Sunday, March 4, 2018

PARISUTHAM PERA UMMANDAI VANDHU LYRICS

பரிசுத்தம் பெற உம்மண்டை வந்து
நிற்கும் மாபாவி நான் – எனை
ஆட்கொண்டு நிதம் உம் அருள் தந்து
கிருபையால் பெலப்படுத்தும் 
இதயக்கதவை திறந்தேனே
என் உள்ளில் வாரும் இயேசு சுவாமி
பெலவீனம் யாவையும் போக்கி
காத்துக்கொள்ளும் இறைவா 
பூவுலக சப்தமும் என் மாம்ச சப்தமும்
இணைந்து ஒலிக்குதே – ஆனால்
மெல்லிய உம் சத்தம் தெளிவாகக் கேட்டிட
என் செவியை திறந்திடுமே 
என் கரம் உம் கையை பிடித்துக் கொண்டால்
தவறி விடுவேனே – ஆனால்
உம் கரம் என் கையை பிடித்துக் கொண்டால்
ஒருபோதும் தவறிடேனே

EN RAKSHAKA NEER ENNILE LYRICS

என் ரக்ஷகா, நீர் என்னிலே  
மென்மேலும் விளங்கும்  
பொல்லாத சிந்தை நீங்கவே  
சகாயம் புரியும் 
என் பலவீனம் தாங்குவீர்  
மா வல்ல் கரத்தால்  
சாவிருள் யாவும் நீக்குவீர்  
மெய் ஜீவன் ஜோதியால் 
துராசாபாசம் நீங்கிடும்  
உந்தன் பிரகாசத்தால்  
சுத்தாங்க குணம் பிறக்கும்  
நல்லாவி அருளால் 
மாசற்ற திவ்விய சாயலை  
உண்டாக்கியருளும்  
என்னில் தெய்வீக மகிமை  
மென்மேலும் காண்பியும் 
சந்தோக்ஷிப்பித்து தாங்குவீர்  
ஒப்பற்ற பலத்தால்  
என் நெஞ்சில் அனல் மூட்டுவீர்  
பேரன்பின் ஸ்வாலையால் 
நீர் பெருக நான் சிறுக  
நீர் நற்கிரியை செய்திடும்  
மெய் பக்தியில் நான் வளர  
கடாட்சித்தருளும்

PARISUTHAME PARAN YESU LYRICS

பரிசுத்தமே பரன் யேசு தங்குமிடம் 
பக்தர்கள் தேடும் தேவாலயம் 
பரிசுத்தமே

கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று 
நிற்கக் கூடியவன் யார் 
மாசற்ற செயல் தூய உள்ளம் 
உடைய மனிதனே

நாமெல்லாம் பரிசுத்தர் ஆவதே 
தெய்வத்தின் திருசித்தம் 
பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும் 
தரிசிக்க முடியாது

பரிசுத்தரென்று ஓய்வின்றிப் பாடும் 
பரலோக கூட்டத்தோடு 
வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி 

எந்நாளும் பாடுவேன்

SUTHIGARIYAYO DHURGUNAM NEEGA LYRICS

சுத்திகரியாயோ, துர்க்குணம் நீங்க என்னைச் 
சுத்திகரியாயோ

மத்தியஸ்த்தர் பிரசாதனே, பரிசுத்தாவி எனும் நாதனே 
பக்தி தரும் போதனே, உயர் முக்தி தரும் நீதனே!

பெந்தேகோஸ்து முருகிலே (பண்டிகை), அங்கு வந்து சீஷரருகிலே 
உந்திய கருணை வாரியே, அருள் தந்திடு நல் உதாரியே

அந்தகாரம் விலகவே, ஒளி சந்ததமும் இலங்கவே 
சந்தரப்பிரகாசனே, தேவமைந்தர் போற்றும் நல் நேசனே!

சத்திய நெறியில் ஏறவே, நற்கத்தியில்  தினம் தேறவே 
புத்தியைத்தரும் ஆவியே, இதயத்தை உன்னருள் மேவியே

தேவ நல் வர மானவா, எங்கு மேவு மூன்றில் ஒன்றானவா 

பாவ மாசினைப் போக்குவாய், நித்திய சாபம் யாவையும் நீக்குவாய்