப் பயிலும்
பாடங்கள் நீயாக வேண்டும் - மறை --- என்

3. காலங்கள் எல்லாமும் என் நெஞ்ச வீட்டில்
தீபங்கள் நீயாக வேண்டும் - சுடர்
தாகங்கள் தீராமல் நான் ஏங்கும் போது
மேகங்கள் நீயாக வேண்டும் - மழை --- என்

Endhan Dhevanaal Endhan Dhevanaal

எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்
உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்
உந்தன் வழிகளில் நடந்திடுவேன்

1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்
வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்
என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே
என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே

2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்
நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்
என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே
எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும்

3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்
எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்
எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்
என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார்

4. இனி என்றும் கடன் வாங்க விடமாட்டார்
கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார் (2)
உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே
உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார்

Endhan Nesar Yesu Nadha

எந்தன் நேசர் இயேசு நாதா உம்மில் அன்பு கூறுவேன்
உம்மில் வைக்கும் ஆசையாலே பாவம் யாவும் வெறுப்பேன்
உந்தன் அன்பால் ஏற்றுக் கொண்டு ரத்தம் சிந்தி ரட்சிப்பீர்
நேசர் மா பெரும் கிருபையை நானோ எப்போதும் மறவேன்

எந்தன் நேசர் இயேசு நாதா
உம்மில் அன்பு கூறுவேன்
நேசர் மா பெரும் கிருபையை
நானோ எப்போதும் மறவேன்

எண்ணம் இல்லா எந்தன் வாழ்க்கை அனைத்தையும் மன்னிப்பீர்
பரிசுத்த ஆவி தந்து சத்ய பாதை காட்டினீர்
மேலும் நேர் வழி நடக்க நீர் என் முன்னே செல்கிறீர்
சா மட்டும் நிலைத்து நிற்க உம் கிருபையை ஈகிறீர் --- எந்தன்

இனி நான் என் வாழ் நாளெல்லாம் உம்மையே பின் செல்லுவேன்
நன்றியுள்ள சாட்சியாக உம் அன்பை பிரஸ்தாபிப்பேன்
சா மட்டும் உந்தன் துதி எங்கள் வாயில் இருக்கும்
என்னிலும் உம்மோடு வாழ்ந்து நித்யானந்தம் கொள்ளுமே --- எந்தன்

Oruvarum Sera Koodatha


ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)
நீரே பரிசுத்த தெய்வம் (2)
நீரே நீர் மாத்ரமே (2)

ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)
நீரே பரிசுத்த தெய்வம் (2)
நீரே நீர் மாத்ரமே (2)

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (4)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2)

ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)
நீரே பரிசுத்த தெய்வம் (2)
நீரே நீர் மாத்ரமே (2)

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (4)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2) இயேசுவே
நீரே நீர் மாத்ரமே (ராஜனே) (2)
நீரே நீர் மாத்ரமே (எங்கள் தெய்வமே) (2)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2)

எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே
எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே

உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்ரமே
உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்ரமே

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (4)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே)
நீரே நீர் மாத்ரமே (3)

பரிசுத்தர் பரிசுத்தர் (அவர்) பரிசுத்தரே (4)
பரிசுத்தர் பரிசுத்தர் (அவர்) பரிசுத்தரே (4)
நீரே நீர் மாத்ரமே (10)

Karthave En Belane

கர்த்தாவே என் பெலனே
உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்
துருகமும் நீர் கேடகம் நீர்
இரட்சண்யக் கொம்பும் அடைக்கலம் நீர்

1. மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும்
துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும்
நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப
உருக்கமாய் வந்து உதவி செய்தார்

2. தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர்
உத்தமனை நீர் உயர்த்திடுவீர்
புனிதனுக்கு நீர் புனிதரன்றோ
புதிய கிருபையின் உறைவிடமே

3. உம்மாலே ஒர் சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலைத் தாண்டுவேன்
சத்துருவை நான் தொடர்ந்திடுவேன்
சதா காலமும் ஜெயம் எடுப்பேன்

4. இரட்சண்ய கேடகம் எனக்குத் தந்தீர்
உமது கரம் என்னை உயர்த்தும்
கர்த்தரை அல்லால் தேவன் இல்லை
அவரே எந்தன் கன்மலையே

5. பெலத்தினால் என்னை இடைக்கட்டி
மான்களின் கால்களை போலாக்கி
நீதியின் சால்வையை எனக்குத் தந்து
உயர் ஸ்தலத்தில் என்னை நிறுத்துகின்றார்

KALANGINA NERANGALIL KAITHUKKI EDUTHAVARE

கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை

நீங்க தான்பா என் நம்பிக்கை
உம்மை அன்றி வேறு துணையில்லை

1.தேவைகள் ஆயிரம் என் முன் இருப்பினும்
சோர்ந்து போவதில்லை, என்னோடு நீர் உண்டு
தேவையை காட்டிலும் பெரியவர் நீரல்லோ
நினைப்பதை பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ --- நீங்க

2.மனிதனின் தூஷனையில் மனமடிவடைவதில்லை
நீர் எந்தன் பக்கம் உண்டு, தோல்விகள் எனக்கு இல்லை
நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்
வாதாட நீர் உண்டு ஒருபோதும் கலக்கமில்லை --- நீங்க

KARTHER NALLAVAR THUTHIYUNGAL


1. கர்த்தர் நல்லவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தாதி கர்த்தரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அற்புதம் செய்பவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

மகிழ்ந்து பாடு அல்லேலூயா
புகழ்ந்து பாடு அல்லேலூயா
சேர்ந்து பாடு அல்லேலூயா
போற்றிப் பாடு அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
துதித்துப் பாடு அல்லேலூயா
களித்துப்பாடு அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா (18)

2. வானங்களை விரித்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
பூமியைப் படைத்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சந்திரனைப் படைத்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

3. செங்கடலைப் பிளந்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அரசர்களை அழித்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சேனைகளைக் கவிழ்த்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேசத்தைத் தந்தவரைத் துதியுங்கள்

4. தாழ்வில் நினைத்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
விடுதலை தந்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
ஆகாரம் தருபவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
பரத்தின் தேவனைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

KARTHER EN MEIPERAI IRUKINDRARE


1. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
தாழ்ச்சி அடையேன் என்றுமே
அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார்

2. ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை
ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
மகிமையின் நாமத்தினிமித்தம் அவர்
தம் நீதியின் பாதையில் நடத்துகிறார்

3. மரண பள்ளத்தாக்கில் நடந்திடினும்
மாபெரும் தீங்குக்கும் அஞ்சேனே
கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே
அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே

4. சத்துருக்கள் முன்பில் எனக்காக
பந்தி யொன்று ஆயத்தம் செய்தார்
என்னை தம் எண்ணையால் அபிஷேகித்து என்
பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்

Thursday, December 24, 2015

KUTHUKALAM KONDATTAME

குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்தில்
ஆனந்தம் ஆனந்தமே
என் அப்பாவின் திருப்பாதத்தில்

1. பாவமெல்லாம் பறந்தது
நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால்

2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
ஆவியான தேவன் அச்சாரமானார்
அதிசயம் அதிசயமே

3. வல்லவர் என் இயேசு
வாழ வைக்கும் தெய்வம்
வெற்றிமேலே வெற்றி தந்தார்
ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடி
ஊரெல்லாம் கொடியேற்றுவோம்

4. எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம்
நேசர் வருகின்றார்
ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்
மகிமையில் பிரவேசிப்போம்

Konalum Marupadumana ulagathil

கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்

இராஜா வருகிறார் விரைவில் வருகிறார்
ஆயத்தம் ஆயத்தமாவோம்

1. முணுமுணுக்காமல் வாதாடாமல்
அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம்

2. ஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு
சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம்

3. இயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே
இருப்பதுபோல அவரைக் காண்போம்

4. அற்பமான நம் சரீரங்களை
மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார்

5. வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற
பெருமையடைவோம் அவர் வருகையிலே

6. பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசு
வருவதை எதிர்பார்த்து காத்திருப்போம்

SANTHOSAMA IRUNGA EPPOTHUM LYRICS

சந்தோஷமாயிருங்க
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும், தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்

சரணங்கள்

1. நெருக்கத்தின் நேரத்திலும்
தண்ணீரின் பாதையிலும்
நம்மை காண்கின்ற தேவன்
நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க --- சந்தோஷமா

2. விசுவாச ஓட்டத்திலும்
ஊழிய பாதையிலும்
நம்மை வழிநடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க --- சந்தோஷமா

3. தோல்விகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன்
நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க --- சந்தோஷமா

4. என்ன தான் நேர்ந்தாலும்
சோர்ந்து போகாதீங்க
நம்மை அழைத்த தேவன்
கைவிட மாட்டார், சந்தோஷமாயிருங்க --- சந்தோஷமா

SORNTHU POGATHE EN NANBANE


1. சோர்ந்து போகாதே என் நண்பனே
மனம் உடைந்து போகாதே என் பிரியனே (2)
கடும் புயல் வரினும் காற்று வீசினும்
நீ கலங்காதே மனமே (2)

இயேசு உன்னை தேற்றிடுவார்
இயேசு உன்னைக் காத்திடுவார்
இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே (2)

2. என் ஆத்ம நேசர் முன் செல்கையில்
நான் என்றுமே அஞ்சிடேன் (2)
என் கரம் பிடித்து மகிமைதனில்
அவர் தினமும் நடத்துவார் (2) --- இயேசு

3. நண்பர் உன்னை கைவிட்டாலும்
நம்பினோர் உன்னைத் தள்ளிவிட்டாலும் (2)
மனம் கலங்காதே திகையாதே
உன் இயேசு இருக்கின்றார் (2) --- இயேசு

Thanimaiyin Paathaiyil thagapane

தனிமையின் பாதையில்
தகப்பனே உம் தோளில்
சுமந்ததை நான் மறப்பேனோ

ஆ.. எத்தனை அன்பு என் மேல்
எத்தனை பாசம் என் மேல்
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் --- தனிமையின்

1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
மார்போடு அணைத்துக் கொண்டீரே
கண்ணீரை கணக்கில் வைத்தீரே
ஆறுதல் எனக்கு தந்தீரே --- ஆ..

2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
அடைக்கலம் எனக்கு தந்தீரே
தடுமாறும் வேலையிலெல்லாம்
தகப்பன் போல சுமந்து சென்றீரே --- ஆ..

3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்
என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே
உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் --- ஆ..

DEIVATHUVATHIN PARIPOORANAM

தெய்வத்துவத்தின் பரிபூரணம் எல்லாம்
இயேசுவில் இருக்கக்கண்டோம்
அவருக்குள் ஞானம், மீட்பு, தூய்மை
பொக்கிஷவைப்பாய் கண்டோம்

1. விசுவாசத்தில் மெத்த உறுதிப்படுவோம்
இயேசுவின் சாயலை அணிந்திருப்போம்
அவரோடும் மரித்துயிர்த்தெழுந்தே
மகிமையாய் மலர்ந்திருப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம் --- அவரோடு

2. இயேசுவை எந்நாளும் சேவிப்போம்
வேதத்தின் முன்னே நடுங்கி நிற்போம்
சொல் செயலாலும் அனுதினவாழ்வில்
கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம் --- சொல் செயல்

3. ஞாலமெங்கும் தேவதூது சொல்வோம்
ஞானமாய் காலத்தை செலவழிப்போம்
ஜெபதூபம் ஸ்தோத்திரத்தோடே
ஜெயமாக வாழ்ந்திருப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம் --- ஜெப தூபம்

DEVANE EN DEVA

தேவனே என் தேவா
உம்மை நோக்கினேன்
நீரில்லா நிலம் போல
உம்மை பார்க்கிறேன்

1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்
ஓடி வருகிறேன்
உம் வல்லமை மகிமை கண்டு
உலகை மறக்கின்றேன்

2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை
எனக்குப் போதுமே
உதடுகளாலே துதிக்கின்றேன்
உலகை மறக்கின்றேன்

3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கிறேன்
உம் சிறகுகளின் நிழல்தனிலே
உலகை மறக்கின்றேன்

4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மை
பற்றி கொண்டது
உம் வலக்கரமோ என்னை நாளும்
தாங்கி கொண்டது

5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்
வாழ்த்திப் பாடுவேன்
சுவையான உணவை உண்பதுபோல்
திருப்தி அடைகின்றேன்

THUTHITHIDUVEN MULU IRUTHAYATHODU


துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

உன்னதரே உம்மில் மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும் – 2

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே – 2
அடைக்கலமே புகலிடமே – 2

முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

2. நாடி தேடி வரும் மனிதர்களை
டாடி கைவிடுவதே இல்லை – 2
ஒருபோதும் கைவிட மாட்டீர் – 2

முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

3. வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை – 2
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை – 2

முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

THUTHITHIDUVEN MULU IRUTHAYATHODU

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2

உன்னதரே உம்மில் மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும் – 2

1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்
அழுகுரல் கேட்டீரையா - (2)
குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்
உமது காருண்யத்தால் - (2)

குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே
உமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே - (2)

2. எனது விளக்கு எரியச் செய்தீர்
இரவைப் பகலாக்கினீர் - (2)
எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை - (2)

எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் - (2)

3. நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம்
நீர்தான் நீர்தானையா - (2)
தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர்
ஆறுதல் நீர்தானையா - (2)

தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே
ஆறுதல் நீர்தானையா துதிக்குப் பாத்திரரே - (2)

4. சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே
மதிலைத் தாண்டிடுவேன் - (2)
புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம் - (2)

புகழ்ந்து பாடிடுவேன் உம்மையே உயர்த்திடுவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம் உம்மையே உயர்த்திடுவேன்

Wednesday, December 23, 2015

Paraloga Devana Ummai arathanai

பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்
பரலோக ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம்
உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே - (2)
நான் கண்டேனே, நான் கண்டேனே

சரணங்கள்

1. மோசேயின் தேவனே
என்னை வழி நடத்திடுவீர் --- உமது அன்பின்

2. யோசுவாவின் தேவனே
எங்கள் மதில்களை நொறுக்குவீர் --- உமது அன்பின்

3. தேவாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்
ராஜாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்

Parisutha Devan Neere vallamai devan

பரிசுத்த தேவன் நீரே வல்லமை தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
இயேசுவே உம் நாமத்தை
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
நீர் தேவன் நீர் இராஜா என்றும்

1. கேருபீன் சேராபீன்கள்
உந்தனை தொழுதிடுதே
வல்லமை இறங்கிடவே
உந்தனை தொழுதிடுவோம் --- பரிசுத்த

2. உம்மை போல் தேவன் இல்லை
பூமியில் பணிந்திடவே
அற்புத தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் --- பரிசுத்த

3. மேலான தேவன் நீரே
மேலான நாமமிதே
மாந்தர்கள் பணிகின்றாரே
உம்மையே தொழுதிடுவோம் --- பரிசுத்த

4. சத்திய பாதைகளில்
நித்தமும் நடந்திடவே
உத்தமர் தேவன் நீரே
உம்மையே தொழுதிடுவோம் --- பரிசுத்த

Parolaga Devane parakkiramam


பரலோக தேவனே
பராக்கிரமம் உள்ளவரே (2)
(இந்த) அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது எதுவுமில்லை

1. எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வ வல்ல தெய்வமே (2)

உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் - உம்மை

2. யெஹோவா நிசியே
வெற்றி தந்த தெய்வமே (2)

3. யெஹோவா ராஃப்ஃபா
சுகம் தந்த தெய்வமே (2)

4. எல்ரோயீ எல்ரோயீ
என்னை கண்ட தெய்வமே (2)

Pithave Potri Kumaran Potri

பிதாவே போற்றி, குமாரன் போற்றி
ஆவியே போற்றி, போற்றி, போற்றி

போற்றி, போற்றி - (4) 1. யெகோவாயீரே போற்றி, போற்றி
எல்லாமே பார்த்துக் கொள்வீர் - (2) --- பிதாவே

2. யெகோவா நிசியே போற்றி, போற்றி
எங்களுக்கு வெற்றி தருவீர் - (2) --- பிதாவே

3.யெகோவா ஷாலோம் போற்றி, போற்றி
சமாதானம் தருகின்றீர் - (2) --- பிதாவே

4. யெகோவா ராவ்ப்பா போற்றி, போற்றி
எங்களுக்கு சுகம் தருவீர் - (2) --- பிதாவே

5. யெகோவா ஷம்மா போற்றி, போற்றி
கூடவே இருக்கின்றீர் - (2) --- பிதாவே

Pidha Kumaran Parisutha Aavi

பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்
திரித்துவ தேவனை துதித்திடுவோம்

1. பாவத்தின் கோர பலியான
சாபங்கள் தன்னில் ஏற்றுக்கொண்டு
பாவிகளுக்காய் ஜீவன் தந்த
தேவ குமாரனை ஸ்தோத்தரிப்போம்

2. நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில்
சேரக்கூடாத ஒளிதனில்
மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும்
பரமபிதாவை ஸ்தோத்தரிப்போம்

3. வல்லமையோடு வந்திறங்கி
வரங்கள் பலவும் நமக்கின்று
ஆவியின் வழியை தினம் காட்டும்
பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம்

Pudhiya Nalukul Ennai Nadathum


புதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்

புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா --- புதிய

1. ஆரம்பம் அற்பமனாலும்
முடிவு சம்பூர்ணமாய்
குறைவுகள் நிறைவாகட்டும் - எல்லா
என் வறட்சி செழிப்பாகட்டும் --- புது

2. வெட்கத்துக்கு பதிலாக (இரட்டிப்பு)
நன்மை தாரும் தேவா - (2)
கண்ணீர்க்கு பதிலாக (எந்தன்) - (2)
களிப்பை தாரும் தேவா (ஆனந்த) - (2) --- புது

3. சவால்கள் சந்தித்திட (இன்று)
உலகத்தில் ஜெயமெடுக்க - (2)
உறவுகள் சீர்பொருந்த (குடும்ப) - (2)
சமாதானம் நான் பெற்றிட (மனதில்) - (2) --- புது

Pesu Sabaiye Pesu

பேசு சபையே பேசு (4)

இது உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்
இது தள்ளாடும் முழங்கால்கள் புது பெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்
இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்
இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள் (2) --- பேசு

நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்றுசேரும்
தசைகளும் புதிதாகத் தோன்றும்
ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்
புதுஜீவன் உனக்குள்ளாய் தோன்றும் (2) --- பேசு

மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும் பெருகிடவே
பெருமழை தேசத்தில் பெய்யும்
கல்வாரி இரத்தத்தாலே ஜாதிகள் மீட்கப்பட்டு
கர்த்தரை தெய்வமாக வாழ்த்தும் (2) அதனால் --- பேசு

ஜாதிகள் நடுங்கிடவும் தேசங்கள் உயர்ந்திடவும்
கர்த்தரின் கிரியைகள் தோன்றும்
மரித்தோர் பள்ளத்தாக்கில் துதிக்கின்ற சேனையொன்று
கர்த்தரின் ஜீவன் பெற்று எழும்பும் --- இது உலர்ந்த

ஜீவனை பேசு, இரட்சிப்பை பேசு
சுவாசத்தை பேசு, அற்புதத்தை பேசு (2)

சபையே நீ எழும்பிடு, காற்றே நீ வீசிடு

போற்று சபையே போற்று - இயேசுவை
போற்று சபையே போற்று --- பேசு

Yaar Ennai Kai Vitalum

யார் என்னை கைவிட்டாலும்
இயேசு கைவிட மாட்டார்
கைவிட மாட்டார் கைவிட மாட்டார் கைவிடவே மாட்டார்
இயேசு கைவிடவே மாட்டார்


1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார் --- யார்

2. இரத்தத்தால் கழுவி விட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்கு தந்தாரே --- யார்

3. ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே --- யார்

4. வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே --- யார்

YOSANAIYIL PERIYAVARE ARATHANAI ARATHANAI

யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை
செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை

ஓசன்னா உன்னத தேவனே
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை
கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை

2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை
சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை

3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை
ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை

4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை
தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை

5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை
பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை

6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை
விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

LESANA KARIYAM UMAKU ADHU LYRICS

லேசான காரியம், உமக்கது லேசான காரியம் ( 2 )

அனுபல்லவி

பெலன் உள்ளவன், பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன், பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம், உமக்கது லேசான காரியம்

சரணங்கள்

1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் (2)
மண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம் (2)
உமக்கது, லேசான காரியம் --- பெலன் உள்ளவன்

2. உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் (2)
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் (2)
உமக்கது, லேசான காரியம் --- பெலன் உள்ளவன்

3. இடறிய மீனவனை சீஷனாய் மாற்றுவது லேசான காரியம் (2)
இடையனை கோமகனாய் அரியணை ஏற்றுவதும் லேசான காரியம் (2)
உமக்கது, லேசான காரியம் --- பெலன் உள்ளவன்

VANTHARULUM THOOYA AAVIYE


வந்தருளும் தூய ஆவியே
தந்தருளும் தேவ மகிமையே

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே

அபிஷேகியும் தூய ஆவியே
அனல் மூட்டும் தூய ஆவியே

ஆட்கொள்ளும் தூய ஆவியே
அரவணைக்கும் தூய ஆவியே

ஊற்றிடுமே தூய ஆவியே
உணர்திடுமே தூய ஆவியே

வழிகாட்டும் தூய ஆவியே
வழிநடத்தும் தூய ஆவியே

Vaanamum Boomiyum Maridinum

வானமும் பூமியும் மாறிடினும்
வாக்குமாறாத நல்ல தேவனவர்
காத்திடுவார் தம் கிருபையியென்றும்
கர்த்தனேசு உந்தன் மீட்பராமே

கல்வாரி ரத்தம் பாய்ந்திடுதே
கன்மலை கிறிஸ்துவின் ஊற்றதுவே
பாவங்கள் நீக்க சாபங்கள் போக்க
தாகங்கள் தீர்த்திட அழைக்கின்றாரே

கல்வாரி மலைமேல் தொங்குகின்றார்
காயங்கள் கண்டிட வந்திடாயோ
ராகங்கள் மாற்றிடும் ஔஷதமே
தாயினும் மேலவர் தயையிதே --- கல்வாரி

கிருபையின் காலம் முடித்திடுமுன் (2)
நொறுங்குண்ட மனதாய் வந்திடுவாய்
பூரணனே உன்னை மாற்றிடவே
புதுமையாம் ஜீவனால் நிறைத்திடுவார் --- கல்வாரி

கிறிஸ்துவின் மரணசாயலிலே (2)
இணைந்திட இன்றே வந்திடுவாய்
நித்திய அபிஷேகமும் தந்து
நீதியின் பாதை நடத்திடுவார் --- கல்வாரி

வருகையின் நாள் நெருங்கிடுதே (2)
வாஞ்சையுடன் இன்றே வந்திடாயோ
வானவரின் பாதம் தாழ்ந்திடுவாய்
பாரங்கள் யாவையும் ஏற்றிடுவார் --- கல்வாரி

Vidhiyupum Arupimum May

1. விதைப்பும் அறுப்புமே
பூமியின் மீதினிலே
மாறி மாறி வருமே
பகலும் இரவுமாய் வருடங்கள் மாயமாய்
நழுவியே சென்றிடுமே

சிந்திப்பீர், சிந்திப்பீர்
காலங்களைச் சிந்திப்பீர்
இயேசு கிறிஸ்துவின்
வேலை ஒன்றே இன்று பிரதானம்

2. ஒன்று இரண்டென
எத்தனை வருடங்கள்
கனவெனக் கழிந்தது பார்
எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது
தேவப் போரினில் ஈடுபடு

3. நாடுகள் நடுவினில்
வாய்ப்புகள் உனக்காக
எத்தனை நாட்கள் உண்டு
சாதகமானதோர் வாசல் இங்கு கண்டு
வந்து பயன்படுத்து

4. ஆழக்கடல்களில்
படகைச் செலுத்திட
கடல்போன்ற தேவையல்லோ
பாவக் கடலினில் மூழ்கிடும் யாவர்க்கும்
படகு உன் சாட்சியல்லோ?

Vetkapattu Povathillai

வெட்கப்பட்டுப் போவதில்லை ஒருபோதும்
வெட்கப்பட்டுப் போவதில்லை ஒருநாளும்
வெட்கப்பட்டுப் போவதில்லை இயேசு இருப்பதால்

இயேசு என்னோடு இருப்பதால்
இயேசு என்னோடு நடப்பதால்
இயேசு என்னோடு வசிப்பதால்
வெட்கப்பட்டுப் போவதில்லை

அல்லேலூயா (8)

Nandri Bali Peedam Kattuvom

நன்றிப்பலிபீடம் கட்டுவோம்
நல்ல தெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மை ஆயிரங்கள்
சொல்லிச் சொல்லி பாடுவேன்

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
பாவம் நீங்கிட கழுவி விட்டீர்
உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
உமது ஊழியம் செய்ய வைத்தீர்

2. சிறந்த முறையிலே குரல் எழுப்பும்
சிலுவை இரத்தம் நீர் சிந்தினீரே
இரத்தக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டு
எதிரி நுழையாமல் காத்துக்கொண்டீர்

3. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்
உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
உரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர்

4. பார்க்கும் கண்களை தந்தீரய்யா
பாடும் உதடுகள் தந்தீரய்யா
உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
ஓடும் கால்களைத் தந்தீரய்யா

5. இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர்
வாழத் தேவையான வசதி தந்தீர்
கடுமையாக தினம் உழைக்க வைத்தீர்
கடனே இல்லாமல் வாழ வைத்தீர்

6. புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
புனித இரத்தம் ஊற்றினீரே
சத்திய ஜீவ வார்த்தையாலே
மரித்த வாழ்வையே மாற்றினீரே

7. எதிராய் வாழ்ந்து வந்த இவ்வுலகை
ஒப்புரவாக்கினீர் உம் இரத்தத்தால்
தூரம் வாழ்ந்து வந்த எங்களையே
அருகில் கொண்டுவந்தீர் ஆவியினால்

8. குற்றம் செய்ததால் மரித்திருந்தோம்
இயேசுவோடே கூட எழச்செய்தீர்
கிருபையினாலே இரட்சித்தீரே
உன்னதங்களிலே உட்காரச் செய்தீர்

9. இதய பெலவீனம் நீக்கினீரே
சுகர் வியாதிகள் போக்கினீரே
அல்சர் இல்லாமல் காத்தீரே
ஆஸ்மா முற்றிலும் நீக்கியதே

10. நல்ல குடும்பம் நீர் தந்தீரய்யா
செல்ல பிள்ளைகள் தந்தீரய்யா
அணைக்கும் கணவனை தந்தீரய்யா
அன்பு மனைவியை தந்தீரய்யா

Nambikkai Nangooram naan nambum

நம்பிக்கை நங்கூரம், நான் நம்பும் தெய்வமே
நம்பினோரைக் காக்கும் இயேசுவே - பரம
பரிசுத்த தேவனை, பரலோக ராஜனை
பாடல் பாடி கொண்டாடிடுவோம் (2)

நம்பிக்கை நீர் தானே, நங்கூரம் நீர் தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே! (2) நீர்தானே

1. பார்வோனை வென்றவரை துதிப்போம்
எகிப்தியரை வென்றவரைத் துதிப்போம், ஆயிரம்
பார்வோன்கள் வந்தாலும், எகிப்தியர் வந்தாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம் --- நம்பிக்கை

2. கன்மலையைப் பிளந்தவரைத் துதிப்போம்
நீரூற்றைத் தந்தவரைத் துதிப்போம், பஞ்சம்
பட்டினியே வந்தாலும், வறட்சிகள் என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம் --- நம்பிக்கை

3. கல்லறையைப் பிளந்தவரைத் துதிப்போம்
மரணத்தை வென்றவரைத் துதிப்போம், மரண
இருளுள்ள பள்ளத்தாக்கின், சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம் --- நம்பிக்கை

Nilai Illa Ulagam Idhu

நிலையில்லா உலகம் இது நினைவினில் எழுதி விடு
நிலையான நகரம் உண்டு நித்திய சந்தோஷம் நமக்கு உண்டு
நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?
இயேசுவை சந்திப்பாயா?

1. மலரை போன்ற மனித வாழ்வு உலர்ந்து வாடிடுமே
மனதில் தோன்றும் வழியினில் சென்று
வேதனை அடையாதே
பாவத்தின் சம்பளம் மரணம் என்று நீ அறியாமல் வாழுவதேன்
பரிசுத்த தேவனின் கரங்களில் வந்தால் பாக்கியம் நிச்சயமே
நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?
இயேசுவை சந்திப்பாயா?

2. நிழலை போன்ற உலகின் வாழ்வு கடந்து போய் விடுமே
நிஜங்கள் என்ன என்பதை அறிந்து வாழ்ந்திட அவசியமே
வல்லவர் இயேசுவின் வருகை ஒரு நாள்
விரைவினில் வந்திடுமே
மனதினில் அவரை ஏற்றவர் மட்டும் மறுரூபம் அடைவாரே
நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?
இயேசுவை சந்திப்பாயா?

Nan nirpatum nirmulamakatatum Deva

நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும்
கிருபையே தேவகிருபையே தேவகிருபையே தேவகிருபையே - 2

காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே
போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் - 2
பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே - உன் - 2

அக்கினி நடுவினிலே என்னை எரித்திட நேர்ந்தாலும்
தூதனாக நின்று என்னை காப்பதும் கிருபையே
ஆழியின் நடுவிலும் சீறிடும் புயலினிலும் - 2
நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே - 2

கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே
ஆற்றித் தேற்றியே அரவணைத்திடும் - 2
மாபெரும் கிருபையே எங்கள் தேவ கிருபையே - 2

Nan Edharkaga Pidikka Pattano

நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
அதை பிடித்துக் கொள்ளும்படி
ஆசையாய் தொடருகிறேன் - நான்

பாடுகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
தொடர்ந்து ஓடுகிறேன் - நான்

1. பின்னானவை மறந்து
முன்னானவை நோக்கி
ஆசையாய் தொடருகிறேன்

2. நல்ல போராட்டம் போராடி
ஓட்டத்தை முடித்திடுவேன்
விசுவாசம் காத்துக் கொள்வேன்

3. நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
ஆசையாய் தொடருகிறேன்

Nandri Endru Solluvom

நன்றி என்று சொல்லுவோம்
நல்ல தேவன் கிருபை செய்தார்

நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா

உங்க ஜீவனை தந்தீர் உமக்கு நன்றியப்பா
என் பாவத்தை சுமந்தீர் உமக்கு நன்றியப்பா
சாப நோய்களை எல்லாம் முறியடித்தீரே
புது வாழ்க்கையை தந்து நல்ல சந்தோஷம் தந்தீர்
நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா

பேர் சொல்லி அழைத்தீர் உமக்கு நன்றியப்பா
உங்க அன்பை அள்ளித் தந்தீர் உமக்கு நன்றியப்பா
என்னை வாலாக்காமல் தலையாக்கினீர்
என்னை கீழாக்காமல் மேலாக்கினீர்
நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா

வெண்கல கதவுகள் உடைத்து விட்டீரே
இரும்பு தாழ்ப்பாக்கள் முறித்து விட்டீரே
நல்ல பொக்கிஷங்களை நல்ல ஆசீர்வாதத்தை
எனக்கு தந்தீரே அநாதி பாசத்தால்
நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா

பரலோகில் என்னையும் நீர் கொண்டு சொல்லுவீர்
பிதாவின் மகிமையில் என்னை உட்கார வைப்பீர்
நோய்களும் இல்லை சாப பேயும் அங்கில்லை
பரிசுத்த ஆவி உன்னை வழி நடத்திடுவார்
நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா

Nandri Niraindha Idhayathodu

நன்றி நிறைந்த இதயத்தோடு
நாதன் இயேசுவை பாடிடுவேன்
நன்றி பலிகள் செலுத்தியே நான்
வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்

என் இயேசு நல்லவர்
என் இயேசு வல்லவர்
என் இயேசு பெரியவர்
என் இயேசு பரிசுத்தர் --- நன்றி

1. நான் நடந்து வந்த பாதைகள்
கரடு முரடானவை
என்னை தோளில் தூக்கி சுமந்தார்
அவர் அன்பை மறப்பேனோ --- என்

2. என் கரத்தை பிடித்த நாள் முதல்
என்னை கைவிடவே இல்லை
அவரின் நேசம் எனது இன்பம்
அவர் நாமம் உயர்த்துவேன் --- என்

3. என் போக்கிலும் எந்தன் வரத்திலும்
என் இயேசுவே பாதுகாப்பு
என் கால்கள் சறுக்கிடும் நேரம்
அவர் கிருபை தாங்குமே --- என்

Nandri Nandri Nandri Ayya


நன்றி நன்றி நன்றி ஐயா - (8)

யேகோவாயிரே பார்த்துக் கொள்வீரே - (2)
குறைவேல்லாம் நிறைவாக்குவீர் - எந்தன்
குறைவேல்லாம் நிறைவாக்குவீர் --- நன்றி

யேகோவாராஃவா சுகம் தரும் தெய்வம் - (2)
வியாதிகள் எனக்கில்லையே - இனி
வியாதிகள் எனக்கில்லையே --- நன்றி

யேகோவாஷம்மா கூடவே இருப்பீர் - (2)
தனியாக விடமாட்டீர் - என்னை
தனியாக விடமாட்டீர் --- நன்றி

நன்றி சொல்வேனே என் யேசுவே
நன்மை செய்தீரே என் வாழ்விலே - (3)

NANDRI BALI NANDRI BALI LYRICS

நன்றி பலி, நன்றி பலி
நல்லவரே உமக்குத்தான்
அதிகாலை ஆனந்தமே - என்
அப்பா உம் திருப்பாதமே

1. நேற்றைய துயரமெல்லாம்
இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்ததையா – அது
நிரந்தரமானதையா

கோடி கோடி நன்றி டாடி (3)

2. இரவெல்லாம் காத்தீர்
இன்னும் ஓர் நாள் தந்தீர்
மறவாத என் நேசரே – இன்று
உறவாடி மகிழ்ந்திடுவேன்

3. ஊழியப் பாதையிலே
உற்சாகம் தந்தீரையா
ஓடி ஓடி உழைப்பதற்கு
உடல் சுகம் தந்தீரையா

4. வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா
நாதனே உம் நிழலில்
நாள்தோறும் வாழ்வேனையா - இயேசு

5. ஜெபத்தைக் கேட்டீரையா
ஜெயத்தைத் தந்தீரையா
பாவம் அணுகாமலே
பாதுகாத்து வந்தீரையா

6. என் நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ்தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமை தானே

7. புதிய நாள் தந்தீரையா
புது கிருபை தந்தீரையா
அதிசயமானவரே
ஆறுதல் நாயகனே

Nan Nanagave Vandhurikeran


நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா

1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே
தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
நான் நானாக நானாக வந்திருக்கிறேன் --- நான்

2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே
எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் --- நான்

Naan Paada Varuveer Aiya

நான் பாட வருவீர் ஐயா
நான் போற்ற மகிழ்வீர் ஐயா (2)
என் வாழ்விலே வந்தீர் ஐயா
புது வாழ்வு தந்தீர் ஐயா (2)

1. தாய் தன் பாலனை மறந்தாலும்
நான் உன்னை மறவேன் என்றவரே (2)
உள்ளங்கையில் என்னை வரைந்தீரே
எந்தன் மதில்கள் உமக்கு முன்னே (2)

2. இமைப் பொழுதும் என்னை மறந்தாலும்
இரக்கத்தாலே என்னை சேர்த்து கொள்வீர் (2)
உந்தன் அன்பை நான் மறப்பேனோ
ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன் (2)

3. மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
உம் கிருபை என்னை விட்டு விலகாது (2)
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
உந்தன் வாக்குகள் மாறாதது (2)

Tuesday, December 22, 2015

Neenga pothum Yesappa



நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா

1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே

2. புதுபெலன் தருகிறீர் புது எண்ணேய் பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர்

3. அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன்

4. தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே

Neer Mathram Enaku

நீர் மாத்ரம் எனக்கு (4)
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு (2)

மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு (2) --- நீர் மாத்ரம்

1. அரணும் என் கோட்டையும் நீர் மாத்ரம் எனக்கு
கோட்டையும் என் துருகமும் நீர் மாத்ரம் எனக்கு (2)
துருகமும் கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு
கேடகமும் கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு --- நீர் மாத்ரம்

2. ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு
ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு (2)
ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு
எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு --- நீர் மாத்ரம்

Neere Yen Thanjam


நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் இரட்சகர்
நீரே ராஜா (2)

நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும்
நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம்
எனது எல்லாவற்றிலும்
நான் உம்மை நேசிப்பேன், இயேசுவே (2)

இயேசுவே ராஜா, இயேசுவே தேவன்
இயேசுவே மீட்பர், இயேசுவே (2)

நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும்
நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம்
எனது எல்லாவற்றிலும்
நான் உம்மை நேசிப்பேன், இயேசுவே (2)

APPA NAAN UMMAI PAARKIREN LYRICS

அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

1. நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ

2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ

3. நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி

4. ஜீவ நீருற்று நீர் தானே
உந்தன்மேல் தாகம் கொண்டேன்

Neer Indri Vazhvethu Iraiva

நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா

உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும்
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்

1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்
ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே
உம் வார்த்தையிலே உண்டு அற்புதமே --- நீரின்றி

2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள் உம் ஜீவனை தந்தவர் நீர்
உம்மையன்றி அணுவேதும் அசையாதையா
உம் துணையின்றி உயிர் வாழ முடியாதைய்யா --- நீரின்றி

3. எத்தனை நன்மைகள் செய்தீரையா
அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா --- நீரின்றி

Neer Ennodu Irukkumpothu

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)

தோல்வி எனக்கில்லையே
நான் தோற்றுப்போவதில்லையே (2)

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)

1. மலைகளைத் தாண்டிடுவேன்
கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் (2)
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன் (2)

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)

2. சிறைச்சாலை கதவுகளும்
என் துதியினால் உடைந்திடுமே (2)
அபிஷேகம் எனக்குள்ளே - நான்
ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன் (2)

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)

3. மரணமே கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே? (2)
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவு எனக்கு ஆதாயமே (2)

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)

தோல்வி எனக்கில்லையே
நான் தோற்றுப்போவதில்லையே (2)

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)

Neenga mattum illadhirundhal

நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் (2)
உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால்
மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)
இயேசய்யா உம் அன்பு போதுமே
என் நேசரே உம் கிருபை போதுமே (2)

1. தண்ணீர்கள் மத்தியில் நடந்த போது
மூழ்காமல் காத்தது உம் கிருபையப்பா (2)
அக்கினியில் நடந்த போது - (கடும்) (2)
எனை மீட்டது உம் கிருபையப்பா (2) --- நீங்க

2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது
ஆற்றியே அணைத்தது உம் கிருபையப்பா (2)
விக்கினங்கள் சூழ்ந்த போது - (மரண) (2)
எனை மீட்டது உம் கிருபையப்பா (2) --- நீங்க

3. அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு
இம்மட்டும் காத்தது உம் கிருபையப்பா (2)
வழிதப்பி அலைந்த போது - (உந்தன்) (2)
மீட்டு இரட்சித்தது உம் கிருபையப்பா (2) --- நீங்க

Neer Valgave Yesuve


1. நீர் வாழ்கவே இயேசுவே
உம் வல்ல நாமம் வாழ்கவே
அல்லேலூயா இயேசுவே (4)

2. நீர் அற்புதர் இயேசுவே
அற்புதங்கள் செய்பவர்
அல்லேலூயா இயேசுவே (4)

3. நீர் பரிசுத்தர் இயேசுவே
பரிசுத்தமானவர்
அல்லேலூயா இயேசுவே (4)

4. என்னை மீட்டீரே இயேசுவே
உம் சொந்த இரத்தம் சிந்தியே
அல்லேலூயா இயேசுவே (4)

Malaigalellam Valigalakuvaar


மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவுண்டு - (2)

ஆபிரகாமின் தேவன் - அவர்
ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் - அவர்
நம்முடைய தேவன்

1. பெரிய பர்வதமே எம்மாத்திரம்
செருபாபேல் முன்னே சமமாகுவாய்
முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே(2)
இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம் (2) --- ஆபிரகாமின்

2. பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன்
உன்னதமானவரே துதியாலே உயர்த்திடுவோம்
வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே (2)
இரும்பு தாழ்பாளை முறித்திடுவாரே (2) --- ஆபிரகாமின்

3. தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே
வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் (2)
இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே (2) --- ஆபிரகாமின்

Mahimain Devane enthan


1. மகிமையின் தேவனே - எந்தன்
மகத்துவ ராஜனே - உம்மை நான்
வாழ்த்துவேன் உம் நாமம் போற்றுவேன்
எந்தன் உயிரான இயேசுவே

வல்லமையின் நாமமே
என் இயேசுவின் உயர் நாமமே
விடுதலையின் நாமமே
என் இயேசு நாமம் உயர் நாமமே

2. மரணத்தை வென்றவர் - இன்றும்
உயிரோடிருப்பவர் - தூய
ஆவியினால் என்னை நிரப்பியவர்
இன்றும் அற்புதங்கள் செய்கிறவர்

வல்லமையின் நாமமே
என் இயேசுவின் உயர் நாமமே
விடுதலையின் நாமமே
என் இயேசு நாமம் உயர் நாமமே

Matchmai Nirainthavare ella thuthikkum

மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரே
மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே

உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம்

1. ஊழிய பாதையிலே எனக்குதவின மாதயவே
மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே --- உம்மை

2. என் பெலவீன நேரங்களில் எனக்குயதவிய மா தயவே
மாறிடாத என் நேசரே துதிக்குப் பாத்திரரே --- உம்மை

JEYAM KODUKKUM DEVANUKKU LYRICS

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு
வாழ் நாளெல்லாம் ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியால் உயர்த்துவேன்

1. நீதியின் கரத்தினால்
தாங்கி நடத்துவார்
கர்த்தரே என் பெலன்
எதற்குமே அஞ்சிடேன் --- ஜெயம்

2. அற்புதம் செய்பவர்
அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர்
மீட்பர் ஜெயிக்கிறார் --- ஜெயம்

3. நம்பிக்கை தேவனே
நன்மை தருபவர்
வார்த்தையை அனுப்பியே
மகிமைப் படுத்துவார் --- ஜெயம்

4. உண்மை தேவன்
உருக்கம் நிறைந்தவர்
என்னை காப்பவர்
உறங்குவதில்லையே --- ஜெயம்

Aariraro solli paadungal

ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
நம் தேவன் பிறந்ததால்
ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
இயேசு பாலன் பிறந்ததால்
ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
நம் தேவன் பிறந்ததால்

1. தீர்க்கன் உரைத்தது நடந்திடவே
நம் பாவம் யாவையும் போக்கிடவே
பூமியில் பாடுகள் அடைந்திடவே
நம் தேவப் பாலன் தோன்றினார் --- ஆரிரரோ

2. தேவனின் அன்பை நாம் உணர்ந்திடவே
நம் வாழ்வினைப் பரிசுத்தமாக்கிடவே
மண்ணுலகும் இதைப் புரிந்திடவே
நம் தேவப் பாலன் தோன்றினார் --- ஆரிரரோ

Isai malayil thenkavi

இசைமழையில் தேன்கவி பொழிந்தே
கர்த்தர் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள் - 2

1. வான்மலர்தான் இப்புவியினிலே
மலர்ந்திட்டதே நம் வாழ்வில் இன்று
நமக்காய் பிறந்தார் பாசம்கொண்டு
வாழ்வின் மீட்பின் பாதை இதே

2. மாசற்றவர் நம் வாழ்வினிலே
மகிமையென்றே கண்டோமே இன்று
விடிவெள்ளியாக தேவபாலன்
தாழ்மை தாங்கி அவதரித்தார்

3. உலகம் என்னும் பெதஸ்தாவிலே
கரைதனில் பல ஆண்டுகளாய்
பாதை தெரியாதிருந்த நம்மை
வாழ வைக்க வந்துதித்தார்

Ulagil Vandhaar Deiva Sudhan

உலகில் வந்தார் தெய்வ சுதன்
வையம் போற்றும் வல்ல பரன்
அதிக் குளிரில் நடு இரவில்
உதித்தனரே மானிடனாய்

1. பெத்தலையில் மாடடையில்
புல்லணையில் அவதரித்தார்
வேதத்தின் சொல் நிறைவேறிட
தேவன் வந்தார் நம்மை மீட்டிடவே

2. வான சேனை கீதம் பாடி
வாழ்த்தினரே விண்ணவனை
உன்னதத்தில் மாமகிமை
மண்ணுலகில் சமாதானமே

Kanni Thaai Mariyaal varavetral


கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள் தெய்வமகன்
சிப்பியவள் பொற்குடத்தில் முத்தெனவே அவதரித்தார்
ஆவியினால் ஆண்டவனை
அவள் சுமக்கக் கொடுத்து வைத்தாள்!

விண்ணுலகம் மகிழ்ந்து பண்பாடும்
மண்ணுலகம் வியந்து கொண்டாடும்
மனங்களில் அமைதி வென்றாளும்
மனிதரில் பாசம் உண்டாகும்

1. கிருபையினால் மா தேவன் - இரக்கம்
பெற்றாள் பணிந்ததினால்
மகிமையின் கர்த்தனிடம்
வலிமையின் தேவனிடம்
பலவான்கள் தலைகுனியும் - இனி
கனவான்கள் கைவிரியும்

2. தெய்வத்தின் நல் விருப்பம் - என்றும்
தெய்வமகன் விரும்பும் அப்பம்
ஜீவனின் அதிபதிதான்
ஜீவனைக் கொடுக்க வந்தார்
பாவத்தைத் தொலைக்க வந்தார் - வல்ல
சாத்தானை ஜெயிக்க வந்தார்

3. மானுட அவதாரம் - ஒன்றே
ஆண்டவரின் திரு விருப்பம்
தாழ்ந்தவர் உயர்ந்திடுவார்
பசித்தவர் விருந்துண்பார்
புதியதோர் சமுதாயம் - இனி
மலர்ந்திடும் அவனியெங்கும்

Deva Loga Ganame thuthar

தேவ லோக கானமே! தூதர் மீட்டிய இராகமே!
வானிலெங்கும் கேட்குதே! தேன் மழை சங்கீதமே!

வானவர் இசைபாடிட யாதவர் மனம் மகிழ்ந்திட
வந்தது கிறிஸ்மஸ்! மலர்ந்தது புதுயுகம்
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்!

1. உயர் மனுவேலன் புகழென்றும் வாழ்க!
உன்னத தேவனின் சுடர் எங்கும் பரவ
மண்ணின் மீது அமைதி வந்தாள
மனிதர்கள் மத்தியில் பிரியம் நிலவ!

2. இராஜா வருகையில் கர்ஜனை இல்லை!
கோமகன் வந்தார் தோரணை இல்லை!
மேளங்கள் தாளங்கள் ஆர்ப்பாட்டம் இல்லை!
இரத்தினக் கம்பள வரவேற்பு இல்லை!

3. இறைமகன் மனுவாய்ப் பிறந்தது விந்தை
இறைமகன் வரவால் ஒழிந்தது நிந்தை
இயேசுவின் அருளால் இதயத்தில் தூய்மை
வென்றது வாய்மை தோன்றுது புதுமை

Kristhora ellorum kalikoornthu


1. கிறிஸ்தோரே எல்லாரும்
களிகூர்ந்து பாடி
ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்
தூதரின் ராஜா
மீட்பராய்ப் பிறந்தார்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

2. மகத்துவ ராஜா,
சேனையின் கர்த்தாவே,
அநாதி பிறந்த மா ஆண்டவா;
முன்னணை தானோ
உமக்கேற்கும் தொட்டில்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

3. விண் மண்ணிலும் கர்த்தர்
கனம் பெற்றோர் என்று
தூதாக்களே பாக்கியவான்களே
ஏகமாய்ப் பாடி
போற்றி துதியுங்கள்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

4. அநாதி பிதாவின்
வார்த்தையான கிறிஸ்தே!
நீர் மாமிசமாகி இந்நாளிலே
ஜென்மித்தீர் என்று
உம்மை ஸ்தோத்திரிப்போம்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

Kaalam Pani Kaalam vaanil oli kolam

காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்
ஊரின் ஒரு ஓரம் இரவின் நடு நேரம்
பாலன் பிறந்தார் அன்று
பாசத் திருநாள் இன்று

தீபச் சுடர் ஏந்துங்கள் பாலன் முகம் காணுங்கள்
காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்
பாசத் திருநாள் இன்று

1. பூக்களின் எழில் புன்னகை தனில்
இறைமகன் பாசம் காணலாம்
நீரலை எழும் நீர்களின் தனில்
இறைமகன் நேசம் காணலாம்

பகலிலே வேகமாய்
இரவிலே தீபமாய்
காற்றும் இறை நாமமே
கலங்காதே நாம் வாழலாம் --- காலம்

2. காவியம் புகழ் பரமனின் அருள்
மழைத் தரும் மேகம் ஆகுமே
பாலகன் பதம் பணிந்திடும் மனம்
ஒளி விடும் தீபம் ஆகுமே

அமைதியை செல்வமாய்
அருளையே அமுதமாய்
தாரும் இறை இயேசுவே
எம் வாழ்வு ஒளி வீசுமே --- காலம்

Pirandhaar Oru Palagan

1. பிறந்தார் ஓர் பாலகன்
படைப்பின் கர்த்தாவே;
வந்தார் பாழாம் பூமிக்கு
எத்தேசம் ஆளும் கோவே.

2. ஆடும் மாடும் அருகில்
அவரைக் கண்ணோக்கும்;
ஆண்டவர் என்றறியும்
ஆவோடிருந்த பாலன்.

3. பயந்தான் ஏரோதுவும்
பாலன் ராஜன் என்றே;
பசும் பெத்லேம் பாலரை
பதைபதைக்கக் கொன்றே.

4. கன்னி பாலா வாழ்க நீர்!
நன்னலமாம் அன்பே!
பண்புடன் தந்தருள்வீர்
விண் வாழ்வில் நித்திய இன்பே.

5. ஆதி அந்தம் அவரே,
ஆர்ப்பரிப்போம் நாமே;
வான் கிழியப் பாடுவோம்
விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே.

Paadinaal Paaduvaan yesu baalanai

பாடினால் பாடுவேன் இயேசு பாலனை
உன்னைப் பாடினால் துன்பம் நீங்கிடும்
தேடினால் தேடுவேன் இயேசு தேவனை
உன்னருள் நான் தேடுவேன் தேடுவேன்

1. பன்னிரு வயதினில் பாலகன் நீரே
என்னரும் போதனை இயம்பி நின்றிரே
கோடையில் கிடைத்த குளிர் இளநீரே
கடையர் களித்திட கதி தருவீரே

2. பாவை உம்மை தொட்டதினாலே
பறந்து போனதே அவள் தன் நோயும்
பாவி எந்தன் பாவ வினைகள்
பறந்து போகுமே உன்னை நினைத்தால்

Chinnanchiru Kulanthaiyai piranthar


சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்! இயேசு பிறந்தார்!
பாவத்தைப் போக்க, பயமதை நீக்க, பாலகனாய்ப் பிறந்தார்

1. மேய்ப்பர்கள் வந்தனரே! மிக வேகமாய் வந்தனரே!
சாஸ்திரிகள் வந்து சாஷ்டாங்கம் செய்து பணிந்து கொண்டனரே!

2. வாருங்கள் மானிடரே! இயேசுவின் பின் செல்லவே!
சிலுவையை எடுத்து, சுயத்தை வெறுத்து, பின் செல்லுவீர் என்றுமே!

Kolkothave kolai marame


கொல்கொதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே
கோர மனிதர் கொலை செய்தார்
கோர காட்சி பார் மனமே

கந்தை அணிந்தார் நிந்தை சுமந்தார்
கள்ளார் நடுவில் கொலை மரத்தில்
எந்தனை மீட்க இத்தனைப் பாடேன்
எந்தன் ஜீவ நாயகா

என்னை மீட்ட கொலை மரமே
அன்னையே நான் என்ன செய்வேன்
என்னை உமக்கே ஒப்புவித்தேன்
என்றென்றுமாய் நான் வாழ

வானம் பூமி ஒன்றாய் இணைந்த
வல்ல தேவன் உமக்கே சரணம்
வாடி வாடி கொலை மரத்தில்
நிற்கும் காட்சி பார் மனமே

KALVARIYIN KARUNAIYITHE KAAYANGALIL LYRICS

கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே

விலையேறப் பெற்ற திருரத்தமே -அவர்
விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே

பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே

சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே

எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன்

மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே

Kalvariye kalvariye karunaiyin


கல்வாரியே கல்வாரியே
கருணையின் உறைவிடம் கல்வாரியே

பாவங்கள் போக்கி விட்டீர்
பாதாளம் வென்று விட்டீர்
பாவபாரம் நீக்கி விட்டீர்
பாசமாய் மீட்டு கொண்டீர்

சாபங்கள் தொலைத்து விட்டீர்
சாத்தானை ஜெயித்து விட்டீர்
மரண பயம் நீக்கி விட்டீர்
மகிமையை அணிந்து கொண்டீர்

பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
பெலவீனம் சுமந்து விட்டீர்
தழும்புகளால் குணமாக்கினீர்
தடைகளை அகற்றி விட்டீர்

Manathurugum deivame yesaiya

மனதுருகும் தெய்வமே இயேசய்யா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும்

மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக்கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் ஐயா

எங்களுக்கு சமாதானம்
உண்டு பண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா ஐயா

சாபமான முள்முடியே
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் ஐயா

எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகாமானோம் உந்தன்

தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் ஐயா

Adhi Thiruvarthai Dhivya

ஆதித் திருவார்த்தை திவ்விய 
அற்புதப் பாலகனாகப் பிறந்தார்;
ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட

அனுபல்லவி

மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்,
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,
மின்னுச்சீர் வாசகர் , மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
தாம் , தாம் , தன்னரர் வன்னரர்
தீம் , தீம் , தீமையகற்றிட
சங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட --- ஆதி

சரணங்கள்

1. ஆதாம் சாதி ஏவினர் ; ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷனத்தானுதித்தார். --- ஆதி

2. பூலோகப் பாவ விமோசனர் , பூரண கிருபையின் வாசனர்,
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் --- ஆதி

3. அல்லேலூயா! சங்கீர்த்தனம் , ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் , தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார் --- ஆதி

Mesiyave Mesiyave boologam vantheere

மேசியாவே மேசியாவே
பூலோகம் வந்தீரே
நாங்களுந்தான் பாடணும்
நாங்களுந்தான் ஆடணும்
உம்முடைய பிறப்பைக் கொண்டாடணும்

1. பெத்தலகேம் என்னும் ஊரினிலே
இரட்சகர் மனுவாக மலர்ந்ததாலே
வானவர்கள் வாழ்த்திடவே
வையகமும் மகிழ்ந்திடவே
கொண்டாட்டம் கொண்டாட்டம்
கொண்டாட்டமே

Happy Christmas
Merry Christmas
Happy Christmas --- மேசியாவே

2. பூலோக மாந்தர்க்கு நற்செய்தியே
சந்தோஷம் சமாதானம் பெருகிடவே
கந்தைத்துணி முன்னணையில்
இறைமைந்தன் உறங்கிடவே
அன்னை மரி தாலாட்டி மகிழ்ந்தாளே

Happy Christmas
Merry Christmas
Happy Christmas --- மேசியாவே

3. மன்னிப்பில் மாட்சிமை உண்டெனவே
உரைத்திட்ட திரு மைந்தன் பிறந்ததாலே
எண்ணில்லா நன்மைகள்
என்றென்றும் கிடைத்திடவே
மன்னிப்போம் மகிழ்வோடு தவறுகளை

Happy Christmas
Merry Christmas
Happy Christmas --- மேசியாவே

Malara Malara velli malare

மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது - இம்
மண்ணில் பூத்த மலரே - உயர் விண்ணின் வேந்தர் வரவு

1. வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்பு
உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும்

நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே - 2 நீடூழி காலம் வாழ்க

2. வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமே
உலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும்

நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே - 2 நீடூழி காலம் வாழ்க

Maasila Deva Puthiran

மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)
ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!
மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய!

1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)
ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன

2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)
வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்

3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)
தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய

Iya neerandru anna kaybavin veetil

ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்
நையவே பட்டபாடு ஏசையாவே
கைகள் கட்டப்பட்டவோ கால்கள் தள்ளாடினவோ
கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே

திருமுகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க
இருளர் கஸ்திகொடுக்க ஏசையாவே
பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க
அருமைப் பொருளதான ஏசையாவே

முள்ளின் முடியணிந்து வள்ளலே என்றிகழ
எள்ளளவும் பேசாத ஏசையாவே
கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்
கன்மிகள் செய்த பாவம் ஏசையாவே

கற்றூணில் சேர்த்திறுக்கிச் செற்றலர்தாம் முறுக்கிக்
கர்வங்கொண்டே தூஷிக்க ஏசையாவே
சற்றுமிரக்கமில்லாச் சண்டாளன் ஓடி வந்து
சாடிக் கன்னத்தறைய ஏசையாவே

பொன்னான மேனியதில் புழுதி மிகப்படிய
புண்ணியன் நீர் கலங்க ஏசையாவே
அண்ணலே அன்பருய்ய அவஸ்தைகளைச் சகித்தீர்
அடியேனைக் காத்தருளும் ஏசையாவே

Punniyar ivar yaro vilunthu jebikkum


புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும்
புருஷன் சஞ்சலம் யாதோ

தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே
மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கிமன்றாடிக் கெஞ்சும்

வேளை நீங்காதோ வென்கிறார் கொடுமரண
வேதனை யுற்றேனென்கிறார்
ஆளுதவியுமில்லை அடியார் துயிலுகின்றார்
நீளுந் துயர்க்கடலில் நீந்தித் தத்தளிக்கின்றார்

பாத்திரம் நீக்கு மென்கிறார் பிதாவே இந்தப்
பாடகலாதோ வென்கிறார்
நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்டமன்றாடும்

என்சித்தம் மல்ல வென்கிறார் அப்பா நின் சித்தம்
என்றைக்குமாக வென்கிறார்
அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
துன்பப் பாத்திரத்தடி வண்டலையும் பருகும்

Kalvari malaiyoram vaarum

கல்வாரி மலையோரம் வாரும்
பாவம் தீரும்
செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குறாரே

லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டு
நொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டு
தாகத்தால் உடல்வாடிக் கருகியே சுருண்டு
சடலமெலாம் உதிரப் பிரளயம் புரண்டு
சாகின்றாரே நமது தாதா ஜீவதாதா- ஜோதி

ஒண்முடி மன்னனுக்கு முண்முடியாச்சோ
உபகாரம் புரிகரம் சிதையவும் ஆச்சோ
விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ
மேனியெல்லாம் வீங்கி விதனிக்கலாச்சோ
மேசையன் அப்பன் கோபம்மேலே இதற்குமேலே -ஜோதி

மலர்ந்த சுந்தரக் கண்கள் மயங்கலுமேனோ
மதுரிக்கும் திருநாவு வறண்டதுமேனோ
தளர்ந்திடா திருக்கைகள் துவண்டதுமேனோ
ஜலத்தில் நடந்த பாதம் சவண்டதுமேனோ
சண்டாளர்கள் நம்மால்தானே நம்மால்தானே -ஜோதி

ரட்சகனை மறந்தால் ரட்சண்யம் இல்லை
நாமக்கிறிஸ்தவர்க்கும் இருபங்கு தொல்லை
பட்சபாதம் ஒன்றும் பரதீசில் இல்லை
பரதீசில் பங்கில்லோர்க்குப் பாடென்றும் தொல்லை
பந்தயத்திலே முந்தப் பாரும் முந்தப் பாரும் -ஜோதி

Nenjam gethsemaneku nee nadanthu


நெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்துவந்திடாயோ
சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார்

ஆத்துமத்தில் வாதை மிஞ்சி அங்கலாய்த்து வாடுகின்றார்
தேற்றுவார் இங்காருமின்றித் தியங்குகின்றார் ஆண்டவனார்

தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகி
ஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே

அப்பா பிதாவே இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்
எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே

ரத்த வேர்வையாலே தேகம் மெத்த நனைந்திருக்குதே
குற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை ஏனோ

வானத்திலிருந்தோர் தூதன் வந்தவரைப் பலப்படுத்தத்
தான் சஞ்சலத்தோடு முழந்தாள்நின்று வேண்டுகின்றார்

தாங்கொணா நித்திரைகொண்டு தன் சீஷர்கள் உறங்கிவிழ
ஆங்கவர் தனித்திருந்து அங்கலாய்த்து வாடுகின்றார்

En intha paaduthan swamy

ஏன் இந்தப் பாடுதான் சுவாமி
என்ன தருவேன் இதற் கீடுநான்

ஆனந்த நேமியே
எனை ஆளவந்த குரு சுவாமியே

கெத்சேமனேயிடம் ஏகவும் அதின்
கெழு மலர்க் காவிடை போகவும்
அச்சயனே மனம் நோகவும் சொல்
அளவில்லாத் துயரமாகவும்

முழந்தாள் படியிட்டுத் தாழவும் மும்
முறை முகம் தரைபடவீழவும்
மழுங்கத் துயர் உமைச் சூழவும் கொடு
மரண வாதையினில் மூழ்கவும்

அப்பா பிதாவே என்றழைக்கவும் துயர்
அகலச் செய்யும் என்றுரைக்கவும்
செப்பும் உம் சித்தம் என்று சாற்றவும் ஒரு
தேவதூதன் வந்து தேற்றவும்

ஆத்துமத் துயர் மிக நீடவும் குழம்
பாக உதிர வேர்வை ஓடவும்
சாத்திர மொழிகள் ஒத்தாடவும் உந்தன்
தாசரும் பதந்தனை நாடவும்

Ennavale jeevan viduththiro swamy

என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ
இத்தனை பாட்டுக்கிங்கே அடுத்தீரோ

பொன்னாட்டதிபதி பரமன் ஆட்டுக்குட்டியே
பொறுமைக் களவிலாத கிருபைத் திருக்குமாரா
பூண்டு பொற் குருசினில் அறையுண்டெனை
மீண்டனுக்ரகமிட நெறி கொண்டதோ

கள்ளனைப்போல் கட்டுண்ட பரிதாபம் மெய்ப்பூங்
காவில் ஆத்துமத்துற்ற மனஸ்தாபம் வேர்த்து
வெள்ளமாய் ரத்தம் புரண்ட சோபம் யாரால்
விபரித்து முடியும் உன் பிரஸ்தாபம்
எள்ளத்தனை அன்பிலா உள்ளத் துரோகி நானே
எனால் உமக்கென்ன லாபம் யேசு
மனா பரப்ரம திருவுளமோ இது

சிலுவை மரத்தில் கைகால் நீட்டி தேவரீர்
திருவிலாவைத் துளைக்க ஈட்டி காயம்
வலிய அன்பின் கடைக்கண் காட்டி இன்னம்
வரவழைக்கிறீர் தயை பாராட்டி
விலைகொடுத்தெனைக் கூட்டி மிக்க சலாக்யம் சூட்டி
மீண்டவாறிது மிக்க விசாலமே
ஆண்டவா அது பக்கிஷ நேசமே

ENGUTHE ENNAKANTHAN THUYAR LYRICS

ஏங்குதே என்னகந்தான் துயர்
தாங்குதில்லை முகந்தான்

பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட
ஓங்கியே உதிரங்கள்
நீங்கியே துயர் கண்டு

மேசியாவென்றுரைத்து யூத
ராஜனென்றே நகைத்து
தூஷணித்தே அடித்து நினைக்குட்டி
மாசுகளே சுமத்தி
ஆசாரமின்றியே ஆசாரியனிடம்
நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு

யூதாஸ் காட்டிக்கொடுக்க சீமோன்
பேதுரு மறுதலிக்க
சூதா யெரோதே மெய்க்க வெகு
தீதாயுடை தரிக்க
நாதனே இவ்விதம் நீதமொன்றில்லாமல்
சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு

நீண்ட குரு செடுத்து எருசலேம்
தாண்டிமலையடுத்து
ஈண்டல் பின்னே தொடுத்து அவரின்மேல்
வேண்டும் வசை கொடுத்து
ஆண்டவர் கை காலில் பூண்டிடும் ஆணியால்
மாண்டதினால் நரர் மீண்ட தென்றாலுமே

Aatham purintha pavathale manudanaagi


ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி
வேதம் புரிந்த சிறை விடுவித்தீரோ பரனே

ஏவை பறித்த கனியாலே விளைந்த எல்லாப்
பாவத்துக்காகப் பழியானீரோ பரனே

வேத கற்பனையனைத்தும் மீறிநரர் புரிந்த
பாதகந் தீரப்பாடுபட்டீரோ பரனே

தந்தைப் பிதாவுக் கும்மைத் தகனப்பலியளித்து
மைந்தரை மீட்கமனம் வைத்தீரோ பரனே

சிலுவை சுமைபொறாமல் தியங்கித் தரையில் விழக்
கொலைஞர் அடர்ந்து கோட்டி கொண்டாரோ பரனே

வலிய பாவத்தை நீக்கி மனுடரை ஈடேற்றிச்
சிலுவை சுமந்திறங்கித் திகைத்தீரோ பரனே

சென்னியில் தைத்தமுடிச்சிலுவையின் பாரத்தினால்
உன்னியழுந்தத் துயர் உற்றீரோ பரனே

வடியும் உதிரமோட மருகித் தவித்துவாடிக்
கொடிய குருசில் கொலையுண்டீரோ பரனே

வானம் புவிபடைத்த வல்லமைப் பிதாவின் மைந்தர்
ஈனக்கொலைஞர் கையாலிறந்தீரோ பரனே

சங்கையின் ராஜாவே சத்ய அனாதி தேவே
பங்கப்பட்டுமடிப் பட்டீரோ பரனே

Mulmudi sudiya aandavar

முள்முடி சூடிய ஆண்டவர்
நமக்காய் மரித்தார்
கொல்கொதா மலையிலே
இயேசு பாடுகள் சுமந்தார்

நம் பாவம் தீர்க்க பலியானார்
இரத்தம் சிந்தி மீட்டார்
கள்ளனைப் போல கட்டுண்டாரே
உந்தனை மீட்டிடவே

வாரினாலே அடிக்கப்பட்டார்
பாவி எனக்காக
ஆபத்திலே துணையாக
எம்மைக் காரும் தேவா

கால் கைகளிலே ஆணிபாய
முட்கிரீடம் பின்னி சூட
தாசர்களை காத்த இயேசு
பலியாக மாண்டாரே

Kurusinmel kurusinmel kaankindrathaarivar

குருசின்மேல் குருசின்மேல்
காண்கின்றதாரிவர்
பிராணநாதன் பிராணநாதன்
என் பேர்க்காய்ச் சாகின்றார்

பாவத்தின் காட்சியை
ஆத்துமாவே பார்த்திடாய்
தேவகுமாரன் மா சாபத்திலாயினார்

இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்
இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்

பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ

கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
குருசின் காட்சியை தரிசித்துத் தேறுவேன்

சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்
சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன்

இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய்
இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்

Karthar thuyar thoniyaai

கர்த்தர் துயர் தொனியாய்
கதறி முகங்கவிழ்ந்தே
இருள் சூழ்ந்த தோட்டத்திலே
இதயம் நொறுங்கி ஜெபித்தார்

மரணத்தின் வியாகுலமோ
மனிதர் துணை இல்லையோ
தேவ தூதன் தேற்றிடவே
தருணம் நெருங்க ஒப்படைத்தார்
துன்ப சுமை சுமந்தார்

துக்கத்தால் தம் சீஷர்களே
தலை சாய்த்து தூங்கினரே
தம்மை மூவர் கைவிடவே
தூரமாய் கடந்தே திகிலடைந்தார்
தன்னந் தனிமையிலே

பிதாவே இப்பாத்திரத்தின்
பங்கினை நான் ஏற்றுக்கொண்டேன்
ஆகட்டும் உமது சித்தம்
அது நீங்கிடுமோ என்றுரைத்தார்
ஆ இரத்த வேர்வையுடன்

திறந்த கெத்சமனேயில்
துணிந்து வந்த பகைஞன்
என்ன துரோகம் செய்திடுனும்
எந்தன் சிநேகிதனே என்றழைத்தார்
என்ன மா அன்பிதுவே

பரமன் ஜெப சத்தமே
பூங்காவினில் கேட்கின்றதே
பெருமூச்சுடன் ஜெபிக்கும்
அவரோடிணைந்தே கண்ணீருடன்
ஆவியிலே ஜெபிப்பேன்

இயேசு தாங்கின துன்பங்கள்
என்னைத் தாண்டியே செல்லாதே
எனக்கும் அதில் பங்குண்டே
சிலுவை மரணப் பாடுகளால்
சீயோனில் சேர்ந்திடுவேன்

Kalvariye kalvariye oppadra


கல்வாரியே கல்வாரியே
ஒப்பற்ற கல்வாரியே
கல்மனம் மாற்றிடும்
கனிவுள்ள கல்வாரியே

தேவனின் நித்ய அன்பு
இயேசுவில் தொனிக்கின்றதே
வேதனையின் இரத்தம் தாரையாய்
சிந்துது மானிடனே உனக்காய்

காயங்கள் ஐந்ததுவும் ஐந்து
கண்டத்தை இரட்சிக்கவே
நாயகனை நம்பி ஜீவனுக்குள்
செல்ல தீயனைத் தள்ளிவிடு

பாவத்தை மட்டுமல்ல உன்
நோயையும் நீக்கிடுமே
பயத்தை நீக்கி விசுவாசம் கொண்டு
பட்சமாய் அவரண்டை வா

சாத்தானின் தலையையும்
சிலுவையில் நசுக்கினார்
சகலத்தையும் ஜெயித்தவர்
சீக்கிரம் வருகிறார்

Ean indha paadugal umakku

ஏன் இந்தப் பாடுகள் உமக்கு
என் இயேசுவே காயங்கள் எதற்கு
கைகள் கால்களில் ஆணிகள் பாய
கோர காட்சியும் எதற்கு

சிந்தையில் பாவம் செய்ததால் தான்
சிரசினில் முள்முடி அறைந்தனரா
இரத்தம் ஆறாக ஓடிடுதே
இதயம் புழுவாக துடிக்கிறதே

தியாகமாய் ஜீவனை ஈந்ததாலே
தருகிறேன் எந்தன் இதயமதை
தாகமாய் சிலுவையில் தொங்கினீரே
தாகத்தை தீர்த்திட வருகின்றேன்

Kandirgalo siluvaiyil marikkum yesuvai

கண்டீர்களோ சீலுவையில்
மரிக்கும் இயேசுவை
கண்டீர்களோ காயங்களில்
சொரியும் ரத்தத்தை

மன்னியும் என்ற வேண்டலை
கேட்டீர்களே ஐயோ
ஏன் கைவிட்டீர் என்றார்
அதை மறக்கக்கூடுமோ

கண்மூடி தலை சாயவே
முடிந்தது என்றார்
இவ்வாறு லோக மீட்பையே
அன்பாய் உண்டாக்கினார்

அவ்வேண்டல் ஓலம் காயத்தால்
ஈடேற்றம் வந்ததே
ஆ பாவீ இதை நோக்குங்கால்
உன் தோஷம் தீருமே

சீர்கெட்டு மாண்டு போகையில்
பார்த்தேன் என் மீட்பரை
கண்டேன் கண்டேன் சிலுவையில்
மரிக்கும் இயேசுவை

Monday, December 21, 2015

yesu umathainthu kaayam


இயேசு உமதைந்து காயம்
நோவும் சாவும் எனக்கு
எந்தப் போரிலும் சகாயம்
ஆறுதலுமாவது
உம்முடைய வாதையின்
நினைவு என் மனதின்
இச்சை மாளுவதற்காக
என்னிலே தரிப்பதாக

லோகம் தன் சந்தோஷமான
நகர வழியிலே
என்னைக் கூட்டிக்கொள்வதான
மோசத்தில் நான் இயேசுவே
உமது வியாகுல
பாரத்தைத் தியானிக்க
என் இதயத்தை அசையும்
அப்போ மோசங்கள்கலையும்

எந்தச் சமயத்திலேயும்
உம்முடைய காயங்கள்
எனக்க நுகூலம் செய்யும்
என்பதே என் ஆறுதல்
ஏனெனில் நீர் எனக்கு
பதிலாய் மரித்தது
என்னை எந்த அவதிக்கும்
நீங்கலாக்கி விடுவிக்கும்

நீர் மரித்ததால் ஓர்க்காலும்
சாவை ருசிபாரேனே
இதை முழு மனதாலும்
நான் நம்பட்டும் இயேசுவே
உமது அவஸ்தையும்
சாவின் வேதனைகளும்
நான் பிழைக்கிறதற்காக
எனக்குப் பலிப்பதாக

இயேசு உமதைந்துகாயம்
நோவும் சாவும் எனக்கு
எந்தப் போரிலும் சகாயம்
ஆறுதலுமாவது
முடிவில் விசேஷமாய்
என்னை மீட்ட மீட்பராய்
என்னை ஆதரித்தன்பாக
அங்கே சேர்த்துக் கொள் வீராக.

En manathu thudikkuthu


என் மனது துடிக்குது
குலை பதைத்து நோகும்
தெய்வ மைந்தனின் சவம்
கல்லறைக்குப் போகும்

ஆ அவரே மரத்திலே
அறையப்பட்டிறந்தார்
கர்த்தர்தாமே பாவியின்
சாபத்தைச் சுமந்தார்

என் பாவத்தால் என் தீங்கினால்
இக்கேடுண்டாயிருக்கும்
ஆகையால் என்னுள்ளத்தில்
தத்தளிப்பெடுக்கும்

என் ஆண்டவர் என் ரட்சகர்
வதைந்த மேனியாக
ரத்தமாய்க் கிடக்கிறார்
என் ரட்சிப்புக்காக
வெட்டுண்டோரே ஆ உம்மையே
பணிந்தென் ஆவி பேணும்
ஆகிலும் என் நிமித்தம்
நான் புலம்பவேணும்
குற்றமற்ற கர்த்தாவுட
அனலாம் ரத்தம் ஊறும்
மனஸ்தாபமின்றி ஆர்
அதைப் பார்க்கக்கூடும்

ஆ இயேசுவே என் ஜீவனே
நீர் கல்லறைக்குள்ளாக
வைக்கப்பட்டதைத் தினம்
நான் சிந்திப்பேனாக
நான் மிகவும் எந்நேரமும்
என் மரணநாள் மட்டும்
என் கதியாம் இயேசுவே
உம்மை வாஞ்சிக்கட்டும்

MAGIMAI ADAIYUM YESU RAJANE LYRICS


மகிமையடையும் இயேசு ராஜனே
மாறாத நல்ல மேய்ப்பனே
உந்தன் திருநாமம் வாழ்க
உலகெங்கும் உம் அரசு வருக வருக

உலகமெல்லாம் மீட்படைய
உம் ஜீவன் தந்தீரையா

பாவமெல்லாம் கழுவிடவே
உம் இரத்தம் சிந்தினீரே

சாபமெல்லாம் போக்கிடவே
முள்முடி தாங்கினீரே

என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
என் துக்கம் சுமந்தீரையா

கசையடிகள் எனக்காக
காயங்கள் எனக்காக

Sunday, December 20, 2015

INBA YESU RAJAVAI NAAN PAARTHAL LYRICS

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் -2
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்

இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு
கறை திரை அற்ற பரிசுத்தரோடு
ஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன் -2

தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்

முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்
வாரினால் அடிப்பட்ட மூதுகைப் பார்த்து
ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன்

என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா

ஆஹா! எக்காளம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ
அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமே

APPA PITHAVE ANBANA DEVA LYRICS


அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே

எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர்
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறி விட்டீர்

நன்றி உமக்கு நன்றி

தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர்

உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே

இரவும் பகலும் ஐயா கூட இருந்து
எந்நாளும் காப்பவரே
மறவாத தெய்வம் மாறாத நேசர்
மகிமைக்குப் பாத்திரரே

Mulmudi baaramo dhevane

முள்முடி பாரமோ தேவனே
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவை யாவும் எனக்காக தேவனே
முழங்காலில் நிற்கிறேன் நாதரே

தோளிலே சிலுவையை சுமக்கிறீர்
தோள்களும் தாங்குதோ அப்பனே
முட்களும் கால்களில் குத்துதோ
முட்களைப் படைத்தவர் நீர் அன்றோ

கைகளில் ஆணியா குத்தினர்
களைக்குதோ கைகளும் இயேசுவே
சாட்டையால் முதுகினில் அடித்தனர்
சாட்டையும் ராஜனை அடித்ததோ

காடியா தாகத்துக்கு தந்தனர்
தண்ணீரைப் படைத்தவர் நீரன்றோ
கண்ணீரும் கண்களில் கொட்டுதோ
துடைப்பவர் யாருமே இல்லையோ

Kolkoda malai meethile

கொல்கொதா மலை மீதிலே
சிலுவை சுமந்தேகினார்
உன்னத பிதாவின் சித்தமாய்
உத்தமர் இரத்தம் சிந்தினார்

அந்தோ எருசலேமே
ஆண்டவர் பவனி வந்தார்
அந்த நாளை நீ மறந்தாய்
அன்பரோ கண்ணீர் சிந்தினார்

மேனியில் கசையடிகள்
எத்தனை வசை மொழிகள்
அத்தனையும் அவர் உனக்காய்
அன்புடன் சுமந்து சசித்தார்

உத்தம தேவ மைந்தனே
சுத்தமாய் ரத்தம் சிந்தியே
நித்திய வாழ்வு தனையே
நீசனாம் எனக்களித்தார்

செந்நீரோ கண்ணீராய் மாறி
தரணியில் பாய்ந்ததங்கே
உன்நிலை நினைத்தவரே
தன்நிலை மறந்து சகித்தார்
 

வஞ்சக உலகினிலே
வணங்கா கழுத்துடனே
வழிபோகும் ஆத்துமாவே
வந்திடு நீ இயேசுவண்டை

Kanden kalvariyin katchi

கண்டேன் கல்வாரியின் காட்சி
கண்ணில் உதிரம் சிந்துதே
அன்பான அண்ணல் நம் இயேசு
நமக்காய் பட்ட பாடுகள்

கல்வாரி மலை மீதிலே
கள்ளர்கள் மத்தியிலே
சிலுவையில் அறைந்தனரே
உனக்காய் ஜீவன் விட்டாரே

பாழும் உலகத்தின்
பாவப்பிணி போக்க
சிலுவை சுமந்து போகும்
காட்சி கண்முன் போகும்

பாவ உலகத்தில்
ஜீவிக்கும் மானிடனே
பாரும் அவர் உனக்காய்
குருசில் தொங்கும் காட்சியை

Kalvari maa malaimel kai kaalgal

கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப்பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்

குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும்
குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை

அஞ்சாதே என் மகனே மிங்கும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கென் இப்பாடு உனக்காகத் தானே
ஈனக்கோலமடைந்தேன்
உன்னை இரட்சித்தேன் என்றார்

கர்த்தரின் சத்தமதை சத்தியிம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோஷம் பொங்கியதே

Kalvari ratham enakkaga sinthi

கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கல்வாரி இரத்தத்தால் கழுவுகின்றீர்

அல்லேலூயா அல்லேலூயா

கைகளில் ஆணிகளோ
எனக்காக அடிக்கப்பட்டீர்
எனக்காக இரத்தம் சிந்தினீர் இயேசு

முட்கிரீடம் தரித்தவராய்
சிலுவையில் அறைந்தனரே
சிலுவையில் தொங்கினாரே இயேசு

உடைந்த உள்ளத்தோடு
சிலுவையில் மரித்தீரே
எனக்காய் மரித்தீரே இயேசு

En yesuve en nesare


என் இயேசுவே என் நேசரே
ஏன் இந்த பாடுகளோ
என் இதயம் நெகழிந்திடுதே
உம் முகம் பார்க்கையிலே

கைகளில் கால்களில் ஆணிகளால்
தழும்புகள் ஏற்றது எனக்காகவோ
பெலவீனம் நோய்களை சுமந்து கொண்டீர்
பெலன் தந்து என்னை தாங்கினீரே

தலையினில் முள்முடி துளைத்திடவே
தாகத்தால் தவித்தே துடித்தீரையா
அநாதையை போலவே சிலுவையிலே
அன்பினால் எனக்காக தொங்கினீரே

உழப்பட்ட நிலம்போல் உருக்குலைந்தீர்
உடல் எல்லாம் காயங்கள் ஏற்றீரையா
என்னதான் ஈடாக தந்திடுவேன்
என்னையே உமக்காக தருகிறேன்

Anbin mugathai andru


அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்

கல்வாரி மலை மேல் - தேவ அன்பின்
எல்லை அன்று நான் கண்டேன்
கொல்கொதா மலை மேல்

தியாகத்தின் நல் ஓசையைக் கேட்டேன்
கருனையின் முகங்கண்டேன்
கல்வாரி மலைமேல் அன்று

தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்
பாடுகள் ஏற்றதினால்
மனுக்குல பாவம் தீர்த்திடவே அவர்
சிதைந்து மாண்டதினால் ஓ....ஓ..

இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்
இரத்தம் சிந்தினதால்
திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்
துளைக்கத் தொங்கினதால் ஓ...ஓ....

Oppu Kodutheer Ayya ummaiye

ஒப்புக் கொடுத்தீர் ஐயா
உம்மையே எனக்காக
உலகின் இரட்சகரே
உன்னத பலியாக

எங்களை வாழவைக்க
சிலுவையில் தொங்கினீர்
நோக்கிப் பார்த்ததினால்
பிழைத்துக் கொண்டோம் ஐயா

நித்திய ஜீவன் பெற
நீதிமானாய் மாற
ஜீவன் தரும் கனியாய்
சிலுவையில் தொங்கினீர்

சுத்திகரித்தீரே
சொந்த ஜனமாக
உள்ளத்தில் வந்தீர் ஐயா
உமக்காய் வாழ்ந்திட

பாவத்திற்கு மரித்து
நீதிக்குப் பிழைத்திட
உம் திரு உடலிலே
என் பாவம் சுமந்தீர் ஐயா

மீட்கும் பொருளாக
உம் இரத்தம் தந்தீர் ஐயா
சாத்தானை தோற்கடித்து
சாவையும் வென்றீர் ஐயா

என்னையே தருகிறேன்
ஜீவபலியாக
உகந்த காணிக்கையாய்
உடலைத் தருகிறேன்

Um irathamea um irathamea

உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே
உம் இரத்தமே என் பானமே

பாய்ந்து வந்த நின் ரத்தமே
சாய்ந்தோர்கட்கு அடைக்கலமே
பாவிகள் நேசர் பாவி என்னை
கூவி கழுவினீர் என்னை

நெசர் சிலுவை சத்தியம்
நாசம் அடைவோர்க்குப் பைத்தியம்
இரட்சிப்படைவோர் சத்தியம்
நிச்சயம் காப்பார் நித்தியம்

நின் சிலுவையில் சிந்திய
வன்மையுள்ள இரத்தத்தினால்
என் பாவத்தை பரிகரித்தீர்
அன்புள்ள தேவ புத்திரா

பன்றி போல் சேறில் புரண்டேன்
நன்றி இல்லாமல் திரிந்தேன்
கரத்தால் அரவணைத்தீர்
வரத்தால் ஆசீர்வதித்தீர்

விழுங்கப் பார்க்கும் சாத்தானை
மழுங்க வைத்தீர் அவனை
புழங்காமல் போக்கினானே
களங்கமில்லா கர்த்தரே

ஐயனே உமக்கு மகிமையும்
துய்யனே துதி கனமும்
மெய்யனே எல்லா வல்லமையும்
உய்யோனே உமக்கல்லேலூயா

kolkathaa meattinilea kodura paavi

கொல்கொதா மேட்டினிலே
கொடூர பாவி எந்தனுக்காய்
குற்றமில்லாத தேவ குமாரன்
குருதி வடிந்தே தொங்கினார்

பாவ சாபங்கள் சுமந்தாரே
பாவியை மீட்க பாடுபட்டார்
பாவமில்லாத தேவகுமாரன்
பாதகன் எனக்காய் தொங்கினார்

மடிந்திடும் மன்னுயிர்க்காய்
மகிமை யாவும் இழந்தோராய்
மாசில்லாத தேவகுமாரன்
மூன்றாணி மீதினில் தொங்கினார்

இரத்தத்தின் பெருவெள்ளம் ஓட
இரட்சிப்பின் நதி என்னில் பாய
ஆதரவில்லா தேவகுமாரன்
அகோரக் காட்சியாய் தொங்கினார்

கல்வாரி காட்சி இதோ
கண்டிடுவாயே கண்கலங்க
கடின மனமும் உருகிடுமே
கர்த்தரின் மாறாத அன்பி னிலே

உள்ளமே நீ திறவாயோ
உருகும் சத்தம் நீ கேளாயோ
உன் கரம் பற்றி உன்னை நடத்த
உன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்

Appa um paatham amarnthuvitten

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானைய்யா
செய்த பாவங்கள் கண்முன்னே
வருந்துகிறேன் நான் கண்ணீரோடு

என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப் போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன்
இயேசையா(4)

துணிகரமாய் நான் தவறு செய்தேன்
துணிந்து பாவம் செய்தேன்
நோக்கிப் பார்க்க பெலனில்லையே
தூக்கி நிறுத்தும் என் தெய்வமே - என்னைக்

கிழக்கு மேற்கு உள்ள தூரம்
உந்தன் இரக்கம் உயர்ந்ததையா
இல்லையே எல்லை உம் அன்பிற்கு
இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா

என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்
உம்முன்னே நிற்க முடியாதையா
தகப்பன் மகனை மன்னிப்பதுபோல்
மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா

முள்முடி கிரீடம் பார்க்கின்றேன்
முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன்
ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா
தேவனே நான் என்ன சொல்வேன்

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானையா
கிருபையின்படியே மனமிரங்கி
மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா
இயேசையா நன்றி(4)