Monday, June 8, 2015

UM PAATHAM PANINTHEN LYRICS

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே 

1. பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் --- உம்பாதம்

2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் --- உம்பாதம்

3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் --- உம்பாதம்

4. என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே --- உம்பாதம்

5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கினை நறுக்கிக் கிளை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் --- உம்பாதம்

6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் --- உம்பாதம்

7. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் --- உம்பாதம்

YESUVAI NAAM ENGE KAANALAM LYRICS

இயேசுவை நாம் எங்கே காணலாம்

இயேசுவை நாம் எங்கே காணலாம்
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்




பனி படர்ந்த மலையின் மேல் பாக்க முடியுமா ?

கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமோ ?

 1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
ஆடுகின்ற அலைகடலில் நாடி அயர்ந்தேனே
தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே --- இயேசுவை

2. வானமதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே
வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியின்மேல் வீசிடும் காற்றே நீ
கர்த்தர் இயேசு வாழுமிடம் கூறிட மாட்டாயோ --- இயேசுவை

3. கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறைமுன்பாக
விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
கண்விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார் --- இயேசுவை

YESU RAJA MUNNE SELGIRAR LYRICS

இயேசு ராஜா முன்னே செல்கிறார்

இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்
ஒசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே

1. அல்லேலூயா துதி மகிமை - என்றும்
அல்லேலூயா துதி மகிமை
இயேசு ராஜா எங்கள் ராஜா (2)
என்றென்றும் போற்றிடுவோம்
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே

2. துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
கர்த்தர் நம்முடனே
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே

3. யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
மீட்பர் நம்முடனே
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே

ITHO MANUSARIN MATHIYIL LYRICS

இதோ மனுஷரின் மத்தியில்

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசஞ் செய்கிறாரே !

 1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் - தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே ! --- இதோ

2. தேவ ஆலயமும் அவரே
தூய ஒளி விளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் - தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவ நதியும் அவரே ! --- இதோ

3. மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தல மதுவே
என்றும் துதியுடனே - அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே ! --- இதோ

4. சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடு மிச் - சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உனையே ! --- இதோ

5. முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக் கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் --- இதோ

Saruva Logathiba Nameskaram

சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
  1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்!

2. திரு அவதாரா, நமஸ்காரம்!
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!
தரணியில் மனுடர் உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோர், நமஸ்காரம்!

3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!
பரம சற்குருவே, நமஸ்காரம்!
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்

4. முத்தொழிலோனே, நமஸ்காரம்!
மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்!
கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
நித்திய திரியேகா, நமஸ்காரம்

Siluvaiyin Nilalil Anuthinam adiyan

சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
  சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப்பாறிடுவேன் - ஆ! ஆ!

சிலுவை அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்

1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தே
தளர்ந்த என் ஜீவியமே – ஆ! ஆ!
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகம்
ஏகுவேன் பறந்தே வேகம்

2. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன்
இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ! ஆ!
திருமறை இன்னிசை நாதம்
தேனிலு மினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம்

3. எவ்வித கொடிய இடருக்கு மஞ்சேன்
இயேசுவைச் சார்ந்து நிற்பேன் - ஆ! ஆ!
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக்கொண்டால்
அலைமிக மோதிடு மந்நாள்
ஆறுதல் அளிப்பாரே சொன்னால்

SEERMIGHU VAANPUVHI DEVA STHOTHIRAM LYRICS



சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம்,
1.சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம்,
சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம்,
ஏர்குணனே தோத்ரம், அடியர்க்-கு
இரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா.

2.நேர் மிகு அருள் திரு அன்பா, தோத்ரம்,
நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம்,
ஆர் மணனே, தோத்ரம், உனது
அன்பினுக்கே தோத்ரம், மா நேசா.

3.ஜீவன், சுகம், பெலன், யாவுக்கும் தோத்ரம்,
தினம் தினம் அருள் நன்மைக்காகவும் தோத்ரம்,
ஆவலுடன் தோத்ரம், உனது
அன்பினுக்கே தோத்ரம், மா நேசா.

4.ஆத்தும நன்மைகட்காகவும் தோத்ரம்,
அதிசய நடத்துதற்காகவும் தோத்ரம்,
சாற்றுகிறோம் தோத்ரம், உனது
தகுமன்புக்கே தோத்ரம், மா நேசா.

5. மாறாப் பூரண நேசா, தோத்ரம்,
மகிழொடு ஜெபமொழி மாலையின் தோத்ரம்,
தாராய் துணை, தோத்ரம், இந்தத்
தருணமே கொடு, தோத்ரம், மா நேசா.

SINGAKUTTIGAL PATTINI KIDAKKUM LYRICS

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்
சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே!
குறையில்லையே, குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே!

1. புல்லுள்ள இடங்களிலே என்னை மேய்க்கின்றார்!
தண்ணீரண்டை கூட்டிச் சென்று தாகம் தீர்க்கின்றார்!

2. எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தப்படுத்துகிறார்!
என் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்கின்றார்!

3. ஆத்துமாவை தேற்றுகின்றார் ஆவி பொழிகின்றார்!
ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத் தொடரும்!

4. என் தேவன் தம்முடைய மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கி நடத்திடுவார்!

KRISHTHUVUKUL VAZHUM ENAKKU LYRICS

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு 2

1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்

2. என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன்

3. சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக்கொண்டார்
சிலுவையில் அறைந்துவிட்டார் காலாலே மிதித்துவிட்டார்

4. பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கிவிட்டார்
இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன்

5. மேகங்கள் நடுவினிலே என்நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பாh

Parama Kuyavanae Ennai Vanaiyumae


பரம குயவனே என்னை வனையுமே
உம் சித்தம் போல் என்னை வனையுமே (2)
உமக்காக என்னை வனையுமே
களிமண்ணான என்னை வனைந்திடுமே

1. உம் கரத்தாலே மண்ணை பிசைந்து
மனிதனை உருவாக்கினீர் (2)
எந்தனையும் தொட்டு உம் சாயலாக வனையும்
உம்மை போல மாற்றிடுமே – என்னை – பரம

2. உமக்குகந்ததாய் உடைத்து என்னை
உம்முடைமை ஆக்கிடுமே (2)
விருப்பம் போல என்னை உந்தன் கரத்தால்
அருமையாக வனைந்திடுமே – உமக்கு – பரம

3. உமது சித்தத்தின் மையத்தில் என்னை
வைத்து என்றும் வழி நடத்திடும் (2)
உந்தன் சித்தம் செய்ய என்னை தத்தம் செய்தேன்
முழுமையாக அர்ப்பணம் செய்தேன் – என்னை – பரம

KARTHARIN PANTHIYIL VAA LYRICS

கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தரின் பந்தியில் வா. - சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா.

கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி - கர்த்தரின்

1. ஜீவ அப்பம் அல்லோ? - கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ?
பாவ மனங் கல்லோ? - உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ?
தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றும் பிழைத்திட - கர்த்தரின்

2. தேவ அன்பைப் பாரு - கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு.
பாவக் கேட்டைக் கூறு - ராப்போசன பந்திதனில் சேரு.
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே - கர்த்தரின்

3. அன்பின் விருந்தாமே - கர்த்தருடன் ஐக்யப் பந்தி யாமே
துன்பம் துயர் போமே .. இருதயம் சுத்த திடனாமே.
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா - கர்த்தரின்

NANDRIYAL PADIDUVOM NALLAVAR LYRICS


நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே

செங்கடல் தனை நடுவாய் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியே இந்நாள் வரையும்
தயவாய் மா தயவாய்

உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்திரராய் இருக்க
கிருபையின் மகா தானமது வருங்
காலங்களில் விளங்க

ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்
சேவையில் மாறித்தார்
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம்

மித்ருக்களான பலர் நன்றியிழந்தே
சத்ருக்களாயினாரே
சத்தியத்தை சார்ந்து தேவ
சித்தம் செய்திடுவோம்

அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர்
அளவில்லா திரு ஆக்கமிதனை
அவனையார்களிப்பீர்

சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்
சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே
சீயோனின் இராஜனையே

Thudippade Enn Thaguthiyallo


துதிப்பதே என் தகுதியல்லோ
துதித்திடுவேன் என் இயேசுவை

வேதம் நிறைந்த இதயம் தந்தார்
ஜெபம் நிறைந்த நேரம் தந்தார்
கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்
கருணை நிறைந்த கரங்கள் தந்தார் – துதிப்பதே

வியாதி நேரத்தில் வல்லமை தந்தார்
சோதனை நேரத்தில் ஜெயம் தந்தார்
கைவிட்ட நேரத்தில் ஜீவன் தந்தார்
ஆரோக்கிய நேரத்தில் அடக்கம் தந்தார் – துதிப்பதே

மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்
பார்வை நிறைந்த தூய்மை தந்தார்
சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்
செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார் – துதிப்பதே

ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்தார்
பெலவீன நேரத்தில் பெலன் தந்தார்
செய்தி நேரத்தில் தூது தந்தார்
பாடிய நேரத்தில் பரவசம் தந்தார் – துதிப்பதே

வளம் நிறைந்த வாழ்வு தந்தார்
மகிமை நிறைந்த தாழ்மை தந்தார்
அன்பு நிறைந்த ஆட்கள் தந்தார்
ஆவி நிறைந்த அறிவு தந்தார் – துதிப்பதே

சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார்
சத்தியம் நிறைந்த சபை தந்தார்
இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார்
ஒழி நிறைந்த வழி திறந்தார் – துதிப்பதே

AAVIYAI MALAI POLE OOTRUM LYRICS


ஆவியை மழைபோலே யூற்றும், – பல
ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்.

பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், — ஆவியை

1. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும். — ஆவியை

2. சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,
பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும். — ஆவியை

3. காத்திருந்த பல பேரும் – மனங்
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும். — ஆவியை

4. தோத்திரக் கீதங்கள் பாடி – எங்கும்
சுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும். — ஆவியை

Aarathanai Aarathanai Thuthi Aarathanai


ஆராதனை ஆராதனை துதி
ஆராதனை ஆராதனை – (2)
காலையிலும் மாலையிலும்
ஆராதனை அப்பாவுக்கே – (2)

1. தூய ஆவியே உமக்கு ஆராதனை
துணையாளரே உமக்கு ஆராதனை – (2)
வான பிதாவே உமக்கு ஆராதனை
வழிகாட்டியே உமக்கு ஆராதனை – (2) – ஆராதனை

2. ஜீவ பலியே உமக்கு ஆராதனை
ஜீவ தண்ணீரே உமக்கு ஆராதனை – (2)
மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை
மேசியாவே உமக்கு ஆராதனை – (2) – ஆராதனை

KARTHAR MEL BARATHAI VAITHUVIDU LYRICS


கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
கலங்கித் தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்

1. நீதிமான் தள்ளாட விடமாட்டார்
நித்தமும் காத்து நடத்திடுவார்

2. நம்மைக் காக்கும் தேவனவர்
நமது நிழலாய் இருக்கின்றவர்

3. தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
அவரே நம்மை அணைத்துக் கொள்வார்

4. கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
நமக்கு எதிராய் நிற்பவன் யார்?

5. வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம்
அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்

6. என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்