Saturday, November 16, 2019

SAHAYA THAYIN SITTHIRAM NOKKU

சகாயத்தாயின் சித்திரம் நோக்கு
அபாயம் நீக்கும் அன்னையின் வாக்கு

எத்துணைக் கனிவு எத்துணைத் தெளிவு
வேண்டிடும் மனதுக்கு வரும் நிறைவு

குத்திப் பிளந்திடும் ஈட்டியும் ஆணியும்
கொடூரச் சிலுவையும் கண்டு மிரண்டு – 2

தத்தித்தாய் மேல் சாய்ந்திடும் இயேசுவை
சதா உன் நினைவில் பதித்திடுவாய் நீ – 2

அம்மா என்று கூவ அபயம் தந்து வருவாள் – 2
இம்மாநிலத்தில் இவள் போல் – 2
இரங்கும் தாயும் உளரோ – 2

SUTHAM PANNA PADATHA DESAME

சுத்தம் பண்ணப் படாத தேசமே
சுத்திகரிக்க உன்னைத் தருவாயோ?
ஸ்திரப்படாத தேசமே ..
நீதியின் வஸ்திரம் தரிப்பாயோ?

1. பெலனான வயதுள்ள வாலிபரே
தொலைநோக்க கண்களை ஏறெடுங்கள் (2)
எதிர் காலம் கனவாக மறைவதற்குள்
சுடராக இருளுக்குள் ஒளி கொடுங்கள் (2)

2. தேசத்தை ஆளும் பிரபுக்களே
தாழ்மையின் குரலுக்கு செவிகொடுங்கள் (2)
தேவைக்கு அதிகம் இருப்பதெல்லாம்
ஏழைக்கு தானம் செய்திடுங்கள் (2)

3. வேதத்தை சுமக்கும் சீடர்களே
வேண்டாத சுமைகளை விட்டுவிடுங்கள் (2)
பாவத்தை சுமக்கும் பாரதத்தில்
தூய்மைக்கு மாதிரி காட்டிடுங்கள் (2) 

SUVISESHAM SOLLA VAARUNKAL

சுவிசேஷம் சொல்ல வாருங்கள்!
அறிவிக்காமல் நான் இருப்பேனோ?
அண்ணல் இயேசுவின் அன்பினைப் பிறர்க்கு
அறிவிக்காமல் நான் இருப்பேனோ?

1. பாவியாம் எந்தனை மீட்டிடவே
மேவியே உலகில் வந்தவரே
புவிதனிலே திரிந்தலைந்து
சிலுவையில் தம்முயிர் தந்திருக்க

2. விண்ணெழும் வேளையில் வேந்தனேசு
சென்றிடுவீர் பலோக மெல்லாம்
நின்றிடுவீர் என் சாட்சிகளாய்
என்றுமே கட்டளைத் தந்திருக்க

3. பேதுரு யோவான் பவுல் சீலாவும்
சாதுவும் வாக்கரும் அசரியாவும்
சாதனையில் நல் சாட்சிகளாய்
மாதிரி வைத்துச் சென்றிருக்க